புதிய பதிவுகள்

எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: விவசாயிகள் உற்சாக கொண்டாட்டம்

5 months 1 week ago
நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ராவணன் தான் முதலாவதாக வழக்கு போட்டது. பின்னரே மற்ற கட்சிகள் வழக்கில் இணைந்தன.

ருவாண்டாவில் 8 இலட்சம் பேரை இனப்படுகொலை செய்த 25ஆம் ஆண்டு நினைவுதினம்

5 months 1 week ago
பல சந்தர்ப்பங்களில் மனிதாபிமானம் பேசுகின்ற பெரும்பாலான நாடுகள் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றன. படுகொலைக்கு உள்ளாகும் சமூகத்தினால் தமக்கு பயனில்லை எனும்போது.

ஆறு கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்கும் அரசியல் எதிர்காலம்

5 months 1 week ago
ஆறு கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்கும் அரசியல் எதிர்காலம் எம். காசிநாதன் / 2019 ஏப்ரல் 08 திங்கட்கிழமை, மு.ப. 11:31 Comments - 0 தேர்தல் கூட்டணிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைமையில், இரு கூட்டணிகள் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டாலும், நடிகர் கமல்ஹாசன், டி.டி.வி. தினகரன் போன்றோரும் களத்தில் தனியாக, உதிரிக்கட்சிகளின் கூட்டணியுடன், தமிழக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். “ராகுல் காந்தி பிரதமர்” என்று அறிவித்து, காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி செய்து கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு எட்டு இடங்களைக் கொடுத்து, அ.தி.மு.க - பா.ம.க கூட்டணியை முதலில் முடிவு செய்து கொண்டார் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.கவும் தி.மு.கவும் 50 சதவீத இடங்களைக் கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்து, தேர்தலில் போட்டியிடுகின்றன. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளும், சட்டமன்றத்துக்கு இடைத் தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளும் இப்போதைக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளன. இடைத் தேர்தல்களில் வெற்றி பெறுவது, அ.தி.மு.கவுக்கு வாழ்வா சாவா பிரச்சினை. அதேபோல் தி.மு.கவுக்குக் கௌரவப் பிரச்சினை. 2011க்குப் பிறகு தேர்தல் வெற்றியைச் சுவைக்க முடியாத ஏக்கத்தில் தி.மு.க தொண்டர்கள் இருக்கிறார்கள். அக்கட்சியின் தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, கட்சியை ஸ்டாலின் கட்டுக்கோப்புடன் கொண்டு சென்று விட்டாலும், இந்தத் தேர்தல் முடிவுகள் தான், அவருடையை தலைமைக்கு ஓர் அடையாளத்தைக் கொடுக்கும். ஏனென்றால், தி.மு.க தலைவரான உடன் சந்திக்கும் நாடாளுமன்றத் தேர்தல் இது. 18 இடைத் தேர்தல் தொகுதிகளுமே பொதுவாக அ.தி.மு.கவுக்கு வலுவான தொகுதிகள். ஆனால், இப்போது இருப்பது பழைய அ.தி.மு.க அல்ல. டி.டி.வி தினகரன் பிரித்துக் கொண்டு போன பிறகு, எஞ்சியிருக்கும் அ.தி.மு.க, இப்போது முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இருக்கிறது. ஆகவே, வருகின்ற தேர்தலில் குறைந்தபட்சம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், அதிக பட்சமாக எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, ஜூன் மூன்றாம் திகதிக்குப் பிறகும் அ.தி.மு.க ஆட்சி தொடரும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சட்டமன்ற ரீதியாக வாக்குக் கேட்டுப் போகிறார்கள். பா.ஜ.கவையும் சுமக்க வேண்டியது, ஒரு பெரிய தலைவலியாக எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. என்றாலும், அந்தக் கட்சியைத் தவிர்த்து விட்டு, கூட்டணி அமைக்க இயலவில்லை. இரண்டு வருடங்களாக ஆட்சியில் நீடிக்க பா.ஜ.க கொடுத்த தார்மீக ரீதியிலான ஆதரவை, அவ்வளவு எளிதாக எடப்பாடி பழனிசாமியால் மறந்து விட முடியாது. ஆனாலும் அக்கட்சிக்குத் தொகுதிகளை அள்ளிக் கொடுக்காமல் கிள்ளிக் கொடுத்தார். தற்போதைக்கு 18 இடைத் தேர்தல் தொகுதிகளில், ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட முடியும் என்று, அ.தி.மு.க திடமாக நம்புகிறது. அதை நோக்கித்தான் அதன் தேர்தல் பிரசாரங்கள் அமைந்திருக்கின்றன. “ஸ்டாலின் எதிர்ப்பு” பிரசாரம், எடப்பாடி பழனிசாமிக்கு அந்த யோகத்தைக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியால் ஐந்து தொகுதிகளுக்கு மேல் பிடிப்பது என்பது இமாலய சாதனையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அகில இந்திய அளவில் வெளியாகும் கருத்துக்கணிப்பு முடிவுகளும் சமீபத்தில் எடுக்கப்பட்ட, லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு முடிவுகளும் இப்படித்தான் சுட்டிக்காட்டுகின்றன. இப்போது அமைச்சராக இருந்த துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்டுள்ள சோதனை நடவடிக்கைகள், அதில் 11 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரிடமிருந்து சில கோடிகள் பணம் பறிமுதல் போன்ற தேர்தல் ஆணையகத்தின் நடவடிக்கைகள், நெருக்கடியைக் கொடுக்கும் என்று அ.தி.மு.க நம்புகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைவோம் என்ற சோகத்தில், அ.தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வேகமாகவே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க கூட்டணியைப் பொறுத்தமட்டில், மத்திய, மாநில அரசாங்கங்கள் மீது இருக்கும் அதிருப்தியை ஒரு மூலதனமாக வைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி அதற்குச் சற்று வலுச் சேர்த்துள்ளது. வைகோ, கொம்யூனிஸ்ட் கட்சிகள், திருமாவளவன் போன்றோர் இருப்பதால் ‘மோடி எதிர்ப்பு அலை’யின் புண்ணியத்தில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 35இல் வெற்றி பெற்றுவிட முடியும் என்று, திடமாக நம்புகிறது. அதனால்தான் சட்டமன்றத் தொகுதியாக பிரசாரம் செல்லாமல், பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இந்த ‘மோடி எதிர்ப்பு அலை’யைத் திசை திருப்ப, “தி.மு.க இந்துகளுக்கு விரோதி” என்ற பிரசாரத்தை பா.ஜ.க தரப்பில் முன்னெடுத்துச் செல்கிறது. கடந்த காலங்களில், இந்தப் பிரசாரம் வெற்றி பெற்றதில்லை. ஆனால் இப்போது கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லா களத்தில் இதை வைத்து, மோடி எதிர்ப்பு அலையை திசை திருப்பினால், பா.ஜ.கவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மேலும் சில வெற்றிகள் கிடைக்கும் என்று திட்டமிடப்படுகிறது. இதை உணர்ந்துதான், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், “தி.மு.க இந்துக்களுக்கு எதிரியல்ல; அது பொய்ப்பிரசாரம். என் மனைவியே கோவிலுக்குப் போகிறார். அதை நான் தடுத்ததில்லை” என்று பதிலடி கொடுத்தார் திராவிட இயக்கத் தலைவர் கி. வீரமணி. கிருஷ்ணரை அவமதிக்கும் வகையில் பேசி விட்டார் என்று, பூதாகரமாகப் போராட்டங்கள், சமூக வளைதளங்கள் மூலமாகப் பரப்பிட பா.ஜ.கவும் அதன் துணை அமைப்புகளும் வீரியத்துடன் களத்தில் நிற்கிறார்கள். ஆண்டாள் சர்ச்சை போல், இந்தக் கிருஷ்ணர் சர்ச்சையை, ஊதிப் பெரிதாக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதற்குப் பின்னனி இல்லாமல் இல்லை. வீரமணி எப்போதுமே அப்படிப் பேசுபவர்தான். ஏனென்றால், அவர் கட்சித் தேர்தல் பாதையில் பயணிக்கவில்லை. “கடவுள் இல்லை” என்ற பெரியாரின் வழியில், அக்கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. வீரமணி எப்போதுமே தி.மு.கவின் தேர்தல் மேடைகளில் அடிக்கடி காட்சியளிக்க மாட்டார். தி.மு.க தலைவராக, கருணாநிதி இருக்கும் வரை அது நீடித்தது. ஆனால், இப்போது ஸ்டாலின் தலைவரான பிறகு, வீரமணி தி.மு.கவின் தேர்தல் மேடைகளில் காட்சியளிக்கிறார். குறிப்பாக ராகுல் காந்தி - ஸ்டாலின் கலந்து கொண்ட நாகர்கோவில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட பங்கேற்றார். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, வீரமணி பேசினால் தி.மு.க பேசியதுதான் என்பது போன்ற பிரசாரத்தை பா.ஜ.க.வில் உள்ளவர்கள் மேற்கொள்கிறார்கள். ஆனால் அது, தமிழகத்தில் எடுபடுமா என்பது, இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இது தவிர, தி.மு.க நிர்வாகிகள், வேட்பாளர்கள் மத்தியில் “நாம்தான் வெற்றி பெறப் போகிறோம்” என்ற அதீத நம்பிக்கை தென்படுகிறது. அதுவே, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குத் தடைக்கல்லாக முடிந்து விடக்கூடாது என்பதே, தி.மு.கவுடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகளின் எண்ணமாக இருக்கிறது. எது எப்படியிருந்தாலும், மோடி எதிர்ப்பு அலை, தி.மு.க வெற்றிக்கு வித்திடும் ஒரு காரணியாக இருக்கப் போகிறது. இடைத் தேர்தல்கள் நடக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் 13 தொகுதிகளில் தி.மு.கவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றே அக்கட்சி நம்புகிறது. மீதியுள்ள ஐந்து தொகுதிகளிலும் வெற்றியைப் பெற்று, இப்போதுள்ள அ.தி.மு.க அரசாங்கத்தை வீழ்த்திவிட வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறது. ஆகவே தி.மு.க கூட்டணி நாடாளுமன்றத்தில் 35 சட்டமன்ற இடைத் தேர்தலில் 13 என்ற இலக்கை நோக்கி இப்போதைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஜூன் மூன்றாம் திகதி தேர்தல் முடிவுகள் வெளிவரும். அன்றைய தினத்தில் தமிழக தேர்தல் முடிவு எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலியா அல்லது ஸ்டாலினுக்கு தலைவலியா என்பது தெரிந்து விடும். டெல்லியில் ஆட்சி மாற்றம் என்றால், எடப்பாடி பழனிசாமிக்கு திருகுவலியாக அமையும். தமிழகத்தில் வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் நரேந்திரமோடி ஆட்சி என்றால் ஸ்டாலினுக்கு எதிர்கால அரசியல் பெரும் தலைவலியாக மாறும். ஒருவேளை அ.தி.மு.கவுக்குப் பத்து நாடாளுமன்றத் தொகுதிகள் கிடைத்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இல்லாமல் வேறோர் ஆட்சி என்றாலும், இந்தப் பத்து எம்.பி.க்களின் தயவில் மீதியுள்ள இரு வருடங்களை, எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அ.தி.மு.க அரசாங்கம் கடத்தி விடும். ஏனென்றால், தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால், 10 எம்.பி வைத்துள்ளவர்களுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு டெல்லியில் கிடைக்கும் என்பதே இந்திய அரசியலின் கடந்த கால வரலாறு. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் எதிர்கால அரசியல், இப்போதைக்கு வாக்களிக்கப் போகும் ஆறு கோடி தமிழக வாக்காளர்கள் கையில் இருக்கிறது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆறு-கோடி-வாக்காளர்கள்-நிர்ணயிக்கும்-அரசியல்-எதிர்காலம்/91-231821

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?

5 months 1 week ago
எது தீர்வு? என்.கே. அஷோக்பரன் / 2019 ஏப்ரல் 08 திங்கட்கிழமை, பி.ப. 12:39 Comments - 0 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 190) இலங்கையில் தீர்க்கப்பட வேண்டியதோர் இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை, சில வில்லங்கத் தனமான அரசியல் செய்வோரைத் தவிர, மற்றைய அனைவரும் ஆமோதிக்கவே செய்கிறார்கள். குறைந்த பட்சம், இலங்கைத் தமிழர்கள், சிங்களவர்களிடையே இன முரண்பாடுள்ளது என்பதையும் அது தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கிறார்கள். ஆனால், அந்தப் பிரச்சினை தொடர்பான வரையறைகள் தொடர்பிலும், தீர்வுக்கான அடிப்படைகள் தொடர்பிலும், அனைத்துத் தரப்பினரிடையேயும் தரப்பினுள்ளேயும் நிறைந்த கருத்து நிலைப்பாட்டு வேறுபாடுகள் உள்ளன. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகரான ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் பேரனும், தமிழ்த் தேசியத்துக்காகச் சர்வதேசமெங்கும் குரல்கொடுத்த குமார் பொன்னம்பலத்தின் மகனும், தீவிரத் தமிழ்த் தேசியவாதிகள் என்று பொதுவாகச் சுட்டி நோக்கப்படும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அண்மையில் அரசியல் மாநாடொன்றில் உரையாற்றியபோது, ஒற்றையாட்சிக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்வது தொடர்பில், பின்வரும் கருத்தை வௌிப்படுத்தி இருந்தார். “போர் முடிவடைந்ததற்குப் பிற்பாடு, தமிழ்த் தேசம் தன்னுடைய இருப்புக்காகக் போராடிக் கொண்டிருக்கின்றது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நாளில் இருந்து, கடந்த ஒன்பது வருடங்களாகத் தமிழ்த் தேசத்தினுடைய இருப்பை, இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் முதலிலே, தமிழர் ஒரு தேசமாக இருப்பதைக் கைவிட வேண்டுமென்பது தான், அவர்களுடைய முக்கியமான குறிக்கோள். தமிழர் தொடர்ந்தும் ஒரு தேசமாகச் சிந்திக்கின்ற வரைக்கும், எங்களுக்கென்று தனித்துவம் பேசும் இனமாக, நாங்கள் தொடர்ந்தும் இருப்போம். தமிழ் மக்களை ஏமாற்றி, இன்னுமொருமுறை ஒற்றையாட்சி அரசமைப்பை எம்மீது திணிப்பதற்கும் கடந்த முறைகளை விட, இந்த முறை வித்தியாசமாகத் தமிழ் மக்களுடைய முழுமையான ஆதரவோடு, அந்த ஒற்றையாட்சியை நாலாவது முறையாக, நிறைவேற்றுவதற்கு முடிவெடுத்து இருக்கின்றார்கள். இதுதான் இன்றைய அரசியல் யதார்த்தம். கடந்த 70 வருடங்களாக, மூன்று அரசமைப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.அந்த மூன்றும், ஒற்றையாட்சி அரசமைப்பாகத் தான் அமைந்திருந்தன. அவற்றைத் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்திருந்தார்கள்.ஆனால், இந்தமுறை எம்மால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், தமிழ்ச் சரித்திரத்திலேயே முதற்தடவையாக அதே ஒற்றையாட்சி அரசமைப்பை, நாம் ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றார்கள். கடந்த மூன்று அரசமைப்பையும் ஒற்றையாட்சி அரசமைப்பாக நிறைவேற்றிய காரணத்தாலேயே தமிழ்த் தரப்புகள் நிராகரித்தன.ஆனால், இந்த நான்காவது ஒற்றையாட்சி அரசமைப்பை ஆதரிக்கிறதற்கான முயற்சிகளை, எம்மவர்களாலே மேற்கொள்ளப்படுகின்றது. மூன்று முறை நிராகரித்து, நான்காவது முறை நாங்களாகவே விரும்பி அதை ஆதரித்தால், அதற்குப் பிற்பாடு, நாட்டில் இனப்பிரச்சினை இருக்கிறதென்ற பேச்சுக்கே இடமிருக்காது. இதுதான் இன்றைக்கு இருக்கக் கூடிய ஆபத்து. அந்த நிலையிலேயே வரப்போகின்ற புதிய அரசமைப்புக்கான முயற்சியைத் தமிழ்த் தேசம் ஒருமித்து, அதனை முழுமையாக அடியோடு நிராகரிக்க வேண்டும். இலட்சக்கணக்கான மக்கள், தங்கள் உயிரைத் தியாகம் செய்தது, எங்களுடைய எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே. அந்த உயிர்கள் வீண்போக முடியாது. ஆகவே, அந்த ஒற்றையாட்சி அரசமைப்பை நிராகரிக்க வேண்டுமென்பது தான் எங்கள் கடமை. அதுதான் எமக்கிருக்கும் பிரதான கடமை” என்று அவர் அறுதியாகக் கருத்துரைத்திருந்தார். மறுபுறத்தில், 2018 டிசம்பர் 12ஆம் திகதி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றபின் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்; அத்துடன் புதிய அரசமைப்பின் கீழ் பிரிக்கப்படாத ஒரு நாட்டில், ஒற்றையாட்சியின் கீழ் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை நாங்கள் முன்வைப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து 2018 டிசம்பர் 18ஆம் திகதி, காலிமுகத்திடலில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய அவர், “ஐக்கிய தேசிய முன்னணி என்ற வகையில், இந்த நாட்டில் நல்லிணக்கம், அரசியல் தீர்வு அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு, நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வையும் ஒற்றையாட்சியின் கீழ் தான் ஏற்படுத்துவோம். அதிலிருந்து விலகவும் மாட்டோம்” என்று மீள வலியுறுத்தியிருந்தார். 2018 ஒக்டோபர் 31ஆம் திகதி, சந்திப்பொன்றில் கருத்து வௌியிட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, “நான் இருக்கும் வரை, வடக்கு-கிழக்கை இணைக்க விட மாட்டேன்; சமஷ்டித் தீர்வையும் அளிக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டதாக, பல்வேறு செய்திச் சேவைகளும் அறிக்கையிட்டிருந்தன. மேலும் கடந்தவாரம், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பாதீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், “பிரிக்கப்படாது ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வொன்றைக் காண்பதற்குத் தயார் என அறிவித்து, அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இவ்வாறான நிலையில் எமக்குத் தீர்வொன்றை வழங்க நீங்கள் தயாரில்லை. தமிழர்கள் இரண்டாவது பிரஜைகளாக வாழ்வதற்கு விரும்பவில்லை. தேசிய பிரச்சினைக்குத் தீர்வு வழங்காது, இரண்டாவது பிரஜைகளாக வாழ்வேண்டிய நிலை ஏற்பட்டால், தமிழர்களுக்கான இறைமையைப் புதுப்பித்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்” என்று உரையாற்றியிருந்தார். 2009இலேயே, “இலங்கையில் சமஷ்டித் தீர்வுக்கு இடமில்லை” என, மிகவும் திட்டவட்டமாக, அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துரைத்திருந்தார். அந்த நிலைப்பாடு, மேலும் தீவிரமாகியுள்ளதேயன்றி, இன்று வரை மாறியதற்கான அறிகுறிகள் இல்லை. ஆகவே வேறுபட்ட அரசியல் முகாமைச் சேர்ந்தவர்கள் பலரும், இனப்பிரச்சினை விவகாரத்திலும், அதற்கான தீர்வு தொடர்பிலும் வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதை, நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதில் தமிழ்த் தரப்பைப் பொறுத்தவரையில், இந்த எதிரிடையான அரசியல் முகாம்களை, தீவிரத் தமிழ்த் தேசியவாத முகாம் என்றும், மிதவாத தமிழ்த் தேசியவாத முகாம் என்றும் அடையாளப்படுத்தலாம். மறுபுறத்தில், சிங்கள-பௌத்த பேரினவாத அரசியல் முகாமைப் பொறுத்தவரையில், அடிப்படையில் பிரிபடாத ஒற்றையாட்சிக்குள் (அதாவது சமஷ்டியோ, தனிநாடோ) தீர்வு என்பதில் அனைத்துத் தரப்பும் ஒன்றித்து நிற்பதை அவதானிக்கலாம். அவர்களிடையேயான வேறுபாடென்பது, பிரிபடாத ஒற்றையாட்சிக்குள் என்ன அளவிலான அதிகாரப் பகிர்வு என்பதில் இருக்கலாமேயன்றி, அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை. இந்தத் தீவிரத் தமிழ்த் தேசியவாதம் என்று அடையாளம் காணப்படுவோரின் ஒற்றையாட்சி முறைமைக்குள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடையப்பெற முடியாது என்ற நிலைப்பாடானது, மிதவாதத் தமிழ்த் தேசியவாதிகள் என்று அடையாளம் காணப்படுவோரின் சமகாலத்தில் எழுந்துள்ள இணக்க அல்லது யதார்த்த அரசியல் எனும், சமரச அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரிடையாகவும், ஒற்றையாட்சிக்குள்தான் எந்தத் தீர்வும் என்கிற சிங்கள-பௌத்த பெரும்பான்மை அரசியலின் நிலைப்பாட்டுக்கு எதிரானதாகவும் பார்க்கப்பட வேண்டும். இந்தக் கருத்தியல் நிலைப்பாட்டு முரண்பாடானது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஏற்றதொரு தீர்வைக் காண்பதிலுள்ள அடிப்படைப் பிரச்சினைகளில் முதன்மையானதாகும். ஆனால், இந்த ஒற்றையாட்சி பற்றிய தேடலுக்கு முன்பதாக, நாம் மிக அடிப்படையானதொரு விஷயத்தை மனதில் இருத்திக் கொள்ளுதல் அவசியம். இந்தத் தொடரினூடாக, சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றினூடாக, நாம் அடையாளம் கண்டுகொண்டதன் படி, தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் என்பது, இரத்தினச் சுருக்கமாகத் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற மூன்றும் எனலாம். இவை இலட்சியப் பொருட்கள். ஆகவே ஒற்றையாட்சியோ, சமஷ்டியாட்சியோ, தனிநாடோ என்பதெல்லாம் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் அல்ல; மாறாக, தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கான பல்வேறுபட்ட வழிமுறைகளில் அவையும் உள்ளடங்கும். ஆனால், அரசியல் முன்னரங்கில் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகள் பற்றிய கலந்துரையாடல் வெறும் ஒற்றையாட்சி, சமஷ்டி, தனிநாடு என்ற அடையாளக் கருத்தியல்களுள் அடக்கப்பட்டுவிடுவதானது, தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கு, ஏதுவான புத்தாக்க வழிமுறைகளுக்கான கதவை அடைத்துவிடுவதாகவே அமைந்துவிடும் என்ற கவலையும் இங்கு பதிவு செய்யப்பட வேண்டியதாகிறது. அது என்ன, புத்தாக்க வழிமுறை என்ற கேள்வி, இங்கு எழலாம். ஒற்றையாட்சி, சமஷ்டி, தனிநாடு என்ற கருத்தியல்கள், பொதுவாக நாம் கருதுவது போல, மிக எளிமையானதும், ஸ்தூலமானதும், ஸ்திரமானதுமான பொருளுடையவையல்ல. அரசியல் வரலாற்றில், சமஷ்டி என்பதே, ஓர் அதிகாரப் பகிர்வுப் புத்தாக்க முயற்சியின் குழந்தைதான். மனிதக் கூட்டங்கள், தமது தேவைக்கேற்றபடி தம்மைத் தாம் ஆளும் கட்டமைப்புகளையும் காலத்துக்குக் காலம் வடிவமைத்து வந்துள்ளன. இன்று சமஷ்டியாட்சி நாடுகள் என்று பட்டியலிட்டு நாம் நோக்கினாலும், அதில் அனைத்து சமஷ்டியும் ஒரே மாதிரியானதல்ல என்பதை நாம் தெட்டத் தௌிவாக நோக்கலாம். அதேபோல், ஒற்றையாட்சி நாடுகள் என்ற பட்டியலை நோக்கினாலும், அதில் சில ஒற்றையாட்சி நாடுகளில், சில சமஷ்டியாட்சி நாடுகளைவிடப் பிராந்தியங்கள் சுயாதீனமாகச் செயற்படும் அதிகளவிலான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டிருப்பதையும் நாம் அவதானிக்கலாம். ஆகவே, ஒற்றையாட்சி, சமஷ்டி என்ற சொற்கள் மாத்திரம் ஓர் அரசின் கட்டமைப்பைப் புரிந்துகொள்ளப் போதுமானவையல்ல. ஆனால் அதற்காக இந்தச் சொற்களால் பயனில்லை என்றும், முற்று முழுதாகச் சொற்களின் அடையாள வலுவை நிராகரித்து விடவும் முடியாது. ஒற்றையாட்சி, சமஷ்டி ஆகியவற்றுக்கு இடையான வேறுபாடு பற்றி, சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கின் தீர்ப்பில் கருத்துரைத்த பிரதம நீதியரசர் ப்ரியசத் டெப், “அரசுகள் ஒற்றையாட்சி, சமஷ்டியாட்சி என்று பெயரிடுதலானது சிலவேளைகளில் தவறானதாக அமைந்துவிடும். சமஷ்டியரசின் தன்மைகளையும் அம்சங்களையும் கொண்ட ஒற்றையாட்சி அரசுகள் இருக்கலாம்; அதுபோல் மாறியும் அமையலாம். ஒற்றையாட்சி அரசுக்கு உள்ளான அலகுகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அதனை சமஷ்டி என்று கருத முடியும்; அதுபோலவே சமஷ்டி அரசில் மத்தி பலம் வாய்ந்ததாகவும், மத்தியில் பலம் குவிக்கப்பட்டுமிருந்தால், அதனை ஒற்றையாட்சி அரசாகக் கருதலாம். ஆகவே, இறைமையைக் பகிர்தல், அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கல் என்பவை ஒற்றையாட்சி அரசுக்குள், சமஷ்டி முறை அரசாங்கத்தை ஸ்தாபிக்க வழிவகுக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார். இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி, சமஷ்டி என்ற பெயர் எல்லைகளைத்தாண்டிய தீர்வொன்றைக் காண்பதற்கு, இந்தத் தீர்ப்பில் ஒரு பிள்ளையார் சுழி காணப்படுகிறது. இது தமிழ் மக்களுக்கு சாதகமாகவும் அமையலாம். அல்லது சிங்கள-பௌத்த தலைமைகள் சாணக்கியமாக நடந்துகொண்டால், இது தமிழ் மக்களுக்குப் பாதகமாகவும் அமையலாம். (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எது-தீர்வு/91-231822

உணவு செய்முறையை ரசிப்போம் !

5 months 1 week ago
தோடம்பழ இனிப்பு என்று எங்களூரில் சொல்லுறது. இருக்கிறதிலேயே மலிவானது இதுதான். 25 சதம் கொடுத்தாலே நிறைய அள்ளித்தருவாங்கள். அங்கு பல பெடியளின் பொருளாதார நிலைமை, கிடைக்கும் pocket money இதை மாத்திரமே வாங்கி சாப்பிடும் நிலையில் இருந்தது

எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: விவசாயிகள் உற்சாக கொண்டாட்டம்

5 months 1 week ago
8 வழிச்சாலை... அடங்க மறுக்கும் அமைச்சர்... அதிருப்தியில் மக்கள்..! 8 வழி சாலை தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளது 5 மாவட்ட மக்களிடையே அதிமுக மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்து உள்ளது. 8 வழி சாலை தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளது 5 மாவட்ட மக்களிடையே அதிமுக மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்து உள்ளது. சென்னை முதல் சேலம்யே 8 வழி சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டன. இதற்கான நிலம் கையப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதையடுத்து விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசின் அத்துமீறலை எதிர்த்து அரசியல் கட்சிகள், விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். அரசின் உத்தரவை எதிர்த்து பாமக அன்புமணி, திமுக உள்பட பலர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. நிலம் கையகப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து செய்த நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தையும் பதிவு செய்து. மேலும், சுற்றுச்சூழல் மற்றும் மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி, சுற்றுச்சூழல்துறையிடம் தடையில்லா சான்று உரிய முறையில் பெற வேண்டும் திட்டம் தொடர்பாக மக்களிடம் உரிய முறையில் கருத்து கேட்கவில்லை என்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளார். அதுபோல, பாஜக தேசிய செயலாளரான இல.கணேசனும், இது தற்காலிக தடங்கல். தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருக்கிறது என என பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்யப்போவதாக கருத்து தெரிவித்துள்ளதுன் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. https://tamil.asianetnews.com/politics/appeal-against-8-way-road-barriers-said-minister-rajendra-balaji-ppn5p7

ருவாண்டாவில் 8 இலட்சம் பேரை இனப்படுகொலை செய்த 25ஆம் ஆண்டு நினைவுதினம்

5 months 1 week ago
முள்ளிவாய்க்கால் படுகொலைகளை உலக நாடுகளும் முன்னின்று செய்தன என்ற குற்றச்சாட்டு நீடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இக்கொலைகளுக்கு இந்திய அரசாங்கம் துணைபோனதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலரும் நினைவுகள் ..

5 months 1 week ago
இதை சில வீடுகளில் மாத்திரமே பார்த்துள்ளேன், எல்லோரும் வைத்திருப்பதில்லை, பயறு போன்றவற்றை உடைக்க பாவிக்கிறவர்கள் என்று நினைக்கிறன், இல்லையா?

விசமிகளால் பதாதைகள் உடைப்பு

5 months 1 week ago
1996 ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்ட செம்மணி விவகாரம் 1999 ஆம் ஆண்டின் நடுப்பகுதிவரை இழுபட்டது. செம்மணி மனிதப் புதைகுழியில் கிட்டத்தட்ட 400 பேர் புதைக்கப்பட்டிருந்தனர் என்று குற்றமிழைத்தவர்களே ஒப்புக்கொண்டதாகச் செய்திகளும் வந்தன. இந்த 400 பேரும் மதம்பார்த்தல்ல, இனம்பார்த்துப் புதைக்கப்பட்டனர். தற்போது நடந்த சம்பவத்தால் புதைகுழிக்குள் இருக்கும் அந்த ஆத்மாக்கள் அனைத்தினதும் அமைதியும் அழிந்திருக்கும்.

பொங்கல் பானைகளால் நிரம்பிய- பன்றித்தலைச்சி அம்மன்!!

5 months 1 week ago
பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்தின் இறுதித் திங்கள் இன்று என்பதால் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் கோவிலில் அடியார்களின் வருகை பெருமளவில் காணப்பட்டன. அதிகாலை 5.00 மணி தொடக்கம் கோவிலின் நாலாபுறமும் பொங்கல் வைத்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதில் அடியார்கள் ஈடுபட்டனர். https://newuthayan.com/story/15/பொங்கல்-பானைகளால்-நிரம்ப.html

பாக்கிஸ்தானின் விமானங்களை இந்தியா சுட்டுவீழ்த்தவேயில்லை - அமெரிக்க அதிகாரிகள் தகவல்

5 months 1 week ago
பாகிஸ்தானின் F-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரங்கள் வலுவாக உள்ளது" - இந்திய விமானப்படை படத்தின் காப்புரிமை DD Image caption இந்திய விமானப்படையின் வைஸ் மார்ஷல் ஆர்ஜிகே கபூர் பாகிஸ்தானின் F-16 ரக விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியதற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக இந்திய விமானப்படை கூறியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய விமானப்படையின் வைஸ் மார்ஷல் ஆர்ஜிகே கபூர், மிக் 21 பைசன் விமானம், ஒரு F 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு மறுக்க முடியாத வலுவான ஆதாரம் இருப்பதாக கூறினார். கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @ANI முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @ANI மேலும், பாகிஸ்தானின் விமானம் சுட்டுத்தள்ளப்பட்டதற்கான ரேடார் புகைப்படங்களையும் அவர் காண்பித்தார். பாகிஸ்தானின் இன்டர் சேவை பொது தொடர்புகளின் (ஐஎஸ்பிஆர்) இயக்குநர் வெளியிட்ட கருத்துகளும், இந்திய விமானப்படையுடன் ஒத்துப் போவதாக அவர் தெரிவித்தார். தாக்குதல் நடந்த அதே நாளில் இரண்டு விமானிகள் பிடிப்பட்டதாக ஐஎஸ்பிஆர் கூறுகிறது. "அதாவது அந்த இடத்தில் இரண்டு விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. ஒன்று மிக் 21 ரக விமானம், மற்றொன்று F 16. இதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இந்திய விமானப்படையிடம் உள்ளது" என்று கபூர் தெரிவித்தார். எனினும், பாதுகாப்பு காரணங்களால் அதனை வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக, F 16 விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது என்று கூறுவது உண்மையல்ல என்று அமெரிக்காவின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது. காஷ்மீர் பதற்றங்கள் படத்தின் காப்புரிமை Getty Images பிப்ரவரி 14 அன்று, இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய தாக்குதலில் இந்தியப் படையினர் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் பிப்ரவரி 27 அன்று, பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம் என்று தாம் கூறும் ஓர் இலக்கின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறியது. அடுத்த நாள் இந்திய விமானப்படை விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான், அதன் விமானியையும் சிறைபிடித்தது. பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி இந்தியா போர்ப் பதற்றங்களை அதிகரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியிருந்தார். சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் எஃப்-16 விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையின் பாகங்கள் என்று சில பாகங்களை இந்தியா காட்டியது. இந்த சம்பவங்களுக்குப் பிறகு சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு பாகிஸ்தான் வான் எல்லை மூடப்பட்டது. செயற்கைக்கோள் புகைப்படங்களில் சேதம் அதிகம் தெரியாததால், பாலகோட்டில் இருந்த தீவிரவாத முகாம் மீது இந்தியா நடத்திய தாக்குதலின் வெற்றி குறித்து கேள்விகள் எழுந்தன. https://www.bbc.com/tamil/india-47856173

முற்றிலும் முரண்படும் பாஜக - அதிமுக தேர்தல் அறிக்கைகள்

5 months 1 week ago
2019 மக்களவை தேர்தலில் முதல்கட்டம் நடைபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது அறிக்கையை ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்டது. இந்தியாவில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கைகளில் மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் சிலவற்றை பார்க்கலாம். முரண்படும் பாஜக - அதிமுக தேர்தல் அறிக்கைகள் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், பாஜக தனது தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், அதுகுறித்த அறிவிப்பும் பாஜகவின் அறிக்கையில் இல்லை. அதிமுக தேர்தல் அறிக்கைகளில் இடம் பெற்றிருந்த எந்த ஒரு அம்சத்தையும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் முன்வைத்திருந்தன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் அது இடம் பெற்றுள்ளதா? கோரிக்கைகள் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அறிவிப்பு இல்லை நீட் தேர்வு ரத்து செய்யப்படும் மாநிலப் பட்டியலில் கல்வி அறிவிப்பு இல்லை மாநிலப் பட்டியலில் கல்வி கொண்டுவரப்படும் மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் அறிவிப்பு இல்லை அறிவிப்பு இல்லை பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை அறிவிப்பு இல்லை அறிவிப்பு இல்லை பாஜக - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : ஓர் ஒப்பீடு வேலைவாய்ப்பு பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் தொழில்நுட்பம், சுற்றுலா, தொலைதொடர்பு என 22 துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். வேலைவாய்ப்புகளை விரைவாக உருவாக்க இதற்காக தனியே தொழில், சேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைக்கப்படும். தொழில் முனைவோருக்கு 50 லட்சம் வரை பிணை இல்லாத கடன் வழங்க புதிய திட்டம் கொண்டுவரப்படும். கல்வி மற்றும் சுகாதார துறைகளை விரிவுப்படுத்தி, அதன் மூலமாக தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். புதிய தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடி நிதித் தொகுப்பு ஒன்று உருவாக்கப்படும் சில ஆண்டுகள் மட்டுமே பள்ளிப்படிப்பை முடித்த ஆண் மற்றும் பெண்களுக்கு குறைந்த திறன் கொண்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். விவசாயம் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் 2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும். அனைத்து மாநிலங்களிலும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் கடன் செலுத்த முடியாத விவசாயிகளுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் எடுக்க அனுமதிக்கப்படாது. விவசாயத்துறையின் உற்பத்தியை பெருக்க 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். விவசாயத்துறையின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில், தனியே விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். வட்டி இல்லாமல் ஒரு லட்சம் ரூபாய் வரை குறைந்த கால விவசாய கடன்கள் வழங்கப்படும். விவசாய மேம்பாடு மற்றும் திட்டமிடுதலுக்கு தனியே தேசிய ஆணையம் அமைக்கப்படும். இதில் விவசாயிகள், விவசாய விஞ்ஞானிகள் மற்றும் விவசாய பொருளாதார நிபுணர்கள் இடம் பெறுவார்கள். கல்வி பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் கல்வி கற்றல் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக் கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்படும். உயர்கல்வி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நீடிக்கும். 2024ஆம் ஆண்டிற்குள் 200 கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயாக்கள் திறக்கப்படும். முதல் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் கல்வி இலவசமாக்கப்படும். மத்திய கல்வி நிறுவனங்களில் அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 50 சதவீத இடங்கள் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாநில கல்வி நிறுவனங்களிலும் இதனை செய்ய ஊக்குவிக்கப்படும். மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று கூறும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். இதற்கு பதிலாக மாநில அளவிலான தேர்வு நடத்தப்படும். மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் ஆயோத்தியில் ராமர் கோவில் கட்ட விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். படைப்பாற்றலின் சதந்திரத்தை பாதுகாப்பது உறுதி செய்யப்படும். சமஸ்கிருத மொழியை முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கற்றுத்தரப்படுவது உறுதி செய்யப்படும். கலைத்துறையினரின் சுதந்திரம் உறுதி செய்யப்படும். தணிக்கை குறித்த எந்த அச்சமும் இல்லாமல் அவர்கள் சுதந்திரத்தை அனுபவிக்கலாம். அதனை தடுக்க நினைக்கும் குழுக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அழியும் நிலையில் இருக்கும் மொழிகளுக்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பதிப்புரிமை சட்டம் வலிமையாக்கப்படும். சபரிமலை தொடர்புடைய நம்பிக்கை, மரபு, வழிபாடு ஆகியவற்றை விரிவாக உச்சநீதிமன்றத்தின் முன் எடுத்துரைப்பதை உறுதி செய்வதற்காக எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும். நம்பிக்கை தொடர்புடைய பிரச்சனைகளில் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு வழங்கப் பாடுபடுவோம். தேசிய பாதுகாப்பு பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் எந்த வகையிலும் தீவிரவாதம் பொறுத்துக் கொள்ளப்படாது. பாதுகாப்பு துறைக்கான செலவினங்கள் அதிகரிக்கப்படும். பாதுகாப்பு கருவிகள் மற்றும் ஆயுதங்கள் வாங்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முப்படைகளின் தாக்குதல் திறனை வலிமைப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இடதுசாரி பயங்கரவாத்த்தை குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தரவுகள் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, நிதி பாதுகாப்பு, தொலைத்தொடர்பு பாதுகாப்பு மற்றும் வணிக வழிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த தேவையான கொள்கைகள் வகுக்கப்படும். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படுள்ள சிறப்பு அந்தஸ்து அவ்வாறே நீடிக்கும். எந்த மாற்றமும் அதில் ஏற்படுத்தப்படாது. அரசமைப்பு சட்டத்தின் 35A பிரிவு, காஷ்மீரில் நிரந்தரமாக குடியிருப்போர் அல்லாதவர்களுக்கும், பெண்களுக்கும் எதிராக பாரபட்சமாக இருப்பதால் அதை நீக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு இந்த சட்டப் பிரிவு தடையாக உள்ளது என்று நம்புகிறோம். காஷ்மீர் பண்டிட்டுகள் பாதுகாப்பாக திரும்புவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுப்போம். மேற்கு பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர், சம்ப் பகுதிகளில் இருந்து அகதிகளை மறுகுடியேற்றம் செய்வதற்காக நிதியுதவி வழங்குவோம் காஷ்மீர் மாநில மாணவர்கள் மற்ற மாநிலங்களில் துன்புறுத்தப்படுவது தொடர்பான வழக்குகள் கடுமையாக எடுத்துக் கொள்ளப்படும். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். https://www.bbc.com/tamil/india-47856168

மாகந்துர மதூஸ்டன் டுபாயில் கைதான மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டனர்

5 months 1 week ago
April 8, 2019 பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஸ்டன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மொஹமட் நையீம், மொஹமட் முபா ஆகிய இருவருமே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் காவல்துறைப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்து இருவரிடமும் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2019/117840/
Checked
Sat, 09/21/2019 - 02:49
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed