புதிய பதிவுகள்

இதற்குப் பெயர் பக்தியா?

15 hours 2 minutes ago
திரிக்கு சம்பந்தமான பதிவு மத சர்ச்சையில் சிக்கிய நடிகர் மாதவன்..! ஆவணி அவிட்டம் வழிபாடு தொடர்பான புகைப்படத்தை பதவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் மாதவன். அரக்ஷா பந்தன், சுதந்திர தினம், ஆணி அவிட்டம் வாழ்த்து தெரிவித்து நடிகர் மாதவன் புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். தனது தந்தை மற்றும் மகனுடன் பூணூல் போட்டு வழிபாடு செய்த போது எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்துள்ளார். ந்த புகைப்படத்தில் பூஜை அறையில் சாமி சிலைக்கு அருகே சிலுவை இருப்பதை பார்த்தவர்கள் மாதவனை விமர்சித்தனர். தேவாலயங்களில் இந்து கடவுள்களை பார்த்தது உண்டா என்று ஒருவர் மாதவனிடம் எழுப்பினார். மாதவனின் மத உணர்வு கேள்விக்குள்ளாக்கப்பட்டதை அடுத்து அவர் தனது விளக்கத்தை அளித்துள்ளார். உங்களை போன்ற ஆட்களிடம் இருந்து நான் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். அங்கு உள்ள பொற்கோவில் படத்தை பார்த்துவிட்டு, சீக்கியராகிவிட்டீர்களா என்று கேட்காதது வியப்பாக உள்ளது என பதிலளித்துள்ளார் மாதவன். மேலும் தர்காக்களில் இருந்து ஆசி பெற்றுள்ளேன். உலகில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத்தலங்களில் இருந்தும் ஆசி பெற்றுள்ளேன். சில பரிசாக வந்தது, சில வாங்கியவை. என் வீட்டில் அனைத்து மதங்களும் ஏற்கப்பட்டுள்ளது என தனக்கு எம்மதமும் சம்மதம் என்பதை தெளிவுப்படுத்தி உள்ள மாதவன் என் அடையாளத்தை பெருமையுடன் தக்க வைக்க வேண்டும் என்றும் அதே சமயம் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளனர் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.https://bit.ly/2KOP2Ld

இதற்குப் பெயர் பக்தியா?

15 hours 43 minutes ago
இந்த திரியில் இன்னும் ஏன் நின்று எல்லோரும் புடுங்குப்படினம் என்று எனக்கு விளங்கவில்லை ... எல்லோரும் ஒற்றுமையாய் அந்த சிறுவர்களுக்கு அலகு குத்தினதை கண்டிக்கினம் ...அரைவாசிப் பேர் என்ன எழுதினம் என்றும் புரியல்ல😕

கோத்தபாயவே ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்- அறிவித்தார் மகிந்த

15 hours 53 minutes ago
மட்டக்களப்பிலும் வெடி கொளுத்தப்பட்டிருப்பதாக தமிழ்சிறி அவர்கள் எழுதியிருந்தார். யாழ்ப்பாணத்தில் கோத்தாவுக்கு முன்பும் ஆதரவு இருந்தது தான். டக்ளஸ் போன்றவர்களே உள்ளார்களே.

இதற்குப் பெயர் பக்தியா?

16 hours 59 minutes ago
அலகு குத்தப்படாமல் இருக்கும் குழந்தையின் கண்களில் மரணபயம் தெரிகிறது 😡. மாட்டுக்கு கூட புளூகிராஸ் இருக்கு, இந்த பச்சை மண்ணுகளுக்குத்தான் கேட்பாரில்லாமல் போய்விட்டது 😥

கோத்தபாயவே ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்- அறிவித்தார் மகிந்த

17 hours 42 minutes ago
பல ஆய்வாளர்கள் இந்த கருத்துடன் உடன்படவில்லை. கோத்தாவை தவிர மற்றவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு என்ற காரணம் மற்றும் கோத்தா தனித்து களம் இறங்கும் சாத்தியம் காரணமாகவே மகிந்த இவரை ஏற்று கொண்டார்.

இதற்குப் பெயர் பக்தியா?

17 hours 50 minutes ago
இந்தச் செய்தியைக் கண்டுகொள்ளாமல் இதில் கருத்துக்கள் எழுதுபவர்கள் உங்கள் ஞானத்தேடலையும் சமய கலாச்சார நியாயப்படுத்களையும் கொன்ரினியூ பண்ணுங்கள்😷

ஆம்ஸ்டர்டாமில் ஓர் அட்வெஞ்சர்!

17 hours 54 minutes ago
தலைவர் பிரபாகரன் விடுதலைப் புலிகளின் முதல் வித்தாக விழுந்த லெப். சங்கரின் நினைவாக மாவீரர் நாளன்று எதுவும் உண்ணாமல் குடிக்காமல் இருப்பவர் என்று படித்திருக்கின்றேன். இது சமய நம்பிக்கை அல்ல. இதுபோல பெற்றவர்களின் நினைவுக்காக உணவை ஒறுப்பது அவர்களின் தியாகங்களை மதிப்பதாகும். இதை எந்த சமயக் குழப்பமும் இல்லாமல்தான் செய்கின்றேன்😎

இதற்குப் பெயர் பக்தியா?

18 hours 47 minutes ago
இங்கே அக்குபஞ்சர் பற்றி ஈழப்பிரியன் அண்ணா சொன்ன கருத்துக்கு, மல்லிகையும் குசா அண்ணரும் சொன்ன கருத்துக்களுக்கு என் பதில்: 1. அக்குபஞ்சர், எமது ஆயுள் வேதம் போல ஒரு மருத்துவ முறை. சமய நம்பிக்கை அல்ல. 2. அக்கு பஞ்சரில், தேர்ந்த நிபுணர் உடலில் தோலுக்கு கீழாக இருக்கும் நரம்பு வலையமைப்பை மிக நுண்ணிய ஊசிகளால் தூண்டி, சில வலி போக்கும் ஹார்மோன்களை தூண்டி, அதன் மூலம் வலி நிவாரணம் பெறலாம். அக்கு பஞ்சர் ஒரு வலி கண்ட நோயாளிக்கு மட்டுமே, வலி நிவாரணதுக்காக பாவிக்கப் படும். குஞ்சு குருமானை எல்லாம் கூப்பிட்டு அக்குபஞ்சர் என்று பஞ்சர் ஆக்குவதில்லை. அக்கு பஞ்சருக்கும், மனித உடல் பற்றிய அடிப்படை அறிவே இல்லாத பூசாரி, அலகு குத்தி திருநீறடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. 3. எமது முன்னோர்களின் உணவு, இதர பழக்க வழக்கங்களில் சில நல்ல விடயங்கள் இருக்கிறன என்பது மறுப்பதற்கில்லை. உதாரணம் தோப்பு கரணம் போடும் உடல் அப்பியாசம். ஆனால் இதே போல் சரிக்கு சரி ஒரு மண்ணுக்கும் உதவாத மோட்டுப் பழக்க வழக்கங்களும், பிற்போக்குத் தனங்களும் கூடவே இருக்கிறன. 4. விஞ்ஞானம் மாறி மாறி சொல்லும், ஆனால் அது விஞ்ஞானத்தின் வழு அல்ல. இந்த நேர்மைதான் விஞ்ஞானத்தின் சிறப்பு. சரி என நம்பியதை, தக்க காரணம் காணும் போது பிழை என ஏற்றுக் கொள்ளும் பக்குவம் விஞ்ஞானத்துக்கு உண்டு. நம்பிக்கைகள் மதங்கள் போல, அது கடவுள் சொல்லியது அதில் மாற்றமில்லை என வாதாடாது. இதற்கு நல்ல உதாரணமே, அக்குபஞ்சரும் தோப்புகரணமும். இரெண்டுமே விஞ்ஞானதுக்கு வெளியே இருந்து வந்தாலும், அதில் சாரம் இருப்பதால், விஞ்ஞானம் அவற்றை உள்வாங்கிகொண்டது. 5. சமயம் என்பது நம்பிக்கை சார்ந்தது. மிக எமோசனலான விடயம். ஆனால் பொது வெளியில் சமயம், நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு சில மனித விழுமியங்கள் உள்ளன. சமய நடவைக்கைகள் இந்த விழுமியங்களை மீறும் போது, அந்த சமயத்தில் உள்ளவர், இலாதவர் எல்லாரிடமும் இருந்து அதற்கு எதிர்வினை வருவது தவிர்கவியலாதது.

ஆம்ஸ்டர்டாமில் ஓர் அட்வெஞ்சர்!

19 hours 31 minutes ago
ஆம்ஸ்டர்டாமில் ஓர் அட்வெஞ்சர்! எனது பிறந்தநாள் சம்மர் பாடசாலை விடுமுறைக் காலத்தில் வருகின்றது. நான் பிறந்தநாள் அன்று வேலைக்கு விடுப்பு எடுத்து ரிலாக்ஸாக ஓய்வில் இருப்பதை ஒரு கொள்கையாகவே வேலை செய்ய ஆரம்பித்த காலத்தில் இருந்து விடாமல் வருடாவருடம் தொடர்வதால், பல மாதங்களுக்கு முன்னரே ஒருவார விடுமுறையை விண்ணப்பித்து அனுமதி பெற்றிருந்தேன். குளிர்காலம் எப்போதும் மப்பும் மழையும் காதுமடல்களை விறைக்கச் செய்யும் கடுங்குளிர்காற்றுமாக இருப்பதால், சம்மரில் பிரகாசிக்கும் வெயிலில் எங்காவது செல்ல மனம் ஏங்கும். பாடசாலை விடுமுறையில் வீட்டில் நிற்கும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிக்க எனது இணையும் இதே வாரத்தில் விடுமுறை எடுத்திருந்தார். விடுமுறையைக் கழிக்க எங்கே போவது என்பதில் ஒரு முடிவை எடுக்கமுடியவில்லை. Humans are explorers என்று சொன்னாலும் பிள்ளைகளுக்கு தெரியாத இடங்கள் எல்லாம் போய் பார்க்கவேண்டும் என்பதில் ஆர்வம் கிடையாது. வீட்டில் இருந்து பிளேஸ்ரேசனின் games விளையாடவும், cousins உடன் சேர்ந்து வெட்டியாகப் பொழுதைப் போக்கவும்தான் நாட்டம் அவர்களுக்கு. ஆனால் கனடாவுக்கு போவதென்றால் மட்டும் அங்கிருக்கும் cousins உடன் கும்மாளம் அடிக்கலாம் என்று எப்போதும் முன்னுக்கு நிற்பார்கள்! சம்மரில் விமான ரிக்கற் ஏறும் விலைக்கு அடிக்கடி அதிகம் செலவழித்து கனடா போகவும் மனம் ஒப்பவில்லை. ஒருவார விடுமுறை என்பதால் நல்ல வெய்யில் கொளுத்தும் மால்ராவுக்குப் போகலாமா, சுவிற்சலாந்துக்கு காரில் போய்ச்சுற்றலாமா, உள்ளூர் வேல்ஸில் போய் செம்மறியாடு, மாட்டு மந்தைகளையும், பச்சைப்புல்வெளிகளையும் பொடிநடையில் பார்க்கலாமா என்றெல்லாம் விவாதித்து, எகிறும் செலவையும், கடும்வெய்யில் அல்லது கடும் மழை வந்து குழப்பும் என்ற தயக்கத்திலும் நாலு நாட்கள் ஒல்லாந்து தேசம் மட்டும் போய் ஆம்ஸ்டர்டாம் நகருக்குள்ளால் ஓடும் கால்வாய்களையும், ரொட்டர்டாமுக்கு அண்மையிலுள்ள காற்றாலைகளையும் பார்த்து வரலாம் என்று தீர்மானித்தோம். பிள்ளைகளுடன் போவதால் ஆம்ஸ்டர்டாம் சிவப்பு விளக்குப் பகுதி விலக்கப்பட்ட வலயத்திற்குள் வந்துவிட்டது. ஆனாலும் பகலிலாவது ஒரு தடவை தனியே போய் எட்டிப்பார்க்கலாம் என்று மனம் குறுகுறுத்தது! முதல்நாள் பிரகாசமான வெயில். ஆனால் சுட்டெரிக்கும் அளவிற்கு வெப்பம் இருக்கவில்லை. கால்வாய்களினூடான சுற்றுக்கு ரிக்கற்றை வாங்கிவிட்டு நேரம் வரும்வரை கால்வாய்கள் நிறைந்துள்ள தெருக்களில் வேடிக்கை பார்த்துக்கொண்டு திரிந்தோம். எமது படகுக்கான நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே வரிசைக்குப்போனால் எமக்கு முன்னர் ஒரு வயதுமுதிர்ந்த தம்பதியினர் மாத்திரமே நின்றிருந்தனர். வந்த படகொன்றில் ரிக்கற்றைக் காட்டி ஏறி நகரின் அழகான பகுதிகளூடாக பயணித்துக்கொண்டிருந்தோம். இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் நாஜிகளிடம் பிடிபடாமல் ஒளிந்திருந்த ஆன் ஃப்ராங் எனும் பதினான்கு வயது யூதச் சிறுமியின் டயறி எனும் நூலை 90 களில் படித்திருந்தேன். அவர் ஒளிந்திருந்த வீட்டினை தற்போது காட்சியகமாக்கியுள்ளனர். அதைப் பார்ப்பதும் எமது itinerary இல் இருந்தது. அதனருகே படகு வந்தபோது எமது ரிக்கற்றைக் காட்டி அங்கு வெளியேறி மீண்டும் பிற்பகலில் படகுப்பயணத்தைத் தொடரலாமா என்று கேட்டேன். ரிக்கற்றை வாங்கிப் பார்த்த படகோட்டி நாங்கள் பிழையான படகில் உள்ளதாகச் சொல்லி, எங்களை ஏறிய இடத்தில் திரும்பவும் விட்டுவிடுவதாகச் சொன்னார். அவர் சரியாக ரிக்கற்றைக் கவனிக்கவில்லை என்பதால் தன்னில்தான் தவறு என்று எங்களைத் தொடர்ந்தும் படகில் இருக்க அனுமதித்தார். அவரின் நல்லெண்ணத்தில் அந்த கால்வாய்ச் சுற்றுப் பயணம் எமக்கு இலவசமாகக் கிடைத்தது! நாம் வாங்கிய ரிக்கற் சற்று விலைகூடிய கால்வாய்ச் சுற்றுலாவுக்கானது. எனவே மீண்டும் ரிக்கற் வாங்கிய இடத்திற்குப்போய் நாம் சுற்றித் திரிந்ததால் படகைத் தவறவிட்டுவிட்டோம்; அடுத்த படகில் இடம் இருந்தால் போகமுடியுமா என்று கவுண்டரில் இருந்த அழகான டச்சுப் பெண்ணிடம் கேட்டேன். இல்லை என்று கதைக்க ஆரம்பிக்கும்போதே, நாம் செலுத்திய விலை அதிகம் என்பதால் தயவு பண்ணுங்கள் என்று அப்பாவி வேடம் போட்டு அவளின் மனத்தை மாற்றி அடுத்த படகுப் பயணத்திற்கு அனுமதி வாங்கினேன். முன்னர் போன கால்வாய்களினூடாகப் போகாமல் நகரின் மிகவும் அழகான பகுதிகளினூடாக படகோட்டியின் நேர்முக வர்ணனையுடன் படகுச் சவாரி நன்றாகவே அமைந்தது. கொடுத்த பணத்திற்கு கிடைத்த மகிழ்ச்சியில் பயணம் திருப்தியாகவும் இருந்தது. இரண்டாவது நாள் ஜூலை 31. ஆடி அமாவாசை என்று அக்கா மெசஞ்சரில் தகவல் முன்னதாகவே அனுப்பியிருந்தார். எனவே, காலை உணவிற்கு பிள்ளைகளை இணையோடு அனுப்பிவிட்டு ஆறுதலாக குளித்து முழுகிப் போகத் தீர்மானித்தேன். சாமி, விரதம் என்று நம்பிக்கைகள் இல்லையென்பதால் திவசம் எல்லாம் கொடுப்பதில்லை. ஆனாலும் பெற்றோர்களுக்கு நீர்க்கடன் செலுத்தவேண்டும் என்பதை மறுப்பதில்லையாகையால் அம்மாவுக்காக சித்திரைப் பெளர்ணமியிலும், அவரது திதி நாளான வைகாசி பெளர்ணமி அன்றும், அப்பாவுக்காக அவரது திதியன்றும், ஆடி அமாவாசையிலும் விரதம் இருப்பதும் மச்சம் சாப்பிடாமல் இருப்பதும் வழமை. எங்களூர் விரதப்படி தோய்ந்த பின்னர் ஒரு கப் சூடான தேநீர் அல்லது கோப்பி குடிக்கலாம். அதற்குப் பின்னர் நீர்க்கடன் செலுத்தி, உணவு படைத்த பின்னர்தான் சாப்பிடலாம். இடையில் எதுவும் குடிக்காமலும் சாப்பிடாமலும் இருக்கவேண்டும். கோப்பி குடிக்கலாம் என்று கீழே போனால் அங்கு ஹொட்டேல் பணியாளர்கள் ஆணும் பெண்ணும் இருவராக இணையுடன் ஃபோனைப் பார்த்தவாறு மிகவும் சீரியஸாக உரையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. இணை பதற்றமாக கதைத்துக்கொண்டிருந்தாலும் அவர்களுக்கு முன்னால் இருந்த பிள்ளைகளின் முகத்தில் பதற்றத்திற்கான எதுவித அறிகுறிகளும் இல்லை. அவர்கள் இருவரும் வெளியிடங்களையும் தங்கள் வீடுபோன்று பாதுகாப்பான இடம் என்று பொருட்களை கவனமாகப் பார்ப்பதில்லை என்பதால் மூத்தவனைப் பார்த்து ‘உனது ஃபோன் தொலைந்துவிட்டதா?’ என்று கேட்டேன். ‘இல்லை. அம்மாவின் handbag தான் களவுபோய்விட்டது. அதற்குள் அவரது ஃபோனும் இருந்ததால் அது எங்குள்ளது என்று எனது ஃபோனில் உள்ள Life360 app மூலம் track பண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள்’ என்று சாதாரணமாகச் சொன்னான். நிலைமையின் விபரீதம் உடனடியாகவே புரிந்தது. - தொடரும்
Checked
Sat, 08/17/2019 - 10:41
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr