புதிய பதிவுகள்

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்– இரா.சாணக்கியன்

15 hours 8 minutes ago
அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்– இரா.சாணக்கியன் by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/09/a13-1-720x450.jpg அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் புனர்வாழ்வளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்புமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் என்ற ஒரு தேரரின் அடாவடித்தனத்தினைப்பற்றி இந்த இடத்தில் சில வார்த்தைகளை சொல்லத்தான் வேண்டும். அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய கட்சியினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சபையில் இந்த விகாராதிபதிக்கு எதிராக உங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ள மக்களுக்காக பேசவேண்டும் என்ற ஒரு வினயமான கோரிக்கையினை முன்வைக்க விரும்புகின்றேன். நேற்றைய தினம் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் நடந்து கொண்ட விதம் தொடர்பாக திருப்தியடைய முடியாது. அவர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் நடந்து கொண்டுள்ளார். அவர் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார். பொலிஸாரை, கிராம சேவகரை. தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை வீதிக்கு வருமாறு அச்சுறுதல் விடுத்துள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு எதிராக இதுவரையில் சரியான முறையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து நான் பொலிஸ்மா அதிபர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகின்றேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் கைது செய்யப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் கைது செய்யப்பட்டார். எனினும்,அவர் தொடர்ந்தும் அரச அதிகாரிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார். அவருக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அத்துடன் அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் இணைந்து புனர்வாழ்வளிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன். நாங்கள் மத குருமாரை மதிக்கின்றோம். நாங்கள் அவர்களை மதிக்கும் அளவிற்கு அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/அம்பிட்டிய-சுமனரத்ன-தேரர/

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

15 hours 20 minutes ago
ஊரிலையும் சரி எங்கையும் சரி அவையளோடை பெரிசாய் சேட்டை விடேலாது. என்ரை நண்பன் சொன்னான் யாழ்ப்பாணம் A 9பாதையை இன்னும் கொஞ்சக்காலத்தாலை குத்தகைக்கு எடுத்தாலும் எடுப்பினம் எண்டு...😁

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2

15 hours 28 minutes ago
இந்த தம்பி, மாரி தாவக்கை போல் கத்தாமல் அறிவாந்தமாக கதைக்கின்றார். இவருக்கும் கல்யாணசுந்தரத்தின் நிலை ஏற்படாமல் இருக்க, எல்லாம் வல்ல எமது மூப்பாட்டன் முருக பெருமானை பிராத்திப்போம்.

உன்னால் முடியும் தம்பி நம்பு

15 hours 32 minutes ago
நல்ல ஒரு விறுவிறுப்பாக சொல்லக்கூடிய கதையை, இங்கே சொதப்பி உள்ளார்கள். இந்த கொள்ளை டாக்குமென்டரியை டிவியில் போட்டார்கள். இருந்த இடத்தில இருந்து அசையாமல் இரண்டு மணிநேரம் பார்த்தேன்.

உணவு செய்முறையை ரசிப்போம் !

16 hours 52 minutes ago
மடு டுலு Karen's immature leaves, which we see once a year, are very tasty and nutritious. People in our villages make various recipes from karen leaves. This food is very tasty .People in our village believe that this is a food that can cure diseases .Today I will teach my friends how to make delicious food from karen leaves. வருடத்திற்கு ஒரு முறை நாம் காணும் கரனின் முதிர்ச்சியற்ற இலைகள் மிகவும் சுவையாகவும் சத்தானதாகவும் இருக்கும். எங்கள் கிராமங்களில் உள்ளவர்கள் கரேன் இலைகளிலிருந்து பல்வேறு சமையல் செய்கிறார்கள். இந்த உணவு மிகவும் சுவையாக இருக்கிறது .இது நோய்களைக் குணப்படுத்தும் உணவு என்று எங்கள் கிராம மக்கள் நம்புகிறார்கள்

உன்னால் முடியும் தம்பி நம்பு

17 hours 9 minutes ago
இந்த ஜீனிஸை எத்தனை ஆசிரியர்கள் கையெழுத்து சரியில்லை என்று அடித்திருப்பார்கள்🤔 எங்களுக்கு எல்லாம் 8 செக்கனே தேவையில்லை 1 செக்கன் காணும் அப்படியே love வந்திடும்🤣

இன்றைய மாவீரர் நினைவுகள் ..

17 hours 16 minutes ago
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.

ராசா அண்ணை

17 hours 22 minutes ago
நாங்கள் ETA கட்டிடத்துக்கு முன்னால் வீட்டில் இருந்தோம். அப்பா RMP. விஜயா , ராஜேஸ்வரா , ரீகல் தியேட்டர்களின் படம்பார்த்தது இப்பவும் ஞாபகம் இருக்கு!!

அன்பே எனது மனசிலிருந்து..! (பார்த்திபன் ) 1

17 hours 28 minutes ago
பிறந்தநாள் வாழ்த்துகள் உங்கள் மகனிற்கு. சாதனையாளர்கள் எல்லோரும் பல தடைகளை தாண்டிதான் வெற்றி பெற்றார்கள். உங்கள் மகனும் வெற்றி பெறுவார் வாழ்க்கையில் 🙏

ராசா அண்ணை

18 hours 7 minutes ago
விஸ்ணுவர்த்தன், சக்திவேல், அல்பேட். நீங்க கஜே அடிச்ச அறையிலே 304, கழுதை விளையாடின ஆட்களை எல்லாம் யோசிச்சு பாருங்கள். 🤣🤣🤣
Checked
Wed, 09/23/2020 - 00:17
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr