புதிய பதிவுகள்

தமிழர்களின் போராட்டத்தினை ஜனாதிபதியே கொச்சைப்படுத்தினாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது – கே. மஸ்தான்

5 months 1 week ago
தமிழர்களின் போராட்டத்தினை ஜனாதிபதியே கொச்சைப்படுத்தினாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது – கே. மஸ்தான் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தினை ஜனாதிபதியே கொச்சைப்படுத்தினாலும் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு கொள்ளர் புளியங்குளத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘எனது நிதியொதுக்கீட்டில் நடைபெற்ற வேலைத்திட்டங்களுக்கு வேலை முடிந்ததன் பின்னரும் அதற்கான பணத்தை வழங்காமல் உள்ளதாக அறிகின்றேன். இவ்வாறு பணத்தை வழங்க முடியாத நிலையில்தான் இந்த அரசாங்கம் இருக்கின்றது. எந்த செயற்பாட்டையும் அரசியல் ரீதியாக பார்ப்பதே இதற்கு காரணமாக இருக்கின்றது. அதனால்தான் இன்று மக்களுக்கு இவ்வளவு கஸ்டம் ஏற்பட்டுள்ளது. நான் நிதி ஒதுக்கியிருந்தாலும் அதனை எடுக்கமுடியாதுள்ளது. அதற்கு அமைச்சரொருவர் தடையாக இருந்துள்ளார். இன்று அந்த அமைச்சரே பிரச்சனைக்குள்ளாகியுள்ளார். ஆகவே என்னால் ஒதுக்கப்பட்ட நிதிகள் கிடைக்காத பட்சத்தில் பிரதேச செயலாளாரிடம் கேளுங்கள். இலங்கையின் இறையாண்மையை பாதிக்;கும் வகையில் வேறு எந்த நாடும் எமது நாட்டுக்குள் வருவதை ஏற்றுக்கொள்வதில்லை. இந்த கொள்கையை ஜனாதிபதியிடமும் நாங்கள் கூறியிருக்கின்றோம். எங்கள் கொள்;கையும் எமது கட்சியின் கொள்கையும் இதுவாகவே உள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்பாடுகள் நாட்டின் மீதான அக்கறையின்;மையை வெளிக்காட்டுக்கின்றது. நாடு எக்கேடு கெட்டுப்போனாலும் உலக நாடுகளின் கொள்கைகளுக்கும் செயற்றிட்டங்களுக்கும் ஏற்ப செயற்படுபவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர். அதற்கு நாங்கள் இடம்கொடுக்க முடியாது. அவ்வாறான எந்த ஒப்பந்தத்திற்கும் செல்வதற்கு தான் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதியும் தெளிவாக அறிவித்துள்ளார். இதில் ஆச்சரியம் என்வென்றால் வல்லரசு நாடுகளின் எடுபிடிகளாக எமது வட மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருப்பதுதான். மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் வருகை தந்தமைக்கு வட மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தப்படுவதாக அறிகின்றேன். அது பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுமூகமான வாழ்வுக்கு குந்தகமாக அமைந்துவிடும். எனவே இவ்வாறான செயற்பாடுகளை கட்சிபேதமின்றி எதிர்க்கவேண்டும். அண்மையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப்பற்றி ஜனாதிபதி ஒரு விடயத்தை கூறியிருந்தார். உண்மையில் அவர் கூறிய விதம் பயங்கரவாத அமைப்புகளுக்கு போதைவஸ்து வியாபாரத்தின் ஊடாக பணம் கிடைத்தது என்பதாகவே இருந்தது. அந்த அடிப்படையிலேயே இவர்களுக்கும் பணம் கிடைத்ததாக கூறியிருந்தார். அது தவறான அறிக்கை. தவறான புரிந்துணர்வுடன் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி அவ்வாறு கூறியிருந்தாலும் அதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இப்பகுதி மக்களின் உரிமைக்கான போராட்டத்தினை கொச்சைப்படுத்துவது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும்’ என குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/தமிழர்களின்-போராட்டத்தி/

ஜனாதிபதி லண்டனிற்கு விஜயம்!

5 months 1 week ago
ஜனாதிபதி லண்டனிற்கு விஜயம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ளார். தனிப்பட்ட விஜயமாக அவர் இன்று(திங்கட்கிழமை) லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது மகன் தஹாம் சிறிசேனவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்க மூன்று நாட்கள் தங்கியிருப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, தனது லண்டன் விஜயம் காரணமாக நாளை கூடவிருந்த அமைச்சரவை கூட்டத்தினை நேற்று கூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஜனாதிபதி-லண்டனிற்கு-விஜய/

இன, மத அடிப்படையிலான கட்சிகளை பதிவுசெய்யாதிருக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!

5 months 1 week ago
இன, மத அடிப்படையிலான கட்சிகளை பதிவுசெய்யாதிருக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்! இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறான கட்சிகள் உருவாக்கப்படுவதால், அரசியல், சமூகம் மற்றும் மத ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், இதன்காரணமாகவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இவ்வாறான கட்சிகளை எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/இன-மத-அடிப்படையிலான-கட்ச/

18 வயதுக்குட்பட்ட சுமார் 115,000 பேர் போதைப்பொருட்களுக்கு அடிமை!

5 months 1 week ago
18 வயதுக்குட்பட்ட சுமார் 115,000 பேர் போதைப்பொருட்களுக்கு அடிமை! நாடளாவிய ரீதியில் 18 வயதுக்குட்பட்ட சுமார் 115,000 பேர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகார சபையின் ஆலோசகர், டொக்டர் சமந்த கிதலவாரச்சி இதனைத் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பொலிஸாரினால் இணைந்து முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹெரோயின், கஞ்சா, சிகரெட் மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கே இவர்கள் அடிமையாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர், ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன், சுமார் 3 இலட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துவதாகவும், 24,211 பேர் பல்வேறு வகையான போதை வில்லைகளைப் பயன்படுத்துவதாகவும் டொக்டர் சமந்த கிதலவாரச்சி குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/18-வயதுக்குட்பட்ட-சுமார்-115000/

வைகோ, அன்புமணி உட்பட 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தெரிவு!

5 months 1 week ago
வைகோ, அன்புமணி உட்பட 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தெரிவு! டெல்லி மாநிலங்களவைத் தேர்தலில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உட்பட அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுகின்றனர். மாநிலங்களவையில், தமிழக உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் வரும் 24ஆம் திகதி முடிவடைகிறது. இதையடுத்து புதிதாக 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு வருகிற 18ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறித்த 6 உறுப்பினர்களையும் தமிழக சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 பேரையும், தி.மு.க. கூட்டணி சார்பில் 3 பேரையும் தெரிவுசெய்ய முடியும். அ.தி.மு.க. வேட்பாளர்களாக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாளரான வேலூரை சேர்ந்த முகமது ஜான், மேட்டூர் நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியான பா.ம.க. சார்பில் அன்புமணி இராமதாஸ் போட்டியிடுகிறார். இவர்கள் 3 பேரும் நாளை மனுத்தாக்கல் செய்கின்றனர். தி.மு.க. வேட்பாளர்களாக தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் வைகோவும் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 9ஆம் திகதி நடைபெறுகிறது. மனுக்களை திரும்பப்பெற 11ஆம் திகதி கடைசி நாளாகும். இந்தநிலையில், வைகோ, அன்புமணி இராமதாஸ் உட்பட அ.தி.மு.க. – தி.மு.க. வேட்பாளர் 6 பேரும் போட்டியின்றி உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுகின்றனர். இதனால் சுயேட்சைகளின் மனுக்கள் வரும் 9ஆம் திகதி தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/வைகோ-அன்புமணி-உட்பட-6-பேரு/

‘ஐ.என்.எஸ் விராட்’ கப்பலை உடைப்பதற்கு எதிர்ப்பு!

5 months 1 week ago
‘ஐ.என்.எஸ் விராட்’ கப்பலை உடைப்பதற்கு எதிர்ப்பு! இந்திய கடற்படையின் ‘ஐ.என்.எஸ் விராட்’ என்ற கப்பலை உடைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹெச்.எம்.எஸ் ஹெர்ம்ஸ் என்ற கப்பல், கடந்த 1959ஆம் ஆண்டு பிரித்தானிய ரோயல் நேவியில் பணியில் சேர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1982ஆம் ஆண்டு பாக்லாந்து தீவுகளுக்காக ஆர்ஜெண்டினாவுடன் பிரித்தானியா போரிட்டபோது, இந்த கப்பல் முக்கிய பங்காற்றியது. பிரித்தானிய இளவரசர் சார்லஸ் இந்த கப்பலில் ஹெலிகாப்டர் விமானியாக பணியற்றியுள்ளார். பிரித்தானியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலாக இருந்த இந்தக் கப்பல், கடந்த 1985ஆம் ஆண்டு கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றது. அதன் பின்னர், 1987ஆம் ஆண்டு பழுதுகள் நீக்கப்பட்டு இந்தியாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஐ.என்.எஸ் விராட் என்று பெயரிடப்பட்டு இந்திய கடற்படையில் இந்தக் கப்பல் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இந்த கப்பலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அருங்காட்சியகமாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. கடந்த திங்கட்கிழமை இந்திய பிரதமர் மோடி, விராட் கப்பலை உடைக்க முடிவு செய்திருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்காக கடற்படையுடன் விவாதித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், விராட் கப்பலை உடைக்கக் கூடாது என்றும், அதனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், பிரித்தானியாவைச் சேர்ந்த ஆன்டி ட்ரீஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் இந்த கப்பலில் ஏர்மேனாக பணி புரிந்து வந்துள்ளார். விராட் கப்பலை உடைப்பதற்கு பதிலாக தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதற்காக 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை தரத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/ஐ-என்-எஸ்-விராட்-கப்பலை-உட/

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை!

5 months 1 week ago
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை! இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள சுலவேசி தீவிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு பதிவானது. மனாடோவிலிருந்து தென்கிழக்கில் 185 கி.மீ தொலைவிலும் 24 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சுனாமி ஆரம்ப எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் வானிலை, புவி இயற்பியல் மற்றும் காலநிலை ஆய்வு நிறுவனம் (பி.எம்.கே.ஜி) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. http://athavannews.com/இந்தோனேசியாவில்-பாரிய-நி/

பலாலி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாகிறது

5 months 1 week ago
மிகச்சரியான ,தெளிவான நோக்கு அண்ணை என்னதான் சிங்களவர்கள் கடை வைத்தாலும் கொள்வனனவு செய்யப்போவது நாம் தானே எமது சிந்தனையில் மாற்றத்தை கொண்டுவருவோம் ,பத்து ரூபாய் அதிகமென்றாலும் கொள்வனவினை தமிழர்களிடமே மேற்கொள்வோம் .போகும் பணம் தமிழர்களுக்கே போய் சேரட்டும் ,ஆனால் தமிழ் முதலாளிகள் இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு பகல் கொள்ளை அடிக்க முற்படக்கூடாது, இருபக்கமும் ஒத்துழைப்பு இருப்பின் சிறுக சிறுக எம்மவர் பொருளாதாரத்தை நாமே முன்னேற்றலாம்

முகிலனை தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்தது...ஆந்திர காவல்துறை!

5 months 1 week ago
நள்ளிரவில் திடீர் நெஞ்சு வலி.. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் முகிலன் அனுமதி நள்ளிரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது நெஞ்சுவலிப்பதாக முகிலன் கூறியதால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க நீதிபதி ரோஸ்லின் உத்தரவிட்டார். இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் முகிலன் அனுமதிக்கப்பட்டார். கூடங்குளம் அணு உலை, தூத்துக்குடி ஸடைர்லைட் ஆலை, எட்டு வழிச்சாலை,ஹைட்ரோ கார்பன் மற்றும் மீதேன் திட்டங்களுககு எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தவர் சமூக செயற்பாட்டாளர் முகிலன் (52)/ தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அதை வெளியிடப்போவதாகவும் முகிலன் கடந்த பிப்ரவரி 15ம் தேதி கூறியிருந்தார். அதன் பிறகு ஐந்து மாதங்களாக அவரை காணவில்லை.அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள்ளும் முகிலனை கண்டுபிடித்து தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விசாரணையை விரிவு படுத்தும் வகையில் சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்ட்டது. கடந்த 5 மாதங்களாக சிபிசிஐடி போலீசார் அவரை தேடிவந்தனர்.இந்நிலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் ஆந்திர மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்ட முகிலன் தமிழக காவல்துறையிடம் நேற்று ஒப்படைத்தனர். இதையடுத்து வேலூரில் மருத்துவ பரிசோதனை செய்த போலீசார் அவரை காவல்துறை வாகனத்தில் ஏற்றி, சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துவந்தனர். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் முகிலனிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைக்காக அனுமதித்தனர்.திடீர் நெஞ்சுவலி: பின்னர், முகிலனை ராயபுத்தில் உள்ள எழும்பூர் குற்றவியல் பெருநகர இரண்டாவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரோஸ்லின் வீட்டில், நள்ளிரவு ஒரு மணியளவில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது தமக்கு நெஞ்சு வலி என முகிலன் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, இன்று காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் போலீசாருக்கு அறிவுறுத்தினார். இதனையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் முகிலன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இருப்பிடத்தை கூற மறுப்பு: இதனிடையே முகிலன் கைது குறித்து சிபிசிஐடி வெளியிட்ட அறிக்கையில், பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக முகிலனை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன நாட்களில் தாம் எங்கிருந்தேன் என கூற முகிலன் மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.Read more at: https://tamil.oneindia.com/news/chennai/tn-activist-mugilan-admitted-to-hospital-over-heart-attack-356318.html

தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது ஒரு இனப்படுகொலையே

5 months 1 week ago
இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது ஒரு இனப்படுகொலையே என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரும் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரருமாகிய சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார். பெண்கள் மேம்பாட்டு மையத்தில் ஒழுங்கமைப்பில் அதன் தலைவி சறோசா சிவச்சந்திரன் தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற நிலைமாறுகால நீதி தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், ஈழத் தமிழர்களாகிய நாங்கள் பல்வேறு பட்ட இன்னல்களை சந்தித்து உயிர் இழப்புகளை சந்தித்து உடமை இழப்புக்களை சந்தித்து இழக்கக் கூடாத அனைத்தையும் இழந்து மீண்டும் வந்திருக்கின்றோம் இந்த நிலையில் எங்களுடைய அரசியல் தலைமைகள் எங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான விடயங்களை வெளியுலகுக்கு கொண்டு செல்வதில் முனைப்பு காட்டுகின்றனர். ஆனாலும் அந்த முயற்சியில் ஒரு தளம்பல் நிலை காணப்படுவதாக நான் உணர்கின்றேன் ஏனென்றால் முன்பு பேசப்பட்டது போல அல்லது முன்பு இடம் பெற்றது போல இவ்விடயங்கள் தொடர்பில் யாரும் கருத்தில் எடுப்பதில்லை அல்லது கண்டுகொள்வதில்லை இவ்வாறு நாங்கள் எமது இனப்படுகொலையை சர்வதேச சமூகத்திற்கும் எமது அடுத்த தலைமுறைக்கும் கடத்த தவறுமாக இருந்தால் அல்லது வெளிப்படுத்தத் தவறுவோமாக இருந்தால் எங்கள் இனம் ஒரு நிலைமாறுகால நீதி பொறிமுறையில் எதையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஒன்று தோன்றும். ஆகவே அனைத்து அரசியல் தலைமைகளும் தமது மக்களினுடைய எதிர்காலத்தை நினைவில் கொண்டு எமது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை சர்வதேச சமூகத்திற்கு உரத்துக் கூறவேண்டும். என்றார் . https://www.virakesari.lk/article/59950

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை

5 months 1 week ago
2070 ஐ அண்டும் போது, இலங்கை தமிழர் ஒவ்வொருவரும் ஆகக் குறைந்தது 50,000 டாலர் ஆவது ( இதனை முதலில் 1 மில்லியன் என பதிவிட யோசித்திருந்தேன் ) தமது சேமிப்பிலும் , இனிமேல் மணம் புரியும் ஒவ்வொரு இலங்கை தமிழ் தம்பதியினரும் 3 அல்லது 4 குழந்தைகளாவது பெற்றுக் கொண்டிருந்தால், 2069இல் எமது பிரச்சனை திருப்தியான முறையில் தீர்ந்து போயிருக்கும் . சம் உம் தேவையில்லை சும் உம் தேவையில்லை ………

விடுதலைப் புலிகளின் தடையை நீக்க கோரி அமெரிக்காவின் வெளிவிவகார பிரதிநிதிகளிடம் கோரிக்கை

5 months 1 week ago
அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் குறுக்கிடவில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த விடயத்தைக் கருத்தில் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை அமெரிக்கா நீக்க வேண்டுமென்றும் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை முதன் முறையாகச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். மாறி வரும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் நிலைமாற்றங்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருமான க.துளசி தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம், இலங்கையின் தென் பகுதியில் அரசியல் காய்நகர்த்தல்கள், அரசியலமைப்பின் பொறிமுறை மற்றும் தமிழர்களுக்கான சாத்தியப்பாடான தீர்வுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளன.தமிழர்களுக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பாக அரசியலமைப்பு பொறிமுறைகளில் தமக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையீனங்கள் குறித்தும் அமெரிக்க பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்ததாக துளசி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் தலையீட்டில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்ட ஏற்பாட்டு நடைமுறைகள் மற்றும் புரையோடிப் போயிருக்கின்ற தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு ஆகியன குறித்தும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் குறுக்கிடவில்லை என்று அவர் இச்சந்திப்பின் போது எடுத்துக் கூறியுள்ளார். இதேவேளை இலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் தமது அனுபவங்களை இலங்கைப் படையினருடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள், ஈஸ்டர் தின தாக்குதலுக்குப் பின்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ராடா வான் காப்பு படையணியின் போராளியாக முன்னர் துளசி செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2019/07/08/கட்டுரைகள்/36851/அமெரிக்க-நலன்களுக்கு-எதிராக-புலிகள்-செயற்பட்டது-கிடையாது
Checked
Sun, 12/15/2019 - 10:10
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed