புதிய பதிவுகள்

அரசுகளும் மது விற்பனையும் தனி மனித வாழ்வும்

3 months 2 weeks ago
நீதிபதி : நீங்கள் மது போதையில் உங்கள் மனைவியை அடித்தது உண்மையா இல்லையா? குடிமகன் : உண்மை தான் ஐயா. ஆனால் அதற்கான விளக்கத்தை கூற அனுமதிக்க வேண்டும். அதாவது மதுவை அரசு விற்பனை செய்கிறது ஆக அது ஒரு அரசுப்பணி, நான் அதை வாங்கி உபயோகிக்கும் பயனாளிகளில் ஒருவன். என் மனைவி மதுவை வாங்கக்கூடாது, மற்றும் அதை உபயோகிக்க கூடாது என்று தடுக்கிறார்... இதில் நான் எப்படி குற்றவாளி ஆகமுடியும்? அரசுப்பணி யை நடக்கவிடாமல் தடுத்தது, மற்றும் அரசு தொழிலை நடக்கவிடாமல் தடுத்து அரசுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணியது போன்ற இரு பிரிவின் கீழ் என் மனைவி மீதுதான் வழக்கு தொடரவேண்டும். நீதிபதி : சரி மனைவியை நீங்கள் அடித்தது குற்றமில்லையா? குடிமகன் : கனம் நீதிபதி அவர்களே அரசுப்பணியை நடக்க விடாமல் தடுத்தால் முதலில் பேச்சு வார்த்தை நடத்தும் அதில் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் காவல்துறை யை வைத்து தடியடி நடத்தி அரசுப்பணியை தொடருவார்கள் அல்லவா அது போலவே நான் அரசுப்பணியை தடுத்த என் மனைவியை தடியடி நடத்தி அரசுக்கும், காவல்துறைக்கும் உதவி புரிந்தேன். அது எப்படி குற்றமாகும் ? நீதிபதி : நான் இன்றோடு என் பதவியை ராஜினாமா செய்கிறேன்....... மூலம் : முக நூல் பக்கத்தில் இருந்து தொடர்பு பட்ட செய்தி தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் ரூ.639 கோடிக்கு மது விற்பனை டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=488719

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன், ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தொடர்பில்லை…

3 months 2 weeks ago
அப்படியே கைது செய்யப்பட்டு எந்த குற்றமும் சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் முஸ்லீம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளையும் விடலாம், ஆனால் விட மாட்டார்கள் 😞 சட்டத்திற்கு முன்னால் எல்லோரும் சமம் இல்லை == இலங்கை !

நெல்லியடியில் 200 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

3 months 2 weeks ago
நேற்றுத்தான் போதைப்பொருள் ஒழிப்பு என்ற திட்டம் பெரும் ஆரவாரத்துடன் நடந்தது. ஒவ்வொரு நாளும் இவ்வாறான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அதுவும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் வலுவடைந்தும் கடலோர பாதுகாப்புக்கள் பலப்படுத்த பட்ட நேரத்திலும் கேரளா கஞ்சாவிற்கு குறைவில்லை. ஆக, இந்த கடத்தல் சந்தைப்படுத்தல் என்பனவற்றிற்கு சிங்கள இராணுவம், கடற்படை மற்றும் அரசியல்வாதிகள் திட்டமிட்டு செயல்படுகின்றனர் என்பது தெளிவாக தெரிகின்றது. அதை மறைக்க இப்படி சில படங்களையும் செய்திகளையும் விடுவது ஒரு ஏமாற்றுத்தனமே !

சிறிலங்கா இராணுவ கட்டமைப்பில் அதிரடி மாற்றங்கள் – யாழ்., வன்னிக்கு புதிய தளபதிகள்

3 months 2 weeks ago
அண்மையில் அரச விசாரணை குழுவின் முன்னால் சாட்சியமளிக்கும் பொழுது சிறிலங்கா இராணுவத்தளபதி இப்பொழுது நாட்டில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதத்தை இராணுவ பலம் கொண்டு வெல்ல முடியாது என கூறி இருந்தார். காரணம் அவர்கள் யாராயும் இருக்கலாம் எதையும் கொண்டு தாக்கலாம் ( விமானம், வசுவண்டி ..). இந்த மாற்றங்கள் ஒரு போலி உத்தரவாதத்தை தருவனவாக மட்டுமே இருக்கும்.

12 ஏக்கர் காட்டை அழித்து, பாண்டியன்குளத்தில் விவசாயம் செய்கிறாரா சாந்தி சிறிஸ்கந்தராசா?

3 months 2 weeks ago
நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம் முன்பு நீங்கள் கூறியதுபோல பாலியாறு நீளத்துக்கும் அருகில் மரங்கள் நிறைந்து இருக்கும் எந்த வெய்யில் காலத்திலும் தண்ணீர் குளிராக இருக்கும் நான் பல நாட்கள் இந்த நீரை குடித்ததுண்டு. பாண்டியன்குளத்தில் பாலியாறு இல்லை நான் பாண்டியன்குளம் குறித்துதான் எழுதினேன்.

சிறிலங்கா இராணுவ கட்டமைப்பில் அதிரடி மாற்றங்கள் – யாழ்., வன்னிக்கு புதிய தளபதிகள்

3 months 2 weeks ago
சிறிலங்கா இராணுவ கட்டமைப்பில் அதிரடி மாற்றங்கள் – யாழ்., வன்னிக்கு புதிய தளபதிகள் கார்வண்ணன்Jun 29, 2019 | 5:09 by in செய்திகள் சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரது பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில், இராணுவ செயலகம், புதிய நியமனங்களை அறிவித்துள்ளது. இதன்படி, மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, இராணுவ தொண்டர் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் வகித்து வந்த, மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைத் தளபதி பதவியிலும் அவர் தொடருவார். எனினும், மேற்கு படைகளின் தலைமையக தளபதி பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ். படைகளின் தலைமையக தளபதியாக இருக்கும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி, அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஜூலை 17ஆம் நாள் தொடக்கம், பாதுகாப்பு அமைச்சில், மத தீவிரவாதம், வன்முறை அடிப்படைவாதம், மற்றும் தீவிரவாதத்தை தடுக்கும் மற்றும் முறியடிக்கும் தேசிய திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய இராணுவ பிரதி தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் குமுது பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வன்னி படைகளின் தலைமையக தளபதி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 59 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, யாழ். படைகளின் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தலைமையகத்தில் ஆயுத தளபாடப் பிரிவின் மாஸ்டர் ஜெனரலாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் குணவர்த்தன அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, வன்னிப் படைகளின் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 24 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருக்கும் மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே, அந்தப் பதவியில் இருந்து, மாற்றப்பட்டு, மேற்கு படைகளின் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். முதன்மை கள பொறியாளராக இருந்த மேஜர் ஜெனரல் ஆர்கேபி பீரிஸ், இராணுவ தலைமையக ஆயுத தளபாடப் பிரிவின் மாஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். 11 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய, மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணயக்கார, இராணுவத் தலைமையகத்தின் முதன்மை கள பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 54 ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சேனாரத் பண்டார, 11 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். அதேவேளை, 14 பிரிகேடியர்களின் பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.net/2019/06/29/news/38779

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஜூலை 5இல் ஆரம்பம்

3 months 2 weeks ago
பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஜூலை 5இல் ஆரம்பம் கார்வண்ணன்Jun 29, 2019 | 5:53 by in செய்திகள் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள், வரும் ஜூலை 5ஆம் நாள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கான பணிகள் ஜூலை 05ஆம் நாள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைக்காக, பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படாது. பலாலி விமான நிலையம் மற்றும் விமானப்படைக்கு சொந்தமான காணிகளைக் கொண்டே, விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த விரிவாக்கப் பணிகளை இரண்டு, மூன்று மாதங்களுக்குள் முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார். http://www.puthinappalakai.net/2019/06/29/news/38789

நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா..

3 months 2 weeks ago
இன்றும் ஒருமுறை முழுமையாக பார்த்து ரசித்தேன்.. பாடல்கள் அத்தனையும் இனிமை..! அதிலும் "நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா.. தா.." இன்னமும் தாளம் போட்டு இதயத்தை வருடும் பாடல்..

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

3 months 2 weeks ago
வாறகிழமை எனது வீட்டில் ஒரு விசேஷம் (மகனுக்கு திருமணம்). உறவினர்களுடன் மட்டும் செய்கின்றோம்.அதனால் பாரிஸில் நிக்கின்றேன்.வேலைகள் அதிகம்.அதுக்கிடையில் இடைக்கிடை இங்கு வந்து போகின்றேன்.வேறு ஒன்றுமில்லை.......! பி.கு: மாலிங்கா பாட் தூங்குவதும் ,கெய்லின் பாட் இறங்குவதும் அந்தந்த அணிக்கு நாசம்......! 🤣

மத்திய கிழக்கிற்கு அதிநவீன போர்விமானங்களை அனுப்பியது அமெரிக்கா

3 months 2 weeks ago
மத்திய கிழக்கிற்கு அதிநவீன போர்விமானங்களை அனுப்பியது அமெரிக்கா ஈரானுடனான பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா தனது அதிநவீன எவ்22 ஸ்டெல்த் போர் விமானங்களை கட்டாரிலுள்ள தனது தளத்திற்கு அனுப்பியுள்ளது. அமெரிக்க விமானப்படையின் மத்திய கட்டளைப்பணியகம் இதனை அறிவித்துள்ளது. கட்டாரில் உள்ள உடெய்ட் விமானப்படை தளத்திற்கு போர் விமானங்கள் சென்றுள்ளன என அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. கட்டாரிற்கு அனுப்பபட்டுள்ள விமானங்களின் எண்ணிக்கையை அமெரிக்க விமானப்படை வெளியிடாத அதேவேளை விமானப்படையினால் வெளியிடப்பட்டுள்ள படத்தில் ஐந்து விமானங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க படையினரையும் அமெரிக்காவின் நலன்களையும் பாதுகாப்பதற்காகவே முதல் தடவையாக கட்டாரிற்கு போர் விமானங்கள் அனுப்ப பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானுடன் யுத்தம் ஏற்பட்டால் ஈரானின் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இலக்குவைப்பதற்கு இந்த வகை விமானங்களை அமெரிக்க பயன்படுத்தலாம் என போரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஈரானின் எஸ்-300 வான்பாதுகாப்பு பொறிமுறையை இலக்குவைக்க இந்த விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தாலம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா முதலி; எஸ் 300 வான்பாதுகாப்பு பொறிமுறையையே இலக்கு வைக்கும் அதனை இலக்கு வைத்தால் அமெரிக்க விமானங்கள் பாதுகாப்பாக செயற்படும் நிலை உருவாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த விமானங்களை அனுப்பியதன் மூலம் அமெரிக்கா மோதல் ஆரம்பமாவதை தடுக்க முயல்கின்றது ஆரம்பிக்க முயலவில்லை என முன்னாள் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/59369

கொங்கோ சுரங்க விபத்தில் 43 பேர் பலி

3 months 2 weeks ago
கொங்கோ சுரங்க விபத்தில் 43 பேர் பலி கொங்கோவிலுள்ள தாமிரச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய ஆப்பிரிக்க - கொங்கோவில் ஜாம்பியாவின் தெற்கு எல்லைப்பகுதியின் அருகாமையில் தனியாருக்கு சொந்தமான மிகப்பெரிய தாமிரம் மற்றும் கோபால்ட் கனிமம் வெட்டி எடுக்கும் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த சுரங்கத்திலிருந்து கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் நிரந்தர அடிப்படையிலும் ஒப்பந்த அட்டிப்படையிலும் பல நூற்றுக்கணகான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கபோல் இந்த சுரங்கத்தில் பணிகள் நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக சுரங்கத்துக்குள் மண்சரிவு ஏற்பட்டதில் பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் மற்றும் இராணுவத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்றைய நிலைவரப்படி பலரை உயிருடன் காப்பாற்றிய மீட்பு படையினர் 36 பிரேதங்களையும் மீட்டனர். இன்றைய நிலைவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. சுரங்கத்தினுள் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் இவ்விபத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சுரங்களில் கனிம வளங்களை வெட்டி எடுக்கும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என பொதுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/59353

ஈரான் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை - ட்ரம்ப்

3 months 2 weeks ago
ஈரான் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை - ட்ரம்ப் ஈரான் பிரச்சினைக்கு தீர்வுகான காலக்கெடு எதுவும் இல்லை. நிறைய அவகாசம் இருக்கிறது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வல்லரசு நாடுகளுடன் ஈரான் ஏற்படுத்திய அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதால் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் உருவானது. இந்த மோதல் நாளுக்கு நாள் முற்றி விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இரு நாடுகளும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், மாநாட்டுக்கு மத்தியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் ஈரான் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ட்ரம்ப், “பிரச்சினைக்கு தீர்வுகான ஈரானுக்கு காலக்கெடு எதுவும் இல்லை. நிறைய அவகாசம் இருக்கிறது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை. ஈரான் விவகாரத்தில் கடந்த 3 நாட்களாக கூறி வருவது தான் எனது நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை. அனைத்தும் சுமுகமாக முடியும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு, “ஈரானுடன் போரில் ஈடுபட விரும்பவில்லை. ஒருவேளை போர் ஏற்பட்டால் அது நீண்ட காலம் நீடிக்காது. அமெரிக்கா எளிதில் வென்றுவிடும்” என ட்ரம்ப் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/59348

விடியும் வேளையில் இடம்பெறப்போகும் விளையாட்டுக்கள்

3 months 2 weeks ago
விடியும் வேளையில் இடம்பெறப்போகும் விளையாட்டுக்கள் நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் அனைத்து தரப்பினரும் அடுத்த ஜனாதிபதி தேர்தல் பற்றியும் கட்சிகளின் சார்பில் களமிறங்கப்போகும் வேட்பாளர்கள் தொடர்பாகவுமே அதிகளவில் ஆர்வம் செலுத்துகின்றனர். களத்தில் இறங்கப்போகும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் யார்? எத்தனை வேட்பாளர்கள் வரப்போகின்றார்கள்? மும்முனை போட்டியா இருமுனைப் போட்டியா என்பது குறித்து கடுமையான வாத,பிரதிவாதங்கள் அனைத்து தளங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. விசேடமாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்பதிலேயே அனைவரதும் கவனம் குவிந்துள்ளது. அரசியல் என்பது எப்போதும் விசித்திரமானதுதான். எதிர்பாராத விடயங்கள் எதிர்பார்க்காதபோது நடைபெறுவது தானே அரசியல்? கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன எதிரணி சார்பில் களமிறங்குவார் என்று எவரும் எதிர்பார்க்கவுமில்லை. அவர் வெற்றிபெறுவார் என்று நினைத்திருக்கவுமில்லை. அதுபோன்ற எதிர்பாராத விடயங்கள் நடைபெறுவதையே அதிகமாக அரசியலில் காணக்கூடியதாக இருக்கின்றது. அந்தவகையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் என்ன நடக்கப்போகின்றது என்று அரசியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்ற நிலையில் அதற்கேற்றவாறு நாட்டில் அரசியல் நகர்வுகளும் ஜனாதிபதி தேர்தல் குறித்த காய் நகர்த்தல்களும் சூடுபிடித்துள்ளன. அதன்படி தற்போதைய சூழலில் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடப்பதற்கான வாய்ப்பே அதிகம் காணப்படுகின்றது. காரணம் பாராளுமன்ற தேர்தலானது அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதமே நடைபெறவேண்டும். எனினும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தற்போதைய பாராளுமன்ற ஆயுட்காலம் நான்கரை வருடங்கள் நிறைவுபெறுகின்ற பின்னணியில், அதன் பின்னர் எந்த நேரத்திலும் அப்போது பதவியில் இருக்கும் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக் கலாம். 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இதுவே சாத்தியமானது. எனினும் அதற்கு முன்னரும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவ தற்கான சாத்தியம் இல்லாமல் இல்லை. அதாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 150 பேர் அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மையானோர் ஒருமித்து பிரேரணை ஒன்றில் கைச் சாத்திட்டு அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால் உடனடியாக பாராளு மன்றத் தேர்தலை நடத்த முடியும். தற்போது சில தரப்பினரால் அதிகம் விமர்சிக்கப்பட்டுவரும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின்படி இதுவே தெரிவாக உள்ளது. ஆனால் அவ்வாறு நடப்பதற்கு தற்போது சாத்தியம் மிகக்குறைவாகவே இருக்கின்றது. காரணம் மஹிந்த தரப்பும் மைத்திரி தரப்பும் பாராளுமன்ற தேர்தலை விரும்பினாலும் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு ஆதரவு வழங்காது என்றே தெரிகின்றது. எனவே 150 எம்.பிக்களின் ஆதரவுடன் உடனடியாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவாக இருப்பதால் பாராளுமன்ற தேர்தலானது அடுத்தவருடம் மார்ச் மாதத்துக்கு பின்னர் நடைபெறுவதற்கான சாத்தியமே அதிகமாக காணப்படுகின்றது. அப்படி பார்க்கும்போது முதலில் ஜனாதிபதி தேர்தலே நடைபெறுவதற்கான சாத்தியம் இருக்கின்றது. டிசம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றாக வேண்டும். ஆனால் இங்கும் கவனம் செலுத்தப்படவேண்டிய ஒரு விடயம் உள்ளது. அதாவது ஜனாதிபதி தலைமை வகிக்கும் சுதந்திரக்கட்சியானது ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களே என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. எனினும் தற்போது 19 ஆவது திருத்தச் சட்டம் எப்போது ஆரம்பிக்கின்றது என்ற விடயம் அதனூடாக ஜனாதிபதியின் பதவிக்காலம் எப்போது ஆரம்பிக்கின்றது என்ற விடயம் உள்ளிட்டவற்றை முன்வைத்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சுதந்திரக் கட்சி கோரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் தற்போது வரை அவ்வாறு எதுவும் கோரப்படவில்லை. எனவே டிசம்பர் மாதம் ஏழாம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்ற அடிப்படையிலேயே அரசியல் கட்சிகளின் நகர்வுகள் இடம்பெற்றுவருகின்றன. அந்தவகையில் யார்யார் வேட்பாளர்கள்? யார் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த நாட்டை ஆளப்போகின்றவர் போன்ற விடயங்கள் உள்ளிட்ட பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. பலரின் பெயர்கள் மிகப் பிரபலமாக தற்போது பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இறுதி நேரத்தில் ஒரு சில வேட்பாளர்களுடன் பாரிய போட்டி காணப்படும். விடியும்போது நல்ல நல்ல விளையாட்டுக்கள் இடம்பெறும் என்று கூறுவதுண்டு. எனவே அரசியலும் அதில் நடைபெறுகின்றவையும் விசித்திரமானவை என்பதால் ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது நல்ல நல்ல விளையாட்டுக்களைக் காணலாம். தற்போதைய சூழலில் பலரின் பெயர்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றன. ஐக்கிய தேசியக்கட்சியைப் பொறுத்தவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன. ஐக்கிய தேசிய கட்சிக்குள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் ஒரு தரப்பினரும் பிரதமர் ரணிலை ஆதரிக்கும் ஒரு தரப்பினரும் சபாநாயகர் கரு ஜயசூரியை ஆதரிக்கும் மற்றுமொரு தரப்பினரும் இருப்பதாகவே தெரிகின்றது. இவர்களின் எந்த தரப்பு நியாயம் இறுதியில் வெற்றிபெறும் என்பது இன்னும் புதிராகவே காணப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருக்கின்ற கூட்டு கட்சிகள் சபாநாயகர் கருஜயசூரியவை வேட்பாளராக பிரேரிப்பதாகவே தெரிகின்றது. ஆனால் ரணில் மற்றும் சஜித் ஆகியோருக்கும் கணிசமான ஆதரவு கட்சிக்குள் இருக்கின்றது. எனினும் இன்னும் யார் என்பது முடிவு செய்யப்படாத நிலைமையே காணப்படுகின்றது. இது தொடர்பில் உள்மட்ட பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அரசியல் காய்நகர்த்தல்களும் இடம்பெறுகின்றன. இறுதியில் எவ்வாறான முடிவு எடுக்கப்படும் என்பது குறித்து கட்சியினர் தொடர்ந்து இரகசியங்களை பேணிவருகின்றனர். அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலும் நீளமானது என்றே கூறவேண்டும். முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜ பக் க்ஷ, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்டோரின் பெயர்கள் பேசப்பட்டுவருகின்றன. சமல் ராஜபக்ஷவின் பெயர் கடந்த சில வாரங்களாக சற்று அதிகமாகவே பேசப்பட்டு வருகின்றது. எனினும் தற்போதைய சூழலில் கோத்தபாய ராஜபக்ஷவின் பெயர் வலுவடைய ஆரம்பித்துள்ளது. கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் பலரும் மிகவும் பகிரங்கமாக கோத்தபாய ராஜபக்ஷவே அடுத்த வேட்பாளர் என்ற விடயத்தை வெளியிட்டு வருகின்றனர். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் பொதுஜன பெரமுன கட்சியின் சம்மேளனத்தில் கோத்தபாயவின் பெயர் உத்தியோகபூர்வமாக வெளி யிடப்படும் என்றும் கட்சியினர் அறிவிக்கின்றனர். . அது மட்டுமன்றி பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் கூட்டுக்கட்சிகளும் இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளன. “கோத்தபாய ராஜபக்க்க்்்க்ஷதான் வேட்பாளர் என்றால் கூறுங்கள் நாங்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டியுள்ளது” என்று சில தினங்களுக்கு முன்னர் வாசுதேவ நாணயக்காரவும் தெரிவித்துள்ளார். இதனூடாக கோத்தபாயவே வேட்பாளராக வரப்போகின்றார் என்ற விடயத்தை அரசியல் ஆர்வலர்களினால் ஊகிக்க முடிகின்றது. எனினும் கூட்டு எதிரணியை பொறுத்தவரையிலும் இதுவரை ஏகமனதான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றே தெரிகின்றது. அதேபோன்று சுதந்திரக்கட்சியும் இந்த இடத்தில் தீர்மானிக்கும் சக்தியாகவே இருக்கின்றது. சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டாயம் கட்சியின் சார்பாக போட்டியிடவேண்டும் என்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பில் கட்சியின் உறுப்பினர்கள் அண்மையில் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றையும் சமர்ப்பித்திருந்தனர். ஆனால் அதற்கு ஜனாதிபதி இன்னும் பதிலளிக்கவில்லை. மாறாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலானது மும்முனைப் போட்டியாக அமையாது என்றும் தான் கௌரவமான தீர்மானம் ஒன்றை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதியின் இந்தக் கூற்றின் ஊடாக அவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என்பது உறுதியாகின்றது. ஆனால் இறுதி நேரத்தில் எவ்வாறான தீர்மானமும் எடுக்கப்படலாம். அரசியல் விசித்திரமானது. கடந்த புதன்கிழமை பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்திருந்த ஜனாதிபதி சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு அமையவே இந்த விடயத்தில் தீர்மானம் எடுப்பதாக கூறியிருந்தார். அரசியல் அல்லவா? எதுவும் நடக்கலாம். மறுபுறம், இம்முறை மக்கள் விடுதலை முன்னணியும் தமது கட்சியின் சார்பில் வேட்பாளரை களமிறக்கவுள்ளதாக தெரிவித்து வருகின்றது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் எவ்வாறான முடிவை ஜனாதிபதி தேர்தலில் எடுக்கப்போகின்றன என்பதும் முக்கிய காரணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதேவேளை சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்னவும் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிபெற்றே தீருவேன் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஜனாதிபதி தேர்தல் குறித்த விடயங்கள் சூடுபிடித்துவிட்டன. அது தொடர்பான அரசியல் காய்நகர்த்தல்கள் கட்சி அணுகுமுறைகள் தீவிரமடைந்துள்ளன. எனினும் வேட்பாளர்கள் குறித்து மக்களுக்கு இன்னும் தெளிவற்ற தன்மை நீடிக்கின்றது. யார்யார் வேட்பாளர்களாக வரப்போகின்றனர் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். இன்னும் சில வாரங்களில் ஜனாதிபதி தேர்தல் குறித்த விடயங்கள் மேலும் சூடுபிடிக்கும் என்பதனை எதிர்பார்க்கலாம். மஹிந்த ராஜபக்ஷ தரப்பின் வேட்பாளராக கோத்தபாய வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகிய மூவரின் பெயர்களும் உள்ளன. அதனால் விடியும்போது நல்ல நல்ல விளையாட்டுக்களைப் பார்க்கலாம் என்பது இங்கு பொருத்தமாக அமையும். தேர்தலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. தலைவர்கள் வெளிப்பட ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு ஐந்து வருடங்கள் அல்லது ஆறு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் விடயமாக இது உள்ளது. தற்போதும் அதுவே நடக்கின்றது. ஆனால் நாட்டினதும் மக்களினதும் பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்துக்கொண்டே தான் செல்கின்றன. பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் பாரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் தமிழ்ப்பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். காணாமல் போனோர் விவகாரம் தீர்க்கப்படும். காணிகள் விடுவிக்கப்படும், அரசியல் கைதிகளின் பிரச்சினை தீர்க்கப்படும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியில் வலுவூட்டப்படுவார்கள், கணவனை இழந்த குடும்ப தலைவிகள் பொருளாதார ரீதியில் ஊக்குவிக்கப்படுவார்கள், மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுக்கள் ஆராயப்படும், வேலையின்மை வறுமை என்பன குறைக்கப்படும், பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தப்படும், சமூக பிரச்சினைகள் தீர்க்கப்படும் என பாரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அவை இன்னும் பிரச்சினைகளாகவே நீடிக்கின்றன. 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய சாதனையாக 19 ஆவது திருத்தச் சட்டத்தைப் பார்க்கலாம். ஆனால் அதுவும் இன்று விமர்சிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. எனவே நாட்டின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பிரதான பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து சிந்திக்கவேண்டும். தற்போது முன்வருகின்ற தலைவர்களில் பலர் முன்னைய அரசாங்கங்களில் முக்கிய பதவிகளில் இருந்துள்ளனர். எனவே ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வர துடிக்கின்றவர்கள் வந்த பின்னர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனரா? அல்லது தீர்க்க முடியாதளவுக்கு அரசியல் சூழல் அமைகின்றதா? என்பது ஆராயப்படவேண்டிய விடயமாகும். எப்படியும் தேர்தல் திருவிழா ஆரம்பமாகப் போகின்றது. கட்சிகள் அரசியல் காய்நகர்த்தல்களுக்கும் நகர்வுகளுக்கும் தயாராகின்றன. வேட்பாளர்கள் தம்மை வெளிக்காட்ட ஆரம்பித்துவிட்டனர். பற்பல அரசியல் அரங்கேற்றங்களைக் களத்தில் இனி பார்க்க முடியும். உண்மையில் விடியும் நேரத்தில் நல்ல நல்ல விளையாட்டுக்கள் இடம்பெறும் என்பது மட்டும் உண்மையாகும். ரொபட் அன்டனி https://www.virakesari.lk/article/59374

அதிகாரப்போட்டியின் உச்சக்கட்டம்!

3 months 2 weeks ago
அதிகாரப்போட்டியின் உச்சக்கட்டம்! நாட்டின் முது­கெ­லும்­பா­கிய அர­சி­ய­ல­மைப்பை முறை­யாகப் பேணி ஆட்சி நடத்த வேண்­டி­யது ஆட்­சி­யா­ளர்­களின் தலை­யாய கட­மை­யாகும். அதே­போன்று அர­சி­யல்­வா­தி­களும், பொது­மக்­களும் அர­சி­ய­ல­மைப்­புக்கு உரிய மதிப்­ப­ளித்து, அதற்­கேற்ற வகையில் ஒழுக வேண்­டி­யதும் நல்­லாட்­சிக்கு அவ­சி­ய­மாகும். ஆனால் இத்­த­கைய போக்கை ஆட்சித் தலை­வர்­க­ளிடம் காண முடி­ய­வில்லை. இந்த அர­சி­ய­ல­மைப்பு நாட்டின் அனைத்து சமூ­கங்­க­ளையும் சேர்ந்த மக்­களை முதன்­மைப்­ப­டுத்தி, அவர்­க­ளு­டைய இறை­மைக்கு உரிய அங்­கீ­கா­ர­ம­ளித்து, தீர்க்­க­த­ரி­ச­னத்­துடன் உரு­வாக்­கப்­பட வேண்டும். பல்­லி­னங்­களும், பல மதங்­க­ளையும் சேர்ந்த மக்கள் வாழ்­கின்ற நாட்டில், அந்த அர­சி­ய­ல­மைப்பில் பல்­லி­னத்­தன்­மைக்கு முக்­கிய கவனம் செலுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். அவ்­வாறு உரு­வாக்­கப்­ப­டு­கின்ற அர­சி­ய­ல­மைப்பே நீடித்த நல்­லாட்­சிக்கு வழி­கோ­லு­வ­தா­கவும் அமைந்­தி­ருக்கும். ஆனால் இலங்­கையைப் பொறுத்­த­மட்டில், பல்­லி­னத்­தன்­மைக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. கடந்த 1978ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட சிறி­லங்கா சோஷ­லிசக் குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு, இந்த நாட்டின் தேசிய இன­மா­கிய சிறு­பான்மை இன மக்­களின் இருப்பை கேள்­விக்கு உள்­ளாக்கும் வகையில் ஓர் உள்­நோக்­கத்­து­ட­னேயே வடி­வ­மைக்­கப்­பட்­டது. முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் பேரின மக்­க­ளா­கிய சிங்­கள மக்­களின் அர­சியல், மத உரி­மை­க­ளுக்கு வழி­ச­மைத்த இந்த அர­சி­ய­ல­மைப்பு தேசிய சிறு­பான்மை இன மக்­களின் பங்­க­ளிப்பு இல்­லா­ம­லேயே உரு­வாக்­கப்­பட்­டது. அதில் பெரும்­பான்மை இன மக்­களின் நலன்­க­ளுக்கும் அந்த நலன்­களின் பாது­காப்­புக்கும் அளிக்­கப்­பட்ட முக்­கி­யத்­துவம் சிறு­பான்மை இன மக்­களின் விட­யங்­களில் அளிக்­கப்­ப­ட­வில்லை. இதனால் சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் தலை­வர்கள் ஏற்­றுக்­கொள்­ளாத சூழ­லி­லேயே அந்த அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு, நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அந்த அர­சி­ய­ல­மைப்பில் சிறு­பான்மை இன மக்­களின் நலன்­க­ளுக்கு உரிய கவனம் செலுத்­தப்­ப­டாத கார­ணத்தின் நிமித்­தமே 13ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் கொண்டு வரப்­பட்டு, மாகாண ஆட்சி முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. எனினும், அதி­லும்­கூட இந்­திய நலன் சார்ந்த உள்­நோக்கம் படிந்­தி­ருந்­ததை மறுக்க முடி­யாது. இந்­தி­யாவின் தலை­யீடு இந்த அர­சியல் திருத்­த­மும்­கூட, இலங்­கையின் ஆட்­சி­யா­ளர்­க­ளால் கொண்டு வரப்­ப­ட­வில்லை. இந்­திய அர­சாங்­கத்­துடன் செய்து கொண்ட ஓர் ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டை­யி­லேயே இந்தத் திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்­டது. அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்டு, தேசிய சிறு­பான்மை இன மக்கள் அடக்கி ஒடுக்­கப்­பட்­டதன் கார­ண­மாக எழுந்த ஆயுதப் போராட்­டத்­துக்கு எதி­ராக அர­சாங்கம் இறுக்­க­மான இரா­ணுவ நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­தி­ருந்­தது. யாழ். குடா­நாட்டின் வட­ம­ராட்சி பிர­தே­சத்தில் ஆயு­த­மேந்­திய தமிழ்ப் போரா­ளி­க­ளுக்கு எதி­ராக அரச படைகள் ஒப்­ப­ரேஷன் லிப­ரஷேன் என்ற மோச­மான இரா­ணுவ தாக்­குதல் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­தி­ருந்­தன. தனது குடி­மக்­களில் ஒரு பகு­தி­யினர் மீது அர­சாங்­கமே வேற்று நாட்டுப் படை­யி­ன­ருடன் மோது­கின்ற வகை­யி­லான இரா­ணுவ நட­வ­டிக்கை ஒன்றை முன்­னெ­டுத்­தி­ருப்­பதைக் கண்ட இந்­திய அரசு இலங்­கையில் இரா­ணுவ ரீதி­யாகத் தலை­யீடு செய்­தது. 'ஒப்­ப­ரேஷன் பூமாலை' என்ற பெயரில் யுத்த மோதல்கள் மூண்­டி­ருந்த யாழ். குடா­நாட்டில் சிக்­கி­யி­ருந்த பொது­மக்­களின் அத்­தி­யா­வ­சியத் தேவை­யா­கிய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்­வ­தற்­காக இந்­திய செஞ்­சி­லுவைக் குழுவைப் பயன்­ப­டுத்தி, மனி­தா­பி­மான உத­வி­யாக உணவுப் பொட்­ட­லங்­களை வான் வழி­யாகப் போட்­டது. இதனைத் தொடர்ந்து இந்­தியப் படைகள், அமைதி காக்கும் படை­யாக இலங்­கைக்குள் காலடி எடுத்து வைத்­தன. அந்தத் தரு­ணத்­தி­லேயே தமிழ் இளை­ஞர்­களின் போராட்­டத்தைத் தணித்து மாகாண சபை முறை­மையின் கீழ் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணும் வகையில் இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் செய்து கொள்­ளப்­பட்­டது. இந்த ஒப்­பந்­தத்தில் அப்­போ­தைய இலங்கை ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­த­னவும், இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­தியும் கையெ­ழுத்­திட்­டி­ருந்­தனர். போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த தமிழ் இளை­ஞர்கள் ஆயு­தங்­களைக் கைய­ளித்து ஜன­நா­யக வழி­மு­றைக்குத் திரும்­பி­யி­ருந்­தனர். ஆயு­தங்­களைக் கைய­ளித்­தி­ருந்த போதிலும், விடு­த­லைப்­பு­லிகள் மாத்­திரம் ஏனைய ஆயு­த­மேந்­திய அமைப்­பு­களைப் போன்று ஜன­நா­யக வழிக்குத் திரும்­ப­வில்லை. அதனைத் தொடர்ந்து அமைதி காக்க வருகை தந்­தி­ருந்த இந்­தியப் படை­க­ளுடன் விடு­த­லைப்­பு­லிகள் மோதலில் ஈடு­பட நேர்ந்­தி­ருந்­தது என்­பதும் வேறு விட­யங்­க­ளாகும். ஆனால், இந்­தி­யாவின் தலை­யீட்டில் உரு­வாக்­கப்­பட்ட 13ஆவது அர­சி­ய­ல­மைப் புத் திருத்தம் இனப்­பி­ரச்­சி­னைக்கு உரிய தீர்வை வழங்­க­வில்லை. தமிழ் மக்­க­ளுக்­கென ஒரு தனி­ நாட்­டுக்­காக ஆயு­த­மேந்­திய தமிழ் இளை­ஞர்­க­ளுக்கு இரா­ணுவ ரீதி­யாகப் பயிற்­சிகள் உள்­ளிட்ட உத­வி­களை வழங்­கி­யி­ருந்த போதிலும், இலங்­கையில் தனி­ நாடு ஒன்று உரு­வா­­வதை இந்­தியா விரும்­பி­யி­ருக்­க­வில்லை. இலங்­கையில் உரு­வா­கின்ற தனி நாட்டு நிலைமை இந்­தி­யாவின் ஒரு­மைப்­பாட்­டுக்கும் பாத­க­மான நிலை­மை­களை ஏற்­ப­டுத்தும் என்ற கார­ணத்­துக்­கா­கவே, மாகாண சபை முறை­மை­யி­லான நிர்­வாக அலகைக் கொண்ட தீர்வை முன்­வைத்து, 13ஆவது அர­சியல் திருத்தம் கொண்டு வரப்­பட்­டது. அந்தத் திருத்­தத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த ஆட்­சி­யா­ளர்கள் முன்­வ­ர­வில்லை. இதனால் அந்த அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் ஊடாகக் கொண்டுவரப்­பட்ட மாகாண சபை தமிழ்ப்­ பி­ர­தே­சங்­களில் பய­னுள்ள முறையில் செயற்­பட முடி­யாமல் போனது. அதே­வேளை, நாட்டின் ஏனைய பிர­தே­சங்­களில் அவ­சி­யப்­ப­டாத மாகாண சபைகள் அர­சியல் ரீதி­யாகப் பெரும்­பான்மை இன மக்­க­ளுக்குப் பயன்­பட்­டி­ருந்­தன. தமிழ் மக்­களின் நலன்­களில் உண்­மை­யி­லேயே இந்­தியா அக்­கறை கொண்­டி­ருந்­தி­ருக்­கு­மே­யானால், இலங்கை இந்­திய ஒப்­பந்தம் என்ற சர்­வ­தேச அந்­தஸ்து கொண்ட ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் மாகாண சபை நிர்­வாக முறைமை சரி­யான முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வதைத் தொடர்ந்து கண்­கா­ணித்து, இந்­தியா செயற்­ப­டுத்­தி­யி­ருக்கும். ஆனால் அது நடை­பெ­ற­வில்லை. அர­சி­ய­ல­மைப்பின் 18, 19ஆவது திருத்தச் சட்­டங்கள் இதனைத் தொடர்ந்து பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காகப் பல தட­வைகள் அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்கள் கொண்டுவரப்­பட்­டன. அந்த வகையில் 13ஆவது திருத்­தத்தைப் போலவே, அர­சி­ய­ல­மைப்பின் 18 மற்றும் 19ஆவது திருத்தச் சட்­டங்­களும் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­கா­கவே கொண்டு வரப்­பட்­டன. இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் கீழ் கொண்டுவரப்­பட்ட 13ஆவது திருத்தச் சட்­டத்தைப் போன்று, இந்த இரண்டு திருத்­தங்­களும் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணும் நோக்­கத்தைக் கொண்­டி­ருக்­க­வில்லை. மாறாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் தொடர்­பி­லான விட­யங்­க­ளுக்­கா­கவே இவை உரு­வாக்­கப்­பட்­டன. மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்தில் கொண்டுவரப்­பட்ட 18ஆவது திருத்தச் சட்டம், ஜனா­தி­பதி ஒருவர் இரண்டு தட­வை­க­ளுக்கு மேல் பதவி வகிக்க முடி­யாது என்ற நிய­தியை நீக்கி, மூன்­றா­வது தட­வையும் பதவி வகிக்­கலாம் என்ற உரி­மையை நிலை­நி­றுத்­து­வ­தற்­காக, அவ­ரு­டைய தனிப்­பட்ட அர­சியல் நலனை கருத்திற் கொண்டு, கொண்டுவரப்­பட்­டது. அத்­துடன் நிறை­வேற்று அதி­கா­ரத்தின் கீழ் ஜன­நா­யக உரி­மை­க­ளுக்கு காப்­பீட்டு விதி­மு­றை­களைக் கொண்ட நிலை­மை­யையும் அது மாற்றியமைத்­தது. அர­சியல் நோக்­கத்­துடன், நிறை­வேற்று அதி­காரம் மேற்­கொள்­ளத்­தக்க ஜன­நா­யக உரிமை மீறல்­க­ளுக்குத் தடை­ போடும் வகையில் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்த விதி­மு­றை­களை நீக்கி, ஜனா­தி­பதி தனக்கு விருப்­ப­மான முறையில் நீதித்­துறை, தேர்தல் துறை போன்ற முக்­கிய துறை­க­ளுக்­கா­ன­வர்­களை நிய­மனம் செய்­கின்ற அதி­கா­ரத்தை உரு­வாக்­கி­யி­ருந்தார். இதனால் நிறை­வேற்று அதி­காரம், ஏனைய ஜன­நா­யகத் துறை­களை மேவிச் செயற்­ப­டு­கின்ற நிலை­மை­யொன்றே இதன் மூலம் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. நாட்டில் புரை­யோடிப் போயுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்­டிய தேசிய முக்­கி­யத்­துவம் மிக்க விட­யத்­துக்கு அப்பால் ஜன­நா­ய­கத்­துக்கு விரோ­த­மாக சர்­வா­தி­கார ஆட்சி முறைக்கே 18ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்டம் வழிவகுத்­தி­ருந்­தது. ஆனால், 2015ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஆட்சி மாற்­றத்தின் பின்னர், நிறை­வேற்று அதி­கா­ரத்­துக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த எல்­லை­யற்ற அதி­கா­ரங்­களை இல்­லாமல் செய்­வ­தற்­கா­கவே 19ஆவது திருத்தச் சட்டம் 2015ஆம் ஆண்டில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ரால் கொண்டுவரப்­பட்­டது. சர்­வா­தி­காரப் போக்கில் காலடி எடுத்து வைத்­தி­ருந்த ஆட்சி முறையை மாற்றி ஜன­நா­ய­கத்தைத் தழைக்கச் செய்­வ­தற்­கா­கவே 19ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்­பட்­ட­தாகக் கூறப்­பட்ட போதிலும், அதிலும் ஓர் அர­சியல் உள்­நோக்கம் இழை­யோடி இருந்­தது. பொது வேட்­பா­ளரின் தெரிவு மஹிந்த ராஜ­பக் ஷவைத் தோற்­க­டிப்­ப­தற்­காக ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­த­ரா­கிய மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது வேட்­பா­ள­ராகத் தேர்வு செய்­யப்­பட்­டி­ருந்தார். அன்­றைய அர­சியல் சூழல் ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை வேட்­பா­ள­ராகத் தேர்வு செய்­வ­திலும் பார்க்க, ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியிலிருந்து ஒரு­வரைத் தெரிவு செய்­வதே சரி­யாக இருக்கும் என்று கரு­தப்­பட்­டது. தேர்­தல்­களில் வெற்­றி­ பெற்று நல்­லாட்சி அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டதன் பின்னர், குறிப்­பாக ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்ள நிறை­வேற்று அதி­கா­ரத்தை இல்­லாமல் செய்து பாராளு­மன்­றத்தை அதி­கார மைய­மாக மாற்றியமைக்க வேண்டும் என்­பதே 19ஆவது திருத்தச் சட்­டத்தின் பிர­தான நோக்கம். இரண்டு தட­வை­க­ளுக்கு மேல் ஜனா­தி­ப­தி­யாக ஒருவர் பதவி வகிக்க முடி­யாது. பாராளு­மன்­றத்தைக் கலைக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­தியின் கைகளில் இருந்து பாரா­ளு­மன்­றத்­துக்கு மாற்­றப்­பட வேண்டும். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் செயற்­பா­டு­களை கேள்­விக்கு உட்­ப­டுத்த முடி­யாது என்ற நிலை­மையை மாற்றி, பாரா­ளு­மன்­றத்­துக்கு அவர் பொறுப்புக் கூற வேண்டும் என்­பன உள்­ளிட்ட முக்­கிய மாற்­றங்­களை அந்தச் சட்டம் கொண்­டி­ருக்­கின்­றது. இது பொது­வாக ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற ஒரு­வரை இலக்கு வைத்து ஜன­நா­யக ஆட்சி முறை­மையை வலுப்­ப­டுத்­து­வ­தாகத் தோன்­றி­னா­லும்­கூட, மாற்றுக் கட்­சி­யா­கிய ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன என்ற தனி நபரின் கட்சி அர­சியல் சார்ந்த எதிர்­கால நலன்­களை இல்­லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்­கமே மறைந்­தி­ருந்­தது. ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது வேட்­பா­ள­ரா­கவே தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்தார். அவர் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­ கட்­சியை விட்டு விலகி ஐக்­கிய தேசிய கட்­சியில் இணைந்­தி­ருக்­க­வில்லை. அவர் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட பின்­னரும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லேயே இணைந்­தி­ருந்தார். ஜனா­தி­ப­திக்­கு­ரிய நிறை­வேற்று அதி­கா­ரங்­களை ஜன­நா­ய­கத்தின் போர்­வையில் இல்­லாமல் செய்து பாரா­ளு­மன்­றத்தைப் பலப்­ப­டுத்­து­வது என்­பது, பிர­த­ம­ரா­கிய ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் பலப்­ப­டுத்­து­வ­தா­கவே அமையும். அத்­துடன், ஐக்­கிய தேசிய கட்சி, ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி ஆகிய இரண்டு கட்­சிகள் இணைந்து அமைத்த நல்­லாட்­சியில் இந்த அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் ஊடாக ஐக்­கிய தேசிய கட்­சியே நன்மை அடையும். இத்­த­கைய பின்­புல அர­சியல் உள்­நோக்­கங்­களைக் கொண்டே 19ஆவது அர­சியல் திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது. இதனை மைத்­தி­ரி­பால சிறி­சேன காலம் கடந்த நிலை­யி­லேயே உணர்ந்து கொண்டார். அல்­லது நேரத்­தோடு இதனை அவர் உணர்ந்­தி­ருந்­தா­லும்­கூட, நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்­றி­ருந்த அர­சியல் சூழலில் இதற்கு எதி­ராகக் குரல் கொடுக்கத் தக்க அர­சியல் வலிமை அவ­ரிடம் அப்­போது இருக்­க­வில்லை என் றும் கருத முடியும். நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நாலரை வரு­டங்கள் முடி­வுற்ற நிலை­யி­லேயே, அர­சி­ய­ல­மைப்பு வர­லாற்றில் முக்­கி­யத்­துவம் பெற்­றுள்ள 18, 19 ஆகிய இரண்டு அர­சியல் திருத்தச் சட்­டங்­க­ளையும் நீக்க வேண்டும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யுள்ளார். அவ­ரு­டைய கூற்று பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் சர்ச்­சை­க­ளையும் உரு­வாக்கி இருக்­கின்­றது. அந்தக் கூற்று வேடிக்­கை­யா­கவும், அதே­வேளை, விப­ரீ­த­மா­க­வும்­கூட நோக்­கப்­ப­டு­கின்­றது. '19 - நாட்­டுக்கு சாபக்­கே­டா­னது' அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்டம் நாட்­டுக்கு சாபக்­கே­டா­னது. நாட்டில் உறு­தி­யற்ற அர­சியல் நிலை­மைகள் ஏற்­பட்­டுள்­ள­மைக்கு இந்தச் சட்­டமே கார­ண­மாகும். இந்தச் சட்­டத்­தினால், ஜனா­தி­ப­திக்கு ஒரு பகுதி அதி­கா­ரமும், பாரா­ளு­மன்­றத்­துக்கு ஒரு பகுதி அதி­கா­ரமும் சென்­றன. இது ஒரு வாக­னத்தை இரண்டு சார­திகள் செலுத்­து­வ­தற்கு ஒப்­பா­னது என்று பிர­த­மரே கூறி­யி­ருக்­கின்றார் எனக் குறிப்­பிட்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, நாட்டை முன்­னேற்ற வேண்­டு­மானால், அந்தச் சட்­டத்தை இல்­லாமல் செய்­ய வேண்டும் எனத் தெரி­வித்­தி­ருக்­கின்றார். பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்­த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்ற ஒரு நிகழ்வில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அர­சி­ய­ல­மைப்பின் 18 மற்றும் 19ஆவது திருத்தச் சட்­டங்­களை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என்று முதலில் கூறி­யி­ருந்தார். அர­சி­ய­ல­மைப்பின் 18ஆவது திருத்தச் சட்டம் சர்­வா­தி­காரப் போக்கைக் கொண்­டி­ருந்­தது. ஆனால் 19ஆவது சட்டம் நாட்டில் உறு­தி­யற்ற அர­சியல் நிலை­மை­களை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றது. ஆகவே இந்தச் சட்­டங்­களை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என்று அவர் தெரி­வித்­தி­ருந்தார். மூன்று தினங்­களின் பின்னர் ஜனா­தி­பதி மாளி­கையில் தேசிய பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள், ஊடகப் பிர­தா­னி­க­ளுடன் நடத்­திய சந்­திப்­பின்­போது இந்தக் கருத்தை மீண்டும் வலி­யு­றுத்­திய அவர், இன்னும் சில மாதங்­களில் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தல், அதனைத் தொடர்ந்து நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்தல் என்­பன நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக இந்தச் சட்­டங்­களை இல்லாமல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே வெற்றி பெறும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகின்ற அவர், எல்லையற்ற அதிகாரங்களைக் கொண்ட நிலையிலான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியின் மூலம் அந்தக் கட்சியின் அரசியல் நலன்களைக் கட்டிக்காக்க முடியும். மக்கள் மத்தியில் தொடர்ந்து செல்வாக்குடன் அரசியல் செய்ய முடியும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிகின்றது. உண்மையிலேயே தற்போதைய நாட்டு நிலைமையில் அரசியலமைப்பின் 18, 19 ஆவது திருத்தச் சட்டங்களை நீக்குவதிலும் பார்க்க, புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டு நாட்டை முன்னேற்ற வழியில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதே அவசியமாகும். நாட்டில் ஏற்பட்டுள்ள உறுதியற்ற அரசியல் நிலைமைகளுக்கு ஜனாதி பதிக்கும் பிரதமருக்கும் இடையில் எழுந்துள்ள அதிகாரப் போட்டியே முக்கிய காரணமாகும். ஜனநாயகத்துக்குப் புத்துயிரளித்து, புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண் பதாக மக்களிடம் உறுதியளித்தே இந்த அரசாங்கம் ஆட்சிப் பீடமேறியது. மக்களுக்கு அளித்த ஆணையை நிறைவேற்ற வேண்டியது ஜனாதி பதியினதும் பிரதமரதும் தலையாய கடமையாகும். அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டு அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டு வருவது என்பதும், அந்த அடிப்படையில் அரசியல் செய்வது என்பதும் இனவாத, மதவாத உணர்வுகள் மேலோங்கி இனக்குழுமங்களை வெறுப் பும் அச்சமும் கௌவிப் பிடித்துள்ள சூழலில் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. பி.மாணிக்­க­வா­சகம் https://www.virakesari.lk/article/59368

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன், ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தொடர்பில்லை…

3 months 2 weeks ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன், ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தொடர்பில்லை… June 29, 2019 முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் ஆளுநர்களான அசாத் சாலி, எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கும் இடையில் தொடர்பில்லை என குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருப்பதாக பதில் காவற்துறை மா அதிபர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்கிற்கு அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிரி நேற்று தெரிவுக்குழுவின் அமர்வில் தெரிவித்தார். தெரிவுக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சாட்சியமளித்தார். இவரது சாட்சியம் மற்றும் விசாரணைகள் நிறைவடைந்த போது பிரதி சபாநாயகர் இதனை அறிவித்தார். குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து இதுதொடர்பாக கிடைத்த கடிதத்தின் பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் தெரிவுக்கு குழுவின் பிரதி இணைப்பென அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிரி மேலும் தெரிவித்தார். #ரிஷாட்பதியுதீன் #அசாத்சாலி #ஹிஸ்புல்லாஹ் #உயிர்த்தஞாயிறுதாக்குதல் http://globaltamilnews.net/2019/125563/

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி 

3 months 2 weeks ago
நீங்கள் ஏன் அதை முதலில் தட்டி கேட்காமல் யாழ் நண்பர்கள் வந்து தட்டி கேட்பார்களா என்று வேடிக்கை பார்த்தீர்கள் ? நீங்கள் யாழ்கள உறுப்பினர் இல்லையா அல்லது ராஜவன்னியனின் நண்பர்களில் ஒருவர் இல்லையா?

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு

3 months 3 weeks ago
பட்டது + படிச்சது + பிடித்தது - 175 ஒருவரைப்பார்த்தவுடன் நாம் எடுக்கும் முடிவுகள்??? இவரது திருமணத்துக்கு நான் சென்றிருந்தேன். மிகப்பெரிய தாடி மீசையுடன் தான் இவர் தாலி கட்டினார். அப்பொழுது இதை பற்றி பக்கத்தில் இருப்பவருடன் பேசினோம். அவர் பல காலமாக இப்படித்தான். தாடியை மட்டும் குறைக்கவே மாட்டார் என்றார்கள். திருமணத்தின் போதாவது கொஞ்சம் குறைத்திருக்கலாம். இது அதிகம் என்பதாகத்தான் எமது பேச்சிருந்தது. இது பற்றி எனது மக்களிடமும் சொன்னேன். ஆனால் யாருக்குமே இவர் இந்தப்போட்டிக்காகத்தான் இந்தளவுக்கு வளர்த்து வைத்திருக்கிறார் என்பது தெரிந்திருக்கவில்லை. இப்படித்தான் நாம் பின்னால் எதையாவது பேசி விட்டுப்போகின்றோம். ஆனால் உண்மை??? ILAKKIYAINFO.COM பிரான்ஸில் மிகச் சிறந்த தாடி அழகன் பட்டத்தை வென்ற தமிழன்! யார் தெரியுமா?? பிரான்ஸ் தலைநகர் பரிஸில், தாடி வைத்திருப்போருக்கான பிரத்யேக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
Checked
Sun, 10/20/2019 - 09:04
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr