புதிய பதிவுகள்

ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி

4 months ago
பையா, அந்த பெண்ணை இந்த ஆள்தான் இப்படிச் செய்தார் என எப்படி நீங்கள் முழுமூச்சாக நம்புகிறீர்கள்? இதை உங்களுக்கு சொன்னவர் யார்? அந்த பிள்ளையினை ஊரில் வளர்க்கும் குடும்பத்தினர்? இந்த வேலையை அவர்களில் ஒருவரே ஏன் செய்துவிட்டு இந்த பழியை இவர் மேல் போட்டிருக்க முடியாது? முன்பு ஒரு கேஸ் இப்படி நடந்தது. ஒரு வேலைக்கார சிறுமி கற்பம் ஆகிவிட்டார். கேட்டால் முதலாளியை கையை காட்டினார். சுற்றமே சேர்ந்து முதளாலியை திட்டி, அடித்து தீர்த்தது. அவமானம் தாங்காமல் அவரும் தற்கொலை வரை போய் மீண்டார். வெளிநாட்டில் இருந்து மகள் வந்து, தன் தந்தை மீது விழுந்த பழியை நம்பாமல் - தீர விசாரித்ததில் இதற்கெல்லாம் காரணம் அயலில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் என்பதும், அவர் சிறுமியை குடும்பத்தையே கொல்வதாக மிரட்டி வன்கொடுமை செய்தது மட்டுமின்றி, முதலாளி மீது பழியை போடவும் வைத்தது தெரிய வந்தது. இப்படி பல விடயங்களை அலசி ஆராயாமல், ஏவல் பேய் கூரையை பிடுங்குவது போல ஒருவரை நீங்கள் தாக்கியது சரியாக படவில்லை. இப்படி ரெண்டு அறை ஒரு குத்து விட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. வெளிநாட்டில் நடந்தாலும் சிறுவர் துஸ்பிரயோகம் பாரிய குற்றமே. லண்டன் போலிசில் ஆளை மாட்டிவிட்டால், தண்டனை கிடைப்பதோடு, அவரின் சொத்தில் இருந்து அந்த புள்ளைக்கு நஸ்ட ஈடும் பெறலாம். பிரபா இருந்தால் இப்படி நடக்குமா, அப்படி நடக்குமா என கேட்கும் உங்களிடமே திருப்பி கேட்கிறேன், அவர் இருந்தால் இப்படி தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகும் நிலையும் வந்திருக்காதுதானே? ஒரு அண்ணனாக சொல்கிறேன், உடம்பில் வலு உள்ளது என்பதற்க்கா ஓவராக ஆடாதீர்கள். தீரவிசாரிகாமல் தண்டனை வழங்கிய பலரை வாழ்கை என்ன பாடுபடுத்தியது என்பதை கண்ணால் கண்டவன் நான்:

சவூதி அரேபியாவிற்கு இராணுவ படைகளை அனுப்ப ட்ரம்ப் தீர்மானம்

4 months ago
சவூதி அரேபியாவிற்கு இராணுவ படைகளை அனுப்ப ட்ரம்ப் தீர்மானம் சவூதி அரேபியாவின் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலை அடுத்து சவூதி அரேபியாவின் விமான, ஏவுகணை தாக்குதல் கட்டமைப்பின் பாதுகாப்புக்கு தமது நாட்டின் இராணுவ படைகளை அனுப்ப ட்ரம்ப் அனுமதி வழங்கியுள்ளார். சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, ஈரான் ஆயுதங்களை வழங்கி உதவியதாக சவூதி அரேபிய பாதுகாப் புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. சவூதி அரேபியாவில் அரம்கோ நிறு வனத்துக்குச் சொந்தமான மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது கடந்த 14 ஆம் திகதி ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத் தினர். ரியாத் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டின் பாதுக்காப்புத்துறை செய்தித் தொடர்பாளர், துர்க்கி அல்-மால்கி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் அதிக துல்லியம் வாய்ந்த ஏவுகணைகளின் சிதைந்த பாகங்களை வெளியிட்டார். இந்நிலையிலேயே அமெரிக்க தானது இராணுவ படைகளை சவூதி அரேபியாவிற்கு அனுப்புவதற்கு தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/65239

காலநிலை மாற்­றத்­துக்­காக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கில் அணிதிரண்ட பாடசாலை மாண­வர்கள்

4 months ago
காலநிலை மாற்­றத்­துக்­காக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கில் அணிதிரண்ட பாடசாலை மாண­வர்கள் பல்­வேறு நாடு­களைச் சேர்ந்த பல ஆயி­ரக்­க­ணக்­கான பாடசாலை மாண­வர்கள் கால­நிலை மாற்­றத்தைத் தடுக்க அர­சுகள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று வலி­யு­றுத்தி முன்­னெ­டுத்த போராட்டம் நேற்று உல­கெங்கும் தொடங்­கி­யது. அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, தென்­கொ­ரியா, இந்­தியா உள்­ளிட்ட நாடு­களில் பல மாண­வர்கள் இந்தப் புறக்­க­ணிப்பு போராட்­டத்தில் கலந்து கொள்­கின்­றனர். நியூ­யோர்க்கில் நடை­பெறும் புவி வெப்­ப­ம­ய­மா­த­லுக்கு எதிர் நட­வ­டிக்­கைகள் தொடர்­பான பேர­ணியில் கலந்­து­கொள்ள கிட்­டத்­தட்ட 10 இலட்சம் பாடசாலை மாண­வர்கள் தங்கள் வகுப்­பு­களை புறக்­க­ணிக்க உள்­ள­தாக செய்­திகள் தெரி­விக்­கின்­றன. உல­கெங்­கிலும் நடை­பெறும் இந்தப் பாடசாலை புறக்­க­ணிப்பு போராட்­டத்தில் பல மில்­லியன் மாண­வர்கள் கலந்து கொள்வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. சுவீடனைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவி கிரேட்டா தன்பர்க், உலக வெப்­ப­ம­ய­மா­த­லுக்கு எதி­ராக அர­சுகள் நட­வ­டிக்­கை எடுக்கக் கோரி தங்கள் நாட்டின் பாரா­ளு­மன்றம் முன் வாரம்தோறும் இதற்­காக போராட்டம் நடத்தி வந்தார். சமூக வலைத்­த­ளங்கள் மூலம் கடந்த சில மாதங்­க­ளா­கவே இந்தப் போராட்டம் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டது. மேலும், இந்த ஆண்­டுக்­கான நோபல் அமைதிப் பரி­சுக்கு கிரேட்டா தன்பர்க் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்ளார். முன்­ன­தாக, 2017இல் கையெ­ழுத்­தி­டப்­பட்ட பரிஸ் கால­நிலை ஒப்­பந்­தத்தில், தொழில் வளர்ச்சி தொடங்­கிய கால­கட்­டத்தில் நில­விய வெப்­ப­நி­லை­யை­விட இரண்டு பாகை செல்­ஸியஸ் (2.0C) வெப்­பத்­துக்கு மிகாமல், புவி வெப்­ப­ம­ய­மா­தலைக் கட்டுப்படுத்த 200இற்கும் மேலான உலக நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த இலக்கை அடைய கடுமையான முயற்சிகள் தேவை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். https://www.virakesari.lk/article/65248

நுண் நிதி நிறுவனங்கள் தொடர்பாண விழிப்புணர்வு வீதி நாடகம்…

4 months ago
நுண் நிதி நிறுவனங்கள் தொடர்பாண விழிப்புணர்வு வீதி நாடகம்… September 21, 2019 மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி கிராமத்தை சேர்ந்த அதிகளவான குடும்பங்கள் பெண்தலைமைத்துவ குடும்பங்களாக காணப்படுகின்ற நிலையில், குறித்த கிராமத்தை சேர்ந்த அதிகளவான பெண்கள் நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். இந்தப் பெண்கள் மத்தியில் நுண் நிதி கடன் தொடர்பாகவும் நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி தொடர்பாக தேசிய ரீதியில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் தொடர்பாகவும் தெளிவு படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட வீதி நாடகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) ஏற்பாட்டில் அதன் குழு தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் தேவன் பிட்டி மீனவ சங்க கட்டிடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெறும் போது நிதி நிறுவனம் அரச அனுமதி பெற்ற நிறுவனமா? என்பது தொடர்பாக எவ்வாறு அறிவது என்பது தொடர்பாகவும் பெரும் கடன்களை சரியான விதத்தில் பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. குறித்த பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை சட்ட ரீதியாக மேற்கொள்ளவதற்கான சட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன் பெண் தலைமைத்துவ குடும்பத்தலைவிகளின் கருத்துக்களும் பெறப்பட்டது. அதன் போது கருத்து தெரிவித்த பெண்கள் அரசாங்கம் இதற்கான மாற்று நிதி கருத்திட்டத்தை கொண்டு வந்தால் மாத்திரமே தாங்கள் கடன் தொல்லைகளில் இருந்து விடு படமுடியும் எனவும் அத்துடன் அரசாங்கமே இனி வரும் நாட்காளில் இலகுவழி மூலம் கடன் வழங்க முன் வர வேண்டும் என தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/2019/130871/

யாழ் இந்து அதிபர் கைது

4 months ago
யாழ்.இந்துக்கல்லூரி அதிபர் விளக்கமறியலில் September 20, 2019 மயூரப்பிரியன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலனை ஊழல் குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வரும் ஒக்டோபர் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் உத்தரவு பெறப்பட்டது. அத்துடன் அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நீதிமன்றம் அனுமதியளித்தது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்று ஊழலில் ஈடுபட்டார் என்று அந்தக் கல்லூரியின் அதிபர் சதா நிர்மலன் இன்று நண்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றி சாட்டுதல்களை புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழு அதிகாரிகள், இன்று மாலை பருத்தித்துறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முற்படுத்துவதால் அதிபருக்கு சாதகமான நிலை ஏற்படும். என்ற காரணத்தால் சிறப்பு அனுமதியின் கீழ் பருத்தித்துறை காவல்துறையினர் ஊடாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சதா நிர்மலன் முற்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #யாழ் #இந்துக்கல்லூரி #அதிபர் #விளக்கமறியல் http://globaltamilnews.net/2019/130861/

ஆணுக்குப் பெண் தாலி கட்டுதல்

4 months ago
இதை ஒருவகை de-humanizing என்றே நான் பார்கிரேன். ஒரு பகுதியினர்கு மனித உரிமைகளை மறுப்பதன் ஆரம்பம் அவர்களை மனிதர் இல்லை என சித்தரிப்பது. ஒன்றில் அவர்களை மனிதரிலும் கீழான விலங்குகளாக சித்தரிக்கலாம் (ஆபிரிக்க கறுபின அடிமைகளை மனிதருக்கும் குரங்கிற்கும் இடையேயான இனமாக சித்தரித்தது, இந்தியாவின் தெற்கே வாழும் இனக்கூட்டத்தை குரங்காக (அனுமான்) சித்தரித்தது). அல்லது அவர்களை பூஜிக்க வேண்டிய பொருளாக ஆக்கிவிடலாம். பூஜிக்க வேண்டியவள் பெண். அவள் எப்படி இருப்பாள்? எம் பெண் தெய்வங்களை போல, எத்தனை காமாந்திரனாக இருப்பினும், புருசனை தலையில் வைத்து தாசி வீட்டுக்கு காவிச் செல்வவாள். பூமாதா போல் எதையும் தாங்கும் பொறுமை உள்ளவள். சக்தி போல ஆயிரம் கரங்களால் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வாள். அப்போ இப்படி தெய்வாம்சத்தோடு இல்லாமல், ரத்தமும், சதையும், மனித உணர்சிகளும், நன்மையும், தீமையும், பிணியும், மூப்பும் கலந்த பெண்? அவள் பெண்ணுக்கான இலக்கணத்தையே இழந்துவிட்டவள். அவள் பெண்ணே இல்லை. மனிதப்பிறவியே இல்லை. அவளை தெருவில் வைத்து நாயை கொல்லுவது போல கொல்லலாம். கொலை செய்துவிட்டு அவளின் பெயரை களங்கப்படுத்தி கொலையை நியாயமும் படுத்தலாம். ஏனெனில் அவள் மனித/பெண் க்கான இலக்கணத்தில் இருந்து தவறியவள். #இதுதான் சூட்சுமம்.

அமைதியில்லாதென் மனமே என் மனமே..

4 months ago
கருவுற்ற சமயத்தில் தூங்கும்போது தாய்க்கு அதிக பாரம் இருக்கக் கூடாது கண்டியளோ? அதனால்தான் கருவின் ஆரோக்கியத்திற்கு இடதுபுறம் ஒருக்களித்து படுக்க சொல்வார்களென கேள்வி. இதுக்கு மேல் கேட்கப்படாது. 😜

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

4 months ago
படம்: தங்கப்பதுமை (1959) வரிகள்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இசை:விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடியோர்: ஜிக்கி& TMS இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே மங்கையர் குலமணியே மஞ்சள் முகந்தனிலே மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே! மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே! இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே நேற்று நம்மைக் கண்ட நிலா நெஞ்சுருகிச் சென்ற நிலா வாழ்த்துகள் சொல்லுமே மனந்தனைக் கிள்ளுமே! வாழ்த்துகள் சொல்லுமே மனந்தனைக் கிள்ளுமே! வள்ளுவன் வழியினிலே இனி வாழ்க்கை ரதம் செல்லுமே - திரு வள்ளுவன் வழியினிலே வாழ்க்கை ரதம் செல்லுமே இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே கண்களில் ஊறும் நீரும் - இனி நம் நிலைகாண நாணும் சுகம் கவிதை பாடிவரும் சுகம் கவிதை பாடிவரும் கவலைகள் மறையவே கொண்ட கடனும் தீரவே அன்னை அருளும் கூர்ந்தே காலமெனும் பந்தலில் - அன்புக் கைகள் ஒன்று சேர்ந்ததே காலமெனும் பந்தலில் - அன்புக் கைகள் ஒன்று சேர்ந்ததே இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே

பழைய திரைப்பட,நிழற் படங்கள்

4 months ago
ஏன் தோழர் வீட்டில இருக்கிற பரண் எல்லாம் அடிச்சு துவைச்சு துப்புரவாக்குகிறீர்கள் போல கிடக்கு......மறந்திருந்த படங்கள் எல்லாம் கிளர்ந்தெழுந்து வருகுது.....! 😂

காப்பான் - திரை விமர்சனம்

4 months ago
காப்பான்: சினிமா விமர்சனம். திரைப்படம் : காப்பான் நடிகர்கள் : சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, போமான் இரானி, பூர்ணா, சமுத்திரக்கனி இசை: ஹாரிஸ் ஜெயராஜ் இயக்கம் : கே.வி. ஆனந்த் அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யாவும் இயக்குனர் கே.வி. ஆனந்தும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் இது. கிராமத்தில் வசிக்கும் கதிர் (சூர்யா) ஒர் ஆர்கானிக் விவசாயி. (பயப்பட வேண்டாம். கொஞ்ச நேரம்தான் அந்த பாத்திரம்). ஆனால், உண்மையில் அவர் ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர். அவர் பிறகு இந்தியப் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையில் இணைகிறார். பிரதமருக்கு வரும் ஆபத்துகள், அதிலிருந்து அவரைக் காப்பாற்ற கதிர் செய்யும் சாகசங்கள்தான் மீதிப் படம். இதயக்கனி படத்தில் தேயிலைத் தோட்ட முதலாளியாக வந்து பாட்டெல்லாம் பாடுவார் எம்..ஜி.ஆர். பிறகு பார்த்தால் அவர் ஒரு ரகசிய போலீஸாக இருப்பார். அது யாருக்குமே தெரியாது. இந்தப் படமும் அந்த பாணியில்தான் துவங்குகிறது. ஆனால், சீக்கிரமே சுதாரித்துக்கொள்கிறார்கள். படத்தின் துவக்கத்தில், நாகப்பட்டினத்தில் உள்ள ராணுவ முகாமிற்குள் புகும் கதாநாயகன் அங்கிருக்கும் வீரர்களை அடித்துப்போட்டு, ஆயுதங்களையெல்லாம் வெடிக்கச் செய்கிறார். இந்தியாவில் முன்பிருந்த அரசு பக்கத்து நாட்டில் நடந்த உள்நாட்டுப் போரில், அந்நாட்டு அரசுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த பயோ - கெமிக்கல் ஆயுதங்களாம் அவை. ராணுவமே அவற்றை சத்தமில்லாமல் அகற்றினால் தெரிந்துவிடும் என்று இயற்கை விவசாயம் - ராணுவ உளவு என இயங்கிக்கொண்டிருக்கும் ஹீரோவை வைத்து, மிகப் பெரிய அளவில் வெடிக்கச்செய்து, யாருக்கும் தெரியாமல் அழிக்கிறார் பிரதமர். இதுபோல பல சாகசங்கள் படம் நெடுக. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் புகுந்து பல அட்டகாசங்களைச் செய்யும்போது அவர்களை அடித்து நொறுக்குகிறவராக விஜயகாந்த் நடித்திருப்பார். பிறகு அர்ஜுன் கொஞ்ச நாள் பயங்கரவாதிகளோடு மோதிக்கொண்டிருந்தார். இப்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யா களத்தில் இறங்கியிருக்கிறார். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மட்டுமல்லாது, இந்தியாவைச் சேர்ந்த மிகப் பெரிய தொழிலதிபரும் பிறகு வில்லனாக மாறுகிறார். இருவரும் ஒருவருக்கொருவர் உதவுவதைப் போல செயல்படுகிறார்கள். ஆனால், ஆச்சரியப்படவைக்கும் எந்தத் திருப்பமும் இல்லாமல் ஏகப்பட்ட துப்பாக்கிச் சண்டைக் காட்சிகளோடு படம் நகர்ந்துகொண்டேயிருக்கிறது. இதற்கு நடுவில் இயற்கை விவசாயம், தஞ்சை டெல்டாவில் மீத்தேன் போராட்டம், பூச்சிகளை வைத்து உயிரியல் யுத்தம் என பல விஷயங்களைச் சொல்லிச் செல்கிறார் இயக்குனர். முந்தைய படங்களில் சற்று சோர்வாகத் தெரிந்த சூர்யா இந்தப் படத்தில் மீண்டும் விறுவிறுப்பாகியிருக்கிறார். மேலே சொன்ன கதையில் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடியுமோ அவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறார். கதாநாயகியாக வரும் சாயிஷாவுக்கு குறிப்பிடத்தக்க பாத்திரமில்லை. மோகன்லாலும் ஆர்யாவும் இந்தியப் பிரதமர்களாக வருகிறார்கள். இதில் மோகன்லாலுக்கு சற்று நடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆர்யா, படம் நெடுக என்னசெய்வதெனத் தெரியாமல் திகைத்துப்போயிருப்பதைப் போல இருக்கிறார். படத்தில் வரும் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. குறிப்பாக காஷ்மீரில் குழந்தைகள் பாடும் பாடல் மிக இனிமையான ஒன்று. ஆனால், அந்தப் பாடல்களைத் தவிர பிற பாடல்கள், அநாவசியமாகத் தென்படுகின்றன. அயன், கவண் படங்களில் இருந்த நேர்த்தியும் லாஜிக்கும் இதில் சற்று குறைவு. ஆனால், சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். https://www.bbc.com/tamil/arts-and-culture-49766384

இராணுவ தளபதி – ஆளுநர் சந்திப்பு

4 months ago
இராணுவ தளபதி – ஆளுநர் சந்திப்பு September 20, 2019 -மயூரப்பிரியன் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது போருக்கு பின்னரான வடமாகாணத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைககள் குறித்து இராணுவ தளபதி, ஆளுநருக்கு இதன்போது விளக்கமளித்ததுடன் தனது தலைமைத்துவத்தின் கீழ் அதனை தொடந்தும் முன்னெடுத்து செல்வேன் என்றும் குறிப்பிட்டார். 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் இராணுவத்தின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதை குறிப்பிட்ட ஆளுநர் வடமாகாணத்தில் அதனை கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது என்றும் தெரிவித்தார். இதேவேளை வடமாகாணத்தில் நிலவும் காணிப்பிரச்சனைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆளுநர் இராணுவத்தின் பாவனையிலுள்ள தனியார் காணிகளில் விடுவிக்க கூடிய காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினால் விடுவிக்க முடியாத காணிகளை இனங்கண்டு அவற்றையும் அறிவிக்கவேண்டும் என்றும் ஆளுநர் இராணுவத்தளபதியிடம் கேட்டுக்கொண்டார் இதன்போது கருத்துதெரிவித்த இராணுவத்தளபதி, இராணுவத்தின் பாதுகாப்பு தேவைகளுக்காக வைத்திருக்க முடியுமான காணிகள் தவிர ஏனைய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை இன்னும் விடுவிக்க முடியுமான காணிகள் இருப்பின் அவற்றையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் குறிப்பிட்டார். #இராணுவதளபதி #ஆளுநர் ,சந்திப்பு #சவேந்திர சில்வா http://globaltamilnews.net/2019/130855/

பாலியல் பலாத்கார வழக்கில் பாஜகவின் முக்கியஸ்த்தர் சின்மயானந்தா கைது…

4 months ago
பாலியல் பலாத்கார வழக்கில் பாஜகவின் முக்கியஸ்த்தர் சின்மயானந்தா கைது… September 20, 2019 பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தாவை, சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றின் வழிகாட்டுதலின்படி விசாரணை நடந்து வருகிறது. முறைப்பாடு அளித்த மாணவியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 மணி நேரம் சிறப்பு விசாரணைக்குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தியது. அதன்பின்னர் சின்மயானந்தாவின் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 2 முதல்வர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைனையடுத்து சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், சிறப்பு விசாரணைக் குழுவினர் இன்று ஷாஜகான்பூரில் உள்ள சின்மயானந்தாவின் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனைக்குப் பின் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, உச்ச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சின்மயானந்தா கைது செய்யப்பட்டதையொட்டி அவரது வீடு மற்றும், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் பலத்த காவற்துறைப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிற நோயாளிகள் கடுமையான பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டனர். http://globaltamilnews.net/2019/130846/
Checked
Mon, 01/27/2020 - 00:01
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed