புதிய பதிவுகள்

காஷ்மீர் பிரச்சினை : மத்தியஸ்தம் செய்ய தயார் – ட்ரம்ப் அறிவிப்பு!

4 months ago
காஷ்மீர் பிரச்சினை : மத்தியஸ்தம் செய்ய தயார் – ட்ரம்ப் அறிவிப்பு! காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா சென்றுள்ளார். இதன்போது காஷ்மீர் பிரச்சினை பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு இதில் தலையிட வேண்டிய பொறுப்பு இருப்பதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலளித்த ட்ரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா ஒப்புதல் அளித்தால் தாம் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன், இந்திய பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனும் தமக்கு நல்ல நட்புறவு இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு பாகிஸ்தான் கடுமையான எதிர்பினை வெளியிட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளின் தலையீட்டின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வினை பெறுவதற்கு பாகிஸ்தான் முயற்சித்து வருகின்றது. இருப்பினும் காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடுகளின் தலையீட்டை இந்தியா புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/காஷ்மீர்-பிரச்சினை-மத்த/ ############ ################ ################### இதோடை.... டிரம்புக்கு, நோபல் பரிசு கிடைத்தாலும் கிடைக்கும் போலிருக்கு.

பன்றி வேட்டையின் போது தந்தையை சுட்டுக் கொன்ற இளைஞர் கைது!

4 months ago
பன்றி வேட்டையின் போது தந்தையை சுட்டுக் கொன்ற இளைஞர் கைது! இத்தாலியில் வனப் பகுதியொன்றில் பன்றி வேட்டைக்குச் சென்ற இளைஞர் ஒருவர் வைத்த குறி தவறி அவரது தந்தையின் உயிரை காவு கொண்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து குறித்த சந்தேகநபர் இத்தாலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற அன்று இரண்டு பேரும் தென் மாகாணமான சலேர்நோவில் உள்ள போஸ்டிக்லியோனில் காணப்படும் அடர்ந்த புதர் பகுதியில் பன்றி வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது புதர் பகுதியில் ஏதோவொன்று அசைவதை அவதானித்த இளைஞன் தனது துப்பாக்கியை இயக்கியுள்ளான். அது பன்றி என நினைத்து அந்த இளைஞன் இலக்கு வைத்த நிலையில், மறுமுனையில் வேட்டையில் ஈடுபட்டிருந்த தந்தையின் மீது துப்பாக்கி குண்டு தாக்கியுள்ளது. சம்பவம் இடம்பெற்றதை தொடர்ந்து நிலைமையை உணர்ந்த இளைஞர் உடனடியாக கூச்சலிட்டு உதவிகோரியுள்ளார். எனினும், துப்பாக்கிச் சூடு நடத்திய 34 வயதான குறித்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 55 வயதான மார்டினோ கவுடியோ என்பவரை காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர். எவ்வாறாயினும், தந்தையும் மகனும் தடை செய்யப்பட்ட தேசிய பூங்கா பகுதிலேயே வேட்டைக்கு சென்றிருந்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பொலிஸார் அவர்களின் துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். http://athavannews.com/பன்றி-வேட்டையின்-போது-தந/

ஆப்கானிஸ்தானில் கூட்டுப் படையினரின் தாக்குதலில் திருமண இல்லத்திலிருந்த 40 பேர் உயிரிழப்பு!

4 months ago
ஆப்கானிஸ்தானில் கூட்டுப் படையினரின் தாக்குதலில் திருமண இல்லத்திலிருந்த 40 பேர் உயிரிழப்பு! ஆப்கானிஸ்தானின் ஹெல்மன்ட் மாகாணத்தில் அரச படைகள் உள்ளிட்ட கூட்டுப்படையினர் பயங்கரவாதிகளை குறிவைத்து மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் திருமண இல்லத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 40 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். குறித்த தாக்குதலில் மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் நேற்று (திங்கட்கிழமை) செய்தி வௌியிட்டிருந்தன ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் அண்மையில் மேலோங்கியுள்ள நிலையில், தற்கொலைத் தாக்குதல்களும், குண்டுத் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன. அதேவேளை, தலிபான்கள் சில பகுதிகளை கைப்பற்றி அங்கு வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தி போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பயங்கரவாதிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு ராணுவம் மற்றும் பொலிஸாரை உள்ளடக்கிய பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்படைகளுக்கு ஜனாதிபதி அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார். இந்த படைகளுக்கு ஆதரவாக அரசாங்கத்துக்கு நம்பகரமான தன்னார்வலர்களைக் கொண்ட படையும் இணைந்துள்ளது. இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தெற்கு ஹெல்மன்ட் மாகாணத்தில் பயங்கரவாதிகளை குறிவைத்து நடந்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தெற்கு ஹெல்மன்ட் மாகாணத்துக்குட்பட்ட முசா காலா மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சிறப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த மாவட்டத்துக்கு ராணுவ வீரர்கள் சென்றதுடன், அவர்களுக்கு பாதுகாப்பாக அமெரிக்க போர் விமானங்களும் சென்று தாக்குதல் நடத்தியுள்ளன. http://athavannews.com/ஆப்கானிஸ்தானில்-கூட்டுப/

கடந்த ஐந்தாண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டாக ‘2019’ பதிவு!

4 months ago
கடந்த ஐந்தாண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டாக ‘2019’ பதிவு! கடந்த ஐந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிகவும் வெப்பமான காலநிலை நிலவிய ஆண்டாகப் பதிவாகியுள்ளது. பருவநிலை மாற்றங்களை கையாள்வதில் உலக மக்கள் பின்தங்கியிருப்பதைக் காட்டும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடந்த 21 ஆம் திகதி தொடக்கம் இன்று (திங்கட்கிழமை) வரை பல உலகத் தலைவர்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், மாநாட்டின் அறிவியல் ஆலோசனைக் குழு உலக வெப்பமயமாதல் தொடர்பான விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் அவற்றின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் இலக்குகளை அதிகரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் (Antonio Guterres) கோரிக்கை விடுத்துள்ளார். 1850 ஆம் ஆண்டு தொடக்கம் உலக வெப்பநிலை மற்றும் பருவ மாற்றங்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கடந்த நான்காண்டுக்கான சராசரி உலக வெப்பநிலையே மிக அதிகமாய் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திட்டமிட்டதற்கு மாறாகக் கரியமில வாயு வெளியேற்றம் கடந்த ஆண்டு இரண்டு சதவீதம் அதிகரித்து இதுவரை இல்லாத அளவுக்கு 37 பில்லியன் தொன்னாகப் பதிவாகியுள்ளது. இந்த நிலைமை குறைவடைவதற்கான அறிகுறிகள் இன்னமும் தென்படவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://athavannews.com/கடந்த-ஐந்தாண்டுகளில்-அதி/

தமிழ் மக்களை ஏமாற்றாது சுமந்திரன் பதவி விலக வேண்டும்

4 months ago
சுமந்திரன் அவர்களே... தயவு செய்து, சிறிது நேரம் ஒதுக்கி... அந்த ராஜினாமா கடிதத்தின், மிகுதியை... எழுதி முடிக்கும் படி வேண்டுகின்றேன்.

பிக்குகளை அவமதித்தமையாலேயே நீராவியடியில் பதற்றம் ஏற்பட்டது! கோத்தபாய ராஜபக்ச

4 months ago
சிங்கள பௌத்த பயங்கரவாதிகளின் அராஜகங்களை எதிர்க்க களத்தில் நேரடியாக திரண்ட பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், ஊர்மக்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இதுபோன்ற சமூக, தமிழின அக்கறை உடையவர்களின் முயற்சிகள் தான் திட்டமிட்ட தமிழின அழிப்பை தடுக்கும் காரணிகளாக அமைந்துள்ளன. திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு முண்டு கொடுப்பதிலேயே காலத்தைக் கடத்தும் சுமந்திரன், சம்மந்தன், சித்தார்த்தன், அடைக்கலநாதன், டக்ளஸ், ஆனந்தசங்கரி, மாவை, சரவணபவன் போன்ற ஒட்டுண்ணி அரசியல்வாதிகள் இது போன்ற அராஜகங்கள் நடக்கும் போது ஓடி ஒழிந்துகொள்கின்றனர். இந்தக் கயவர்களின் இடத்தை தாங்கள் எப்படிக் கைப்பற்றலாம் என்பதிலேயே கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்றவர்கள் முற்றுமுழு சக்தியையும் பயன்படுத்துகிறார்கள் என்பது எழுக தமிழ் நிகழ்வைக் குழப்ப இந்தக் கும்பல் மேற்கொண்ட தமிழின விரோத அடாவடிகளின் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது.

சிறிலங்காவில் ‘ஆர்எஸ்எஸ்’சின் 17 கிளை அமைப்புகள்

4 months ago
ஆர்.எஸ்.எஸ். இன் கிளை அமைப்பு சிறிலங்காவில் இயங்கினால்... நிச்சயம் அது... தமிழர், முஸ்லீம்களுக்கு... எதிராகவே செயல்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

பிக்குகளின் அடாவடியால் வெட்கித் தலைகுனிகின்றோம் - பிரதமர் ரணில் கவலை

4 months ago
“இறந்த விகாராதிபதியின் உடலை வைத்து பௌத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியால் நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.” இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.'' முல்லைத்தீவு, செம்மலை - நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் தகனம் செய்யப்பட்டது. தமிழ் மக்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆலய வளாகத்துக்குள் விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்பட்டமையால் நேற்று அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் ஒரு தரப்பினர் பௌத்த பிக்குகள் சிலரை தமது அரசியலுக்கு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றார்கள். இந்த அரசியல் நாடகம்தான் முல்லைத்தீவு - நீராவியடியில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இறந்த விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்குப் பொருத்தமான இடத்தை நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால், அதனை மீறி - நீதிமன்றத்தை அவமதித்து தாம் நினைத்த மாதிரி பௌத்த பிக்குகள் சிலர் செயற்பட்டுள்ளார்கள். கொழும்பிலிருந்து சென்ற பிக்குகள் தலைமையிலான குழுவினர் சர்ச்சைக்குரிய இடத்தில் - இன, மத நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் இடத்தில் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்துள்ளார்கள். இந்த அடாவடியில் ஈடுபட்ட பிக்குகளை ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் ஒரு தரப்பினர் இயக்குகின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திட்டமிட்ட வகையில் இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இந்த அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” - என்றார். https://youtu.be/NY6aA6pLJRs https://youtu.be/6rTBSPGBkKk https://www.tamilwin.com/community/01/226783?ref=imp-news

சிறிலங்காவில் ‘ஆர்எஸ்எஸ்’சின் 17 கிளை அமைப்புகள்

4 months ago
இந்தியாவின் தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ராஷ்ரிய சுயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் கிளைகள் சிறிலங்காவிலும் செயற்படுவதாக, பாஜகவின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின், திருமண வரவேற்பு நிகழ்வு கடந்த 17ஆம் நாள் கொழும்பில் இடம்பெற்றது. இந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க வந்திருந்த சுப்ரமணியன் சுவாமி, ஊடகங்களுடன் பேசும் போதே, சிறிலங்காவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 17 கிளைகள் இயங்குவதாக தெரிவித்துள்ளார். எனினும், எந்தெந்த அமைப்புகள் ஆர்எஸ்எஸ் பின்னணியுடன், அதன் கிளைகளாக இயங்குகின்றன என்ற விபரத்தை சுப்ரமணியன் சுவாமி வெளியிடவில்லை. இந்த நிகழ்வில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய நிறைவேற்றுக் குழுவில் பணியாற்றியவரும், பாஜகவின் தேசிய செயலருமான ராம் மாதவ், இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகௌடா, இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். http://www.puthinappalakai.net/2019/09/22/news/40149

கூட்டமைப்பின் ஆதரவை பெறுவது எப்படி? – ரணில், சஜித், கரு ஆலோசனை

4 months ago
யானையின் எலும்புகளை வீசினால் கூட்டமைப்பு வீழ்ந்துவிடும் என கணக்குப் போட்டிருப்பார்கள். அவ்வளளோ பெரிய எலும்பு கூட்டமைப்புக்கு தேவையா என யோசிக்கிறார்கள்?

யாழ் சென் பற்றிக்ஸ் முன்னை நாள் பௌதீகவியல் ஆசிரியர் காலமானார்

4 months ago
PHYSICS TEACHER GNANAM MASTER PASSED AWAY ( Teacher at SPC from 10th May 1955 to 1st September 1981) Great Teacher of St. Patrick's (10.05.1955 - 1.9.1981)It is with deep sadness we announce to the members of the Patrician Family the death of Mr D.S. Gnanapragasam, famously known as Gnanam Master, in Canada on 22nd Oct. 2019. He was popular for Physics and Applied Mathematics in the North. He had very pleasant and pleasing manners. A sincere and conscientious worker. He joined St. Patrick's on 10th May 1955 and taught for 26 long years. We are really proud to have been blessed with such an excellent teacher. May his soul rest in peace. 2016 ன் பதிவு ஒன்று

சரியான நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுப்போம் - சுமந்திரன்

4 months ago
(தி.சோபிதன்) நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் பொறுப்பை மக்கள் எமக்கு தந்துள்ளனர். அந்த பொறுப்பினை நாம் நிதானமாக கையாளுவோம் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், சரியான நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுப்போம் என்றும் கூறினார். யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்தக் கல்லூரியின் வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் முக்கிய திருப்பு முனை வருகின்ற போது அதில் பாதிப்புக்கள் கூட வரலாம். அல்லது பல புதிய சந்தர்ப்பங்கள் கூட எழலாம். ஆகையினாலே மிக அவதானமாக முதிர்ச்சியோடு இந்த சூழ்நிலைகளை கையாள வேண்டும். அப்படியான மிக முதிர்ச்சியான அனுபவமிக்க தலைமை எங்களிடத்தில் உள்ளது. நாம் அதனை நிதானமாக பொறுப்புடன் முன்னெடுக்கின்றோம். நாம் இராஜ தந்திரமாக செயற்பட வேண்டும். எனவே மக்களும் பொறுமையாக எம்முடன் பயணிக்க வேண்டும். குறிப்பாக கல்வி சமூகம் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் இதன்போது கூறினார். https://www.virakesari.lk/article/65394

நீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம்

4 months ago
நீராவியடி விவகாரம் - ஜ.ம.மு அமைப்பின் செயலாளர் ஜனகன் கடும் கண்டனம் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் கேணியில் காலமான பௌத்த பிக்குவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில். நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் கேணியில் காலமான பௌத்த மதகுருவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் இந்த இடத்தில் தகனம் செய்ய தடை விதித்ததுடன், அதற்கான வேறு ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இருப்பினும் அந்த தீர்ப்பை அவமதித்து அதே இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவதத்தில் இரண்டு முக்கிய விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். முதலாவது சட்டத்தை மீறியுள்ளார்கள். நீதிமன்றத்தை அவமதித்துள்ளார்கள். நீதிமன்ற தீர்ப்பை செயற்படுத்த வேண்டிய காவல்துறையினர் நடைபெற்ற சம்பவத்துக்கு ஆதரவாக இருந்துள்ளனர். அல்லது கண்டும் காணாமலும் இருந்துள்ளனர். இவை எதிர்காலத்தில் இன்னும் மோசமான சம்பவங்கள் நடைபெறுவதற்கு தூண்டு கோலாக அமையப்போகிறது. இவ்வாறன சம்பவங்கள் தொடரும் படசத்தில் தமிழர்கள் பொறுமையாக இருப்பார்களா? மீண்டும் அவர்கள் கடந்த கால சம்பவங்களை நோக்கி தள்ளப்படுவார்கள். இது ஆரோக்கியமானதல்ல. எனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு. நீதிமன்றமும், நீதித்துறையும் வழங்கும் தீர்ப்புகளை இனி மக்கள் எந்த வகையில் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்வது? இந்த சம்பவத்தின் மூலம் இரண்டாவது விடயமாக இந்து மக்களின் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பாரதூரமான விடயம். இவ்வாறான பெரும்பான்மையினத்தவரின் அடாவடியான செயற்பாடுகள் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விடயத்தை அரசாங்கம் சாதரண விடயமாக பார்க்குமானால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்புகளுள்ளன. சட்டத்தை காப்பாற்றவேண்டியவர்கள் இவ்வாறன சம்பவங்களுக்கு துணை போயுள்ளார்கள். இது மிகப்பெரியளவிலான கண்டனத்துக்கான விடயம். நடைபெற்ற சம்பவத்துக்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன். இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில், குறிப்பாக வன்னியில் வாழும் தமிழ் மக்கள் மீது பாரிய அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள தலைவர்கள் மீது அவ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இவ்வாறன சம்பவங்களை இனி வன்னி மண்ணிலும், தமிழர் பகுதிகளிலும் நடைபெற அனுமதிக்க முடியாது. உரிய தரப்பினரும், அரசாங்கமும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து எம் மக்களின் வாழ்க்கை வழமைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/65411

இராணுவ உறவுகள் இராஜதந்திரத்தின் ஒரு முக்கிய பகுதி – அமெரிக்க தூதுவர்

4 months ago
அது மட்டுமல்ல, வெளிப்படையான, இரகசிய அன்பளிப்புகளைப் பெற்று சில முக்கிய/சிக்கலான விடயங்களை மறைப்பதுவும் இராஜதந்திரத்தின் முக்கியமான ஒரு பகுதியாகும். இதில் வெளிப்படையான அன்பளிப்புகள் எனப்படுவது தமது நாட்டுக்கு தெரிய இடம், ஒப்பந்தம், வாய்ப்புகள், கடத்தல், கொலை போன்றவை அடங்கும். இதில் இரகசிய அன்பளிப்புகள் எனப்படுவது இராஜதந்திரிகள் தமது நாட்டுக்கு தெரியாமல் இரகசியமாக பெற்றுக்கொள்ளும் பணம் / பொருள் அன்பளிப்புகள், விலை உயர்ந்த மதுபான அன்பளிப்புகள், பெண்/ஆண் பாலியல் சேவைகள், ஆபரணங்கள் போன்றவை அடங்கும்.

ரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்

4 months ago
“ அதென்ன யாழ்களம் போகும் திசை?????” யாழ்களம் தனக்கென்று ஒரு தனித்துவத்தை கொண்டு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். கருத்துக்களம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில், பலதையும் அநாகரிமாக எழுதுவது முறையல்ல. Facebook, Instagram, WhatsApp, Twitter போன்றவற்றில் பலதையும் பலவாறு எழுதும் திசையில் “யாழ்” போக வேண்டுமா? இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.. மேலும் இந்த வீடியோவை இங்கே இணைத்திருக்க தேவையில்லை.இங்கே மற்றையவர்கள் கூறியது போல, இறந்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி பேசுவதற்கு எங்களுக்கு உரிமையில்லை. ஒருவர் இறந்தபின்பு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அநாகரிமாக கதைப்பது நல்ல பண்பு இல்லை. அதே போல கொலை செய்தவரை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது.
Checked
Wed, 01/29/2020 - 17:27
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed