புதிய பதிவுகள்

நெப்போலியன் மனைவியின், மோதிரம் திருட்டு!

3 months 1 week ago
நான் உலக சரித்திரம் படித்த காலத்தில் பிரான்ஸ் பற்றி படிக்கும்போது முதன் முதல் தெரிந்து கொண்ட பெயர் நெப்போலியன்தான். ஊரிலும் ஒல்லியாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வருபவர்களை நெப்போலியன் வாரார் என்றுதான் சொல்வதுண்டு. அந்த சர்வாதிகாரியை ஒரு சின்ன தீவில் விட்டு சாகடித்து விட்டனர். அவர் செத்தது கள்ளருக்கெல்லாம் குளிர் விட்டு போச்சு.அவற்ர மனிசியின் ர மோதிரத்தையே திருடி விட்டார்கள். என்ர வீட்டில் களவுபோனதைவிட இது பெரிய கவலையாய் கிடக்கு......! 😩

கோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு….

3 months 1 week ago
என்னுடைய வாழ்வு இலங்கைச் சிறையில் முடியுமென இறுமாப்பாக சொன்ன தலைவரே நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுக என வாழ்த்துகிறேன்.

கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கிளிநொச்சியில் கைது..

3 months 1 week ago
போர்க்காலத்தில் சில போராளி குடும்பங்கள் மியன்மார் (பர்மா) பிரதேசத்தில் உள்ள சில தீவுகளை வாங்கி அங்கே குடியேறி நீண்ட காலமாக வாழ்ந்தார்கள். சுனாமியின் போது ஒட்டுமொத்தமாக எல்லோரும் இறந்து போனார்கள். மொரிசியஸ் நாட்டில் தீவுகளை மிகச்சிறிய தொகைக்கு (சட்ட தேவைகளுக்கான தொகை) நூறு வருடங்களுக்கு குத்தகைக்கு தருவார்கள். அதற்கான நிபந்தனை மக்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நிறுவனம் ஒன்றை அங்கு அமைக்க வேண்டும் என்பதாகும். தமிழர்களும் இந்துக்களும் நிறைந்த அளவில் வாழும் நாடு இது. வசதியான நாடு. முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் முதன்முதலில் அமைக்கப்பட்ட நாடு. அமரிக்க கரிபியன் தீவு ஒன்றை யாழ் நகரில் பிரதான வீதியில் கடை வைத்திருந்த கனடிய தமிழர் ஒருவர் விலைக்கு வாங்கி வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.

சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லும் சாத்தியம் இல்லை ; சுமந்திரன்

3 months 1 week ago
சர்வதேச நீதிமன்றில் தனிநபர்கள் கூட ஒரு நாட்டின் மீதோ அல்லது அதன் அதிகாரிகள் மீதோ வழக்கு போடலாம். ஆனால் நீதிமன்ற அலுவலகம் விண்ணப்பத் தவறுகளை கண்டு பிடித்து இந்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு நீதிமன்றுக்கு பரிந்துரைக்கும். இதற்கு காரணம் பின்னணியில் ஒரு பலம் பொருந்திய நாடு விண்ணப்பத்துக்கு ஆதரவு வழங்காமை. ஒரு பலம் பொருந்திய நாடு விண்ணப்பத்துக்கு ஆதரவு வழங்கினால் விசாரணை ஆரம்பம் ஆகும். அதற்கு பின்னணியில் உள்ள நாடு செலவுகளை பொறுப்பேற்கும். விசாரணைக்கு குற்றம் செய்த நாடு ஒத்துழைக்காது. தனக்கு ஆதரவான பலம் பொருந்திய நாடு மூலம் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு விசாரணையை குழப்ப பார்க்கும். நீதி மன்ற முடிவின் படி சிலரை கைது செய்ய உத்தரவிட்டால் அல்லது நட்டஈட்டுக்கு உத்தரவு கிடைத்தால் மேற்படி குற்றம் செய்த நாடு அந்த உத்தரவுகளை அலட்சியம் செய்யும். பின்னணியில் இருந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னுக்கு நிற்கும். உதாரணமாக ஐ.நா. வில் வேறு விடயங்கள் வாக்களிப்புக்கு வரும்போது தனது நட்புநாடுகளை பின்னணியில் இருந்த நாட்டுக்கு பாதமாக வாக்களிக்க தூண்டும். இவ்வாறான நிலையை தவிர்க்க பெரும்பாலான நாடுகள் சர்வதேச விசாரணைகளுக்கு பின்னணியில் இருக்க தயங்குகின்றன.

பாலைவன தடங்கள்

3 months 1 week ago
இப்படி இந்த வேலை ஒருமாதம் சுழன்றது அந்த வேலை ஒப்பந்தம் முடிவடைய மீண்டும் அந்த ஆட்கள் பிரிக்கும் இடத்துக்கு சென்றோம் எல்லோரும். நீ ஒரு ஹோட்டலுக்கு வேலைக்கு போ உன்னுடன் இவனையும் கூட்டிக்கொண்டு போ என என்னையும் இன்னொரு நண்பனையும் ஒரு சாரதியிடம் இடி ஆமின் ஒப்படைத்தான் சாரதியோ உங்கள் பெட்டி படுக்கைகளை எடுங்கள் நீங்கள் இனி கேம்பில் தங்க தேவையில்லை அந்த ஹோட்டலில் தங்கலாம் என்று சொன்னான் பெட்டி படுக்கைகளை எடுத்து நானும் இன்னொரு நண்பனும் புறப்பட்டோம் அங்கே போனதும் அங்கே எங்களை போன்ற இன்னும் 3 அடிமைகள் பக்கத்து ஊர்க்காரர்கள் இருந்தார்கள் வரவேற்றார்கள் மற்றவர்கள் வேற வேற நாட்டுக்காரர்கள் அறிமுகம் ஆனோம் அடேய் ஏன்டா இங்க நீங்க வந்த நீங்கள் பெண்ட கழட்ட போறானுகள் உங்களுக்கு என்று சொன்னார்கள். என்னடா வெளிநாடு எப்படியெல்லாம் நம்மளை புரட்டி வதைக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாலும் முதலாளி மேனேஜர் ஒரு தமிழர் வந்து நீங்க இங்க வாங்க என்று சொல்லி அங்கே தட்டுக்கழுவிக்கொண்டிருந்த ஒருவரை அழைத்து இவர்களை வேலையில் வச்சுக்கொள்ளுங்கள் என்றார் நானோ வந்த மற்ற நண்பனிடம் என்னடா செய்யுற?.. பொறுடா இந்த வேலையும் வேண்டாமென்றால் அவன் ஊருக்கு அனுப்பி போடுவான் அங்க போய் எப்படி கடனை கட்டுற இங்க என்ன வேலை செய்தாலும் ஆருக்கு? தெரியப்போகுது கொஞ்ச நாளைக்கு இருப்போம் பிறகு ஏதாவது ஒன்றை சொல்லி ஓடிடுவோம் என்று சொன்னான் ம் ஓம் எதுவும் சொல்லாமல் இருந்தேன் சாப்பிட்டு விட்டு றூமுக்குள் சென்று விடுங்கள் நாளை உங்களுக்கு வேலை யென்றார் சம்பளம் உங்க கம்பனி தரும் மேலதிக காசு நாங்கள் தருவோம் என்றார் (150) திர்ஹம் (ரூபா) கம்பனி 500+150 மொத்த சம்பளம் 650 x 35 (இலங்கை பெறுமதி) நீங்கள் கணக்கு பார்த்து கொள்ளுங்கள் இதுதான் மொத்த சம்பளம் எங்களுக்கு. ஹோட்டல் கம்பனிக்கு கொடுப்பது 3000 திர்ஹம் அவர்கள் அதை எடுத்துவிட்டு எங்களுக்கு கொடுப்பது வெறும் 500 மட்டும் எப்படி இந்த கம்பனிகள் ஊழியர்களின் வியர்வையை சுரண்டி வாழ்கிறார்கள் என்பது போக போக அறிந்து கொண்டேன். மத்திய கிழக்கில் நடக்கும் பாரிய ஊதிய கொள்ளை எனலாம் இது தெரியும் எல்லோருக்கும் ஆனால் கண்டு கொள்வதில்லை அரசாங்கம் தற்போது சாதாரண ஊழியர்களுக்கு இதுதான் சம்பளம் என்று சட்டம் போட்டதால் பல இந்திய கம்பனிகளுக்கு கொஞ்சம் தடுமாற்றம் வந்தாலும் சுரண்டல்கள் இருக்கத்தான் செய்கிறது அதாவது ஒரு நாளைக்கு வேலைக்கு செல்லாவிட்டால் இரண்டு நாழுக்குரிய சம்பளப்பணத்தை சம்பளத்தில்லிருந்து வெட்டி எடுப்பது அடுத்தநாள் காலை நேரம் பிரிக்கப்பட்டு வேலைக்கு வந்த நேரம் திடீர் சுகயீனம் ஒருத்தனுக்கு ஏற்பட வேரொரு இடத்துக்கு சாப்பாடு வேனில் கொண்டு போகும் வேலை எனக்கு கிடைத்தது மற்றவனுக்கோ டிஸ்வோசில் இருந்தானுகள் காரணம் நான் புதுசா வேலை பழகுவன் எனவும் பழைய ஆட்களுக்கு அந்த வேலை தெரியும் என்பதால் அவர்களை மாற்ற வில்லை அந்த மேனேஜர் அவனும் ஓர் கள்ளன் தான் என்பது போக போக நானும் தெரிந்து கொண்டேன் இந்தியாவில் இருந்து ஆட்களை எடுத்து ஹோட்டலுக்கு இந்திய காசு கணக்கு பார்த்து 10000 ரூபா மட்டும் தான் கொடுக்க வேண்டுமென நான் காதறிய சொன்னவர். அவர் மட்டும் லட்ச கணக்கில் உழைத்துகொண்டார். நாட்டை விட்டு ஓடியும் போனார் கொள்ளையடித்து விட்டு. மாதம் முழுக்க வேலை 2 நாட்கள் மட்டும் விடுமுறை நாங்கள் 5 பேர் மட்டும் இலங்கையர்கள் அவர்கள் எங்களை புலிகள் என்றே அழைத்துக்கொண்டார்கள் இலங்கையில் சண்டை அதிகமாக இருந்தததால் இப்படி இரண்டு மூன்று மாதங்கள் கழிய ஊருக்கு கொஞ்ச பணத்தையும் அனுப்பிவிட்டு ஒரு போண்காட்டை வாங்கி பூத்தில் நின்று கதைத்துவிட்டு ஒரு போணை அனுப்புறன் ஒருவரிடம் வாங்கி கொள்ளுங்கள் என சொல்லி விட்டு போட்டு மிஸ்டு கோல் கொடுங்கள் நான் எடுக்கிறேன் என காத்துக்கொண்டிருந்தேன் அன்றைய நாள் தான் 2004.12. 26 அதிகாலை போண் அழைப்பு வருமென காத்திருந்த எனக்கு சுனாமி என்ற சொல் மட்டும் டீவியில் முதன்மைச் செய்தியாக ஓடிக்கொண்டிருந்தது மற்ற நண்பர்களுக்கு ஊரில் எல்லோருக்கும் அழைத்துப்பார்த்தால் எந்த தகவலும் இல்லை டீவியின் கீழ் பகுதியிலும் செய்தியில் இலங்கையிலும் கரையோர பிரதேசங்களும் அனர்த்தத்துக்கு உள்ளாகி பலர் இறப்பு என்ற செய்தியுடன் நானும் இடிந்து போனேன். ஏனென்றால் எனது வீடும் சொந்தங்கள் அனைவரதும் வீடும் கரையோர பிரதேசங்களை அண்டித்தான் இருந்தது . தொடரும்.............

கலா

3 months 1 week ago
எங்கை புத்தனையும் கானவில்லை கலாவையும் கானவில்லை.எனக்கு கையும் ஓடுதில்லை காலும் ஓடுதில்லை.

சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லும் சாத்தியம் இல்லை ; சுமந்திரன்

3 months 1 week ago
"எனது நிலைப்பாடு - எனக்குத் தோன்றுகிறது - எனது தெரிவாக இருக்கின்றது - என்றே கூறியிருந்தேன் " இப்படி தான்தோன்றித்தனமாக அடுக்கிக் கொண்டு போகிறார். அண்மையில் பெரியவர் சம் கடும் நோய்வாய்பட்ட பின்னர் சிறியவர் சும் மின் தொனியில் அகங்காரம் சிறிது அதிகமாகவே தெரிகிறது. இது போன்ற முக்கிய விடயங்களில் தனிமனிதனால் அறிக்கை விடவும்முடியாது முடிவுகளை எடுப்பது சரியாகவும் இருக்காது. இப்போது எனது கவலை இனப்பிரச்சினை தீருமா தீராதா என்பதில்லை தமிழினத்துக்கு வேண்டியதை கேட்டுப்பெறுவதற்கோ அல்லது குறைந்தபட்சம் கொடுப்பதை வாங்கித்தரவோ தமிழ் அரசியல்வாதிகளிடம் போதிய அறிவும் சாணக்கியமும் இருக்கிறதா அல்லது எல்லாவற்றையும் சொதப்பி கோட்டைவிட்டுவிடுவார்களா என்பதே.

சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லும் சாத்தியம் இல்லை ; சுமந்திரன்

3 months 1 week ago
அவர் என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறார்? தன்னால் எது முடியுமோ அல்லது சிங்களம் எதைச் செய்வதற்கான சாத்தியகூறு இருப்பதாக அவர் நினைக்கிறாரோ, அதைச் சொல்கிறார். நாங்கள் கேட்டுப் பெறும் நிலையினைத்தாண்டி, அவர்களாகத் தரும் தீர்வுகளுக்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையினை அடைந்திருக்கிறோம் என்பதைப் பூடகமாகச் சொல்கிறார். ஒருவகையில் உண்மையும் அதுதானே?

வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..

3 months 1 week ago
பாரட்டுக்கள் மனோஜ், கிரிஷாந்தி. இப்படியான கடினமான பகுதிகளுக்கு வைத்தியர்கள் வர விரும்புவதில்லை. இவர்களையும் சிங்கள உளவாளி என்று சொல்லி விடுவார்களோ என பயமாக்கிடக்கு

செயற்கையாக உருவாக்கப்பட்ட தென்கொரிய நிலநடுக்கம் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்?

3 months 1 week ago
புல், பூடு, புழு, மரம், மிருகம், பறவை, பாம்பு, கல், மனிதன் இவை அனைத்தும் செயற்கையாகக் கண்டுபிடித்தபின்பு.....!! உயிருள்ள இவை அனைத்தும் உலகில் எதற்கு....?? 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.' 'அறிவும் அளவுக்கு மிஞ்சினால் அழிவுதான்.'

தென்பகுதி மீனவர்களால், வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கவலை….

3 months 1 week ago
தென்பகுதி மீனவர்களால், வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கவலை…. April 8, 2019 முல்லைத்தீவில் தங்கி இருந்து கடலட்டை பிடிக்கும் தொழில் செய்பவர்களால் தமது வலைகள் அறுக்கப்பட்டு சேதமாக்க படுவதனால் தமது வாழ்வாதராம் கேள்விக்கு உள்ளாகியுள்ளதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவில் தங்கி நின்று கடலட்டை பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். தமது தொழிலுக்காக நவீன இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். குறித்த மீனவர்கள் முல்லைத்தீவில் இருந்த காங்கேசன்துறையை அண்டிய யாழ்.குடா கடல் பகுதிக்கு வந்தே கடலட்டை பிடிக்கும் தொழில் செய்கின்றனர். அவர்கள் தாங்கள் தங்கியுள்ள பகுதியில் இருந்து தொழில் செய்யும் பகுதிக்கு சென்று வரும் போது , வடமராட்சி கிழக்கு கடலில் தொழில் செய்யும் மீனவர்களின் வலைகளை அறுத்து சேதமாக்குவதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். அது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் , தென்னிலங்கை மீனவர்கள் , நாங்கள் தொழில் செய்யும் கடற்பரப்பில் தாறுமாறாக தமது படகுகளை செலுத்தி எமது வலைகளை சேதமாக்கு கின்றார்கள். அதனால் ஒவ்வொரு தொழிலாளிகளினதும், முரல் வலைகள் உட்பட வலைகள் 5 தொடக்கம் 10 வெட்டுக்கள் தினமும் விழுகின்றன. இவ்வாறாக தினமும் தொடர்ந்து வலைகள் சேதமாக்கப்பட்டால் நாம் தொழிலை முழுமையாக கைவிட வேண்டிய நிலைமையே ஏற்படும். எனவே எமது வாழ்வாதாரத்தை பெருக்கவும் , தொழிலை பாதுகாக்கவும் நடவடிக்கையை உரிய தரப்பினர் எடுக்க வேண்டும். கடலட்டை தொழில் செய்வோர் , அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட இடத்திலையே தொழில் செய்ய ஆவன செய்ய வேண்டும் இல்லை எனில் வடக்கில் இருந்து கடலட்டை தொழில் செய்யும் தென்னிலங்கை மீனவர்களின் அனுமதிகளை இரத்து செய்து அவர்களை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கோரியுள்ளனர். அதேவேளை தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை தொழில் செய்வதற்கு கடற்தொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தால் அனுமதிகள் வழங்கப்பட்டு உள்ளமையால் , அந்த விடயத்தில் தம்மால் தலையிட முடியாத நிலை காணப்படுவதாக யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைகள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். http://globaltamilnews.net/2019/117847/

கோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு….

3 months 1 week ago
கோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு…. April 8, 2019 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கெதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படுகொலைச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகளே இவ்வாறு கோத்தாபய ராஜபக்ஸவுக்கெதிராக சிவில் வழக்கொன்றை அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தனிப்பட்ட பயணமொன்றினை மேற்கொண்டு அமெரிக்காவுக்குச் சென்றுள்ள கோத்தாபய எதிர்வரும் 12 ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பார் என்னும் நிலையில் மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/117836/

மாகாண சபைத் தேர்தல் – உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோர வேண்டுகோள்…

3 months 1 week ago
மாகாண சபைத் தேர்தல் – உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோர வேண்டுகோள்… April 8, 2019 மாகாண சபைத் தேர்தலை, எந்தச் சட்டத்தின் கீழ் நடத்தமுடியும் என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தினைக் கோருமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையினை கடிதம் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனாவிடம் விடுத்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை, எந்த சட்டத்தின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில், சட்டரீதியிலான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்பதால், அதனைத் தெளிவுப்படுத்திக் கொள்வதற்கே மேற்படி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நிலைமையை ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான இயலுமையும் ஜனாதிபதிக்கே உள்ளதெனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தினை ஜனாதிபதியால் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படமுடியும் என்பதனால் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/2019/117831/

“உலகின் முதலாவது 50x Zoom உடனான Leica Quad Camera”கொண்ட Huawei P30 Pro இலங்கையில் அறிமுகம்

3 months 1 week ago
அதற்கு முன் 2002ல் நோக்கியா 8850.. அதன் பின்னர் சாம்சுங் கேலக்ஸி 2012 😋 சாம்சுங் காலக்ஸி திடீரென உயிரை விட்டுவிட்டது. வேறு வழியின்றி சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றால் "இன்னமுமா இதை உபயோகப்படுதுகிறீர்கள்..? சார், நீங்கள் இப்படியிருந்தால் நாங்கள் எப்படி பொழைப்பை ஓட்டுவது..?" என சிரித்தார், வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி. காரணம் கேட்டால், "மதர் போர்டு போச்சுது, நீங்கள் வேறு கைப்பேசிதான் வாங்க வேண்டுமென"க் கூறிவிட்டார். அந்த பழுதான கைப்பேசியை இன்னமும் வைத்துள்ளேன், பொழுது போகவில்லை என்றால் அதை பிரித்து மேய்வதுதான் வேலை..!
Checked
Sun, 07/21/2019 - 06:54
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr