புதிய பதிவுகள்

இந்து சமயத்துக்கு எதிரான வன்முறைகள்- யாழில் உணவு ஒறுப்புப் போராட்டம்!!

6 months 1 week ago
என்ன இருந்தா போல "இந்து சமய" காவலர்கள் போரட வெளிக்கிட்டினம் இந்தியாவிலிருந்து தொத்திவிட்டுதோ?.....இவ்வளவு காலமும் எங்க இருந்தவையாம்.. போராட வெளிக்கிட்டவையளே இந்து,ஆஞ்சநேயர்,சைவம் என்று குழம்பி போய்யிருக்கினம் இவையள் வேற்று மத்தத்தை பற்றி கதைக்கினம் உண்மையான சைவர்கள் என்றால் சிவன் கோவிலுக்கு முன்னால் போயிருந்திருக்கலாம்....😎

கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கிளிநொச்சியில் கைது..

6 months 1 week ago
திரைகட‌லோடி திரவியம் தேடு என்று சொன்னதால் வந்த வினை.....என்று நான் நினைக்கிறன். எவ்வளவு பணம் கொடுத்திருப்பார்கள் ?50 லட்சம்....இந்த 50 லட்சத்தை வைத்து கொண்டு அவர்களால் முன்னுக்கு வரமுடியாது ... கார்,வீடு உறவுகளை முன்னேற்றுதல் அத்துடன் வெளிநாட்டுக்கு போனவன் தாயகம் திரும்பியவுடன் செய்யும் அலப்பறை இவைகள் யாவும் ஒருத்தனை வெளிநாடு செல்ல தூண்டுது... அதுசரி கிளிநோச்சியிலிருந்து எப்படி வெளிநாடு செல்ல முடியும்.....

மலரும் நினைவுகள் ..

6 months 1 week ago
தேயிலை உற்பத்தி மூலம் சிறிலங்கா ஈட்டும் வருமானத்துக்கு இந்த சிங்கள அரசு எவ்வளவோ செய்திருக்கலாம். அவர்கள் தமிழர்களாக இருப்பதாலோ என்னவோ இன்று ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு கூட எத்தனை போராட்டங்களை செய்ய வேண்டியுள்ளது.

2009 இனவழிப்புப் போரில் ஐ. நா ஆற்றிய பங்கு

6 months 1 week ago
புலிகளும் எம்மவர்கள் தானே ...தாங்கள்,தங்களுடைய மக்களுக்காய் போராடும் போது அந்த மக்கள் தம்மை விட்டு போவது பிழை என்று அவர்கள் நினைத்திருக்கலாம் ...தவிர புலிகளும் தாங்கள் இப்படி வந்து இறுகுவோம் என்று எதிர் பார்த்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்

2019 ஐ.பி.எல். ரி-20 தொடர் செய்திகள்

6 months 1 week ago
அல்ஸாரியின் சிறப்பான பந்து வீச்சால் 96 ஓட்டங்களுக்குள் முடங்கியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்தில் இடம்பெற்ற போட்டியில் அல்ஸாரியின் சிறப்பான பந்து வீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. நாணய சுழட்சியில் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் தலைவர் புவனேஷ்வர் குமார் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் குயிண்டன் டி கொக்கும் களமிறங்கினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி மும்பை அணியினர் ஓட்டங்களை எடுக்க திணறினர். ரோகித் சர்மா 11 ஓட்டத்துடனும் டி காக் 19 ஓட்டத்துடனும், சூர்யகுமார் யாதவ் 7 ஓட்டத்துடனும், இஷான் கிஷன் 17 ஓட்டத்துடனும், குருணால் பாண்டியா 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழ்ந்தனர்.. மும்பை அணி 65 ஓட்டங்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஹர்திக் பாண்டியா 14 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ராகுல் சாஹர் 10 ஓட்டத்துடன் வெளியேறினார். பொலார்ட் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களை எடுத்துள்ளது. பொலார்ட் 26 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 46 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் அணி சார்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டும், மொகமது நபி, சந்தீப் சர்மா, ரஷித் கான், புனவேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.. இதனையடுத்து 137 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களமிறங்கியது. மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஐதராபாத் அணி வீரர்கள் 96 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தனர்.. மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய அல்ஸாரி 3.4 ஓவரில் 12 ஓட்டங்களை மாத்திரம் விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். http://www.virakesari.lk/article/53528

அமேசான் நிறுவனர் விவாகரத்து - 35 பில்லியன் டாலர்கள் இழப்பீடாக வழங்குகிறார்

6 months 1 week ago
சவூதி பத்திரிகையாளர் கசோக்கி வேலை செய்தது உந்த ஜெப்பின் பத்திரிகையான நியூயோக் டைம்ஸ் என்று நினைக்கிறேன்...அந்த பத்திரிகையில் தான் சவூதி அரசினை பற்றி கசோக்கி கேவலமாய் எழுதி வந்தாராம்....அதனால் கோபமான சவூதி அரசாங்கத்தினால் ஜெப்பின் காதல் லீலைகள் வெளியே வந்ததாம் என்று கேள்விப் பட்டேன் 😀

திருக்கோணேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா!!

6 months 1 week ago
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று இடம் பெற்றது. https://newuthayan.com/story/13/திருக்கோணேஸ்வரர்-ஆலய-தேர.html

இந்து சமயத்துக்கு எதிரான வன்முறைகள்- யாழில் உணவு ஒறுப்புப் போராட்டம்!!

6 months 1 week ago
இந்து சமயத்துக்கு எதிரான தொடர் வன்முறைகளை கண்டித்து இந்து அமைப்புக்களின் கூட்ட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மருதனார்மடம் ஆஞ்சனேயர்அடையாள உண்ணா விரத போராட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “சைவர்களின் பரந்த மனப்பாங்கை பலவீனமாக கருத்தாதே”,”அந்நிய மதத்தினரின் மதமாற்றம் தமிழின அழிப்பின் இன்னொரு வடிவமா”,”மத குருவின் மத வெறிக்கு நாடாளுமன்றத்தில் பரிந்துரையா” போன்ற பதாகைகள் போராட்ட இடத்தில் தொங்க விடப்பட்டுள்ளன. https://newuthayan.com/story/11/இந்து-சமயத்துக்கு-எதிரான.html

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் படுகொலை

6 months 1 week ago
பிரித்தானியாவின் ஹாரோ தென் பகுதியில் நேற்றைய தினம் உயிரிழந்தவர் இலங்கை தமிழரான நாற்பது வயதான விமல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. .காலில் காயங்களோடு இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த நிலையில் காணப்பட்ட அவருக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காது அவர் இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று மாலை 3.20 மணியளவில் வட மேற்கு லண்டனில் ஹாரோ பகுதியில் வலம்புரி காஷ் அண்ட் கரி என்ற கடையில் ஒருவர் கத்திக்குத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் அந்த பகுதியில் கத்தியுடன் ஓடித்திரிந்த ஒருவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கத்திக்குத்துக்கு உள்ளானர் மீட்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து , இறந்தவர் தமது கடைக்கு ஓடி வந்து கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டதாகவும் அரை மணி நேரம் கழித்தும் வெளியே வராத காரணத்தால் தாம் அங்கு சென்று பார்த்த போது அவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் கடையின் பணியாளர் தெரிவித்துள்ளார். மேலும் எல்லா இடங்களிலும் இரத்தம் காணப்பட்டதாகவும் உடனே பொலிசாருக்கும் நோயாளர் காவு வண்டிக்கும் தான் தகவல் கொடுத்ததாகவும் தெரிவித்தார். . தமது சி.சி.டிவி கமராக்களை பொலிசார் பார்வையிட்டதாகவும் அதில் உயிரிழந்தவர் - காலில் இரத்தக் காயத்துடன் சாதாரணமாகவே நடந்து சென்றது பதிவாகியுள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் தமது கடைக்கு அருகிலுள்ள பலசரக்குக் கடையில் வேலைபார்த்து வந்தவரெனவும் எப்பொழுதும் தமது கடைக்கு வந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருப்பார் எனவும் தெரிவித்துள்ள கடை உரிமையாளர் அவர் நல்ல மனிதன் என்றும் வன்முறைகளில் ஒருபோதும் ஈடுபடாதவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர் ஒரு இலங்கை தமிழர் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை இவரது மரணம் குறித்து பிரேதப் பரிசோதனையின் பின்னரே தீர்மானிக்க முடியும் என ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது கத்தி பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து இன்னமும் அறியப்படவில்லை என்றும் வேறு வகையான ஆயுதங்கள் எவையும் சம்பவ இடத்துக்கு அருகில் காணப்படவில்லை எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதொடு சம்பவம் தொடரிபில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.. http://www.virakesari.lk/article/53522
Checked
Mon, 10/14/2019 - 17:44
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr