புதிய பதிவுகள்

மர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு

2 days 4 hours ago
இப்படி அரைகுறையா சொல்லப்படாது..! திரிக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் கொசுறு தகவல்: 'காவல் நிலையத்தில் ரசினி மேல் வழக்கு பதிவு செய்துவிட்டு, தீர்வு கிடைக்கவில்லையெனில் நீதிமன்றம் வரவும்' என நீதியரசர் சொல்லிவிட்டு பெரியாரை உயர்வாகத்தான் பேசியுள்ளார்..

அன்புள்ள பரிமளம் அறிவது!

2 days 4 hours ago
நியாயமா குமாரசாமியின் வேஸ்ட் & பேஸ்ட்டில்தான் ஒட்டியிருக்க வேண்டும், மாறி இங்கு வந்திட்டுது......பிறகுதான் பார்த்தால் பரிமளம் ஜெர்மனி வந்தபின் (வந்தால்) இவரின் வாழ்க்கையே இப்படி ஜாலியாய் மாறினானும் மாறலாம் என்று விட்டுட்டன்.....! 😂

மர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு

2 days 5 hours ago
விவேக் ஒரு படத்தில் சொல்லுவார் "நாங்கள் எல்லாம் ஆவியில பிட்டும் இட்டலியும் அவிக்கேக்க வெள்ளைக்காறன் ஆவியில ட்ரெயின் ஓட்டுறான் எண்டு. 😂

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு

2 days 5 hours ago
முட்டாள் கோமாளிகளுக்கு பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். யாழ் களத்தில் எவ்வளவோ மகிழ்ச்சியான பயனுள்ள கருத்தாடல்கள் இடம் பெறுகின்றன. அவற்றில் ஈடுபடுவது உங்களுக்கு பயன்தருவதாக இருக்கும்.

மர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு

2 days 6 hours ago
பரிசுத்த ஆவியிலை இட்டலி அவிக்கலாமோ எண்டு கலைஞர் கருணாநிதி ஒருக்கால் ஆரையோ பாத்து கேட்டவராம் விசயம் உண்மையோ? 😎

கொரோனா வைரஸ்! உலகம் முழுவதும் பரவினால் உயிரிழப்பு 65 மில்லியனை தொடலாம் : ஆய்வாளர்கள் எச்சரிக்கை

2 days 6 hours ago
உலகத்திலேயே கண்ட கண்ட களிசடைகளை உண்ணும் இனமெண்டால் அது உந்த சீனப்பெரும் இனம் தான். உந்த வெளவால் சூப்பாலைதான் உந்த வைரஸ் பரவ வெளிக்கிட்டது எண்டு இஞ்சை கதைக்கிறாங்கள். https://www.bild.de/video/clip/news-ausland/26-menschen-tot-was-diese-fledermaus-suppe-mit-coronavirus-zu-tun-hat-67534344,auto=false.bild.html

மன்னாரில் தமிழ் மொழி இரண்டாம் இடத்தில் ; சிங்களம் முதல் இடத்தில்.!

2 days 6 hours ago
உங்களது இந்த கருத்தில் எனக்கு சிறிதும் உடன்பாடும் இல்லை. இந்த உங்களது கருத்து சரியானது 👍. தும்பு தொழிற்சாலையின் பெயர் பலகையில் தமிழ் மொழியிலும் இருக்கிறது தானே தமிழ் மொழியில் இல்லாவிட்டால் தான் - இந்தியா மாதிரி கிந்தியில் மட்டும் இருந்தால் பெரிய விடயமாக எடுக்கலாம். ஒரு மிகவும் வளர்ச்சி அடைந்த சுவிச்சலண்டு நாட்டில் அந்த நாட்டு பயண அறிவிப்பு தனது மொழில் தான் முதலில் வர வேண்டும் என்று விரும்புகிற விமல் வீரவன்சவும், மனோ கணேசனும் அங்கே இருக்கிறார்கள் என்பதும் அவர்களை மகிழ்விப்பதற்காக சுவிச்சலண்டு நடந்து கொள்வதும் விசித்திரம். வருத்தம்.

கொரோனா வைரஸ்! உலகம் முழுவதும் பரவினால் உயிரிழப்பு 65 மில்லியனை தொடலாம் : ஆய்வாளர்கள் எச்சரிக்கை

2 days 7 hours ago
உந்த வைரஸ்ன்ரை பெயர் ஆண்பாலா பெண்பாலா?😎 ஒரு சில செய்திகளை ஊடகங்கள் மூடி மறைக்குது போல தெரியுது. ரிவிட்டரிலை வாற ஒரு சில வீடியோக்களை பாக்க படு பயங்கரமாய்த்தான் கிடக்கு.. மருந்து வேறை இல்லை எண்டுறாங்கள்

Imagine Dragons - Thunder

2 days 7 hours ago
Killing me softly... 1971/72ல் வெளிவந்த இந்த பாடலினை முதலில் பாடியவர்: Lori_Lieberman, ஆனால் இந்த பாடல் Roberta_Flack பாடிய போதே அதிகளவில் பிரபல்யமடைந்தது என இந்த பாடலை தேடிய போது அறிந்து கொண்டேன், இனிமையான பாடல் Strumming my pain with his fingers, Singing my life with his words, Killing me softly with his song, Killing me softly with his song, Telling my whole life with his words, Killing me softly with his song I heard he sang a good song, I heard he had a style. And so I came to see him to listen for a while. And there he was this young boy, a stranger to my eyes. Strumming my pain with his fingers, Singing my life with his words, Killing me softly with his song, Killing me softly with his song, Telling my whole life with his words, Killing me softly with his song I felt all flushed with fever, embarrassed by the crowd, I felt he found my letters and read each one out loud. I prayed that he would finish but he just kept right on. Strumming my pain with his fingers, Singing my life with his words, Killing me softly with his song, Killing me softly with his song, Telling my whole life with his words, Killing me softly with his song He sang as if he knew me in all my dark despair And then he looked right through me as if I wasn't there. But he just came to singing, singing clear and strong. Strumming my pain with his fingers, Singing my life with his words, Killing me softly with his song, Killing me softly with his song, Telling my whole life with his words, Killing me softly with his song Source: LyricFind Songwriters: Norman Gimbel / Charles Fox Killing Me Softly lyrics © Warner Chappell Music, Inc

இன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.!

2 days 8 hours ago
தமிழர்கள் மூண்டு நாலு பிள்ளைகளை யாழ்பாணத்தில் பெத்து போட்டால் யார் கவனிப்பது ? முஸ்லிம்களாக மதம் மாறி முஸ்லிம் சன தொகை பெருகி முஸ்லிம் நாடு உருவாகும்🥵

தமிழ்த் தலைவர்கள் எதற்கு?

2 days 8 hours ago
தமிழ்த் தலைவர்கள் எதற்கு? கே. சஞ்சயன் / 2020 ஜனவரி 24 அவ்வப்போது நீண்ட அறிக்கைகள், கடிதங்களை வெளியிட்டும், செய்தியாளர் சந்திப்புகளை நடத்தியும் பழைய வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டிருப்பவர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆவார். தான் கூறியபடி தான், தமிழ் மக்களின் வரலாறு நகர்கிறது என்பது போல, தீர்க்கதரிசியாகத் தன்னை் கருதிக் கொண்டு, அவர் அவ்வப்போது வெளியிடும் கருத்துகள், முரண்பாடுகளும் விமர்சனங்களும் நிறைந்தவவையாக இருப்பது வழமை. 2004ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலின் போது, தமிழரசுக் கட்சிக்கு உயிர் கொடுக்கப்பட்ட விடயத்தை, அவரால் இன்னமும் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. இந்த விடயத்தில், அவர் விடுதலைப் புலிகளைக் கூட விட்டு வைக்காமல், விமர்சனங்களைச் செய்திருக்கிறார். வெறும், தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ‘லேபிளை’ வைத்துக் கொண்டு, அரசியல் தலைமைத்துவத்தைக் கைப்பற்றி விடலாம் என்று, அவர் கருதுகின்றார் போல் தோன்றுகின்றது. ஆனால், அவரது கணிப்புக்கு மாறாக, தமிழரசுக் கட்சி மறுபிறப்புப் பெற்றதுடன், கூட்டமைப்பின் முதன்மையான பங்காளிக் கட்சியாகவும் மாறியது. அரசியல் ரீதியாக, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்களால் ஓரம்கட்டப்பட்டு விட்ட நிலையிலும் கூட, எதிர்வரும் பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் ஆகிய தேர்தல்களில், தமது தலைமையில், புதியதொரு கூட்டணியை அமைத்துப் போட்டியிடும் கனவில் ஆனந்தசங்கரி இருக்கிறார். சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் தவிர, மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தம்முடன் வந்து இணைந்து கொள்ளுமாறும் அவர் கோரியிருக்கிறார். தேர்தல் அரசியலை, யாரும் கணிக்க முடியாது. அதில், ஆனந்தசங்கரி வெற்றி பெறுகிறாரா என்பதைப் பற்றி, இந்த இடத்தில் ஆராய வேண்டியதில்லை. ஆனால், அவர் அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், வெளியிட்ட ஒரு கருத்து, இந்த இடத்தில் கவனத்தை ஈர்க்கின்றது. சமஷ்டி தொடர்பாகவும், இந்தியாவின் ஆட்சிமுறையை ஒத்த தீர்வு குறித்தும் அவர், அங்கு கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். ஆனந்தசங்கரி எப்போதுமே, சமஷ்டிக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தவர். அதற்கு எதிராகவே, கருத்துகளை வெளியிட்டு வந்திருக்கிறார். தமிழ்க் காங்கிரஸ் மூலம், ஆனந்தசங்கரி அரசியலுக்குள் வந்திருந்தார். தமிழ்க் காங்கிரஸுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்த, ‘பெடரல்’ கட்சியை (தமிழரசுக் கட்சி என்று பெயர் மாற்றிக் கொண்ட) விரோதமாகவே கருதி, அரசியலை முன்னெடுத்தவர் என்பதாலோ, அவருக்கு சமஷ்டி மீது, அவ்வளவு காழ்ப்புணர்வு இருக்கிறது. சமஷ்டித் தீர்வு சாத்தியமில்லை என்பது, அவரது நிலைப்பாடாக இருந்தாலும், “சமஷ்டி சாத்தியமில்லை என்று மஹிந்த ராஜபக்‌ஷ கூறினார்; இந்திய முறைமையை கேட்குமாறும் அவர் கூறினார். அதன்படியே தான், இந்திய முறைமையைக் கேட்கிறேன். அதைக் கோட்டாபய ராஜபக்‌ஷவும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்” என்றொரு கருத்தை, வெளியிட்டிருக்கிறார் ஆனந்தசங்கரி. அவரது இந்தக் கருத்துக்குள், பல விடயங்கள் ஒளிந்திருக்கின்றன. தன்னை ஒரு மூத்த, பழுத்த, தீர்க்கதரிசனம் கொண்ட தமிழ் அரசியல் தலைவராக வெளிப்படுத்திக் கொள்ளும் ஆனந்தசங்கரியின் ஆளுமையை, இந்தக் கருத்துகள் குறைமதிப்புக்கு உட்படுத்துகின்றன. இந்திய முறைமையை ஒத்த அரசியல் தீர்வை, அவர் வலியுறுத்துபவர் என்பது தெரிந்த விடயம் தான். அவரது அரசியல் கணிப்புக்கு, அது பொருத்தமானது என்றால், அதை அவர் வலியுறுத்துவதும் தவறில்லை. அது அவரது தனிப்பட்ட கருத்து; தனிப்பட்ட விடயம். ஆனால், அவர் இந்திய முறைமையைக் கேட்கவும், சமஷ்டியைச் சாத்தியமற்றது என்று ஒதுக்கவும், ஒரு காரணத்தை முன்வைத்திருப்பது தான், இங்கு வேடிக்கையானதாக உள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசைனைப்படியே, சமஷ்டியை விட்டு விட்டு, இந்திய முறைமையைக் கேட்பதாக அவர் கூறியிருக்கிறார். மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசனைப்படி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வைக் கேட்கின்ற நிலையில், ஒரு தமிழ்த் தலைவர் இருக்கிறார் என்பது, பெருமைக்குரிய விடயம் அல்ல. தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு, பொருத்தமான தீர்வு என்ன, தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்க்கக் கூடிய தீர்வு என்ன, என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது, தமிழ்த் தலைவர்களின் பொறுப்பு ஆகும். அந்த தீர்வு, அவரவரின் கொள்கை, சிந்தனைக்கு ஏற்ப மாறுபடலாம்; வேறுபட்டதாகவும் இருக்கலாம். சமஷ்யாகவோ, அரை சமஷ்டியாகவோ ஏன், ஒற்றையாட்சியாகவோ கூட இருக்கலாம். அது பிரச்சினையில்லை. அந்தத் தீர்வு தான் சரியென்பது, தமிழ்த் தலைவர்களின் சொந்த நிலைப்பாடாக இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு இதுதான் தீர்வு என்று, இன்னொருவர் சொல்லிக் கொடுப்பதை, ஏற்று நடப்பதற்கு, இது ஒன்றும், பாடசாலையில் மாணவர்கள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கின்ற விடயம் போல அல்ல. தமிழ் மக்களுக்கு, சமஷ்டித் தீர்வு வழங்க முடியாது; இந்திய முறைமையை வழங்கலாம் அல்லது அதனைப் பரிசீலிக்கலாம் என்று, மஹிந்த ராஜபக்‌ஷ ஒரு சிங்களத் தலைவராகவோ, நாட்டின் பிரதமராகவோ அவ்வாறு கூறலாம். ஆனால், தமிழ் மக்களின் நிலையில் இருந்து அவர், சமஷ்டி சரிப்பட்டு வராது; இந்திய முறைமை தான் சரிவரும் என்று கூறமுடியாது. அவர் கூறியபடி, தமிழ்த் தலைவர்கள் தமது கொள்கையை, நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வதென்றால், தமிழ் மக்களுக்குத் தனியான தலைவர்கள் தேவையில்லை. அந்த வேலையையும் மஹிந்த ராஜபக்‌ஷவோ, இன்னொரு சிங்களத் தலைவரோ பார்த்து விட்டுப் போகலாம். மஹிந்த ராஜபக்‌ஷ கூறியபடி, சமஷ்டியைக் கைவிட்டு விட்டு, இந்திய முறைமையைக் கோரியதாகக் கூறுகின்ற அளவுக்குத் தமிழ் அரசியல்வாதிகள் அல்லது தலைவர்கள் இருப்பது, உண்மையில் வெட்கக்கேடானது. இன்னொரு பக்கத்தில், தான் முன்மொழிந்த இந்திய முறைமையை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றும் ஆனந்தசங்கரி ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். இந்திய முறைமை என்பது, 13 ஆவது திருத்தச்சட்டம் அல்ல. 13 ஆவது திருத்தச்சட்டத்தின் உயர்ந்த பட்ச அதிகாரப் பகிர்வு மாகாண சபை முறைமை தான். ஆனால், மாகாண சபைகளுக்குப் பகிரப்பட்ட அதிகாரங்கள், இந்தியாவில் மாநகராட்சிகளுக்கு இருக்கின்ற அதிகாரங்கள் தான். இதனை, இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியும் இலங்கை விவகாரத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பவருமான கேணல் ஹரிகரன் கூறியிருக்கிறார். 13 ஆவது திருத்தச்சட்டம், முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியபோதும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்திய ஊடகங்களிடம், “அது சாத்தியமில்லை” என்று பதிலளித்திருந்தார். 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவதற்குக் கூட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தயாராக இல்லை. ஆனால், இந்திய அதிகாரப் பகிர்வு முறைமையில், பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள், குறிப்பிடத்தக்க நிதி அதிகாரங்கள் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறானதொரு தீர்வை வழங்க, கோட்டாபய ராஜபக்‌ஷ எங்கே, எப்போது இணங்கினார் என்று தெரியவில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்தை, முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையே ஏற்கத் தயாராக இல்லாத ஓர் அரசாங்கத்திடம் இருந்து, இந்திய முறைமை கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்ட நினைப்பது, தமிழ் மக்களிடம் இருந்து, சமஷ்டித் தீர்வு மீதான நம்பிக்கையை, இழக்கச் செய்யும் முயற்சியாகவே தெரிகிறது. விடுதலைப் புலிகளின் காலத்தில், ரணில் அரசாங்கம் உள்ளக சமஷ்டி குறித்துப் பேச இணங்கியது. ஆனால் அந்தப் பேச்சுகள் நடக்கவில்லை. விடுதலைப் புலிகளின் சார்பில், பேச்சுகளை நடத்திய அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், லண்டனில் ஒரு நிகழ்வில் உரையாற்றிய போது, “சிங்கள அரசாங்கம், ஒருபோதும், சமஷ்டியை வழங்காது” என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார். புலிகளின் காலத்திலேயே சமஷ்டியை வழங்கத் தயாராக இல்லாத அரசாங்கம், தற்போது, அதற்கு நெருக்கமாக உள்ள எந்தத் தீர்வுக்கும் இசைந்து வரும் என்பது சந்தேகம் தான். தமிழ் மக்கள், சமஷ்டி என்ற நிலைப்பாட்டில் இருப்பதால் தான், அதற்கு குறைவானதொரு தீர்வையாவது பரிசீலிக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது. இந்திய முறைமையைக் கேட்டால், அதற்குக் கீழான ஒன்றைத் தான் அரசாங்கம் பரிசீலிக்க முன்வரும். இது யாருக்கும் தெரியாத இராஜதந்திரம் அல்ல. கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்திய முறைமையையே 13 ஆவது திருத்தச்சட்டத்தையோ கூட முழுமையாக நிறைவேற்றக் கூடிய நிலைப்பாட்டில் இல்லை என்ற நிலையில், எதற்காக ஆனந்தசங்கரி இவ்வாறான ஒரு நம்பிக்கையைக் கொடுக்க முனைந்திருக்கிறார்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பது அவரது கனவு. அதற்காக அவர், எதையெதையோ கூற முனைகிறார். அதற்காக அவர், தமிழ் மக்களின் இலட்சியம், கொள்கைகள், அபிலாசைகள் போன்றவற்றைத் தோற்கடிக்கவோ, விலை பேசவோ கூடாது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தலைவர்கள்-எதற்கு/91-244473

சரணடைந்தவர்களே பெரும்பாலும் காணாமல் ஆக்கப்பட்டனர்!

2 days 8 hours ago
நீங்கள் சொன்னது சரி ஆனால் சுப்ரமணிய பிரபா என்பவர் மிகவும் இலகுவாக அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் எங்களுக்கும் தெரியும் என்றது காணாமல் போனவர்களின் உறவினர்களின் விருப்பத்திற்கு எதிரானது.

பெண் விடுதலைக்கு ஈடாக ஆண் விடுதலைக்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறுவது ஏன்?

2 days 8 hours ago
இருக்கலாமே.. அடிமைப்பட்ட பெண்ணிடம் போலியாக ஒரு முகம், தனக்காக இன்னொரு முகம் கொண்டு வாழலாம். ஆனால் இந்த பிரச்சனைகளை முறையான ஆலோசனை/ உதவிகளை “ஆண்” எனபதற்காக நாடாதவிடத்து வேறு விதமான பழக்கங்களுக்கு அடிமையாகி, மன உளைச்சலால் மனநிலை பாதிக்கப்பட்டு நோயாளி ஆகி சிறுவயதிலேயே(40 -50 வயது) மரணமடைவார்கள், இல்லை தற்கொலை செய்வார்கள். இதனால் பாதிக்கப்படுவது அந்த ஆணை சார்ந்தவர்கள் மட்டுமே. அதனால்தான் ஆண்களது விடுதலையும் அவசியமாகிறது.

மட்டக்களப்பில் 14 நாள்களில் 248 பேருக்கு டெங்கு

2 days 8 hours ago
மட்டக்களப்பில் 14 நாள்களில் 248 பேருக்கு டெங்கு மட்டக்களப்பில் இந்த ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரையும் 248 பேர் டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதென, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் தெரிவித்தார். இதற்கமைய, டெங்கு தாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்;டக்களப்பில் இதுவரை 36 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஆரையம்பதியில் 51 பேர்;;, களுவாஞ்சிகுடி 20 பேர்;;,; வாழைச்சேனை 41 பேர்;;, செங்கலடி 29 பேர்; ;;, காத்தான்குடி 16 பேர்;;, ஏறாவூர் 16 பேர்;;, வெல்லாவெளி 03 பேர்;;, வவுணதீவு 01 பேர் ;;,பட்டிப்பளை 05 பேர்;;, ஓட்டமாவடி 07 பேர் ;;, கோரளைப்பற்று மத்தி 17;;,; கிரான் 06 பேர் என மொத்தமாக 248 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மடடககளபபல-14-நளகளல-248-பரகக-டஙக/73-244484

பொங்கல் பானையை தமது சின்னமாக அறிவித்தது தமிழ் மக்கள் கூட்டணி

2 days 8 hours ago
வங்காலையான், உண்மையும் யதார்தமும் உங்கள் பக்கமே. ஆனால் இங்கே எழுதுபவர்களில் மிக மோசமான 3 கருத்தாளர்களுக்கு நீங்கள் உண்மையை புரிய வைக்க முடியும் என நான் நம்பவில்லை. போல், கோவின், ராஜேஸ் - எமது சமூகத்தில் தவறுகள்/பிற்போக்குத்தனங்கள் என 20 விடயங்களை பட்டியல் இட்டால், அந்த 20 விடயங்களையும் ஆதரித்து எழுதும் பேர்வழிகளாக இந்த மூவரும் இருப்பர். யாழில் பலர் பல கருத்துகளில் ஒட்டியும், எதிர்த்தும் எழுதுவர். ஆனால் எப்போதும் நாகரீகத்துக்கு எதிர் வழியில் எழுதுபவர்கள் இந்த மூவர். எப்படி மூன்று பேர் இப்படி ஒரே மாதிரி பத்தாம்பசலித்தனமாக எழுத முடியும் என நான் வியப்பது கூட உண்டு. மூவரில் ஒருவர் ஒரு திரியில் எழுதினால், கட்டாயம் மற்றையவர்கள் அந்த திரியில் வந்து அவருக்கு ஆதரவாக எழுதியே தீர்வார்கள். ஒருவர் எழுதாவிட்டால் அந்த திரி கொழுந்து விட்டு எரிந்தாலும் மூன்று பேரையும் காணக் கிடைக்காது. அநேகமா இந்த 3 ஐடியும் ஒரே ஆளாக இருக்கவே வாய்புகள் அதிகம். இவர்களின் உண்மையான ஐடி யார் என்பது கூட எனக்கு ஊகம் உளது. எனவே இந்த troll களிடம் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். இப்போ மூவரும் என்னை போட்டு பிராண்டுவார்கள், அல்லது தனியே ஒரு ஐடியின் மூலம் மட்டும் பதில் எழுதுவார்கள்- இருந்து வேடிக்கை மட்டும் பாருங்கள் 😂

கோட்டபாயவின் நடுநிலை வெளிவிவகாரக் கொள்கை வெற்றியளிக்குமா?  - யதீந்திரா

2 days 8 hours ago
கோட்டபாயவின் நடுநிலை வெளிவிவகாரக் கொள்கை வெற்றியளிக்குமா? - யதீந்திரா நாங்கள் ஒரு சிறிய நாடு. உலக அதிகார மோதல்களுக்குள் நாம் தலையிட விரும்பவில்லை. நாங்கள் ஒரு நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையையே கடைப்பிடிக்க விரும்புகின்றோம் – இது கோட்டபாய தனது பதவியேற்பு உரையில் கூறிய விடயங்கள். இலங்கையின் அரசியல் வரலாற்றில் நடுநிலை வெளிவிவகாரக் கொள்கை என்பது புதிய விடயமல்ல. வெளிவிவகாரக் கொள்கையில் நடுநிலை என்னும் நிலைப்பாட்டின் பிதாமகர் பண்டாரநாயக்க ஆவார். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை என்பது இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளின் கொள்கை நிலைப்பாட்டுடன் தொடர்புபட்ட ஒன்றாகும். இதன் பிதாமகர்களாக ஜக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகரான னு.ளு.சேனநாயக்கவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான பண்டாரநாக்கவுமே இருக்கின்றனர். இன்றுவரை இவ்விருவரும் போட்ட அடித்தளத்தில்தான் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை நகர்ந்திருக்கின்றது அல்லது நகர்த்தப்பட்டிருக்கின்றது. சேனநாயக்க வழிவந்த ஜக்கிய தேசியக் கட்சியின் வெளிவிவகாரக் கொள்கை என்பது முற்றிலும் மேற்கு சார்ந்தது. வெளிவிவகார விடயங்களில் நடுநிலையாக நிற்பது என்பது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வழிவந்த மரபாகும். இதனை பண்டாரநாயக்கவின் வார்த்தையில் கூறுவதானால் : சிறிலங்கா எந்தவொரு குறிப்பான அதிகார மையத்தோடும் அல்லது கருத்தியலோடும் இணைந்திருக்க வேண்டியதில்லை. எங்களுடைய நாட்டிற்கு பொருத்தமான சமூகமொன்றை கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான விடயங்கள் முதலாளித்துவ மேற்குலகில் இருந்தாலும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதே போன்று, கம்யூனிச கிழக்குலகில் இருந்தாலும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் நடுநிலை வாதத்தின் தத்துவமாகும். இந்த அடிப்படையிலேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது வெளிவிவகாரக் கொள்கையை முன்னெடுத்திருந்தது. இந்த அடிப்படையில்தான் இலங்கை அணிசாரா நாடுகளின் அணியில் முக்கிய பங்குவகித்தது. இந்தக் காலத்தில் மேற்கு நாடுகளுடனும் நல்ல நட்புறவை பேணிக் கொள்வதிலும் அதே வேளை தாம் முற்றிலும் சோசலிச நாடுகளுக்கு சாய்வானவர்கள் அல்ல என்பதை காண்பிப்பதிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெளிவான பாதையில் பயணித்திருந்தது. அதாவது பணிப் போர் கால மோதல்களுக்குள் இலங்கை அகப்பட்டுவிடக் கூடாது என்பதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருந்தது. இந்த பின்புலத்தில்தான் 1947இல் ஜக்கிய தேசியக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட இங்கிலாந்து – இலங்கை பாதுகாப்பு உடன்பாட்டை விலக்கிக் கொள்வதில் பண்டரநாயக்கா வெற்றிபெற்றார். இதன் மூலம் பனிப் போர் நெருக்கடிக்குள் இலங்கை சிக்குப்படுவதை பண்டாநாயக்க வெற்றிகரமாக தடுத்திருந்தார். ஆனால் இந்த நிலைமை சோவியத் யூனியன் வீழ்ச்சியடையும் வரையில் வெற்றிகரமான கொள்கையாகவே இருந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இலங்கை வெளிவிவகாரக் கொள்கை சார்ந்த பாரிய நெருக்கடிகள் எதனையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால் முற்றிலும் மேற்கு சார்பான ஜக்கிய தேசியக் கட்சியின் காலத்திலேயே இந்தியாவின் நேரடியான தலையீடு நிகழ்ந்தது. அப்போதைய ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி – இலங்கை அதுவரை கடைப்பிடித்துவந்த அணிசாரா கொள்கையில் தளர்வை ஏற்படுத்தியதன் காரணமாகவே நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்தது. உண்மையில் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் கொள்கை நிலைப்பாடு அப்போதைய பணிப் போர் கால நெருக்கடிக்குள் இலங்கையை வீழ்த்தியது. இதன் காரணமாகவே அப்போதைய உலக ஒழுங்கில் சோவியத்தின் செல்வாக்கு மண்டலத்திற்குள் இருந்த இந்தியா சினமடைந்தது. அதன் விழைவாகவே இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையீடு செய்தது. உண்மையில் இந்தியத் தலையீடு என்பது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வெளிவிவகார அணுகுமுறையில் ஏற்பட்ட தவறின் விளைவாகும். சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின்னரான உலக ஒழுங்கில் இலங்கையில் எவர் ஆட்சி செய்தாலும், விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கை அனுசரித்து செல்ல வேண்டியவர்களாகவே இருந்தனர். சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் குறிப்பாக 1994களுக்கு பின்னர் இலங்கையின் வெளிவிவகார அணுகுமுறை என்பது முற்றிலும் விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக்கான போராட்டத்தை அடிப்படையாக் கொண்டே திட்டமிடப்பட்டது. இதில் ஜக்கிய தேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்னும் பாகுபாடுகள் இருந்திருக்கவில்லை. இரண்டு பிரதான கட்சிகளுமே, இலங்கை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நாடு என்னும் வகையிலேயே அதன் வெளிவிவகாரக் கொள்கை முன்னிறுத்தின. இந்தக் காலத்தில் புவிசார் அரசியல் நெருக்கடி தொடர்பில் சிந்திக்க வேண்டிய தேவையே இலங்கைக்கு இருந்திருக்கவில்லை. இந்த பின்புலத்தில் இலங்கையின் வெளிவிவகார கொள்கை அணுகுமுறைகளை உற்று நோக்கினால், விடுதலைப் புலிகளுக்கு முன்னரான வெளிவிவகாரக் கொள்கை, விடுதலைப் புலிகளுக்கு பின்னரான வெளிவிவகாரக் கொள்கை என்னும் அடிப்படையில்தான் பிரித்து நோக்க வேண்டியிருக்கின்றது. விடுதலைப்புலிகள் காலத்தைய இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை என்பது முற்றிலும் விடுதலைப் புலிகளினால் ஏற்பட்டுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளுதல் என்னும் அடிப்படையில் திட்டமிடப்பட்டிருந்தது. இதுவே, இலங்கையின் அன்றைய வெளி நாடுகளுடனான உறவின் அச்சாணியாக இருந்தது. விடுதலைப் புலிகளுக்கு பின்னரான நிலைமையில்தான் இலங்கையின் இன்றைய வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான கரிசனை முதன்மை பெற்றிருக்கின்றது. இந்த இடத்தில்தான் சீனா என்பது பேசு பொருளாகியது. விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதற்கான வெளிநாட்டு ஒத்துழைப்பில் சீனா முதன்மையான பங்களிப்பை வழங்கியிருந்தது. முக்கியமாக இறுதி யுத்தத்தின் போது பெருமளவிலான இராணுவ தளபாட உதவிகளை சீனா வழங்கியிருந்தது. இந்த பின்புலத்தில்தான் சீனாவிற்கும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அராங்கத்திற்கும் இடையில் நெருக்கம் அதிகரித்தது. இது இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில் சடுதியான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது தொடர்பில் பல இந்திய ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தனர். இவ்வாறானதொரு சூழலில்தான் 2015இல் ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டது. இதற்கு பின்னால் வெளியாரின் தலையீடுகள் அதிகம் இருந்ததாக கூறப்படுகின்றது. தனது தோல்வியின் பின்னால் இந்திய உளவுத்துறை, அமெரிக்க மற்றும் பிரித்தானிய உளவுத்துறைகள் இருந்ததாக மகிந்த வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருந்தார். இந்தப் பின்புலத்தில்தான் கோட்டபாய மீளவும் பண்டாரநாயக்காவின் நடுநிலை தத்துவத்தை நோக்கி திரும்பியிருக்கின்றார். ஆனால் பண்டாரநாயக்க நடுநிலை தத்துவத்தை முன்வைத்த காலமும் இன்றைய காலமும் ஒன்றல்ல. சீனா ஆசியாவின் ஒரு அதிகாரமாக எழுச்சியடைந்துவருவது உண்மையாயினும் கூட, இதனை அமெரிக்க – சீன பனிப்போர் காலம் என்று வரையறுக்கக் கூடிய சூழல் உருவாகிவிட்டதாக கூறமுடியாது. ஆனால் அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன என்பது உண்மைதான். இதனை ஒரு பல்துருவ உலக ஒழுங்கு என்று சிலர் வர்ணித்தாலும் கூட, அமெரிக்கா ஒரு உலக வல்லரசு என்னும் நிலையை இழந்துவிட்டதாக வாதிட முடியாது. ஒரு உலக வல்லரசு என்னும் நிலையில் இருக்கும் ஒரேயொரு நாடாக, இப்போதும் அமெரிக்காவே இருக்கின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், இலங்கை மீளவும் நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கைத் தத்துவத்தை நோக்கி பயணிக்கப் போவதான அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கை என்று அழுத்திக் கூறுவதன் ஊடாக கோட்டபாய எதனை வலியுறுத்த விரும்புகின்றார்? சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உருவாகப் போகும் பனிப் போரில் இலங்கை சிக்குப்பட்டுவிடக் கூடாது என்னும் முன்னெச்சரிக்கையுடன்தான் நடுநிலை தொடர்பில் பேசுகின்றாரா? அவ்வாறானதொரு கணிப்பு அவரிடம் இருப்பது உண்மையாயின் சீனாவை ஒரு எல்லைக்கு மேல் இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே சீனா எல்லை மீறியிருக்கும் விடயங்களில் ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். எவ்வாறு பண்டாரநாயக்க அமெரிக்க – சோவியத் அதிகார மோதலுக்குள் அகப்படுவதை தடுக்கும் வகையில், இங்கிலாந்து – இலங்கை பாதுகாப்பு உடன்பாட்டை விலக்கிக் கொண்டாரோ, அவ்வாறு கோட்டபாயவும் சீனாவுடனான ஹம்பாந்தோட்டை உடன்பாட்டை மீள் வரையறை செய்ய வேண்டும். ஹம்பாந்தோட்டை இராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட மாட்;டாது என்று உடன்பாட்டில் கூறப்பட்டிருந்தாலும் கூட, ஒரு வேளை இந்து சமூத்திர பிராந்தியத்தில் ஒரு யுத்தம் ஏற்படுமாக இருந்தால் சீனா ஹம்பாந்தோட்டை பயன்படுத்துவதை இலங்கையால் தடுக்க முடியாது. அவ்வாறானதொரு சூழலில் இலங்கை விரும்பியோ விரும்பாமலோ உலக அதிகார மோதலுக்குள் சிக்கப்படுவதை தவிர்க்க முடியாது. எனவே நடுநிலை கொள்கை என்பது கவர்ச்சிகரமான ஒன்றாக தெரிந்தாலும் கூட, இன்றைய உலக ஒழுங்கில் இலங்கையால் எவ்வளவு தூரம் இதில் வெற்றிகரமாக பயணிக்க முடியும் என்பது பெரிய கேள்விக்குறியே! இலங்கை நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றில் பயணிப்பதற்கான உறுதிப்பாட்டை கொண்டிருந்தால் அதற்கு அமெரிக்கா – இந்தியா – சீனா ஆகியவற்றை சம தூரத்தில் வைத்துக் கொள்ளக் கூடிய உபாயமொன்றை கண்டுபிடிக்க வேண்டும். http://www.samakalam.com/செய்திகள்/கோட்டபாயவின்-நடுநிலை-வெள/
Checked
Mon, 01/27/2020 - 20:11
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr