புதிய பதிவுகள்

இறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை? கேவலமான பிழைப்பு !

4 hours 48 minutes ago
தல, பேக்காய் மட்டுமில்லை..... பழம் திண்டு கொட்டை போட்ட பழம் பெரும் காய்... அச்சு பிசகாமல் அடிச்சார் பாருங்க..... நீஙகள் ‘82 ஏ எல்?‘ எண்டு..... ‘82 ஏ எல்?‘ கேர்ல்ஸ் பார்க்க, சுழன்டு திரிஞ்சவர் எண்டால்..... சும்மாவா.... 😁 தலயின்ற, யங் படம் ஒண்டு..... இருக்குது.... இங்க போட்டால், இவருக்கு கேர்ல்ஸ் கொடுத்த டோஸ் பத்தி நில்மினி மிச்சம் மீதிய சொல்லுவா!! 😁 எனக்கிருக்கிற டவுட்டு, இவர் கேர்ல்ஸ் பார்க போனாரா..... அல்லது...மலர் டீச்சர் , தேவகி டீச்சர் பார்க்கப் போனாரா எண்டு.... 🤔 நீங்கள் என்ன நிணைக்கிறியள்.

SPB ஒரு தெலுங்கர் | அயோக்கியனின் பார்வை | இதிலும் கேவலமான அரசியல் செய்யும் திராவிடம்

4 hours 50 minutes ago
SPB ஒரு தெலுங்கர் | அயோக்கியனின் பார்வை | இதிலும் கேவலமான அரசியல் செய்யும் திராவிடம் பாடும் நிலா SBP மக்களுடன் இரண்டற கலந்த ஒரு கலைஞர். அவரை தெலுங்கர் கூறும் மூடர்களுக்கு நமது கண்டனம். இதில் கூட அரசியல் ஆதாயம் தேடும் திராவிடம். மேட்டுக்குடி இன சாதி பிரதேசவாதிகள்தான் இப்படிப்பட்ட அயோக்கியதானமான அரசிலை இழவு வீட்டில் செய்வார்கள்

திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை!

5 hours 27 minutes ago
மன்னிப்பு கேட்டு தமிழருக்கு சுய ஆட்சி தந்தால் ஏற்போம், உலகில் உள்ள அத்தனை நாடுகளின் அரச கரங்களிலும் கறை படிந்திருக்கு, பூர்வ குடிகளை கொலைசெய்துவிட்டு, நல்லவர்களாக நடமாடும் வேஷதார உலகமிது

கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கலாம்

5 hours 32 minutes ago
கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கலாம் சிறீலங்காவில் குறைவடைந்திருந்த டெங்கு நோய் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதாக சிறீலங்கா டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது டெங்கு நோயின் தாக்கம் சிறீலங்காவில் மிகவும் குறைவடைந்திருந்தது. ஆனால் தற்போது அது மீண்டும் அதிகரித்து வருகின்றது. கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கல்முனை பகுதிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 9 மாதங்கயில் 30 பேர் இந்த நோயினால் இறந்துள்ளனர். கோவிட்-19 நோயின் தடுப்பு முறைகளால் டெங்கு நோயின் தாக்கம் இந்த வருடம் குறைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. http://www.ilakku.org/கிழக்கு-மாகாணத்தில்-டெங்/

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ள தமிழ்க்கட்சிகள் : ஹர்த்தாலுக்கும் அழைப்பு

5 hours 40 minutes ago
வடகிழக்கு தழுவிய பூரண கர்தாலுக்கு ஆதரவு இறந்தவர்களை அவர்களது உறவுகள் நினைவு கூரும் உரிமையை இந்த அரசு தடுத்தமைக்கு எதிராக நாளை திங்கட்கிழமை 28.09.2020 வடக்கு கிழக்கு தழுவிய பூரண செயற்பாட்டு முடக்கத்துக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ளெியிடப்பட்ட அறிக்கையில், இராணுவ கெடுபிடிகள் சம காலத்தில் அதிகரித்திருக்கின்ற சூழ்நிலையானது பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கும் அவர்களின் சுதந்திரமான நடவடிக்கைகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன் இதனை அரசாங்கமும் கண்டுகொள்ளாத நிலையில் உள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பின் படி குற்றவியல் நடைமுறை கோவையின் பொது தொல்லைகள் ஏற்பாடுகளின் கீழ், நினைவேந்தல் உரிமை, ஒன்றுகூடும் உரிமை, பேச்சுச்சுதந்திரம், மத சுதந்திரம், தனி மனித சுதந்திரம் என்பன யாப்பின் வழி வழங்கப்பட்டாலும் வடக்கு கிழக்கில் இவை மட்டுப்படுத்தப்பட்டவையாக காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இறந்தவர்களை நினைவுகூருவது என்பது உலக அளவிலும் உள்ளக அளவிலும் ஒரு கலாசாரம் சார்ந்த உரிமையாகவும் அரசியல் உரிமையாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் யுத்தத்திற்கு பின்னரான சர்வதேச பொறிமுறையான நிலைமாறு கால நீதிப் பொறிமுறையும் ஒன்றாகும். நிலைமாறு கால நீதியை முன்னெடுக்கும் இத்தருணத்தில் இறந்தோரை நினைவுகூருவதற்கான தடையை நீதிமன்றம் பிறப்பித்தமையானது சர்வதேச நீதிப்பொறிமுறையும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. அண்மைக்காலமாக பாதுகாப்பு பிரிவினரின் செயற்பாடுகள் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான நெருக்கத்தை மேலும் சிதைவுற செய்திருக்கிறது. குறிப்பாக பொலிஸ் ஊடாக நீதிமன்றங்களை நாடி அதன் மூலம் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு தடைவிதித்த இன்றைய அரசாங்கம் இலங்கையினுடைய நீதித்துறை மீதும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்த காரணமாக மாற்றியிருக்கிறது. இவ்வாறான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மக்கள் மீது திணிக்காமல் இறந்தவர்களை நினைவு கூரும் அரசியல் உரிமையை ஏற்று அங்கிகரிக்க வேண்டும். யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்த நிலையிலும் இத்தகைய நினைவேந்தலை தடுக்க முயல்வது இவ் அரசாங்கத்தின் பாதுகாப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. ஒரு முழுமையான நீதிப்பொறிமுறையின் கீழ் மலர்ந்திருக்கும் இந்த புதிய அரசாங்கம், தமிழ் மக்களையும் இலங்கை பிரஜைகள் என்ற வகையில் சமாதானம், நல்லிணக்கம், சமத்துவம், சுதந்திரம், இறைமை போன்ற அம்சங்களுடன் நீண்ட சமாதான நோக்குடன் பயணிக்கும் எண்ணப்பாங்கில் நீடித்த சமாதானமும் மீள் நல்லிணக்கமும் இலங்கையில் நிலைபெற வழிசெய்ய வேண்டும். எனவே தமிழ் மக்களுக்கான நீதியையும் இறந்தவர்களையும் அவர்களது உறவுகள் மற்றும் அவர்களது மனநிலையையும் வெளிப்பாட்டையும் அரசு கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்ற வகையில் நாளைய தினம் 28.09.2020 வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண செயற்பாட்டு முடக்கப் போராட்டத்துக்கு கல்விச்செயற்பாடுகள் மற்றும் பரீட்சைகள் முதலியவற்றை புறக்கணித்து யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமும் பூரண ஆதரவை வழங்குகிறது” என்று கூறப்பட்டுள்ளது. http://www.ilakku.org/வடகிழக்கு-தழுவிய-பூரண-கர/ அஞ்சலி செலுத்துவது ஒரு போராட்டமாகியுள்ளது, நாளைய ஹர்த்தாலில் அணி திரள சுரேஷ் அழைப்பு தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும் நாளை நடைபெறவிருக்கும் ஹர்த்தாலில் அனைத்து தமிழ் முஸ்லிம் மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரின் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருக்கின்றார். இது குறித்த அவரது அறிக்கை வருமாறு; “தமிழ் மக்களின் விடுதலைக்காக லட்சக்கணக்கான பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தமது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களுக்கான அஞ்சலி செலுத்துவதும் அவர்களை கௌரவபடுத்துவதும், அவர்களை நினைவு கூருவதும் ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும். இந்த அஞ்சலி என்பது ஐ.நா சாசனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயற்பாடுமாகும். இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த அஞ்சலி நிகழ்வுகளை கடைப்பிடிப்பது என்பது ஒரு போராட்டமாகவே மாறிவருகின்றது. எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அந்த அரசாங்கள் அதனை தடை செய்வதும் நீதிமன்றங்களின் ஊடாக தடைகளைப் பெற்றுக் கொள்வதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்த வருடமும் உரிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த அஞ்சலி நிகழ்வுகளுக்கு எதிராக தடைகளைப் பெற்று வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அஞ்சலி நிகழ்வுகளில் பங்கு கொள்ளக் கூடாது என்ற ஒரு நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த அஞ்சலி நிகழ்வுகளை நடாத்த முற்பட்டபொழுது ஒவ்வொரு இடத்திலும் அதற்கு எதிரான தடைகளை பொலிஸார் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டனர். ஆனால், அரசாங்கத்தினுடைய இந்த அடக்கு முறைகளைக் கண்டித்தும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்துடனும் நேற்றைய தினம் 26.09.2020 அன்று சாவகச்சேரியில் ஓர் உண்ணாநேன்பை வெற்றிகரமாக நடாத்தி முடித்தோம். இராணுவ பொலிஸ் சுற்றிவளைப்புக்குள் இந்த உண்ணா நோன்பு நடைபெற்றது. இதன் அடுத்த கட்டமாக தமிழ் மக்களினுடைய விடியலுக்காக போராடி மரணித்துப் போன அனைத்து பொதுமக்கள் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் எமது உரிமையை நிலைநாட்டும் பொருட்டு வடக்கு – கிழக்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு ஹர்த்தாலினூடாக எமது கோரிக்கையை வலியுறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. நாம் அனைவரும் இணைந்து இதனை வலியுறுத்தாவிட்டால் இலங்கை அரசாங்கம் வட – கிழக்கை தனது சிங்கள – பௌத்த மேலாதிக்கத்துக்குள் கொண்டுவரும். அதற்கான பல்வேறு பட்ட நடவடிக்கைகளை ஏற்கனவே இந்த அரசாங்கம் எடுத்து வருகின்றது. இந்த சூழலில்தான் இந்த உண்ணாநேன்பைத் தொடர்ந்து வட – கிழக்கில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முழுக்கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்தைச் செய்து ஒரு முழுமையான ஹர்த்தாலை அனுஸ்டிக்கும்படி வேண்டுகின்றோம்.” http://www.ilakku.org/அஞ்சலி-செலுத்துவது-ஒரு-ப/

இந்திய பொருளாதாரச் சரிவும், அந்நிய கார்ப்பரேட்களின் வரவும் – இதயச்சந்திரன்

5 hours 57 minutes ago
இந்திய பொருளாதாரச் சரிவும், அந்நிய கார்ப்பரேட்களின் வரவும் – இதயச்சந்திரன் கொரோனாவால் மோசமாகப் பாதிப்புற்றுள்ள இந்தியாவிற்கு, 750 மில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கவுள்ளது ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கி. சீன தேசத்தால் உருவாக்கப்பட்ட இவ் வங்கியில் (AIIB), இந்தியா உட்பட, அமெரிக்கா-ஜப்பான் தவிர்ந்த, பல மேற்கு நாடுகள் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இந்திய-சீன மோதல் குறித்த அதிகளவில் கொம்பு சீவி விடும் இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் யாவும் இந்தக் கடன் விவகாரத்தை ஏன் மறைக்கின்றன?. புதிதாக கொண்டுவரப்பட்ட விவசாய மசோதாக்கள், வெளிநாட்டு கார்ப்பரேட் வணிகர்களுக்கு புதிய வாசல்களை அகலத் திறந்துள்ளது. இது குறித்தும் இந்த ஊடகங்கள் பேசுவதில்லை. விவசாய உற்பத்திப் பொருட்களை விலைநிர்ணயம் செய்யும் பொறுப்பிலிருந்தும், இதுவரை சேமித்து வைக்கும் கொள் அளவினை நிர்ணயம் செய்வதிலிருந்தும் அரசாங்கம் விலகி, அந்த அதிகாரத்தைக் கார்ப்பரேட்களிடமே சட்டபூர்வமாகக் கையளிக்கிறது. இந்த நிலையில் நுகர்வோர் விலைச் சுட்டெண் (CPI)இற்குரிய தரவுகளை சந்தையிலிருந்து பெற வேண்டிய அரசு, கார்ப்பரேட் வணிகர்களிடமே அதனைப் பெற வேண்டும். மக்களின் நுகர்வுத்திறன் குறைவதையிட்டுக் கவலைப்படாத இந்திய அரசு, மொத்த உள்ளூர் உற்பத்தியானது கடந்த வருட காலாண்டோடு ஒப்பிடுகையில் -23.99% வீழ்ச்சியடைந்துள்ளதையிட்டு கவலைப்படுமா?. ஒரு புறம் சீனாவையும், பிரெஞ்சு ‘ரபையல்’போர் விமானத்தையும் மக்களுக்கு படம் காட்டியவாறு, மறுபுறம் கார்ப்பரேட் கம்பனிகளை உள்நுழைய அனுமதித்து, நாட்டின் சுயசார்பு பொருளாதாரத்தைச் சீரழிக்கும் மோடி அரசின் மக்கள்விரோத செயற்பாடுகளையிட்டு பல ஊடகங்களுக்கு அக்கறை இல்லை. இவ்வாறான பெரும் பொருண்மிய வீழ்ச்சியை எதிர்கொள்ள, சீன ஆதரவுக் கடனையும், கட்டற்ற வகையில் கார்ப்பரேட்களின் முதலீடுகளையும் வரவேற்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கும் இந்தியா, அண்டைநாட்டு விவகாரங்களில் கடும்போக்கு நடைமுறையைக் கடைப் பிடிக்குமென்று எதிர்பார்க்க முடியுமா?. அதிலும் 13வது திருத்தச்சட்ட விவகாரத்தை இந்திய அரசு திரும்பிப் பார்க்காது. முன்பு சோனியாவின் கண்களில் ஒளி தெரிந்தது போன்று, மோடியின் விழிகளிலும் சிலருக்கு ஞான ஒளி தெரிய வாய்ப்புண்டு. கொரானாவினால் புவிசார் அரசியலில் புதிய தத்துவங்களும் உருவாகலாம். 1929 இன் மாபெரும் பொருண்மியத் தேக்கம் பற்றி ‘இர்விங் பிக்ஷர்’ ‘ (Irving Fisher)எழுதிய 49 கட்டுரைகள் (The Debt-Deflation Theory of Great Depressions) போன்று, இந்தியாவிலிருந்தும் நிர்மலா சீத்தாராமன் போன்ற நவீன தத்துவஞானிகள் உருவாகலாம். http://www.ilakku.org/இந்திய-பொருளாதாரச்-சரிவு/

தமிழர் பகுதியின் தொன்மை வாய்ந்த வெடுக்கு நாறி மலை.!

6 hours 14 minutes ago
பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் 108 பானைகளில் உரிமை பொங்கல் வெடுக்குநாறி ஆதி இலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழாவின் இறுதிநாள் 108 பானைகள் வைத்து உரிமை பொங்கல் விழா கோலகலமாக நடைபெற்றுள்ளது. வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி இலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழா நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்கள் இடம்பெற்று நேற்று பத்தாம் நாள் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது. அந்தவகையில் ஆலய வளாகத்தில் 108 பானைகளில் பொங்கல் பொங்கி விசேட பூஜை நிகழ்வுகளுடன் பொங்கல்விழா நிகழ்வுகள் இடம்பெற்றது. காலை11 மணிக்கு ஆரம்பமாகிய பூயை நிகழ்வுகளில் வவுனியா மற்றும் யாழ்பாணம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் புவனேஸ்வரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். இதேவேளை ஆலயவளாகத்தில் அதிகளவான காவல்துறையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன்,ஆலயத்திற்கு வருகை தரும் பக்கதர்கள் பதிவுசெய்யப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் ஆலயத்திற்குள் உட்செல்வதற்கான சந்தியில் ஒலுமடு பிரதான வீதியின் அருகில் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பொங்கல் விழாவிற்கு வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பினால் 53 பானைகள் உபயமாக வழங்கப்பட்டுள்ளதுடன், அன்பாலயா இளைஞர்களால் தண்ணீர் பந்தலும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதேவேளை ஆலயத்தில் தியாகி தீலிபனை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றி நிகழ்வுகள் எதனையும் மேற்கொள்ளவேண்டாம் என வவுனியா நீதிமன்றால் வழங்கப்பட்ட தடை உத்தரவு கோரிக்கை ஒன்றின் பிரதியை நெடுங்கேணி காவல்துறையினர் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://www.ilakku.org/பாதுகாப்பு-கெடுபிடிகளுக/

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்

6 hours 15 minutes ago
எனக்குத் தெரிந்த பல பேர் கொரோனாவுக்கு பயத்தில் "அயன்", "விற்றமின்" மாத்திரைகள் எடுக்கின்றனர்...இதனால் எதுவும் பக்க விளைவுகள் வராதா?

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்

6 hours 21 minutes ago
அவரில்லை ரதி, இழவு வீட்டில் அரசியல் செய்து இன்படைந்தாரே பண்பான கருந்தாளர் -அவருக்கு இந்த திரி தொடங்கியவுடன் கருத்து பதிய நேரமிருக்கவில்லை. எல்லோரும் அவருக்காக அஞ்சலி செலுத்த, சத்தடி சாக்கில் அரசியலை புகுத்தி இன்பம் காண்டு விளைந்தார்

மறைந்தார் பாட்டு தலைவன் எஸ்.பி.பி

6 hours 23 minutes ago
சென்னையில் ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தன் உடலில் பல இடங்களில் பலதரப்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டு உறக்கத்தில் இருந்தார் எஸ்பிபி. திடீரென்று முழிப்புத் தட்டியது. தன்னைப் பற்றியும் தற்போதைய நிலைமையைப் பற்றியும் உடனே தெளிவடைந்தார். அந்த சமயத்தில் அவரெதிரே மிகுந்த பிரகாசமான ஓர் உருவம் தோன்றியது. வந்திருப்பது அந்த இறைவனே என்பதை அறிந்தார். கை கூப்பினார். ஒரு சில நிமிடங்கள் அமைதியாகக் கரைந்தன. “மகனே என்னிடம் ஏதாவது பேசத் தோன்றவில்லையா உனக்கு?” இல்லை என்று தலையசைத்தார் எஸ்பிபி. “எனக்கு ஏன் இந்த நிலைமை என்று கேட்பாயோ?” இல்லை என்று மீண்டும் தலையசைத்தார். “எனக்கு மட்டும் இந்த அளவு குரல்வளம் தந்தாய். கோடிக்கணக்கான ரசிகர்களைத் தந்தாய். பலபேரின் வாழ்க்கையில் மாற்றத்தை உணரவைக்கும் திறமையைத் தந்தாய். இதெல்லாம் எனக்கு மட்டும் ஏன் என்று நான் கேட்டேனா? அதுபோலத்தான் இதையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஏதோ என் வினைப்பயன் கழிந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்” இறைவன் முகத்தில் புன்னகை. “உன்னை ஏன் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது தெரியுமா?” “என் பாடல்கள். அதனை அவ்வளவு அருமையாக வடிவமைத்துக் கொடுத்த இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் மிக்க நன்றி” “பாடல்கள் மட்டுமா?” வேறு என்ன என்பதுபோல் பார்த்தார் எஸ்பிபி. “நீ உண்மையான மனிதத்துவம் அறிந்த மனிதன். எந்த ஒரு சிறிய ஆத்மாவையும் மதிப்பவன்” இரு கைகளையும் கூப்பினார் பாலு. “புகழின் உச்சியை அடைந்தாலும் அது உன் தலைக்கேறாது பார்த்துக்கொண்டாய். உன் நெருங்கிய நண்பன் உன்னைக் காயப்படுத்திய போதும், அடுத்த மேடையிலேயே அவனைப் போற்றியவன் நீ. பெரியவர்களை மதிப்பதிலும் இளையவர்களை ஊக்குவிப்பதிலும் உனக்கு நிகரில்லை” மீண்டும் இரு கைகளையும் கூப்பினார் பாலு. “அதனால்தான் எல்லோரும் தங்களில் உன்னைப் பார்க்கிறார்கள் உன்னில் தங்களைப் பார்க்கிறார்கள்” “போதும் பெருமானே. இதுவெல்லாம் நீ கொடுத்ததன்றோ?” “அப்படிச் சொல்லிவிட முடியாது, நீ வளர்த்துக் கொண்டது. பலபேர் பாலுவைப்போல் ஆகவேண்டும் என்று கனவு காண்கிறார்கள். எல்லோரும் உன்னைப்போல் பாடி விட முடியுமா என்ன? ஆனால் எல்லோரும் உன் மனித குணங்களைப் பேண முடியும்” “அந்த வகையில் என் ரசிகர்கள் மனதில் நான் ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் என்றால் எனக்கு மகிழ்ச்சியே. ஐயனே, இன்று நீங்கள் வந்திருக்கும் நோக்கம்?” “உன் முடிவைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை உனக்கு அளிக்கவே இங்கு வந்திருக்கிறேன்” “புரியவில்லையே…” “இப்பொழுது உன் உடலும் மனமும் எப்படி இருக்கின்றன?” “மனம் அதே போல் தான். உடல்தான் சுகமில்லை. இதோ இத்தனை கருவிகள் மூலமாக என் உயிர் ஓடிக்கொண்டிருகிறது. முன்னை விடத் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்” இறைவன் புன்னகை மாறாமல் கேட்டுக்கொண்டிருந்தார். எஸ்பிபி தொடரட்டும் என்று காத்திருந்தார். “ஒரு சந்தேகம் கேட்கலாமா?” “கேட்பாயாக” “என் தொண்டையில் துளையிட்டு சுவாசக்கருவி பொருத்தி இருக்கிறார்கள். நாளை நான் குணமடைந்த பின் மீண்டும் முன்புபோல் பாட இயலுமா?” “சில மாதங்கள் கழித்து நன்றாகப்பேச முடியும். உன் நுரையீரல் மிகவும் பாதிப்படைந்துள்ளது. முன்புபோல் பாட இயலாது என்பதுதான் உண்மை” இதைக் கேட்டவுடன் பாலுவின் கண்களில் தாரைதாரையாக்க் கண்ணீர் வழிந்தது. அதை எதிர்பார்த்து இறைவன் அமைதி காத்து இருந்தான். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பாலு பின்னர் கேட்டார், “எனக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அது செய்து முடிந்தால் நான் பாட முடியுமா?” “அப்பொழுதும் சந்தேகமே. அந்த நுரையீரலைக் காப்பாற்றும் பொருட்டு நிறைய மருந்துகளை உட்கொள்ள வேண்டி வரும். சாதாரணமாக வெளியில் சென்றுவரக் கட்டுப்பாடுகள் இருக்கும்” “அப்படியானால் நான் முன்புபோல வானம்பாடியாக வாழ முடியாதா?” “என்னை மன்னித்துகொள் மகனே” மீண்டும் பாலுவின் கண்களில் கண்ணீர். “முடிவு உன் கையில். இருக்க விருப்பமா, இறக்க விருப்பமா?” “என்னால் பாட முடியாது என்றால் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. என்னை இப்பொழுதே அழைத்துக் கொள்” இறைவனின் முகத்தில் அதே புன்னகை. “நன்றாக மீண்டுமொருமுறை யோசித்துக் கொள்” “இதில் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. நான் தயார்” மீண்டும் பாலுவின் கண்கள் கண்ணீர் சிந்தின. “இப்பொழுது எதை நினைத்து அழுகிறாய் மகனே?” “என்னுடைய கோடிக்கணக்கான ரசிகர்கள், நான் இறந்துவிட்டேன் என்று அறிந்தால் அதிர்ச்சியடைவார்கள். அந்த வகையில் நான் அவர்களுக்குத் துன்பம் தருகிறேன். அதை நினைத்தால்….” “நீ திடீரென்று அகால மரணம் அடைந்திருந்தால் பலரும் அதிர்ச்சியில் உயிர் விட்டிருப்பார்கள். அவர்கள் மனதையும் தயார் படுத்தும் பொருட்டுத்தான் கடந்த 40 நாட்களாக நாடகம் நடந்தது. முடிவை யாரும் எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உண்மை. ஆனால் ஓரளவு பக்குவப்பட்டு விட்டார்கள். உன் பூத உடல் தான் இல்லாதிருக்கும். இசையாக நீ நெஞ்சில் என்றும் நிறைந்து இருப்பாய். தமிழ் உள்ளவரை உன் புகழ் இருக்கும்” கண்ணீர் மல்க மீண்டும் கை கூப்பினார் பாலு. “பல்வேறு இடங்களில், பலதரப்பட்ட மனிதர்களின் முன் நான் பாடியிருக்கிறேன். இப்பொழுது உங்கள் முன் பாடும் வாய்ப்பை வேண்டுகிறேன் இறைவா” “ஆரம்பிக்கலாம் மகனே உன் இசையை” கண்கள் மூடி மனம் உருகிப் பாடத் தொடங்கியது அந்தக் குயில். அதை அணைத்தவாறு, அதனை அழைத்துகொண்டு அதன் இசையில் மயங்கியவாறே பயணிக்க ஆரம்பித்தான் இறைவன். சன்னமாக வெகுநேரம் அந்தப் பாட்டு கேட்டுக்கொண்டேயிருந்தது. ‘இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்………… Copied from FB.
Checked
Sun, 09/27/2020 - 16:16
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr