புதிய பதிவுகள்

யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை

4 months 1 week ago
கடதாசிப்பைகள் காருக்கும் வேனுக்கும் சரிவரும் கால்மிதித்து செல்லும் சைக்கிழுக்கும் , மோட்டார் சைக்கிழுக்கும் கடதாசிப்பை சரிவராது பாரம் மிகுந்த பொருட்களை வாங்கி சுமந்து செல்ல அமெரிக்கா எங்கே இலங்கை எங்கே வளர்ச்சி பெற்ற நாடுகளின் குப்பைகளை கூட இறக்குமதி செய்து இங்கே அதை உக்க அல்ல எரிக்கச்செய்திருக்கிறார்கள் அத்தனையும் பிளாஸ்திக்கு, மனித எச்சங்களாம், பொலித்தீன்கள் ஆஸ்பத்திக்கழிவுகள் இதுதான் இலங்கை அது போக யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்டும் இடங்கள் மேடுகளாக இருக்கிறது அத்தனையும் பொலித்தீன்கள் அந்த இடம் பெயர் ஞாபகம் இல்லை கடதாசி , துணிப்பையை பயன்படுத்தலாம் ஆனால் மக்கள் தான் அதைசெய்ய வேண்டும் ஒவ்வொரு வீட்டிலும் மாற்றம் வந்தால் தான் உண்டு இல்லையேல் இந்த பொலித்தீன் , பிளாஸ்திக்கு பாரிய சவால் புலிகள் காலத்தில் ஓர் நெருப்புப் பெட்டியை கூட பொலித்தீன் பையால் சுத்தி வச்சிருந்த காலமும் இருக்கு , நனையாமல் இருக்க

ஞாயிறு வகுப்பு என்ற போர்வையில் யாழில் மீண்டும் மதமாற்ற முயற்சி: விரட்டியடித்த கிராமமக்கள்!

4 months 1 week ago
பரம்பரை பரம்பரையாக இந்துக்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் வாழ்பவர்கள் நாங்கள் தமிழர்கள் என்பதை தவிர வேறு எந்த அடையாளங்களையும் சுமந்து வாழ்வதில்லை ,வேற்றுமைகள்பற்றி சிந்திப்பதும் இல்லை. அதனால்தான் தமிழர்களின் அரசியல் போராட்ட காலத்தில் ஒரு கிறிஸ்தவர் செல்வாவை தமிழர்கள் தமது தந்தை என ஏற்றுக்கொண்டார்கள். ஆயுதபோராட்டகாலத்தில் புலிகளின் முதல் தாக்குதல் தளபதி சீலனும் ஒரு கிறிஸ்தவராகவே இருந்தார். சலனமற்று தமிழர்களுக்கு இடையிலே மிஞ்சியிருந்த இந்த ஒரேயொரு ஒற்றுமையையும் குழிதோண்டி போட்டு புதைப்பது இந்த மதமாற்ற கோஷ்டிகளே. அம்மா அப்பாபோல மதமும் ஒரு மனிதனின் பிறப்போடு சம்பந்தப்பட்ட அடையாளம், அதை ஏன் மாற்ற முயற்சிக்கிறீர்கள், மாற்றவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மதம் மாறினால் அனைத்து துன்பங்களும் நீங்குமென்றால் நீங்கள் குறிப்பிடும் மதத்தில் உள்ளவன் எல்லோரும் விடிய எழும்பி வேலைக்குபோகமாட்டான். எந்த மதத்தில் நீ இருந்தாலும் சொந்த கைகால்களும், சொந்த முயற்சியும் இல்லாதுபோனால் எந்த மதத்தவனும் ஏழையாகவும் நிம்மதி இல்லாதவனுமாகவே எப்போதும் இருப்பான், இறைவனுக்கு அவனிடம் ஒருபோதும் வேலை இருக்காது. மதம் என்பது ஒரு நம்பிக்கை வழிபாட்டுமுறையே அன்றி பொருளாதார ஆன்மீக சட்டமல்ல. என்னுடைய அப்பா இருக்கும்போது இன்னொருவரை என்னை பெற்ற தந்தையாய் எப்படி ஒரு மனிதன் ஏற்றுக்கொள்ளமுடியும்? அப்படி செய்தால் அது அநாகரிகம் அசிங்கம் மட்டுமல்ல ஆத்மார்த்தமான நம்பிக்கையும் அல்ல. நல்லது ஒரு மக்கள் கூட்டத்திற்கு செய்யவேண்டுமென்றால் மத மாற்றம் ஒரு மனிதனுக்கு அவசியமில்லை, மனமாற்றம் மட்டுமே தேவை. ஏற்கனவே மேய்ப்பனற்ற மந்தைகள்போல் அல்லாடிக்கொண்டிருக்கும் தாயக மக்களை மேலும் மேலும் குழப்ப நிலைகளுக்குள் தள்ளிவிடும் இந்த மதமாற்ற கூட்டங்கள் கொலைகாரர்களுக்கு சமம்,

ஞாயிறு வகுப்பு என்ற போர்வையில் யாழில் மீண்டும் மதமாற்ற முயற்சி: விரட்டியடித்த கிராமமக்கள்!

4 months 1 week ago
மதம் மாறுவோர் வந்து முறைப்பாடு செய்வார்கள் என நினைக்குமளவில் தான் உங்கள் அறிவு உள்ளது. இதை எங்க போய் சொல்லியழ? 😂

ஞாயிறு வகுப்பு என்ற போர்வையில் யாழில் மீண்டும் மதமாற்ற முயற்சி: விரட்டியடித்த கிராமமக்கள்!

4 months 1 week ago
இந்த‌ பிர‌ச்ச‌னை என‌து ஊரிலும் ந‌ட‌ந்த‌து , ஜ‌ந்த‌ ஆறு வ‌ருட‌த்துக்கு முத‌ல் , இந்து கோயிலுக்கு ப‌க்க‌த்தில் தேவாலைய‌ம் க‌ட்ட‌ போகிறோம் என்ர‌ , ஊர் பெடிய‌ங்க‌ள் எங்க‌ட‌ கோயில் இருக்கிர‌ இட‌த்தில் க‌ட்ட‌ விட‌ மாட்டோம் வேர‌ இட‌ம் பாருங்கோ என்று ச‌ண்டையில் இற‌ங்கிட்டாங்க‌ள் ஊர் ப‌ஸ்ச‌ங்க‌ள் , பிற‌க்கு என்ர‌ அத்தை த‌லையிட்டு அந்த‌ பிர‌ச்ச‌னையை தீர்த்து வைச்சா , பிற‌க்கு வேர‌ ஊரில் தான் தேவாலைய‌ம் க‌ட்டின‌வை 😉😉/ நான் சிறு வ‌ய‌தில் இருந்து இந்து சைவ‌ச‌ம‌ய‌ம் , எனக்குள் நான் எப்போதும் சொல்லி கொள்வ‌து ( தெய்வ‌ங்க‌ள் எல்லாம் ஒன்று தான் என்று 🙏) என‌க்குள் ம‌த‌ வெறி சுத்த‌மாய் இல்லை , ம‌த‌ வெறி ச‌ண்டையை விரும்புவ‌தும் இல்லை 😓, என‌க்கு தெரிஞ்சு என்ர‌ சொந்த‌த்துக்கை நிறைய‌ பேர் வேத‌ ம‌த‌த்துக்கு மாறின‌வை , அவையாய் முன் வ‌ந்து மாறின‌வை , அதுக்காக‌ நான் அவ‌ர்க‌ளை ஒரு போதும் த‌ள்ளி வைச்ச‌து இல்லை 😉😉, அவ‌ர்க‌ளின் வாழ்க்கையை தீர்மானிக்கிற‌து அவையே , என் வாழ் நாளில் ம‌த‌ம் மாறுவ‌து என்ர‌ பேச்சுக்கே இட‌ம் இல்லை 🙏🙏, ம‌ற்ற‌வ‌ர்க‌ளோடு ம‌த‌த்தை ப‌ற்றி முர‌ன் ப‌ட‌ப் போர‌தும் இல்லை இதுவ‌ர‌ முர‌ன் ப‌ட்ட‌தும் இல்லை 😉, என‌க்கு எல்லா ம‌த‌த்திலும் ந‌ண்ப‌ர்க‌ள் இருக்கின‌ம் , நாங்க‌ள் ம‌த‌ க‌தையே க‌தைப்ப‌து இல்லை , ஜாலியா காமெடியா க‌தைப்போம் ப‌ழ‌குவோம் 😁😉/

ஞாயிறு வகுப்பு என்ற போர்வையில் யாழில் மீண்டும் மதமாற்ற முயற்சி: விரட்டியடித்த கிராமமக்கள்!

4 months 1 week ago
யாழ்ப்பாணத்தில் சிங்களவர் ஒரு பௌத்த விகாரையை கட்டி அங்கே இருக்கும் தமிழர்களை நோக்கி "சில்" எடுக்க சொல்லி போதனை செய்தால் எப்படி பார்ப்போம்? அதே உணர்வு இங்கேயும் வருவது தானே சரி. தேடுதல் உள்ளவன் தேடி வருவான்... வலிந்து போய் தலைக் கணக்கு தேடுதலை நடத்தினால் தேவையில்லாத சங்கடங்கள் தான் மிஞ்சும். - எனது ஆரம்பக்கல்வி ஒரு முஸ்லீம் பாடசாலை. என்னை திருக் குர்ஹான் ஓத சொல்லியோ , சுன்னத்து செய்யச்சொல்லியோ ... சொர்க்கத்தில் 120 கன்னியர்கள் பாய்விரிப்பார்கள் பற்றிய கதைகள் சொல்லி ஆசை காட்டவில்லை, மோசம் செய்யவில்லை. - வாழ்ந்தது முற்றிலும் பௌத்த சிங்களவர் மத்தியில், பன்சலைக்கு வந்து 'பந' கேட்கும் படியோ அல்லது 'சில்' எடுக்கும் படியோ, 'தாம் பாஹாசல்' வரும் படியோ வற்புறுத்தவில்லை. - பின்னாடி பெரும் பகுதி கல்வி, சம்.பத்திரிசியார் கத்தோலிக்க கல்லூரியில்... எந்த பாதிரியாரும் பைபிளை படி, சுவிசேகம் கிடைக்கும், ஞானஸ்நானம் பெற்றுக்கொள் என்று அதிகாரம் செய்யவில்லை. அவர்கள் அவர்களாகவும் , நாங்கள் நாங்களாகவும் இருந்தோம். இவர்கள் ஏன் இப்படியானார்கள்...?

யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை

4 months 1 week ago
பாஞ்ச் அவர்கள் கூறியது போல் கடதாசிப்பைகள் பயன்படுத்தலாம். துணிப்பைகளையும் பயன்படுத்தலாம். அத்துடன் உக்கக்கூடிய பொலித்தீன் பைகளையும் தயாரிக்கலாம். புலிகள் காலத்தில் இருந்தது போல்.

ஞாயிறு வகுப்பு என்ற போர்வையில் யாழில் மீண்டும் மதமாற்ற முயற்சி: விரட்டியடித்த கிராமமக்கள்!

4 months 1 week ago
நான் பலதடவை விளக்கம் கூறி விட்டேன். இங்கு இல்லாத சட்டம், நிகழாத தவறு என நீங்கள் தான் மீண்டும் மீண்டும் கதைக்கிறீர்கள். இன்னொரு மதத்திலுள்ளவரை மூளைச்சலவை செய்து மதம் மாற்றுவது தவறு. அது கண்டிக்கப்பட வேண்டியது. நான் எங்கே எனது தீவிர மதப்பற்றில் கதைக்கிறேன்? எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் மதம் மாற்றுவது தவறு என்பது எனக்கு தெரிந்த ஒரு விடயம். வெளிநாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றியும் முன்னர் குறிப்பிட்டு எழுதியுள்ளேன்.

ஞாயிறு வகுப்பு என்ற போர்வையில் யாழில் மீண்டும் மதமாற்ற முயற்சி: விரட்டியடித்த கிராமமக்கள்!

4 months 1 week ago
நான் வக்காலத்து வாங்குவது தனிமனிதனின் சுதந்திரத்திற்கும் பேச்சுச் சுதந்திரத்திற்கும்! முஸ்லிம் மதத்திற்கு இந்துப் பெண் மதம் மாறிய போதும் நான் அதற்கு வக்காலத்து வாங்கினேன் இதே களத்தில்! உங்களுக்கு உங்கள் தீவிரம் கலந்த மதப் பற்றை இல்லாத சட்டம், நிகழாத தவறு என்பவற்றால் மூடி மறைக்க ஆவல்! எனக்குப் பதில் தரும் ஆர்வமில்லாமல் இல்லை உங்களிடம்! உங்களிடம் பதிலே இல்லை என்பதே உண்மை! இந்த மதம் மாறிய சைவர்களும் கிறிஸ்தவர்களும் வந்து முறைப்பாடு செய்தார்களா? அப்படியானால் தங்களுக்குக் குற்றமிழைக்கப் பட்டதாக நினைக்கவில்லை! அப்ப யாருக்குத் தவறு நடந்ததாக நீங்கள் குத்தி முறிகிறீர்கள்?

`பாராட்டுதான் எங்களை ஓடவைக்குது!' - தஞ்சை கலெக்டர் அலுவலகத்தைச் சோலைவனமாக்கிய பெண்கள் நெகிழ்ச்சி

4 months 1 week ago
தஞ்சாவூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் மரம் வளர்த்து வரும் பெண்களை சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நூறு நாள் திட்டத்தின் மூலம் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வைத்து வளர்த்து அந்த இடத்தையே சோலைவனமாக மாற்றி வரும் பெண்களை சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாரட்டி வருகின்றனர். தஞ்சாவூர் திருச்சி சாலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த தஞ்சாவூர் புதிய கலெக்டர் அலுவலகம். இந்த வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வளர்க்கப்பட்டு வருகிறது. சுமார் ஐந்து வருடத்திற்கு முன் கட்டாந்தரையாக இருந்த இந்த இடத்தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் வளர தொடங்கி இன்றைக்கு சோலைவனமாக மாறி நிற்கிறது. ஏக்கம், எதிர்பார்ப்பு, பூரிப்பு, சோகம், கவலை, பரிதவிப்பு, மகிழ்ச்சி எனப் பல வித உணர்வுகளோடு மக்கள் இங்கு வருகின்றனர். அவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிழல் தந்து உதவுகிறது இங்குள்ள மரக் கன்றுகளும், மரங்களும். எப்போதும் பரபரப்பாக இருக்கும் அந்த வளாகத்தில் எந்தப் பரப்பும் இல்லாமல் 16 பெண்கள் அந்த மரக்கன்றுகளை தங்கள் பிள்ளைகள்போல் நினைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகின்றனர். ``மா, பலா, பாதாம், புங்கை, வேம்பு, பூவரசு எனப் பல வகைகளில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வைத்து வளர்த்தோம். அதனுடன் தனியாக கொய்யா, சப்போட்டா, மாதுளை, சீதா,எலுமிச்சை போன்ற பழக்கன்றுகளும் வைத்து பழத்தோட்டமும் உருவாக்கி வருகிறோம். எங்களைப் பொறுத்த வரை செய்யுற வேலைக்குச் சம்பளம் வாங்கினாலும், இதை ஒரு சேவையாக நினைச்சுதான் செய்யுறோம். பிள்ளை வளர்ப்பது போல் மரங்களை வளர்த்து விட்டோம். எத்தனையோ இடங்களில் நூறு நாள் வேலை திட்டத்தில் பெயரளவில் மட்டுமே மரக்கன்றுகள் ஊன்றப்படுகிறது. அவை பராமரிக்கபடுவது இல்லை. ஆனால் வரும் கால தலைமுறைக்கு நம்மால் முடிந்த உதவியாக நினைத்து இதைச் செய்து வருகிறோம். எங்களை யாரும், `ஏன் தண்ணீர் ஊற்றவில்லை' எனக் கேட்டதும் இல்லை. `இவ்வளவு மரங்களை உருவாக்கியிருக்கிறீர்களே' எனப் பாராட்டியதும் இல்லை. இரண்டு அடி உயரத்தில் ஊன்றிய மரக்கன்று இன்றைக்கு பத்தடிக்கு மேல் வளர்ந்து நிக்குது. இதைப் பார்க்குறப்ப மனசு நிறைஞ்சு இருக்கு தம்பி'' என்றார் ஒரு பெண்மனி. ஏலம்பாள் என்பவரிடம் பேசினோம். ``எனக்கு 70 வயசு ஆகுது. காலையில் 9 மணிக்கு எல்லோருடனும் சேர்ந்து பொடி நடையா நடந்து ஒரு நாள் தவறாம இங்க வந்துருவேன். அதன் பிறகு ஒரு மரம் விடாம தண்ணீர் ஊற்ற ஆரம்பிப்பேன். பிள்ளைகளுக்கு வயிறு நிறையுற மாதிரி இந்தக் கன்றுகள் செழிப்பாகுற வரை அலுப்பு பாக்காம நிறைய தண்ணி ஊற்றுவேன். மதியம் இரண்டு மணிக்குத்தான் இந்த வேலை முடியும். எங்கூட இங்கு வேலை பார்க்க வருபவர்கள் எல்லாமே வயசானவங்கதான். 5 வருஷமா இங்கு வந்துகிட்டு இருக்கோம் இதுவரை கலெக்டர் சாரை பார்த்ததும் இல்லை. எந்த உதவியும் கேட்டதும் இல்லை. நாங்க எங்க ஊர்ல இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் வருவோம். எங்களை அழைத்து வரவும் கொண்டு விடுவதற்கும் ஒரு வாகனம் ஏற்பாடு செஞ்சு கொடுத்தா பெரிய உதவியாக இருக்கும். கன்றாக வைத்தது இன்னைக்கு எங்க கண் முன்னாலேயே வளர்ந்து நிக்குது. இதைப் பார்ப்பதற்கு சந்தோஷமா இருக்கு. இன்னும் இதை உயரமாக வளர்க்க வேண்டும். சில பேர் எங்களை மனதார பாராட்டுவாங்க. அதுதான் இந்த வயசானவளையும் ஓட வைக்குது'' என்றார். https://www.vikatan.com/news/environment/women-grows-trees-in-thanjavur-collector-office

யாழ் புத்தகத் திருவிழா 2019

4 months 1 week ago
July 29, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019 ‘ எதிர்வரும் ஓகஸ்ட் 27ஆம் திகதி முதல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மிகப்பிரமாண்டமாக இடம்பெறவுள்ள இந்த புத்தகக் கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், ஈழத்துப்படைப்புக்கள் உள்ளிட்ட உள்ளூர் மற்றும் இந்திய மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்களும் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. #யாழ் #புத்தகத் திருவிழா #ஆளுநர் #சுரேன் ராகவன் http://globaltamilnews.net/2019/127581/

றிசாட் பதவியேற்றதை வெடி கொழுத்தி கொண்டாடிய மக்கள்

4 months 1 week ago
றிசாட் பதவியேற்றதை வெடி கொழுத்தி கொண்டாடிய மக்கள் றிசாட் பதியுத்தீன் மீண்டும் இன்று இரவு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்ததையடுத்து அவரது ஆதரவாளர்கள் வவுனியா நகரில் உள்ள தினச்சந்தைக்கு முன்னால் வெடி கொழுத்தி கொண்டாடினர். உதித்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து அமைச்சர் றிசாட் பதியுத்தீன் பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கல் வேண்டும் என அத்துரலிய ரத்னதேரர் உண்ணாவிரதம் இருந்ததைத் தொடர்ந்து றிசாட் பதியுத்தீன் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர். இந்நிலையில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிரூபிக்கப்படவில்லை. இந் நிலையில் அவர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் மீண்டும் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதனையடுத்தே வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல்பாரி, லரீப் மற்றும் அமைச்சர் றிசாடின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் வெடி கொழுத்த தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். https://www.virakesari.lk/article/61494

இந்­திய வம்­சா­வளி மலை­யக சமூ­கத்தின் முதல் பேரா­சி­ரியரான மு.சின்­னத்­தம்பி கால­மானார்

4 months 1 week ago
அம்பனை, தெல்லிப்பழையில் அமைந்த இந்த கல்லூரி இவரால் பெருமை அடைந்ததும் கூட. அன்னாரின் சேவைக்கு நன்றிகள். ஆத்மா சாந்தியடையட்டும்!

லண்டனில் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் !

4 months 1 week ago
வேக‌மாய் எழுதும் போது ஒரு சில‌ எழுத்து பிழை விட்டு விட்டேன் முனிவ‌ர் , த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌வும் 😉 / கைபேசியில் இருந்து தான் எழுதுறேன் , வேகமாய் எழுதும் போது , நான் எழுத‌ வ‌ந்த‌த‌ எழுத‌ ஒரு சில‌ வேறு எழுத்துக்க‌ள் வ‌ந்து விட்ட‌து 😉 /

யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை

4 months 1 week ago
இலங்கையில் இது சாத்தியம் இல்லையென்பதை சொல்ல வந்தேன் கறி கட்டுவது கைதுடைக்கும் ரிசு பேப்பரும் பொலித்தீன் கவரில் தான் வரும் கறி கட்டுவது , மீன் வாங்குவது ,மரக்கறி வாங்குவது முதல் அனைத்திலும் முன்நிற்பது இந்த பொலித்தீன்தான் இதே திரியில் இன்னும் ஓராண்டு கழிந்து எந்த நிலையென்பதை நான் கேட்பேன் மறக்க வேண்டாம் பாஞ் இந்த பொலித்தின் தடையை அமுலாக்கி தோல்வியும் கண்டோம் என்ற ரீதியில் சொன்னது

ஞாயிறு வகுப்பு என்ற போர்வையில் யாழில் மீண்டும் மதமாற்ற முயற்சி: விரட்டியடித்த கிராமமக்கள்!

4 months 1 week ago
ஒன்றை சொல்லி ஆக வேண்டும் எல்லாம் எலிகள் தான் ஆனால் தங்கும் வளைதான் வேறு ஒரு சின்ன கதை ஒரு வயலில் பல எலிகள் இருந்ததாம் அந்த எலிகளில் ஒன்று அந்த வயலில் உள்ள விதைகளையும் அறுத்து உண்டு வந்தததாம் அந்த எலியை பிடிக்க மற்ற நல்ல எலிகளிடம் ஐடியா கேட்டானாம் அந்த வயல் முதலாளி அதற்கு மற்ற எலிகளெல்லாம் எங்களுக்கு கலர் அடித்து விடுங்கள் அந்த கலரில் இருக்கும் எல்லா எலிகளும் நல்ல எலிகள் கலர் இல்லாத எலிமட்டும் உங்கள் வயலை நாசம் பண்ணும் எலி என்று சொல்லிச்சாம் வயல்காரனும் நல்ல எலிகளுக்கு கலர் அடிச்சிவிட்டு போக அன்றிரவு மழைவர எல்லா எலிகளும் நனைந்து கலர் இல்லாமல் இருக்க ஒட்டு மொத்த எலிகளையுமே அடிச்சு விரட்டினானாம் அந்த விவசாயி.
Checked
Mon, 12/09/2019 - 04:08
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed