ஊர்ப்புதினம்

யாழ். இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு உள் நுழைய முயற்சித்த மீனவர்கள்!

3 weeks 6 days ago

Published By: DIGITAL DESK 3   22 MAR, 2024 | 11:23 AM

image

இந்தியன் இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு போராட்டத்தின் ஆரம்பித்த மீனவர்கள் தமது பொறுமை இழந்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதுடன் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொலிசார் மீனவர்களை சுமூகமான நிலைக்குள் கொண்டுவர முயன்றும் மீனவர்கள் பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் கை விலங்கினை காட்டி மீனவர்களை அச்சுறுத்தும் விதத்தில் மிரட்டி வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/179403

ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்திறங்கினார்

3 weeks 6 days ago
யாழை சென்றடைந்தார் ஜனாதிபதி

Published By: DIGITAL DESK 3   22 MAR, 2024 | 10:59 AM

image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (22) யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளார்.

பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்த ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். 

யாழ்ப்பாணத்தை  சென்றடைந்த  ஜனாதிபதி , கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த தனியாரின் சுமார் 278 ஏக்கர் காணிகளை அதன் உரிமையாளரிடம் மீள கையளிக்கவுள்ளதுடன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவையும் திறந்து வைக்கவுள்ளார். 

333__1_.jpg 

333__3_.jpg

https://www.virakesari.lk/article/179397

யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.

4 weeks ago

 

இந்தக் காணொளி பல நாட்களாக உலா வந்தாலும் யாழில் யாரும் இணைத்த மாதிரி தெரியவில்லை.

யாராவது முதலே இணைத்திருந்தால் நிர்வாகம் இதை நீக்கிவிடவும்.

எனக்கு இப்போ தான் பார்க்கக் கிடைத்தது.

இந்த மாணவர்களின் துணிவைப் பாராட்ட வேண்டும்.

 

இங்க என்ன பேச வேண்டும்

என்ன பேசக் கூடாது

என்று சொல்லி அனுப்பியே இப்படி பேசுகிறார்கள் என்றால் முழு சுதந்திரமும் கொடுத்திருந்தால் எப்படி முழங்கியிருப்பார்கள்.

சர்வதேச விசாரணை மூலமான அர்த்தமுள்ள நீதியின் ஊடாக இலங்கையின் கறைபடிந்த கறுப்புப் பக்கத்தைப் புரட்டமுடியும் - பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்

4 weeks ago
21 MAR, 2024 | 05:30 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாக உத்தரவாதமளித்து, தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தாலும், அம்முயற்சிகளில் பலனேதுமில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

தமிழ் சமூகம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்காகக் காத்திருக்கின்றார்களே தவிர, அவர்களுக்கு வெறும் வார்த்தைகள் தேவையில்லை.

செயற்திறன்மிக்க சர்வதேச விசாரணைப்பொறிமுறை மற்றும் தண்டனை அளித்தல் ஊடாகவே இலங்கையில் அர்த்தமுள்ள நீதியையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தமுடியும். அதன்மூலமே கறைபடிந்த இந்தக் கறுப்புப் பக்கத்தைப் புரட்டமுடியும் என பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் எலியற் கோல்பேர்ன் அந்நாட்டு பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமின்றி இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் தடைகளை விதிக்காமை தொடர்பில் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ள எலியற் கோல்பேர்ன், தடைகளை விதிப்பதன் மூலம் பொறுப்புக்கூறல் சார்ந்த அழுத்தத்தை வழங்கவேண்டும் எனவும், இலங்கையுடனான உறவை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் எனவும் பிரிட்டன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே எலியற் கோல்பேர்ன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அங்கு அவர் மேலும் சுட்டிக்காட்டிய விடயங்கள் வருமாறு,

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் மிகக் கொடூரமான இரத்த வெள்ளத்துடனேயே யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 70,000 - 170,000 தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமலும், அவர்கள் உயிரிழந்திருப்பார்கள் என்ற எடுகோள் அடிப்படையிலான தீர்மானத்துடனும் இந்தக் கறைபடிந்த கதை இன்னமும் நிலைபெற்றிருக்கின்றது.

போர்க்குற்றங்களையும், மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்களையும், இனப்படுகொலையையும் அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்துவருவதானது இப்பழைய காயங்களிலிருந்து மீள்வதை நோக்கிய பாதையில் தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

இலங்கையில் தமிழர்களினதும், முஸ்லிம்கள் உள்ளிட்ட ஏனைய சிறுபான்மையின சமூகங்களினதும் நிலை மிக மோசமானதாகக் காணப்படுகின்றது.

தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு, மனித உரிமை மீறல்கள் மற்றும் தீவிர இராணுவமயமாக்கல் என்பன தொடர்கின்றன. பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதிலும், நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்வதிலும் இலங்கை அடைந்திருக்கும் தோல்வி, அங்கு நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை இலக்காகக்கொண்ட எதிர்பார்ப்புக்களை மழுங்கடித்துள்ளன.

இலங்கையின் இனமோதலுக்கு மிகமுக்கிய காரணங்களாக அமைந்த பல தசாப்தகால செயற்திறனற்ற ஆட்சி நிர்வாகமும், தேசியவாத அரசின் கொள்கைகளும் தற்போதும் தொடர்வதுடன், அவை அண்மையகால அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கும் வழிகோலியுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கையைப் பொறுப்புக்கூறச்செய்யவேண்டும்.

ஏனெனில் செயற்திறன்மிக்க சர்வதேச விசாரணைப்பொறிமுறை மற்றும் தண்டனை அளித்தல் ஊடாகவே இலங்கையில் அர்த்தமுள்ள நீதியையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தமுடியும். அதன்மூலமே கறைபடிந்த இக்கறுப்புப் பக்கத்தைப் புரட்டமுடியும்.

கடந்த சில வருடங்களாக மாவீரர் தினத்தன்று வட, கிழக்குவாழ் மக்கள் யுத்தத்தில் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவுகூரும்போது, அதற்குப் பல்வேறு வழிகளிலும் தடையேற்படுத்தப்படல், மாவீரர்தின நிகழ்வுகளில் பங்கேற்றோருக்கு எதிராகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்படல் என்பன தொடர்கின்றன.

குறிப்பாக தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரை இலக்குவைத்துப் பிரயோகிக்கப்படுகின்ற மிகமோசமான தன்மையைக்கொண்ட பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழிப்பதற்கு பிரிட்டன் அரசாங்கம் வலுவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோன்று இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக உலகளாவிய ரீதியில் பாரிய இராணுப்படையணியைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றான இலங்கை அதன் 20 இராணுவப்பிரிவுகளில் 18 பிரிவுகளை வட, கிழக்கு மாகாணங்களிலும், அவற்றில் 14 ஐ தனியாக வடக்கிலும் நிலைநிறுத்தியுள்ளது.

இராணுவமயமாக்கலை குறைத்திருப்பதாகவும், நீக்கியிருப்பதாகவும் அண்மையகாலங்களில் கூறப்பட்டாலும், நடைமுறையில் அது தென்படவில்லை. எனவே இவ்விடயத்தில் பிரிட்டன் அரசாங்கம் அதன் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கவேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாக உத்தரவாதமளித்து, தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தாலும், அம்முயற்சிகளில் பலனேதுமில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. தமிழ் சமூகம் அர்த்துமுள்ள நடவடிக்கைகளுக்காகக் காத்திருக்கின்றார்களே தவிர, அவர்களுக்கு வெறும் வார்த்தைகள் தேவையில்லை.

தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பாதுகாக்கப்படல், தண்டனைகளிலிருந்து விடுவிக்கப்படல் மற்றும் உயர் இராஜதந்திரப்பதவிகளுக்கு நியமிக்கப்படல் என்பன இன்னமும் தொடர்கின்றன. இவை இலங்கையின் நீதிக்கட்டமைப்பில் நிலவும் குறைபாட்டையும், தண்டனை விலக்கீட்டை அரச நிர்வாகம் பொறுத்துக்கொள்வதையும் காண்பிக்கின்றன.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை. அதற்குரிய பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்ற போதிலும், பிரிட்டனின் மக்னிற்ஸ்கி சட்டத்தின்கீழ் எந்தவொரு குற்றவாளிக்கு எதிராகவும் தடைகள் விதிக்கப்படவில்லை.

கனடா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகவும், அமெரிக்கா ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராகவும் தடைகளை விதித்திருக்கும் நிலையில், இவ்விடயத்தில் பிரிட்டன் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்காமை அவற்றுக்கு முற்றிலும் முரணானதாக அமைந்திருக்கின்றது.

எனவே இவ்விடயத்தில் பிரிட்டன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கையுடனான பிரிட்டனின் உறவு மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டுமென நான் கருதுகின்றேன்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை இலங்கை அதன் பாதுகாப்புப்படையிலிருந்து விலக்கும் வரை அந்நாட்டுடனான இராணுவ ஒத்துழைப்புக்களை பிரிட்டன் இடைநிறுத்தவேண்டும்.

அதுமாத்திரமன்றி அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானோருக்கு பிரிட்டன் இராஜதந்திர உள்நுழைவு அனுமதியையோ அல்லது இராஜதந்திர பதவிகளை வகிப்பதற்கான அனுமதியையோ வழங்கக்கூடாது. இலங்கையின் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளையும் மறுசீரமைப்புக்களையும் மேற்கொள்வதற்கான அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு தடைகளை விதிப்பதென்பது சிறந்த கருவியாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.virakesari.lk/article/179361

சிங்கள பௌத்தர்களின் பொறுமை கோழைத்தனமல்ல - சரத் வீரசேகர

4 weeks ago
21 MAR, 2024 | 08:15 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

வடக்கு, கிழக்கில் பௌத்த மரபுரிமைகளை அழித்து அதன் மீது பிற மத அடையாளங்களை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம். இது சிங்கள பௌத்த நாடு என்பதால் தான் தமிழ் பிரதிநிதிகள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 1987 ஆம் ஆண்டு  13 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களித்து நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் செயற்பாட்டுக்கு  ஒத்துழைப்பு வழங்கினார்.ஆகவே சபாநாயகரை நாங்கள் பாதுகாப்போம்.

அரசியலமைப்பு  பேரவையின் செயற்பாடுகள் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையின் இரண்டு உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டம் மற்றும் ஒழுங்கை  செயற்படுத்தும் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தால் வழங்கப்படவில்லை.

19 ஆவது திருத்தத்தில் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியால் பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் பாரிய இழுபறி நிலை ஏற்பட்டது. இந்த நிலைமைக்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும்.

வெடுக்குநாறி மலை விவகாரத்தை குறிப்பிட்டுக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள்  பாராளுமன்றத்தில் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தெற்கில் உள்ள மத சுதந்திரம் வடக்குக்கும் வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார்.

வடக்கில் மத சுதந்திரம் உள்ளதா? என்பதை முதலில் ஆராய வேண்டும். வெடுக்குநாறி மலையில் பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் பொதிந்துள்ளன. வெடுக்குநாறி மலையில் இருந்த  பழமையான பௌத்த தூபி இடித்தழிக்கப்பட்டு அதன் மீது  சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையில் உள்ள கோயிலை இடித்து பௌத்த வழிபாடுகளில் ஈடுபட முடியுமா? ஆகவே தெரியாத விடயங்களை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசக் கூடாது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ்  பிரதிநிதிகள் தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் பேசி பிரச்சினைகளை தூண்டி விடுகிறார்கள். பின்னர் கொழும்புக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மீண்டும் வடக்கு  மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு செல்கிறார்கள்.

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் தான் இவர்கள் இவ்வாறு சுதந்திரமாக வாழ்கிறார்கள். பௌத்த தொல்பொருள் மரபுரிகளை அழித்து அதன் மீது பிற மத அடையாளங்களை காட்சிப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம் என்றார்.

https://www.virakesari.lk/article/179337

வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு அமெரிக்க, கனடிய பல்கலைக்கழக அனுமதி தொடர்பான நிகழ்வு - உடனடி அனுமதி கொடுக்கப்படும்.

4 weeks ago

வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு அமெரிக்க, கனடிய பல்கலைக்கழக அனுமதி தொடர்பான நிகழ்வு - உடனடி அனுமதி கொடுக்கப்படும்.

வழக்கமாக கொழும்பில் நடாத்தப்படும் இவ்வாறான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான கருத்தரங்கு / நிகழ்வுக்கு வடக்கு கிழக்கை சார்ந்த மாணவர்கள் சமூகமளிப்பது குறைவு என்பதால், இம்முறை நேரடியாக யாழ்ப்பாணத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளனர். சரியான தகமைகள் உள்ளவர்களுக்கு உடனடியாகவே அனுதிக்குரிய உறுதிப்பத்திரம் கொடுப்பார்களாம்.

ஆங்கிலத்தில் இருக்கும் இச் செய்தியை அப்படியே இங்கு போடுவதன் காரணம் ஊரில் உள்ள தகமைகள் கொண்ட உங்களுக்கு தெரிந்த மாணவர்கள் இருப்பின், அவர்களுக்கு தெரியப்படுத்த வசதியாக இருக்கும் என்பதால். முடிந்தால், அப்படியானவர்களுக்கு அறியத் தாருங்கள்.

----------------------

Students in North, East to get Spot Admissions to study in UK, Canada & Germany

Colombo, March 21 (Daily Mirror) - The International Centre for Foreign Studies (ICFS) is set to host a special spot admissions program for students, especially in the North and East provinces, who aspire to pursue higher education opportunities in countries such as Canada, the United Kingdom and Germany for the upcoming September 2024 intake.

Chathurika Dissanayake, the CEO of ICFS Education Center said they plan to host a special two-day program called 'Project Education Yalpanan' on March 30 and 31 at the Jetwing Hotel in Jaffna, free of charge.

"There have been many overseas university representatives coming to Colombo, and there are numerous education events and exhibitions happening in and around Colombo. However, these types of events often do not reach Jaffna. We understand that there are many talented, qualified students in Jaffna who are capable of seeking these overseas opportunities," she said.

The Spot Admissions program allows students to participate in a specialized event where they can secure their offer letters within 30 to 40 minutes.

"We have joined hands with York St John University in the UK, and we will be accompanied by the country manager, Mrs. Bhagya Perera on both days. Students seeking study opportunities in the UK can visit us on March 30 and 31 in Jaffna and leave with an offer letter in hand," Dissanayake said.

"Getting an offer letter from a university is usually a lengthy process, taking weeks or even months. However, during the program, we have arranged for students to receive an offer letter from York St. John University within a few minutes. All students need to do is bring their documents, including passport, academic records and service letters, to ensure they leave with an offer letter for the upcoming intake," she explained.

She said Canada is also a preferred destination for many students in the North and East due to family ties. "ICFS is delighted to introduce a loan opportunity for postgraduate students in Jaffna for the first time," she said.

"We are introducing a loan facility that covers the full cost of studies in Canada. This makes studying in Canada achievable without making it just a dream. The assessment for the loan will be based purely on academic criteria and employability after graduation. No guarantors or properties are required for security; it is purely based on academic achievements," the CEO said.

ICFS has also identified Germany as a preferred destination for students. "Germany offers scholarships for students with higher academic achievements. Even for university courses in Germany, students can make a minimum payment of 3000 euros and pay the balance in installments. We will have an information session dedicated to Germany as well," added Dissanayake.

"All students interested in studying in Germany, whether undergraduate or postgraduate, can meet us at Jetwing Jaffna on March 30 and 31 from 9 a.m. onwards," she said.

She said that ICFS is committed to bringing more opportunities to the North and East under the education initiative 'Yalpanam.'

https://www.dailymirror.lk/breaking-news/Students-in-North-East-to-get-Spot-Admissions-to-study-in-UK-Canada-Germany/108-279327

 

சிறுவர்களின் பசியைப் போக்க 'Enough' திட்டத்தை அறிமுகப்படுத்தியது வேல்ட் விஷன் அமைப்பு

4 weeks ago
21 MAR, 2024 | 02:59 PM
image

(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மந்தபோசணையினால் பாதிப்புற்றிருக்கும் நிலையில், அவர்களின் பசியைத் தீர்க்கும் நோக்கில் வேல்ட் விஷன் அமைப்பினால் 'Enough' (போதும்) எனும் மகுடத்திலான புதிய செயற்றிட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

_DSC0606.JPG

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாளாந்தம் பசியுடன் இருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துவருவதனால் அதனை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில் வேல்ட் விஷன் அமைப்பானது அரசாங்கம் மற்றும் ஏனைய தன்னார்வ கட்டமைப்புக்களுடன் இணைந்து 'Enough' (போதும்) எனும் மகுடத்திலான புதிய செயற்றிட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

_DSC0685.JPG

இச்செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

அதன்படி எந்தவொரு நெருக்கடி நிலையின்போதும் சிறுவர்களே வெகுவாகப் பாதிக்கப்படுவதாகவும், அண்மைய காலங்களில் மோதல்கள், காலநிலை மாற்றம், கொவிட் - 19 பெருந்தொற்றுக்குப் பின்னரான பொருளாதாரம் போன்ற காரணிகள் பசியுடன் வாழும் சிறுவர்களின் எண்ணிக்கையில் மிகையான அதிகரிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் வேல்ட் விஷன் அமைப்பு தெரிவித்துள்ளது.

_DSC0705.JPG

இந்நிலையில், 'Enough' செயற்றிட்டமானது சிறுவர்களின் பசியைத் தீர்ப்பதற்கு உலகளாவிய ரீதியிலுள்ள தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் ஆதரவைத் திரட்டுவதைப் பிரதான நோக்காகக் கொண்டிருப்பதாகவும், தற்போதைய சூழ்நிலையில் நிலையான உணவு உற்பத்தி மற்றும் அதனை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்கான தீர்வு என்பன அவசியமாக இருப்பதாகவும் வேல்ட் விஷன் அமைப்பின் தெற்காசிய மற்றும் பசுபிக் பிராந்திய தலைவர் செரியன் தோமஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று சிறுவர்களின் பசியைத் தீர்ப்பதற்கு அப்பால், வறுமை மற்றும் பசியின் பிடியிலிருந்து சமூகங்களை மீட்டெடுத்தல், ஊட்டச்சத்து குறைபாட்டுக்கான பிரதான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்தல், கொள்கைகள், கல்வி முறைமை, சுகாதாரம் மற்றும் உணவு தயாரிப்பு செயன்முறை போன்றவற்றில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தல் என்பனவும் 'Enough' செயற்றிட்டத்தின் நோக்கங்களாகக் காணப்படுகின்றன.

_DSC0668.JPG

'பசியை முடிவுக்குக் கொண்டுவருவதை இலக்காகக் கொண்டு நாம் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம். இருப்பினும் நாமனைவரும் ஒன்றிணைந்து மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். 

இப்போது பசி என்பது ஒரு குழந்தையின் பெயர். ஒரு குழந்தையின் முகம். நாமனைவரும் இணைந்து எந்தவொரு சிறுவரும் புறக்கணிக்கப்படாமல், அவர்கள் ஆரோக்கியமாக வளர்வதற்கான மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாக அவர்கள் கல்வி பயில்வதற்கும், விளையாடுவதற்கும், ஆராய்வதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கும், முழுத்திறனையும் அடைவதற்கும் பங்களிப்புச் செய்யமுடியும்' என வேல்ட் விஷன் லங்கா அமைப்பின் தேசிய பணிப்பாளர் கலாநிதி தனன் சேனாதிராஜா அறைகூவல் விடுத்துள்ளார். 

_DSC0674.JPG

_DSC0720.JPG

_DSC0690.JPG

படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்

https://www.virakesari.lk/article/179327

"தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை" எனும் செய்தியுடன் ஜனாதிபதி யாழ் வர வேண்டும் - குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்

4 weeks ago

Published By: DIGITAL DESK 3   21 MAR, 2024 | 04:50 PM

image

"தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை" எனும் செய்தியுடன் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தர வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் கோரியுள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க வருகை தரவுள்ள நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் குரலற்றவர்களின் குரல் அமைப்பாளர் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு கோரிக்கை விடுத்தார். 

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி யாழில். கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 278 ஏக்கர் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கவுள்ளார். இதனை நாம் வரவேற்கிறோம். 

தமிழர் பிரச்சனைகளில் அவசரமாகவும் , அவசியமாகவும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளாக , காணி விடுவிப்பு , தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை உள்ளிட்டவை உள்ளன. 

காணி விடுவிப்பு நடவடிக்கைகளை நாம் வரவேற்கும் அதே நேரம் , தொல்லியல் திணைக்களம் , வனவள திணைக்களங்கள் ஊடாக தமிழ் மக்களின் காணிகளை மீள கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் கண்டிக்கிறோம். 

அதேவேளை கடந்த 29 ஆண்டு காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் 12 பேரையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 

கடந்த 29 ஆண்டுகாலமாக சிறைகளில் கொடூர தண்டனைகளை அனுபவித்து வரும் 12 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்து , அவர்களை தமது உறவுகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும். 

மிக முக்கியமாக அவர்களை உயிருடன் மீள உறவுகளிடம் கையளிக்க வேண்டும். அண்மையில் கூட இந்திய சிறையில் இருந்து விடுதலையான சாந்தன் அண்ணா இலங்கைக்கு உயிருடன் மீள வரவில்லை. அரசியல் கைதிகளை உயிருடன் உறவுகளிடம் ஒப்படைக்க வேண்டும். 

அதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்திருந்த போது சத்திய லீலா எனும் தமிழ் அரசியல் கைதிக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைவு என மேன் முறையீடு செய்யப்பட்டு, மேன் முறையீட்டு விசாரணைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட வேண்டும் என கோரி இருந்தோம். அவ்வேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் உடன் இருந்தார். 

தாம் அது தொடர்பில் கவனத்தில் எடுப்பதாகவும் , அமைச்சர் தான் அவரை மன்னித்து விட்டதாகவும் கூறி இருந்தார். எனவே சத்திய லீலாவிற்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என கோருகிறோம் . 

யாழ் வரும் ஜனாதிபதி அரசியல் கைதிகள் விடுதலை எனும் நல்ல செய்தியுடன் வருவார் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/179357

வெடுக்குநாறிமலையில் கோயில்கள் ஏதும் இல்லை : பௌத்த மரபுரிமைகளை மீறினால் கைதுகள் இடம்பெறும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

4 weeks ago
21 MAR, 2024 | 05:39 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)  

வெடுக்குநாறி மலையில் கோயில்கள் ஏதும் கிடையாது, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமை இடங்களில் முறையற்ற வகையில் செயற்படுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு வாக்குகளை எதிர்பார்த்து ஒருதலைப்பட்சமாக கருத்துரைப்பதை எதிர்க்கட்சிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நிகழ்நிலை காப்புச் சட்ட வரைபு 2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. நிகழ்நிலைகளில் இடம்பெறும் வன்முறை மற்றும் மோசடிகளை கருத்திற் கொண்டு இச்சட்டம் விரைவாக இயற்றப்பட்டது.

உயர்நீதிமன்றத்தின் திருத்தங்களுடன் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதை சட்டமா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் பின்னரும் ஏன் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பதை அறியமுடியவில்லை.

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்குமாறு ஜனாதிபதி பரிந்துரைத்த போது அரசியலமைப்பு பேரவையின் 5 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினார்கள்.

பதில் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் 'யுக்திய' நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது ஒரு தரப்பினர் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றார்கள்.

அரசியலமைப்பின் பிரகாரம் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பு பேரவையின் இரு உறுப்பினர்கள் பொலிஸ்மா அதிபர் நியமனம் மீதான வாக்கெடுப்புக்கு கோரப்பட்ட வாக்களிப்பை புறக்கணித்தமை  அரசியல் சூழ்ச்சி என்றே கருதுகிறேன்.

இந்த விவாதத்தில்  வெடுக்குநாறிமலை பற்றி பேசப்பட்டது. கோயிலுக்கு சென்றவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. வெடுக்குநாறி மலையில் எந்த கோயில்களும் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறேன். இந்த மலையை தொல்பொருள் திணைக்களம் அநுராதபுர யுகத்துக்கு சொந்தமான தொல்பொருள் மரபுரிமைகள் உள்ள பகுதியாக அடையாளப்படுத்தியுள்ளது.

பௌத்த மத மரபுரிமைகள் உள்ள  பகுதியில் பிறிதொரு தரப்பினர் தமது மத வழிபாடுகளை முன்னெடுக்கும் போது முரண்பாடுகளே தோற்றம் பெறும்.

2023 ஆம் ஆண்டு  இந்த மலையில் சட்டவிரோதமான முறையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததும் பிரச்சினைகள் தோற்றம் பெற்றன.

மார்ச் 04 ஆம் திகதி மதிமுகராசா என்ற பூசகர் வெடுக்குநாறி மலையில் பூஜை வழிபாட்டில் ஈடுபட வவுனியா நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளார்.

இந்த கோரிக்கையை நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில் மார்ச் 08 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று  400 பேர் வரை இந்த மலைக்கு சென்றுள்ளார்கள். மாலை 06 மணி வரை மலையில் இருக்க முடியும், 06 மணிக்கு பின்னர் அங்கு எவரும் இருக்க முடியாது  என்று குறிப்பிட்டிருந்த நிலையில் சுமார் 40 பேர் இரவு 08 மணிவரை அங்கு இருந்துள்ளார்கள்.

வெடுக்குநாறிமாலையில் இரவு 08 மணிவரை தங்யிருந்தவர்கள் அடுப்பு பற்ற வைத்து சட்டவிரோதமான முறையில் செயற்பட முற்படுகையில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் பின்னரே 08 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

பௌத்த மரபுரிமைகள் உள்ள இடங்களுக்கு சென்று முறையற்ற வகையில் செயற்பட்டால் பிரச்சினைகளே தீவிரமடையும்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

சட்டவிரோதமான முறையில் எவர் செயற்பட்டாலும் கைதுகள் இடம்பெறும். இந்து கோயில்களுக்கு சென்று பிற மதத்தவர்கள் முறையற்ற வகையில் செயற்பட்டால் அவர்களையும் நாங்கள் கைது செய்வோம். ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வாக்குகளை எதிர்பார்த்து ஒருதலைபட்சமாக கருத்து தெரிவிப்பதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/179363

இலங்கை: மதசுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது - பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் அமைச்சர் கவலை

4 weeks ago
வவுனியா வெடுக்குநாறிமலை சம்பவம் - மதசுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது - பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் அமைச்சர் கவலை - மட்டக்களப்பு மயிலத்தமடு நிலவரம் குறித்தும் கவலை

Published By: RAJEEBAN   21 MAR, 2024 | 05:45 PM

image

வவுனியாவில் சமீபத்தில் இந்து ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவம் மத மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் உள்ளுர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அச்றுத்தும் வகையில் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களில்  அரசாங்கத்தின் அனுசரணையுடன் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில்இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தி;ற்கு பதிலளித்து உரையாற்றிய பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் அன்ரூ மிட்ச்செல் இதனை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்துவதை இலங்கை அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரிட்டன் புதிய இலங்கை தனது சர்வதேச கடப்பாடுகளிற்கு ஏற்ப புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது

 

பிரிட்டனின் அமைச்சர் அன்ரூ மிட்ச்செல மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையின் மனித உரிமை நிலவரம் என்பது பிரிட்டனின் முன்னுரிமைக்குரிய விடயம் அங்கு காணப்படும் நிலைமையை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.

மனித உரிமை விடயங்களில் இலங்கை பிரிட்டனின் முன்னுரிமைக்குரிய நாடு என்பது அங்கு காணப்படும் பல்வேறுபட்ட மனித உரிமை விடயங்கள் குறித்த எங்களின் கரிசனைகளை பிரதிபலிக்கின்றது.

இலங்கையில் சிவில் சமூகத்தினர் தொடர்ந்தும் துன்புறுத்தல்களை அச்சுறுத்தல்களை கண்காணிப்பினை எதிர்கொள்கின்றனர்.

சிவில்தளத்தினை மிகவும் கட்டுப்படுத்துவதை நோக்கி போக்கு குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்,குறிப்பாக கருத்துசுதந்திரத்தை ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம்.

ஐசிசிபிர் அல்லது பயங்கரவாத தடைச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்.மிகவும் கொடுரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி விட்டு இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளின் அடிப்படையிலான சட்டத்தை  கொண்டுவரவேண்டும் என நாங்கள் தொடர்ந்தும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை   பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கவேண்டும்  

 

இலங்கைஅரசாங்கம் சமீபத்தில் நிறைவேற்றிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்,அது இணையவழி தொடர்பாடலை குறிப்பிடத்தக்க அளவிற்கு   கட்டுப்படுத்தக்கூடிய பலவகையான கருத்துவெளிப்பாடுகளை குற்றமாக்ககூடியதாக காணப்படுகின்றது.

அரசசாபற்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை ஒழுங்குபடு;த்துவதை வலுப்படுத்தும் யோசனைகள் ஒலிபரப்பு ஊடக உத்தேச சட்டமூலங்கள் என்பன சிவில் தளத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

மனித உரிமை குறித்த தடைகள் குறித்த விடயங்களை நாங்கள் ஆராய்;ந்துவருகின்றோம்,ஆனால் நாங்கள்அவற்றை முன்கூட்டியே விவாதிக்கவில்லை,மேலும் நாடாளுமன்றத்திலும் இது குறித்த எங்களின் சிந்தனைகள் குறித்து விவாதிக்கமாட்டோம்

நல்லிணக்கத்திற்கான அடிப்படைகளாக நாங்கள் வெளிப்படைதன்மையையும் பொறுப்புக்கூறலையும் கருதுகின்றது.

இலங்கைஅரசாங்கம் பங்குதாரர்களுடன் முழுமையான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளிற்கு அமைய சட்டங்களை உருவாக்கவேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் முஸ்லீம்கள் உட்பட பல சமூகத்தினர் அரசஅதிகாரிகளால் ஒதுக்கப்படுதலை எதிர்கொள்கின்றனர் என்பதை இந்த சபை டிசம்பரில் ஏற்றுக்கொண்டிருந்தது.

இது நிலங்கள் தொடர்பான பதற்றங்களை அதிகரித்துள்ளது இது சிலவேளைகளில் மதவழிபாட்டுத்தலங்கள் தொடர்பானதாக காணப்படுகின்றது.

சமீபத்தில் வவுனியாவில் இடம்பெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டலாம்.

இவ்வாறான சம்பவங்கள் நடவடிக்கைகள் மத சுதந்;திரத்தின் நம்பிக்கை மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மட்டக்களப்பில் உள்ளுர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அச்றுத்தும் வகையில் பாரம்பரிய மேய்;ச்சல் நிலங்களில்  அரசாங்கத்தின் அனுசரணையுடன் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிகழ்வுகள் இனவாதபதற்றங்கள் மற்றும் இலங்கையின்  வடக்குகிழக்கில் உள்ள தமிழர் பாரம்பரிய நிலங்களில் இருந்து கட்டாய இடம்பெயர்வுகள் குறித்த பதற்றத்தை உருவாக்கியுள்ளன.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் நினைவுகூரலில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சம்பவங்களும் உள்ளன.

https://www.virakesari.lk/article/179362

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

4 weeks ago

Published By: DIGITAL DESK 3   21 MAR, 2024 | 04:31 PM

image

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, வைரபுளியங்குளம், புகையிரதநிலைய வீதியில் இன்று புதன்கிழமை (21) மதியம் இவ் விபத்து இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரப் பகுதியில் புகையிரத நிலைய வீதி ஊடாக சென்ற முச்சக்கரண்டி கதிரேசு வீதியில் திரும்ப முற்பட்ட வேளையில் வைரவபுளியங்குளத்தில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.  

விபத்தில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கிள் சாரதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், குறித்த விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

IMG-20240321-WA0120.jpg

IMG-20240321-WA0111.jpg

https://www.virakesari.lk/article/179351

யாழில் அரிசியை கொள்வனவு செய்து மோசடியில் ஈடுபட்ட காலியை சேர்ந்தவர் கைது

4 weeks ago

Published By: DIGITAL DESK 3   21 MAR, 2024 | 04:06 PM

image

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல அரிசி ஆலை ஒன்றில், 50 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அரிசி மூடைகளை கொள்வனவு செய்து விட்டு, பணத்தினை வழங்காது மோசடி செய்த குற்றச்சாட்டில் காலியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழில் உள்ள பிரபல அரிசி ஆலை ஒன்றில் 25 கிலோ எடையுள்ள ஆயிரத்து 200 அரிசி மூடைகளை காலியில் உள்ள மொத்த விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளார். 

விற்பனையாளருக்கும், கொள்வனவாளருக்கும் இடையில் இடைத்தரகராக ஒருவர் செயற்பட்டுள்ளார். 

அரிசி மூடைகளை யாழில் இருந்து, காலி பகுதியில் உள்ள மொத்த விற்பனை நிலையத்திற்கு லொறியில் சென்று கொடுத்த யாழை சேர்ந்தவர்கள் அரிசி மூடைக்கான பணத்தினை தருமாறு கோரிய போது, பணத்தினை தாம் இடை தராகரிடம் வழங்கி விட்டதாக கூறியுள்ளனர். 

ஆனால் அந்த பணம் விற்பனையாளரிடம் வந்து சேராமையால், அவர் அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் காலியில் அரிசியை கொள்வனவு செய்தவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, தான் யாழ்ப்பாணத்தில் யாரிடமும் அரிசியை கொள்வனவு செய்யவில்லை என பதில் அளித்துள்ளார். 

பொலிஸார் களஞ்சிய அறையை சோதனைக்கு உட்படுத்திய போது, யாழ்ப்பாண அரிசி ஆலையின் பெயர் பொறிக்கப்பட்ட அரிசி மூடைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. 

அரிசி மூடைகளை மீட்ட பொலிஸார் அவற்றை யாழ்ப்பாணத்திற்கு எடுத்து சென்றதுடன், உரிமையாளரையும் கைது செய்து யாழ்ப்பாணம் அழைத்து வந்து, யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். 

நீதிமன்ற விசாரணைகளை அடுத்து அரிசியை கொள்வனவு செய்தவரை பிணையில் செல்ல அனுமதித்த மன்று, மீட்கப்பட்ட அரிசி மூடைகளை விற்பனை செய்த நபரிடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

https://www.virakesari.lk/article/179346

தமிழ் சிங்கள புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும்!

4 weeks ago
ranil-3.jpg

இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி விரைவில் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இவற்றுக்குத் தேவையான சட்டத்தை ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், அரசாங்கத்தின் நிதி நிர்வாகம் தொடர்பிலான புதிய சட்டமூலமும் அதனுடன் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

கேகாலை மங்கெதர டெம்பிடி புராதன பிரிவெனா விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட தங்க வேலியை நேற்று (20) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடி விரைவில் அந்த பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். 2022 ஆண்டில் இலங்கை வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து, சர்வதேச நிதி நிறுவனங்களும், வங்கிகளும் இலங்கைக்கு கடன் வழங்குவதை நிறுத்தின. அதனால் முதலில் அந்த தடையை நீக்கிக்கொள்ள, நாம் கடனை மீளச் செலுத்தும் வல்லமையுள்ள நாடு என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொருளாதார நெருக்கடியிருந்து நாட்டை மீட்பதற்காக ஒரு வருடத்திற்குள் தீர்மானமிக்க பணிகளை ஆற்றியுள்ளோம். இதேநிலை தொடரும் பட்சத்தில் இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் நாட்டின் கஷ்டங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இது கடுமையான பணி என்ற போதிலும், மிகக் குறுகிய காலத்தில் அவற்றை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்.

அதற்குரிய பேச்சுவார்த்தைகளை இந்த வாரத்திற்குள் முழுமையாக நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளோம். அதன் பின்னர் கடன் வழங்கிய நாடுகளுடன் இணைந்து பிரான்ஸ், ஜப்பான், இந்தியா ஆகியவற்றின் பங்கேற்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம்.

அதேபோல் இலங்கை சார்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பணிக்குழு, சர்வதேச நாணய நிதிய பணிக்குழுவுடன் அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளது. அதேபோல் சீனாவுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம். மேலும் தனியார் கடன் வழங்குனர்களுடனும் பேச்சுக்களை முன்னெடுத்து வருகிறோம். நிதி அமைச்சின் செயலாளரும் மத்திய வங்கி ஆளுநரும் மீண்டும் ஐரோப்பாவிற்குச் சென்று மேற்படி குழுவினருடன் கலந்துரையாடவுள்ளனர்.

அதன்படி வங்குரோத்து நிலையிலிருந்து நாடு விடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னர், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணை பேச்சுவார்த்தையொன்றை ஏப்ரல் மாதமளவில் முன்னெடுக்கவுள்ளோம். அதன் பின்னர் அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தில் விரைவில் கைசாத்திட எதிர்பார்க்கிறோம்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஜூன், ஜூலை மாதங்களுக்குள் நிறைவடையும். எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னதாகவே இந்த செயற்பாடுகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் உலக அரங்கில் கடனை மீளச் செலுத்தக்கூடிய நாடு என்ற உறுதியைப் பெற்றுக்கொள்வோம். இதுவரைக் காலமும் தடைப்பட்டிருந்த நிதி உதவிகள் நாட்டிற்கு கிடைக்க ஆரம்பித்த பின்னர் நாட்டின் டொலர் கையிருப்பு அதிகரிக்கும்.

தற்போதும், பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் எம்முடன் வணிகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதைத் தவிர்த்து வருகின்றன. மேற்கூறிய செயற்பாடுகளை நிறைவு செய்யும் பட்டசத்தில் அவர்களின் ஒத்துழைப்பு மீளக் கிடைக்கும். அதனால் எமது நாணயக் கையிருப்பும் அதிகரிக்கும்.

நாம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை கடந்து வந்த போது அதிலிருந்து மீள்வதற்கு கடினமான பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த நிலையிலிருந்து மீண்டு நிவாரணங்களை வழங்கக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.

தற்போதும் ரூபாவின் பெறுமதி வலுவடைந்திருக்கும் நிலையில் ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபாவரை வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பொருட்களின் விலை குறைவடையும். அடுத்த வருடத்தில் ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடையுமென எதிர்பார்க்கிறோம்.

நாங்கள் அனைவரும் மிகவும் கடினமான காலகட்டத்தைக் கடந்து வந்துள்ளோம். இந்த நிலையில் இருந்து வெளிவர பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது ஓரளவு நிவாரணம் வழங்கக்கூடிய நிலையை அடைந்துள்ளோம்.

இந்த தமிழ் சிங்கள புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும். அத்துடன் அஸ்வெசம வேலைத்திட்டத்தின் மூலம் சமுர்தித் திட்டத்தைப் போன்று மூன்று மடங்கு நன்மைகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கை பதினெட்டு இலட்சத்தில் இருந்து இருபத்தி நான்கு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இப்படிப் பார்க்கும் போது, சிறந்த பொருளாதார நிலை இருந்தபோது கொடுத்த நிவாரணத்தை விட,வங்குரோத்தடைந்த நாடாக மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம், மூன்று மடங்கு அதிகம் என்பது தெளிவாகிறது. இந்த அனைத்து நடவடிக்கைகளின் இறுதி நன்மை நாட்டின் பொருளாதாரத்திற்கே கிடைக்கிறது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி பயன்படுத்தப்படவில்லை. இப்போது நாம் அந்தத் தொகையையும் வழங்கியுள்ளதோடு அதுவும் இறுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் சேரும்.

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குப் பிறகு நாம் மேலும் முன்னேற வாய்ப்புகள் உள்ளன.நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதால் மட்டும் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடாது. ஏனெனில் இன்று நாம் இறக்குமதி சார்ந்த பொருளாதாரமாக மாறியுள்ளோம். நம் நாட்டில் இறக்குமதியை விட ஏற்றுமதி குறைவாக உள்ளது. இந்த இடைவெளியைக் குறைக்க வெளிநாடுகளிடம் கடன்களைப் பெறுகிறோம். இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 10 வருடங்களில் மீண்டும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது.

எனவே இந்நிலைமையைத் தவிர்க்க உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பனவற்றுடன் கலந்துரையாடி நாட்டை ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிப்போம். அதன் ஆரம்ப நடவடிக்கையாக விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் அது வெற்றியடைய இன்னும் 06, 07 வருடங்கள் செல்லும்.

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கி ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றும் நடவடிக்கையை சட்டத்தின் ஊடாகவும் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அரசாங்கத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளதுடன், இந்தப் புதிய சட்டங்களின் ஊடாக பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர முடியும்.

கடந்த பொருளாதார நெருக்கடியினால் நாட்டின் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டனர். அப்படியானால், வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் பலன்கள் ஒரு சிலருக்கு மட்டுமல்ல, அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என  ஜனாதிபதி தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/296556

மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட 'A', 'B' வலயங்களில் துரித அபிவிருத்தி! - மறைந்த காமினி திசாநாயக்கவின் 82ஆவது ஜனன தின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

4 weeks ago
21 MAR, 2024 | 12:53 PM
image
 

நாட்டை நவீன விவசாயப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் பயணத்தின்போது, மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏ, பி வலயங்களை  விரைவாக அபிவிருத்தி செய்து அதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

இந்நாட்டின் நீர்ப்பாசன வரலாற்றில் தனித்துவமான மாற்றத்தை ஏற்படுத்திய, மகாவலி திட்டதை காமினி திசாநாயக்க செயற்படுத்தியிருக்காவிடின் இன்று நாடு அரிசியில் தன்னிறைவு அடைந்திருக்காதெனவும் நாட்டுக்கு அவசியமான மின்சாரத்தை பெற முடியாமல் போயிருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Gamini_Dissanayake__1_.JPG

மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் 82ஆவது ஜனன தின நிகழ்வில் நேற்று (20) கலந்துகொண்டிருந்தபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள காமினி திசாநாயக்கவின் சிலைக்கு முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

Gamini_Dissanayake__2_.JPG

காமினி திசாநாயக்கவின் கடந்த கால நினைவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அன்னாரின் அர்ப்பணிப்பு அனைவருக்கும் முன்னுதாரணமாகும் என்றும் கூறினார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காமினி திசாநாயக்கவின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

Gamini_Dissanayake__71_.JPG

சர்வமத வழிபாடுகளின் பின்னர் ஜனன தின நிகழ்வுகள் ஆரம்பமானதுடன், மல்வத்து பீடத்தின் களுத்துறை மாவட்ட பிரதம சங்க நாயக்கர், வாதுவ மொல்லிகொட தேகம்பத மகா விகாரை விகாராதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் தலைவருமான போபிட்டிய தம்மிஸ்ஸர நாயக்க தேரர் அனுசாசன உரை நிகழ்த்தினார்.

நாட்டுக்காக உயிர்நீத்த இராணுவ வீரர்கள், 1994 ஒக்டோபர் 23ஆம் திகதி காமினி திசாநாயக்கவுடன் தொடலங்க குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் தேசிய வீரர்கள், காமினி திசாநாயக்க மன்றத்தின் ஸ்தாபகர் மறைந்த சட்டத்தரணி ஸ்ரீமா திசாநாயக்க உள்ளிட்டவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

Gamini_Dissanayake__712_.JPG

நிகழ்வில் காமினி திசாநாயக்க மன்றத்தின் உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க வரவேற்புரை ஆற்றினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, காமினி திஸாநாயக்கவின் பாத்திரம் ஒரு அரசியல் முன்னுதாரணம் என்று குறிப்பிட்டார். மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் தான் அவர் பிரபலமடைந்ததாக சுட்டிக்காட்டிய கரு ஜயசூரிய, அவரின் சரியான முகாமைத்துவம் இலங்கையை துரிதமாக அபிவிருத்தி செய்ய உதவியது என்றும் குறிப்பிட்டார்.

Gamini_Dissanayake__3_.JPG

சப்ரகமுவ மாகாண ஆளுநரும் காமினி திஸாநாயக்க மன்றத்தின் தலைவருமான நவின் திஸாநாயக்க உரையாற்றுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் என்ற ரீதியில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதார முறை நாட்டுக்கு ஏற்றது என தனது தந்தை எப்போதும் கூறி வந்ததாக தெரிவித்தார். 

எதிர்காலத்திலும் நடுநிலையான வலதுசாரி இயக்கம் உருவாகும் என நம்புவதாக தெரிவித்த அவர், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவ்வாறானதொரு தலைவர் மக்களால் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, ராஜித சேனாரத்ன, வடிவேல் சுரேஷ், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சம்பிகா பிரேமதாச, ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய உட்பட பல அரசியல் பிரதிநிதிகள் மற்றும் காமினி திசாநாயக்கவின் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Gamini_Dissanayake__7_.JPG

Gamini_Dissanayake__4_.JPG

Gamini_Dissanayake__6_.JPG

https://www.virakesari.lk/article/179312

மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய திட்டம் வகுக்கப்படும்! - வேலு குமார்

4 weeks ago
21 MAR, 2024 | 11:24 AM
image

மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க, புதிய திட்டம் வகுக்கப்படவுள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தின் மலையக ஒன்றியத்தின் தலைவர், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

a981775b-be37-4a80-a5d1-00e5a61a4e56.jpg

இலங்கை பாராளுமன்றத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட மலையக ஒன்றியத்தின் முதலாவது கூட்டம், குழு அறை 8இல் நடைபெற்றது. அதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

8b2cdca5-1c63-468f-93f3-f0cbf9c46289.jpg

இக்கலந்துரையாடலுக்கு கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும், கொழும்பு, கண்டி, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள தமிழ் தேசிய பாடசாலைகளின் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர்.

12125b7f-d483-43d9-898f-f36104324538.jpg

இம்மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ் தேசிய பாடசாலைகளில் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வள குறைபாடுகள் பற்றி பேசப்பட்டது. இந்த பிரச்சினைகளுக்கான தீர்வினை கல்வி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்தனர்.

இந்த கலந்துரையாடலின்போது பொதுவாக அனைத்து பாடசாலைகளிலும் உயர்தர வகுப்புக்கான ஆசிரியர் பற்றாக்குறை வெளிப்படுத்தப்பட்டது. குறிப்பாக, கணித, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் இந்த நிலைமை மிக மோசமாக உள்ளது;  அதனை நிவர்த்தி செய்ய அவசியமான துறை சார்ந்த ஆசிரியர்கள் இல்லை என்பது தெரியவந்தது. 

45b6e6c7-7671-4331-8e62-8ce8208dbb74.jpg

இந்த சந்தர்ப்பத்தில் பிரச்சினைகளிலிருந்து இருந்து மீள்வதற்கு புதியதொரு திட்டத்தை வகுக்கவேண்டிய தேவையுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கமைய இந்திய அரசாங்கத்துக்கு ஆசிரியர் தேவை பற்றிய திட்டமொன்று தயார் செய்து முன்வைப்பதோடு அவர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், மலையக மக்கள் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், குறைந்தது முழுமையான வசதிகளை கொண்ட ஒரு தேசிய பாடசாலையாவது அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதையும், அதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியது மட்டுமன்றி, மலையக மக்கள் அதிகம் வாழ்கின்ற நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலையொன்று இல்லாமை பாரபட்சமானது என்பதையும் அவ்வேளை எடுத்துக்காட்டினார்.

729ed23c-20f0-412e-8ef5-c9c8e507b288.jpg

6bc88601-d7c4-4186-a8d7-e4e6633015cf.jpg

https://www.virakesari.lk/article/179303

”ரணிலின் முடிவு எதுவோ அதற்கு தயார்” - தேர்தல்கள் பற்றி மஹிந்த ராஜபக்ஷ

4 weeks ago
”ரணிலின் முடிவு எதுவோ அதற்கு தயார்”

ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன தயாராக உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (20) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மே தினம் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாக இருப்பினும் மேதின நிகழ்வு பாரியளவிலான மக்கள் தொகையுடன் நடத்தப்படும் எனவும், காலிமுகத்திடல் தமக்கு வழங்கப்படாது என்றபோதும், அதனை பூரணப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு தயார் என தெரிவித்த மஹிந்த, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும், போதுமான வேட்பாளர்கள் தங்களிடம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

http://www.samakalam.com/ரணிலின்-முடிவு-எதுவோ-அதற/

 

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!

4 weeks 1 day ago
20 MAR, 2024 | 04:40 PM
image

அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டது. 

இலங்கையில் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள கடல்சார் வள மற்றும் கடலோர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுத் திறன் மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கும், அவுஸ்திரேலிய அரசின் உதவிகள் வழங்கப்படக்கூடிய இடங்களை அடையாளம் காணும் வகையிலும், கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரத்துக்கான முதல் செயலாளர் கலாநிதி போல் செக்கோலா தலைமையிலான குழுவினரே கடந்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்துள்ளனர். 

1Q9A1491.jpg

இதன்போது, இக்குழுவினர் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையிலான குழுவை சந்தித்து கலந்துரையாடினர். 

இந்த சந்திப்பின்போது அவுஸ்திரேலிய அதிகாரிகள் குழுவில், தென்னாசிய மற்றும் இந்து சமுத்திரக் கடல் பிராந்தியப் பாதுகாப்புசார் விற்பன்னரும் அவுஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழக தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளருமான கலாநிதி டேவிற் பிரேஸ்டர், ரோயல் அவுஸ்திரேலிய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரியும், புதுதில்லியில் கடமையாற்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகருமான கப்டன் சைமன் பேட்மன், கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமெண்டா ஜோண்சன் மற்றும் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அத்தியட்சகர் வனேசா ரஃப் ஆகியோர் அடங்கினர். 

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சார்பில் கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் மற்றும் பொருளியல் துறைத் தலைவர் கலாநிதி (திருமதி) கே. கருணாநிதி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். 

தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகள் மற்றும் அவுஸ்திரேலிய அரசின் நலனோம்புத் திட்டங்கள் தொடர்பில் அவ்வேளை கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், சட்ட விரோத புலம்பெயர்வு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சமூக மட்டச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

1Q9A1489.jpg

1Q9A1481.jpg

1Q9A1495.jpg

1Q9A1493.jpg

https://www.virakesari.lk/article/179244

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் : ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

4 weeks 1 day ago
justis.jpg

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு ஜனாதிபதியை வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில், நீதவான் தர்சினி அண்ணாத்துரை முன்னிலையில் இந்த வழக்கு இன்று(20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

பிரதிவாதிகள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் உள்ளிட்டோர் மன்றில் இன்று ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு – செங்கலடிக்கு ஜனாதிபதி வருகை தந்த சந்தர்ப்பத்தில், மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக வழங்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/296468

நாணயத்தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

4 weeks 1 day ago

Published By: DIGITAL DESK 3   20 MAR, 2024 | 03:34 PM

image
 

நாட்டில் நாணயத்தாள்களை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆபரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை தயாரிப்பதற்கு நாணயத்தாள்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில்  சமூக ஊடகங்களில்  விளம்பரங்களை அவதானித்துள்ளதாக  இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

குற்றவாளிகள் என கண்டறியப்பட்டவர்களுக்கு 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. 

432058611_800473642114968_92001677228348

https://www.virakesari.lk/article/179228

வடக்கில் செப்டெம்பர் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் - யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர்

4 weeks 1 day ago
வடக்கில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் - யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர்

Published By: DIGITAL DESK 3   20 MAR, 2024 | 10:03 AM

image

எதிர்வரும் செப்டெம்பர்  மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக எதிர்வரும் ஏப்ரல், மே, ஜுன், மற்றும் ஜூலை மாதங்களில் வெப்பநிலை தற்போது உள்ளதை விடவும் உயர்வாக இருக்கும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் திங்கட்கிழமை சராசரி  வெப்பநிலை 31 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் நாளின் அதி கூடிய வெப்பநிலை (Maximum Temperature) 36 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. உணரக்கூடிய வெப்பநிலை (Feel Temperature) 34 பாகை செல்சியஸ் ஆக இருந்துள்ளது. 

இந்த நிலைமை அடுத்து வரும் நாட்களில் இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை  வடக்கு மாகாணத்தின் சராசரி ஆவியாக்க அளவு 11 மில்லி மீற்றர் ஆகும். சில இடங்களில் சராசரியை விட மிக உயர்வாக பதிவாகியுள்ளது. எனவே ஒரு நாளின் ஆவியாக்க அளவே, 11 மில்லி மீற்றர்  என்றால் ஒரு மாதத்தின் 30 நாளுக்கான ஆவியாக்க அளவு 330 மில்லி மீற்றர் ஆகும்.  

இவ்வாண்டு மார்ச் மாதம் இதுவரை 1 மி.மீ. மழை கூடக் கிடைக்கவில்லை. 

எதிர்வரும் 21ஆம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரையிலான தினங்களில் வெப்பச்சலன செயற்பாட்டால் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதைவிட மார்ச் 28 முதல் ஏப்ரல் 8 வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கடும் வெப்பநிலை காரணமாக ஏற்படும் கடுமையான ஆவியாக்கம்  எமது தரை மேற்பரப்பு மற்றும் தரைக் கீழ் நீர்நிலைகளின் நீரின் அளவை கணிசமான அளவு குறைக்கும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தரைக்கீழ் நீரின் அளவு சடுதியாக குறைவடைந்து செல்கின்றது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு பின்னரே தரைக்கீழ் நீரை மீள் நிரப்பக்கூடிய கன மழைக்கு வாய்ப்புண்டு.

எனவே நிலவுகின்ற வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவையற்ற நீர் விரயத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

தற்போது எமது கிணறுகளில், குளங்களில் உள்ள நீரையே நாம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை பயன்படுத்த வேண்டும். வடக்கு மாகாணத்தில் செப்டம்பர் மாதம் வரையான காலம் மழை குறைவான கோடை காலமாகும்.

எனவே நிலைமையை உணர்ந்து எமது நீர்ப் பயன்பாட்டினை மேற்கொள்வது சிறந்தது என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/179185

Checked
Thu, 04/18/2024 - 23:35
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr