புதிய பதிவுகள்

'ஈழத்தில் ஏற்பட்டது போல் தமிழகத்தில் ஏற்படும்' - சீமான்

11 months 3 weeks ago
தமிழ் நாட்டில் பிற மாநிலத்தவரின் ஆதிக்கம்,வேலை வாய்ப்பின்மை, தரப்படுத்தல் என வரும்போது இளைய சமுதாயம் பேரெழுர்ச்சி செய்வது நியாயமானதே.

Brexit

11 months 3 weeks ago
நாகரிகம் என்றால் எதுவென்று எமக்கே இன்னும் தெரியாதபோது அவர்கள் அப்படித்தானே சொல்வார்கள் இது மக்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு அல்ல. ஐரோப்பியப் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு.

அன்புள்ள பரிமளம் அறிவது!

11 months 3 weeks ago
பரிமளம் அண்ணி வெட்டுவேன் என்று சொன்ன பிறகும் , வசந்தியுடன் கடித தொடர்பை தொடர்ந்தீர்கள். இன்னும் அண்ணிக்கு ஏன் கோபம் வந்தது, நீங்கள் அப்பிடி என்ன படம் காட்டினீங்கள் என்று சொல்லவில்லை.

அமேசான் நிறுவனர் விவாகரத்து - 35 பில்லியன் டாலர்கள் இழப்பீடாக வழங்குகிறார்

11 months 3 weeks ago
நோமலாய் சின்னவீடுகள் இல்லாத பெரிய முதலாளிகள் இந்த உலகத்திலை இல்லையெண்டு நான் சொல்லுறன். மெக்கின்ஸ் பெரிய கற்புக்கரசி மாதிரியெல்லோ கதையள் போகுது..... அமெரிக்கா ஒரு விசித்திர நாடப்பா..😎

முகமூடி

11 months 3 weeks ago
அவரும் UK தான் ஆனால் கொஞ்சம் தூர இருக்கிறார் என்று கேள்வி. அப்ப நீங்களே ஒரு ஐடியாவைச் சொல்லுறது. எங்காவது பொதுவான இடத்தில் சந்திக்கலாம். பார்பிக்கியூ போடலாம். ரதியின் வீடு என்றால் எனக்கு ஓகேதான்😀

2009 இனவழிப்புப் போரில் ஐ. நா ஆற்றிய பங்கு

11 months 3 weeks ago
வாழ்வாதார ,மற்றும் மனித உரிமைகள் பறிக்கபப்பட்ட மனிதர்கள் எங்கு தான் முறையிடுவது என்ற கேள்வி இந்த உலகில் இன்னும் தொக்கி நிற்கின்றது .....

மன்னார் மறைமாவட்ட ஆயர் – பிரான்சின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல்

11 months 3 weeks ago
உண்மை. நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையினூடாகத் தேறிவரும் குருக்களின் தொடர்பாடல்த்திறன் சாதாரண, சந்ததியூடான சைவமத அறிவைப்பெற்றுவரும் சைவக் குருக்களின் தொடர்பாடல்த்திறனுடன் ஒப்பிடிம்பொழுது அதிகமானது. இதுமட்டுமில்லாமல், மேற்குலகின் கிறீஸ்த்தவ அடிப்படையானது, இலங்கையில் கத்தோலிக்கக் குருக்கள் இவர்களுடன் இலகுவாக தொடர்புகொள்ள உதவுகிறது. இதுகாலவரைக்கும், எமது விடுதலைப் போராட்டத்தில் கத்தோலிக்கக் குருமார் சிறந்த பங்களிப்பினையாற்றியிருக்கிறார்கள். மதம் ஒன்றைத்தவிர, அடிப்படையில் அவர்களும் தமிழர்கள் என்கிற உணர்வே இதற்குக் காரணம். ஆனாலும், பிற்காலத்தில் தமிழர்களிடையே பிளவுகளை ஏற்படுத்த மதம் ஒரு ஆயுதமாக பாவிக்கப்படலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இதைப்புரிந்துகொண்டு, எம்மிரு மதங்களுக்குமிடையே ஒற்றுமையைப் பேணுவது அவசியமானது. தமிழர்கள் மதத்தால் பிரிவதைக் காட்டிலும், இனத்தால் ஒன்றுபடுவதே காலத்தின் தேவை.

அன்புள்ள பரிமளம் அறிவது!

11 months 3 weeks ago
முன்ஸ்ரர் மேற்கு ஜேர்மனி 08.05.1983 வணக்கம் குரு! நாங்கள் எல்லோரும் நல்ல சுகம்.அது போல நீங்களும் சுகமாக இருக்க வேண்டுகின்றேன். உங்கள் கடிதங்கள் கிடைத்தது. சந்தோசம்.அக்கா கடிதம் ஏதும் போட்டாவா? நான் அவவிடம் உங்களைப்பற்றி விசாரிப்பதில்லை.நான் உங்களைப்பற்றி விசாரித்தால் உனக்கென்ன அவ்வளவு அக்கறை என்று என்னை முறைத்து பார்த்து கதைப்பாள். காய்ச்சல் என எழுதியிருந்தீர்கள்.இப்போது எப்படியிருக்கின்றது? செல்வரத்தினத்தின் மகள்பாலலக்சுமி கனடா போய்விட்டார்.எப்படி என்ன மாதிரியென்று தெரியவில்லை. எனக்கும் கனடா போக விருப்பமாக இருக்கின்றது.நீங்கள் குறிப்பிட்ட இத்தாலி முதலாளியிடம் விசாரித்து பார்க்க முடியுமா? இல்லையென்றால் லண்டனுக்காவது போகலாம் என்றிருக்கின்றேன். முடிந்தால் உடன் பதில் தரவும். இப்படிக்கு வசந்தி

தமிழ் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் மகேந்திரன் காலமானார்

11 months 3 weeks ago
ஆழ்ந்த அஞ்சலிகள். சிறந்த வசனகர்த்தா என்பதற்கு தங்கபதக்கம் போன்ற படங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. போர்க்காலத்தில் வன்னிக்கும் சென்றவர் என நினைக்கிறேன்.

மாட்டு வண்டி

11 months 3 weeks ago
மாட்டு வண்டி.... ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து "எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புல்லின் அளவோ மிக குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்" என்றது. மாடு சொன்னதை கவனமாக கேட்ட வியாபாரி "மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்துக்கு வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளை சுமந்தால் உனக்கு புல்லின் அளவைஅதிகரிப்பதை பற்றி யோசிக்கிறேன்" என்றான். பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளை சுமக்க ஒப்பு கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி "மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்பு அடைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்" என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்து கொண்டது. புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, "மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிக குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்து கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்ய கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை" என்றான். கோபமடைந்த மாடு "எஜமான்! இந்த புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை" என்றது. அதற்கு வியாபாரி "மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்று தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே" என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு "வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்று தந்து விடுகிறேன்" என்று கூறியது. மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்க தொடங்கியது. ஆனால் மிக கடின உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லை கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் அதற்கு நோய் குணமாக மருந்து கொடுத்த வியாபாரி ஒரு நாள் அதனிடம் "மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விட போகிறேன்" என்றான். "எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?" என்றது. வியாபாரி அதற்கு "அவர்கள் உன்னை வேலை செய்ய சொல்ல வாங்கவில்லை. உன்னை கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்கு கேட்கிறார்கள்" என்றான். வியாபாரி சொன்ன பதிலை கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வர தொடங்கியது. "எஜமான்! நீங்கள் செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன். இல்லாவிடில் நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்" என்றது. அதை கேட்ட வியாபாரி, "நான் செய்தது துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு இருக்கலாம்" என்றான். மாடு தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டது. அன்பு நண்பர்களே . நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் நன்றி ரமேஷ்.. http://sivamindmoulders.blogspot.com/2017/04/blog-post_17.html

மன்னார் மறைமாவட்ட ஆயர் – பிரான்சின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல்

11 months 3 weeks ago
மதங்களை முன்னிலைப்படுத்திதான் நாடுகளின் எல்லைகளை வகுத்துள்ளார்கள் பிரித்தானியர்கள்.இது நடந்தது 1948 களில்.... சிறந்த உதாரணம் பாகிஸ்தானும் ...கிழக்கு பாகிஸ்தானும்....இஸ்லாம் என்ற அடிப்படையில் அந்தமான் ,லக்ஸ்தீவுகள் இந்தியாவுக்கு எத்தனையோ கில்லோமீற்றருக்கு அப்பால் உள்ளது அதை இந்தியாவுடன் இணைத்தார்கள்... 22 கில்லோமீற்றர்க்கு அப்பால் இருக்கும் சிறிலங்காவை பெளத்தம் என்ற மத அடையாளத்துடனும் வேறு சில முக்கிய தேவைகளுக்க்குமாக தனிநாடக அமைத்தனர்... உலகில் பல தேசிய இனங்கள் இருந்தால் தலையிடி என நினைத்து நாங்கு மத‌ங்களை வைத்து எல்லைகளை வகுத்தனர் போலும்.... இந்தியாவில் பல தேசிய இனங்கள் அழிக்கப்பட்டு "இந்து" இந்தியா என்ற ஒர் நாடு உருவாக்கிவிட்டு சென்று இப்பொழுது ஜனநாயக்ம் போதிக்கின்றனர்... இனிவரும் காலங்களில் மதங்கள் மூலம் தான் அடையாளங்கள் வெளிபடுத்த முற்படுவார்கள்.....சிங்கள தேசியம்,தமிழ்தேசியம் எல்லாம் அழிக்கப்பட்டு பெளத்த ,இஸ்லாமிய,கிறிஸ்தவ,இந்து மதஅடையாளங்கள் முன்னிலை படுத்தப்படும்....
Checked
Sun, 03/29/2020 - 14:37
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr