புதிய பதிவுகள்

ஆனந்தா கல்லூரியை வீழ்த்தி சிவகுருநாதன் கிண்ணத்தை வென்ற யாழ் இந்து

33 minutes 17 seconds ago
ஆனந்தா கல்லூரியை வீழ்த்தி சிவகுருநாதன் கிண்ணத்தை வென்ற யாழ் இந்து By Ravivarman - கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான சிவகுருநாதன் நினைவுக் கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற யாழ் இந்து வீரர்கள் கிண்ணத்தை தமதாக்கினர். வருடாந்தம் இடம்பெறும் இந்த போட்டியின் இவ்வருட மோதல் கடந்த சனிக்கிழமை (14) யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. மைதானத்தின் ஈரத்தன்மையின் காரணமாக இருபது ஓவர்களிற்கு மட்டுப்பட்டிருந்த இந்த போட்டியில் ஆனந்தா கல்லூரியினை வெற்றிபெற்ற யாழ் இந்து வீரர்கள் கிண்ணத்தினை மீட்டெடுத்துள்ளனர். Photos: Inaugural Arjuna Ranatunga Challenge Trophy-2019 அதேவேளையில், இரு கல்லூரிகளினதும் பழைய மாணவர்களிடையே முதல் முறையாக இடம்பெற்ற அர்ஜுன ரனதுங்க சவால்கிண்ண கிரிக்கெட் போட்டி முடிவேதுமின்றி நிறைவிற்கு வந்திருந்தது. சிவகுருநாதன் நினைவுக் கிண்ண போட்டி இதன் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய ஆனந்தா கல்லூரியினர் முதலாவது ஓவரிலேயே ஆரம்ப விக்கெட்டினை பறிகொடுத்தனர். தொடர்ந்தும் விக்கெட்டுகளை பறிகொடுத்த கொழும்பு வீரர்கள் 11 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறினர். இந்த நிலையில் களமிறங்கிய றொமித் சத்நிது தனியொருவராகப் போராடி ஆட்டமிழாக்காது 44 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்து, தனது அணியை 20 ஓவர்களில் 79 என்ற போராடக்கூடிய ஓட்ட எண்ணிக்கையினை நோக்கி அழைத்துச்சென்றார். யாழ் வீரர்களின் அபாரப் பந்துவீச்சு காரணமாக ஏனைய வீரர்கள் மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு வேகமாக ஆட்டமிழந்து சென்றனர். தொடர்ந்து, பதிலிற்கு துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய இந்துக் கல்லூரிக்கு முதலாவது விக்கெட்டிற்காக 36 ஓட்டங்களினை சேகரித்தனர் கஜநாத், யோகீசன் இணை. பின்னர், ஆனந்தா கல்லூரியின் பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை வீழ்த்தியபோதும் மத்திய வரிசையில் கோமைந்தன் பெற்றுக்கொடுத்த விரைவான 14 ஓட்டங்களினது உதவியுடன் இந்துக் கல்லூரி வீரர்கள் 17.3 ஓவர்களில் 6 விக்கெடுக்களை இழந்து வெற்றியிலக்கினை அடைந்தனர். போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதுகளை ஆனந்தா கல்லூரியின் றொமித் சத்நிதுவும், சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதினை திசுக ஷெஹாஸும் தமதாக்கினர். யாழ் இந்துவின் கோமைந்தன் சிறந்த சகலதுறை வீரருக்கான விருதினையும், தனுஸ்ரன் சிறந்த களத்தடுப்பாட்ட வீரர் விருதினையும் பெற்றிருந்தனர். போட்டியின் சுருக்கம் ந்துக் கல்லூரி 4 விக்கெட்டுக்களினால் வெற்றி http://www.thepapare.com/jaffna-hindu-vs-ananda-college-annual-cricket-encounter-2019-tamil/

காஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்

40 minutes 49 seconds ago
1965 இல் Sadar-i-Riyasat (ஜனாதிபதி) என்பதை ஆளுனர் என்றும் பிரதமரை முதல்வர் என்றும் சட்டத்தை மாற்றினார்கள். அதிலிருந்து ஆளுனர் என்பவர் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் நிலை ஒழிக்கப்பட்டு இந்திய குடியரசு தலைவரால் நேரடியாக நியமிக்கப்படும் நிலை காஷ்மீரில் உருவாக்கப்பட்டது.

தாமரைக் கோபுர மோசடி: ஜனாதிபதி சீனாவை இழிவுபடுத்தியுள்ளார்- மஹிந்த குற்றச்சாட்டு

42 minutes 40 seconds ago
தாமரைக் கோபுர மோசடி: ஜனாதிபதி சீனாவை இழிவுபடுத்தியுள்ளார்- மஹிந்த குற்றச்சாட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை அமைக்க 2 பில்லியன் ரூபா முற்பண நிதி, சீனா நெசனல் இலக்ரோனிக்ஸ் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டதாகவும், சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான பாரிய நிறுவனமொன்று 2 பில்லியன் ரூபா நிதியை பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளதென குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சீன அரசாங்கத்தை இழிவுப்படுத்துவதாகும் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த பாரிய வேலைத்திட்டத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட இரண்டு சீன நிறுவனங்களும் சீனாவின் பாரிய நிறுவனங்களாகும். ALIT நிறுவனத்திற்கோ அல்லது வேறு எந்த நிறுவனமொன்றுக்கோ எவ்வித நிதியும் வழங்கப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாமரைக் கோபுரம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த அரசாங்கம் 2 பில்லியன் ரூபா நிதியை சீனாவின் ALIT நிறுவனத்திற்கு ஆரம்ப முற்பணமாக செலுத்தியிருந்ததாகவும், அந்த 2 பில்லியன் நிதிக்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்தவொரு ஆணவமும் இல்லை என்பதுடன், ALIT என எவ்வித நிறுவனமும் சீனாவில் இல்லையெனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று இந்த விடயம் தொடர்பில் விளக்கமளித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். இதிலேயே அவர் இதற்கான பதிலை வழங்கியுள்ளார். http://www.dailyceylon.com/189572/

ஜே.வி.பி. யுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி?

44 minutes 56 seconds ago
ஜே.வி.பி. யுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி? ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மேற்கொள்வதற்கு பல்வேறு மாற்று வழிகள் காணப்படுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அறிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியாக வேட்பாளரை நியமிப்பதற்கு விண்ணப்பம் கையளித்துள்ளது. பல்வேறு கூட்டணிகள் காணப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூட்டணி அமைக்கவும் எம்மால் முடியும் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். சுதந்திரக் கட்சியின் கிராமிய மட்டம் முதல் எம்.பிக்கள் வரையில் சகலருடையவும் எதிர்பார்ப்பு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதாயின் பொதுச் சின்னம் ஒன்றில் போட்டியிட வேண்டும் என்பது. இதனை எம்மால் விட்டுக் கொடுக்க முடியாது. அவ்வாறு விட்டுக் கொடுத்துவிட்டு மீண்டும் கட்சி உறுப்பினர்களை சந்திக்க முடியாமல் போகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது கட்சியின் சின்னத்துக்கு மக்களின் அங்கீகாரம் உள்ளதாகவும், உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இதனை நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்து வருகின்றது. இந்நிலையில், கட்சியின் சின்னத்தை மாற்றினால்தான் கூட்டணி என்றிருக்கும் ஸ்ரீ ல.சு.கட்சிக்கு பேச்சுவார்த்தையில் வெற்றிபெற முடியாது என்பது சாதாரணமாக புரியும் ஒன்றாகும். அத்துடன், ஐக்கிய தேசிக் கட்சியின் கொள்கையுடன் உடன்படாததன் விளைவாகவே, நல்லாட்சி அரசாங்கத்தை கலைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த அனுபவத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதென்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். வேறு வழியின்றி அவ்வாறான ஒரு தீர்மானத்துக்கு கட்சி வந்தாலும், மக்கள் மன்றத்தில் அதற்கு எதிர்ப்பு எழும் என்பது மட்டும் நிச்சயமானது. இந்த நிலையில் ஸ்ரீ ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் சொன்னது போன்று மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டுச் சேர்வதைத் தவிர வேறு வழியில்லை. இதேவேளை, சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி கூட்டணி அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இருந்ததாக கூட்டு எதிரணி குற்றம்சாட்டி வந்தது. இதனாலேயே இறுதித் தருவாயிலில், பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், தனித்துப் போட்டியிடுவதற்கான வேட்பாளர் விண்ணப்பத்தையும் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்க முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தையை இழுத்தடிப்புச் செய்வதற்கு காரணம், சஜித்தின் தீர்மானம் வெளிவரும் வரையிலாகும் என்ற குற்றச்சாட்டும் பொதுஜன பெரமுனவுடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்களினால் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. இப்போது, சஜித் பிரேமதாசவும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியே வருவதாக தெரியவில்லை. இதற்கான எந்தவொரு சமிக்ஞையையும் இதுவரை பொது மேடைகளில் அவர் வெளியிடவில்லை. கட்சித் தலைமையின் மீது தனக்கு நம்பிக்கையிருப்பதாகவே அவர் கூறிவருகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொதுஜன பெரமுனவை குற்றம்சாட்டும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். தாமரைக் கோபுரத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், கடந்த அரசாங்கத்தில் இக்கோபுர நிர்மாணப் பணியில் 200 கோடி ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார். இது தற்பொழுது அரசியல் அரங்கில் பேசு பொருளாக மாறியுள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும் இக்கருத்துக்கு எதிராக நேற்று (18) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அத்துடன், பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அனைவரினதும் எதிர்ப்புக்கும் ஜனாதிபதியின் கருத்து மாறியுள்ளது. தேர்தல் நெருங்கும் போது ஜனாதிபதி பொதுஜன பெரமுனவுக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு அரசியல் மட்டத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றது. இப்படியான ஒரு சூழ்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இலவு காத்த கிளி போன்ற நிலைமை ஏற்படுமா? என கட்சியின் மீது அக்கரையுள்ள பொது மக்களுக்கு அச்சம் இருக்கின்றது என்பது மட்டும் மறைந்துள்ள உண்மையாகும். (மு) – முஹிடீன் இஸ்லாஹி http://www.dailyceylon.com/189574/

வேட்புமனு தாக்கலுக்கு 2 மணி நேரமே காலஅவகாசம்

48 minutes 24 seconds ago
வேட்புமனு தாக்கலுக்கு 2 மணி நேரமே காலஅவகாசம் Sep 19, 2019 | 10:24by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் இன்று தொடக்கம் கட்டுப்பணத்தை செலுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நொவம்பர் 16ஆம் நாள் நடத்தப்படவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஒக்ரோபர் 6ஆம் நாள் மதியம் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும். அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாவையும், சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் 75 ஆயிரம் ரூபாவையும் கட்டுப்பணமாக தேர்தல்கள் செயலகத்தில் செலுத்த வேண்டும். ஒக்ரோபர் 6ஆம் நாளுடன் கட்டுப்பணம் செலுத்துவதற்காக கால எல்லை முடிவடையும். ஒக்ரோபர் 7ஆம் நாள், வேட்புமனுத் தாக்கல் இடம்பெறும். அன்று காலை 9 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. http://www.puthinappalakai.net/2019/09/19/news/40100

பி.ப 3 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் – கொழும்பு அரசியலில் பரபரப்பு

50 minutes 54 seconds ago
பி.ப 3 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் – கொழும்பு அரசியலில் பரபரப்பு Sep 19, 2019 | 10:11by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் 3 மணியளவில் அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். சிறிலங்கா அதிபரை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தியதை அடுத்தே, இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களையும் தவறாமல் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான, 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்து, அமைச்சரவையின் ஒப்புதலைக் கோருவார் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த திருத்த வரைவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்தால், வரும் 24ஆம் நாள் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் அது சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதிபர் பதவியை ஒழிப்பதற்காக திருத்தச்சட்ட வரைவு அமைச்சரவையில் விவாதிக்கப்படவுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.puthinappalakai.net/2019/09/19/news/40098

அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் முன்னாள் இராணுவத் தளபதி?

53 minutes 5 seconds ago
அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் முன்னாள் இராணுவத் தளபதி? Sep 19, 2019 | 10:50by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் அதிபர் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை வேட்பாளராக களமிறக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக, தேசிய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்கக் கூடிய ஒரு வேட்பாளர் குறித்தும், அரசியல்வாதி அல்லாத ஒரு வேட்பாளரை நிறுத்துவதன் நன்மை தீமைகள் குறித்தும் தேசிய மக்கள் இயக்கம் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவிடம் கேட்டபோது, அவ்வாறான முடிவை தான் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். “நேரம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். நாட்டின் அரசியல் முறையில் மாற்றம் இருக்க வேண்டும். இந்த சிக்கலை தீர்க்க உதவ நான் தயாராக இருக்கிறேன். இருப்பினும், தேர்தலில் போட்டியிட நான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். நாட்டின் அரசியல் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படும் புலமையாளர்களைக் கொண்ட தேசிய மக்கள் இயக்கம், முன்னதாக, முன்னாள் சட்டமா அதிபர் காமினி விஜேசிங்கவை அதிபர் வேட்பாளராக களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. http://www.puthinappalakai.net/2019/09/19/news/40107

திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஆக்கங்கள் கோரல்

1 hour 59 minutes ago
திலீபனின் நினைவு தூபியை புனரமைக்கத் தீர்மானம் -என்.ராஜ் தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியைப் புனரமைப்பதென, யாழ்ப்பாணம் மாநகரசபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநகர சபையின் மாதாந்த அமர்வின் ஒத்திவைப்பு அமர்வு, இன்று (19) நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/திலீபனின்-நினைவு-தூபியை-புனரமைக்கத்-தீர்மானம்/71-238835

வேட்பாளர் விடயத்தில் ரணில் தவறிழைத்து விட்டார் – மனோ!

2 hours 1 minute ago
ஆசையால் ஐ தே க அழியுமா இல்லை இரணிலை குறைத்து மதிப்பிட்டோமா ?, காலம் பதில் சொல்லும். கடந்த கால நிகழ்வுகளை வைத்து பார்க்குபொழுது இரணில் ஒரு நரி என்பதும் தோல்விகளை வெற்றியாக மாற்றும் தந்திரசாலி என்பதும் உண்மை என பார்க்கலாம்.

கனடா பாராளுமன்றம் கலைப்பு – ஆளுனர் ஒப்புதல்

2 hours 15 minutes ago
ஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் இளமை காலத்தில் இனவெறியை வெளிப்படுத்தினாரா? தனியார் பள்ளி கொண்டாட்டம் ஒன்றில் தோலில் பழுப்பு நிறத்தில் வண்ணங்களைப் பூசி கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றது சர்ச்சையாகி உள்ளது. இந்த நிகழ்வும் இப்போது நடந்தது இல்லை. 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு இது. அந்த சமயத்தில் ஜஸ்டின் கல்வி நிலையம் ஒன்றின் பயிற்றுநராக இருந்தார். இந்த புகைப்படமானது'டைம்' இதழில் வெளியானது. இதனை தொடர்ந்து வருத்தம் தெரிவித்த அவர், "அரேபிய இரவுகளைக் கருப்பொருளாகக் கொண்டு கொண்டாடப்பட்ட நிகழ்வு அது. அதன் காரணமாக நான் அவ்வாறாக உடை அணிந்து இருந்தேன்" என்றார். தேசிய கனடிய முஸ்லிம் மன்றம் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் இயக்குநர் முஸ்தஃபா ஃபரூக், "பிரதமரின் இந்த செயல் கவலை தருகிறது. இது போன்ற பழுப்பு / கருப்பு வண்ண நிற முகமூடிகளை அணிவது நிந்திக்கும் செயல்," என்றார். புதிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜக்மீத் சிங், இந்த புகைப்படமானது பிறரை அவமதிப்பது போல உள்ளதென தெரிவித்துள்ளார். அக்டோபர் 21ஆம் தேதி அங்குத் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் இந்த புகைப்படம் பெரும் விவாதத்தை அங்கு கிளப்பி உள்ளது. தேர்தல் கருத்துக் கணிப்புகளும் இந்த தேர்தலானது ஜஸ்டினுக்கு கடினமான ஒன்றாக இருக்குமென்றே தெரிவிக்கின்றன. https://www.bbc.com/tamil/global-49750315

புலிகள் உறுப்பினர் நிஸாரின் மகன்தான் ஆசாத், சியோன் தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தியது

2 hours 40 minutes ago
இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் எனக் குறிப்பிட்டு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், பேஸ்புக் இல் பதிவொன்றினை இட்டிருந்தார். அந்தத் தகவல் அநேகருக்கு புதியதாகவும் ஆச்சரியமானதாகவும் இருந்தது என்பதை, பஷீரின் பதிவுக்கு எழுதப்பட்ட கருத்துக்களின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. மட்டக்களப்பு மாவட்டம் ஏறா வூரைச் சேர்ந்த பஷீர் சேகுதாவூத், ஈரோஸ் ஆயுதப் போராட்ட இயக்கத்தின் முன்னாள் மூத்த போராளி என்பதோடு, அந்த இயக்கம் சார்பில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பயணத்தை ஆரம்பித்தவருமாவார். அதனால், தமிழ் ஆயுத இயக்கங்களில் இணைந்து செயற்பட்ட தனது பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் அவர் பெரிதும் அறிந்திருந்தார். சியோன் தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை முஹம்மட் நஸார் என்பவர், 1985ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர் என்றும், அதற்காகவே அவர் கொல்லப்பட்டதாகவும், பஷீர் சேகுதாவூத் தனது பதிவில் விவரித்திருந்தார். இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு பிபிசி தமிழ் பலரைச் சந்தித்தது. ஆசாத் - நடந்த கதை அதற்கு முன்னர், ஆசாத் பற்றிய தகவல்களை அறிந்திருந்தல், இந்தக் கட்டுரையை விளங்கிக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்பதால், அவர் தொடர்பில் சுருக்கமாக சில தகவல்களை இங்கு வழங்குகின்றோம். மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர். மரணிக்கும் போது அவருக்கு 34 வயது. அவரின் தயாரின் பெயர் லத்திபா பீவி, தந்தை நஸார். இருவரும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள். அம்பாறை மாவட்டம் கல்முனை - இஸ்லாமாபாத் பகுதியில் ஆசாத் திருமணம் முடித்திருந்தார். அவரின் மனைவியின் பெயர் பைறூஸா. இவரும் ஈஸ்டர் தாக்குதல்தாரிகளின் உறவினர்களுடன் சாய்ந்தமருதில் மறைந்திருந்த போது இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் பலியாகி விட்டார். சியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் நடந்த பின்னர், அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆசாத்தின் தலை உள்ளிட்ட உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றினை அடக்கம் செய்யுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. இதனையடுத்து, மட்டக்களப்பு - கள்ளியங்காடு இந்து மயானத்தில் ஆசாத்தின் உடற்பாகங்களை ஆகஸ்ட் 26ஆம் தேதி போலீஸார் அடக்கம் செய்தனர். ஆனால் அந்தப் பிரதேச மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, குறித்த உடற்பாகங்களை அங்கிருந்து அகற்றுமாறு கூறி, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஆசாத்தின் உடற்பாகங்களை தோண்டியெடுக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கமைவாக கடந்த 2ஆம் தேதி, கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட உடற்பாகங்களை போலீஸார் தோண்டியெடுத்தனர். தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்கொலைக் குண்டுதாரி ஆசாத்தின் உடற்பாகங்கள் மீண்டும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த உடற்பாகங்களை எதிர்வரும் 26ஆம் தேதிக்குள் அடக்கம் செய்யுமாறு, மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆசாத்தின் தந்தை நஸார் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்கிற போதும், அவரைப் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு காத்தான்குடியில் நாம் சந்தித்த அநேகர் தயக்கம் காட்டினர். சிலரை பெரும் பிரயத்தனங்களுக்குப் பின்னர் இது பற்றிப் பேசுவதற்கு இணங்கச் செய்த போதும், தம்மைப்பற்றிய அடையாளத்தை வெளியிடக் கூடாது என்கிற உத்தரவாதங்களை எம்மிடம் அவர்கள் பெற்றுக் கொண்டனர். ஆசாத்தின் தந்தை நஸார், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1988ஆம் ஆண்டு காலப் பகுதியில் இணைந்து செயற்பட்டு வந்ததாக, காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் பிபிசி தமிழ் இடம் தெரிவித்தார். அவ்வாறு புலிகள் இயக்க உறுப்பினராகச் செயற்பட்டமைக்காகவே, 1990ஆம் ஆண்டு காத்தான்குடியில் வைத்து, அப்போது ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினரால் நஸார் கொல்லப்பட்டதாகவும் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் கூறினார். இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவில் சுமார் 10 வருடங்கள் அஸ்பர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1990ஆம் ஆண்டு காத்தான்குடி 5ஆம் பிரிவு - கிளினிக் வீதியில் அமைந்துள்ள தன்னுடைய மூத்த சகோதரியின் வீட்டில் வைத்து, நஸார் மீது அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. "நானும், எனது தாயாரும், என்னுடைய சிறிய வயது பிள்ளைகளும் வீட்டில் இருந்த போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. எங்கள் வீட்டுக்குப் பின் பக்கம் நஸார் கத்தும் சத்தம் கேட்டது. நாங்கள் ஓடிச் சென்று பார்த்தபோது அவர் கடுமையான வெட்டுக் காயங்களுடன் விழுந்து கிடந்தார். யாரோ சிலர், அவரை வெட்டி விட்டு தப்பிச் சென்றிருந்தார்கள்". "காயப்பட்ட அவரை வீட்டுக்குள் தூக்கிக் கொண்டு வந்து கிடத்தினோம். அப்போது அங்கு திடீரென வந்த ஒருவர், வெட்டுக் காயங்களுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நஸாரை, துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடினார். நஸாரின் உயிர் பிரிந்து விட்டது" என்று, 29 வருடங்களுக்கு முன்னர், நஸார் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்தார் அவரின் மூத்த சகோதரி சுபைதா உம்மா. ஆனாலும், நஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று தனக்குத் தெரியாது என்கிறார் அவர். நஸாரின் மூத்த சகோதரியை காத்தான்குடியிலுள்ள அவரின் வீட்டில்தான் நாம் சந்தித்துப் பேசினோம். அது உயரம் குறைந்த - ஒரு சிறிய வீடு. நாங்கள் பேசிக் கொண்டிருந்த அறையின் தரையை கையால் சுட்டிக்காட்டி, "இந்த இடத்தில் நஸாரை கிடத்தியிருந்த போதுதான் அவரின் உயிர் பிரிந்தது" என்றார். நஸாரின் பெற்றோருக்கு 7 பிள்ளைகள். அவர்களில் நால்வர் ஆண்கள். நஸார் எப்போது பிறந்தார் என சுபைதா உம்மாவுக்கு நினைவில்லை. ஆனாலும் அவர் கூறிய சில தகவல்களை வைத்து 1957ஆம் ஆண்டு நஸார் பிறந்திருக்கலாம் என அனுமானிக்க முடிந்தது நஸார் கொல்லப்பட்ட வீட்டுக்கு அருகில் வசிக்கும் நபரொருவரும் 'அந்த சம்பவம்' பற்றி பிபிசி தமிழ் இடம் பேசினார். ஆயினும், தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். "1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதனால், எங்கள் வீதியில் போலீஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இரவு வேளைகளில்தான் அங்கு போலீஸார் வருவார்கள். நஸார் மீது காலை 11.00 மணியளவில் அந்தத் தாக்குதல் நடந்தது. புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தமைக்காகத்தான் அவர் கொல்லப்பட்டார்" என்றார் அந்த அயல்வீட்டுக்காரர். நஸாரின் ஜனாஸாவுக்கு காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பெரிய பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தது என்றும், அந்தப் பள்ளிவாசலுக்குரிய மையவாடியில்தான் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது எனவும் அவர் மேலும் கூறினார். ஆரம்பத்தில் நஸார் கைத்தறியில் நெசவு வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அவர்களில் ஒருவர்தான் சியோன் தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத். http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_793.html

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 45 பேர் இஸ்லாத்தை தழுவி தாக்குதலுக்கு தயாராவதாகக் கூறப்படுவது பொய்!’

2 hours 49 minutes ago
(ரெ.கிறிஷ்ணகாந்) இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 45 பேர் இஸ்லாம் மதத்தை தழுவி உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலை ஒத்ததான தாக்குதலுக்கு தயாராகி வருவதாகக் கூறப்படும் விடயத்தை முற்றாக மறுப்பதாகவும், இது தொடர்பில் இராணுவ மட்டத்தில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் கடந்த 16 ஆம் திகதியன்று ஊடக சந்திப்பொன்றை நடத்திய, மக்கள் சேவை அமைப்பு என்ற அமைப்பின் தலைவர் எனக் கூறப்படும் ரிஷாம் மரூஷ் என்ற நபர், கொமாண்டோ படையணியைச் சேர்ந்த அசங்க பிரியந்த என்பவரின் அறிவுறுத்தலுக்கமைய, பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 45 பேர் இஸ்லாம் மதத்தைத் தழுவி தாக்குதல் ஒன்றை நடத்த தயாராவதாக கூறியிருந்தார். இது தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளரிடம் மெட்ரோ நியூஸ் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதன்போது, அவர் மேலும் கூறுகையில், குறித்த நபர் தெரிவித்துள்ளதாக கூறப்படும் விடயங்கள் எவ்வித அடிப்படையுமற்றது எனவும், தன்னை பிரபல்யப்படுத்துவதற்காக இவ்வாறாக கூறப்படும் தகவல்களால் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை என்றார். அத்துடன், இந்த ஊடக சந்திப்பை நடத்திய நபர் தொடர்பிலும், அவரால் கூறப்பட்ட கொமாண்டோ படையணியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுபவர் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்கவு ள்ளதாகவும் விரைவில் குறித்த நபர்களை அழைத்து வாக்குமூலம் பெறவுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, சந்தேகநபர் எனக்கூறப்படும் இராணுவத்தின் உறுப்பினர் பேஸ்புக் மூலமாக தகவல்களை பரிமாறியுள்ளதாக ரிஷாம் மரூஸ் தெரிவித்திருந்தார். அத்துடன் அவருடன் ஸ்கைப்பில் உரையாடியதாக புகைப்பட ஸ்க்ரீன் ஷொட் ஒன்றையும் மரூஸ் காண்பித்திருந்தார். இந்நிலையில், பேஸ்புக் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மேற்படி வெளிப்படுத்தல் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். https://www.madawalaenews.com/2019/09/45.html

தீக்குளிப்போம்... உண்ணாவிரதம் உள்ள பட்டதாரிகள் எச்சரிக்கை.

2 hours 51 minutes ago
48 மணித்தியாலங்களுக்குள் எழுத்து மூலமாக, தமக்கான நிரந்தர தீர்வை அறிவிக்காத பட்சத்தில் தீக்குளிப்போமென, அரசாங்கத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில், அரச வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் சிலர், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இன்று (19) நிரந்தர நியமனம் கோரி, உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, பட்டதாரிகள் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தனர். https://www.madawalaenews.com/2019/09/blog-post_959.html

காஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்

2 hours 51 minutes ago
இந்தியாவுடன் ஒருதொகை சமஸ்தானங்கள் இணைந்த போது பாகிஸ்தானுடன் காஷ்மீர் இணைந்தால் என்ன என்று கேட்டேன். இலங்கையில் தமிழீழம் உருவானால் நாளை தமிழகமும் தனிநாடாக இருக்க விரும்பும் என பலர் கருதுவது வேறு பிரச்சினை. காஷ்மீர் பிரச்சினை அப்படியல்ல. அது இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது மன்னர் சமஸ்தானங்களை ஏதாவது ஒன்றுடன் இணையுமாறு அல்லது தனிநாடாக இருக்குமாறு கூறப்பட்டது. அதன்போது காஷ்மீர் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட சமஸ்தானம் என்ற ரீதியில் பாகிஸ்தானுடன் இணைந்தால் அது அவர்கள் விருப்பம். ஆனால் அந்நேரம் காஷ்மீர் மக்கள் காஷ்மீர் தனி நாடாக இருப்பதையே விரும்பினார்கள்.
Checked
Thu, 09/19/2019 - 10:30
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr