புதிய பதிவுகள்

மலரும் நினைவுகள் ..

3 months 1 week ago
தேயிலை உற்பத்தி மூலம் சிறிலங்கா ஈட்டும் வருமானத்துக்கு இந்த சிங்கள அரசு எவ்வளவோ செய்திருக்கலாம். அவர்கள் தமிழர்களாக இருப்பதாலோ என்னவோ இன்று ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு கூட எத்தனை போராட்டங்களை செய்ய வேண்டியுள்ளது.

2009 இனவழிப்புப் போரில் ஐ. நா ஆற்றிய பங்கு

3 months 1 week ago
புலிகளும் எம்மவர்கள் தானே ...தாங்கள்,தங்களுடைய மக்களுக்காய் போராடும் போது அந்த மக்கள் தம்மை விட்டு போவது பிழை என்று அவர்கள் நினைத்திருக்கலாம் ...தவிர புலிகளும் தாங்கள் இப்படி வந்து இறுகுவோம் என்று எதிர் பார்த்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்

2019 ஐ.பி.எல். ரி-20 தொடர் செய்திகள்

3 months 1 week ago
அல்ஸாரியின் சிறப்பான பந்து வீச்சால் 96 ஓட்டங்களுக்குள் முடங்கியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்தில் இடம்பெற்ற போட்டியில் அல்ஸாரியின் சிறப்பான பந்து வீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. நாணய சுழட்சியில் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் தலைவர் புவனேஷ்வர் குமார் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் குயிண்டன் டி கொக்கும் களமிறங்கினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி மும்பை அணியினர் ஓட்டங்களை எடுக்க திணறினர். ரோகித் சர்மா 11 ஓட்டத்துடனும் டி காக் 19 ஓட்டத்துடனும், சூர்யகுமார் யாதவ் 7 ஓட்டத்துடனும், இஷான் கிஷன் 17 ஓட்டத்துடனும், குருணால் பாண்டியா 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழ்ந்தனர்.. மும்பை அணி 65 ஓட்டங்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஹர்திக் பாண்டியா 14 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ராகுல் சாஹர் 10 ஓட்டத்துடன் வெளியேறினார். பொலார்ட் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களை எடுத்துள்ளது. பொலார்ட் 26 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 46 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் அணி சார்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டும், மொகமது நபி, சந்தீப் சர்மா, ரஷித் கான், புனவேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.. இதனையடுத்து 137 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களமிறங்கியது. மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஐதராபாத் அணி வீரர்கள் 96 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தனர்.. மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய அல்ஸாரி 3.4 ஓவரில் 12 ஓட்டங்களை மாத்திரம் விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். http://www.virakesari.lk/article/53528

அமேசான் நிறுவனர் விவாகரத்து - 35 பில்லியன் டாலர்கள் இழப்பீடாக வழங்குகிறார்

3 months 1 week ago
சவூதி பத்திரிகையாளர் கசோக்கி வேலை செய்தது உந்த ஜெப்பின் பத்திரிகையான நியூயோக் டைம்ஸ் என்று நினைக்கிறேன்...அந்த பத்திரிகையில் தான் சவூதி அரசினை பற்றி கசோக்கி கேவலமாய் எழுதி வந்தாராம்....அதனால் கோபமான சவூதி அரசாங்கத்தினால் ஜெப்பின் காதல் லீலைகள் வெளியே வந்ததாம் என்று கேள்விப் பட்டேன் 😀

திருக்கோணேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா!!

3 months 1 week ago
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று இடம் பெற்றது. https://newuthayan.com/story/13/திருக்கோணேஸ்வரர்-ஆலய-தேர.html

இந்து சமயத்துக்கு எதிரான வன்முறைகள்- யாழில் உணவு ஒறுப்புப் போராட்டம்!!

3 months 1 week ago
இந்து சமயத்துக்கு எதிரான தொடர் வன்முறைகளை கண்டித்து இந்து அமைப்புக்களின் கூட்ட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மருதனார்மடம் ஆஞ்சனேயர்அடையாள உண்ணா விரத போராட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “சைவர்களின் பரந்த மனப்பாங்கை பலவீனமாக கருத்தாதே”,”அந்நிய மதத்தினரின் மதமாற்றம் தமிழின அழிப்பின் இன்னொரு வடிவமா”,”மத குருவின் மத வெறிக்கு நாடாளுமன்றத்தில் பரிந்துரையா” போன்ற பதாகைகள் போராட்ட இடத்தில் தொங்க விடப்பட்டுள்ளன. https://newuthayan.com/story/11/இந்து-சமயத்துக்கு-எதிரான.html

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் படுகொலை

3 months 1 week ago
பிரித்தானியாவின் ஹாரோ தென் பகுதியில் நேற்றைய தினம் உயிரிழந்தவர் இலங்கை தமிழரான நாற்பது வயதான விமல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. .காலில் காயங்களோடு இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த நிலையில் காணப்பட்ட அவருக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காது அவர் இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று மாலை 3.20 மணியளவில் வட மேற்கு லண்டனில் ஹாரோ பகுதியில் வலம்புரி காஷ் அண்ட் கரி என்ற கடையில் ஒருவர் கத்திக்குத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் அந்த பகுதியில் கத்தியுடன் ஓடித்திரிந்த ஒருவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கத்திக்குத்துக்கு உள்ளானர் மீட்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து , இறந்தவர் தமது கடைக்கு ஓடி வந்து கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டதாகவும் அரை மணி நேரம் கழித்தும் வெளியே வராத காரணத்தால் தாம் அங்கு சென்று பார்த்த போது அவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் கடையின் பணியாளர் தெரிவித்துள்ளார். மேலும் எல்லா இடங்களிலும் இரத்தம் காணப்பட்டதாகவும் உடனே பொலிசாருக்கும் நோயாளர் காவு வண்டிக்கும் தான் தகவல் கொடுத்ததாகவும் தெரிவித்தார். . தமது சி.சி.டிவி கமராக்களை பொலிசார் பார்வையிட்டதாகவும் அதில் உயிரிழந்தவர் - காலில் இரத்தக் காயத்துடன் சாதாரணமாகவே நடந்து சென்றது பதிவாகியுள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் தமது கடைக்கு அருகிலுள்ள பலசரக்குக் கடையில் வேலைபார்த்து வந்தவரெனவும் எப்பொழுதும் தமது கடைக்கு வந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருப்பார் எனவும் தெரிவித்துள்ள கடை உரிமையாளர் அவர் நல்ல மனிதன் என்றும் வன்முறைகளில் ஒருபோதும் ஈடுபடாதவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர் ஒரு இலங்கை தமிழர் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை இவரது மரணம் குறித்து பிரேதப் பரிசோதனையின் பின்னரே தீர்மானிக்க முடியும் என ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது கத்தி பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து இன்னமும் அறியப்படவில்லை என்றும் வேறு வகையான ஆயுதங்கள் எவையும் சம்பவ இடத்துக்கு அருகில் காணப்படவில்லை எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதொடு சம்பவம் தொடரிபில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.. http://www.virakesari.lk/article/53522

'ஈழத்தில் ஏற்பட்டது போல் தமிழகத்தில் ஏற்படும்' - சீமான்

3 months 1 week ago
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்த நாம் தமிழர் கட்சி இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடுகிறது. தங்கள் அரசியல் நிலைபாடு, கொள்கைகள், பிற கட்சிகள் மீதான பார்வை, கச்சத்தீவு போன்ற விவகாரங்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிபிசி தமிழின் பிரபுராவ் ஆனந்தன் உடனான நேர்காணலில் இருந்து. கேள்வி: 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்தது. ஆனால் அதிமுக-வை ஆதரித்தது. தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதற்கு காரணம் என்ன? பதில்: 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளையும் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்தோம். ஒரு போர் தந்திரத்திற்காக அம்மையார் ஜெயலலிதாவை பயன்படுத்தி காங்கிரஸ் பாஜகவை வீழ்த்தினோம். இது போர் உத்தி. ஆனால் தற்போது நாங்களே வலிமையுடன் உள்ளோம். எனவே இந்த முறை நாங்கள் தனியாக களம் கண்டு வீழ்த்துவோம். கேள்வி: நாம் தமிழர் கட்சி சார்பில் 50 சதவீத பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் அது அரசியல் தந்திரமா? பதில்: இதில் அரசியல் வியூகம், தந்திரம் என்பது ஒன்றும் இல்லை. இது ஒரு சமூகப் பொறுப்பு; பிறவிக்கடன். பெண்கள் மதிக்காத நாடு பெருமை பெற்றதில்லை. பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் கேள்வி: வேளாண் துறையை காக்க நாம் தமிழர் கட்சி என்ன நடவடிக்கை எடுக்கும்? பதில்: வேளாண் துறையை நவீன மையமாக்க நிச்சயம் செயல்படுவோம். விவசாயத்தை பெருக்குவோம். வேளாண்மையை அரசுப் பணியாக மாற்றி அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது போல் வேளாண் விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்குவோம். கேள்வி: தமிழ் மண்னை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என சீமான் சொல்கிறார். இது ஃபாசிசம் கிடையாதா? பதில்: இது ஃபாசிசம் கிடையாது. ஒரு தேசிய இன உரிமையை காப்பற்ற வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். மாநிலங்களை பிரித்ததன் நோக்கம் அந்தந்த மொழி பேசும் மக்கள் அந்த மாநிலத்தை ஆள வேண்டும் என்பதற்காக. கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் கேரள மாநிலத்தில் முதல்வர் வேட்பாளராக பேட்டியிட முடியுமா? இதே போல் மோதியை வேறு மாநிலத்தில் போட்டியிட செய்ய முடியுமா அது போல் என் இன மக்களை தமிழன் ஆள வேண்டும் என்பது ஃபாசிசம் கிடையாது. அது எங்கள் உரிமை. கேள்வி: திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் உள்ள வட மாநிலத்தை சேர்தவர்களுக்கு ஓட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அது குறித்து சீமானின் கருத்து என்ன? பதில்: திட்டமிட்டு வெளி மாநிலத்தவர்களைக் குடியமர்த்தி வருகின்றனர். கேரளாவில் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தால் மட்டுமே குடியுரிமை வழங்கப்படும். ஆனால் தமிழகத்தில் ஒரே மாதத்தில் பெற்றுவிடலாம். இது ஒரு பேராபத்தான போக்கு. தமிழர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஈழத்தில் ஏற்பட்டது போல் தமிழகத்தில் ஏற்படும். சொந்த நிலத்தில் அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கேள்வி:காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சீமான் எப்படி பார்க்கிறார்? பதில்: அது வெறும் வெற்று அறிக்கை. 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தபோது செய்யாத ஒன்றை இப்போது செய்வார்களா? இது மிகவும் வேடிக்கையாக உள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் செலுத்தபடும் என்கிறார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு வழங்குவார்கள்? வறுமையை முற்றிலும் ஒழிப்பது மட்டுமே ஒரு நல்ல தலைவனுக்கு அடையாளம். கேள்வி: கடந்த ஐந்தாண்டு காலத்தில் பாஜக ஆட்சியின் செயல்பாடு குறித்து உங்கள் பார்வை என்ன? பதில்: பாஜகவின் சாதனை என்று எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை. அதனை பாஜகவினரே ஒப்புக்கொள்கின்றனர். பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பொருளாதார கொள்கைகள், பண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்கவில்லை. அதனை விட்டு விட்டு புல்வாமா தாக்குதலில் அந்நிய நாட்டியிடம் இருந்து இந்தியாவை காப்பற்றி விட்டதாக ஒற்றை விஷயத்தை முன் வைத்து வாக்கு கேட்கிறார்களே தவிர ஐந்தாண்டு சாதனையை முன் நிறுத்தி மக்களை சந்திக்கவில்லை. கேள்வி: நாம் தமிழர் கட்சி ஆட்சி பொறுப்பேற்றால் கச்சத்தீவு மீட்கப்படுமா? பதில்: வெளியுறவுக் கொள்கை,பாதுகாப்புக் கொள்ளை, கல்விக் கொள்கை ஆகியவற்றில் இரண்டு கட்சிகளும் (காங்கிரஸ், பாஜக) ஒன்றுதான். காரணம் கட்சத்தீவை மீட்போம் என கடல் தாமரை மாநாடு போட்டதும், மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கபடும் என அறிவித்தது அனைத்தும் கண் துடைப்பு. என்னைப் போன்றவர்களிடம் அதிகாரம் கிடைத்தால் கச்சத்தீவிவை மீட்பது என்பது ஒரு பெரிய பிரச்சனையே அல்ல. தமிழகத்தில் நடப்பது மத்திய அரசின் அடிமை ஆட்சி. ஆகையால் இவ்வாறான பிரச்சனையில் நடவடிக்கை எடுப்பதில்லை. திமுக, அதிமுக ஆகிய இரு அரசுகளும் தமிழர்களுக்கான அரசே கிடையாது. கேள்வி: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மதவாத அரசியல் செய்கின்றனவா? பதில்: தமிழகத்தை பொறுத்த அளவில் மதவாதம் மதத்திற்கு எதிர்வாதம் என்ற இரண்டை வைத்து அரசியல் நடத்தி வருகின்றனர். இரண்டையும் ஒழிக்க வேண்டும் என்பதே நாம் தமிழரின் நோக்கம். இன்று மதசார்பற்ற கூட்டணியில் உள்ள திமுக ஒரு காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. எனவே எல்லாமே போலியான எதிர்ப்பு நிலை. கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் ராகுலை பிரதமராக வேண்டும் என்கிறார்கள். ஆனால் கேரளாவில் ராகுல் காந்திக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துகின்றனர். எனவே கொள்கை வாதத்தில் முரணாக உள்ளது. https://www.bbc.com/tamil/india-47838990

கூட்டணி ஆட்சியா? தனிக்கட்சி ஆட்சியா? இந்தியாவின் நலனுக்கு ஏற்றது எது?

3 months 1 week ago
விக்னேஷ். அ பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதற்கு பதிலாக, இந்தியாவில், குறிப்பாக கடந்த சில தசாப்தங்களாக நடக்கும் தேர்தல்கள் ஆளுமைகளை முன்னிறுத்தி நடக்கின்றன. அரசியல் கட்சிகளும் தங்கள் கொள்கைகளைவிடவும் தங்கள் தலைவர்களையே முன்னிறுத்தியே பிரசாரம் செய்கின்றன. கூட்டாட்சி அமைப்பும், நாடாளுமன்ற மக்களாட்சியும் கொண்ட இந்தியாவின் சமீபத்திய சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களை நோக்கினால், அவை அதிபர் முறை அமலில் உள்ள நாடுகளில் நடக்கும் தேர்தல்களைப்போலவே தோன்றுகிறன. 'நேர்மையான தலைவர்களைத்' தேர்வு செய்ய வேண்டும் என்ற கோஷத்தைவிட 'வலிமையான தலைவரைத்' தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோஷம் நிலவி வருகிறது. இந்தியாவில் இனிமேல் மத்தியில் கூட்டணி ஆட்சிதான்; எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்று 1989 முதல் நிலவிய பரவலான கூற்று, 2014இல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மை பெற்ற பின்னர் வலுவிழந்தது மட்டுமல்லாமல் பலரது எதிர்பார்ப்பையும் கணிப்புகளையும் பொய்யாக்கியது. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு முக்கிய தேசியக் கட்சிகளின் கூட்டு வாக்கு விகிதத்துக்கு நிகரான வாக்குகளை குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே வலுவாக இருக்கும் பிற தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஆகியன பெற்றிருந்தாலும், சூழலை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டால், தங்கள் செல்வாக்கு அல்லது மேலாதிக்கத்தை உறுதி செய்துகொள்வதற்கான நம்பிக்கை அளிக்கும் ஒன்றாகவே அந்த முடிவுகள் தெரிந்தன. தற்போதைய 2019 மக்களவைத் தேர்தலிலும் எந்த ஒரு தேர்தலையும் போல மாநில மற்றும் பிராந்தியக் கட்சிகள் ஆகியவற்றுடன் கூட்டணிக் கணக்குகள் வகுக்கப்பட்டிருந்தாலும், ஒற்றைத் தலைமை, ஒரு கட்சி ஆட்சி ஆகிய முழக்கங்கள் ஒப்பீட்டளவில் கடந்த தேர்தல்களைவிடவும் கூடுதலாகவே உள்ளன. படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப்படம் ஆனால், ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை உள்ளிட்ட காரணிகள், 2014இல் தனிக்கட்சிக்கு பெரும்பான்மையைக் கொடுத்திருந்தாலும், 2019 மக்களவைத் தேர்தலில் எந்த ஒரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. கொள்கைத் திணிப்பு, தொடர்புடையவர்கள் அனைவரிடமும் கலந்தாலோசிக்காமல் முடிவுகளை கட்டாயமாக அமலாக்குவது, பிராந்திய, மத, மொழி ரீதியிலான பாரபட்சங்கள் மற்றும் குற்றங்கள் அதிகரிக்க தனிக்கட்சி அல்லது ஒரு பெரிய கட்சியால் கட்டுப்படுத்தப்படும் கூட்டணி அரசு மீதான விமர்சனங்களாக முன்வைக்கப்படுகின்றன. அதே வேளையில், முக்கியமான கொள்கை முடிவுகளை எடுப்பதில் தாமதம் அல்லது இயலாமை, நிலையற்ற ஆட்சி, பல கட்சிகள் அல்லது தலைவர்கள் தங்களை முன்னிறுத்திக்கொள்ளவும், தாங்கள் விரும்பும் வகையில் ஆட்சியை செலுத்த முயல்வது உள்ளிட்டவற்றால் நிர்வாகத்தின் செயல்திறனில் உண்டாகும் பாதிப்பு உள்ளிட்டவை கூட்டணி அரசுகள் மீதான விமர்சனங்களாக முன்வைக்கப்படுகின்றன. தனிக்கட்சி ஆட்சி அல்லது கூட்டணி ஆட்சி ஆகிய இரண்டில் நாட்டின் வளர்ச்சிக்கு எது உகந்தது என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார் கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருக்கும் சென்டர் ஃபார் டெவெலப்மென்ட் ஸ்டடீஸ் எனும் சமூக ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான கே.என்.ஹரிலால். படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப்படம் பன்முகத்தன்மை என்பதை தனது இயல்பாகவே கொண்டுள்ள இந்தியா போன்றதொரு நாட்டுக்கு வளர்ச்சி மற்றும் பங்களிப்பை உறுதிசெய்ய கூட்டணி ஆட்சியே சிறந்தது என்று கூறும் ஹரிலால், அதற்கான வாதங்களையும் அடுக்குகிறார். இந்தியாவின் இயல்பிலேயே கூட்டணி அரசுக்கான தேவை உள்ளது என்கிறார் அவர். தனியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு ஒரு கட்சி பெரும்பான்மை பெற்றாலும், நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே அந்தக் கட்சிகள் வெல்கின்றன. அதனால் சில பகுதிகளைச் சேர்ந்தவர்களே ஆட்சியில் பங்குகொள்ள முடிகிறது. அனைத்து பிராந்தியங்களையும் சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க கூட்டணி ஆட்சியே உதவும், என்கிறார் ஹரிலால். கூட்டணி ஆட்சியில் பங்குகொள்ளும் கட்சியின் பிரதிநிதி, தனது கட்சிக்கான வாக்காளர்கள் எந்தப் பகுதியில் உள்ளார்களோ அந்தப் பகுதிக்கு அதிக நிதி ஒதுக்குவது உள்ளிட்ட பாரபட்சங்களைக் காட்டவும், அதை அரசியல் காரணங்களுக்காக கட்டுப்படுத்தாமல் இருக்கும்போது மத்திய அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புள்ளதே என்று கேள்விக்கு, "தனிக்கட்சி ஆட்சியில் அமைச்சராக இருக்கும் ஒருவர் தனது சொந்த மாநிலத்திற்காக, பிற பகுதிகளுக்கு பாரபட்சம் காட்டவும் வாய்ப்புண்டு," என்றார். பல கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணி அரசுகளே கேரளாவில் கடந்த பல தேர்தல்களாக தொடர்ந்து அமைந்து வருகின்றன. அனைத்துப் பகுதிகளுக்குமான வளர்ச்சி மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியன இங்கு வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது என்று கூறும் ஹரிலால் கேரள மாநிலத் திட்டக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். பல கட்சிகள் ஒன்றாக ஆள்வதைவிட ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் அரசு நிலையாக இருக்கும் என்ற வாதம் குறித்து கேட்டபோது, "தொடக்க காலத்தில் கூட்டணி ஆட்சிகள் நிலையற்றவையாகவே இருந்தன. ஆனால், காலப்போக்கில் அது மாறி வருகிறது. எனினும், கூட்டணி அரசுகளை நிறுவுவதற்கான பொறியமைவு உருவாக்கப்பட வேண்டும், " என்கிறார் ஹரிலால். https://www.bbc.com/tamil/india-47830446

ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை: முதல்கட்ட ஆய்வு வெற்றி

3 months 1 week ago
மைக்கேல் ராபர்ட்ஸ் சுகாதார பதிப்பாசிரியர், பிபிசி நியூஸ் படத்தின் காப்புரிமை Getty Images குழந்தை பிறப்பதை தடுக்கும் ஆண்களுக்கான மாத்திரை ஒன்று மனித பாதுகாப்பு தொடர்பான முதல் கட்ட பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது என்று முன்னிலை மருத்துவ மாநாட்டில் பங்கேற்ற நிபுணர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விந்தணுக்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடுவதற்கு வடிவமைக்கப்பட்ட ஹார்மோன்களை கொண்டுள்ள இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட வேண்டியிருக்கும். ஆணுறை மற்றும் விந்தணுக்குழாய் நீக்க அறுவை சிகிச்சை (வஸக்டமி) போன்ற தற்போது ஆண்களுக்கு இருக்கின்ற குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளோடு இந்த மாத்திரையும் சேரவுள்ளது. ஆனால், இந்த மாத்திரை சந்தைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம் என்று 'என்டாக்டரின் சொஷைட்டியின்' ஆண்டுக் கூட்டத்தில் மருத்துவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் தேவைகளை நிறைவேற்றும் ஆவல் படத்தின் காப்புரிமை Getty Images பெண்களுக்கான கருத்தடை மாத்திரை பிரிட்டனில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியானது. ஆனால், அதேபோல ஆண்களுக்கு இத்தகைய ஒரு மாத்திரை கொண்டு வருவது ஏன் மிகவும் கடினமாக உள்ளது? ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கொண்டு வருவதற்கு சமூக மற்றும் வணிக விருப்பம் குறைவாக இருந்ததே இதற்கு காரணம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இத்தகைய ஒரு மாத்திரை சந்தையில் கிடைக்குமானால், பல ஆண்கள் அதனை சாப்பிடுவதை விரும்புவர் என்று கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது. 2011ம் ஆண்டு ஆங்கிலேய ரஸ்கின் பல்கலைக்கழகம் பிரிட்டனில் நடத்திய ஆய்வில், 134 பெண்களில் 70 பேர், தங்களின் ஆண் துணைவர் இந்த மாத்திரையை சாப்பிட மறந்துவிடுவர் என்று கவலைப்படுவதாக தெரிவித்துள்ளனர். உயிரியல் ரீதியாக, பாலியல் தேவைகளை நிறைவேற்றும் ஆவல் அல்லது ஆண்குறி விறைப்பை குறைக்காதவாறு ஹார்மோன் அடிப்படையிலான மாத்திரையை உருவாக்கும் சவால் சாத்தியமாகி வருவதை இது காட்டுகிறது. விந்தணு உற்பத்தி ஹார்மோன்களால் தூண்டப்பட்டு, ஆண்களின் விரைகளால் தெடர்ந்து விந்தணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஹார்மோன் நிலைகளை குறைக்காமல் இந்த விந்தணுக்கள் உற்பத்தி திறனை தற்காலிகமாக தடுப்பதால் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பதுதான் பிரச்சனை. ஆனால், எல்ஏ பயோமெட் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் பரிசோதனை செய்யப்படுகின்ற இந்த சமீபத்திய மாத்திரை, இந்த இலக்கை எட்டும் என்று நம்புவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 40 ஆண்களோடு நடத்தப்பட்ட தொடக்க பரிசோதனையின் "முதல் கட்டம்" திருப்தியாக உள்ளது என்று இந்த விஞ்ஞானிகள் 'என்டாக்டரின் 2019' கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். 28 நாட்கள் நடத்தப்பட்ட ஆய்வு 10 பேர் போலியான மாத்திரை சாப்பிட்டனர் 30 பேர் ஆண் கருத்தடை மாத்திரையான 11-பீட்டா-எம்என்றிடிசி சாப்பிட்டனர். போலி மாத்திரை எடுத்தவர்களை விட, ஆண் கருத்தடை மாத்திரை சாப்பிட்டவர்களிடம் விந்தணு உற்பத்தி செய்வதற்கான ஹார்மோன் நிலைகள் அதிகமாக குறைந்தது. பரிசோதனை காலத்திற்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது. ஆண்குறி விறைப்பு செயலிழப்பு பக்க விளைவுகள் இந்நேரத்தில் பெரிதாக எதுவும் இல்லை. லேசாகவே இருந்தன. இந்த சோதனையில் பங்கேற்ற ஐந்து ஆண்களில் பாலியல் தேவைகளை நிறவேற்றி கொள்ளும் ஆவல் குறைந்ததாகவும், இரண்டு பேரிடம் லேசான ஆண்குறி விறைப்பு செயலிழப்பு இருந்தாகவும் கூறப்படுகிறது. படத்தின் காப்புரிமை Getty Images ஆனால், பாலியல் செயல்பாடுகளில் குறைவு ஏற்படவில்லை. பக்க விளைவுகளின் காரணமாக இதில் பங்கேற்ற யாரும் மாத்திரையை எடுக்காமல் விட்டுவிடவும் இல்லை. அனைவரும் இந்த மாத்திரை மனிதருக்கு பாதுகாப்பாப்பானதா என்ற பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த ஆய்வு பணியை மேற்கொண்டுள்ள ஆய்வாளர்களான பேராசிரியர் கிறிஸ்டினா வாங் மற்றும் அவரது சகாக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், இந்த கண்டுபிடிப்புக்கள் பற்றி அவர்கள் எச்சரிக்கையாகவே உள்ளனர். "இரண்டு ஹார்மோன்களின் செயல்பாடுகளை ஒன்றாக இணைக்கின்ற இந்த மாத்திரை, பாலுணர்வை பாதுகாத்து அதேவேளையில், விந்தணுக்களின் உற்பத்தியை குறைக்கிறது" என்று அவர் கூறுகிறார். ஆனால், குழந்தை பிறப்பை கட்டுப்படுத்துவதற்கு போதிய அளவுக்கு வேலை செய்கிறதா என்று சோதிப்பதற்கு பெரிய அளவிலான, நீண்டகால ஆய்வுகள் அவசியம். உடல் ஜெல் ஹார்மோன் அடிப்படையிலான ஆண் கருத்தடை மாத்திரை ஒன்றை மட்டுமே பேராசிரியர் வாங் ஆய்வு செய்யவில்லை. ஆண்கள் உடலில் பூசக்கூடிய ஜெல் ஒன்றையும் இந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சர்வதேச அளவில் நடத்தக்கூடிய பரிசோதனையின் ஒரு பகுதியாக பிரிட்டனிலுள்ள ஆண்கள் இதனை சோதிக்க தொடங்குவர். படத்தின் காப்புரிமை Getty Images இதனை பயன்படுத்துவோர் தங்களின் முதுகிலும், தோள்களிலும் இந்த ஜெல்லை தடவ வேண்டும். தோலிலுள்ள நுண்ணிய துளைகள் வழியாக இது உடலுக்குள் உறிஞ்சப்படும். இந்த ஜெல்லிலுள்ள புரோகெஸ்டேன் ஹார்மோன், விந்தணு உற்பத்தியை அல்லது விந்தணு இல்லாத அளவுக்கு குறைத்து, விரைகளின் இயல்பான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை தடுக்கிறது. அதேவேளை டெஸ்டோஸ்டிரோனுக்கு பதிலாக உடலில் பூசப்படும் இந்த ஜெல், ஹார்மோனால் தூண்டப்படும் பாலியல் தேவைகளை நிறைவேற்றி கொள்ளும் ஆவலையும், பிற செயல்பாடுகளையும் அப்படியே பராமரிக்கிறது, இந்நிலையில், வாஷிங்டன் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் வாங், டாக்டர் ஸ்டெஃபானியே பேஜ் மற்றும் சகாக்கள், டிஎம்ஏயு என்ற இன்னொன்றையும் சோதனை செய்து வருகின்றனர். கருத்தடை மாத்திரைபோல ஆண்கள் இதனை ஒவ்வொரு நாளும் சாப்பிடலாம் என்று இவர்கள் கூறுகின்றனர். 100 ஆண்களிடம் நடத்தப்பட்ட சோதனைகள் அடுத்தக்கட்ட சோதனைகளுக்கு செல்லக்கூடிய அளவுக்கு பாதுகாப்பானது என்று முடிவுகளை தந்துள்ளன. மனநிலை கோளாறுகள் ஒவ்வொரு மாதமும் ஊசி மூலம் நீண்டகாலம் செயல்படும் குழந்தை பிறப்பை தடுப்பதற்கான முயற்சிகளை பிற விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து வருகின்றனர். படத்தின் காப்புரிமை Getty Images ஆனால், மனநிலை கோளாறுகள் அல்லது மன அழுத்தம் உள்பட பக்கவிளைவுகள் இருப்பதாக சில தொண்டர்கள் கூறியதால், இந்த ஊசி மருந்தின் பாதுகாப்பையும், செயல்திறனையும் பார்த்து, இரண்டாம் கட்ட ஆய்வில் ஆண்களின் பெயரை பதிவு செய்வதை அவர்கள் நிறுத்தியுள்ளனர். ஹார்மோன்களை செலுத்த விருப்பப்படாத ஆண்களுக்கு, விந்தணு ஆண்குறிக்கு செல்வதை நிறுத்துவதன் மூலம் விந்தணு செல்லுகின்ற பாதைகளை தடுப்பதற்கு வழிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர். இடது மற்றும் வலது விரைகள் ஆண்குறிக்கு விந்தணுவை அனுப்புகின்ற இரண்டு நாளங்களில் வசால்ஜெல் என்கிற பல்படிம பொருளை செலுத்துவது, ஹார்மோன் அல்லாத, மீண்டும் இயல்புநிலை அடையக்கூடிய, நீண்டகால ஆண்களின் கருத்தடை மாத்திரையாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை விலங்குகளில் மட்டுமே இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த சோதனைகளை செய்கின்ற விஞ்ஞானிகள் மனிதரிடம் பரிசோதனைகளை மேற்கொள்ள சமீபத்தில் நிதி ஆதரவு பெற்றுள்ளனர். சாத்தியமான சந்தை பிரிட்டன் மேற்கொள்ளும் சோதனைகளில் முன்னிலையிலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் அன்டர்சன், ஆண்களின் உடலில் பூசப்படும் ஜெல் கருத்தடை பற்றி பரிசோதிப்பார். ஆண்களும், அவர்களின் பெண் துணைவர்களும் கருத்தடைக்கு இன்னொரு தெரிவு இருப்பதை வரவேற்கவே செய்வர் என்பதற்கு சிறந்த சான்று இருந்தாலும், ஆண் கருத்தடை பற்றிய புதிய கருத்தை ஏற்பதில் மருந்து தொழில்துறை மொதுவாகவே இருப்பதாக இவர் குறிப்பிடுகிறார். "மருந்து தொழில்துறை சத்தியமான சந்தை பற்றிய சம்மதிக்கவில்லை என்றே நான் எண்ணுகிறேன்" என்று அவர் கூறினார். "இதுவொரு நீண்ட கதை. முதலீடு குறைவே இதன் ஒரு பகுதி" என்கிறார் அவர். சரிபார்க்கப்பட்ட வரலாறு தொழில்துறையில் குறைவான ஈடுபாடு காரணமாக, லாபம் ஈட்டாத அமைப்புகள் மற்றும் கழகங்களின் நிதி ஆதரவை விஞ்ஞானிகள் நம்பியிருக்க வேண்டியுள்ளதால், அதிக காலம் எடுத்துள்ளது. படத்தின் காப்புரிமை Getty Images இது பற்றி கருத்துக்கூறிய ஷிஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் ஆண் உறுப்பு நோயியல் பேராசிரியர் ஆலன் பாசே, "குழந்தை பிறப்பை தடுக்கும் மாத்திரை அல்லது ஊசியை உருவாக்குவது இதுவரை வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்ட வரலாற்றை கொண்டுள்ளது. எனவே, புதிதாக உருவாக்கப்பட்டவை பரிசோதிக்கப்படுவதை பார்ப்பது நன்றாகவே உள்ளது" என்று கூறியுள்ளார். "இந்த பரிசோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால், அதனை சந்தைக்கு கொண்டு வருவதற்கு மருந்து நிறுவனங்கள் போதிய ஆர்வம் காட்டுவது மிகவும் முக்கியமானதாக இருக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, ஆண் கருத்தடை மாத்திரையை சந்தைக்கு கொண்டு வருவதற்கு மருந்து நிறுவனங்கள் இன்னும் ஆர்வம் காட்டவில்லை. காரணங்களை முழுமையாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அறிவியலைவிட வர்த்தகத்தையே நான் சந்தேகிக்கிறேன் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/science-47829429
Checked
Fri, 07/19/2019 - 14:35
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr