புதிய பதிவுகள்

இலங்­கை­யி­ட­மி­ருந்து பெரு­ம­ளவு இரா­ணுவ சலு­கைகளை அமெ­ரிக்கா நாடு­கி­றது - உடன்­ப­டிக்கை வரைபில் தக­வல்கள்

2 months 3 weeks ago
அமெ­ரிக்­கா­வா­னது படை­களின் நிலைப்­பாடு தொடர்­பான உடன்­ப­டிக்­கையின் கீழ் இலங்­கை­யி­ட­மி­ருந்து பெரு­ம­ளவு இராணுவ சலு­கை­களை நாடு­வ­தாக தகவல் வெளியா­கி­யுள்­ளது. தற்­போது அந்­நாட்­டுக்கும் இலங்­கைக்­கு­மி­டையில் பேச்­சு­வார்த்­தை­களின் கீழுள்ள படை­களின் நிலைப்­பாடு தொடர்­பான அந்த உடன்­ப­டிக்கை வரைபின் பிர­தி­யொன்றின் மூலமே மேற்­படி தகவல் அறி­யப்­பட்­டுள்­ள­தாக இலங்­கையின் முன்னணி ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யொன்று தெரி­விக்­கி­றது. அந்த உடன்­ப­டிக்­கையில் அமெ­ரிக்­காவால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கை­களில் பல இலங்­கையின் இறை­யாண்மையைப் பாதிப்­ப­ன­வாக உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. அமெ­ரிக்க விமா­னங்­களும் கப்­பல்­களும் தரித்­தி­ருத்தல் மற்றும் பரி­சோ­த­னை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­டு­வதை அமெ­ரிக்கா நாடு­கி­றது. இதன் பிர­காரம் சர்­வ­தேச ரீதியில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஒரு நாட்­டுக்­கான இறை­யாண்மை உரி­மையின் கீழ் இந்­நாட்டின் கடற்­படை, கரை­யோர காவல் படை, சுங்கப் பிரிவு உள்­ள­டங்­க­லான பாது­காப்பு பிரி­வுகள் எதுவும் இலங்கைத் துறை­மு­கங்­களை வந்­த­டையும் அமெ­ரிக்க இரா­ணுவ கப்­பல்கள் மற்றும் இலங்கை விமான நிலை­யத்தில் தரை­யி­றங்கும் விமா­னங்கள் அல்­லது தரை­யி­லுள்ள அமெ­ரிக்க வாக­னங்கள் மற்றும் உலங்­கு­வா­னூர்­திகள் என்­பனவற்­றுக்குள் பிர­வே­சிக்க முடி­யாது. அத்­துடன் அமெ­ரிக்கா இலங்­கைக்குள் அனு­மதிப் பத்­திரம், சுங்க வரி­கள், வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்களி­லி­ருந்தும் விதி­வி­லக்கை நாடு­கிறது. அது­மட்­டு­மல்­லாது அமெ­ரிக்கா தனது படை­யினர் இலங்­கையின் எந்­த­வொரு பகு­தி­யிலும் கட­மையிலிருக்கும்போது சீருடை­களை அணி­வ­தற்கும் ஆயு­தங்கள் மற்றும் வானொலித் தொடர்­பாடல் உப­க­ர­ணங்­களை ஏந்திச் செல்­வ­தற்கும் அங்கீகா­ர­ம­ளிக்­கப்­பட வேண்டும் என விரும்­பு­கி­றது. இலங்கை அர­சி­ய­ல­மைப்பு மற்றும் சாதா­ரண சட்­டங்கள் ஆகிய இரண்­டி­னதும் விதி­மு­றை­களின் பிர­காரம் ஆயுதப் படையி­ன­ருக்கும் பொலி­ஸா­ருக்கும் மட்­டுமே இவற்றை மேற்­கொள்ள அதி­கா­ர­முள்­ளது. அனு­ம­திப்­பத்­தி­ரத்தின் மூலம் அதி­கா­ரத்தைப்பெற்­றுள்ள இலங்­கை­யர்கள் மட்­டுமே இதற்கு விதி­வி­லக்­காக உள்­ளனர். இதற்கு மேல­தி­க­மாக அமெ­ரிக்கப் படை­யி­னரும் ஒப்­பந்­தக்­கா­ரர்­களும் தமது அமெ­ரிக்க அடை­யா­ளப்­ப­டுத்­தலை மட்­டுமே பயன்­ப­டுத்தி தனி­யா­கவோ அன்றி கூட்­ட­மா­கவோ இலங்­கைக்குள் பிர­வே­சிப்­ப­தற்கும் வெளியே­று­வ­தற்கும் அனுமதிக்கப்­பட வேண்டும் என்­பது அமெ­ரிக்­காவின் கோரிக்­கை­யா­க­வுள்­ளது. இதன் பொருள் அவர்கள் இலங்கை வருவதற்கு கட­வுச்­சீட்­டு­க­ளையோ அன்றி விசாக்­க­ளையோ எடுத்­து­வர மாட்­டார்கள் என்­ப­தாகும். படை­களின் நிலைப்­பாடு தொடர்­பான உடன்­ப­டிக்­கைக்கு முன்னாள் வெளிநாட்டு அமைச்சின் செய­லாளர் பிரசாத் காரி­ய­வா­சத்­துடன் இணைந்து ஊக்­கு­வித்து வரும் நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர கடந்த புதன்­கி­ழமை ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியி­டு­கையில், அந்த உடன்­ப­டிக்கை தீங்கு விளை­விக்­காது எனவும் அது ஆபத்­தா­ன­தல்ல எனவும் தெரி­வித்­தி­ருந்தார். அந்த உடன்­ப­டிக்­கையை இலங்கை ஏற்­றுக்­கொள்­ளா­விட்டால் அமெ­ரிக்­கா­வுக்­கான அதன் ஏற்­று­ம­தி­களை மட்­டு­மல்­லாது புதிய வேலை வாய்ப்­புக்­க­ளையும் இழக்க நேரிடும் என அவர் எச்­ச­ரித்­தி­ருந்தார். அவர்கள் இரு­வரும் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி கைச்­சாத்­தி­டப்­பட்ட கைய­கப்­ப­டுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்­ப­டிக்­கைக்கும் ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தனர். அமைச்சர் சம­ர­வீர மற்றும் செய­லாளர் கா­ரி­ய­வ­சத்தால் கொடுக்­கப்­பட்ட கடும் அழுத்தம் கார­ண­மா­கவே அந்த உடன்­ப­டிக்கை வரைபு அமைச்­ச­ரவை அங்­கீ­காரத் ­திற்கு அவ­சர அவ­ச­ர­மாக கொண்டு செல்­ லப்­பட்­ட­தாக முன்னாள் பாது­காப்பு செய லாளரான பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்திருந்தார். அந்த உடன்படிக்கை அனைத்து ஆயுதப் படையினருக்கும் அவர்களது விமர்சனத்துக் காக வழங்கப்பட்டது. இலங்கையில் கால டியெடுத்து வைக்கும் அமெரிக்கப் படையி னர் தொடர்பான கிட்டத்தட்ட அனைத்து அலகுகளையும் உள்ளடக்கிய இணைப்பு களின் சிங்களப் பதிப்பு அமைச்சர்களின் முன்பாக வைக்கப்படவில்லை. ஆங்கிலப் பதிப்பு மட்டுமே முன்வைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/59450

பிரபாகரனின் பலத்திற்கு பின்னால் போதைப்பொருள் கடத்தலே காணப்பட்டது - ஜனாதிபதி

2 months 3 weeks ago
இலங்கையின் உள்விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியம், உள்ளிட்ட சர்வதேச சமூகம் தலையிடுவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயல் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மரண தண்டனையினை அமுல்படுத்தினால் ஜி. எஸ்.பி வரிச்சலுகை உள்ளிட்ட சர்வதேச சலுகைகள் இரத்து செய்யப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் குறிப்பிடுவது எமது நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு விடுக்கும் அச்சுறுத்தல்களாகவே காணப்படும். மரண தண்டனையினை நிறைவேற்றுவதாக தீர்மானித்தமை நாட்டு மக்களின் தனிப்பட்ட நலன்களை மையப்படுததியே தவிர எவ்வித அரசியல் நோக்கங்களுக்கும் அல்ல என்பதை சர்வதேச அமைப்புக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். தேசிய சுயாதீனத்தன்மைக்கு சர்வதேச சமூகங்கள் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மரண தண்டணை விடயத்தில் சர்வதேசத்தில் மட்டுமல்ல உள்ளுர் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பினை தெரிவிப்பது பொருத்தமற்றதாகும். போதைப்பொருள் வியாபாரமே எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு நாட்டை அழிக்கும் சக்தி போதைப்பொருள் வியாபாரத்தில் உண்டு. விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நேரடி தொடர்பு கொண்டு இருந்தமையின் ஊடாகவே ஆயுதங்களை பெற்றுக் கொண்டு 30 வருட கால சிவில் யுத்தத்தை முன்னெடுத்து சென்றார். போதைப்பொருளில் இருந்து விடுப்பட்ட நாடு என்ற தொனிப்பொருளினை முன்னிலைப்படுத்தி கடந்த மாதம் 23ம் திகதி தொடக்கம் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுத்த தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார செய்திட்டத்தின் இறுதி தின நிகழ்வு இன்று சுஹததாச உள்ளக விளையாட்டரங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/59473

சீனாவின் செயல்பாடுகளை இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணிக்கும்

2 months 3 weeks ago
இந்திய – பசிபிக் கடல் மண்டலத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் சீனாவின் செயல்பாடுகளை இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணிக்கும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டணத்தில் கிழக்குக் கடற்படை அதிகாரிகளுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி போதோ இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்டை நாடான சீனா எப்போதும் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவதனால் கடல்சார் பாதுகாப்புத் தொடர்பில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம் என தான் கருதுவதாக தெரிவித்த அவர் தமது கடற்படை மேலும் வலுவடையும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலையும், கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடல், தென்சீனக் கடலை உள்ளடக்கிய இந்திய – பசிபிக் மண்டலத்தில் சீனா தனது ராணுவ ஆதிக்கத்தை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது. முழு தென்சீனக் கடலையும் சீனா உரிமை கோரி வருகின்ற நிலையில் அதற்கு எதிராக வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே, தாய்வான் ஆகிய நாடுகளும் தென்சீனக் கடலில் உரிமை கோரி வருகின்றன. இந்த நிலையில், சீனாவின் செயல்பாடுகளை இந்தியாவும் கண்காணிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. http://globaltamilnews.net/2019/125693/

ஜெர்மனி -போலாந்து – செக் குடியரசு நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவு வெப்பம்

2 months 3 weeks ago
ஜெர்மனி, போலாந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவு நேற்று புதன்கிழமை வெப்பம் பதிவாகி உள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் இன்னும் வெப்பம் உயரலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த நாடுகளைத் தவிர பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று வியாழக்கிழமை 40 டிகிரிக்கும் மேல் வெப்பம் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. வட ஆபிரிக்காவில் வீசிய வெப்பமான காற்றே ஐரோப்பியாவில் வீசிய அனல் காற்றுக்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஒரே ஒரு சம்பவத்தை வைத்து புவி வெப்பமயமாதல்தான் காரணமென கூற முடியாது என்ற போதிலும் தொடர்ச்சியாக வெப்பம் அதிகரிப்பது, அனல்காற்று வீசுவதற்கெல்லாம் பருவநிலை மாற்றம்தான் காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் பிந்தைய ஆண்டுகளின் தரவுகளினபடி தொழில்மயமாக்கலுக்கு பின் பூமியின் மேற்புற வெப்பம் ஒரு டிகிரி அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #ஜெர்மனி #போலாந்து #செக் குடியரசு #வெப்பம் #பிரான்ஸ், #சுவிட்ஸர்லாந்து http://globaltamilnews.net/2019/125366/

வடகொரியா - தற்சமயம் இடம்பெறுகின்ற 3வது சந்திப்பு

2 months 3 weeks ago
அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான 3 ஆவது சந்திப்பு தற்சமயம் இடம்பெறுகின்றது. வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-யுன் உடனான சந்திப்பிற்காக வட மற்றும் தென் கொரிய எல்லையின் இராணுவமயமற்ற பிராந்தியத்திற்கு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானில் கடந்த 2 தினங்கள் இடம்பெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற டொனால்ட் ட்ரம்ப், அங்கிருந்து தென்கொரிய செல்லும் வழியில், வடகொரிய தலைவரை சந்திப்பதாக அறிவித்திருந்தார். இதற்கமைய, இருவருக்கும் இடையிலான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமானது. இதன்போது முக்கியத்துவமிக்க பல விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. hirunews

சுதந்திர நாட்டிற்காக மொழி அறிவை மேம்படுத்த வேண்டும் - ஜனாதிபதி

2 months 3 weeks ago
சுதந்திர, அமைதியான நாட்டிற்காக சமூகங்கள் மத்தியில் மொழி அறிவை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரச கரும மொழிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரச கரும மொழிகள் கொள்கையில், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஸ்ட அதிகாரிகள் இன்னும் சரியான அவதானம் செலுத்தவில்லை என்பதால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெளிவுப்படுத்தினார். hirunews

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் அதுரலியே ரத்ன தேரர் புதிய கூட்டணியா ? : முஜூபுர் கேள்வி

2 months 3 weeks ago
இலங்கைக்கு எதிராக செயற்படும் புலம்பெயர் தமிழர்களுடன் அதுரலியே ரத்ன தேரர் கூட்டணி அமைத்து விட்டார். அதன் காரணமாகவே வைத்தியர் சாபி மீதான குற்றப்புலனாய்வு உள்ளிட்ட உள்நாட்டு விசாரணைகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கவேண்டும் என்றும் அதுரலிய தேரர் கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹூமான் குற்றஞ்சாட்டினார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, குருணாகலை போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் மொஹமட் சாபி மீதான குற்றசாட்டுக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஒருக்கட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அந்த விசாரணை அறிக்கை நீதி மன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்தியர் சாபி தொடர்பான விசாரணைகளை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமாயின் வைத்திய பிரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆனால் அதுரலியே ரத்ன தேரர், வைத்தியர் சாபி மீதான குற்றபுலனாய்வினரின் விசாரணைகளிலும் உள்நாட்டு விஞ்ஞான ஆய்வுகளிலும் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறியுள்ளார்.கடந்த காலங்களில் புலம் பெயர் தமிழர்களும் இலங்கைக்கு எதிராக இவ்வாறான கருத்துக்களையே முன்வைத்து வந்தனர். மேலும் இலங்கை மீது சர்வதேச விசாரணைகள் அவசியம் என்பதே புலம்பெயர் தமிழர்களின் பிரதான வேண்டுக்கோள் என்பது அனைவரும் அறிந்ததே. வைத்தியர் சாபி மீதான விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலைமையில் குற்றபுலனாய்வு பிரிவின் மீது நம்பிக்கையில்லைள என்று ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளது புலம் பெயர் தமிழர்களின் எதிர்பாரப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/59492

நடைபாதை வியாபாரம் மேற்கொள்ள தடை

2 months 3 weeks ago
வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் இன்று (01) காலை முதல் நகரில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடைபாதை வியாபாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், நடைபாதை வியாபாரிகளுக்கு இறுதி எச்சரிக்கை வழங்கும் நடவடிக்கையிலும் இன்று ஈடுபட்டிருந்தனர். நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த மரக்கறிகளை அகற்றியுள்ளதுடன் இனிவரும் காலங்களில் நடைபாதையில் வியாபார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் ஹொறவப்பொத்தான வீதி, இலுப்பையடி, சந்தை சுற்றுவட்ட வீதியில் மக்களின் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்படுத்தி நடைபாதையில் சுகாதாரத்திற்கு தீங்கான முறையில் மரக்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளப்படும் போது பொதுமக்கள் பெரிதும் அசௌகரிங்களுக்குள்ளாகி வருகின்றமை தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்தே இவ் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் இந் நடவடிக்கையினை மேற்கொண்ட நகரசபை ஊழியர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/59497

சிரியாவின் நிலைமைக்கு இலங்கை தள்ளப்படும் – விமல் எச்சரிக்கை!

2 months 3 weeks ago
சோபா மற்றும் எக்சா உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டால், வெகுவிரைவிலேயே சிரியாவின் நிலைமைக்கு இலங்கை தள்ளப்படும் என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார். மேலும், இலங்கையை அமெரிக்கா கையகப்படுத்திக் கொள்ளும் திட்டத்தின் ஓர் அங்கமாகவே ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அமெரிக்காவுடன் இலங்கை செய்துக்கொள்ளவுள்ள எக்ஸா மற்றும் சோபா உடன்படிக்கையினால், எதிர்க்காலத்தில் அமெரிக்காவின் காலணித்துவத்தின் கீழ் இலங்கை வருவதற்கான அபாயம் ஏற்படும் எனத் தெரிவித்தார். மேலும், இதனை மக்கள் புரிந்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே இரண்டு விதமாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு, இந்த அரசாங்கத்தின் காலத்தில் அது கைச்சாத்திடப்பட்டாலும், இலங்கையின் அனைத்து அரசாங்கங்களும் அந்த ஒப்பந்தத்துக்கு ஏற்றவகையிலேயே செயற்பட வேண்டும் என்ற சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஆபத்தாக அமையும் என்றும் தெரிவித்தார். திருகோணமலை துறைமுகத்தை கையகப்படுத்தும் பிரதான நோக்கில் கைச்சாத்திடப்படவுள்ள இந்த ஒப்பந்தங்களினால், அமெரிக்க இராணுவம் எவ்வேளையிலும் இலங்கையில் கால் பதிக்கலாம் என்றும் அவர்கள் இலங்கையின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட மாட்டார்கள் என்றும் குறித்த ஒப்பந்தத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக விமல் மேலும் கூறினார். அதேநேரம், இதனால் நாட்டின் விவசாய நிலங்கள், வரலாற்றுச் சின்னங்கள், பௌத்த மதத்திற்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார். அதுமட்டுமன்றி, அமெரிக்காவின் இந்த சூசக செயற்பாட்டின் ஓர் அங்கமாகவே, இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் விமல் வீரவன்ஸ சுட்டிக்காட்டினார். அமெரிக்காவை இலங்கைக்குள் நுழைய அனுமதியளிப்போமானால், நாம் நிச்சயமாக சிரியாவின் நிலைமைக்குத் தள்ளப்படுவோம். அவ்வாறான நிலைமையை ஏற்படுத்தி, தமது அரசியல் – பொருளாதாரத்தை பலப்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கமாக இருக்கிறது. இதற்கு ஏற்றாற்போல, இலங்கையில் வன்முறைகளைத் தூண்டும் செயற்பாடுகளிலும் அமெரிக்கா ஈடுபடலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். எனவே, இதனை நாட்டு மக்கள் உணர்ந்துக் கொண்டு, இந்த ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைச்சாத்திடாத வகையில் அலரிமாளிகையை முற்றுகையிட்டு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். Athavannews

யாழில் இடம்பெற்ற போதையிலிருந்து விடுதலையான தேசம் நிகழ்வு

2 months 3 weeks ago
ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனாவின் வழிகாட்டலில் ”போதையிலிருந்து விடுதலையான தேசம் ”எனும் தொனிப்பொருளிலான நிகழ்ச்சித் திட் டத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று [ 01.07.2019 வடக்கில் பல்வேறு பிரதேச செயலங்களில் இடம்பெற்றது. அந்தவகையில் அரசாங்க அதிபர் தலைமையில் யாழ் பேருந்து நிலையத்திலிருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை இடம்பெற்ற விழிப்புணர்வு பவனியில் அரச அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு போதைக்கு எதிரான பல்வேறு கோஷங்களையும் எழுப்பினார்கள் . அத்துடன் பறை மேளங்கள் அதிர கூண்டில் அடைக்கப் பட்ட போதை அரக்கனுடனான ஊர்தியினை யாழ் பிரதேச செயலாளர் எஸ் .சுதர்சன் தலைமையிலான குழுவினர் ஆற்றுகைக்கான காண்பியமாக தயாரித்திருந்தார். கோஷங்களும் ஊர்தியும் இணைந்த பவனி மாவட்ட செயலகத்தை வந்தடைந்ததும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினரினால் போதைக்கு எதிரான விழிப்புணர்வூட்டும் நாடகமும் இடம்பெற்றது. இச் செயற்திட்டத்தில் சமூக செயட்பாட்டு மையம், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது. #யாழில் #மைத்திரிபாலா சிறிசேனா #விழிப்புணர்வு #போதையிலிருந்து யாழ் .தர்மினி பத்மநாதன் http://globaltamilnews.net/2019/125739/ போதையிலிருந்து விடுதலையான தேசம் – நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியில் விழிப்புணர்வு போதையிலிருந்து விடுதலையான தேசம் எனும் நிகழ்ச்சித்திட்டம் இவ்வாரம் பரவலாக நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலின் கீழ் இந்நிகழ்ச்சிதிட்டம் பல்வேறு கட்டங்களாக அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய திங்கட்கிழமை(1) கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கணேஸ்வரனின் பங்குபற்றலுடன் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனை உளநலப்பிரிவு தொற்றா நோய்த்தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ.எம்.எஸ் இர்சாத் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து கல்முனை நற்பிட்டிமுனை கிட்டங்கி பிரதான வீதியில் விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்றினை காலை மேற்கொண்டிருந்தனர்.இதன் போது வீதியில் பயணம் செய்த பாதசாரிகள் முச்சக்கரவண்டி சாரதிகள் மோட்டார் சைக்கிள் சாரதிகள் ஏனைய வாகன சாரதிகள் இடைநிறுத்தப்பட்டு வீதி ஒழுங்கு முறைகள் சாரத்திய ஒழுங்கு விதிகள் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டங்கள் குறித்து தெளிவூட்டப்பட்டது. மேற்குறித்த வாகன சாரதிகளுக்கு போதைப்பொருள் தொடர்பான அறிவுறுத்தல் தலைக்கவசம் அணிதலின் ஒழுங்கு விதிகள் தலைக்கவசத்தின் பட்டியணிதல் சாரதிய செயற்பாட்டில் தொலைபேசி உரையாடலில் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பிலான அறிவுரைகள் யாவும் வழங்கப்பட்டு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இச்செயற்றிட்டமானது கடந்த ஒரு வாரகாலமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் பிரதானமாக போதைப்பொருள் பாவனை மற்றும் விபத்துக்களை தடுக்கும் முகமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மேற்படி செயற்திட்டம் வீதியோர விழிப்பூட்டல்களாக மட்டுமல்லாது பாடசாலைகள் தனியார் கல்வி நிலையங்கள் அரசாங்க திணைக்களங்கள் என பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் எமது பிரதேசத்தில் போதைப்பொருள்களின் பாவனை கூடிவருவதனை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக உள்ளன.எமது எதிர்கால சந்ததியினரை அதிகளவு இப்போதைப்பொருள் பாதித்துக்கொண்டிருக்கின்றது.இன்றைய இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்த வண்ணம் உள்ளது.குறிப்பாக பாடசாலை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகி கொண்டே வருகின்றனர். எனவே போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபட சகல விதமான உதவிகளையும் உளநலம் சார்ந்த விடயங்களையும் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபட தேவையான உளவள ஆலோசனைகளையும் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் உளநலப்பிரிவு வழங்குவதாகவும் பொத்துவில் திருக்கோவில் அக்கரைப்பற்று பாலமுனை நிந்தவூர் காரைதீவு சாய்ந்தமருது கல்முனை மருதமுனை மத்தியமுகாம் சம்மாந்துறை இறக்காமம் ஆகிய பிரதேசங்களில் உள்ள ஆதார வைத்தியசாலைகளில் மற்றும் பிரதேச வைத்தியசாலைகளில் குறிப்பிட்ட தினங்களில் நடைபெறும் உளநலசிகிச்சைகளில் ஆலோசனைகளை பெற்றுக்டிகாள்ள முடியும் என கல்முனை பிராந்திய சேவை கள் பணிப்பாளர் பணிமனை உளநலப்பிரிவு தெரிவித்துள்ளது. #போதையிலிருந்து #விடுதலை #தேசம் #நற்பிட்டிமுனை #விழிப்புணர்வு பாறுக் ஷிஹான் http://globaltamilnews.net/2019/125718/

மரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்துக்கெதிராக 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்

2 months 3 weeks ago
மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கெதிராக 10 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணி, பேராசிரியர் சீ. குணரத்ன, கலாநிதி கே சேனரத்ன மற்றும் வெலிகட சிறைச்சாலையிலுள்ள் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள குற்றவாளிகள் சிலர் சட்டத்தரணிகள் ஊடாக குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், நீதி அமைச்சர், நீதிமன்ற அமைச்சின் செயலாளர், சிறைச்சாலை ஆணையாளர், வெலிகட சிறைச்சாலை கண்காணிப்பாளர் உட்பட பல தரப்பினரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு மாத்திரம் குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தின் ஊடாக அரசியலமைப்பின் 12 (1) ஆம் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்படுவதாக மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். http://globaltamilnews.net/2019/125725/

சுதந்திரமும் சமாதானமுமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மொழியறிவு மேம்பட வேண்டும்

2 months 3 weeks ago
நாட்டில் இனங்களுக்கிடையே நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுவதற்கு மொழியறிவு முக்கியமானதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (01) முற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அரசகரும மொழிகள் தின விழாவில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரசகரும மொழி கொள்கையை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசகரும மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தும் வாரம் இன்று முதல் ஜூலை 05ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி , நல்லிணக்கத்தை நனவாக்குவதற்கு மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறை ரீதியில் அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். அரசகரும மொழி கொள்கை தொடர்பில் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரிகள் இதுவரையிலும் போதிய கவனம் செலுத்தாதமையினால் ஏற்பட்டுள்ள நிலைமையை இதன்போது தெளிவுபடுத்திய ஜனாதிபதி , தனது தாய்மொழிக்கு மரியாதையளிப்பதைப் போன்றே ஏனைய மொழிகளையும் அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும் என தெரிவித்தார். நாட்டு மக்களிடையே அச்சமும் பயமும் அவநம்பிக்கையும் தோன்றியுள்ளமைக்கு அவர்களுக்கிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமையே காரணமாகும் எனவும் அனைத்து மக்களும் சமாதானமாகவும் சந்தோசமாகவும் வாழ்வதற்கான சுதந்திரமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே மொழியறிவை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பங்களிப்பு வழங்கப்படும் மொழிக் கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பித்தல் மற்றும் மும்மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட படிவங்களை இணையத்தளத்தில் வெளியிடும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது. தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சின் செயலாளர் ஏ.எஸ்.எம்.எஸ்.மஹாநாம, கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் ஆகியோரும் கொழும்பு பல்கலைக்கழக சிங்கள மொழி கற்கைகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் சந்தகோமி கோபறஹேவா, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் என்.செல்வக்குமாரன் உள்ளிட்ட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விமான்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். http://globaltamilnews.net/2019/125750/

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

2 months 3 weeks ago
அறிவாளி / பிரோ , அஸ்வின் அணியில் இட‌ம் பிடிக்க‌ டோனி தான் கார‌ன‌ம் / த‌மிழ‌க‌த்தில் யார் ந‌ல்லா விளையாடினாலும் அவ‌ர்க‌ளுக்கு முத‌ல் ஜ‌பிஎல் போன்ர‌ விளையாட்டில் விளையாட‌ அனும‌திப்பின‌ம் , அதுக்கு பிற‌க்கு தேசிய‌ அணியில் விளையாட‌ அனும‌திப்பின‌ம் , த‌னிய‌ பிராம‌ண‌ருக்கு ம‌ட்டும் தான் இந்தியா அணியில் இட‌ம் என்றால் இதாலே ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் த‌மிழ் நாட்டில் உருவாகி இருக்கும் / அஸ்வின் முர‌ளி விஜ‌ய் போன்ர‌ வீர‌ர்க‌ள் , த‌மிழில் க‌தைப்ப‌தையே விரும்புவின‌ம் / டினேஸ் கார்த்திக் த‌மிழ் ஹிந்தி ஆங்கில‌ம் இந்த‌ மூன்று மொழியிலும் க‌ல‌க்குவார் / பிர‌மாண‌ர் அல்லாத‌ ந‌ல்ல‌ திற‌மையான வீர‌ர‌ த‌மிழ் நாட்டில் காட்டுங்கோ அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் 😉😁/

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை

2 months 3 weeks ago
எனக்கு வாயில வருகுது யாழுக்கும் அதில் உடன்பாடிருந்தாலும் இங்கு அதை யாழ் களம் அதை அனுமதிக்காது😡😡

ச்சீய்

2 months 3 weeks ago
“ச்சீய்..” ஜனனியை அடையாளம் கண்டு கொள்ள இரண்டு விஷயங்கள். சுலபத்தில் விட்டுத் தர மாட்டாள். அவள் பக்க நியாயங்களைப் பட்டியலிட்டு.. குரலெழுப்பாமல்தான்.. கைகட்டி காத்திருப்பாள் பதிலுக்கு. உண்மையை ஒப்புக் கொண்டால் பிழைத்தோம். இல்லையேல் தொலைந்தோம். அடுத்தது 'ச்சீய்'.. செல்லமாய். கலாய்த்தால் ரசிப்பதுடன் அவளின் ஃபேவரிட் வார்த்தையைச் சொல்லி விடுவாள். உதடு சுழித்து இமைகள் சிறகடிக்க ச்சீய் சொல்லும் அழகிற்கே.. 1000 மார்க் தரலாம். இன்றைய சண்டை எதிர்பாரா தருணத்தில் ஆரம்பித்தது. 'பூக்கள் பூக்கும் தருணம்' ரிங் டோன் ஒலித்தால் அவள். எனக்கோ மீட்டிங். பாஸ் பேச்சின் நடுவில் முறைத்து விட்டு (ஏன்.. ஆஃப் பண்ணல) அவர் உரையைத் தொடர்ந்தார். மெசேஜ் அனுப்பினேன். 'கால் யூ லேட்டர்'. இன்னொரு தரம் பூக்கள் பூத்தன. பாஸின் நெற்றிக்கண் இப்போது என் மேல். ஹெட் ஆபிஸ் அழைப்பு போல பந்தா காட்டி வெளியே வந்தேன். "என்னம்மா" "வெட்டி கூட்டத்துல இருந்தியா" "ப்ஸ்.. பாஸ் கடிச்சார்" "ஊசி போட்டுக்கோ.. இன்னிக்கு ஈவ்னிங் பார்க்கணும்" "அதெல்லாம்..." சொல்லி முடிக்குமுன் கட் ஆகிவிட்டது. உள்ளே போனபோது பாஸ் முடித்திருந்தார். "கேசவ்.. அந்த பவர் பாயிண்ட் ப்ரசெண்டேஷனைப் போடுங்க" திரை ஒளிர்ந்தது. என்னென்னவோ எண்கள்.. ஆங்கிலம்.. அரை மணி அனல் பறந்தது. பேப்பர் ப்ளேட்டில் பிஸ்கட்டுகள். கரம் சாய். அடுத்த கூட்டத்தில் விவாதிக்க எல்லா முன்னேற்பாடுகளையும் செய்த மாதிரி அன்றைய கூட்டம் கலைந்தது. "ஈவ்னிங் ஓடிராதே.. இன்சைட் பேக்டரி போறோம்" என்றார் கடைசியாய்க் கிளம்பும்போது. மாலையா.. பேக்டரி விசிட்டா.. தேவுடா.. "என்ன முழிக்கிற" "அம்மாவை செக்கப் கூட்டிப் போகணும்" "எப்ப பார் ஒரு சால்ஜாப்பு.. நோ எக்ஸ்கியூஸ்..நைட் கூட்டிப் போ.." போய் விட்டார். தொலைந்தேன். ஜனனி.. என்ன கிழி கிழிக்கப் போறாளோ.. நாலரை மணிக்கு அதிர்ஷ்ட தேவதை உதவிக்கு வந்தாள். "போலாமா சார்" "இல்லப்பா.. நாளைக்குத்தான். இன்னிக்கு இன்னொரு மீட்டிங் அட்டெண்ட் பண்னனுமாம்.. " என்றார் எதையோ தேடிக் கொண்டு. "நான் கிளம்பறேன்..அம்மாவை.." தலை நிமிராமல் சம்மதித்தார். "ஃபைவ் மினிட்ஸ் லேட்" என்றாள். "கோவத்துல கூட நீ அழகா இருக்கே" "கட் தட் கிராப்" "ம்ம்" "போன வருஷம் ஒரு பையனுக்கு கண் ஆபரேஷன் பண்ணோம்ல" "நான் எங்கே பண்ணேன்.. அர்விந்த்ல பண்ணாங்க" முறைத்தாள். "உதவி பண்ணீல்ல.. இப்போ இன்னொரு கேஸ்.. எட்டு வயசு.. மாறு கண் ப்ளஸ் பார்வை பிரச்னை" "ஏம்பா நீ லூசா.. அந்த ஆபரேஷன் ஆகி.. அவன் பார்வை சரியானதும் அவன் அம்மா.. முதல்ல உதவி கேட்டவங்க.. எதிர்ல பார்த்தா பேசாம கூட போனாங்கன்னு நீதானே சொன்னே" "அது வேற..அதுக்காக உதவி செய்யாம இருக்க முடியுமா" அதான் ஜனனி ! "அழகுடி நீ" கொஞ்சலுக்கு நேரமில்லை. ஜனனி சொன்ன விலாசத்திற்குப் போனோம். பார்க்கவே பாவமாய். வலது கண் தன்னிச்சையாய் மூடித் திறந்தது. இடது கண் இலக்கின்றி அலைந்தது. குத்து மதிப்பாய் குரல் வந்த திசையில் வணக்கம் சொன்னான். "உங்கிட்ட போன வாரம் 2000 பணம் வாங்கினேன்ல.. அது இவனை செக்கப் கூட்டிப் போகத்தான்.. பார்த்தாச்சு. ரெண்டு ஆபரேஷன் பண்ணனுமாம். இப்போ ஒண்ணு.. நாலஞ்சு மாசம் கழிச்சு ஒண்ணு.. " "ம்ம்" "20000 ஆகுமாம்" "ஜானு..எனக்கு எதற்கு கணக்கு.. எப்போ தரட்டும்" "பணம் கொடுக்கிற மவராசன்.. தெரிஞ்சுக்கணுமில்ல" 'இருடி.. உன்னை அப்புறம் வச்சுக்கிறேன்' என்கிற பார்வையைப் படிக்காதவள் போல பையனின் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டாள். "நாளைக்கு அட்மிட் பண்ணிரலாம்மா" வெளியே வந்து விட்டோம். "காபி உண்டா" என்றேன். "ஒன்லி ஃபைவ் மினிட்ஸ்" "காதலனுக்கு அவ்வளவுதான் டைம்..ஹ்ம்ம்.. பேசாம என் கண்ணும் நொள்ளையா இருந்திருக்கலாம்" ஜனனி விருட்டென்று எழுந்ததும்தான் என் வாய்த் துடுக்கு புரிந்தது. "ஏடிஎம் ல பணம் ட்ரா பண்ணித் தரியா" "ப்ளீஸ் ஜானு" "த்ரீ மினிட்ஸ்" எதிரிலிருந்த ஏடிஎம் செண்டருக்குள் போனேன். பணத்துடன் திரும்பினேன். "இந்தா" எண்ணிப் பார்க்கக் கூட இல்லை. போய்விட்டாள்..ராட்சசி. "பூக்கள் பூக்கும் தருணம்.." "ஏய்.. உன் போன் தான்.. எடு" கால் வந்தது கூடத் தெரியாமல் எக்ஸெல் கணக்கில் மூழ்கி இருந்தேன். பாய்ந்து எடுத்தேன் சார்ஜில் இருந்த ஃபோனை. "இன்னிக்கு ஈவ்னிங்.. அந்தப் பையன் வீட்டுக்கு வா.. தேங்க்ஸ் சொல்லணுமாம்" "அதெல்லாம்..." கட் ! பேஸ்து மாதிரி போனேன். தருணின் அம்மா கண்களில் நீருடன் நன்றி சொன்னாள். தருண் சாக்லேட் நீட்டினான். "பத்திரமா பார்த்துக்குங்க" வெளியே வந்ததும் ஜனனி கேட்டாள். "என்ன சாக்லேட்னு பார்த்தியா" ஸில்க். என் ஃபேவரிட். தருணுக்கு எப்படித் தெரியும்.. ஓ.. ஜனனியின் வேலையா.. "காபி குடிக்கணுமா" கன்னுக்குட்டி போலப் பின் தொடர்ந்தேன். "கோவமா.. லூசு மாதிரி பேசினா யார் பொறுத்துப்பா" "ம்ம்" "இந்த மூஞ்சி உனக்கு சூட் ஆகல.. சிரிச்சாலே சகிக்காது" "என்னைத் தவிர எல்லார் மேலயும் பிரியம் கொட்டற.. என்னைப் பிடிக்கணும்னா நான் என்னதான் பண்ணனும்" என்றேன் சீரியசாய். சொல்லி விட்டு கண் சிமிட்டினேன் என்னையும் மீறி. "ச்சீய் " #மீள் ரிஷபன் FB

மருத்துவர் தினம்

2 months 3 weeks ago
மருத்துவர் தினத்தில் எனது வேண்டுகோள்! Dr. Hariharan V MBBS, MD., Diet consultant. 2006-07ல் நான் நைட் டூட்டி டாக்டராக சிறிய மருத்துவமனைகளில் பணியாற்றியுளேன். பதினாலாயிரம் சம்பளம். மறக்க முடியாத தருணங்கள் அவை. "டாக்டர், என் ஏழு வயது பையனுக்கு கேன்சர். ஒரே பையன். எல்லாம் பண்ணியாச்சு. அவன் இன்னும் மூன்று மாதத்தில் இறந்துடுவான். இன்னிக்கு ரொம்ப வலி, பெத்திடின்-பினர்காண் ஊசி போட்டா வலி போயிடும், ஊசி போட்டா ஒரு வாரம் கழிச்சு தான் வலி வரும், நாங்க வழக்கமா போகும் மருத்துவமனையில் மறுத்துட்டாங்க. டாக்டர் மாறிட்டார். நாங்களும் நாலு ஹாஸ்பிடல் போயிட்டோம். எல்லாரும் மறுத்துட்டாங்க. ப்ளீஸ் ஊசி போடுங்க", என மூன்று வயது குழந்தை சைஸ் இருக்கும் ஏழு வயது வலியில் துடிக்கும் மூச்சிரைப்புடன் இருக்கும் குழந்தையை அவன் அம்மா காட்டினார். உடனே எதைப் பற்றியும் சிந்திக்காமல் ஊசி போட சொன்னேன். அடுத்த பதினாறு வாரங்கள், வாரம் ஒரு முறை அதே போல் வருவார்கள், பதினேழாவது வாரம், பேரன்ட்ஸ் மட்டுமே வந்தார்கள். "ரொம்ப நன்றி டாக்டர். குழந்தை வலியில்லாமல் இறந்தான்". நான் தூங்க இரண்டு நாளானது. இன்றைக்கு அந்த பெற்றோர் முகம் எனக்கு நினைவில் உள்ளது. அப்பர் மிடில் கிளாஸ் ஆட்கள். அவர்கள் நிலைமையில் என்னை நினைத்து வருந்திய நாட்கள் அதிகம். இதே போல இன்னும் பதினைந்து இறப்புகள். ஒரு வருடத்தில். என் வயது 25. அவசர சிகிச்சை மற்றும் ஐசியு இரவு டூட்டிகள். பொட்டலம் மாதிரி தூக்கிக் கொண்டு வருவார்கள். என்னென்னவோ செய்வோம். ஒரு நேரத்தில், ஆறு நர்ஸ்கள் எனக்கு உதவிய காலங்கள் உண்டு. எப்படியாவது இவரை காப்பாற்றிட மாட்டோமா என போராடுவோம். பேஷண்டை மாமன் மச்சானாய் தான் நினைப்போம். அடுத்த நாள், நாம் என்ன செய்து அவரைக் காப்பாற்றினோம் என அவருக்கு தெரியாது, "குட் ஈவ்னிங் டாக்டர்" என்பார். புன்னகைத்தபடியே நகர்வேன். இரவில் நர்ஸ்களுடன் உணவு சாப்பிடும் போது, அவர்கள் என்னை வெகுவாக பாராட்டுவார்கள், நான் அவர்களின் நல்ல செய்கை மற்றும் அன்று அவர்கள் செய்த தவறுகளை சொல்வேன். இருபது வருடம் அந்த மருத்துவமணைகளில் வேலை பார்க்கும் மிக சீனியர் நர்ஸ்கள் கூட என்னை மதித்து, அந்த உணவு வேளைகளில் கலந்து கொள்வர். உயிரை காப்பாற்றும் தருணங்களில், அடுத்த நாள் காலை வீட்டிற்கு பைக்கில் செல்லும் போது, ஹெல்மட் மண்டையை மேலே தூக்கியபடி வண்டி ஓட்டுவேன். இன்றளவும் மனதில் இருக்கும் தருணங்கள் அவை. காப்பாற்ற முடியாத தருணங்களில், இரண்டு நாட்களுக்கு மனதை உழப்பிக் கொண்டே இருப்பேன். ஓனர் டாக்டர், "ஹரி, கரெக்டா தாம்பா செஞ்ச. அமெரிக்காவில் அவன் இந்த நேரம் போயிருந்தாலும், அங்க என்ன செய்வாங்களோ அதை தான் செஞ்ச. அதுக்கு மேல அவன் தலை விதி. விடு" என்பார். நான் செய்யும் வேலையை பார்த்து இரண்டே மாதத்தில் சம்பளத்தை இரட்டிப்பாக்கினார் ஒரு ஹாஸ்பிடல் ஓனர் டாக்டர். இழப்பின் வலி அவருக்கு தெரியும். அவர் டாக்டர் மனைவி ரத்தப் புற்றுநோய் வந்து லட்சக்கணக்கில் செலவு செய்தும் இறந்தார். ஒரு வருடத்திற்கு மேல் முடியவில்லை. நிறைய கற்றுக் கொண்டாலும், சில மரணங்கள் என்னை அலைக்கழித்தன. மன அழுத்தத்தில் எனக்கு பிரஷரும், தூக்கமின்மையால் உடற்பருமனும் வந்தது. சமூகத்திற்கு நான் ஆற்றிய கடமை போதும் என கொஞ்சம் டென்ஷன் கம்மி தரும் வேலைக்கு வந்து, பின்னர் எம்டி படித்து, திருமணம் முடித்து, மெடிக்கல் காலேஜ் வாத்தியார், டயட் டாக்டர் என டென்ஷன் கம்மி வேலைகளில் செட்டில் ஆகி விட்டேன். இன்றளவும், நான் மிகப்பெரும் டாக்டர்களாக மதிப்பது, தங்கள் ஆரோக்கியம், சந்தோஷங்களை தொலைத்து பல்வேறு மருத்துவமனைகளில் வெறும் இருபத்தைந்தாயிரம், முப்பதாயிரம் ரூபாய்க்காக நைட் டூட்டி பார்க்கும் காஷுவாலிட்டி மற்றும் ஐசியூ நைட் டூட்டி டாக்டர்களையே. உங்கள் உயிரையோ, அல்லது உறவினர் நண்பர் உயிரை அவர் காப்பாற்றியிருந்தாலும் சரி, போராடி உயிரை காப்பாற்ற முடியாவிட்டாலும் சரி, அவருக்கு ஒரு smsசிலோ, வாட்ஸப்பிலோ, போன் செய்தோ, நேரிலோ, ஒரு கடிதம் மூலமாகவோ நன்றி செலுத்துங்கள். அவர் அடையும் சந்தோஷமே வேறு. உங்களை நன்றாக நினைவு வைத்திருப்பார். இன்றும் நான் காப்பாற்றியவர்கள் யாரும் நினைவில் இல்லை. இழந்தவர்கள் அனைவரும் என் நினைவில் பத்திரமாக உள்ளனர். டாக்டர்களை அடித்தல். அந்த பதினாறு மரணங்களில் ஒரு மரணம், ஒரு கவுன்சிலருடையது. அவர் அடிப்பொடிகள் மருத்துவமனையை அடித்து உடைத்தார்கள். நான் என் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். எனக்கென்ன பயம்? நான் ஒரு தவறும் செய்யவில்லை. அவரை காப்பாற்ற முழு முயற்சி செய்தும் முடியவில்லை. என்னை மட்டும் விட்டு விட்டு மற்ற எல்லாவற்றையும் நொறுக்கினார்கள். பின் தான் தெரிந்தது, கவுன்சிலர் தன் மகளுக்கு உயிலில் ஒன்றும் வைக்காமல் எல்லாவற்றையும் மகன்கள் பேருக்கு எழுதி வைத்து விட்டார் என. அந்த மகளின் கோபத்தின் வடிகாலே எங்கள் மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டது. சொத்து கிடைத்த இரு மகன்களும், சைலண்டாக பாடியை வாங்கிச் சென்று விட்டார்கள். அடிவாங்காமல் நான் தப்பித்தது தம்பிரான் புண்ணியம். இறந்த நபரின் முகம் இன்றளவும் என் நினைவில் உள்ளது. அவர் மகளின் நினைவில் அந்த முகம் இருக்குமா? தன் சொந்தம், நட்பை இழத்தல் ஒருவருக்கு தரும் அதே சோகத்தை, அந்த பேஷண்டை அட்டென்ட் செய்யும் டாக்டருக்கும் தருகிறது. சிறிய மருத்துவமனைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. நம்மூர் டாக்டர், நம்மை நம்பி ஆரம்பித்த மருத்துவமனை. அதற்கு பதிலாக ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டியிருந்தால், அது முன்னேறி, இன்றைக்கு ஒரு அரசியல் தலைவர்/ காண்டிராக்டர் ஆகியிருப்பார். மக்களுக்காக அவர் கட்டி, இரவும் பகலும் நோயாளிகளுக்காக அவர் பாடுபட்ட அந்த மருத்துவமனை இன்று விற்பனைக்கு. வாங்க ஆளில்லை. அவர் மகன்கள்/ மகள்கள் மெரிட்டில் மருத்துவம் கிடைக்காமல், மேனேஜ்மெண்ட் சீட்டில் சேர்க்க காசில்லாமல், இன்று வேறு கோர்ஸ்களில் சேர்கிறார்கள். அந்த டாக்டர் நாற்பது வருடங்களாக சம்பாதித்தது, அந்த பில்டிங்கை தவிர வேறில்லை. அதையும் விற்க முடியவில்லை. இன்னும் இருபது வருடங்களில், உங்கள் அருகில் இருக்கும் உங்களுக்கு பழக்கமான சிறிய மருத்துவமனைகள் இருக்காது. இன்றைக்கே ஒரு "நன்றி டாக்டர்" மெசேஜ் தட்டுங்கள். செய்யும் முதலீட்டிற்கு கேவலமான லாபத்துடன் தொழிலை நடத்துவதற்கும், செலவழிக்கும் நேரத்திற்கும், இழந்த தூக்கத்திற்கும், அவர் குடும்பத்திற்கு நேரம் செலவழிக்காமல் இருந்ததற்கும் நம்மால் செய்யக் கூடிய ஒரே கைம்மாறு " Thanks Doctor" எனும் ஒரு வரியே. அவருக்கு அதனால் கிடைக்கும் சந்தோஷமே வேறு.. ############################## மருத்துவர்கள் தினமான இன்று எனது வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத மருத்துவரைப் பற்றிய நினைவைப் பதிகிறேன் சுமார் பதினான்கு வருடங்களுக்கு முன்பு , 2005 ஆம் ஆண்டு, அப்போது நாங்கள் நாமக்கலில் வசித்து வந்தோம். நான் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி எனும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்தேன் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் கடுமையாக உழைத்து இறுதி தேர்வுகளை அடைந்தேன். ஆனால் அங்கு எனக்கொரு மாபெரும் சோதனை காத்திருந்தது. மொழிப்பாடங்கள், இயற்பியல் ( physics) தேர்வுகள் வெற்றிகரமாக கடந்து சென்றன. சரியாக வேதியியல் ( chemistry ) தேர்வன்று ( 14/3/2005) அதிகாலை 1 மணியளவில் குளிர் நடுக்கத்துடன் கடும் காய்ச்சல் வந்துவிட்டது . என்னால் தூங்கவும் முடியவில்லை. புத்தகத்தை திருப்புதலும் ( revision) செய்ய முடியவில்லை. கடுமையான தலைவலி பிடித்துக்கொண்டது. அன்று இரவு கொடுமையான இரவாக இருந்தது. கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்து தலையணையை நனைத்துக்கொண்டிருந்தது. ஒரு பக்கம் காய்ச்சல் தலைவலி தரும் வேதனை மற்றொரு பக்கம் விடிந்தால் என் விதியை நிர்ணயம் செய்யப்போகும் பரீட்சை நான் ஒரு சமயத்தில் என் மருத்துவக் கனவு தகர்ந்தது என்றே நினைத்துவிட்டேன் காலை பரீட்சைக்கு காய்ச்சலோடு தயாரானேன் வாந்தியும் குமட்டலும் சேர்ந்து கொண்டது என் வீட்டருகே அப்போதைய எங்கள் குடும்ப மருத்துவர் மரு. பழனிச்சாமியிடம் என் தந்தை அழைத்துச் சென்றார். அவரது பார்வை நேரம் இல்லையெனினும் எனக்காக காலை 8 மணிக்கு என்னைப் பார்த்தார். இரண்டு ஊசிகளும் சில மாத்திரைகளும் கொடுத்தார் இரவு முழுவதும் உறங்காததால் நான் மிகவும் சோர்வாக இருந்தேன் அவரிடம் நான் சொன்னேன் " அங்கிள், டாக்டாராகனும்னு என் ஆசை. ஆனா இன்னைக்கு என்னால முடியுமானு தெரியல அங்கிள்" என்று அழுதுவிட்டேன் அப்போது அவர் சொன்னார் " டோன்ட் வொர்ரி டாக்டர். கவலப்படாம எழுதிட்டுவாங்க. ஐ பிலீவ் , யூ வில் பிகம் ய டாக்டர். " என்று கூறினார் இன்று நினைத்தாலும் அந்த வார்த்தைகள். என் கண்களை குளமாக்கிவிடும். அவர் வானில் இருந்து வந்த தேவதை போல எனக்குத் தெரிந்தார். எனக்கிருந்த காய்ச்சலை மூன்று மணிநேரம் இல்லாமல் பார்த்துக்கொண்டார். பரீட்சையில் புத்துணர்வுடன் களம் கண்டேன். வெற்றி பெற்றேன் . மருத்துவர் ஆனேன். இனிப்புகளுடன் அவரை சந்தித்தேன் நான் நன்றிகளைக் கூறினேன். அவர் மிகவும் மகிழ்ந்தார் என் வாழ்க்கையில் மிகவும் எளிதாக பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் அவர் . இப்படித்தான் மருத்துவர்கள் அன்றாடம் தங்கள் பணியில் தங்களை அறியாமலே பலர் வாழ்க்கையில் மாற்றங்களை புரிகின்றனர் அவர் என்னை மறந்திருப்பார் ஆனால் என்னால் அவரை என் வாழ்நாளில் மறக்க இயலாது அவர் அன்று எனக்களித்த பரிந்துரைச்சீட்டை பத்திரமாக வைத்துள்ளேன் நான் மருத்துவராக உதவிய பரிந்துரைச்சீட்டு என் வாழ்க்கையை மாற்றிய பரிந்துரைச்சீட்டு ( நானும் என்னை சந்திக்க வரும் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களை காக்க வைப்பதில்லை. அவர்களுக்கு உந்துதல் தரும் வார்த்தைகளை கூறாமல் இருப்பதில்லை. இது அவரிடத்தில் கற்றுக்கொண்டது தான்) இறைவனுக்கே புகழனைத்தும் தங்களை அறியாமல் பிறர் வாழ்க்கையில் வண்ணம் தீட்டும் மருத்துவர்களுக்கு மருத்துவர் தின வாழ்த்துகள் இதே போன்று உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்த மருத்துவரைப்பற்றி கமெண்ட் செய்யலாம் Dr Faruk abdulla Fb

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை

2 months 3 weeks ago
பழசுக்கு சிங்களவன் கொடுக்க வெளிக்கிட்ட கொழும்பு வீடு கிடைப்பதில் சிக்கல் போல் உள்ளது அதுதான் இப்படி பாஞ்சு விட்டத்துக்கு எகிறுக்கிறார்.
Checked
Mon, 09/23/2019 - 05:22
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr