புதிய பதிவுகள்

கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கிளிநொச்சியில் கைது..

4 months 1 week ago
நீங்கள் சொல்வது எனக்கு விளங்குது...எனக்கு ஊரில் போய் இருக்கின்ற பிளான் இருக்கு...நிற்க,அநேகமாய் நாங்கள் எல்லாம் போர் நடந்து கொண்டு இருக்கும் காலத்தில் தான் வந்தோம்(போரால் பாதிக்கப் பட்டோமா,இல்லையா என்பது இரண்டாம் பட்சம்.). 😑

வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..

4 months 1 week ago
ஒரு வருடத்தில் எத்தனையோ தமிழ் டொக்டஸ் படிச்சு வெளி வருகினம்..அதில எத்தனை பேர் வன்னியில் பிறந்த ஆட்களாய் இருப்பினம்..அதில ஒருத்தருக்கு கூட தாங்கள் பிறந்த மண்ணுக்கு சேவை செய்ய விருப்பம் இல்லை...ஏங்கேயோயிருந்து சிங்களவர்களும்,முஸ்லிம்களும் வர வேண்டி இருக்குது. அந்த பெண் அவன்ர குடும்பத்தை கூட்டி ஆட்கள் கூடினவுடன் அவர்கள் தங்கட நிலத்தை ஆக்கிரமிச்சிட்டினம் என்று கத்த வேண்டியது 😧

தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு- கருத்துகணிப்பு

4 months 1 week ago
சிதறு தேங்காய்தான் இம்முறை நிழலி சொல்வது போல் dmk காங்கிரஸ் மறுபடி தழைக்கும் காரணம் அதிகபடியான மோடி எதிர்ப்பு மற்றும்படி கள்ளவிளையாட்டில் பிஜேபி கூட்டம் பங்கு போடும் அன்புமணி மேடையில் வைத்தே களவு செய்வம் என்று சொல்லிவிட்டார் . சீமானை பொறுத்தவரை நாங்கள் அவர் வரனும் என்று கனவும் விருப்பமும் கொண்டாலும் யதார்த்தம் சுட்டு கருக்கும் அந்த கனவை. அங்குள்ளவர்கள் சிந்தனை அப்படி எங்களுக்கு இடம்வலம் என்றால் அவர்களுக்கு வலம் இடப்பக்கம் ஆக சிந்திப்பு டிசைன் ஆண்டவன் கொடுத்துள்ளான் போல் உள்ளது மொழி மட்டும் தமிழ் கதைத்து பலன் இல்லை . மீறி எங்கள் விருப்பம் நிறைவேறினால் நல்லது பார்ப்பம் அவர்களின் ஓட்டு மிசின்(hacking) தந்திரங்களை தாண்டி வெற்றி பெறனும் .

மலரும் நினைவுகள் ..

4 months 1 week ago
தம்பளப் பூச்சி... மழைக்காலங்களில் மண்ணுக்குள் இருந்து எட்டிப் பார்ப்பினம். நல்ல வெல்வெட் துணி மாதிரி இருப்பினம். கொஞ்சம் இறுக்கி பிடித்து விட்டால் இவற்றின் சிவப்பு நிறம் கையில் ஒட்டிக் கொள்ளும்.

இலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்

4 months 1 week ago
இலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுருவாக்கம் பற்றிய வரலாற்றை தவிர்த்திருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக அதன் தோற்றம் பற்றிய விபரங்களை இன்றும் தமிழில் தேடிக் கண்டு பிடிக்க முடிவதில்லை. ஏன் ஆங்கிலத்தில் கூட அது பற்றிய தகவல்கள் இல்லை. இந்தக் கட்டுரை முதற் தடவையாக தமிழ் மொழியில் வெளிவந்த முதல் நூலைப் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் விபரங்களை வெளிக்கொணர்கிறது. அது போலவே இலங்கையில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளின் எழுத்துக்கள் வடிவம் பெற்ற வரலாறு பற்றிய குறிப்புகள் போதிய அளவு பதிவு செய்யப்பட்டதில்லை என்பதை அறியக் கூடியதாக இருக்கிறது. ஒரு வகையில் சிங்களத்தில் கூட அது பற்றிய விபரங்களை அறிய முடிகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழில் முதலாவது அச்சான நூல் எது என்கிற கேள்விக்கு சரியான பதில் கிடைப்பதில்லை. “தம்பிரான் வணக்கம்” தான் முதலில் அச்சிடப்பட்ட தமிழ் நூல் என்பதை நாமறிவோம். ஆனால் அது தென்னிந்தியாவில் வெளியானது. இந்திய மொழிகளியே முதன்முதலில் அச்சு வடிவம் பெற்ற மொழி தமிழ் மொழி தான் (20.10.1578). அந்த நூலுக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கியிருந்தவர் ஜோன் கொன்கல்வஸ் (John Goncalvez). 1578 இல் அது தென்னிந்தியாவில் கொல்லத்தில் அந்த நூல் வெளியான போது அன்றைய உலகின் மிகப்பெரிய செல்வந்த நாடுகள் பலவற்றில் கூட தத்தமது மொழியில் அச்சில் நூல்கள் வெளிவராத காலம். இதன் மூலம் இந்திய - இலங்கை மொழிகளில் முதன் முதலில் நூல் அச்சிடப்பட்ட மொழியாக தமிழ்மொழி அமைந்தது. ஆனால் 1554இலேயே தமிழ் நூல் வெளிவந்தது விட்டது என்கிற பதிவையும் பல இடங்களில் காண முடியும். “கார்த்தீயா ஏ லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilha ē lingoa Tamul e Portugues - தமிழில்: "தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த திருமறைச் சிற்றேடு") என்கிற தலைப்பில் வெளியான அந்த நூலில் தமிழ்ச் சொற்கள் இலத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோக்கப்பட்டிருந்தன. அதாவது இன்றைய அர்த்தத்தில் Transliteration வடிவத்தில் அது வெளியாகியிருந்தது. நேரடி தமிழ் எழுத்துக்களில் வெளியாகாதாதால் அதனை முதல் நூல் என்று கணக்கிற்கொள்வதில்லை. எழுத்து உருவாக்கப்பட்டு (movable type) அச்சாக்கம் பெற்ற முதன்மை மொழிகளில் தமிழும் அடங்கும். அச்சு இயந்திரம் வந்து சேர்ந்தது இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி செய்த காலனித்துவ நாடுகள் மாறி மாறி தலா ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்துவிட்டுப் போனார்கள். போர்த்துக்கேயரை விரட்டிவிட்டு ஒல்லாந்தர் கரையோரங்களைக் கைப்பற்றி ஆளத் தொடங்கியபோது இலங்கையை ஆள்வதற்கு சுதேசிய மொழியின் அவசியத்தை அதிகம் உணர்ந்துகொண்டார்கள். புதிய விதிகளையும், சட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல படாதுபாடுபட்டனர். குறிப்பாக அவர்களின் வரி தொடர்பான அறிவித்தல்களை உள்ளூர் சிங்களவர்களின் உதவியுடன் விளம்பர அட்டைகளை சிங்களத்திளும், தமிழ் பிரதேசங்களில் தமிழிலும் எழுதி மக்கள் கூடும் இடங்களில் ஒட்டினார்கள். ஒட்டிய அறிவித்தல்களை பொதுமக்கள் கூடிய இடத்தில்; வாசிக்கத் தெரிந்த ஒருவர் உரத்து வாசிக்க மற்றவர்கள் அதனை அறிந்து செல்வார்கள். இப்படித்தான் ஒரு நூற்றாண்டு கழிந்தது. ஆனால் இப்படி ஒரேவகையான ஏராளமான அறிவித்தல்களை எழுதி எழுதி நாளடைவில் இதற்கு ஒரு சிறந்த தீர்வை காண்டடைய எண்ணினார்கள். அப்போதுகேரளாவில் - கொல்லத்தில் ஏற்கெனவே அச்சு இயந்திரம் கொண்டுவரப்பட்டு அச்சாக்கம் நிகழ்ந்துகொண்டுதான் இருந்தது. “நெதர்லாந்தில் என்றால் இதெற்கெல்லாம் அச்சு இயந்திரம் இருக்கிறது.” என்பதை ஆளுநரிடம் சுட்டிக்காட்டினார்கள். ஆளுநரும் இலங்கைக்கு அச்சு இயந்திரத்தை கொண்டுவரப் பணித்தார். தமிழ் சிங்கள எழுத்து வார்ப்பு விதிகளையும், வரி விபரங்களையும் அச்சடிப்பதற்கு அடுத்ததாக அவர்களுக்கு இன்னொரு பெரிய தேவையும் இருந்தது. அது தான் தமது மதப் பிரச்சாரம். சமய நூல்களையும், துண்டுப் பிரசுரங்களையும் வெளியிடும் தேவை அதிகமாக இருந்தது. அவர்கள் நடத்திய பாடசாலைகளில் கல்வி கற்பிப்பதற்கு தேவையான சிறு வெளியீடுகளை அச்சடிக்கும் தேவையும் இருந்தது. அன்றைய டச்சு காலனித்துவ சக்திகள் போர்த்துகேயர் அளவுக்கு மத நிர்ப்பந்தங்களை செய்யாத போதும் அவர்கள் தமது புரட்டஸ்தாந்து மதத்தை பரப்புவதில் கவனம் செலுத்தவே செய்தார்கள். போர்த்துக்கேயர் துரத்துப்பட்டுவிட்டாலும் கூட போர்த்துக்கேயர் பரப்பிய மதத்துக்கு மாற்றீடாக புரட்டஸ்தாந்து மதத்தை பரப்புவதும், புதியவர்களை மத மாற்றம் பண்ணுவதும் அவர்களது வேலைத்திட்டங்களில் ஒன்றாக இருந்தது. அந்த சவாலை சரிகட்டும் ஆயுதமாக ஒரு அச்சு இயந்திரத்தை இலக்கு வைத்ததில் ஆச்சரியமில்லை. சிமோன் கட் (Simon Kat), யோஅன்ன ருவல் (Joannes Ruel), வில்ஹெம் கொனின் (Wilhelm Konyn) போன்ற டச்சு சீர்திருத்த சபையின் (Duch Reformed Church) மதகுருமார் ஆரம்பத்தில் புனித பைபிளின் பகுதிகளை சிங்கள மொழியில் வெளிக்கொணர பிரதான பாத்திரம் வகித்தவர்கள். இவர்களில் வில்ஹெம் கொனின் பெரும்பங்கை ஆற்றியிருந்தார். அவர் 1739 இல் சுவிசேஷ நூல்களை சிங்களத்துக்கு மொழிபெயர்த்து அவற்றை ஓலைச்சுவடிகளில் பதிவுசெய்தார். கிழக்கிந்திய கம்பனியின் ஆயுதப் பொறுப்பாளராக இருந்த கேபிரியேல் ஷாட் (Gabriel Schade) என்பவரிடம் சிங்கள எழுத்துக்களை உருவாக்கும் பணியை ஆளுநர் ஒப்படைத்தார். அவர் தான் நுணுக்கமான உலோக வேலைகள் செய்வதில் கைதேர்ந்தவராக இருந்தார் ஷாட்.. இந்தப் பணி இலகுவாக இருக்கவில்லை. இந்த பணி 1720 இலிருந்து இழுபறிபட்டுகொண்டே சென்றது. 1726-1729 காலப்பகுதியில் புதிய ஆளுனராக Petrus Vuyst என்பவர் பதவியேற்கிறார். வந்ததுமே இலங்கைக்கு அப்படியொரு அச்சுப்பணிகள் தேவையில்லை என்று கூறி ஷாட்டை சிறையில் அடைத்துவிடுகிறார். அந்தப் பணிகள் நின்று விடுகின்றன. ஆளுநரும் இறந்து போனார். 1734இல் கொழும்பில் அச்சகம் உருவானது. கிழக்கிந்திய கொம்பனியும், டச்சு சீர்த்திருத்த சபையும் (Dutch Reformed Church) இணைந்து இந்த அச்சகத்தை நிறுவினார்கள். 1736-1740 வரையான காலப்பகுதியில் குஸ்தாப் வில்லம் (Gustaaf Willem Baron van Imhoff) என்பவர் ஆளுநராக வருகிறார். இந்தப் பணிகளை அவர் முன்னெடுக்கிறார். ஷாட்டுக்கும் வயதாகி விட்டது. சிறையில் இருந்து மிகவும் நலிந்து போயிருந்தார். ஆனாலும் விட்ட இடத்தில் இருந்து அந்தப் பணிகளை மீண்டும் தொடங்கினார். பழைய ஓலைச் சுவடிகளில் இருந்து இந்த எழுத்துக்களை குறிப்பாக அடையாளம் கண்டு அதனை பல்வேறு ஓலைச்சுவடிகளில் உள்ள எழுத்துக்களுடன் ஒப்பிட்டு இந்தப் பணிகளை செய்வது லேசான காரியமில்லை. ஏற்கெனவே “சிங்கள இலக்கண எழுத்து நுட்பம்” (Grammatica, of Singaleesche Taal-Kunst) என்கிற ஒரு நூல் டச்சு மொழியில் Johannes Ruell என்பவரால் எழுதப்பட்டு 1699இல் 190 பக்கங்களில் வெளிவந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அதில் சிங்கள எழுத்துக்களின் வடிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விபரமான ஆராயப்பட்டிருக்கிறது. எழுத்துக்களுக்கு சரியான வடிவம் கொடுப்பதற்கு இந்த நூல் நிச்சயம் பெரும்பங்காற்றி இருக்கவேண்டும். Johannes Ruell இன் நூலில் பயன்படுத்தப்பட்டிருந்த சிங்கள எழுத்துக்களும், ஏற்கெனவே பால்டேஸ் 1672இல் வெளியிட்ட “The Coromandel Coast and Ceylon'' என்கிற நூலில் வெளியிட்டிருந்த தமிழ் எழுத்துக்களும் மரப்பலகையில் வெட்டப்பட்டு செதுக்கப்பட்டு அச்சு செய்யப்பட்டிருந்தது. இறுதியில் சிங்களத்திலும், தமிழிலும் பலகைகளில் செதுக்கப்பட்ட எழுத்துக்கள் அச்சுக்குத் தயாரானது. அவற்றைக் கொண்டு அச்சு வேலையும் தொடங்கப்பட்டது. அதுவரை பனையோலையில் சுருங்கியிருந்த எழுத்துக்கள் கடதாசிக்கு வந்தது. அதுபோல அதுவரை குறிப்பிட்ட, வர்க்கத்துக்கும், குறிப்பிட்ட சாதிகளுக்கும் குறிப்பிட்ட குழாமினருக்கும் மட்டுபடுத்தப்பட்டிருந்த எழுத்து, வாசிப்பு, என்பவையெல்லாம் பாமர மக்களுக்கும் மெதுமெதுவாக போய் சேரத் தொடங்கின. இந்த அச்சு இயந்திரம் தான் பல வருடங்களாக தமிழிலும், சிங்களத்திலும், டச்சு, ஆங்கில மொழிகளிலும் பல ஆண்டுகளாக வெளியீடுகளைத் தந்துகொண்டு இருந்திருக்கிறது. ஷாட்டுடன் இந்தப் பணிகளில் அருகில் இருந்து ஒத்துழைத்தவர்கள் J. W. Konyn மற்றும் J. P. Wetselius என்கிற பாதிரியாரும் தான். இவர்கள் இருவரும் இணைந்து எழுத்துக் கோர்ப்பதையும், அச்சு செய்வதையும் எனயோருக்குப் பயிற்சியளித்தார்கள். இறுதியில் முதற் தடவையாக 05.04.1737 அன்று சிங்களத்தில் முதலாவது தடவையாக அச்சில் அறிவித்தல் அட்டைகள் (Plakkat) வெற்றிகரமாக அச்சு செய்யப்பட்டன. மாத்தறை பிரதேசத்தில் மிளகுச் செய்கை தொடர்பான ஆணை அது. ஆனால் அவர்களின் இலக்கு மதப்பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான நூல். தமிழில் முதலாவது அறிவித்தல் பலகை 1741இல் வெளியிடப்பட்டதாக ராஜ்பால் குமார் டீ சில்வா தனது ஆய்வில் கூறுகிறார் (Illustrations and Views of Dutch Ceylon 1602-1796) முதன் முதலாக சிங்கள, தமிழ் எழுத்துக்களுக்கு இன்றைய வடிவத்துக்கு உயிர்கொடுத்த ஷாட் அந்த நூலைப் பார்க்கு முன்னமே 1737 நடுப்பகுதியில் இருந்துபோனார். பல ஆண்டுகளாக அந்த வார்ப்புக்காக பாடுபட்ட ஷாட்டின் இறப்பின் பின் ஒரு சில மாதங்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். சிங்களத்தில் முதல் நூல் அவர்களின் இலக்கின்படியே “The Singaleesch Gebeede-Boek” (சிங்கள பிரார்த்தனை புத்தகம்) என்கிற நூல் 06 செப்டம்பர் 1737 இல் வெளியிடப்பட்டது. 19.5 × 13 சென்டிமீட்டர் அளவில் 43 பக்கங்களில் அது வெளியானது. சிகப்புத் துணியால் மூடப்பட்ட அட்டையின் மத்தியில் கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தின் VOC லட்சினை (Vereenigde Oost Indische Compagnie, V.O.C.) பொறிக்கபட்டிருக்கிறது. மேன்மைமிகு கொம்பனியின் சார்பில் அச்சு செய்யப்பட்ட வருடம் 1737 என்று அதில் தொடங்குகிறது. அது தான் சிங்களத்தில் அச்சான முதலாவது நூலாக வரலாற்றில் இடம்பெறுகிறது. அது வெளிவந்தது 280ஆண்டுகளைக் கடந்துவிட்டது. யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலரால் அச்சுப் பணிகள் தொடங்கப்பட்டது இதற்குப் பின் நூறாண்டுகள் கழிந்து தான் என்பதையும் இங்கு பதிவு செய்தல் அவசியம். காலை, மாலை செய்ய வேண்டிய பிரார்த்தனைகள், ஆகாரத்துக்கு முன்னரும் பின்னரும் செய்ய வேண்டியவை, மற்றும் பத்துக் கட்டளைகள் என்பவற்றின் சுருக்கம் இதில் அடங்கியுள்ளது. தமிழில் முதல் நூல் “தமிழ் வேத பிரார்த்தனை புத்தகம்” (Mallebaars Catechismus- en Gebede-Boek) என்கிற நூல் கூட அதற்குப் பின்னர் தான் 1739 இல் கொழும்பில் வெளியாகியிருக்கிறது. 1847இல் நெதர்லாந்தில் வெளியிடப்பட்ட நூல்களின் பட்டியல் தொகுப்பான “Catalogus Van De Bibliotheek Der Maatschappij Van Nederlandsche Letterkunde, Te Leiden, Volume -2” என்கிற டச்சு நூலில் இருந்து ஆரம்பத் தகவல்களை திரட்ட முடிந்தது பின்னர் அந்த நூலையும் இந்தக் கட்டுரைக்காக தேடிக் கண்டு பிடிக்க முடிந்தது. இலங்கையில் அச்சு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதான் பின் ஆரம்பத்தில் வெளியான சிங்கள, தமிழ் நூல்களின் பட்டியலை மேற்படி நூலில் உறுதியாக காணமுடிக்கிறது. மேலும் புதிய ஏற்பாடு (Rev. Philip De Melho) பிலிப் டீ மெல்ஹோ என்கிற பாதிரியாரின் மொழிபெயர்ப்பில் 1748இலும் 1759இலும் வெளிவந்ததாக அதில் தகவல்கள் காணப்படுகின்றன. “தமிழ் வேத பிரார்த்தனை புத்தகம்” நூலின் தொடக்கப் பக்கத்தில்; “தமிழ் வேத பிரார்த்தனை புத்தகம்” நூலில் “சிங்கள பிரார்த்தனை நூலில்” உள்ளது போலவே போன்ற தலைப்புகளில் அத்தியாங்களைக் காண முடிகிறது. “எங்கள் கிறிஸ்தவர்களுடைய சந்தேகமற்ற விசுவாசத்தின் பன்னிரண்டு பிரிவுகள்” என்கிற தலைப்பில் வரும் அத்தியாயத் தில் “வானத்தையும் பூமியையும் படைத்த சருவத்துக்கும் வல்ல பிதாவாகிய தம்பிரானையும்...” என்று போகிறது. கொல்லத்தில் 1578 இல் வெளியான முதல் தமிழ் நூலின் தலைப்பும் தம்பிரான் வணக்கம். “தம்பிரான்” என்பது “கடவுள்” என்பது அர்த்தம். அதுவே பிற்காலத்தில் நாவலரின் வேதாகம மொழிபெயர்ப்பில் “ஆண்டவர்” என்று குறிக்கப்படுவதையும் கவனிக்க. “தம்பிரான் வணக்கம்” வெளிவந்து 161 வருடங்களின் பின்னர் தான் இலங்கையில் முதல் தமிழ் நூல் வெளியாகிறது. ஆனால் தம்பிரான் வணக்கத்தில் எங்கும் முற்றுப்புள்ளி, காற்புள்ளி போன்ற புள்ளிகள் எப்படி எங்கும் இடப்படவில்லையோ அதுபோலவே இந்த “தமிழ் சமய பிரார்த்தனை புத்தகம்” நூலிலும் எங்கும் அப்படி இடப்படவில்லை. தமிழில் ஏற்கனவே “தம்பிரான் வணக்கம்” நூல் வந்திருந்ததால் தமிழ் எழுத்துக்களை உருவாக்குவதில் அவர்களுக்கு சிரமம் இருக்கவில்லை. “தமிழ் பிரார்த்தனை புத்தகத்துடன்” ஒப்பிடும்போது அதில் உள்ள வடிவ ஒற்றுமைகளைக் காண முடிகிறது. தமிழில் தவறவிடப்பட்ட வரலாற்று செய்தி “தமிழ் வேத பிரார்த்தனை புத்தகம்” பற்றிய செய்திகள் பிற்காலங்களில் தமிழில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. தமிழில் அச்சான நூல்களின் பட்டியலை ஆராய்பவர்களுக்கு மிகவும் துணையாய் இருப்பவை 1. Classified Catalogue Of Tamil Printed Books, with Introductory notices. Compiled By John Murdoch. Christian Vernacular Education Society, MADRAS 1865 Catalogue of the Tamil Books in the Library of the British Museum edited by L. D. Barnett, George Uglow Pope – London - 1909 இந்த இரு நூல்களும் கூட இந்த விபரத்தைத் தவற விட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. டச்சு மொழியில் வெளிவந்ததாலேயோ என்னவோ இந்த தகவல்கள் இலங்கை மொழிகளில் சரியாக பதிவு செய்யப்படவில்லை போல் தெரிகிறது. குறிப்பாக தமிழ் ஆய்வாளர்களின் (அல்லது தமிழ் மொழி, அரசியல், வரலாறு குறித்த ஆய்வாளர்களின்) கவனத்தைப் பெறவில்லை. முதல் அச்சகத்தை நிறுவியவர்கள் என்கிற வகையில் இந்த விடயத்தில் டச்சுக்காரர்களின் இந்தக் காலத்து ஆவணங்கள் நமது கவனத்தைப் பெற்றிருக்கவேண்டும். நெதர்லாந்தில் 1847இல் வெளியான நூல் பட்டியலில் 430, 431,432 ஆகிய பக்கங்களில்; ஆரம்பத்தில் வெளியான தமிழ், சிங்கள நூல்களின் பட்டியலை தொகுத்திருப்பதை காண முடிகிறது. இந்த நூல் 1739இல் வெளிவந்தபோதும் சிங்களத்தில் வெளிவந்த அதே காலத்தில் இதையும் திட்டமிருந்திருக்கிறார்கள் என்று ஆளுனர் குஸ்தாப் 1737இல் எழுதிய குறிப்புகளில் காண முடிகிறது. “...எனது ஆட்சிக் காலத்தில் மிகப் பிரயோசமிக்க அந்த கருவி இயக்கப்பட்டது. “சிங்கள பிரார்த்தனை நூல்” வெளியிடப்பட்டுவிட்டது. மலபார் மொழியிலும் (தமிழில்) வேத புத்தகத்தை கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.” என்கிறார். ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த அதுவும் டச்சு மொழி நூல் என்பதாலேயோ என்னவோ இந்தத் தகவல் எவரது பார்வைக்கும் அகப்படவில்லை. அது மட்டுமன்றி அப்போதெல்லாம் தமிழ் பிரதேசங்களை மலபார் என்றும், தமிழர்களை மலபாரிகள் என்றும், தமிழ் மொழியை மலபார் மொழி என்றும் பல ஆவணங்களிலும் நூல்களிலும் பதிவாகியுள்ளன. இந்த நூல் கூட “மலபாரிகளின் பிரார்த்தனை புத்தகம்” (Mallebaars Catechismus- en Gebede-Boek) என்று தான் தலைப்பிடப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்கவேண்டும். தேடல்களில் இருந்து தவறியமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். அடுத்தது தமிழ் மொழியை சில இடங்களில் “Tamil”, “Tamul” என்றும் தான் குறிப்பிடுகின்றன. எனவே குறிப்பாக நாம் இரு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட ஆவணங்களைத் தேடுகின்ற போது இந்த புரிதலோடு தேடுவது ஆய்வுகளுக்கு உதவும். வெளியிடப்பட்ட இடம் கூட “Kolombo” என்று தான் காணப்படுகிறது. டக்ளஸ் கிராவ்போர்ட் (Douglas Crawford McMurtrie) என்பவர் 1931 ஆம் ஆண்டு உலக நாடுகளில் முதலாவது அச்சு வெளிவந்தவை பற்றிய பட்டியலைக் கொண்ட சிறு சிறு நூல்களை வெளியிட்டார். அந்த வரிசையில் அவர் இலங்கைப் பற்றியும் 10 பக்கங்களில் தனி நூலை வெளியிட்டார் (Memorandum on the First Printing in Ceylon: With a Bibliography of Ceylonese Imprints of 1737-1760). அதில் நூல்களில் பட்டியல் 4 பக்கங்களில் மாத்திரம் உள்ளது. அந்தப் பட்டியலில் 1739 இல் வெளிவந்ததாக மேற்படி “தமிழ் வேத பிரார்த்தனை புத்தகம்” என்கிற நூலையும் பட்டியல்படுத்தியிருக்கிறார். ஆனால் அவர் “Catechism and Prayers” என்று தலைப்பை ஆங்கிலப்படுத்தியிருக்கிறார். வந்திருந்த மொழியிலேயே Mallebaars Catechismus- en Gebede-Boek என்று அவர் பதிவிட்டிருந்தால் கூட மேலதிகமாக தேடுவோருக்கு அந்த நூல் எட்டியிருக்கக் கூடும். இலங்கையில் அச்சான முதலாவது தமிழ் நூல் எது என்பது பற்றி இப்போது திரட்டியிருக்கும் தகவலைத் தவிர வேறு ஏதும் வெளிவந்ததாத எதுவித தகவல்களும் இல்லை. 1841 இல் வெளியான “உதயதாரகை” பத்திரிகையே இலங்கையில் முதலாவது பத்திரிகை என்று அறிந்துவைத்திருக்கிறோம். ஆனால் அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தமிழில் நூல் அச்சாகி வெளியாகியிருக்கிறது. 1909இல் பிரிட்டிஷ் நூலகம் நூலாக தொகுத்த அதுவரை வெளியான தமிழ் நூல்களின் பட்டியலின்படியும் இந்த காலத்துக்கு முன்னர் தமிழ் நூல்கள் அச்சானதாக ஆதாரங்களைக் காண முடியவில்லை. மேலும் சிங்களத்தில் முதன் முதலில் வெளியிட்ட அதே பிரார்த்தனை நூலையே தமிழுலும் வெளியிடுவதை இலக்காகக் கொண்டிருக்கலாம். இந்த சிங்களத்தில் எப்படி எழுத்துக்களை வார்த்திருக்கிறார்களோ, அதே போலவே தமிழிலும் செய்யப்பட்டிருப்பதை இரு நூல்களையும் ஆராய்கிறபோது உறுதிசெய்துகொள்ள முடிகிறது. சிங்கள நூல் 40 பக்கங்களிலும் தமிழில் 96 பக்கங்களிலும் காண முடிகிறது. இந்த இரு மொழி நூல்களிலும்; வெளியிடப்பட்ட ஆண்டின் இலக்கத்தை தமிழிலும், சிங்களத்திலும் எழுத்துக்களாக இட்டிருக்கிறார்கள். தமிழில் இலக்கங்களை குறிக்க பயன்படுத்தப்படும் எழுத்தை நாம் அறிந்திருக்கிறோம். சிங்களத்திலும் அதுபோலவே இலக்கங்களைக் குறிக்க சிங்கள எழுத்துக்கள் உண்டு. அதனை இங்கே காண முடியும் “சத்தியத்தின் வெற்றி” (Triumph der Waarheid) என்கிற நூலும் தமிழில் 1753இல் கொழும்பில் வெளியாகியிருக்கிறது. அதன் பின்னர் தொடர்ச்சியாக தமிழிலும் சிங்களத்திலும் பல கிறிஸ்தவ சமய நூல்கள் வெளிக்கொணர்ந்திருப்பதை நெதர்லாந்தில் வெளியான நூல் பட்டியல்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்த நூல்களில் பலவற்றை பெயர்களாக மட்டுமே அறிந்திருக்கிறோம். சில நூல்கள் மட்டுமே இலங்கையின் சுவடிகூடத்தினைக்களத்தில் பார்வையிட முடிகிறது. ஏனையவற்றில் சில நெதர்லாந்திலுள்ள டச்சு நூலகத்தில் இன்றும் காணப்படுகின்றன. இலங்கையில் வெளியான முதலாவது சுதேசிய மொழிப் பத்திரிகை தமிழ் பத்திரிகையான “உதயதாரகை”. 1841 இல் உதயதாரகை வெளியானது. அது போல இலங்கையில் வெளியான முதல் சிங்களப் பத்திரிகை 1860இல் வெளியான “லங்காலோக” என்கிற பத்திரிகையே. ஒல்லாந்தரிடமிருந்து இலங்கையின் ஆட்சியதிகாரம் ஆங்கிலேயர்களின் வசம் கைமாறியபின் மேம்படுத்தப்பட்ட நிலையில் இருந்த இந்த அச்சு இயந்திரமும் அச்சகமும் ஆங்கிலேயர்களின் பயன்பாட்டுக்கு வந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 15.03.1802 இல் முதன் முதலில் வர்த்தமானிப் பத்திரிகையை (No. 1 of The Ceylon Government Gazette) இந்த அச்சகத்தில் இருந்து தான் வெளியிட்டார்கள். முதன்முதலில் இலங்கை மொழிகளின் எழுத்துக்கள் வடிவம் பெற்ற கதை அது தான். அந்த வடிவத்தைப் பின்பற்றியே இன்றைய நவீன அச்சுவேலைகளுக்கான கணினி எழுத்து வடிவங்கள் வரை உருவாக்கப்பட்டு ஒப்பேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் அச்சுக் கலைத் தோற்றம் பெற்ற அதே காலப்பகுதியில் சுதேச மொழிகளான தமிழ், சிங்கள மொழிகளில் நூல்கள் வெளியிடப்பட்டு வளர்ச்சியுற்று வந்த வரலாறு மேலும் விரிவாக எழுதப்படவேண்டிய ஒன்று. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வு. மறக்கக் கூடாத நிகழ்வு. நாம் தவறவிட்ட வரலாற்றுப் பதிவு. தமிழ் வேத பிரார்த்தனை புத்தகம் by SarawananNadarasa on Scribd நன்றி - தினக்குரல் https://www.namathumalayagam.com/2019/04/FirstTamilBookSrilanka.html

தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு- கருத்துகணிப்பு

4 months 1 week ago
இந்த முறை கண்டிப்பாக திமுக + காங்கிரஸ் அணி அதிக ஆசனங்கள் பெற்று வெல்லும். திமுக வுக்கு எதிரான வாக்குகள் பிரிந்து அதிமுக வுக்கும் தினகரன் கட்சிக்கும் போவதால் திமுக கூட்டணியின் வெற்றி இலகுவானதாக அமையும். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தினகரன் கட்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக யார் அதிகம் வாக்கு வீதம் பெறுவார்கள் என்பதில் கமலின் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையில் போட்டி இருக்கும். தமிழ் சிறி அல்லது யாராவது தமிழக தேர்தல் / இந்திய தேர்தல் தொடர்பாக ஒரு போட்டி அல்லது கருத்துக்கணிப்பு ஒன்றை யாழில் நடத்தலாமே..............?

மலரும் நினைவுகள் ..

4 months 1 week ago
என் சிறு வயதில், ஒரு உரலில் இரண்டு உலக்கைகள் ஒன்றோடொன்று மோதுப் படாமல் ஒரு வித தாள நயத்தோடு இடிப்பது பார்க்க வியப்பாக இருக்கும்.

கோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு….

4 months 1 week ago
கோத்தபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு வழக்குகள் 10 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையின் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவிக்கின்றது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் யஷ்மின் சூகா இந்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த தகவலை கூறியுள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா - கலிஃபோர்னியா நீதிமன்றமொன்றில் சிவில் வழக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழ் இளைஞர் ஒருவரும், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவிக்கின்றது. கனடா பிரஜையான ரோயி சமாதானம் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் சித்தி ரவத்தைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும், 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றஞ்சுமத்தியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியா - இலங்கை கரம் கோர்த்தது: போதை மருந்து கடத்தல் குறையுமா? இறந்த 25 ஆண்டுகளுக்கு பின் தாய்நாடு வந்த இலங்கை பிரஜையின் உடல் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவுக்கு கடந்த ஞாயிற்றுகிழமை இரவு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷஅமெரிக்காவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலிஃபோனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கோத்தபய ராஜபக்ஷவை தனியார் விசாரணை குழுவொன்றின் மூலம் கண்டறிந்து, இந்த அறிவித்தலை கையளித்ததாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷ போட்டியிட வேண்டும் என்றால், தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் யஷ்மின் சூகா, அவரை விசாரணையில் சிக்க வைக்கும் இறுதித் தருணம் இதுவெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.bbc.com/tamil/sri-lanka-47859882

இந்தியா - இலங்கை கரம் கோர்த்தது: போதை மருந்து கடத்தல் குறையுமா?

4 months 1 week ago
இந்தியா - இலங்கை கரம் கோர்த்தது: போதை மருந்து கடத்தல் குறையுமா? 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியாவும், இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு நிகழ்ச்சி திட்டமொன்றை முன்னெடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் சன்ஜே மித்ராவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போது இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. பிராந்திய பாதுகாப்பிற்காக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பின் மூலம் இணக்கப்பாடுடன் செயற்படுவது குறித்து இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இலங்கை பாதுகாப்பு பிரிவினருக்கு இந்தியா வழங்கும் பயிற்சிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது நன்றிகளை தெரிவித்துள்ளார். இவ்வாறு இலங்கை பாதுகாப்பு பிரிவினருக்கு இந்தியாவினால் வழங்கப்படும் பயிற்சி நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி இதன்போது, இந்திய பாதுகாப்பு செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாக இந்திய பாதுகாப்பு செயலாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து இரண்டு நாடுகளின் பாதுகாப்பு செயலாளர்களும் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது. இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சத்து ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/sri-lanka-47855281 எப்போ இருந்து போதை பொருள் போதை மருந்தானது?!

எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: விவசாயிகள் உற்சாக கொண்டாட்டம்

4 months 1 week ago
நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ராவணன் தான் முதலாவதாக வழக்கு போட்டது. பின்னரே மற்ற கட்சிகள் வழக்கில் இணைந்தன.

ருவாண்டாவில் 8 இலட்சம் பேரை இனப்படுகொலை செய்த 25ஆம் ஆண்டு நினைவுதினம்

4 months 1 week ago
பல சந்தர்ப்பங்களில் மனிதாபிமானம் பேசுகின்ற பெரும்பாலான நாடுகள் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றன. படுகொலைக்கு உள்ளாகும் சமூகத்தினால் தமக்கு பயனில்லை எனும்போது.

ஆறு கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்கும் அரசியல் எதிர்காலம்

4 months 1 week ago
ஆறு கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்கும் அரசியல் எதிர்காலம் எம். காசிநாதன் / 2019 ஏப்ரல் 08 திங்கட்கிழமை, மு.ப. 11:31 Comments - 0 தேர்தல் கூட்டணிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைமையில், இரு கூட்டணிகள் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டாலும், நடிகர் கமல்ஹாசன், டி.டி.வி. தினகரன் போன்றோரும் களத்தில் தனியாக, உதிரிக்கட்சிகளின் கூட்டணியுடன், தமிழக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். “ராகுல் காந்தி பிரதமர்” என்று அறிவித்து, காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி செய்து கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு எட்டு இடங்களைக் கொடுத்து, அ.தி.மு.க - பா.ம.க கூட்டணியை முதலில் முடிவு செய்து கொண்டார் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.கவும் தி.மு.கவும் 50 சதவீத இடங்களைக் கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்து, தேர்தலில் போட்டியிடுகின்றன. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளும், சட்டமன்றத்துக்கு இடைத் தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளும் இப்போதைக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளன. இடைத் தேர்தல்களில் வெற்றி பெறுவது, அ.தி.மு.கவுக்கு வாழ்வா சாவா பிரச்சினை. அதேபோல் தி.மு.கவுக்குக் கௌரவப் பிரச்சினை. 2011க்குப் பிறகு தேர்தல் வெற்றியைச் சுவைக்க முடியாத ஏக்கத்தில் தி.மு.க தொண்டர்கள் இருக்கிறார்கள். அக்கட்சியின் தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, கட்சியை ஸ்டாலின் கட்டுக்கோப்புடன் கொண்டு சென்று விட்டாலும், இந்தத் தேர்தல் முடிவுகள் தான், அவருடையை தலைமைக்கு ஓர் அடையாளத்தைக் கொடுக்கும். ஏனென்றால், தி.மு.க தலைவரான உடன் சந்திக்கும் நாடாளுமன்றத் தேர்தல் இது. 18 இடைத் தேர்தல் தொகுதிகளுமே பொதுவாக அ.தி.மு.கவுக்கு வலுவான தொகுதிகள். ஆனால், இப்போது இருப்பது பழைய அ.தி.மு.க அல்ல. டி.டி.வி தினகரன் பிரித்துக் கொண்டு போன பிறகு, எஞ்சியிருக்கும் அ.தி.மு.க, இப்போது முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இருக்கிறது. ஆகவே, வருகின்ற தேர்தலில் குறைந்தபட்சம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், அதிக பட்சமாக எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, ஜூன் மூன்றாம் திகதிக்குப் பிறகும் அ.தி.மு.க ஆட்சி தொடரும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சட்டமன்ற ரீதியாக வாக்குக் கேட்டுப் போகிறார்கள். பா.ஜ.கவையும் சுமக்க வேண்டியது, ஒரு பெரிய தலைவலியாக எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. என்றாலும், அந்தக் கட்சியைத் தவிர்த்து விட்டு, கூட்டணி அமைக்க இயலவில்லை. இரண்டு வருடங்களாக ஆட்சியில் நீடிக்க பா.ஜ.க கொடுத்த தார்மீக ரீதியிலான ஆதரவை, அவ்வளவு எளிதாக எடப்பாடி பழனிசாமியால் மறந்து விட முடியாது. ஆனாலும் அக்கட்சிக்குத் தொகுதிகளை அள்ளிக் கொடுக்காமல் கிள்ளிக் கொடுத்தார். தற்போதைக்கு 18 இடைத் தேர்தல் தொகுதிகளில், ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட முடியும் என்று, அ.தி.மு.க திடமாக நம்புகிறது. அதை நோக்கித்தான் அதன் தேர்தல் பிரசாரங்கள் அமைந்திருக்கின்றன. “ஸ்டாலின் எதிர்ப்பு” பிரசாரம், எடப்பாடி பழனிசாமிக்கு அந்த யோகத்தைக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியால் ஐந்து தொகுதிகளுக்கு மேல் பிடிப்பது என்பது இமாலய சாதனையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அகில இந்திய அளவில் வெளியாகும் கருத்துக்கணிப்பு முடிவுகளும் சமீபத்தில் எடுக்கப்பட்ட, லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு முடிவுகளும் இப்படித்தான் சுட்டிக்காட்டுகின்றன. இப்போது அமைச்சராக இருந்த துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்டுள்ள சோதனை நடவடிக்கைகள், அதில் 11 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரிடமிருந்து சில கோடிகள் பணம் பறிமுதல் போன்ற தேர்தல் ஆணையகத்தின் நடவடிக்கைகள், நெருக்கடியைக் கொடுக்கும் என்று அ.தி.மு.க நம்புகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைவோம் என்ற சோகத்தில், அ.தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வேகமாகவே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க கூட்டணியைப் பொறுத்தமட்டில், மத்திய, மாநில அரசாங்கங்கள் மீது இருக்கும் அதிருப்தியை ஒரு மூலதனமாக வைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி அதற்குச் சற்று வலுச் சேர்த்துள்ளது. வைகோ, கொம்யூனிஸ்ட் கட்சிகள், திருமாவளவன் போன்றோர் இருப்பதால் ‘மோடி எதிர்ப்பு அலை’யின் புண்ணியத்தில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 35இல் வெற்றி பெற்றுவிட முடியும் என்று, திடமாக நம்புகிறது. அதனால்தான் சட்டமன்றத் தொகுதியாக பிரசாரம் செல்லாமல், பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இந்த ‘மோடி எதிர்ப்பு அலை’யைத் திசை திருப்ப, “தி.மு.க இந்துகளுக்கு விரோதி” என்ற பிரசாரத்தை பா.ஜ.க தரப்பில் முன்னெடுத்துச் செல்கிறது. கடந்த காலங்களில், இந்தப் பிரசாரம் வெற்றி பெற்றதில்லை. ஆனால் இப்போது கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லா களத்தில் இதை வைத்து, மோடி எதிர்ப்பு அலையை திசை திருப்பினால், பா.ஜ.கவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மேலும் சில வெற்றிகள் கிடைக்கும் என்று திட்டமிடப்படுகிறது. இதை உணர்ந்துதான், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், “தி.மு.க இந்துக்களுக்கு எதிரியல்ல; அது பொய்ப்பிரசாரம். என் மனைவியே கோவிலுக்குப் போகிறார். அதை நான் தடுத்ததில்லை” என்று பதிலடி கொடுத்தார் திராவிட இயக்கத் தலைவர் கி. வீரமணி. கிருஷ்ணரை அவமதிக்கும் வகையில் பேசி விட்டார் என்று, பூதாகரமாகப் போராட்டங்கள், சமூக வளைதளங்கள் மூலமாகப் பரப்பிட பா.ஜ.கவும் அதன் துணை அமைப்புகளும் வீரியத்துடன் களத்தில் நிற்கிறார்கள். ஆண்டாள் சர்ச்சை போல், இந்தக் கிருஷ்ணர் சர்ச்சையை, ஊதிப் பெரிதாக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதற்குப் பின்னனி இல்லாமல் இல்லை. வீரமணி எப்போதுமே அப்படிப் பேசுபவர்தான். ஏனென்றால், அவர் கட்சித் தேர்தல் பாதையில் பயணிக்கவில்லை. “கடவுள் இல்லை” என்ற பெரியாரின் வழியில், அக்கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. வீரமணி எப்போதுமே தி.மு.கவின் தேர்தல் மேடைகளில் அடிக்கடி காட்சியளிக்க மாட்டார். தி.மு.க தலைவராக, கருணாநிதி இருக்கும் வரை அது நீடித்தது. ஆனால், இப்போது ஸ்டாலின் தலைவரான பிறகு, வீரமணி தி.மு.கவின் தேர்தல் மேடைகளில் காட்சியளிக்கிறார். குறிப்பாக ராகுல் காந்தி - ஸ்டாலின் கலந்து கொண்ட நாகர்கோவில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட பங்கேற்றார். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, வீரமணி பேசினால் தி.மு.க பேசியதுதான் என்பது போன்ற பிரசாரத்தை பா.ஜ.க.வில் உள்ளவர்கள் மேற்கொள்கிறார்கள். ஆனால் அது, தமிழகத்தில் எடுபடுமா என்பது, இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இது தவிர, தி.மு.க நிர்வாகிகள், வேட்பாளர்கள் மத்தியில் “நாம்தான் வெற்றி பெறப் போகிறோம்” என்ற அதீத நம்பிக்கை தென்படுகிறது. அதுவே, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குத் தடைக்கல்லாக முடிந்து விடக்கூடாது என்பதே, தி.மு.கவுடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகளின் எண்ணமாக இருக்கிறது. எது எப்படியிருந்தாலும், மோடி எதிர்ப்பு அலை, தி.மு.க வெற்றிக்கு வித்திடும் ஒரு காரணியாக இருக்கப் போகிறது. இடைத் தேர்தல்கள் நடக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் 13 தொகுதிகளில் தி.மு.கவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றே அக்கட்சி நம்புகிறது. மீதியுள்ள ஐந்து தொகுதிகளிலும் வெற்றியைப் பெற்று, இப்போதுள்ள அ.தி.மு.க அரசாங்கத்தை வீழ்த்திவிட வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறது. ஆகவே தி.மு.க கூட்டணி நாடாளுமன்றத்தில் 35 சட்டமன்ற இடைத் தேர்தலில் 13 என்ற இலக்கை நோக்கி இப்போதைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஜூன் மூன்றாம் திகதி தேர்தல் முடிவுகள் வெளிவரும். அன்றைய தினத்தில் தமிழக தேர்தல் முடிவு எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலியா அல்லது ஸ்டாலினுக்கு தலைவலியா என்பது தெரிந்து விடும். டெல்லியில் ஆட்சி மாற்றம் என்றால், எடப்பாடி பழனிசாமிக்கு திருகுவலியாக அமையும். தமிழகத்தில் வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் நரேந்திரமோடி ஆட்சி என்றால் ஸ்டாலினுக்கு எதிர்கால அரசியல் பெரும் தலைவலியாக மாறும். ஒருவேளை அ.தி.மு.கவுக்குப் பத்து நாடாளுமன்றத் தொகுதிகள் கிடைத்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இல்லாமல் வேறோர் ஆட்சி என்றாலும், இந்தப் பத்து எம்.பி.க்களின் தயவில் மீதியுள்ள இரு வருடங்களை, எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அ.தி.மு.க அரசாங்கம் கடத்தி விடும். ஏனென்றால், தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால், 10 எம்.பி வைத்துள்ளவர்களுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு டெல்லியில் கிடைக்கும் என்பதே இந்திய அரசியலின் கடந்த கால வரலாறு. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் எதிர்கால அரசியல், இப்போதைக்கு வாக்களிக்கப் போகும் ஆறு கோடி தமிழக வாக்காளர்கள் கையில் இருக்கிறது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆறு-கோடி-வாக்காளர்கள்-நிர்ணயிக்கும்-அரசியல்-எதிர்காலம்/91-231821
Checked
Wed, 08/21/2019 - 03:03
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed