புதிய பதிவுகள்

கோட்டாபய தோல்வி அடைவது உறுதி: ஐக்கிய தேசிய கட்சி

4 months 1 week ago
கோட்டாபய தோல்வி அடைவது உறுதி: ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக எதிர்தரப்பினர் நிறுத்தினால் ஐக்கிய தேசிய கட்சி மிக இலகுவாக தோற்கடித்துவிடுமென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அஜித்.பி.பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அஜித்.பி.பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பரந்தப்பட்ட முன்னணியாக களமிறங்க ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து பங்காளி கட்சிகளும் தீர்மானித்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படுமெனவும் அஜித்.பி.பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை சுதந்திர கட்சி, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த தரப்புடன் இணைந்து செயற்பட தயாராக இல்லை. ஆகையால் சுதந்திர கட்சியினதும் பொதுஜன முன்னணியினதும் கூட்டணி சாத்தியமற்றதாகுமென அவர் சுட்டிக்காட்டினார். ஆகவே கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவதில் ஆளும் தரப்புக்கு எந்த ஐயப்பாடும் இல்லையெனவும் அஜித்.பி.பெரேரா குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/கோட்டாபய-தோல்வி-அடைவது-உ/

வாக்காளர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு: தேர்தல் ஆணையம்

4 months 1 week ago
வாக்காளர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு: தேர்தல் ஆணையம் முதன்முறையாக வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் இந்திய மதிப்பில் 7000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கிலுள்ள மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்திலும், எதிர்வரும் 11ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. அப்பகுதியில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு குறைவாகவே பதிவாகியுள்ளது. இந்நிலையில், இந்த தடவை வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது. அந்தவகையில், வாக்காளர்கள் வாக்குப்பதிவு முடிந்ததும் ஆட்காட்டி விரலில் வைக்கப்பட்டுள்ள மையை செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. வாக்களித்ததை உறுதிசெய்ததை காட்டும் மிகச்சிறந்த செல்பிக்கு முதல் பரிசாக 7 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அதேநேரம் 2ஆவது சிறந்த செல்பிக்கு 3 ஆயிரம் ரூபாயும், 3ஆவது சிறந்த செல்பிக்கு 2 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மிசோரம் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்ற போது சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் 7 லட்சத்து 23 ஆயிரத்து 663 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேரை வாக்களிக்க வைக்க மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆசிஷ்குந்த்ரா இந்த முயற்சியை எடுத்துள்ளார். http://athavannews.com/வாக்காளர்கள்-மை-வைத்த-வி/

டுபாயில் பிரித்தானிய பெண்ணிற்கு சிறைதண்டனை!

4 months 1 week ago
டுபாயில் பிரித்தானிய பெண்ணிற்கு சிறைதண்டனை! டுபாயில் பிரித்தானிய பெண் ஒருவரிற்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த 55 வயதான லாலெ ஷ்ரவேஷ், தனது கணவரின் இறுதிச்சடங்கிற்காக டுபாய் சென்றுள்ளார். இதன்போது அவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு தனது கணவர் மறுமணம் புரிந்த ஒளிப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவிட்ட போது, ஷ்ரவேஷ் பகிர்ந்த கருத்துக்கள் குறித்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஷ்ரவேஷிற்கும் அவரது கணவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் ஆனது. இதன்போது ஒரு எட்டு மாத காலம் ஐக்கிய அரபு எமிரேட்டில் ஷ்ரவேஷ் இருந்துள்ளார். எனினும் விவாகரத்தானதும் பிரித்தானியாவிற்கு தனது மகளுடன் திரும்பியுள்ளார். இந்தநிலையில் தனது கணவர் மறுமணம் செய்துகொண்ட ஒளிப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தவுடன் ஷ்ரவேஷ், ‘நீ மண்ணில் புதைந்து போக வேண்டும். இந்த குதிரைக்காகதான் என்னை விட்டுவிட்டாயா’ என பதிவிட்டுள்ளார். டுபாயின் சைபர் குற்றவியல் சட்டப்படி சமூக வலைதளங்களில் மரியாதைக் குறைவான கருத்துக்களை பதிவிட்டால் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும் என்பது குறிப்பிடப்படுகின்றது. http://athavannews.com/டுபாயில்-பிரித்தானிய-பெண/

காங். சின்னமாம்! கை காட்டி வாகனத்தை நிறுத்தக்கூடாது.. பெங்களூரு போலீசுக்கு நூதன உத்தரவு.

4 months 1 week ago
காங். சின்னமாம்! கை காட்டி வாகனத்தை நிறுத்தக்கூடாது.. பெங்களூரு போலீசுக்கு நூதன உத்தரவு. காங்கிரஸ் சின்னத்தை குறிப்பதால் 'கை' காட்டி வாகனங்களை நிறுத்தக்கூடாது என தேர்தல் பணியில் ஈடுபடும் பெங்களூரு போலீசாருக்கு நூதன உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள 28 எம்பி தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரு போலீசாருக்கு தேர்தல் நாளில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்று பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.போலீசார் எப்படி செயல்பட வேண்டும் என 5 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் தயாரித்துள்ளது. அந்த புத்தகத்தில் உள்ள சில தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாக்கு சாவடிகளை சுற்றி வேட்பாளர்களின் சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்பது விதியாக உள்ளது. அதன்படி காங்கிரசின் சின்னமாக 'கை' இருப்பதால், அந்த சின்னத்தை பயன்படுத்தக்கூடாது. இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் பொதுவாக போலீசார் 'கை' காட்டி வாகனங்களை நிறுத்துவார்கள். இப்படி செய்வதால் அது காங்கிரசின் சின்னத்தை குறிக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே போலீசார் காங்கிரஸ் சின்னத்தை குறிக்கும் வகையில் உள்ளங் 'கை' காட்டி வாகனங்களை நிறுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நூதனமான இந்த தேர்தல் விதிமுறை உத்தரவு பெங்களூரு போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Read more at: https://tamil.oneindia.com/news/bangalore/don-t-use-hand-for-stop-the-vehicle-order-to-bengalore-police-346300.html

கோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு….

4 months 1 week ago
கேட்க... எவ்வளவு, சந்தோசமாக இருக்கின்றது. அது நடந்தால்... நாதமுனியரின் வாயில் சர்க்கரை போட வேணும். மகிந்தவின் பாரியாரும்... இவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த சம்மதம் இல்லையாம். அப்படி இவர் ஜனாதிபதியாக வந்தால், மகிந்த ஓரம் கட்டப் படுவார் என்று பயப்படுகின்றார்கள்.

பாலைவன தடங்கள்

4 months 1 week ago
ஐந்து நாட்கள் வேலைக்கு செல்ல வில்லை ................ 6வது நாளாக ஊருக்கு அழைத்தேன் அப்போது எனது தம்பி இறந்த செய்தி சொல்லவில்லை எங்கேயாவது இருப்பான் எனவும் எங்கள் வீடுகள் எல்லாமே கடலால் அள்ளிச்செல்லப்பட்டு விட்டதும் அந்த இடங்கள் எல்லாம் அரச காணியாக ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அறிய முடிந்தது . நான் ஒன்றை நினைத்திருக்க காலம் ஒரு கணக்கை போட்டு என் கையில் திணித்து விட்டு சென்றது. நீ இருந்தாக வேண்டுமென இந்த மூட்டைப்பூச்சிகள்,கரப்பத்தான் பூச்சிகள் இருக்கும் நாட்டில் வாழ்ந்தாக வேண்டுமெனவும். ஊருக்கு சென்றும் ஒன்றும் செய்திட முடியாது அகதிகளாகத்தான் இருக்க வேண்டும் அம்மா அப்பா தங்கை இருவரும் அகதிகள் முகாமில் தான் இருக்கிறார்கள் நானும் ஊருக்கு போய் என்ன செய்ய??. இங்கே இருந்தால் ஏதாவது உழைத்து செய்திடலாமென நினைத்து இருந்தன். ஊரில் வேலையும் எடுக்க ஏலாது அப்படி அரசும் கொடுக்காது தமிழர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு . நண்பர்களும் வந்து இன்னொரு தடவை ஏ. எல் (உயர்தர பரீட்சை) எழுதிவிட்டு செல்லுடா என்று சொல்ல நானோ அங்கே வந்தால் மீண்டும் வரமுடியாதுடா நான் இங்கே இருந்து உழைத்துதான் குடும்பத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றேன் நானும் மீண்டும் ஏ. எல் +2 (உயர்தரம்) பரீட்சை எழுத முடியல ஆனால் அவர்கள் எல்லோரும் எழுதி பாஸ் ஆகினார்கள் எனது கம்பனிக்கு ஊரில் அனர்த்தம் நடந்துவிட்டது ஏதாவது உதவிகள் செய்ய முடியுமா என கேட்டால் அப்படியெல்லாம் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள். நாட்கள் கடந்தன அழுகையும் சோகங்களும் நிறைந்தது நாங்களோ இங்கிருந்தால் நம்மளை உறுஞ்சி விடுவார்கள் வேற இடத்துக்கு செல்ல வேண்டுமென பிளான் பண்ணிக்கொண்டு இருப்போம். சந்தர்ப்பம் அமையவில்லை அந்த ஹோட்டல் அமைந்துள்ள இடமோ , சகல நிகழ்வுகளும் நடக்கும் இடம் விபச்சாரம் , பப்புகள் , தியட்டர்கள் என மிக பிரபலமான இடம் இங்கே துபாய் நாட்டுக்காசு அனைத்தும் இங்கே செலவழிக்கப்பட வேண்டும் என அந்த நாட்டு அரசு நினைத்து அனைத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது போல எல்லாமே சாதாரணமாக நடக்கும். இரவில் ஓட்டல் எங்களின் கைகளில் தான் இருக்கும் சகல வேலைகளையும் செய்து பூட்டி விட்டு செல்லும் வழியில் கையை அசைப்பார்கள் கையை பிடித்து இழுப்பார்கள் (வர்ரியா) என சகல நாட்டு இறக்குமதி செய்யப்பட்ட பெண் போதைகளும் வரிசையாக நிற்கும் . அவர்களின் தொழிலுக்காக அவர்களும் ஏமாற்றி இறக்குமதி செய்ப்பட்டவர்களாகத்தான் இருக்குமென நான் நினைத்துக்கொள்வேன் . ஆசைகள் வந்தாலும் அவை மெதுவாக உள்ள இருந்து நீ இங்கே சந்தோசமாக இருக்க அங்கே அவர்கள் ?? என்ற கேள்விகள் கேட்டுவிட்டு வந்த ஆசைகளை கூட்டி சென்றுவிடும் என்னுடன் இருந்த எல்லோரும் அப்படியே சென்றானுகள் இங்கே உழைத்து இங்கே செலவழிக்கணும் இதற்கெல்லாம் நாம் செல்லக்கூடாது என ஏனென்றால் அவனுகளும் என்னைப்போலவே கஸ்ரப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாட்கள் சென்றது ஓர் நாள் ஓணம் பண்டிகை என்பதால் எனக்கும் வேலை அதிகமாக இருந்தது அப்போதுதான் எனது நண்பன் அந்த ஓட்டல் மேனேஜரை சட்டை கோலரில் பிடித்து ஆளைத்தூக்கி வைத்து அடிக்க கூடியிருந்தான் .(அடிச்சிட்டான்) ஒரு சின்ன கலவரம் ஏற்பட கம்பனிக்கு கோல் எடுத்து இவர்கள் அனைவரையும் உடனடியாக மாற்றுங்கள் என சொல்ல அடுத்த நாள் காலை பெட்டி படுக்கைகளுடன் நாங்கள் செல்ல இடிஅமீன் சண்டை பிடிச்சது யாரு தமிழ் மாறன் நான் தான் என்றான் துணிச்சலானவன் அதிகம் பேசமாட்டான் புலிகளிலிருந்து கடிதம் கொடுத்து விலகி வந்தவன். நீ உடனே அபுதாபிக்கு போ என சொல்ல அவனும் போய்ட்டு வாரேன்டா என சொல்லி அவனும் போய் விட்டான். அந்த இடிஆமிக்கு அழைப்பு வருகிறது ஒரு ஒப்பிஸ் பாய் ( Office Boy) எனக்கு விசா எடுக்க சொன்ன நேரம் ஏஜென்சிக்காரனால் சொல்லப்பட்ட வேலை அது எங்களுக்கு தேவைப்படுகிறது இடிஆமினோ ஆங்கிலம் ஆருக்கு தெரியுமென்று கேட்க நான் தலையசைக்க நீ இவருடன் போ என ஒருவரிடம் கொடுத்து என்னை அனுப்புகிறார். ஓர் அரபிகள் வேலை செய்யும் அரச அலுவலகத்துக்கு அங்கே சென்றால் எல்லாம் உள்நாட்டு அரபிகள் அரபி மட்டுமே பேசுவார்கள் அவர்களுக்கு ஆங்கிலம் புரியாது ஹிந்தி ஓரளவு பேசுவார்கள் .அங்கிருந்த மேனேஜர் மட்டும் ஆங்கிலமும் ,ஹிந்தியும் , மலையாளமும் பேசுவார் . அங்கே சென்றபோது என்னுடன் இன்னொரு மட்டக்களப்பு பொடியனும் இருந்தார் மற்றவர்கள் (டிரைவர்) வங்களாதேஷ் நாட்டுக்காரர் நாங்கள் 3 பேரும் அங்கே அலுவலக உதவியாளராக கடமை புரிய ஆரம்பித்தோம் எனக்கு வேலைகள் பழக்கப்பட்டு பழகிக்கொண்டேன் .அங்கே ஓர் மாதம் சென்ற பின்னர் அவர்கள் தொழுவும் நேரம் பார்த்து வாகனங்களை கழுவ ஆரம்பித்தேன் . ஓர் கார் கழுவினால் எல்லா உடுப்புக்களும் நான் குளிர்த்தது போல ஆகிடும் அங்கு வருபவர்கள் எல்லோரும் அரச குடும்பத்தை சேர்ந்த அரபிகள் என்பதால் வேலையில் சுத்தமாகவும் ஆழும் சுத்தமாக சேவ் செய்து நல்ல உடுப்புக்கள் அணிந்து இருக்க வேண்டும் சாப்பாடு எல்லாம் காலை சாப்பாடு மதிய சாப்பாடுகள் கிடைத்தது . 2 மணிநேரத்துக்கு ஒரு பெரிய ஹோட்டல் சாப்பாடு கொண்டு வருவார்கள் . ஒர் காரை கழுவும் போது அரபி பெண்கள் எங்கள் காரையும் கழுவி விடு என காசும் தருவார்கள் சிலர் 50 சிலர் 20 ஆனால் கார் அருகே நிற்க முடியாது அவ்வளவு வெளிச்சூடும் உள் சூடுமாக அனலாக இருக்கும் 12.30ற்கு மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும் ஓர் நாள் லேட்டாக எனக்கு கம்ளைண்ட்(றிப்போட்) அடிக்கப்பட்டது. தொடரும்.................

இந்தியா - இலங்கை கரம் கோர்த்தது: போதை மருந்து கடத்தல் குறையுமா?

4 months 1 week ago
போதைப்பொருள் பயன்படுத்துவோர் மற்றும் விற்பனை செய்வோருக்கு மரணதண்டனை வழங்கும் இலங்கை ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பால் இந்திய ரோ உளவுப்பிரிவு உட்பட இந்திய அரசு கிலிகொண்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக இலங்கைக்கு அனுப்பப்படும் போதைவஸ்து விற்பனையில் கிடைக்கும் வருமானம் பெரும்பகுதி முடக்கப்படும் ஆபத்து உள்ளது. இலங்கைக்கு போதைவஸ்தை வினியோகித்துவரும் வர்த்தகப் பெரும்புள்ளிகளின் தலையீட்டினால் இலங்கை ஜனாதிபதியுடன் மரணதண்டனை தவிர்ந்த மாற்றுத்திட்டங்கள் பற்றி உயர் மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..

4 months 1 week ago
அதுதானே பார்த்தேன் என்னடா பயபிள்ளை இப்படி சேவை செய்கிறானே என்று இலங்கையில் உள்ள அறப்படிச்ச வைத்தியர்களால் ரஷியன் என்று கேவலமாக அழைக்கப்படும் ஜாதியா....? அதொன்றுமில்லை ராஜா இங்க படித்து சனத்தோட வரிப்பணத்தை ஆட்டையை போட்டவை எல்லாம் வெயிட்டிங் எப்போ மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு வெளிநாடு ஓடுவம் என்று . அங்க போயிருந்து திரும்பவும் இங்கே தனியார் மருத்துவ பல்கலை வரக்கூடாது என்று மூக்கை நுழைப்பது , தானும் படுக்கமாட்டினம் தள்ளியும் படுக்கமாட்டினம்

பிரமிக்கவைக்கும் யாழ்பாணத்து டச்சுக் கோட்டை

4 months 1 week ago
யாழ்ப்பாண டச்சு கோட்டை நாம் அடிமையாக இருந்தமைக்கான சாட்சியம். அது டச்சு காலத்தில் இருந்து புலிகள் கோட்டையை கைப்பற்றும் வரைக்கும் அடிமையாக இருந்ததை நினைவூட்டும் சாசனமாக இருந்தது. புலிகள் கோட்டையை கைப்பற்றி தாம் வைத்து இருந்த காலம் எதிரியை வெற்றி கொண்டதன் சின்னமாக இருந்தது. பின் மீண்டும் அடிமைச் சின்னமாக மாறி விட்டது.
Checked
Wed, 08/21/2019 - 01:02
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed