புதிய பதிவுகள்

யாழ்ப்பாணத்தின் புதிய சுவரோவியங்கள் – நிலாந்தன்

5 months 1 week ago
கல்வியால், விளையாட்டால், சமூக அக்கறையால் என நெருப்பை வளர்க்கலாம். இரத்தப்பொட்டை விட்டு விலக மாட்டீர்கள் போலுள்ளது.

"சினம்கொள்" இயக்குனர் ரஞ்சித் ஜோசப்

5 months 1 week ago
"சினம்கொள்" இயக்குனர் ரஞ்சித் ஜோசப் "புலம்பெயர்ந்ததமிழர்கள்" வரலாற்று ஆவணத்தில் ஏனைய நாடுகளில் வாழும் உறவுகளையும் காலத்தின் தேவை கருதி அவர்களுடைய வாழக்கைப் பின்னணியில் உள்ள வரலாற்றையும் பதிவு செய்து வருகின்றோம். கனடா நாட்டில் வாழ்கின்ற இயக்குனர்/தயாரிப்பாளர் ரஞ்சித் ஜோசப் அவர்களுடைய வரலாற்றைப் பார்க்கப்போகின்றோம். எதிர்வரும் திங்கள் கிழமை பாகம் 6 இன் பகுதி 2 வெளிவர இருக்கின்றது. ஜனவரி 4 ஆம் திகதியில் இருந்து "சினம்கொள்" திரைப்படம் நோர்வேயில் உள்ள பெரிய நகரங்களில் மீண்டும் திரையிடப்பட இருக்கின்றது. இந்ததிரையிடலுக்குப் பொருத்தமான ஈழம் சினிமா பற்றிய என்னுடைய கேள்விக்கு இயக்குனர் ரஞ்சித் ஜோசப் அவர்கள் அளித்த பதில்கள் ஒவ்வொன்றும் மிகத் தெளிவாகவும், நம்பிக்கை ஊட்டுவதாகவும் உள்ளது. புலம்பெயர்ந்ததமிழர்கள்ஆவணப் பதிவுகள் தொடர்ந்து வரும். உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தமக்கான சுய அடையாளத்துடன் ஓர் தடத்தை பதித்த, பதித்துக்கொண்டு இருக்கும் தமிழர்கள் பற்றிய வரலாற்றுப் பதிவு இளைஞர்கள்,யுவதிகள் அனைவரும் பார்க்க வேண்டிய தொடர். அடுத்த தலைமுறைக்கு ஏற்ற வகையில், அவர்கள்விரும்பிப்பார்க்கும் வகையில் தயாரிப்பினை தொடர்ந்து தருவதற்கு முயற்சி செய்கின்றோம்.

’இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்கக்கூடாது’

5 months 1 week ago
உண்மைதான் சே, கொஞ்சமேனும் முன் யோசனையோ பொறுப்போ இல்லாமல் எழுதிவிட்டேன். தவறு என்னுடையது. வருந்துகிறேன். நிற்க. தமிழகத்திலுள்ள அகதிகளின் எதிர்காலம் நிச்சயம் அற்ற நிலையில் அவ்ர்கள் தாயகம் திரும்புவதுதான் சாலச்சிறந்ததாக நான் எண்ணுகிறேன். அவர்களை ஏற்க இலங்கை விரும்பாது என்பதுடண் இந்திய அரசும் அவர்களை ஒரு துருப்புச்சீட்டாக பாவிக்க விரும்பும். மலையகத் தமிழரை வடக்கு கிழக்கில் குடியேற்றம் செய்தலும் நன்று.

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2

5 months 1 week ago
திட்டமிட்ட தமிழ் அழிப்பு புராண புரட்டுக்கள் உட்புகுத்தல் தமிழர்களை மேலோங்கவிடாது திட்டமிட்ட தடைகள் இவைகளில் இருந்து தமிழையும் தமிழர்களையும் எப்படி பாதுகாப்பது? என்று எழுத தொடங்கினால் ... இருவரும் எழுத ஒருவிடயம்தான் இருக்கிறது.

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2

5 months 1 week ago
நான் சொல்லவந்தது உங்களுக்கு நன்றாக விளங்கிவிட்டது இனி நீங்கள் இந்த நிலையில் இருந்து இறங்க போவதில்லை என்பது எனக்கு உறுதியாக தெரியும். இங்கு கருத்தாடி வெல்வதிலும் விட ... எமது எதிர்கால சந்ததி வளர்ச்சி பற்றி பேசுவது நல்லது என்பதே எனது இப்போதைய நிலைப்பாடு. எல்லோரும் எல்லா நாட்டிலும் அரசியல் செய்யலாம் செய்யவும் வேண்டும் அரசியல் எனும் பேரில் என்ன செய்கிறார்கள் செய்தார்கள் என்பதுதான் வாதத்துக்கு உள்ளானது. நெல்வயலின் அருகில் ஒரு கீரையும் வளர்ந்தால் அதையும் உணவாக்கி கொள்ளலாம். அதுவே நெல்லையே அழிக்கும் புல்லாக வளரும்போதுதான் ... விவசாயிகள் புடுங்கி எறியவேண்டும் புல் வளர்ச்சியில் கொஞ்சம் கவனம் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். உருது வருகை நாயக்கர் வருகை இரண்டையும் குறிப்பிடத்துக்கு நன்றி. ஒன்று இப்போதும் அதுவாகவே இருப்பதோடு தமிழுக்கும் சில மேன்மைகளை செய்கிறது. மற்றது திட்டமிட்டு தமிழையே அழிக்கிறது .... இதுதான் வேறுபாடு. இங்கு தமிழர்கள் தமிழை பாதுகாக்க நினைக்கிறார்கள்

ஜனாதிபதியின் வருகையை அடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பெயர்ப்பலகையில் மாற்றம்

5 months 1 week ago
தமிழ் பகுதிகளில் மொழி நடைமுறையில் முன்னுரிமை வழங்குவது என்பது முன்பிருந்த இரவல் மொழி சொற்களை தமிழாக்கம் செய்வது மட்டுமல்ல. தமிழ் வாசகங்கள் அனைத்து பெயர்பலகைகளிலும் எல்லா மொழிகளுக்கும் முதலாவதாகவும் எழுதப்பட்டிருக்கவேண்டும். சிங்கள மொழி எந்த காரணத்துக்காக அங்கங்கே முதலாவதாக எழுதப்பட்டிருக்கிறதோ அதே காரணத்திற்காக தமிழ் பிரதேசங்களில் உள்ள பெயர்பலகைகளில் தமிழ் வாசகங்கள் முதலாவதாக இடம்பெறவேண்டும். பல இடங்களில் வெறுமனே கூகுள் மொழிபெயர்பை பயன்படுத்தி தமிழ் சொற்களை பொறுப்பற்ற முறையில் சிரிப்புக்கிடமான வார்த்தைகளுடன் எழுத்துப்பிழைகளுடன் எழுதி பெயர்பலகைகளை நிறுவியிருப்பது திருத்தப்பட்டு மாற்றியமைக்கப்படவேண்டும். காவற்றுறை அல்லது காவல்த்துறை என வரவேண்டும் நான் சொல்வது சரிதானே? தமிழக போலிஸ் நிலையங்களில் "காவல்துறை" என்றே எழுதியுள்ளார்கள்.

’இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்கக்கூடாது’

5 months 1 week ago
எங்கேயையா இருந்து கிளம்பி வாறீங்க இவ்வளவு வேகமா. நானும் ஏதோ தாளத்திற்கு வசதியா இருக்குமேயென்று ஒரு புளோவில போட்டதற்கு இந்தக் குத்தா ? சத்தியமா தாங்கேலாது அழுதுதுடுவேன். ஐயா உங்களுக்கும் சேர்த்துதான் கீழே எழுதியுள்ளேன்.

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2

5 months 1 week ago
உங்களின் இரு பதிவுகளிலேயே உங்களின் கேள்விக்கான பதிலும் உண்டு. 2ம் உலக போரில் படித்த பாடங்கள்தான்- நீங்கள் சொல்லும் “உண்மையான நிலையை” ஐரோப்பாவில் ஏற்படுத்தியது. தேசிய மயப்பட்ட பாசிசம் எப்படிப்பட்ட ஒரு கொடூரமான மிருகம் என்பதை கண்டு கொண்ட ஐரோப்பிய சமூகம் இந்த மிருகம் விளித்துக்கொள்ள கூடாது என்பதில் மிகவும் அக்கறையாக இருப்பதே, இவ்வாறான சட்டங்களுக்கு காரணம். இருப்பினும் இத்தாலி, ஹங்கேரி, கிறீஸ் போன்ற இடங்களில் இந்த மிருகம் இப்போதும் தலை தூக்கவே செய்கிறது. இதே மிருகத்துக்குத்தான் தமிழ்நாட்டு மக்களே சட்டை செய்யாமல் விட்டாலும், சில புலம்பெயர் மக்கள் பாலும் முட்டையும் வைக்கிறார்கள்.

’இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்கக்கூடாது’

5 months 1 week ago
அப்படிப்போடுங்க அரிவாளை கப்பித்தான்! முதலில் நாயக்கர், முதலியார், கோனார் இத்யாதி சாதிகள் தமிழர் இல்லை, அவர்கள் தமிழ்நாட்டை ஆள முடியாது. பிறகு, மட்டக்களப்பு தமிழர்கள் தமெக்கென ஒரு தலைமைமையை தேடினால் அது பிரதேசவாதம், ஆனால் யாழ் தலைமகள் மட்டகளப்பு தலைவர்களுக்கு செய்ததை சொன்னால் - அது எல்லாவற்றையும் யாழ்மைவாதம் எனும் பொதுமைப்படுத்தல். இப்போ, மலையக தமிழர் எல்லாம் இலங்கையில் இருந்து அகன்று இந்தியாவில் குடியுரிமை கோர வேண்டும். நாளைக்கு - தீவுபகுதி மக்கள் எல்லாம், யாழ் நகரில் குடியேறி ஒரே ஆட்சி அதிகாரம் பண்ணுகினம். அவர்களை தீவகத்துக்கு அனுப்ப வேண்டும் 😂. நாளை மறுநாள் - டெம்பில் ரோட்டில் இருப்பவர்கள், பிரவுண் ரோட்டில் இருப்பவர்களை அடக்கி ஆளுகிறார்கள்😂😂😂. நீங்கள் இந்த வழியால்தான் போகிறீர்கள் என இரெண்டு நாட்களுக்கு முன்பே அனுமானித்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் இதை நிறுவுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை. பிகு: நல்லவேளையாக, ரணசிங்க பிரேமதாச என்ற ஒரு சிங்களவன் 1988 இல் இலங்கையில் வாழ்ந்த எல்லா மலையக தமிழருக்கும் இலங்கை பிரஜா உரிமையை வழங்கி விட்டதால், வெளிநாட்டில் வந்து அந்த நாட்டு பிரஜா உரிமையை யாசித்து பெற்ற எந்த யாழ்பாணத் தமிழனிடமும், தமது பிரஜா உரிமையை யாசிக்கும் நிலையில் இப்போ மலையக மக்கள் இல்லை.

ஜனாதிபதியின் வருகையை அடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பெயர்ப்பலகையில் மாற்றம்

5 months 1 week ago
எழுத்துப் பிழை காவற்றுறை அல்லது காவல்த்துறை என வரவேண்டும் நான் சொல்வது சரிதானே? தமிழ் பண்டிதர்கள் சொல்லுங்களேன்

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2

5 months 1 week ago
உண்மையில் எழுதும் போதே யோசித்தேன் ஆனால் நாங்கள் அடைந்திருப்போம் என் எழுதியிருந்தால் உங்கள் கேள்வி நீங்கள் சத்தியப்பிரமாணம் எடுத்ததை சொல்லவே இல்லையே என்பதாக இருந்திருக்கும்

ஜனாதிபதியின் வருகையை அடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பெயர்ப்பலகையில் மாற்றம்

5 months 1 week ago
பிழையா எழுதினாலும் திட்டுவோம். சரியா எழுதினாலும் திட்டுவோம். எழுதாமலே விட்டால், திட்டோ, திட்டென்று திட்டுவோம்.

’இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்கக்கூடாது’

5 months 1 week ago
அந்த பிஜேபி படிப்பறிவில்லா கூட்டம் தான் அப்படி சொல்லுது எண்டால் நாங்களும் அவர்களை போல் கூவனுமாய்யா ? முதலில் மலையகத்தமிழர் என்ற பதமே ஒழிக்கப்படணும் அவர்களும் தமிழர்களே புலம்பெயர்தலில் இங்கு வந்து இருபது வருடம் இருந்தவர்களே திரும்பி ஊர் போய் வாழமுடியாது என்று ஒப்பாரி வைக்கையில் அவர்களை இப்படி நோகடிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.சொந்த மொழியில் இலங்கை தேசிய கீதம் கூட பாடமுடியாத கூட்டம் ஆகி போனதன் காரணம் ஒவ்வொரு பிரதேச மைய வாதங்களினால் என்பதை நேரே கண்டு அனுபவித்தும் திருந்த முடியா உலகில் இருக்கிறம் .
Checked
Tue, 06/02/2020 - 08:34
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr