புதிய பதிவுகள்

ஊரடங்கால் தோட்டங்களிலேயே அழுகி வீணாகும் கிர்ணி பழங்கள்; துக்கத்தில் புதுச்சேரி விவசாயிகள்

11 hours 24 minutes ago
தோட்டத்திலேயே அழுகும் கிர்ணி பழங்கள். புதுச்சேரி ஊரடங்கு உத்தரவால் தோட்டங்களிலேயே அழுகிய நிலையில் கிர்ணி பழங்கள் உள்ளதால் வளர்த்த கையாலேயே அதைத் தூக்கி எறியும் மன உளைச்சலில் புதுச்சேரி கிராமப்புற விவசாயிகள் உள்ளனர். புதுச்சேரி கிராமப் பகுதிகளில் கோடைக்காலத்துக்கான பயிர்களான தர்பூசணி, கிர்ணி பழங்கள் பயிரிட்டு வெளிமாநில வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம். புதுச்சேரியிலும் பல இடங்களில் இப்பழங்கள் விற்பனையாகும். அதிக அளவில் புதுச்சேரி கிராமப்பகுதியில் பி.எஸ்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விளைந்த கிர்ணி பழங்களை வாங்க யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரமுடியவில்லை. ஏனெனில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதே முக்கியக் காரணம். கடைகளும் மூடப்பட்டுள்ளன. தெருவில் மட்டுமே அதிக அளவில் கொட்டி இப்பழம் விற்கப்படும். கிர்ணி பழத்தை 7 ஏக்கரில் பயிரிட்ட பி.எஸ்.பாளையத்தைச் சேர்ந்த ரவி கூறுகையில், "கிர்ணி பழத்தில் அதிக வைட்டமின்கள், சத்துகள் நிறைந்துள்ளன. இதை கோடையில் ஜூஸ் செய்து சாப்பிடும் போது உடல் வெப்பத்தைத் தாங்கும். அத்துடன் நிக்கோட்டின் பாதிப்பிலிருந்து நுரையீரலைக் காக்கும். இதில் கொலஸ்ட்ரால் துளியும் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி தரும். அல்சர் நோய்க்கு மருந்து. இதை அறிந்து கடந்த 6 ஆண்டுகளாக கிர்ணி பழம் பயிரிட்டு வந்தேன். இம்முறையும் நன்றாக கிர்ணி விளைச்சல் இருந்தது. அறுவடை செய்யும் நேரத்தில் கரோனா அச்சுறுத்தல் எழுந்தது. ஊரடங்கும் அமலானதால், வெளியூரிலிருந்து யாரும் வாங்க வர முடியாத சூழல் ஏற்பட்டது. தோட்டத்திலேயே அழுகி வீணாவதைப் பார்க்க முடியவில்லை. நான் ரூ.4 லட்சம் செலவிட்டேன். அத்தனையும் கடன்தான். ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் மொத்தமாக வீணாகிவட்டது" என்று கூறுகிறார். தோட்டத்தில் பணியாற்றும் பெண்கள் கூறுகையில், "நாங்கள் கஷ்டப்பட்டு விளைவித்த பழங்களை நாங்களே தூக்கி எறிந்து அப்புறப்படுத்துகிறோம். எப்படியும் ரூ.25-க்கு விற்கும் இப்பழம் தற்போது ரூ.5-க்கு தான் விற்பனையாகிறது. தோட்டத்தை தற்போது சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டோம். மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. அடுத்த முறை எப்படி விவசாயம் நடக்கும் எனத் தெரியவில்லை. தோட்டத்தில் பார்த்து பார்த்து வளர்த்த பழங்கள் தற்போது வீணாகி நிற்பதைக் காண்பதே கஷ்டம்தான்" என்றனர். விவசாயிகள் தரப்பில் கூறுகையில், "கடன் வாங்கி பல லட்சம் செலவு செய்தோம். மொத்தமும் நஷ்டம்தான். அரசு எங்களுக்கு உதவுமா" என்று கேள்வி எழுப்புகின்றனர். https://www.hindutamil.in/news/tamilnadu/548154-farmers-worst-affected-in-puduchery-2.html

ஊரடங்கால் தோட்டங்களிலேயே அழுகி வீணாகும் கிர்ணி பழங்கள்; துக்கத்தில் புதுச்சேரி விவசாயிகள்

11 hours 24 minutes ago
தோட்டத்திலேயே அழுகும் கிர்ணி பழங்கள். புதுச்சேரி ஊரடங்கு உத்தரவால் தோட்டங்களிலேயே அழுகிய நிலையில் கிர்ணி பழங்கள் உள்ளதால் வளர்த்த கையாலேயே அதைத் தூக்கி எறியும் மன உளைச்சலில் புதுச்சேரி கிராமப்புற விவசாயிகள் உள்ளனர். புதுச்சேரி கிராமப் பகுதிகளில் கோடைக்காலத்துக்கான பயிர்களான தர்பூசணி, கிர்ணி பழங்கள் பயிரிட்டு வெளிமாநில வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம். புதுச்சேரியிலும் பல இடங்களில் இப்பழங்கள் விற்பனையாகும். அதிக அளவில் புதுச்சேரி கிராமப்பகுதியில் பி.எஸ்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விளைந்த கிர்ணி பழங்களை வாங்க யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரமுடியவில்லை. ஏனெனில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதே முக்கியக் காரணம். கடைகளும் மூடப்பட்டுள்ளன. தெருவில் மட்டுமே அதிக அளவில் கொட்டி இப்பழம் விற்கப்படும். கிர்ணி பழத்தை 7 ஏக்கரில் பயிரிட்ட பி.எஸ்.பாளையத்தைச் சேர்ந்த ரவி கூறுகையில், "கிர்ணி பழத்தில் அதிக வைட்டமின்கள், சத்துகள் நிறைந்துள்ளன. இதை கோடையில் ஜூஸ் செய்து சாப்பிடும் போது உடல் வெப்பத்தைத் தாங்கும். அத்துடன் நிக்கோட்டின் பாதிப்பிலிருந்து நுரையீரலைக் காக்கும். இதில் கொலஸ்ட்ரால் துளியும் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி தரும். அல்சர் நோய்க்கு மருந்து. இதை அறிந்து கடந்த 6 ஆண்டுகளாக கிர்ணி பழம் பயிரிட்டு வந்தேன். இம்முறையும் நன்றாக கிர்ணி விளைச்சல் இருந்தது. அறுவடை செய்யும் நேரத்தில் கரோனா அச்சுறுத்தல் எழுந்தது. ஊரடங்கும் அமலானதால், வெளியூரிலிருந்து யாரும் வாங்க வர முடியாத சூழல் ஏற்பட்டது. தோட்டத்திலேயே அழுகி வீணாவதைப் பார்க்க முடியவில்லை. நான் ரூ.4 லட்சம் செலவிட்டேன். அத்தனையும் கடன்தான். ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் மொத்தமாக வீணாகிவட்டது" என்று கூறுகிறார். தோட்டத்தில் பணியாற்றும் பெண்கள் கூறுகையில், "நாங்கள் கஷ்டப்பட்டு விளைவித்த பழங்களை நாங்களே தூக்கி எறிந்து அப்புறப்படுத்துகிறோம். எப்படியும் ரூ.25-க்கு விற்கும் இப்பழம் தற்போது ரூ.5-க்கு தான் விற்பனையாகிறது. தோட்டத்தை தற்போது சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டோம். மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. அடுத்த முறை எப்படி விவசாயம் நடக்கும் எனத் தெரியவில்லை. தோட்டத்தில் பார்த்து பார்த்து வளர்த்த பழங்கள் தற்போது வீணாகி நிற்பதைக் காண்பதே கஷ்டம்தான்" என்றனர். விவசாயிகள் தரப்பில் கூறுகையில், "கடன் வாங்கி பல லட்சம் செலவு செய்தோம். மொத்தமும் நஷ்டம்தான். அரசு எங்களுக்கு உதவுமா" என்று கேள்வி எழுப்புகின்றனர். https://www.hindutamil.in/news/tamilnadu/548154-farmers-worst-affected-in-puduchery-2.html

30 நிமிடங்களில் பரிசோதிக்கும் ஒரு லட்சம் கருவிகள் விரைவில் வாங்கப்படுகிறது: முதல்வர்

11 hours 27 minutes ago
30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் கரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் 2,10,538 பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. 3,371 வென்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன. 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளன. இக்கருவிகள் வந்தவுடன் கரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் மொத்தம் 38 மையங்கள் மூலம் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் நடமாடும் காய்கறிக் கடைகள் திட்டத்தை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்படும். அத்தியாவசியப் பொருட்களை முடிந்த அளவு வீடுகளுக்கே சென்று வழங்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கும். காவல்துறையினரின் கஷ்டத்தை மக்கள் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும். மக்களை துன்புறுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தை அரசு பிறப்பித்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவது மக்களின் கையில்தான் உள்ளது. வெளிநாடு சென்றிருந்தாலும், மாநாடு சென்றிருந்தாலும் தாங்களகவே தகவல் தெரிவிப்பது நல்லது. பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 10ஆயிரம் பேரின் கண்காணிப்பு காலம் முடிவடைந்துள்ளது. சென்னையில் 37 பகுதிகள் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகின்றன. 10 வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி பின்ன அறிவிக்கப்படும் என்றார். https://www.dinamani.com/tamilnadu/2020/apr/06/one-million-kits-soon-to-be-tested-in-30-minutes-tm-cm-3395508.html

ஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்?

11 hours 28 minutes ago
எல்லாம் கொஞ்சநாள் போக தெரியும் இங்கு உள்ள உணவு பழக்க வழக்கம் இங்கு இறைச்சி வகைகள் பாதி வெந்ததுக்கு க்குத்தான் மரியாதை விரும்பி சாப்பிடுவார்கள் கார்வெஸ்ட்டர் போன்ற பப்புகள் பிரேக் பாஸ்ட்டே அப்படித்தான் ரெத்தம் தெரியணும் இறைச்சியில் எங்களுக்கோ அருவருக்கும் .எதையெண்டாலும் போட்டு அரைமணிநேரம் அடுப்பில் விடுவது போதாக்குறைக்கு மிளகாய்த்தூள் அப்படி இப்படி உள்ளே போன வைரஸ் எல்லாமே மார்கயா பண்ணித்தான் உணவே ரெடியாகும் . பார்க்கலாம் முழு உலகும் தராவியை பார்த்துக்கொண்டு இருக்கு சில நாளில் தெரிந்துவிடும் .

காதல் என்பது காட்டாறு

11 hours 31 minutes ago
கடந்த இரண்டு வாரங்களாக யேர்மனி Konstanz நகரத்தில், தற்காலிகமாகப் போடப்பட்ட ஒரு வேலி யேர்மனியையும் சுவிற்சலாந்தையும் பிரித்து வைத்திருக்கிறது. வேலி போட்டதற்கான காரணம் கொரோனா. மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து யேர்மனி, சுவிற்சலாந்து நாடுகளுக்கான எல்லைச் சோதனைகளும் மீண்டும் முன்னர் போல் ஆரம்பித்திருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்துக்கள் அல்லது வேலை சம்பந்தமான பயணிகளுக்கு மட்டுமே சோதனைச்சாவடியில் அனுமதி கிடைக்கிறது. அதிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள். Konstanzநகரத்தின் ஏரியின் அருகே இருக்கும் புல்வெளியூடாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து அல்லது சைக்கிளில் செல்வதற்கான பாதை ஒன்று இருக்கிறது. அந்தப் பாதையையும் இடைமறித்து தற்காலிகமாக மார்பளவு உயரத்திலான வேலி எழுப்பப்பட்டிருப்பதால் இரண்டு நாடுகளுக்குமான மக்களின் நடமாட்டம் முற்றாகத் தடைப்பட்டிருக்கிறது. எல்லையில் போடப்பட்ட வேலியால் இரு நாட்டு மக்களுக்கும் பலவித அசௌகரியங்கள் இருந்தாலும், நாடுவிட்டு நாடு போய்க் காதலிப்பவர்கள் பாடு பற்றித்தான் இப்பொழுது அதிகமாகப் பேசப்படுகிறது. காதலனோ காதலியோ ஒருவர் ஜெர்மனியிலும் மற்றவர் சுவிற்சலாந்திலும் என்று ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் போனதுதான் பிரச்சினையாக உருவாகி இருக்கிறது. ஆரம்பத்தில் அவரவர் வீடுகளில் முடங்கியிருந்தவர்கள் பிறகு வேலியினூடாக ஆளை ஆள் பார்த்தாவது கொஞ்ச நேரம் மகிழலாம் என்று தீர்மானித்து தினமும் மாலையில் அந்த எல்லை வேலியில் கூட ஆரம்பித்தார்கள். பார்த்தாவது திருப்தியடையலாம் என்று போனவர்கள், ஆவல்மீறி மார்பளவு வேலியூடாக ஒருவரையொருவர் இறுக்கமாக அணைத்துக் கொண்டு, எதற்காகத் தங்களை வேலி பிரித்திருக்கிறது என்று மட்டுமல்லாமல் சுற்றியுள்ள எல்லாவற்றையும் மறந்து நின்றார்கள். இது தொடுவதும் நெருங்கி நிற்பதுவும், தவிர்க்கப்படல் வேண்டும் என்று கொரோனா கட்டுப்பாட்டுக்காகப் போடப் பட்டிருந்த விதியை மீறுவதாகும். காதலர்களுடன் எதற்குப் பிரச்சினை என்று இரண்டு நாடுகளும் கூடிக் கதைத்து சத்தமில்லமால் எல்லை வேலியின் உயரத்தைக் கூட்டிவிட்டார்கள். அதுவும் பலனளிக்கவில்லை. வேலிகளின் கம்பிகளினூடாக தொடுதல்களும், முத்தங்களும் தொடரத்தான் செய்தன. இப்பொழுது முன்னர் இருந்த வேலிக்கு இரண்டு மீற்றர் இடைவெளி விட்டு இன்னுமொரு வேலியைப் போட்டிருக்கிறர்கள். காதலர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த செய்தியைக் கேட்கும் போது, “காதல் என்பது காட்டாறு - அது கண்தெரியாத மோட்டாரு” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றது.

"கொரோனா" சிரிப்புகள்.

11 hours 40 minutes ago
😁😁😁😁😁😁😁😁😁😁 மோடியாவ‌து ம‌யிர் ஆவ‌து , அவ‌ன் லூச‌ன் கிட‌ந்தான் , வாடி செல்ல‌ம் நாங்க‌ குழ‌ந்தைக‌ளோடு ஒரு பிடி பிடிப்போம் / த‌மிழீழ‌ தேசி த‌லைவ‌ரின் ப‌ட‌ம் வீட்டில் வைத்து 9ம‌ணிக்கு பிள்ளைக‌ளுட‌ன் சாப்பிட்டு ப‌ட‌ம் பிடிச்சு போட்டார் பாருங்கோ / நீ துணிஞ்ச‌வ‌ன் தாண்டா மாப்பிளை 😁

பகுத்தறிவு உள்ளவர்கள் பெரும்பான்மை உள்ள சமூகம் ஆவது எப்படி?

11 hours 49 minutes ago
கிறிஸ்தவ தேசம் அவசரப்படுவது ஏன் ?.எமது நாட்டில் ஜனநாயக அரசு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், சிவஞான அறிவு கொண்ட தமிழ் மக்கள் ,சைவநெறி அமைப்புகள், பெளத்த பீடங்கள் என்பன சுயமாக இயங்கி கொண்டிருக்கின்றன. இவைகள் இவ்வாறு இருக்கும் போது, ஏன் கிறிஸ்தவ மத போதகர்கள் அந்தரப்படுகிறார்கள் என்ற கேள்வி அனைத்து மக்கள் மத்தியில் எழுவது இயல்பானது.இவர்கள் அன்னிய ஆக்கிரமிப்பாளர்களால் இறக்கி விடப்பட்டுள்ள ஒரு வகை மென்வலு படையினர் என்பதை சாதாரண மக்கள் அறிய வாய்ப்பே இல்லை. இலங்கைக்குள் படையெடுத்து வந்த கிறிஸ்தவ நாடுகளில் கிறிஸ்தவம் அழிந்து வருவதால் மத போதகர்களும் அருகி வருகிறார்கள். ஆனால் இலங்கையில் இவர்கள் பெருகி வருவது தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு வகை அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.கிறிஸ்தவ மத போதகர்களும் பாதிரிமார்களும் இலங்கையின் வரலாற்றைப் புரட்டி போட்டு பெரும் அவல நிலையை ஏற்படுத்துவதில் பெரும் பங்கை வகித்தார்கள். இவர்களால் இயக்கப்பட்ட கல்லூரிகளில் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களே இலங்கை வரலாற்றில் என்றும் இருந்திராத இன முரண்பாட்டைத் தோற்றுவித்தவர்கள். இலங்கையில் அனைத்துத் தரப்பினரும் அனுபவிக்கும் அச்ச உணர்வின் பிரதான சூத்திரதாரிகள் இவர்களே.எந்த சக்திகள் அதிகாரத்தில் வந்தாலும், இலங்கை வரலாற்றில் முற்றிலும் அன்னியமான கிறிஸ்தவ போதகர்கள் அவர்களுடன் ஒட்டிக் கொள்வாரகள். உதாரணமாக அரசியல், தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவைகளாகும். இதன் நோக்கம் சிக்கலான முரண்பாடுகளை பல கோணங்களில் ஏற்படுத்துவதாகும்.வெளிநாடுகளில் இருந்து இயக்கும் வற்றிக்கான் சேர்ச்சுகள் போன்ற நிறுவனங்களின் கிளை அமைப்புகளே மன்னார் விசப் கவுஸ் உட்பட அனைத்து கிறிஸ்தவ மன்றங்களும் ஆகும். உலகையே ஆட்டுவிக்கும் வர்த்தக நிறுவனங்கள், சர்வதேச உளவு அமைப்புக்கள், அறாவட்டிக்கு கடன் வழங்கும் வங்கிகள், உலக யுத்தங்களை தலைமை தாங்கும் நிறுவனங்கள் அனைத்தும் இவர்களுடன் தொடர்புடையவைகளாகும். இதன் ஒரு அங்கமே வெளி நாடுகளிலிருந்து பல அன்னிய பிரதிநிதிகள் இவர்களை சந்தித்து செல்வதாகும்.மன்னார் பகுதியில் வதியும் கிறிஸ்தவர்கள் வாள் முனையில் கட்டாய மத மாற்றத்திற்கு உள்ளானவர்கள். இவர்களை வைத்தே உலகின் அச்சானியான திருக்கேதீச்சர வளைவை மூசி மூசி உடைத்தெறிந்தார்கள் மன்னார் மாவட்ட பாதிரிகள். இதற்கு நாம் முதலில் முடிவு கட்டாவிட்டால் பாதிக்கப்படுவோர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய சந்ததியினரும் இலங்கையின் பூர்வீக மதத்தவர்களான இந்துக்களுமே.தமிழர்கள் மேல் பிடித்துள்ள அன்னிய மத தொற்று வியாதியான கிறிஸ்தவத்தை முதலில் ஒதுக்கி அழிக்க வேண்டும். இதன் மூலமே பஞ்சம், பசி, பட்டிணி, நோய், பயங்கரவாதம் போன்றன விலகி அமைதியும் சாந்தமும் கொண்ட நிறைவான வாழ்வு கிடைக்கப்பெறும்.“வான்முகில் வழாது பெய்க, மலிவளம் சுரக்க மன்னன், கோன்முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க, மேன்மைகொள் சைவ நீதி, விளங்குக உலக மெல்லாம். “ என்ற முருகப் பெருமானின் புராணத்தை தாங்கி அரசாளப் போகும் இந்துக் கட்சி வேட்பாளர்களுக்கு அன்னிய மதப் பிடியிலிருந்து விடுபட்டு இலங்கை முழுவதும் வாழும் அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பையும் சுபீட்சமான எதிர்காலத்தையும் கட்டி அமைத்துக் கொள்ள முடியும். பல படங்கள் இனைப்பு---https://jaffnaviews.blogspot.com/2020/03/blog-post_30.html

கொரோனா வைரஸ்: எதிர்காலம் எப்படி இருக்கும்? வீழும் பொருளாதாரத்தை மீட்க என்ன செய்ய வேண்டும்?

11 hours 55 minutes ago
கொரோனா வைரஸ்: எதிர்காலம் எப்படி இருக்கும்? வீழும் பொருளாதாரத்தை மீட்க என்ன செய்ய வேண்டும்? சைமன் மெயர் பிபிசிக்காக Getty Images (கொரோனா வைரஸ் உலகை எவ்வாறு மாற்றும் என்பது குறித்து பிபிசி தமிழில் வெளியிடப்பட்டு வரும் இரண்டு பகுதிகள் கொண்ட கட்டுரை தொகுப்பின் இரண்டாவது மற்றும் கடைசிபகுதி இது.) நாம் எதிர்காலத்துக்குச் சென்று பார்ப்பதற்கு உதவும் வகையில் எதிர்காலவியல் ஆய்வுத் துறையில் உள்ள ஒரு பழைய உத்தியை நான் இங்குப் பயன்படுத்தப் போகிறேன். எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று நீங்கள் நினைக்கிற இரண்டு காரணிகளை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அந்தக் காரணிகள் வெவ்வேறு விதமாகக் கூட்டுச் சேர்ந்து ஊடாடினால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நான் எடுத்துக்கொள்ள விரும்பும் இரண்டு காரணிகள் விழுமியங்கள் மற்றும் மையப்படுத்தல். விழுமியம் என்பது நம் பொருளாதாரத்தின் வழிகாட்டும் கொள்கைகளாக எவை இருந்தாலும் அவற்றைக் குறிப்பதாகும். பரிமாற்றத்தையும், பணத்தையும் மேம்படுத்திக்கொள்ள நமது வளங்களைப் பயன்படுத்துகிறோமா? அல்லது வாழ்வை மேம்படுத்திக்கொள்ளப் பயன்படுத்துகிறோமா? மையப்படுத்தல் என்பது, விஷயங்கள் எப்படி ஒழுங்கமைக்கப்படுகின்றன என்பதைக் குறிப்பது. ஏராளமான சிறு அலகுகளாக அவை ஒழுங்கமைக்கப்படுகின்றனவா? அல்லது அதிகாரம் செலுத்தும் ஒரே பெரிய ஆற்றலால் அவை ஒழுங்கமைக்கப்படுகின்றனவா என்பது தொடர்பானது அது. Getty Images இந்தக் காரணிகளை நாம் ஒரு தொகுப்பாக்கிக்கொள்வோம். பிறகு கற்பனையான சூழ்நிலைகளில் அவற்றைப் பொருத்திப் பார்ப்போம். கொரோனா வைரஸ் சிக்கலுக்கு, கீழ்க்கண்ட நான்கு தீவிர பாணிகளில் காரணிகளை ஒன்று சேர்த்து எதிர்வினையாற்றிப் பார்ப்போம். அரசு முதலாளித்துவம்: பரிமாற்ற மதிப்புக்கு முக்கியத்துவம் தரும், மையப்படுத்தப்பட்ட எதிர்வினை. காட்டுமிராண்டி நிலை : பரிமாற்ற மதிப்புக்கு முக்கியத்துவம் தரும், பரவலாக்கப்பட்ட எதிர்வினை. அரசு சோஷியலிசம்: உயிரை, வாழ்வைப் பாதுகாக்க முக்கியத்துவம் தரும், மையப்படுத்தப்பட்ட எதிர்வினை. பரஸ்பர உதவி: உயிரை வாழ்வைப் பாதுகாக்கும் பரவலாக்கப்பட்ட எதிர்வினை. அரசு முதலாளித்துவம் கோவிட்-19 நோய்த்தொற்று பிரச்சனைக்கு அரசு முதலாளித்துவம் என்று மேலே கூறியிருக்கும் முறையில்தான் பெரும்பாலும், உலகம் முழுவதும் எதிர்வினையாற்றுகிறார்கள். வகைமாதிரியான எடுத்துக்காட்டுகள்: பிரிட்டன், ஸ்பெயின், டென்மார்க். அரசு முதலாளித்துவ சமூகங்கள், பொருளாதாரத்தின் வழிகாட்டும் ஒளியாக பரிமாற்ற மதிப்பு என்பதையே கொண்டிருக்கின்றன. ஆனால் சிக்கல் ஏற்படும்போது சந்தைக்கு அரசு உதவி தேவைப்படும் என்பதை இவை ஏற்றுக்கொள்கின்றன. உடல் நலமின்றியோ, உயிர் பயத்திலோ இருப்பதால் தொழிலாளர்கள் பலரும் வேலை செய்ய முடியாத நிலையில் இருப்பதால், அரசு தலையிட்டு விரிவான நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. வணிக நிறுவனங்களுக்கு நேரடியாக நிதி தருவதன் மூலமாகவோ, கடன் தருவதன் மூலமாகவோ கீன்சிய கருத்தியல் வழியிலான ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் இவை செயல்படுத்துகின்றன. இத்தகைய உதவிகளைக் குறுகிய காலத்துக்கே செய்யவேண்டியிருக்கும் என்பது இங்குள்ள எதிர்பார்ப்பு. வணிகம் தொடர்ந்து நடப்பதை உறுதி செய்யும் வகையில், எத்தனை நிறுவனங்களைச் செயல்பட அனுமதிக்க முடியுமோ அத்தனை நிறுவனங்களை செயல்பட அனுமதிப்பது இந்த நடவடிக்கைகளின் முக்கிய அம்சம். எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் இன்னமும் உணவு வகைகளை இன்னமும் சந்தையே விநியோகம் செய்கிறது. இதற்காக போட்டி ஒழுங்குமுறை சட்டங்களை அரசு தளர்த்தியுள்ளது. தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவிகள் வழங்கப்படுகின்றன. வழக்கமான தொழிலாளர் சந்தை செயல்பாட்டை சீர்குலைக்காத வகையில் இது செயல்படுத்தப்படுகிறது. பிரிட்டனில் உள்ள எடுத்துக்காட்டைக் கொண்டுபார்த்தால் தொழிலாளர்களுக்கான உதவித் தொகை முதலாளிகள் மூலமாக விநியோகிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட தொழிலாளி சமூகத்துக்கு எவ்வளவு பயனுள்ள பொருள்களை உற்பத்தி செய்கிறார் என்பதன் அடிப்படையில் பார்க்காமல், அவர் உற்பத்தி செய்கிறவற்றின் பரிமாற்று மதிப்பின் அடிப்படையிலேயே இந்த உதவித்தொகையின் அளவு தீர்மானிக்கப்படுகிறது. Getty Images இது ஒரு வெற்றிகரமான வழிமுறையாக இருக்குமா? கோவிட்-19 நோய் குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்குமானால், இது வெற்றிகரமான வழிமுறையாக இருக்கக்கூடும். சந்தை தொடர்ந்து செயல்படுவதைப் பராமரிக்கும் வகையில் முழு முடக்க நிலை தவிர்க்கப்பட்டுள்ளதால் தொற்று பரவுவது தொடரும் என்றே தெரிகிறது. எடுத்துக்காட்டாக, பிரிட்டனில், அவசியமில்லாத கட்டுமானப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இதன் மூலம் கட்டுமானத் தலங்களில் மக்கள் ஒன்று கலப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. சாவு எண்ணிக்கை உயருமானால், அரசுத் தலையீட்டை குறைந்தபட்சமாக வைத்திருப்பது கடினமாக இருக்கும். நோய்த் தொற்று எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தால் மக்களிடம் ஆவேசம் அதிகரிக்கும். இதனால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் ஆழமடையும். இதனால் சந்தை தொடர்ந்து செயல்படுவதைப் பராமரிக்கும் வகையில் மேலும் தீவிர நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிர்பந்தம் அரசுக்கு உருவாகும். காட்டுமிராண்டி நிலை Getty Images இந்தப் பிரச்சனை தொடருமானால், எப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்குக் கொண்டு செல்லும் என்று ஆராய்வதற்காக நாம் கற்பனை செய்த நான்கு நிலைகளிலேயே இதுதான் மோசமான நிலையாக இருக்கும். பரிமாற்ற மதிப்பையே வழிகாட்டும் கொள்கையாக நாம் தொடர்ந்து வைத்திருந்தால், அதேநேரம் நோயாலும், வேலையின்மையாலும், சந்தைக்கு வெளியே விரட்டப்பட்டவர்களுக்கும் ஆதரவு காட்ட மறுத்தால் காட்டுமிராண்டி நிலை என்று நாம் குறிப்பிடும் நிலையே எதிர்காலம். நாம் இதுவரை பார்த்திராத ஒரு கற்பனையான நிலையை இது விவரிக்கிறது. இந்த சூழ்நிலை வந்தால், அப்போது வணிக நிறுவனங்கள் தோல்வி அடையும். தொழிலாளர்கள் பட்டினி கிடப்பார்கள். ஏனெனில் அப்போது சந்தையின் கடும் எதார்த்த நிலையிலிருந்து அவர்களைப் பாதுகாக்க எந்தப் பொறியமைவும் அப்போது இருக்காது. மருத்துவமனைகளுக்கு அசாதாரண நடவடிக்கைகள் மூலம் ஆதரவு கிடைத்திருக்காது. அதனால் அங்கெல்லாம் பெரும் கூட்டம் இருக்கும். மக்கள் இறப்பார்கள். இந்தக் காட்டுமிராண்டி நிலை என்பது ஒரு ஸ்திரமற்ற நிலை. இந்த நிலை ஒரு முழுமையான பேரழிவிலோ அல்லது அரசியல், சமூக சேதங்களுக்குப் பிறகு இங்கு குறிப்பிட்டிருக்கிற பிற நிலைகளுக்கு மாறிச் சென்றோ முடிவடையும். இந்த நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறதா? உலகளாவிய தொற்றின் ஒரு நிலையில் தவறுதலாக ஏற்படலாம், அல்லது தொற்று உச்சநிலைக்குச் சென்ற பிறகு வேண்டுமென்றே உருவாக்கப்படலாம் என்ற கவலை இருக்கிறது. தவறுதலாக என்பது, தொற்று மிக மோசமாக வளரும் சூழ்நிலையில் அரசாங்கம் போதிய அளவு தலையிடாவிட்டால் ஏற்படும். Getty Images இந்த நிலையில் வணிக நிறுவனங்களுக்கும், வீடுகளுக்கும் உதவிகள் வழங்கப்படலாம். ஆனால் மிகப் பரவலாக ஆகிவிட்ட தொற்று நோயின் காரணமாக ஏற்படும் சந்தை சரிவைத் தடுக்கும் அளவுக்கு இது போதுமானதாக இல்லாவிட்டால் பெரும் குழப்பம் சூழும். இந்நிலையில் மருத்துவமனைகளுக்குக் கூடுதல் நிதியும், ஆட்களும் அனுப்பப்படலாம். ஆனால் அவை போதுமானதாக இல்லாவிட்டால் சிகிச்சை தேவைப்படும் மக்கள் பெருமளவில் திருப்பி அனுப்பப்படலாம். அதைப் போலவே ஏற்பட வாய்ப்புள்ள மற்றொரு விளைவு என்னவென்றால், இந்த உலகளாவிய தொற்று நோய் அதன் உச்ச நிலையை அடைந்த பிறகு சகஜ நிலைக்குத் திரும்ப விரும்பும் அரசுகள் ஏராளமான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஜெர்மனியில் இந்த நிலை ஏற்படும் என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது. இந்த நிலை ஒரு பேரழிவாக இருக்கும். இந்த சிக்கன நடவடிக்கைக் காலத்தில் இன்றியமையாத சேவைகளுக்கான நிதி குறைக்கப்படும், அல்லது ரத்து செய்யப்படும் என்பதால் இந்த உலகளாவியத் தொற்றுக்கு எதிர்வினையாற்றுவதற்கான நாடுகளின் வலிமையை இது பாதிக்கும் என்பது மட்டுமே காரணமல்ல. பொருளாதார சமூகத் தோல்விகள் ஏற்பட்டு அதனால் சமூக, அரசியல் ஆவேசமும், பதற்றமும் ஏற்படும் என்பதாலும், இதன் விளைவாக, அரசு தோல்வியடைந்து, அரசும், சமூக நலத்திட்டங்களும் சிதைந்துபோகும். அரசு சோஷியலிசம் பொருளாதாரத்தின் இதயத்தில் வேறு விதமான விழுமியங்களை நிறுவுகிற பண்பாட்டுப் பெயர்ச்சி ஏற்படுவதன் மூலம் ஏற்பட சாத்தியமுள்ள நிலையே அரசு சோஷியலிசம். பிரிட்டன், ஸ்பெயின், டென்மார்க் ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன் மூலம் இந்த நிலையை எதிர்காலத்தில் வந்து அடைவது நாம் ஊகித்த நான்கு சாத்தியங்களில் ஒன்று. மருத்துவமனைகளைத் தேசிய மயமாக்குதல், தொழிலாளிகளுக்கு நிதியுதவி வழங்குதல் போன்றவை இந்த அமைப்பில் சந்தையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளாக அல்லாமல் உயிர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளாகப் பார்க்கப்படுவதுதான் முக்கிய வேறுபாடாக இருக்கும். இது போன்ற ஒரு நிலைமையில் பொருளாதாரத்தில் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமாக இருக்கும் பகுதிகளைப் பாதுகாப்பதற்காகத் தலையிடும். எடுத்துக்காட்டாக, உணவு, ஆற்றல், குடியிருப்பு போன்ற துறைகளை அரசு பாதுகாக்கும். இதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் சந்தையின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப பாதிக்கப்படாது. அரசு மருத்துவமனைகளைத் தேசிய மயமாக்கும், வீடுகள் குடியிருப்பதற்கு இலவசமாக கிடைக்கும். இறுதியாக அரசே எல்லாவற்றையும் வழங்கும். அடிப்படைப் பொருள்கள், குறைக்கப்பட்ட மனித வளத்தைக் கொண்டு உற்பத்தி செய்ய சாத்தியமாக இருக்கும் நுகர்வுப் பண்டங்கள் உள்ளிட்ட பண்டங்களை அணுகுவதற்கு எல்லா மக்களுக்கும் வழிவாய்ப்புகள் இருக்கும். குடிமக்களுக்கும், அவர்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைப் பெறுவதற்கும் நடுவே, இடைத்தரகர்களாக வேலைதரும் முதலாளிகள் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் ஊதியம் நேரடியாக செலுத்தப்படும். அந்த ஊதியம் அவர்கள் உற்பத்தி செய்த பண்டங்களின் பரிமாற்று மதிப்பைக் கொண்டு கணக்கிடப்பட்டதாக இருக்காது. Getty Images ஊதியம் என்பது அனைவருக்கும் சமமாக இருக்கும். நாம் உயிரோடு இருப்பதால் வாழ்வதற்குத் தேவையானதைப் பெறுவதற்கு நாம் தகுதியுடையவர்கள் என்ற அடிப்படையில் அது இருக்கும். அல்லது செலுத்துகிற உழைப்பின் பயன் அடிப்படையில் இருக்கும். சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள், டெலிவரி வாகனங்களின் டிரைவர்கள், கிடங்குப் பணியாளர்கள், செவிலியர்கள், டாக்டர்கள், ஆசிரியர்கள் ஆகியோரே அந்தப் புதிய உலகின் முதன்மை செயல் அதிகாரிகளாக, அதாவது சிஇஓ-க்களாக, இருப்பார்கள். உலகளாவிய தொற்று நீடிப்பதால் ஏற்படும் தாக்கத்தின் காரணமாகவும், அரசு முதலாளித்துவத்தை உருவாக்கும் முயற்சியின் பின் விளைவாகவும் அரசு சோஷியலிசம் உருவாக வாய்ப்பிருக்கிறது. ஆழமான பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு, இன்று நாம் பார்க்கிற திட்டமான கீன்சிய பொருளியல் கொள்கைகளால்(பணம் அச்சடிப்பது, எளிதாக கடன் கொடுப்பது போன்றவை ) தேவைகளை மீட்டெடுக்க முடியாத அளவுக்கு அளிப்புச் சங்கிலி சீர்குலைந்து போகும் நிலையில், உற்பத்தியை அரசு கையில் எடுக்கும். இந்த அணுகுமுறையில் ஆபத்துகள் உண்டு. எதேச்சாதிகாரம் தோன்றாமல் நாம் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டியிருக்கும். ஆனால் சிறப்பாக செயல்படுத்தினால், கோவிட்-19 தீவிரமாகப் பரவும் நிலையில் நமது மிகச் சிறந்த நம்பிக்கையாக இந்த அமைப்பு இருக்கலாம். சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தின் மையக் கருவான செயல்பாடுகளைப் பாதுகாப்பதற்காக வளங்களை ஒரு வலிமையான அரசு ஒழுங்கமைத்து ஒன்று திரட்டுவதாக இது அமைந்திருக்கும். பரஸ்பர உதவி கோவிட்-19 சிக்கலின் விளைவாக ஏற்படும் நெருக்கடியால், மாற்றங்களால் உருவாகும் என்று நாம் கணிக்கிற மற்றொரு நிலை- பரஸ்பர உதவி நிலை. இந்த நிலையில், உயிரை, வாழ்வைப் பாதுகாப்பதே பொருளாதாரத்தின் வழிகாட்டும் கொள்கையாக இருக்கும். ஆனால் இந்த நிலையில், தீர்மானகரமான பாத்திரத்தை அரசு ஏற்காது. அதற்குப் பதிலாக, தனி நபர்களும், சிறு குழுக்களும் தங்கள் சமூகங்களுக்கான ஆதரவையும், பராமரிப்பையும் ஒருங்கிணைக்கும். இந்த நிலையில் உள்ள ஓர் இடர்ப்பாடு, சுகாதாரம் போன்ற துறைகளின் திறனை விரிவுபடுத்துவதற்குத் தேவையான வளங்களை வேகமாகவும், வலுவாகவும் திரட்ட முடியாது. ஆனால் சமுதாய ஆதரவு வலைப்பின்னல்களைக் கட்டமைத்து பலவீனமானவர்களைப் பாதுகாக்கவும், காவல்துறை தனிமைப்படுத்தல் விதிகளைப் பின்பற்றுவதன் வாயிலாகவும் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை இந்த முறையில் திறமையாக முன்னெடுக்க முடியும். Getty Images புதிய ஜனநாயக அமைப்புகள் உருவாவது இந்த நிலையின் மிகுந்த லட்சியவாத வடிவமாக இருக்கும். சமுதாய ஒன்றுகூடல் மூலமாக பெரிய அளவிலான வளங்களை ஒப்பீட்டளவில் வேகமாக திரட்ட முடியலாம். நோய்ப் பரவலைத் தடுக்க மக்கள் அந்தந்த சமுதாயங்களில் ஒன்றுகூடி வட்டார அளவிலான உத்திகளை வகுக்கவும், அவர்களுக்கு தேவையான திறமை இருந்தால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த முறையில் முடியும். முன்னர் கூறிய மூன்று முறைகளில் எதிலிருந்து வேண்டுமானாலும் இந்த நிலை உருவாகலாம். காட்டுமிராண்டி நிலை, அல்லது, அரசு முதலாளித்துவத்திலிருந்து வெளியேறுவதற்கு சாத்தியமான வழிகளில் ஒன்றாக இது இருக்கும். அரசு சோஷியலிச நிலைக்கு உதவி செய்யக்கூடியதாகவும் இது இருக்கலாம். மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றிய எபோலா வைரஸ் பெருந்தொற்றினை சமாளிப்பதற்குச் சமுதாய எதிர்வினையே அச்சாணியாக இருந்தது நமக்குத் தெரியும். ஏற்கெனவே நடைபெற்றுவரும், சமுதாய ஆதரவுப் பணிகள், உதவிப் பொருள் தொகுப்புகள் விநியோகம் ஆகியவற்றில் இந்த எதிர்கால நிலைக்கான வேர்கள் இருக்கின்றன. அரசு எதிர்வினைகளின் தோல்வியாகவும் இவற்றை நாம் பார்க்கலாம். அல்லது, புதிதாகக் கிளம்பும் பிரச்சனை ஒன்றை சமாளிப்பதற்கான நடைமுறை சாத்தியமான, கருணை மிகுந்த சமுதாய எதிர்வினையாகவும் இவற்றைப் பார்க்கலாம். நம்பிக்கையும், அச்சமும் இந்த அகக்காட்சிகள் எல்லாம் நிலைமையின் தீவிர வடிவங்கள், அல்லது தீவிர நிலையின் சித்திரங்கள். ஒரு நிலை நழுவி மற்றொன்றாக மாறக்கூடியவை. அரசு முதலாளித்துவம் தோன்றி அது காட்டுமிராண்டி நிலையாக சரியலாம் என்பதே என் அச்சம். அரசு சோஷியலிசமும் பரஸ்பர உதவி நிலையும் ஒன்று கலந்த ஒரு நிலையே எனது நம்பிக்கை. இந்த நிலையில் வலுவான, ஜனநாயகரீதியான அரசு வளங்களைத் திரட்டி, வலுவான சுகாதார அமைப்பைக் கட்டியெழுப்பும்; சந்தையின் விருப்பு வெறுப்புகளில் இருந்து பலவீனமானவர்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும்; பொருளற்ற வேலைகளை உருவாக்குவதற்குப் பதிலாக பரஸ்பர உதவிக் குழுக்களை உருவாக்கிக் கொள்கிற குடிமக்களுக்கு எதிர்வினையாற்றக்கூடியதாக, அவர்களை அதிகாரப்படுத்துவதாக இருக்கும். இந்த அனைத்து நிலைகளிலும் அஞ்சுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன, நம்பிக்கை கொள்வதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன என்பது தெளிவு. நமது தற்போதைய அமைப்பு முறையில் தீவிரமான குறைபாடுகள் இருப்பதை கோவிட்-19 சிக்கல் எடுத்துக்காட்டுகிறது. சிறப்பான முறையில் இதற்கு எதிர்வினையாற்றுவதற்கு தீவிரமான சமூக மாற்றங்கள் தேவைப்படலாம். இதற்கு சந்தையில் இருந்தும், பொருளாதாரத்தை ஒழுங்கமைப்பதற்கான முதன்மை வழிமுறையாக லாபம் என்பதையே கொண்டிருப்பதில் இருந்தும் தீவிரமாக விலகிச் செல்லவேண்டும் என்று வாதிட்டிருக்கிறேன். இந்த சிக்கலின் ஒரு ஆதாயம், எதிர் காலத்தில் தோன்றக்கூடிய உலகளாவிய தொற்றுகள், பருவநிலை மாற்றம் போன்ற நிகழவிருக்கிற அபாயங்களில் தளர்ந்துவிடாமல் காக்கும் அளவுக்கு மனிதாபிமானம் மிக்க அமைப்பை கட்டியெழுப்பும் சாத்தியத்தை உருவாக்கியிருப்பதுதான். சமூக மாற்றம் பல இடங்களில் இருந்து உருவாகி வரலாம்; பலவற்றின் செல்வாக்கினாலும் தோன்றலாம். ஆனால் உருவாகவிருக்கிற சமூக வடிவங்கள் மற்றவர்கள் மீது காட்டுகிற அக்கறை, உயிர் வாழ்க்கை, ஜனநாயகம் ஆகியவற்றை மதிக்கிற அறக் கோட்பாட்டில் இருந்து உருவாகி வரவேண்டும் என்று வலியுறுத்துவதே நம் எல்லோரின் முக்கியக் கடமை. சிக்கல் மிகுந்த இந்த காலத்தின் மையமான அரசியல் கடமை, வாழ்வதும், இந்த விழுமியங்களின் அடிப்படையில் (மனதளவில்) ஒருங்கிணைவதுமே ஆகும். இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் அத்தியாயத்தைப் படிக்க: கொரோனா வைரஸுக்குப் பின் இந்த புவி எப்படி இருக்கும்? நம் எதிர்காலம் என்ன? (சைமன் மெயர், சர்ரே பல்கலைக்கழகத்தின், சூழலியல் பொருளாதார ஆராய்ச்சியாளர். The Conversation தளத்தில் முதல் முதலில் வெளியான கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டு கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் பிபிசி ஃப்யூச்சர் தளத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டது.) https://www.bbc.com/tamil/global-52174523

கொரோனா வைரஸ்: "பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குபவருடன் முடக்கநிலை காலத்தில் நான் சிக்கிக் கொண்டேன்"

11 hours 57 minutes ago
கொரோனா வைரஸ்: "பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குபவருடன் முடக்கநிலை காலத்தில் நான் சிக்கிக் கொண்டேன்" மேகா மோகன் பிபிசி உலகின் பெரும்பாலான பகுதிகள் கொரோனாவால் முடக்கநிலைக்கு வந்துவிட்ட நிலையில், வீடுகளில் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகும் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் துன்பங்கள் இந்த நோய்த் தொற்று காலத்தில் மறைக்கப்படும் விஷயமாகவே இருந்துவிடக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் தேசிய பாலியல் அத்துமீறல் ஹாட்லைன் தொலைபேசிக்கு இந்த வாரம் வந்த அழைப்புகளின் எண்ணிக்கை 65 சதவீதம் அதிகரித்துள்ளது என்று வீடுகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஏழை நாடுகள் மற்றும் சிறிய வீடுகளில் வாழும் மக்கள் இதுபோன்ற அத்துமீறல்களை வெளியில் சொல்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஐ.நா. மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த முடக்கநிலை காலத்தில் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆண்களுடன் தாங்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகக் கூறும் இரண்டு பெண்களுடன் பிபிசி பேட்டி எடுத்தது. கீதா, இந்தியா கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க இந்தியாவில் 21 நாள் முடக்கநிலை அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தப் பேட்டி எடுக்கப்பட்டது. கீதா அதிகாலை 5 மணிக்கு எழுந்து கொள்கிறார். அவருடைய கணவர் தரையில் அவருக்கு அருகில் படுத்திருக்கிறார். சப்தமாக குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறார். முந்தின நாள் இரவு குடித்துவிட்டு, மன அதிர்ச்சியுடன் அவர் வந்திருந்தார். கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்ட பிறகு பொதுப் போக்குவரத்தை சிலர் மட்டுமே பயன்படுத்துகின்றனர். எனவே ஆட்டோ அல்லது ரிக்ஷா ஓட்டுநரான விஜயின் தினசரி வருமானம் ரூ.1,500ல் (£16-க்கும் சற்று அதிகம் ) இருந்து ரூ.700 ஆகக் குறைந்துவிட்டது. கொரோனா தாக்குதலுக்குப் பிறகு கீதாவின் குடும்பத்தின் வருமானம் மூன்றில் ஒரு பகுதியாகக் குறைந்துவிட்டது. ``இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இப்படியே போகுமோ'' என்று அவர் கத்துவார், தான் குடித்துக் கொண்டிருந்த பாட்டிலை சுவரின் மீது வீசி எறிவார். கீதாவின் குழந்தைகள் பயத்தில் அவளுடை தோளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும். சிறிய கட்டிலின் மீது விஜய் படுத்துக் கொண்டதும், குடும்பத்தில் மற்றவர்கள், இந்த கோப நிகழ்ச்சிக்குப் பிறகு தரையைப் பகிர்ந்து கொண்டு ஆழ்ந்து தூங்கிவிடும். ``குழந்தைகளைச் சமாதானப்படுத்துவதற்குச் சற்று அவகாசம் தேவைப்பட்டது'' என்கிறார் கீதா. ``தங்களுடைய தந்தை கோபமாக இருப்பதை அவர்கள் முன்பும் பார்த்திருக்கிறார்கள். ஆனால் கடந்த சில வாரங்களாக மோசமான நிலைக்கு அது போய்விட்டது. கையில் கிடைக்கும் பொருட்களைச் சுவர் மீது வீசி எறிவது, என்னைத் தலைமுடியைப் பிடித்து இழுப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுகிறார்.'' தன்னுடைய கணவர் தன்னை பல முறை அடித்திருப்பது கீதாவுக்கு நினைவிருக்கிறது. திருமணமான நாளன்று இரவில் முதல் முறையாக அவர் அடித்துள்ளார். வீட்டைவிட்டு வெளியேறிட அவர் ஒரு முறை முயற்சி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளை அழைத்துச் செல்ல அவளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. கிராமப்பகுதி ஒன்றில் ஊருக்கு வெளியே குடியிருப்புப் பகுதியில் குறைந்த வருவாயுடன் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். வீட்டுக்கு வேண்டிய தண்ணீரை எடுத்து வருவதற்கு அந்தப் பெண் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். தண்ணீர் எடுத்து வந்ததும், காய்கறி தள்ளுவண்டி வருவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில் பக்கத்தில் வசிப்பவர்களுடன் அவர் பேசிக் கொண்டிருப்பார். அன்றைய தினத்துக்கு வீட்டுக்கு உணவுக்கு வேண்டியவற்றை வாங்கிய பிறகு, காலை உணவைத் தயாரிக்கும் வேலையை கீதா தொடங்குவார். காலை 7 மணிக்கு அவருடைய கணவர் வெளியில் கிளம்புவார். மதியம் வந்து சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் தூங்குவார். பிறகு 2 பெரிய குழந்தைகளும் வீடு திரும்பியதும் அவர் வெளியில் செல்வார். ``ஆனால் 14 ஆம் தேதி பள்ளிக்கூடங்களை மூடிய பிறகு நிலைமைகள் மாறிவிட்டன'' என்று கீதா கூறினார். ``குழந்தைகள் எப்போதும் வீட்டிலேயே இருக்கத் தொடங்கினர். அது என் கணவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.'' ``வழக்கமாக என்மீது காட்டுவதற்காக கோபத்தை அவர் வைத்திருப்பார். இப்போது தரையில் டம்ளரை வைத்துவிடுவது போன்ற சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவர்களைப் பார்த்து கத்துகிறார். பிறகு அவருடைய கோபத்தை என் மீது திருப்பும் வகையில், நான் ஏதாவது சொல்வேன். ஆனால் நாங்கள் அதிக நேரம் ஒன்றாக இருப்பதால், அவருடைய கவனத்தை திசை திருப்ப எனக்கு குறைவான அவகாசமே கிடைக்கிறது.'' கீதாவுக்கு ஒரு திட்டம் இருந்தது. தன் கணவர் வேலைக்குப் போன பிறகு, வீட்டை சுத்தம் செய்துவிட்டு ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு அலுவலகத்துக்கு நடந்து போவார். அங்கே சமுதாய நிர்வாகிகளால் ரகசியமான ஒரு வகுப்பு நடத்தப்படுகிறது. தையல், எழுத மற்றும் படிக்க அங்கு கற்றுத் தரப்படுகிறது. பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இருப்பதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொண்டு, குழந்தைகளுடன் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று கீதா விரும்புகிறார். வகுப்பின்போது, குடும்ப வன்முறைக்கு ஆளானவர்களுக்கு உதவுவதில் பயிற்சி பெற்ற கலந்தாய்வு நிபுணர்களை அவர் சந்தித்தார். ஆனால் மார்ச் 24 ஆம் தேதி தொடங்கிய, இந்தியாவின் 21 நாள் முடக்கநிலை, இவை அனைத்திற்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. வகுப்புகள் நின்று போய்விட்டன. அதனால் பாதிப்புக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆலோசனை கூறும் வாய்ப்பு, நிபுணர்களுக்குக் கிடைப்பதில்லை. ராஜஸ்தானில் இரண்டாவது பெரிய நகரமான, ஜோத்பூர் பகுதியில் பெண்களுக்கு உதவக் கூடிய சம்பாலி டிரஸ்ட்டின் தன்னார்வலர் விமலேஷ் சோலங்கி, கொரோனா வைரஸ் காரணமாக பெண்கள் ஆபத்தில் சிக்கியுள்ளனர் என்கிறார். ``முழுமையான முடக்கநிலை என்பது, தினசரி வாழ்க்கையை முற்றிலுமாக இடையூறுக்கு ஆளாகியுள்ளது. இப்போது தள்ளுவண்டிகளில் உணவுப் பொருட்களைக் கொண்டு வருபவர்கள் இல்லை. எனவே தினசரி உணவுக்காக அவர்கள் தினமும் சூப்பர் மார்க்கெட்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.'' ``இதுபோன்ற மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழ்நிலைகள், ஏற்கெனவே துன்புறுத்தும் துணைவரால் இன்னலுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.'' கய், நியூயார்க், அமெரிக்கா கய் தனது செல்போனை எடுத்து மெல்ல டைப் செய்கிறார். ``நான் உங்களுடன் தங்கிக் கொள்ள வேண்டும் என்று அம்மா விரும்புகிறார்.'' அதை அவர் அனுப்புகிறார். விரைவில் பதில் வருகிறது: ``அது நல்லது.'' இனிமேல் ஒருபோதும் நுழைய மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்ட வீட்டில் கடந்த வாரம் அந்த டீன்ஏஜ் வயதுப் பெண் நுழைந்தார். ``வீட்டுக்குள் நான் காலடி எடுத்து வைத்த மறுநொடி என் மூளை அதிர்ச்சியாகிவிட்டது'' என்று மென்மையாக அவர் கூறுகிறார். ``எல்லாமே மாறிவிட்டன, எல்லா உணர்வுகளும் மாறிவிட்டன.' உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் பல ஆண்டுகளாக தன்னை துன்புறுத்தி வருவதாக அவர் கூறும், தன் தந்தையுடன் அவர் திரும்பிச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் என்பது ஒரு சக்கரத்தைப் போல கடந்து சென்றுவிடக் கூடிய விஷயம் என்று கய் நினைத்திருந்தார். ஆனால் நிலைமைகள் மாறிவிட்டன. அவருடைய தாயார் வேலை பார்க்கும் கடையின் அலுவலர்களின் மன அமைதி குறைந்துவிட்டது. இந்த வைரஸ் எல்லைகளை கடந்துவிட்டது, 170க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிவிட்டது, இப்போது நியூயார்க்கிலும் பரவியுள்ளது என்ற செய்தி அவர்களை பதற்றத்துக்கு உள்ளாக்கிவிட்டது. கடையில் வேலை பார்ப்பது என்பது தினமும் வாடிக்கையாளர்களுடன் கலந்து பழகும் வகையிலான விஷயம். கய்யின் தாயாரும், அவருடன் பணிபுரியும் இரண்டு பேரும், வாடிக்கையாளர்களுடன் ஏற்படும் தொடர்பு பற்றி கவலை அடைந்தனர். ஆனால் அவர்கள் நீண்ட காலம் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. காலவரையின்றி கடை மூடப்பட்டது. அதனால் பணியாளர்கள் தேவையில்லை என்றாகிவிட்டது. கய்யின் தாயாருக்கு அந்த வேலைக்காக ஒரு மணி நேரத்துக்கு 15 டாலர்கள் (£12) கிடைக்கும். அவருடைய சுகாதாரக் காப்பீடு ஐந்து நாட்களுக்கு மட்டும் பயன்தரக் கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கய்யின் வாழ்க்கையில் பெரும்பகுதியில் மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருந்த அவருடைய தாயாருக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ``அவருக்குப் பாதிப்பு இருந்தது. இங்கே எல்லாமே குழப்பமாக உள்ளது. நீ உன் தந்தையின் வீட்டுக்குப் போயாக வேண்டும் என்று அவர் கத்தினார்'' என்று கய் தெரிவித்தார். துயரத்தில் இருந்த கய்யின் நரம்புகளை சில்லிடச் செய்வதாக அந்த வார்த்தைகள் இருந்தன. அம்மாவுக்கு சிறுது அவகாசம் கொடுத்தால் நிலைமை மாறிவிடும் என்று நினைத்து, தன் அறையிலேயே கய் முடங்கிக் கிடந்தார். ஆனால் மாடியில் இருந்து இறங்கிச் சென்றதும், ``நீ ஏன் இன்னும் இங்கே இருக்கிறாய்'' என்று தாயார் கேட்டிருக்கிறார். தன் தந்தையால் ஏற்பட்ட உடல் ரீதியிலான மற்றும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு, சில மாதங்களுக்கு முன்பு தான் கய் சிகிச்சை பெற்றிருந்தார். குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னிடம் தன் தந்தை அத்துமீறலில் ஈடுபட்டு வந்தார் என்று கய் தெரிவித்தார். தனக்கு நடந்த துன்புறுத்தல்கள் பற்றி தாயிடமும், சகோதரியிடமும் முழுமையாக அவள் கூறியது கிடையாது. அது ஆரம்ப காலக்கட்டம். ஆனால் கய்யின் சிகிச்சை அவருக்கு உதவிகரமாக இருந்தது. அதிக கட்டுப்பாட்டில் இருப்பதாக கய் உணர்ந்தார். எதிர்காலம் பற்றி அவருக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்து வந்த இல்லத்தில் கொரோனா வைரஸ் காரணமாக மையத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக சிகிச்சையாளர் தெரிவித்தார். கடந்த வாரம் அவர் தன் தந்தையுடன் தங்குவதற்குச் சென்றுவிட்டார். ``அவர் எல்லா நேரமும் இங்கே தான் இருக்கிறார்'' என்று அவர் முணுமுணுத்தார். ``பகல் நேரத்தில் முன் அறையில் உள்ள கம்ப்யூட்டரில் அவர் டி.வி. பார்க்கிறார். இரவில் அவர் ஆபாசப் படம் பார்க்கும் சப்தம் எனக்கு கேட்கிறது'' என்று கய் தெரிவித்தார். அவர் விழித்திருக்கும்போது பழங்கள், ஐஸ்கிரீம் கலந்த காலை உணவை தயாரிப்பதாக கய் தெரிவித்தார். ``அந்த சப்தம் எனக்கு பிடிக்காது. அவ்வளவு அதிகமான சப்தம் கேட்கும். அது எனக்கு பயத்தைத் தருவதாக இருக்கும். என்னுடைய நாளின் தொடக்கம் அப்படி தான் தொடங்கும். நாள் முழுக்க நான் விழிப்புடன் இருந்தாக வேண்டும்'' என்று கய் கூறினார். இங்கே திரும்பி வந்ததில் இருந்து கய் நன்றாகத் தூங்கவில்லை. அவருடைய அறையின் கதவில் உள்புறம் பூட்டு கிடையாது. உடல் ரீதியாக அடக்குமுறைக்கான வழக்கமாக அது இருக்கும். அவருக்கு கோபம் ஊட்டும் வகையில் கய் ஏதாவது செய்தால் மட்டும் அப்படி நடக்கும். எனவே அவருடைய பதையில் இருந்து விலகி இருக்க கய் திட்டமிட்டுள்ளார். குளியலறைக்கு ஓடிச் செல்வதற்கும், தனது உணவை சமையலறையில் தயாரிப்பதற்கு ஓடிச் செல்வதற்கு மட்டுமே தன் அறையைவிட்டு கய் வெளியே வருகிறார். முன்பு மின்சப்ளை துண்டிக்கப்பட்ட போது இருவரும் மோதிக் கொண்டனர். அப்போது அத்துமீறல் மோசமானதாக இருந்தது. ``வரலாற்றில் விநோதமான காலக்கட்டத்தில் வாழ்வதைப் போல அவர் நடந்து கொள்வார். ஆனால், அத்துமீறல் பற்றி எதுவும் பேசுவதில்லை'' என்று கய் கூறினார். ``நான் கட்டுப்பாட்டை இழப்பது போன்ற உணர்வை அது எனக்குத் தரும். அவர் இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆனால் அப்படி நடந்துவிடுமோ என்ற அச்சம் என்னைக் கொல்கிறது'' என்றார் கய். நாள் முழுக்க ஆன்லைனில் பொழுதைக் கழிக்கிறார் கய். அண்மையில் திரைப்படங்கள் குறித்து யூடியூப் விடியோ கட்டுரைகளை அவர் பார்த்துள்ளார். தான் பார்த்திராத திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களைப் பார்ப்பது அவருக்குப் பிடித்திருக்கிறது. தனது தாய் சீக்கிரம் தன்னை திரும்ப அழைத்துக் கொள்வார் என்றோ அல்லது கொரோனா நோய்த் தொற்று சீக்கிரம் முடிவுக்கு வந்து, தான் வாழ்வதற்கு வேறு ஒரு இடத்தை சீக்கிரம் கண்டறிய முடியும் என்றோ கய் நம்புகிறார். Getty Images குடும்ப வன்முறை குறித்த அழைப்புகள் அதிகரிப்பை சமாளிக்க காவல் துறையினர் தயாராக இருப்பதாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் குடும்ப வன்முறை நிவாரண ஆணையாளர் நிகோலே ஜேக்கப்ஸ் தெரிவித்தார். ``இதுபோன்ற குடும்ப வன்முறைகள் அதிகரிக்கும் என்பதை காவல் துறை எதிர்பார்த்திருந்தது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை புரிய வைக்க நாங்கள் முயற்சிக்கிறோம்'' என்று பிபிசியிடம் அவர் கூறினார். ``அந்த அழைப்புகளுக்கு முன்னுரிமை தருகிறோம் என்பதை அவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே ஒரு நபர் 999 அழைப்புகள் அமைதியாக செய்து, அலுவலர் அந்த அழைப்பை எடுக்கும் வரை காத்திருக்க வேண்டும். அவர் எடுத்தவுடன் இருமியோ அல்லது வேறு ஏதாவது ஒலி எழுப்பிவிட்டோ 5, 5 அழுத்தினால் போதும்.'' உத்தரவாதம் இல்லாத குடியேற்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு ``தடை ஏதும் இருக்கக் கூடாது, இந்த நேரத்தில் அத்துமீறல் குறித்து புகார் செய்தால், வெளியேற்றப்படுவோம் என்ற அச்சம் இல்லாமல் இருக்க வேண்டும்'' என்று அந்தப் பெண் அதிகாரி கூறினார். அகதி நிலையில் இருக்கும் முக்கிய தொழிலாளர்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். சமூக கவனிப்பு மற்றும் சிறப்பு சேவைகளில் உள்ள தொழிலாளர்கள், இந்த வைரஸ் தொற்று காலத்தில் தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார். `கண்கள் மற்றும் காதுகள்' பெண்களுக்கான ஐ.நா. அமைப்பின் செயல் இயக்குநர் பூம்ஜிலே மிலாம்போ-நிக்குக்கா இந்தக் கருத்தை தான் பிபிசியிடம் கூறினார். எளிதில் பாதிக்கும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு, பாதுகாப்பான உடைகள் அளிக்க வேண்டியது அவசர கால தேவையாக உள்ளது என்றார் அவர். ``சமுதாய அளவில் தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள் சென்றடைந்து, ஆபத்து வாய்ப்பில் உள்ளவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க களப் பணியாளர்களுக்கு எங்களுக்கு நிதி தேவைப்படுகிறது. இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உலக அளவில் அரசு நிதி இதற்கு அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது'' என்று அவர் குறிப்பிட்டார். தேசிய அத்துமீறல் ஹாட்லைன்களுக்கான அழைப்புகள் அதிகரித்துள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டனைப் போல அல்லாமல், பல வளரும் நாடுகளில், அதற்கு நேர் எதிரான சூழலுக்கு வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார். ``பல நாடுகளில் உள்ள குறைந்த சமூக பொருளாதார பின்னணி கொண்ட மக்கள், ஒன்று அல்லது இரண்டு அறைகள் கொண்ட வீட்டில், அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுடன் வாழ்ந்து வருவதால், அதுபற்றி வெளியில் தெரிவிப்பது சாத்தியமற்றது'' என்று அவர் தெரிவித்தார். ``மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா நோய்த் தொற்று தாக்குதல் முடிவுக்கு வந்து பல மாதங்கள் கழித்துதான், அங்கு வீடுகளில் பாலினம் சார்ந்த அடக்குமுறை சம்பவங்கள் அதிகரித்திருந்தன என்ற தகவல் எங்களுக்குத் தெரிய வந்தது.'' இதற்கிடையில், பிரிட்டனில் குடும்ப அத்துமீறல்களைக் கையாள்வதற்கு ஆக்கபூர்வமான அணுகுமுறையை மேற்கொள்வதற்கு, இதுதான் சரியான தருணம் என்று ஜேக்கப்ஸ் கூறியுள்ளார். ``தேசிய சுகாதார சேவைத் துறை தன்னார்வலர்களாக நிறைய பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நாங்கள் அறிகிறோம். குடும்ப வன்முறைகளை அடையாளம் காண்பதற்கான வழிமுறைகள் அவர்களுக்குத் தெரிந்திருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் சமூகத்தில் அவர்கள் தான் நம்முடைய கண்கள் மற்றும் காதுகளாக இருக்கிறார்கள்'' என்று அவர் கூறினார். (இரண்டு பெண்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.) https://www.bbc.com/tamil/global-52175185

ஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்?

13 hours 37 minutes ago
குடிநீர், ரசம் குடிச்சால் உடம்புக்கு நல்லதுதான். ஆனால் இது novel Coronavirus! அதாவது மனிதர்கள் இந்த வைரஸை முன்னர் சந்திக்கவில்லை. அதனால் நோய் எதிர்ப்பு சக்தி முன்னரே எவரிடம் இல்லை. கொரோனா வைரஸ் எப்படி நாடுகளிடையே பரவுகின்றது என்பதற்கான விடை மக்கள் எப்படி இடத்துக்கிடம் போகின்றார்கள் என்பதில்தான் உள்ளது. சீனாவில் தொடங்கி இப்போது மேற்குநாடுகளில் மையம்கொண்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் அடுத்ததாக எந்தக் கண்டத்தைத் தாக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால் மருத்துவ வசதிகள் குறைந்த வளர்முக நாடுகளைத் தாக்கினால் விளைவு மோசமாக இருக்கும்.

கொரோனாவை தடுக்க வரும் தடுப்பூசி ‘பிட்கோவேக்’

13 hours 53 minutes ago
செய்தியில் இப்படி இருக்கு. ஆனால் தலைப்பு தடுப்பூசி ஏதோ கெதியாக வந்துவிடும் என்று இருக்கு.🤬 உலகில் முக்கியமான யூனிவேர்சிற்றிகள், மருத்துவ ஆய்வுகூடங்கள் எல்லாம் முழுமூச்சாக தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றன. ஆனால் எதுவும் உடனடியாக வந்துவிடாது. எவர் முந்துகின்றாரோ அவர்களது கொம்பனி கொழுத்த லாபம் சந்திக்கும்.

17 நாட்களுக்குப்பின் பலி எண்ணக்கை குறைந்தது: கரோனா வைரஸ் பிடியிலிருந்து மெல்ல விலகும் இத்தாலி

13 hours 55 minutes ago
இத்தாலியில் கடந்த மார்ச் 19-ம் தேதிக்குப்பின் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை முதல்முறையாகக் குறைந்துள்ளது. அங்கு நேற்று 525 பேர் கரோனா வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர் கடந்த 2 வாரங்களுக்கு முன் மார்ச் 19-ம் தேதி மிகக்குறைவாக 427 பேர் உயிரிழந்திருதார்கள். அதன்பின் நேற்று உயிரிழப்பு குறைந்துள்ளது. கரோனா வைரஸின் இரக்கமற்ற தாக்குதலில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரதானமானது இத்தாலி. இங்கு கரோனா வைரஸ் 15 ஆயிரத்து 887 உயிர்களை காவுவாங்கியுள்ளது. 1.29 லட்சம் மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அங்கு இதுவரை 21 ஆயிரத்து 815 பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனார்கள். கடந்த சில நாட்களாக உயிரிழப்பு குறைவு, பாதிப்பு குறைவு, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை அந்த நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் துளிர்விடச் செய்துள்ளது கடந்த சனிக்கிழமை முதல் உயிரிழப்புகள் வீதம் 23 சதவீதம் இத்தாலியில் குறைந்துள்ளது. இதுகுறித்து இத்தாலியின் தேசிய சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் சில்வியோ புராசாபேரோ நிருபர்களிடம் கூறுகையில், “ இத்தாலியில் கடந்த சில நாட்களா உயிரிழப்புகள் வீதம் குறைந்து வருவது கரோனா வைரஸின் தாக்கத்தை குறிக்கும் வளைவு கோடு சாயத்தொடங்குவதைக் குறிக்கிறது. தொடர்ந்து இதுபோல் இறப்புகள் வரும் நாட்களில் குறைந்து வந்தால், ஊரடங்கை தளர்த்தும் அடுக்கட்ட நடவடிக்கையை பற்றி சிந்திக்கத் தொடங்குவோம்” எனத் தெரிவித்தார் இத்தாலியில் உள்ள 22 மண்டலங்களில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வருவது நேற்று முதல்முறையாக் குறையத்த தொடங்கியது. சனிக்கிழமை 29,010 நோயாளிகள் வந்த நிலையில், நேற்று 28,949 ஆகக் குறைந்தது. மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணி்கையும் 3,994லிருந்து 3,977 பேராகக் குறைந்துள்ளது. ஆனால், கரோனா வைரஸ் இத்தாலியின் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. மிகப்பெரிய நிறுவனமான கான்பின் இன்டஸ்ட்ரியா இந்த ஆண்ட தனது உற்பத்தி 6 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது https://www.hindutamil.in/news/world/548128-italy-s-virus-deaths-plunge-to-lowest-since-march-19-1.html

24 மணி நேரத்தில் 1200 பேர் பலி- அமெரிக்காவை அலற விடும் கொரோனா

13 hours 58 minutes ago
தலைப்பைப் பார்த்து யார் அலறுகின்றார்கள் என்று உள்ளே வந்தால் செய்தி சாதாரண செய்தியாக உள்ளது. வாசிக்கிறவர்களைக் கவரும் cheap ஆன தலைப்புக்களை tabloid ஊடகங்கள்தான் பாவிக்கும். இந்திய இணைய ஊடகங்கள் coverage க்கு இப்படித் தலைப்பைப் போட்டு தரம் தாழ்ந்துபோயிருக்கின்றன😡

அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் - செல்வம்

14 hours 4 minutes ago
அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் - செல்வம் நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் போது 'செல்' துண்டுகளை உடலில் சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் எவ்வித மருத்துவ வசதிகளும் இன்றி சிறைச்சாலைகளில் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏனைய கைதிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது போல் அவர்களையும் விடுதலை செய்ய அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் போது செல் துண்டுகளை உடலில் சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். மேலும் தீர்ப்பு வழங்கப்பட்ட அரசியல் கைதிகளும் உள்ளனர். இவர்கள் தற்போது மருத்துவ வசதிகள் இல்லாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக சிறைச்சாலையில் உள்ள கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் குறித்த அரசியல் கைதிகளையும் முன்னுரிமை அடிப்படையில் அரசு விடுதலை செய்ய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/79372

பட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது : அனந்தி எச்சரிக்கை..!

14 hours 6 minutes ago
பட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது : அனந்தி எச்சரிக்கை..! இலங்கையில் தற்போதைய நிலைமை தொடருமானால் கொரோனா உயிரிழப்பை விட பல மடங்கு பட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகை மிகவும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களை நோயாளர்களாகவும் 60ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களையும் காவு வாங்கியுள்ளது. இலங்கையிலும் கிட்டத்தட்ட 176 ற்கும் மேற்பட்ட மக்கள் இந்நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் அதேவேளை 5 உயிர்களையும் காவுவாங்கியுள்ளது. நோயாளர்கள் நாளுக்குநாள் புதிது புதிதாக இனங்காணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தடுப்புமருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்காத இச்சூழலில் இவ்வதிகரிப்பென்பது மக்களை மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் என்பது இயல்பானதே. மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில் அவர்களின் அன்றாட வாழ்க்கைமிகவும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. தொடர்ச்சியாக நீண்டு செல்லும் ஊரடங்குச் சட்டம் மூலமாக மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அதிகம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடாக இருப்பதும் இந்நோய்த் தாக்கத்திற்கு ஓர் காரணமாக இருக்கலாம். இவ்வாறான நெருக்கடி நிலமைகளில் மக்களின் உணவுத் தேவைகளை அரசின் திட்டமிட்ட பொறிமுறைகள் மூலமாகவே பூர்த்திசெய்ய முடியும். இச்சந்தர்ப்பத்தில் பல தன்னார்வலர்களும், பொதுஅமைப்புகளும், அரசியல் தலைவர்களும் தன்னார்வமாக மக்கள் பணிபுரிவதைக் காணமுடிகிறது. மேலும் பொதுவெளியில் மக்களை சந்தித்து உதவுவது மேலும் நோய் பரவக் காரணமாக அமைந்துவிடும். ஊரடங்கு வேளையில் தன்னார்வலர்களும் உதவுவது சவாலானவிடயமே. பொலிஸ் ஊரடங்கை இராணுவத்தினை வைத்து நடைமுறைப்படுத்தும் அரசும் அதன் திணைக்களங்களும் மாவட்ட உணவு சேமிப்பு தளத்திலிருந்தோ அல்லது வேறெங்கிருந்தோ உணவு முதலான அத்தியாவசியப் பொருட்களை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும். அரசின் பேரிடர் அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, உணவுவழங்கல் அமைச்சு, என்பன துரிதமாக பணியில் இறங்கியிருக்க வேண்டும் ஆனால் இன்று வரை இவர்கள் தமிழர் பிரதேசங்களில் மனித நேயப் பணிகள் எதிலும் ஈடுபடவில்லை. சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட தொகையான ரூபா 10000 கூட சரிவர வழங்கப்படவில்லை. இதில் 5000 ரூபாவிற்கு உணவுப் பொருட்களும் 5000 ரூபா பணமாகவும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தும் சமுர்த்திகடன் ஏற்கனவே பெற்றவர்களுக்கு இந்தகடன் இல்லை ன்பதுடன் ஏற்கனவே ரூபா 10000 சமுர்த்தி சேமிப்பில் இருக்க வேண்டும் என்பதும் நிபந்தனையாக பேசப்படுகிறது. பல சமுர்த்தி அலுவலர்கள் பொறுப்புடன் செயற்படுவதாக தெரியவில்லை. ஒருபிரதேசத்தில் 1500 ரூபா பொருட்கள் வழங்கப்படுகிறது. வேறோர் பிரதேசத்தில் 452 ரூபாபெறுமதியான 2.5கிலோ அரிசி 1.5கிலோ மா, 600 கிராம் சீனி என்பவையே வழங்கப்பட்டுள்ளது. அதுவும் கட்டுப்பாட்டுவிலையை விட அதிகவிலைக்கே பெறுமதியிடப்பட்டுள்ளது. அதுவும் பொது இடங்களில் கூட்டமாக மக்களை வரவைத்தே வழங்கப்படுகிறது. மாவட்டச் செயலகமோ பிரதேச செயலகமோ இதனைக் கண்டுகொள்வதாக தெரியவில்லை. மேற்குநாடுகள் வீட்டிற்கு சென்று உணவுப்பொதிகளை வழங்குகிறது அத்துடன் மாதாந்த வருமானத்தில் குறிப்பிட்ட வீததொகையை வழங்குகிறது. ஆனால் இலங்கையில் இதேநிலைமை தொடருமானால் கொரோனா உயிரிழப்பை விட பல மடங்குபட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம். யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை அரிசி உற்பத்தி கூட போதியளவு இல்லை. வன்னிக்கான பாதைகள் பூட்டப்பட்டு ஊரடங்கு நடைமுறையில் உள்ள இச்சூழலில் உணவுப் பஞ்சத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தீவகப் பிரதேசங்கள் பாரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இப்பிரதேசங்களை விசேட கவனம் செலுத்தி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கொரோனா அச்சுறுத்தல் சீனாவில் ஆரம்பித்தபின் விமல் வீரவன்சவின் மகளை சீனாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வருவதில் முனைப்புக்காட்டிய அரசு சீனர்களை இலங்கைக்கு சுதந்திரமாக வந்து செல்ல அனுமதித்தது. உலகளவில் வேகமாக இந்நோய் பரவியபோதும்கூட விமானப் போக்குவரத்தை உடனடியாக தடை செய்யத் தவறியது. உலக சூழல் இவ்வாறு இருக்கும்போது ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு திகதி குறித்து வேட்புமனுத் தாக்கலும் நடைபெற்றது. அவசர அவசரமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஓர் சிவில் நிர்வாகம் ஊடாக இராணுவ கட்டமைப்பைக் கொண்டு ஆட்சியை நடாத்துகிறது அரசு. அத்துடன் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டபின் வேட்ப்பாளர்கள் மக்களின் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடமுடியாதென இறுக்கமான நடைமுறையைப் பின்பற்றுகிறது. இது யாழ் மாவட்டத்தில் மக்கள் மிகமோசமான பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. அமைச்சரவை இருந்தும் இது வரை கடும் ஊரடங்கில் சிக்குண்டு வீடுகளில் முடக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித அரச உதவிகளும் சரிவர சென்றடையவில்லை. சிங்கள கட்சிவேட்பாளர்கள் தங்கள் கட்சி விளம்பரம் பொறிக்கப்பட்ட வாகனங்கள் பதாகைகளுடன் மக்களின் அத்தியாவசியப் பணி என்ற பெயரில் வாக்குவங்கி அரசியல் என்னும் ஈனச்செயலில் ஈடுபடுகின்றார்கள். தமிழ் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் கூட ஈடுபடமுடியாமல் முடக்கப்படுகிறார்கள். மலையக மக்களைப் பொறுத்தவரை ஊரடங்கு வேளைகளிலும் வேலை செய்யுமாறு தோட்ட முதலாளிகளால் வற்புறுத்தப்படுகின்றார்கள். அரசின் எவ்வித உதவிகளும் அவர்களை சென்றடையவில்லை. முழு நாட்டிற்கும் ஜனாதிபதியாக உள்ளஒருவர் இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி கொலைக் குற்றம் புரிந்து மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தை விடுதலை செய்வதையும் சிங்கள தமிழ் வேறுபாட்டு மனநிலையில் உதவிகள் வழங்குவதையும் நிறுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கொரோனா வைரசிலிருந்தும் பட்டிணிச் சாவிலிருந்தும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களாகிய நாமும் அனாவசியமாக வீட்டைவிட்டு வெளியே செல்வதைத் தவிர்த்து பாதுகாப்புடன் விழிப்போடிருந்து கொரோனாவை விரட்டுவோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/79375
Checked
Mon, 04/06/2020 - 20:35
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr