புதிய பதிவுகள்

ஈரோட்டை தலைநகராக கொண்டு கொங்குநாடு -- தனி மாநிலம் அமைக்க கோரிக்கை.!

3 hours 52 minutes ago
ஈரோட்டை தலைநகராக கொண்டு கொங்கு நாடு தனி மாநிலம்... பொங்கலூர் மணிகண்டன் கோரிக்கை.! சென்னை: கொங்கு நாடு என்ற பெயரில் 12 மாவட்டங்களை உள்ளடக்கி ஈரோட்டை தலைநகராகக் கொண்டு தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என அமமுக நிர்வாகி பொங்கலூர் மணிகண்டன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பொங்கலூர் மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை: நீ லகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல்,, கரூர், திருச்சி,சேலம், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி கிருஷ்ணகிரி ஆகிய 12 மாவட்டங்களை இணைத்து கொங்கு நாடு என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த மண்ணும் கொங்கு நாடே. கொங்கு நாட்டின் ஒரு பகுதியான மலபார் ஜில்லா, பாலக்காடு கேரளாவுடன் மொழிவாரியாக மாநிலப் பிரிவினை நடைபெற்ற போது இணைக்கப்பட்டு விட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்ட மக்கள் நிறைந்ததே கொங்குநாடு. 1994 ல் ஜெயலலிதா ஆட்சியின் போது கரூரில் நடைபெற்ற கொங்கு மக்கள் 10 லட்சம் பேர் திரண்ட மாநாட்டில் கோவை செழியன் பேசும் போதும் போது, கொங்கு நாடு தனி மாநிலம் ஆக்கப்பட வேண்டும். என்பதை வலியுறுத்தி அதற்கான காரணங்களையும் விளக்கிப் பேசினார். அவரது எண்ணம் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. கொங்கு மைந்தர் எம்ஜிஆர் எம்.ஜி.ஆர் நேசித்த மண். அவரது பூர்வீகம் கொங்கு நாடு மட்டுமல்ல, மன்னாடியார் எனும் பட்டப் பெயர் கொண்ட கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான் அவர் என்பதை கோவை செழியன் வெளிப்படையாக எம்.ஜி.ஆரை நிறுவனராகக் கொண்டு வெளி வந்த அண்ணா என்ற பத்திரிக்கையில் எழுதியும், பேசியும் வந்தார். எம்.ஜி.ஆரை மலையாளி என்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியும் திமுகவினரும் பிரச்சாரம் செய்து வந்த நிலையில் கோவை செழியன் எழுதிய கட்டுரையால் அகமகிழ்ந்தார் எம்.ஜி.ஆர். கொங்குநாடு தலைநகர் ஈரோடு கொங்கு நாடு தனி மாநிலம் ஆக்கப்பட அனைத்து தகுதிகளும், வளங்களும், வாய்ப்புகளும் நிறைந்தே இருக்கிறது. இந்தியாவில் பல பெரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோடு நகரத்தை தலைநகராகக் கொண்டு தனி மாநிலம் உருவாக்கி அதற்கு கொங்கு நாடு என்று பெயரிட வேண்டும். கொங்கு நாடு என்பது மண்ணுக்குரிய பெயர். உழைக்கும் மக்களின் மண் சாதி, மதம், இனம், மொழி, நிறம் என எந்தப் பாகுபாடுமின்றி அனைவரையும் அரவணைத்து மரியாதையுடன் அன்புடன், சண்டை சச்சரவுகளின்றி அமைதிப்பூங்காவாக வாழும் மக்களை கொண்டது. அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் தொழில்வளம் நிறைந்து உலகிற்கே உணவளிக்க உழவுத் தொழில் காக்க உழைக்கும் மக்களை கொண்ட மண். தனி மாநில கனவு தேனினும் இனிய அழகிய கொங்கு தமிழில் பேசி தனித்துவம் கொண்ட தமிழ் மக்கள் நிறைந்ததே கொங்கு மண். இந்த மண்ணில் .உழைப்பு, உழைப்பும் உழைப்பு இவற்றை மட்டுமே மூலதனமாகக் கொண்ட கொங்கு நாட்டு மக்களின் நீண்ட நாள் கனவான தனி மாநிலமாவதன் மூலம் பெரும் வளர்ச்சியை கொங்கு நாடு அடையும். அதன் மூலம் தேசம் வலிமை பெறும்.நிர்வாக ரீதியாகவும் மக்களின் நலன் கருதியும் மாநில பிரிவினை அவசியமாகும். சென்னை தமிழகத்தின் தலைநகர் என்பதற்கான அனைத்து தகுதியையும் இழந்து வருகிறது. மாநிலமாக பிரிக்க வலியுறுத்தல் மக்கள் வாழத் தகாத ஊராக சென்னை மாறி வருகிறது. நிலப்பரப்பு, மக்கள் தொகை, நிர்வாக அமைப்புகள் என தமிழகம் பெரிய சுமையில் சிக்கித் தவிக்கிறது. மக்களின் நலன் கருதி மாநிலம் பிரிப்பு, மாவட்டங்கள் பிரிப்பு என்பது குற்றமோ, தவறோ இல்லை என்பதால் தமிழ்நாடு மாநிலப் பிரிவினையும், மாவட்டங்கள் பிரிவினையும் மிகவும் அவசியமாகும். எனவே ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட தனி மாநிலக் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்று செயல்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் ஆதரவு தர கோரிக்கை தனி மாநிலம் கேட்பதால் மற்ற மாவட்டத்து மக்கள் எங்கள் எதிரியல்ல. தமிழ் தான் உயிர் மொழி. தாய் மொழி. தமிழர்கள் எல்லோரும் உற்ற சகோதர உறவுகளே. இந்தப் பாசம் எப்போதும் இருக்கும்.இதற்கு அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், மக்கள் என அனைவரும் ஆதரவு தர வேண்டும் இவ்வாறு பொங்கலூர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/western-tn-demands-kongu-nadu-separate-state-360524.html டிஸ்கி : காசுமீர் === கிந்தியவின்ர சூழ்ச்சி குறித்து நாமதான் முன்னாடியே சொன்னம்ல ..😊

JVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..

5 hours 29 minutes ago
கூட்டமைப்பினர் என்று சொல்ல வந்தீர்களாக்கும். நான் அம்பனையின் கருத்தையும் வாசித்து விட்டு எழுதியதால் முஸ்லிம்கள், தமிழர்கள் என பொதுப்படையாக எழுதி விட்டேன். 😀

’அறநெறி வகுப்புகளால் குற்றச்செயல்கள் தடுக்கப்படுகின்றன’

5 hours 44 minutes ago
அவர்கள் வளர்ந்து தமது பகுத்தறிவால் நீக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளதாக நீங்களே ஒத்துக்கொள்ளுகின்றீர்கள். அவற்றை கற்பிப்போர் வளர்ந்தவர்கள் தானே. அவர்களே காலத்திற்கு ஒவ்வாத மூடத்தனங்களை நீக்கிவிட்டு கற்பிக்கலாம் தானே. இது தானே மானுட வளர்ச்சி.

சைவ சமயத்துக்கு தலைமைப்பீடம் அவசியம்

5 hours 57 minutes ago
இருக்கிறது. அது தான் மேலைத்தேய நாடுகள் முன்னேறி உள்ளன. மதங்களை கைவிட வேண்டிய அவசியமே இல்லை. அவற்றை கண்டுக்காமல் அது பாட்டுக்கு ஒரு ஓரத்தில் நின்று விளையாட விட்டு விட்டு மக்கள் தமது காரியங்களை ஆற்றினாலே போதும் நாடு முன்னேறும்.

காஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்

5 hours 58 minutes ago
நீங்கள் ஏன் இதை இங்கே சொல்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. சீனாவையும் பாக்கிஸ்த்தானையும் நாம் ஆதரிக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை, ஆனால் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்து எமது வாழ்வை மீட்டெடுப்பதற்கு வேறு தெரிவுகள் இருந்தால் அவை பற்றிச் சிந்திப்பதிலும் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால், இந்த ராஜதந்திர இடியப்பச் சிக்கல்களுக்கப்பால், காஷ்மீரிகளின் உண்மையான அவலங்கள் அடிபட்டுப் போகின்றன என்பதுதான் எனது கருத்து. இந்தியா மீதான எமது அபிமானமும், விசுவாசமும், நம்பிக்கைகளும் இதுவரையில் எமக்கு எதைக் கொணர்ந்தன என்று பார்த்தால் நாம் ஏறியிருக்கும் மரமே தவறென்று எனக்குப் புரியும். அதுமட்டுமல்லாமல், அது எனக்காக கழுமரம் என்பதும் துலங்கும்.

உண்மையை கூறிவிட்டு கோட்டா தேர்தலில் நிற்கட்டும்

6 hours 22 minutes ago
பகிரங்கமாக வெளிப்படுத்தினால் அவர் மின்சாரக் கதிரையில் அல்லவா இருக்கவேண்டும். தேர்தலில் எப்படி நிற்க முடியும்.?

சைவ சமயத்துக்கு தலைமைப்பீடம் அவசியம்

6 hours 32 minutes ago
இலங்கையில் காலனித்துவ ஆட்சி நிலவியபோது ஒல்லாந்தர் போத்துகேயர் காலத்திலும் இறுதியில் ஆங்கிலேயர் இருந்தபோதும் வகை தொகையின்றி இலட்சக்கணக்கில் சைவர்கள் வாழ்வாதாரம் தொழில் கல்வி வேறு காரணங்களுக்குமாக மதம் மாற ஒப்புக்கொண்டார்கள். அண்மைகாலங்களில் போர் ஓய்வுக்குவந்தபின் ஏற்பட்ட கஸ்டமாக வாழக்கை நிலையை காரணம்காட்டி சைவசமயத்தைச் சார்ந்தவர்களை மதம்மாற்றி கவந்து இழுப்பதில் வேறு சமயங்களைச் சார்ந்த மதம்மாற்றிகள் பல வழிகளிலும் முயற்சிப்பதையும் கேள்விப்படுகிறோம். ஏற்கனவே பல சைவர்கள் இவர்களால் மதம் மாற்றப்பட்டும் விட்டார்கள். இன்றும் இந்த நிலமை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. எமது அரசியல்வாதிகள் இதைக்கண்டு ஆவன செய்வார்கள் என்று நாம் நம்புவதில் பயனில்லை. தமிழர்கள் ஒரு மையக் கட்டமைப்பை இஸ்தாபிப்பதன் மூலம் தமிழ் அரசியல் கட்சிகளை ஒருங்கமைத்து அவர்களை ஒரே கோட்டில் பயணிக்கவைக்க வேண்டும். அவர்களுக்கான வேலைத்திட்டங்களை பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால் அது மதத்தலைவர்கள் பக்கமிருந்து உருவாகக்கூடாது. இன்று அரசியல் தலைவர்கள் ஏட்டிக்கு போட்டியாக இயங்குவதும், தான் சொல்வது எடுபடவில்லையென்றால் வெளியேறி புது கட்சி தொடங்குவதும் வழக்கமாகிவிட்டது. தமிழினம் தனது சொந்த பிரச்சினைகளையே பேசி தீர்க்கும் நாதியில்லாத ஒரு இன ஒற்றுமையற்ற முரண்பாடுள்ள சமுதாயமாக மாறிக்கொண்டிருக்கிறது. உண்மையில் நாம் திட்டமிட்டு அப்படி மாற்றப்பட்டுள்ளோம். இதனால் இலங்கையின் அரசியல் அரங்கில் எமது உரிமை தனித்துவம் தொழில் வாய்ப்பு கல்வி பொருளாதாரம் என்பன சிங்கள ஆட்சியாளர்களால் சூறையாடப்படுகிறது. விடுதலைப்போரின்போது ஆட்சியாளரின் வாசல் வரைக்கும் கொண்டுசெல்லப்பட்டிருந்த இனப் பிரச்சினையை இனவாத சிங்கள ஆட்சியாளர்கள் சாணக்கியமாக நகர்த்தி தமிழ்மக்களின் வீட்டு வாசலில் கொண்டுவந்து போட்டுவிட்டிருக்கிறார்கள். சிறுபான்மையினங்கள் மோதி உடைக்க முடியாத ஒரு அரசியல் அரணை சிங்கள இனவாதிகள் கட்டியெழுப்பிவிட்டார்கள். தமிழினத்தின்அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெறும் சம்பந்தனும் சுமந்திரனும் போதாது. இன்னும் வேறு நல்ல தலைவர்களும் தேவை. இந்த விடயத்தை இவர்கள் இருவரும் அல்லது தமது கட்சி தீர்த்து வைக்கும் என்று நம்புவதே முட்டாள்தனம்.

காஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்

6 hours 37 minutes ago
இன ஒடுக்குதல் போரினால் பாதிக்கபட்ட ஒரு இனத்தின் இராஜதந்திரத்தின் அடிப்படை 1. முதல் எதிரி யார்? 2. முதல் எதிரியின் அணியில் உள்ளவர்கள் யார்? என்கிற இரண்டு அடிப்படையில் இருந்தே எல்லாவற்றையும் சிந்தித்தலை வலியுறுத்துகிறது. இந்த அணுகுமுறை இனம் எவ்வளவு சிறியதாக பலகீனாமக இருக்கிறதோ அதற்கேப அதிகரித்த முக்கியத்துவத்தைப் பெறும். நம்மைப் பொறுத்து அதன் அர்த்தம் பாகிஸ்தான் சீனா அணி தொடர்பாக மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதாகும். நுணி மரத்தில் இருந்துகொண்டு அடி மரத்தை வெட்டாதே என்பது அடிப்படை இராஜதந்திர பாடமாகும். - வ.ஐ.ச.ஜெயபாலன்

நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்!

7 hours 13 minutes ago
எனது கார் அந்த பொம்மையை விட சக்தி வாய்ந்தது. அதை நம்பிக்கையோடு பார்த்தாலும் காராக தான் தெரியும். நம்பிக்கை இல்லாமல் பார்த்தாலும் அது காராக தான் தெரியும்.

ஆம்ஸ்டர்டாமில் ஓர் அட்வெஞ்சர்!

7 hours 17 minutes ago
😂🤣 சிலசயயம் வேலை முடிந்து நண்பர் எவருடனும் pupக்குப் போகவேண்டி இருந்தால், வெளிக்கிடும்போது data ஐ off பண்ணிவிடுவதுண்டு; அது வேலையில் overtime மாதிரியும் காட்டியிருக்கின்றது.😬 முன்னரைவிட இப்போது பரவாயில்லை. GPS துணையுடன் network base station களில் இருந்தும் தூரத்தைக் கணித்து location ஐ சரியாக கணிக்கமுடியும். ஆனால் direct line of sight இல்லாவிட்டால் கொஞ்சம் கடினம்தான்.

காஷ்மீர் அதிர்வலைகள்

7 hours 22 minutes ago
காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2 புதினப்பணிமனைAug 19, 2019 by in கட்டுரைகள் பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், பதவிக்கு வந்த காலத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திப்பதற்கு தடையாக, பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்து வந்தன. மேலைத்தேய கல்வி அறிவையும் வாழ்க்கை முறையையும் தனது சிறு வயதிலிருந்தே பெற்று கொண்டிருக்க கூடிய முன்னைநாள் கிரிக்கட் வீரர் இம்ரான் கானின் பலநாள் ஏக்கம், ஜூலை 22 ஆம் திகதி , வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்ததன் மூலம், நிறைவேறியது என்றே கூறலாம். அமெரிக்கா கடந்த சில வருடங்களாக, ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது என்று பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டும் போக்கை கொண்டிருந்தது. இந்த சந்திப்பு அமெரிக்க – பாகிஸ்தான் உறவுநிலையில் பிரதானமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது எனலாம். ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டு வருவதில், பாகிஸ்தான் பெரும் பங்காற்றி இருக்கிறது என்றும், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக வெளியேறுவதற்கு பெரும் உதவி செய்திருந்தது என்றும், இம்ரான் கானிடம் வெள்ளை மாளிகையில் புகழ்ந்துரைத்திருந்தார் ட்ரம்ப் . அதேவேளை ஜம்மு – காஷ்மீரை இரண்டு துண்டுகளாக பிரித்து- அரசியல் சாசன அதிகாரங்களை இந்திய மத்திய அரசு கையிலெடுக்க, காரணமாக அமைந்ததும், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை பேச்சே என்பது குறிப்பிடத்தக்கது. “இந்திய பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்து, பல்வேறு தெற்காசிய விவகாரங்கள் குறித்து பேச்சுகளில் ஈடுபட்டபோது, இந்த விவகாரத்தில் நீங்கள் நடுவராக அல்லது மத்தியஸ்தராக இருக்க விரும்புவீர்களா என்று கேட்டார். நான் எங்கே என்று கேட்டேன். காஷ்மீர் விவகாரத்தில் என மோடி பதிலளித்தார்” என்று ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னிலையில் கூறினார். இதற்கு இம்ரான்கானும் நீங்கள் இந்த விடயத்தை செய்வீர்களாயின் மில்லியன் வரையிலான காஷ்மீர மக்களின் பிரார்த்தனையை பெறுவீர்கள் என்ற கூறி இருந்தார். இந்த உரையாடல் இந்தியத் தரப்பில் ஒரு அரசியல் சூறாவளியையே உருவாக்கி இருந்தது. மறுநாள் இந்திய நாடாளுமன்றத்தில் இதனை மறுதலித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இவ்வாறு ஒரு வேண்டுகோள் இந்தியப் பிரதமரால் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டதை திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்திய நாடாளுமன்றத்தில் இந்து அடிப்படைவாத முதலாளித்துவ போக்குடைய பாரதீய ஜனதாகட்சி மிகுந்த பலம் வாய்ந்த அறுதிப் பெரும்பான்மை கொண்ட நிலையில் உள்ளது. இதனால், உடனடியாக காஷ்மீர் பகுதியை இரண்டு துண்டுகளாக வெட்டி சாய்த்தது மட்டுமல்லாது , ஏற்கனவே இருந்த அதிகாரங்களையும் கிழித்தெறிந்து விட்டது. இந்த சட்டத் திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் தீர்மானத்தில் உரையாற்றிய, மதிமுக பொதுச்செயலர், வைகோ இது ஒரு ஜனநாயக படுகொலை என தனது பாணியில் இடித்தரைத்திருந்தார். இந்த விவகாரம் சட்ட விவகாரமாக்கப்படுமானால் காஷ்மீர் போராட்ட காலத்தில் மீறப்பட்ட மனித உரிமை விவகாரங்கள் எல்லாம் வெளிக் கொணரப்படும். இவற்றை மறைக்க இனப்படுகொலைகளில் ஈடுபடுவீர்களா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். காஷ்மீர் குறித்த பேச்சுக்களில் இடைத்தரகர்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த பிரச்சினைக்கான தீர்வு இந்திய -பாகிஸ்தான் இருதரப்பு உடன்பாடுகள் மூலமே நடத்தப்படும் . ஆனால் பாகிஸ்தான் எல்லையோர பயங்கரவாத நவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சரால் கூறப்பட்டது. இந்திய அமெரிக்க உறவு மிகவும் சுமூகமான நிலையில் இன்று இருக்கிறது. இரு நாடுகளும் மூலோபாய சகபாடிகளாக இருந்து வருகின்றன. இந்து சமுத்திரத்தில் இடம்பெற்று வரும் அரசியல் மாற்றங்கள், கிழக்காசியாவிலும் தென்சீன கடற்பரப்பு நடவடிக்கைகளும், மத்திய ஆசிய ஈரானிய நடவடிக்கைகளும், சர்வதேச சந்தைப்படுத்துதல்களும் என பல்வேறு மூலோபாய நடவடிக்கைகள் காரணமாக, அமெரிக்காவுக்கு மிகவும் தேவையான ஒரு சகபாடியாக இந்தியா இருந்து வருகிறது. இத்தகைய தேவைகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் பாகிஸ்தான் சார்பு மாற்றத்திற்கு என்ன காரணம் என்பது முக்கியமானதாகும். கடந்த பல வருடங்களாக பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த ஜனநாயக நாடு என்றும் பயங்கரவாத அமைப்புகளின் புகலிடம் என்றும் , சர்வதேச அரங்கில் அமெரிக்கா பறைசாற்றி வந்தது. அதேவேளை, பாகிஸ்தானிய ஆய்வாளர்கள் பலர் அமெரிக்க – இந்திய கூட்டு யுத்த சூழலை உருவாக்கும் கூட்டு என்றும், அது இஸ்ரேலிய ஸியோனிச சதிகளுக்கு அமையவே நகர்த்தப்படுகிறது என்றும் கூறி வந்தனர். ஆனால், இம்ரான்கான் பதவியை ஏற்று கொண்டதில் இருந்து சீனா எல்லா உதவிகளுக்கும் மேலாக பாகிஸ்தானின் திறைசேரி இருப்பை வலுப்படுத்தும் முகமாக 2 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக கொடுத்திருந்தது. மேலும், சீன- பாகிஸ்தானிய உறவில் அதிக உறுதிப்பாடுகள் ஏற்படும் வகையில் இருதரப்பு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டன. ஏற்கனவே சீன- பாகிஸ்தானிய பொருளாதார ஒழுங்கை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிட த்தக்கது. ட்ரம்பின் பேச்சுகள் பாகிஸ்தானுக்கு உதவுவதாக உள்ளதா அல்லது இந்தியாவின் அதீத வளர்ச்சியை பயன்படுத்தி பாகிஸ்தான் என்ற ஒரு தேசம் இல்லாது ஆக்கப்பட்டு, ஈரானை சுற்றி வளைப்பதற்கான நகர்வுகளில் ஒன்றா- என்பது தான் இங்கே உள்ள கேள்வி. ஏற்கனவே இந்திய – பாகிஸ்தான் முரண்பாடுகளை சவுதி அரேபிய நிதி உதவிகள் ஊடாகவும் வியாபார உடன்படிக்கைகள் ஊடாகவும் சமாதானம் செய்யும் முதற்கட்ட நகர்வு, மோடியின் வெற்றி வாய்பை உறுதிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்திய விமானப்படையின் குறுகிய நடவடிக்கையும் அதனை கட்டுக்குள் கொண்டு வந்த விடயமும் உறுதிப்படுத்துகிறது. இங்கே முக்கியமாக கவனிக்கதக்க விடயம் என்ன வெனில், தனது அயல்நாடுகளுடன் முதன்மையான நல்லுறவு என்ற வெளியுறவு கொள்கையை வகுத்திருக்கும் இந்தியா, தனது தனது மாநிலங்களில் பிரச்சினைகள் எழும்போது , அந்த மாநிலங்கள் சார்ந்த உப பிராந்திய நாடுகளுடன் சர்ச்சைக்குரிய வகையிலேயே தனது உள்நாட்டு விவகாரத்தை கையாள வேண்டி உள்ளது. இது காஷ்மீர் மட்டுமல்ல அசாம், திரிபுரா, மிசோராம், மேகாலயா, மணிப்பூர் போன்ற மாநில எல்லைகளில், தீவிரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில்- பல்வேறு கிராமங்கள் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ன. மேற்குவங்கமும் வங்காள தேசமும் இதேபோல, பல்வேறு பிராந்திய உப பிராந்திய பிரச்சினைகளை கண்டுள்ளது, தமிழ்நாடும் சிறிலங்காவும் உத்தர்காண்டும் நேபாளமும் என இன தொடர்ச்சி சார்ந்த பல்வேறு சமூக, மொழி, மத பிரச்சினைகளை கொண்டிருக்கின்றன. இந்தநிலையானது, நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசு அற்ற தரப்புகளால் அணுகப்படும் பொழுது, அது மத்திய – புறநில விவகாரமாக இந்தியாவில் உருவெடுத்து விடுகிறது என்பதாகும். இதனை உணர்ந்து புதிய அணுகுமுறைகளை தமிழர்கள் தமிழ்நாட்டுடன் ஏற்படுத்தி கொள்ள வேண்டியது குறிப்பிட த்தக்கதாகும். தமிழ் நாட்டில் கல்வியும் பகுத்தறிவும் சமூக நீதியும் மொழிப்பற்றும் இந்தியாவிலேயே மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பது அறிவு சார்ந்த தொடர்புகளை இலகுவாக, ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது தற்போதைய அரசியல் நிலைக்கு ஏற்றதாகப்படுகிறது. -லண்டனில் இருந்து லோகன் பரமசாமி http://www.puthinappalakai.net/2019/08/19/news/39601

காஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்

7 hours 48 minutes ago
கோஷான், நீங்கள் சொல்வது சரி. காஷ்மீரிகளுக்குச் சார்பான நிலைப்பாட்டினை ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைகள் இன்று எடுப்பார்களானால், அது நிச்சயமாக இந்தியாவை ஆத்திரப்படவைக்கும். ஆனால், நாம் காஷ்மீர் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவில்லையென்றால்க் கூட இந்தியா எமக்கு சாதகமான தீர்வொன்றினைத் தரும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. ஆக, இந்தியா எனக்கொரு தீர்வைத் தரலாம் என்று நாங்களே நம்புகின்ற ஒரு கனவுநிலைக்கு வேண்டுமென்றால் எமது காஷ்மீர் ஆதரவு நிலைப்பாடு ஒரு பிரச்சனையாகலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இங்கே பிரச்சினையென்னவென்றால், காஷ்மீரில் இந்தியாவின் நிலைப்பாட்டினை நாம் ஆதரிப்பதென்பது, இலங்கையில் எமது நிலையினை இன்னும் பலவீனப்படுத்தும் என்பது நாம் பலரும் பார்க்கத் தவறும் ஒரு விடயம். காஷ்மீர் தனக்கான சலுகைகளை இழப்பதையும், பெயரளவிலிலேயே மட்டும் இருக்கும் சிறப்புரிமைகளையும் இழப்பதையும் நாம் ஆதரிப்பதென்பது, எமக்கு வரக்கூடிய (நாம் இன்றுவரை இந்தியா மூலமாகக் கிடைக்கலாம் என்று நம்பும்) ஒரு சில சலுகைகளையும் இல்லாமல் ஆக்கிவிடாதா? காஷ்மீரிகளுக்குத் தரமறுக்கும் ஒரு உரிமையை, இந்தியா எமக்குத் தருவதற்கான சாத்தியம் என்ன? அப்படி இந்தியாவிற்கு இருக்கும் தேவை என்ன? ஆனால், இந்த அரசியல் தளம்பற்றி நான் மேலே பேசவில்லை கோஷான். எனது ஆதங்கம் காஷ்மீரத்து மக்களின் போராட்டம் தொடர்பாகவும், அதற்கான காரணங்கள் தொடர்பாகவும், அவர்களின் அவலங்கள் தொடர்பாகவும் எமக்கிருக்கும் புரிதலையும், நிலைப்பாட்டையும்தான்.
Checked
Mon, 08/19/2019 - 12:34
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr