புதிய பதிவுகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு

1 day 18 hours ago
ஒரு காளையினை உசுப்பேற்றி பத்து அல்லது பதினைந்து பேர் அதனைத் துரத்திச் செல்வதும், தோளில் பாய்ந்து ஏறுவதும், அது முட்டவந்தால் மதிலில் பாய்ந்து ஏறுவதும் வீரமாகுமா? சரி, இது ஒரு விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால், அந்தக் காளையை துன்புறுத்துவது எப்படி விளையாட்டாகும்? காளைக்கு நாட்டுச் சாராயத்தைக் குடிக்கக் கொடுத்து, கூரான ஊசியால் அதனது பின்புறத்தில் குத்தி, அதனைச் சினமூட்டி பழிவாங்கும் மூர்க்கத்தை உருவாக்கும் இந்த விபரீதம் உண்மையில் தமிழரது வீரமா என்பதை நினைத்துப் பாருங்கள். தமிழன் தனது வீரத்தைக் காட்டுவது ஒரு மிருகத்திடமா ? அந்த மிருகத்திற்கு இது தெரியுமா? ஒத்தைக்கு ஒத்தையாக ஒரு காளையுடன் ஒரு மனிதன் மோதட்டும், அப்போது தெரியும் யார் வீரம் பெரிதென்று!!!!! சுற்றிநின்று பத்துப்பேர் அதன் கவனத்தை திசை திருப்ப, ஒருவர் பின்புறமாக வந்து அதன் முதுகில் ஏறுவது வீரமேயில்லை. ஏமாற்றுத்தனம், அவ்வளவே !

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு

1 day 18 hours ago
மன்னிக்கவும் நான் சொல்ல வந்தது சுமத்திரன் ஏதாவது ஒரு பக்க்கம் சாரா மாட்டார் என்பதையே...அவர் எல்லோருக்கும் வளைந்து கொடுப்பார் தமிழ் மக்களைத் தவிர 😊 இவர் ஓரளவுக்கு அரசியல் அறிவுள்லவர் நினைத்தால் சேவை செய்யலாம் ...பொறுத்திருந்து பாப்போம் அவரின் அரசியற் செயற்பாடுகள் இது வரைக்கும் சிங்களவர்களுக்கு சார்பாகவே இருக்குது/இருந்தது...குறிப்பாய் மகிந்தா சகோதரர்களுக்கு

நான் அடிச்சால் தாங்க மாட்டாய்

1 day 18 hours ago
அனேகமாக அவர்கள் சிறையால் வெளியே வந்தபின் அவர்கள் சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படுவதை எதிர்பார்க்கலாம். சுவைப்பிரியன் அவர்கள் இரண்டாம்பாகம் எழுத லெபனான் நாட்டுக்குச் செல்லவேண்டி வரலாம். ஆகவே அரபுமொழி தெரியவேண்டும் தெரியாவிட்டால் இப்போதிருந்தே அந்த மொழி பயிலத்தொடங்குவது நல்லது.

8 பேரை கொலை செய்தமைக்காக மரணதண்டனை வழங்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு

1 day 18 hours ago
ஒரு போர்க்குற்றவாளியினாலும், அவனது கொலைகாரத் தோழர்களாலும் ஆளப்படும் நாட்டில் கொலையாளிகள் என்று சிங்களத்தாலேயே நிரூபிக்கப்பட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது. இறுதிப்போரில் தாம் எந்தப் பொதுமகனையும் கொல்லவில்லை என்று மறுக்கப்படுகிறது. சிங்களப் பேய்களின் ஆட்சியில் தமிழர் படப்போகும் பாடு மிகவும் பரிதாபமானது.

புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை

1 day 18 hours ago
ஏன் அண்ணா இயக்கம் பலவந்தமாய் ஆட்களை பிடிக்கேல்லையோ?... உங்கட பொலிசி எனக்கு பிடித்திருக்கு உங்களுக்கு விருப்பமானதை செய்தால் தியாகிகள் அல்லாட்டில் துரோகிகள் சரியா

ஒரு அப்பாவியின் திருமணம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

1 day 19 hours ago
மன்னிக்கவும் விசுக்கு. தவறுக்கு வருந்துகிறேன். கற்புள்ளவர் பட்டியலில் நான் நிழலி மட்டுமல்ல நண்பர் விசுகு வும் இருக்கிறார். நண்பர் விசுகு வோடு சேர்த்து உலகில் மொத்தமாக இரண்டரை கற்புள்ளவர்கள் இருக்கிறோம்.

புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை

1 day 19 hours ago
ஈழத்து தமிழர்கள் நாங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சொற்பதத்தை தயாராக வைத்திருப்போம், அடுத்தவனை பேசவிடாமல், அடுத்தவனை சிந்திக்க விடாமல், தேவைக்கேற்ப தூக்கி அடிப்போம்... கைக்கூலி , சமூக விரோதி, காவடித்தூக்கி , செம்பு தூக்கி, ஒட்டுக்குழு, முட்டையில் மயிரை புடுங்கு, சொட்டையில எண்ணெய்யை தடவு.. இதில் மட்டுமே நாங்கள் கைதேர்ந்த கில்லாடிகள்

கலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்

1 day 22 hours ago
நன்றாய் கொடுத்தேன் போங்கள்.நான் கொடுத்தது 100 டொலேர்ஸ் தான். 😂 இப்படிப் பலதை புதுப்பித்துள்ளமை எனக்கே கடுப்பாகத்தான் இருந்தது கோசான். முகங்களைக் கூட நடுவே ஒருகல்லை புதிதாக வைத்து சில மன்னரின் முகங்கள் பார்க்கவே எரிச்சல்தான் வந்தது. எனக்கு அந்தப் பொறுமை இருந்திருந்தால் நான் எங்கேயோ இருந்திருப்பன் குமாரசாமி. மகள் அப்பவும் குறிப்பெடுங்கள் அம்மா என்று சொன்னாள். மூன்றுமாதங்கள் போனதில் சில தகவல்கள் மறந்தும் விட்டுது.

புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை

1 day 23 hours ago
சரியுங்க மீராவின் எழுத்தில் மயிர் புடுங்கியதால் தான் இது வந்தது மீராவின் எழுத்தில் எங்கே மரியாதைக்குறைவு இருந்தது என்று சொன்னால் தொடரலாம்??

புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை

1 day 23 hours ago
தயவுசெய்து முட்டையில் மயிர் பிடுங்க வேண்டாம். நாங்கள் அவர்களது தற்போதைய சூழலை புரிந்துகொள்ள வேண்டும். நான் தெழிவாக இழிவுபடுத்தாமல் எழுதலாமே என்றுதான் வேண்டி நின்றேன். இதில் தவறொன்றும் இல்லையே ?

விக்னேஸ்வரனின் வெறுங்கால் ஓட்டம்

2 days ago
அது சரி தான். தமிழகத்தின் மக்களின் நலன்களுக்கு பெரும் பங்களிப்பை செய்து சேவையாற்றி கொண்டிருக்கும் ரஜினியை தங்களுக்கும் சேவையாற்றுபவராக ஈழத் தமிழர்கள் மாற்ற வேண்டும்.
Checked
Wed, 01/22/2020 - 14:41
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr