ஊர்ப்புதினம்

வடக்கில் இராணுவத் தளங்களை அகற்ற முடியாது: அரசாங்கம்

7 months ago
Ruwan-720x450.jpg வடக்கில்  இராணுவத் தளங்களை அகற்ற முடியாது: அரசாங்கம்

தேசிய பாதுகாப்பு நலன்களைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய தேவை உள்ளமையால் வடக்கில்  இராணுவத் தளங்களை வேறு இடத்துக்கு மாற்றவோ அல்லது வடக்கில் இருந்து படைகளை விலக்கவோ முடியாதென இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வடக்கில் படை விலக்கம் தொடர்பாக, அரசியல் ரீதியான ஒரு முடிவு எடுக்கப்பட  வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ருவன் விஜேவர்த்தன இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதனால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அப்பகுதி மக்கள் கருதுவார்களாயின் அவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் கலந்தாலோசித்து உரிய தீர்வை முன்வைக்கும்.

மேலும் அச்சுறுத்தல் இருப்பதாக கருதும் குடும்பம் மற்றும் சம்மந்தப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதே சிறந்த தீர்வாகும். ஆனால், இதற்காக முப்படைகள் மற்றும் பொலிஸாரை ஏனைய இடங்களுக்கு செல்லுமாறு கேட்க முடியாது.

தேசிய பாதுகாப்பு, எல்லை கட்டுப்பாடு ஆகியவற்றை கருத்திற்கொண்டே இராணுவத் தளங்களை வேறு இடத்துக்கு மாற்றவோ, வடக்கில் இருந்து படைகளை விலக்கவோ முடியாத நிலைமை உள்ளது.

இவ்விடயத்தில் எதிர்கால நாட்டின் நலனையும் கருத்திற்கொண்டு பொருத்தமான சாத்தியமான கொள்கை குறித்து கலந்துரையாடி, பின்னர் அரசாங்கம் பரிந்துரை ஒன்றை முன்வைக்க வேண்டும்” என ருவன் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/வடக்கில்-இராணுவத்-தளங்க/

போதைப் பாவ­னை­யில்­தான் யாழ்.மாவட்­டம் முன்­னிலை

7 months ago

போர்க் காலத்­தில் இலங்­கை­யின் கல்­வி­யில் முதற்­த­ர­மாக இருந்த யாழ்ப்­பாண மாவட்­டம், தற்­போது கல்­வியை விட போதைப் பொரு­ள் பாவ­னை­யில் முதற்­தர மாவட்­ட­மா­கப் பதி­வா­கி­யுள்­ளது. இவ்­வாறு வடக்கு மாகாண சபை முன்­னாள் உறுப்­பி­னர் சபா.குக­தாஸ் தெரி­வித்­தார்.

அச்­சு­வேலி– தம்­பாலை இளை­ஞர் கழ­கத்­தின் அபி­வி­ருத்தி சார் கூட்­டம் நேற்­று­ முன்­தி­னம் நிலை­யத் தலை­வர் இ.தனு­சன் தலை­மை­யில் நடை­பெற்­றது.
அதில் சிறப்பு விருந்­தி­னர் உரை­யாற்­று­கை­யில் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இன்­றைய சூழ­லில் பிள்­ளை­க­ளுக்கு பெற்­றோர்­தான் நூறு­வீத பாது­காப்பு, பிள்­ளை­க­ளைக் கண்­கா­ணிக்­கத் தவ­று­வீர்­க­ளாக இருந்­தால் நீங்­கள் வாழ்­கின்ற காலத்­தில் எமது இனத்­துக்­குத் தலைமை தாங்க வேண்­டிய சந்­ததி அழிந்து போவதை உங்­கள் கண்­முன்­னால் பார்க்க வேண்­டிய துர்ப்­பார்க்­கிய நிலை­யேற்­ப­டும்.

தற்­போது தாய­கப்­ப­கு­தி­யில் உயிர் மாய்ப்­போ­ரில் 90 வீதமானவர்கள் 35 வய­துக்கு உட்­பட்­ட­வர்­களே.

சமூ­கக் கட்­டுப்­பா­டு­கள் இன்­மை­யும் அர­சி­யல் தலை­மைத்­து­வங்­க­ளின் சுய­லாப நோக்­கங்­க­ளும் இளையோரின் தெளி­வற்ற பய­ணத்­துக்­குக் கார­ணம் – –என்­றார்.
நிகழ்­வில் மாகாணசபை முன்னாள் உறுப்­பி­னர்­க­ளான எம்.கே.சிவா ­ஜி­லிங்­கம், விந்­தன் கன­க­ரட்­ணம், வலி.கிழக்கு பிர­தேச சபை தவி­சா­ளர் தி.நிரோஷ் ஆகி­யோ­ரும் உரை­யாற்­றி­னர்.

https://newuthayan.com/story/10/போதைப்-பாவனையில்தான்-ய.html

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில், 8 பேர் கைது..

7 months ago
 
April 15, 2019
 

aava-arrest.jpg?zoom=0.9024999886751175&

யாழ்.மானிப்பாய் பகுதியில் காவற்துறையினர்  மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் 8 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

மானிப்பாய், உடுவில் பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை மானிப்பாய் காவற்துறையினர்  திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன் போது கடந்த காலங்களில் மானிப்பாய் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில , 8 பேரை மானிப்பாய் காவற்துறையினர்  கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை மானிப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவற்துறையினர்  முன்னெடுத்து வருகின்றனர்.

http://globaltamilnews.net/2019/118359/

ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவு செய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா? அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வருடமா?

7 months ago

 

sri_lanka.jpg-வை எல் எஸ் ஹமீட் -
ஜனாதிபதி கடந்த 2015 ஜனவரி 8 ம் திகதி தெரிவுசெய்யப்பட்டார். அப்பொழுது
அவரது பதவிக்காலம் ஆறு வருடமாக இருந்தது. 19 வது திருத்தத்தினூடாக அது ஐந்து வருடமாக குறைக்கப்பட்டது.

அரசியலமைப்பு சட்டம் எப்போதும் prospective -முன்னோக்கியது; அதாவது அது அமுலுக்கு வந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கே பொருந்தும்; அது retrospective- அது பின்னோக்கியதல்ல; என்பது பொதுவான கோட்பாடு.

இதனடிப்படையில் 19 அமுலுக்கு வரமுன் ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டுவிட்டார். மக்களும் ஆறு வருடங்களுக்கு ஆணை வழங்கிவிட்டனர். எனவே, புதிய திருத்தம் இந்த ஜனாதிபதிக்குப் பொருந்துமா? என அறிவதற்காக ஜனாதிபதி உயர்நீதிமன்றை நாடினார்.

உயர்நீதிமன்றம் “ஆம், பொருந்தும். பதவிக்காலம் ஐந்து வருடமே” என பதிலளித்தது. உயர்நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்திய நிலைப்பாடு, மக்கள் ஆணை வழங்கிய காலப்பகுதியைக் குறைப்பதில் பிரச்சினையில்லை; ஏனெனில் அவர்கள் மீண்டும் ஆணைவழங்கிய அதே மக்களிடமே செல்கிறார்கள். ஆனால் மக்களின் அனுமதியை சர்வஜன வாக்கெடுப்பினூடாகப் பெறாமல் அனுமதி வழங்கிய காலப்பகுதிக்குமேல் நீட்டமுடியாது; என்பதாகும்.

அதேபோல் இந்த திருத்தம் இந்த ஜனாதிபதியையும் உள்ளடக்குகின்றது; என்ற அடிப்படையில் ஐந்து வருடம் என்பது இந்த ஜனாதிபதிக்கும் பொருந்தும் என்பதாகும்.

இந்நிலையில் ஐந்து வருடம் என்பதைக் கேள்விக்குட்படுத்த முடியாது; என்பதைப் புரிந்துகொண்ட ஜனாதிபதித் தரப்பு, இந்த ஐந்து வருடம் என்பது எப்போதிருந்து ஆரம்பிக்கின்றது; என்றொரு கேள்வியை எழுப்ப முடியாதா? என சிந்திக்கின்றது.

இங்கும் அரசியலமைப்பு சட்டம் prospective - முன்னோக்கியதே தவிர, retrospective- பின்னோக்கியதல்ல, எனவே, புதிதாக அமுலுக்கு கொண்டுவரப்பட்ட “ ஐந்து வருடம்” என்பது திருத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்துதானே ஆரம்பிக்க வேண்டும். என்ற ஒரு வாதத்தை முன்வைக்க முற்படுவதுபோல் தெரிகிறது.

மேலோட்டமாக பார்க்கும்போது அவ்வாதம் நியாயமாகவே படுகிறது. ஆனால் 19 வது திருத்தம் என்பது அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்டதாகும். எனவே, அத்திருத்தம் என்ன சொல்கின்றது; என்பதே இங்கு எழுகின்ற கேள்வியாகும்.

சரத்து 30(2), ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடம் என்கிறது. சரத்து 31(3)(d)(ii), ஜனாதிபதியின் பதவிக்காலம் தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆரம்பிப்பதாக குறிப்பிடுகின்றது. (அதாவது 2015 ஜனவரி 9ம் திகதி.)

இங்கு எழுகின்ற கேள்வி, “ தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட திகதி என்பது இத்திருத்தம் அமுலுக்கு வந்ததன்பின் நடக்கப்போகின்ற ஜனாதிபதித் தேர்தலுக்குப் பொருந்தும்; திருத்தத்திற்குமுன் நடைபெற்ற தேர்தலுக்கு prospective ஆன அரசியலமைப்பின் சரத்து எவ்வாறு பொருந்தும்”? என்பதாகும். இதுவும் வலுவான கேள்விதான். அவ்வாறானால் இதற்குரிய விடை என்ன?

இதற்குரிய விடை 19வது திருத்தத்தின் Transitional provisions ( தற்காலிக சரத்துக்கள்) இல் இருக்கிறது. அதாவது S 49(1)(b) இதற்கு விடை தருகிறது. அது சுருக்கமாக பின்வருமாறு கூறுகின்றது.

அதாவது, 2015, ஏப்ரல் 22ம் திகதிக்கு முன்னர் பதவியில் இருந்த ஜனாதிபதியும் பிரதமரும் பதவியில் தொடர்வார்கள் திருத்தப்பட்ட அரசியலமைப்பின் சரத்துகளுக்கமைய.

அதன்பிரகாரம் பாராளுமன்றம் கலைந்தவுடன் பிரதமரின் பதவிக்காலம் முடிந்து பின்னர் அவர் புதிய பிரதமராக பதவியேற்றார். ஆனால் ஜனாதிபதி ஏப்ரல் 22, 2015 இற்கு முன் பதவி வகித்த அதே ஜனாதிபதியாகவே பதவியில் தொடர்கிறார். அந்த ஜனாதிபதிக்கு, மேலே குறிப்பிட்டதுபோல் இந்த இடைக்கால சரத்தின்படி இந்தத் திருத்தம் பொருந்தும்.

அதாவது, மீண்டும் தெளிவுக்காக, மேற்குறிப்பிட்ட இடைக்கால சரத்து, 2015 ஏப்ரல் 22 இற்கு முன் பதவி வகித்த ஜனாதிபதி அரசியலமைப்பின் திருத்தங்களுக்கமைய பதவியில் தொடரலாம் எனக்கூறுகிறது.

எனவே, 19வது திருத்தம் ஜனாதிபதிக்கு செல்லுபடியாகின்றது. இது prospective, retrospective என்ற பதங்களுடன் தொடர்புபடவில்லை. நேரடியாக தற்காலிக ஏற்பாட்டின் சரத்தின் வியாக்கியானத்தோடுதான் தொடர்பு பட்டிருக்கின்றது.

அந்த அடிப்படையில் மேல கூறப்பட்ட “ ஜனாதிபதியின் பதவிக்காலம் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து ஆரம்பிக்கின்றது” என்பது எதிர்கால ஜனாதிபதிகளுக்கு மாத்திரமல்ல, இந்த ஜனாதிபதிக்கும் பொருந்தும்.

https://www.madawalaenews.com/2019/04/19.html

பூநகரி விபத்தில் சிக்கிய, கனடா பிரஜை பலியானார்..

7 months ago
பூநகரி விபத்தில் சிக்கிய, கனடா பிரஜை பலியானார்..
April 15, 2019

 

பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து , யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த கனடா வாசி சிகிச்சை பயனின்றி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். கனடா பிரஜாவுரிமை பெற்ற, 66 வயதுடைய  செல்லப்பா சுந்தரேஸ்வரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த மாதம் மனைவி பிள்ளைகளுடன் குடும்பமாக தாயகம் திரும்பி வேலணையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அந்நிலையில் கடந்த 28ஆம் திகதி விசுவமடுவில் உள்ள தனது காணியை பார்க்கவென மோட்டார் சைக்கிளில் விசுவமடு சென்று  திரும்பும் வழியில் பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளானார்

குறித்த விபத்தில் படுகாயமடைந்தவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு பூநகரி வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2019/118346/

சிவனையும் புத்தரையும், சாத்தான்கள் எனும் மத நிகழ்வுக்குத் தடை…

7 months ago
சிவனையும் புத்தரையும், சாத்தான்கள் எனும் மத நிகழ்வுக்குத் தடை…
April 15, 2019

 

யாழ்.மாநகர சபை மைதானத்தில் நடைபெறவிருந்த மத நிகழ்வுக்கு யாழ்ப்பாண காவற்துறையினர் தடை விதித்துள்ளனர். மாநகர சபை மைதானத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மத நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.

குறித்த மத நிகழ்வானது ஏனைய மதங்களை இழிவு படுத்தும் நிகழ்வு எனவும் , அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் யாழ்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

குறித்த முறைப்பாட்டில் , குறித்த மத நிகழ்வு சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. அதில் சிவன் மற்றும் புத்தர் ஆகியோரை சாத்தான்கள் என கூறப்பட்டது. அதற்கான காணொளி ஆதாரம் உண்டு (முறைப்பட்டாளரால் காவற்துறையினரிடம் அது ஒப்படைக்கப்பட்டது அவ்வாறு ஏனைய மத கடவுள்களை சாத்தான்கள் என கூறுவது, அந்த மதம் சார்ந்தவர்களை கோபமடைய செய்யும் செயற்பாடு. இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த மூவரே இந்த நிகழ்வை நடத்துகின்றனர். என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவற்றை ஆராய்ந்த காவற்துறையினர் குறித்த நிகழ்வை நடாத்துவதை நிறுத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த மத நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் கல்முனை பிரதேசத்திலும் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://globaltamilnews.net/2019/118340/

மன்னாரில் கடும் வறட்சி – மக்கள் – கால்நடைகள் பாதிப்பு

7 months ago
மன்னாரில் கடும் வறட்சி – மக்கள் – கால்நடைகள் பாதிப்பு :

April 15, 2019

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

 

கடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்கால் நீர் நிலைகள் என அனைத்தும் வற்றிய நிலையில் காணாப்படுவதனால் மனிதர்கள் மாத்திரம் இல்லாமல் கால் நடைகளும் பாதிப்படடைந்துள்ளன.

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த வெப்பம் காரணமாக ஏற்பட்ட வறட்சியால் மன்னார் , மடு, மாந்தை மேற்கு , முசலி , நானாட்டான் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

மன்னாரில் காணாப்படும் அதிகலவான குளங்கள் மற்றும் கால்வாய்கள்,நீர் நிலைகள் வற்றிய நிலையில் காணப்படுவதினால் விவசாயச் செய்கையில் ஈடுபடுபவர்கள், தோட்டச் செய்கையில் ஈடுபடுவோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கால் நடைகளின் மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் வெப்பம் காரணமாக வறண்டு காணப்படுவதனால் ஒழுங்கான மேய்ச்சல் நிலங்கள் இன்றி கால் நடைகளும் இறந்து போகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் குளங்கள் அனைத்தும் நீர் வற்றிய நிலையில் காணப்படுவதினால் நன்னீர் மீன் பிடியில் ஈடுபடும் பெரும்பாலான மீனவர்கள் வாழ்வாதாரம் இன்றி பாதீப்படைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

IMG_5882.jpg?resize=750%2C416IMG_5883.jpg?resize=750%2C412IMG_5884.jpg?resize=750%2C397IMG_5885.jpg?resize=750%2C418IMG_5886.jpg?resize=750%2C403

 

http://globaltamilnews.net/2019/118317/

 

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால பகிரங்க அறிவிப்பு

7 months ago
maith-p-720x430.jpg இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால பகிரங்க அறிவிப்பு

எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்திற்கொண்டு அனைத்து இலங்கையர்களும் இன்றைய தினம் (திங்கட்கிழமை)  மரக்கன்றொன்றை நாட்ட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுற்றாடலுக்கான பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு அனைத்து இலங்கையர்களும் மரக்கன்றொன்றை நாட்டுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை இவ்வருட  சிங்கள, தமிழ் புத்தாண்டு  நிகழ்வுகளில் மரம் நடும் நிகழ்வும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக இணைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில்  மர நடுகைக்கான சுப நேரமாக, இன்று முற்பகல் 11.17 மணிக்கு கிழக்குத் திசையை நோக்கி மரக்கன்றை நடுவது சிறந்ததாகும் என கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இலங்கை-மக்களுக்கு-ஜனாதிப/

யாழ்.மக்கள் போரின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை: தர்ஷன ஹெட்டியாராச்சி

7 months ago
war.jpg யாழ்.மக்கள் போரின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை: தர்ஷன ஹெட்டியாராச்சி

போர் நிறைவுற்று பல வருடங்கள் கடந்த போதும் அதில் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் ஆகியவற்றிலிருந்து யாழ்ப்பாண மக்கள் இன்னும் மீளவில்லையென அம்மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வெளியாகும் தனியார் பத்திரிக்கையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே தர்ஷன ஹெட்டியாராச்சி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“எமக்கும் குடும்பம் என்றதொன்று உள்ளமையால்தான், அம்மக்களின் துயரங்களை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

ஆகையால்தான் அவர்கள் இழந்த அனைத்தையும் வழங்க முடியாதபோதும் எம்மால் முடிந்த மனிதநேய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்தவகையில் அம்மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தி கொடுப்பதை நோக்காக கொண்டே அனைத்து படை வீரர்களும் அதற்காக பாடுபடுகின்றனர்.

இதனால் மக்களின் மனங்களை எங்களால் வெற்றிக்கொள்ள முடிந்துள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்” என  தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/யாழ்-மக்கள்-போரின்-தாக்க/

கட்சி தாவல்களினால் அதிரப்போகும் கொழும்பு அரசியல்!

7 months ago
Slfp_UNP-720x450.jpg கட்சி தாவல்களினால் அதிரப்போகும் கொழும்பு அரசியல்!

பிரதான அரசியல் கட்சிகளிலிருந்து கட்சி தாவல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய மட்டத்திலான தேர்தலொன்று அறிவிக்கப்படும் பட்சத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியில் சங்கமிக்கக்கூடும் எனவும், அதேபோல் ஐ.தே.க. மீது அதிருப்தியில் இருக்கும் அக்கட்சி உறுப்பினர்கள் சிலர் மஹிந்த அணியுடன் கைகோர்க்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசியல் கட்சிகளின் மே தினக் கூட்டங்களின்போது இதற்கான அடித்தளத்தை அரசியல் பிரமுகர்கள் இடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://athavannews.com/கட்சி-தாவல்களினால்-அதிரப/

சாத்வீக வழியில் உரிமைப் போராட்டம் தொடரும் – மாவை

7 months ago
fbbj.jpg சாத்வீக வழியில் உரிமைப் போராட்டம் தொடரும் – மாவை

தமிழர்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. எமது உரிமைக்குரல்கள் ஒடுங்கிப் போய்விடவில்லை. எமது உரிமைகளுக்கான போராட்டம் சாத்வீக வழியில் தொடரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘வடக்கில் காணிகளை சுவீகரிப்பதற்கு மீண்டும் அளவீட்டுப்பணிகள் பல இடங்களில் ஆரம்பமானபோது அதைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். அதையும் மீறி அளவீட்டுப் பணிகள் இடம்பெறுமாயின் அதற்கு எதிராகப் போராடுவோம்.

தமிழ் மக்கள் இனியும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழத் தயாரில்லை. தமிழர் தாயகம் சிங்கள மயமமாக்கப்பட நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

கேப்பாப்பிலவு மண்ணிலிருந்து இராணுவத்தினர் உடன் வெளியேற வேண்டும். வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்படாத மக்களின் காணிகள் காலதாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும்.

நாம் கொடுமையான இன ஒடுக்குமுறைக்கு உட்பட்டாலும் அதிலிருந்து மீண்டெழுந்துள்ளோம். எமது உரிமைகளுக்காகவும் நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்.

உரிமைகள் கிட்டும் வரை எத்தனை இடர்கள் வரினும் எமது போராட்டம் தொடரும்’ என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/சாத்வீக-வழியில்-உரிமைப்/

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் சிறப்பு வழிபாடுகள்

7 months ago
newyear-3.jpg சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் சிறப்பு வழிபாடுகள்

சித்திரை புத்தாண்டு நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தலைநகர் கொழும்பு, வடக்கு, கிழக்கு, மலையகம் என நாட்டின் சகல பிரதேச மக்களும் விகாரி வருடத்தை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

இதனை முன்னிட்டு நாடெங்கிலுமுள்ள இந்து ஆலயங்களிலும் விகாரைகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

குறிப்பாக தலைநகர் கொழும்பிலுள்ள பல்வேறு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

தமிழர் தாயகமெங்கும் சித்திரை புதுவருட பிறப்பை மக்கள் சிறப்பாக கொண்டாடினர். அத்தோடு கோயில்களிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த பூஜையில் ஏராளமான பக்த அடியார்கள் பங்கேற்றதோடு தமிழ் சிங்கள புத்தாண்டினை அமைதியாக வரவேற்கின்றனர்.

அவ்வாறே கிளிநொச்சியிலும் சித்திரை புத்தாண்டு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

இன்று காலை மருத்து நீர் தேய்த்து புத்தாடை அணிந்து மக்கள் வணக்கஸ்தலங்களில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு இன்று காலைமுதல் ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. கிளிநொச்சி பிள்ளையார் கோயில், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் உள்ளிட்ட பல ஆலயங்களில் வழிபாடுகள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வரட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மக்களும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றமை சிறப்பம்சமாகும்.

அதேபோல் வவுனியா மாவட்டத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், மக்கள் ஆர்வத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

அதேபோன்று கிழக்கிலங்கையிலும் மக்கள் சித்திரை புத்தாண்டை விமர்சியாக கொண்டாடியதோடு சமய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் மலையக மக்களும் புத்தாண்டை முன்னிட்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் குருக்கள் பாலசுப்பிரமணிய சர்மாக குருக்கள் தலைமையிலும், ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும், கொட்டகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலும், விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அத்தோடு ஹட்டன் நீக்ரோதாரம விகாரையிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

கோயில்களுக்கும் விகாரைகளுக்கும் சென்று புத்தாண்டை வரவேற்ற மக்கள் மிகவும் அமைதியான முறையில் சிங்கள தமிழ் பத்தாண்டை கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சித்திரை-புத்தாண்டை-முன்/

வடமராட்சியில் மீன்பிடி படகு – கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிப்பு

7 months ago
வடமராட்சியில் மீன்பிடி படகு – கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிப்பு
April 14, 2019

boat.png?resize=782%2C554யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் மீன்பிடி படகு மற்றும் கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புதிதாக கரை வலையை கொள்வனவு செய்திருந்த அம்பன் கொட்டோடை பகுதியைச் சேர்ந்த கந்தன் சுரேந்திர ராசா என்பவர் நேற்றைய தினம் முதல் முதலாக தொழிலை மேற்கொண்டுவிட்டு படகு மற்றும் வலைகளை கடற்கரையில் வைத்து விட்டு வீடு சென்றுள்ள நிலையிலேயே இவ்வாறு இவ்வாறு அவரது பிடி படகு மற்றும் கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயில் எரிந்து நாசமாகிய படகு மற்றும் வலைகளின் பெறுமதி சுமார் இரண்டு இலட்சம் ரூபாவுக்கும் மேல் எனவும் இது தொடர்பில் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

http://globaltamilnews.net/2019/118250/

கிளிநொச்சி வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்தை முடக்கியதான செய்தியில் உண்மையில்லை

7 months ago
கிளிநொச்சி வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்தை முடக்கியதான செய்தியில் உண்மையில்லை
April 14, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_0483.jpg?resize=800%2C751

நோயாளர் நலன்புரிச் சங்கத்திற்கும் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில் அச்சங்கத்தின் நடவடிக்கைகளை வைத்தியசாலை நிர்வாகம் முடக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறித்துத் தமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் த. காண்டீபன் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

‘வடமாகாணத்தில் 2016ம் ஆண்டிலிருந்து மாகாண அமைச்சர்கள் வாரியத்தினால் அமைச்சர் சபைப்பத்திர அறிவுறுத்தல்களுக்கு அமைய நோயாளர் நலன்புரிச் சங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையிலும் 2016ம் ஆண்டிற்கு முன்னர் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் என்ற அமைப்பே காணப்பட்டதாக அறியமுடிகிறது.

தற்போது இந்த நோயாளர் நலன்புரிச் சங்கங்கள் தொடர்பில் காணப்படும் ஆவணங்களின் பிரகாரம் இச் சங்கங்கள் அனைத்தையும் கண்காணிக்கும் அதிகாரம் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரிற்கே வழங்கப்பட்டுள்ளது.

நலன்புரிச் சங்கங்களது வருடாந்தச் செயலாற்று அறிக்கைகள் மதிப்பீடு செய்யப்பட்டு  வருடாந்தம் சேவை நீடிப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரமும் வடமாகாணப் பிரதம செயலாளரினால் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளருக்கே வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 07.04.2019 அன்று நோயாளர் நலன்புரிச்சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவின்போது அந்தப் பொதுச்சபையில் கலந்துகொண்டவர்கள்  இரண்டு தரப்பாக பிரிந்து நின்று ஒருமித்த கருத்துக்கு வரமுடியாமையினால் புதிய நிர்வாகத் தேர்வு இடம்பெற்றிருக்கவில்லை.

இவ்வாறான நிலைமைகளில் எவ்வாறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான வழிகாட்டல்கள் குறித்த நோயாளர் நலன்புரிச் சங்க யாப்பிலோ அல்லது வேறெந்த ஆவணங்களிலோ காணப்படவில்லை.

அத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கையில் உள்ளடங்கியிருந்த விடயங்கள் தொடர்பில் பொதுச்சபையில் எழுந்த ஆட்சேபணைகளையும் நாம் அவதானித்திருந்தோம்.

எனவே இதுகுறித்த மேல்நடவடிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்த ஆலோசனையினை வழங்குமாறும் இது தொடர்பில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கரைச்சிப் பிரதேச செயலர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் உடனடியாகவே எழுத்து மூலம் அறிவித்துள்ளோம். இதுதவிர எவருக்கும் தடைவிதிப்பதற்கோ முடக்குவதற்கோ அல்லது வங்கிகளுக்கு உத்தரவிடவோ எமக்கு எதுவித அதிகாரமும் இல்லை  எனத் தெரிவித்த வைத்தியசாலைப் பணிப்பாளர்

இந்த விடயங்களில் நோயாளர் நலன்களைக் காட்டிலும் குறித்த சிலரது அரசியல் நலன்கள் முதன்மைப் படுத்தப்படுவதனாலேயே குழப்பநிலை தோன்றியிருப்பதாக நாம் கருதுகிறோம். இதே தரப்புகளே தங்களது நலன்கருதி இவ்வாறான திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை பரப்புவதற்கு எத்தனிக்கிறார்கள் என நாம் ஊகிக்கிறோம்.

வைத்தியசாலையின் பணிப்பாளர் என்ற வகையில் பக்கம் சாராது நடுநிலையுடன் மக்களுக்காகச் செயற்படுவதே எமது கடமையாகும். இவ்விடயத்தில் எவ்வகையான இடையூறுகளுக்கும். அழுத்தங்களுக்கும்  நாம் இடமளிக்கப்போவதில்லை’ என்றார்.

கிளிநொச்சி வைத்தியசாலையின் தற்போதைய பணிப்பாளர் கடமையேற்றுக் குறுகிய காலப்பகுதியில் வைத்தியசாலையில் நோயாளர்களுக்குப் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வைத்தியசாலை மிகச் சிறப்பாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/118253/

சிறிலங்காவுடன் பலமான கூட்டை எதிர்பார்க்கும் அமெரிக்கா

7 months ago
சிறிலங்காவுடன் பலமான கூட்டை எதிர்பார்க்கும் அமெரிக்கா

morgan-ortagus-300x200.jpgசிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பலமான கூட்டை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்திருப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சிங்கள- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறிலங்கா மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மோர்கன் ஒர்டாகஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சிறிலங்காவும் அமெரிக்காவும் மக்களுக்கிடையிலான பரந்துபட்ட கூட்டு, ஜனநாயக கொள்கைகள் மீதான அர்ப்பணிப்பு, நிலையான, பாதுகாப்பான இந்தோ-பசுபிக் அடிப்படையில் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளன.

இந்தக் கூட்டு மேலும் கட்டிழுப்பப்படுவதையும், எதிர்வரும் ஆண்டின் சவால்களை தொடர்ந்து சமாளிக்கவும், நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

சிறிலங்கா மக்களுக்கு பாதுகாப்பான, செழிப்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றும் அதில் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/04/14/news/37363

ஐதேகவை உடைத்து மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பு? –  தயாராகிறார் மைத்திரி

7 months ago
ஐதேகவை உடைத்து மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பு? –  தயாராகிறார் மைத்திரி

maithri-met-missing-1-300x200.jpgவரும் நொவம்பர்- டிசெம்பர் மாதங்களுக்குள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான மற்றொரு முயற்சியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, தற்போது ஐதேகவுடன் இணைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும், ஐதேகவின் ஒரு பகுதி உறுப்பினர்களை இணைத்து, 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் திட்டம் ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இதொகாவின் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமன்றி,  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் ஆதரவு அளிப்பார்கள் என்றும், சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.

கடந்த ஒக்ரோபரில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்ட போது, ஐதேக உறுப்பினர்கள் பலரும் சிறிலங்கா அதிபருக்கு ஆதரவு அளிக்க தயாராக இருந்தனர் என்று ஐதேக மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலத்தில் ஐதேகவின் அமைச்சர்கள் சிலரை சிறிலங்கா அதிபர் பாராட்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2019/04/14/news/37366

பிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில், 4 இலங்கையர்கள் கைது

7 months ago
1 Min Read
April 13, 2019

London-Luton.png?zoom=0.9024999886751175
பிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை (10.04.19) சர்வதேச விமானத்தின் மூலம் தரையிறங்கிய நால்வரும் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டள்ளதாகவும், கைதானவர்கள் பெட்போர்டசியார் (Bedfordshire) காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்கொட்லன்ட்யார்ட் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 10 ஆம் திகதி இரவு 9.30ற்கும் 11.45ற்கும் இடைப்பட்ட வேளையில் கைதான இவர்கள் அடுத்தநாள் காலை வியாழக்கிழமை 11 ஆம் திகதி “பயங்கரவாத தடைச்சட்டம் 11 – 2000 ஏழாவது பிரிவின் கீழ் ” தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

http://globaltamilnews.net/2019/118244/

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கார் விபத்திற்கு உள்ளாகியது

7 months ago

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் – புத்தளம் பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் வெள்ளவத்தையைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://globaltamilnews.net/2019/118242/

அடிப்படை வசதிகளின்றி தொடர்ந்தும் அவதியுறும் முள்ளிக்குளம் மக்கள்

7 months ago

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த இடத்தில் மீள் குடியோறி இரண்டு வருடங்கள் ஆகியும் இது வரை தாங்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக பாராமுகமாக செயற்படுவதாகவும் ; விசனம் தெரிவித்துள்ளனர்.

முள்ளிக்குளம் மக்கள் யுத்த காலப்பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தங்களுடைய சொந்த கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக மலங்காடு எனும் பகுதியில் கட்டாயத்தின பெயரில் குடியமர்த்தப்பட்ட நிலையில் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்தனர். தண்ணீர் , கல்வி , மற்றும் எனைய பொது தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள பல மைல் தூரம் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இதே நேரத்தில் கடந்த 2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னரும் குறித்த மக்கள் முள்ளிக்குளம் பகுதியில் மீள் குடியேற்றப்படாமையினால் கடந்த 2016 ஆண்டு முள்ளிக்குளத்தை பூர்விகமாக கொண்ட மக்கள் தங்கள் சொந்த நிலம் தங்களுக்கு வேண்டும் என கோரிக்கை முன்வைத்து முள்ளிக்குளம் கடற்படை முகாமக்கு முன்பாக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

குறித்த போராட்டத்தின் பலனாக அதே ஆண்டில் சில காணிகளை தவிர்த்து ஏனைய 100 ஏக்கர் காணியை உடனடியாக விடுவிப்பதகவும் ஏனைய பொது மக்களின் காணிகளை படிப்படியாக விடுவிப்பதுடன் பொது மக்களின் வீடுகளில் குடியிருக்கும் கடற்படையினர் 6 மாத காலத்திற்குள் வெளியேறுவதாகவும் வாக்குறுதி வழங்கப்பட்டு மக்கள் முள்ளிக்குளம் கிராமத்திற்குள் மீள் குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் மீள் குடியேறி இரண்டு வருடங்கள் கடந்தும் முள்ளிக்குளம் மக்கள் அடிப்படை வசதிகள் கூட பூர்த்தி செய்யப்படாமல் சேதமடைந்த நிலையில் காணப்படும் தற்காலிக கொட்டில்களில் யானைகளின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இதுவரை குறித்த மக்கள் வசிப்பதற்க்கு தற்காலிக பூரணப்படுத்தப்பட்ட கொட்டில்கள் , குடிப்பதற்கு நீர் வசதியோ மின்சார வசதியோ அரசங்கத்தினால் செய்து தரப்படவில்லை என முள்ளிக்குள மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர் .

பெண்கள் அதிகமாக இருக்கும் நிலையில் தங்களுக்கு என மலசல கூட வசதிகள் கூட இல்லாத நிலையே காணப்படுகின்றது எனவும் மழைக் காலங்களில் சேதமடைந்த கொட்டில்களில் தங்க முடியாத நிலையும் குளம் நிறம்புவதால் வெள்ளப்பதிப்பும் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை மின்சார வசதில் இல்லாததால் இரவு நேரங்களில் யானைகளின் தொல்லைகள் கூட அதிகமாக காணப்படுவதால் தாங்கள் மீண்டும் மலங்காட்டு பகுதிக்கே செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு உரிய அடிப்படை வசதிகளையாவது செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆனாலும் முள்ளிக்குளம் பகுதியில் வாழும் கடற்படையினர் மின்சார வசதி , அடுக்கு மாடி கட்டிடங்கள் , மற்றும் முள்ளிக்குள மக்களின் வீடுகளில் சொகுசு வாழ்கை வாழ்வதும் குறிப்பிடத்தக்கது.

IMG_0002.jpg?zoom=0.9024999886751175&resIMG_0010.jpg?zoom=0.9024999886751175&resIMG_0024.jpg?zoom=0.9024999886751175&res

 

தூக்கிலிடும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை ஜனாதிபதிக்கு மகஜர்

7 months ago
தூக்கிலிடும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை ஜனாதிபதிக்கு மகஜர்
April 12, 2019

போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலிருக்கும் கைதிகளை விரைவில் தூக்கிலிடுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் வேண்டுகோள் விடுக்கும் மகஜரை இணையத்தினூடாக அனுப்பும் நடவடிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச்சபை முன்னெடுத்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபை , அவசர நடவடிக்கை என்ற தலைப்பில் இது தொடர்பான அறிக்கையினை தமது இணையத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் 13 மரணதண்டனைக் கைதிகள் விரைவில் தூக்கிலிடப்படும் ஆபத்திலிருக்கின்றார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

43 வருடகாலத்திற்குப் பின்னர் மரணதண்டனைக் கைதிகளைத் தூக்கிலிடுவதற்கு இலங்கை ஜனாதிபதி திட்டமிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தூக்கிலிடப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் கைதிகளின் விபரங்கள், மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதிகள் குறித்து முற்றுமுழுதான இரகசியத்தன்மையே காணப்படுகின்றது.

அந்தக் கைதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பற்றிய வரலாறு தொடர்பிலும் எந்தவொரு தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் நேர்மையான வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்களா, தங்கள் சார்பில் வழக்காடுவதற்கு வழக்கறிஞர்களை அமர்த்திக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டார்களா,

மன்னிப்புக்கோருவது தொடர்பில் அர்த்தமுள்ள செயன்முறை ஒன்றில் அவர்களால் ஈடுபடக்கூடியதாக இருந்ததா உள்ளிட்ட கேள்விகளுக்கும் முறையான பதில்கள் எவையுமில்லை.

இறுதியாக 1976 ஆம் ஆண்டிலேயே இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இந்த முன்னேற்றகரமான செயற்பாடு மறுதலையாக்கப்படும் வருடமாக 2019 இருக்கக்கூடாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

http://globaltamilnews.net/2019/118206/

Checked
Mon, 11/18/2019 - 12:54
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr