புதிய பதிவுகள்

'பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது'

3 months 1 week ago
'பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது' 25 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGEORGES GOBET Image captionபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தங்கள் மீது இந்தியா இந்த மாதம் மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று உளவுத்துறையின் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளது பொறுப்பற்ற மற்றும் அபத்தமான கருத்துகள் என்று கூறியுள்ளது. எல்லைதாண்டி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவங்ளால் பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே உண்டான பதற்றம் தணிந்து வருவதாகத் தோன்றி வரும் சூழலில், இன்று, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஷா மஹ்மூத் குரேஷி இதைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தாக்குதல் ஏப்ரல் 16 முதல் 20 வரையிலான காலகட்டத்தில் நடக்க வாய்ப்புண்டு என்றும் தங்கள் கவலைகளை ஐ.நா பாதுகாப்பு அவையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளிடம் பகிர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் பாகிஸ்தானிடம் என்ன ஆதாரம் உள்ளது, எந்த நேரத்தில் இந்தியா தாக்குதல் நடத்தும் போன்ற தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை. புல்வாமா, பாலகோட் சம்பவங்களுக்கு பிறகு எதிர்கட்சிகளின் வியூகம் எப்படி மாறியுள்ளது? புல்வாமா தாக்குதல்: காங்கிரசுக்கு பின்னடைவும், பாஜகவுக்கு ஊக்கமும் தந்தது எப்படி? இது குறித்த தகவல்களை பிரதமர் இம்ரான் கான் நாட்டு மக்களிடம் பகிர்ந்துகொள்வார் என்று குரேஷி தெரிவித்தார். 'பொறுப்பற்ற மற்றும் அபத்தமான கருத்துகள்' இந்தப் பிராந்தியத்தில் போர்ப் பதற்றத்தை உண்டாக்கும் நோக்கத்துடன் கூறப்பட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் பொறுப்பற்ற மற்றும் அபத்தமான கருத்துகளை மறுப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத அமைப்புகளை இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தூண்டவே பொது வெளியில் பாகிஸ்தான் இவ்வாறு பேசுகிறது என்று இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள மறுப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியா மீது நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களில் தமக்கு இருக்கும் பொறுப்பில் இருந்து பாகிஸ்தான் தம்மைத் தாமே விடுவித்துக்கொள்ள முடியாது. தமது சொந்த மண்ணில் நடக்கும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நம்பகத்தன்மை மிக்க மற்றும் மாற்ற முடியாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு எதிராக தீர்க்கமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. காஷ்மீர் பதற்றங்கள் பிப்ரவரி 14 அன்று, இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய தாக்குதலில் இந்தியப் படையினர் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் பிப்ரவரி 27 அன்று, பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம் என்று தாம் கூறும் ஓர் இலக்கின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறியது. அடுத்த நாள் இந்திய விமானப்படை விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான், அதன் விமானியையும் சிறைபிடித்தது. பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி இந்தியா போர்ப் பதற்றங்களை அதிகரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியிருந்தார். சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் எஃப்-16 விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையின் பாகங்கள் என்று சில பாகங்களை இந்தியா காட்டியது. இந்த சம்பவங்களுக்குப் பிறகு சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு பாகிஸ்தான் வான் எல்லை மூடப்பட்டது. செயற்கைக்கோள் புகைப்படங்களில் சேதம் அதிகம் தெரியாததால், பாலகோட்டில் இருந்த தீவிரவாத முகாம் மீது இந்தியா நடத்திய தாக்குதலின் வெற்றி குறித்து கேள்விகள் எழுந்தன. கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil இந்தியக் கைதிகள் விடுதலை தங்கள் நாட்டில் உள்ள இந்தியக் கைதிகள் 360 பேரை விடுவிக்கப் போவதாக பாகிஸ்தான் வெள்ளியன்று தெரிவித்தது. அவர்களில் 100 பேர் ஞாயிறன்று விடுதலை செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான இந்திய மீனவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனையால் பல மாதங்களை பாகிஸ்தான் சிறையில் கழித்தனர். லாகூர் அழைத்துச் செல்லப்படும் அவர்கள் வாகா - அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என ஈதி ஃபவுண்டேஷன் எனும் பாகிஸ்தான் தொண்டு அமைப்பைச் சேர்ந்த சாத் ஈதி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/global-47846273

இந்தியா இன்னொரு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது.. பாக். குற்றச்சாட்டு!

3 months 1 week ago
இன்னும் 5 நாட்கள்தான்.. இந்தியா இன்னொரு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது.. பாக். பரபரப்பு குற்றச்சாட்டு! இந்திய விமானப்படை பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் என்று பாலக்கோடு உட்பட நான்கு இடங்களில் தாக்குதல் நடத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் 3 அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்தது. அதன்பின் பாகிஸ்தான் விமானப்படை இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்க முயன்றது. இதனால் பெரிய அளவில் போர் பதற்றம் நிலவி வந்தது.பாகிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தனின் விடுதலை தொடர்ந்து இந்த போர் பதற்றம் மொத்தமாக தணிந்தது.இந்த தாக்குதல்கள் குறித்தும் இப்போதும் நிறைய கேள்விகளும், மர்மங்களும் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேரடியாக புகார் அளித்து இருக்கிறார். இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும். எங்கள் உளவுத்துறை தகவல்கள் அப்படித்தான் தெரிவிக்கிறது.எப்போது தாக்குதல்: பெரும்பாலும் ஏப்ரல் 16-20க்குள் இந்த தாக்குதல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. எங்களுக்கு இதுகுறித்து உறுதியான தகவல்கள் வந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவில் ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு தாக்குதல் நடக்குமா என்பது குறித்து பலரும் சந்தேகம் எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.Read more at: https://tamil.oneindia.com/news/delhi/india-is-preparing-for-another-attack-says-pakistan-346175.html

சைக்கிள் கடை அப்பு

3 months 1 week ago
அந்த மனிசியை... பெடியள் போனாப் பிறகு, வரச் சொல்லியிருக்கலாம். ஹ்ம்ம்... அவசரத்தில், சில வேளை மூளையும் வேலை செய்யாமல்... தாங்களே... வலிய, அம்பிட்டு போகவேண்டி வந்திடும். செல்லத்துரை மாஸ்ரர், பக்கத்தில் பொக்ஸர் லோகநாதன் மாஸ்ரர், முன்னால் பக்கம் ஐங்கரநேசன் (மாகாண சபை அமைச் சராக இருந்தவர்) என்று... அந்த இடத்தில், மூன்று ரியூசன் வகுப்புகள் நடத்தும் இடம் இருந்தது.

பாலைவன தடங்கள்

3 months 1 week ago
தொடருங்கள் . நான் இன்னும் படித்து முடிக்கவில்லை. கருத்தெழுத நேரம் போதாமலுள்ளதால் பதிவிட முடியவில்லை. தொடருங்கள்.

தமிழன் நிலத்தில் தாமரை மலராது: சீமான் ஆவேசம்

3 months 1 week ago
மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி, 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேர்தலில் சீமான் போட்டியிடாமல், 40 தொகுதிகளுக்கும் தமிழர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார். அவர்களுக்காக தமிழகம் முழுவதும் சென்று சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார். தூத்துக்குடியில் நாம் தமிழர் சார்பில் கிறிஸ்டன்டைன் ராஜாசேகர் என்னும் வேட்பாளர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டார் சீமான். அப்போது பேசிய அவர், ''தண்ணீரில் வேண்டுமானால் தாமரை மலரலாம். தமிழன் கண்ணீரில் ஒருபோதும் மலராது. குளத்தில் வேண்டுமானால் மலரலாம்; தமிழன் நிலத்தில் தாமரை ஒருபோதும் மலராது. என் அம்மா சொல்வார். நம் தமிழர்கள் உடம்பில் படர்தாமரை வேண்டுமானால் மலரும்; பாரதிய ஜனதா தாமரை மலராது'' என்றார். https://tamil.thehindu.com/tamilnadu/article26761953.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

பாலைவன தடங்கள்

3 months 1 week ago
துபாய் மற்ற அரபு நாடுகளை விட பரவாயில்லை என நினைத்து இருந்தேன், ஆனால் அவர்களும் இப்பிடியான நடைமுறைகளை வைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கு!! உங்கள் வலியை புரிந்து கொள்கிறேன்.

தமிழர்களது பிரச்சினைக்கு சர்வதேச நாடுகள் தீர்வை வழங்காது – வரதராஜப்பெருமாள்

3 months 1 week ago
இந்தியாவும் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருக்கிறது.இருந்தும் ஆளை முற்றாக இறக்க முடியாமல் உள்ளது.

நான்கு தசாப்தங்களின் பின்னர் அமுலாகுமா மரணதண்டனை ?

3 months 1 week ago
நான்கு தசாப்தங்களின் பின்னர் அமுலாகுமா மரணதண்டனை ? ஜனாதிபதி திகதியை தீர்மானித்து விட்ட நிலையில் மரண தண்டனை அமுலாக்கம் குறித்த தர்க்கங்களின் பின்னணி தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் ஒரு சந்திப்பு. வரலாற்றுத் தர்க்கம் ஒரு மனிதன் சமூகத்திற்கு ஆபத்தானவனாக இருக்கிறான். பாவத்தை செய்கின்றான் என்றால் சமூகத்தின் நலன்கருதி அவனைக் கொன்றுவிட வேண்டுமென மதகுருவும் தத்துவஞானியுமான தோமஸ் அக்கியுனஸின் கருத்தை பிரதிபலிப்பவர்கள் மரண தண்டனையை மீண்டும் கொண்டு வருமாறு வற்புறுத்துகின்றனர். அது குற்றங்களைத் தடுக்கும் என்பதே அத்தகையவர்களின் பிரதான வாதமாகவுள்ளது. மரண தண்டனை விதித்தல் குற்றங்களை குறைக்கும் அல்லது குற்றம் புரியாதவாறு குற்றவாளிகளைத் தடுக்கும் என்று எங்குமே நிரூபிக்கப்படவில்லை. மரண தண்டனையானது மனிதகுலத்தின் கௌரவத்திற்கும் மனிதஉரிமைகளுக்கும் எதிரானது. மீண்டும் குற்றங்கள் இடம் பெறுவதை தவிர்க்கக் கூடிய திறனை மரண தண்டனை கொண்டிருக்கவில்லை. ஒரு தார்மீக மற்றும் ஒழுக்கநெறி அடிப்படையில் மரண தண்டனை நிறைவேற்றம் தர்மநெறிக்கு உகந்ததல்ல என்றும் அரசு மனித உயிர்களைப் பறித்தலாகாது என்றும் தர்க்கம் நிலவுகிறது. இலங்கையில் மரண தண்டனை இலங்கையில் மரண தண்டனை அமுலாக்கம் குறித்து பின்னோக்கிப் பார்த்தோமானால், இலங்கையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் இறுதியாக 1976 ஆம் ஆண்டு இடம்பெற்றது. மரண தண்டனை ஆணையில் கைச்சாத்திட்ட இலங்கையின் இறுதி ஜனாதிபதி வில்லியம் கோபல்லாவ ஆவார். 2012 நவம்பரில், தூக்குத் தண்டணையை இல்லாதொழிப்பது பற்றிய சர்வதேச மீளாய்வு காலப்பகுதியில் தூக்குத் தண்டனையை இல்லாதொழிப்பதைப் பரிசீலிக்குமாறு பல நாடுகள் இலங்கையை வலியுறுத்தின. கடந்த 43 வருடங்களாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாத போதிலும், இலங்கை நீதிமன்றங்கள் பிரதிவாதிகளுக்கு தொடர்ந்து மரண தண்டனை வழங்கி வருகின்றன. தற்போதைய தற்காலிகத் தடையில் உள்ள மரண தண்டனை ஆயுட் தண்டனையாக மாற்றப்படுகின்றது. நாட்டின் ஜனாதிபதியின் அவ்வப்போதைய முன்னெடுப்பாக மட்டுமே இச்செயற்பாடு நிலவி வருகிறது. இவ்வாறிருக்கையில், 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்துணிவாக வெளியிட்ட கருத்தால் மரணதண்டனை குறித்து இருவேறு கருத்துக்கள் மேலெழுந்து விவாதப்பொருளாக மாறியுள்ளன. வித்தியாவின் கொடூரம், சேயாவின் கொடூர மரணம் ஆகியவற்றுக்குப் பின்னர் மரணதண்டனையை அமுலாக்கும் கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்போவதாக 2015 செப்டம்பரில் ஜனாதிபதி மைத்திரி கூறினார். அத்துடன், போதைப்பொருளை இலங்கையிலிருந்து முற்றாக களையும் போராட்டத்தில் தொடர் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வியாபாரிகளுக்கு எதிராகவும், சிறைகளில் தண்டனைகளை அனுபவித்துக்கொண்டே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராகவும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் செயற்பாட்டினை மேற்கொள்ளப்போவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால பகிரங்கமாக அறிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரே அதிகளவான மரணதண்டனைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளனர். ஆனாலும் அவர்களை விடவும் ஒருபடி மேலே சென்று தன்னைக் கொலை செய்வதற்கு வந்த நபருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால மரண தண்டனை விடயத்தில் தற்போது அவர் கடுமையான போக்கைக்கடைப்பிடித்து வருகின்றமைக்காக பல காரணங்களை மறுதலிக்க முடியாதவாறு பொது வெளியில் முன்வைத்துள்ளார். போதைவஸ்து கடத்தலின் பின்னணி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளில் சிலர் போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சில பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் குறிப்பிட்டார் சட்டத்தை உருவாக்கும் பாராளுமன்றத்திலும் குற்றத்திற்கான தண்டனையை அனுபவிக்கும் சிறைச்சாலையிலும் நடைபெறும் விடயங்களால்; போதைப்பொருள் முக்கிய பேசுபொருளாக மாறிவிட்டது. வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து கொண்டு; போதைவஸ்து வர்த்தகம் தொடர்ந்து நடைபெறுகின்றது என்பது தற்போதைய பிரதான குற்றச்சாட்டாகின்றது. வெலிக்கடை சிறைச்சாலை நீதி அமைச்சின்; கீழாகவுள்ளது. சிறைச்சாலை ஆணையாளர், சிறைச்சாலை அதிகாரிகள் ஆகியோரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தண்டனைகளை அனுபவிக்கின்றனர். அவ்வாறிருக்கையில், கைதிகளினால் எவ்வாறு போதைப்பொருள் வர்த்தகத்தினை நிருவகிக்க முடிகின்றது என்பது முதலில் கண்டுபிடிக்கப்படவேண்டும் எனவே, முதலில் சிறைச்சாலை நிருவாகத்தில் காணப்படும் ஊழல்கள் மற்றும் நிருவாக சீர்கேட்டிற்கான காரணங்கள் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது. போதைப்பொருளைத் தயாரித்தவர்கள்இ நாட்டிற்குள் கடத்தி வந்தவர்கள் அதற்கு ஒத்தாசை வழங்குபவர்கள், அதை விற்பனை செய்தவர்கள் என்று இந்த பாரிய குற்றச் செயலுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் பலர் வெளியில் சுதந்திரமாக நடமாடித்திரிகின்ற நிலையில் அதை உடைமையில் வைத்திருந்தவர்கள் மாத்திரமே சட்டத்தின் பிரகாரம். தண்டிக்கப்படுகின்றார்கள். 2கிராமிற்கு மேற்பட்ட போதைப்பொருளை உடைமையில் வைத்திருப்பவர்கள் மாத்திரமே தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சட்டத்தில்; தெளிவாகக் குறிப்பிடப்படுவதால் உடைமையில் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் மரணதண்டனை விதிக்கப்படலாம் என்பதன் காரணமாக சமூக பொருளாதாரதளம் இல்லாத சிறுபான்மை சமூகத்தினரும் சமூகத்தில் குறைந்த வசதிகளை கொண்டிருக்கும் ஆட்களுமே பாதிக்கப்படுகின்றனர். மரண தண்டனை குறித்த வாதபிரதிவாதங்களுக்கு முன்னர் போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தின் பின்னணியில் செயற்படும் சுறாக்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும். உண்மையான சூத்திரதாரிகள் அதிகார பலம் மிக்கவர்களாகவே காணப்படுவர் என்பது யாவரும் அறிந்ததே. இருப்பினும் அந்த சவாலை உடைத்தெறிந்து சுறாக்களை கைதாக்குவதே மிக முக்கிய செயற்பாடாக்கப்படவேண்டும். கைதிகள் மாற்றம் வெலிக்கடை சிறைச்சாலையில் தொடர்ந்து போதைப்பொருள் வர்த்தகம் நடைபெறுவதை தடுக்க முடியாத அரசு தற்பொழுது போதைப்பொருள் குற்றச்சாட்டு சாட்டப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள கைதிகளை வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அங்குனகொலபெலச சிறைச்சாலைக்கு மாற்றியுள்ளார்கள். இந்தச் செயல்பாட்டிற்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் மரண தண்டனை, வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை உட்பட பல மனித உரிமை மீறல்களை மீறக் கூடிய ஒரு கொடூரமான மனிதாபிமானமற்ற தண்டனையாகும் என்றும் கடுமையான குற்றங்களை ஒடுக்குவதற்கான ஒரு சக்திவாய்ந்த மற்றும் நீண்டகாலக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் மனித உரிமை ஆணைக்குழுவின் தவிசாளர் கலாநிதி தீபிகா உடகம குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சாத்தியமா? பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நபர்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களல்;லர். குற்றவியல் சட்டக் கோவையின் கீழ் மரண தண்டனை அளிக்கப்பட வேண்டிய ஒரு குற்றத்திற்காக ஒரு நபர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படும்போது அத்தண்டனையானது, ஆயுட்கால சிறைத் தண்டனையாகும். இது அரசியல் எதிராளிகளை தியாகிகளாக்கிவிட வேண்டியதில்லை என்ற ஒரு விருப்பத்தினால் தூண்டப்பட்டிருக்கலாம். அல்லது குற்றவியல் சட்டக் கோவையின் 296ஆம் பிரிவின் கீழ் மரணத்தை விளைவித்ததாக தமிழ்பேசும் கைதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டால் எதிரிதரப்பு தமிழ்பேசும் ஜுரி சபை முன் விசாரணைக்கு கோரலாம் அவ்வாறான நிலையில் அரச தரப்பிற்கு சாதகமான தீர்ப்பு கேள்விக்குரியதாகிவிடும் என்பதனால் தவிர்க்கப்பட்டிருக்கலாம். பல வழக்குகளில் முப்படையினர் பொலிஸாருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்த வழக்குகளில் ஜுரி சபையை விசாரணைக்கு கோரக்கூடிய குற்றவியல் சட்டக் கோவையின் 296ஆம் பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்தனர். இவ் வழக்குகளில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட படையினர் சிங்களம் பேசும் ஜுரிசபையைக்கோரி அதன் முன் விசாரணை இடம்பெற்று பின்னர் விடுதலை பெற்றனர். கடந்த வருடம் கொழும்பு மேல் நீதிமன்றில் நடைபெற்ற ரவிராஜ் கொலை வழக்கில் எதிரிகளை சிங்கள ஜுரிசபை சுத்தவாளியாக அறிவித்ததையடுத்து எதிரிகள் விடுதலை செய்யப்பட்டனர். 1981ஆம்ஆண்டு சித்திரை மாதம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குட்டிமணி என அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன், தங்கத்துரை, ஜெகன் ஆகியோருக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த மரண தண்டனை தீர்ப்பிற்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்; கொழும்பு மேல் நீதிமன்றில் முதலாவது வழக்காக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுமீதான விசாரணை திகதி குறிப்பிடப்பட்ட நிலையில் 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் 1983ஆம் ஆண்டு ஆடி மாதம் 25ஆம் திகதி செல்வராஜா யோகச்சந்திரன், தங்கத்துரை, ஜெகன் ஆகிய மூவரும் மற்றைய தமிழ் அரசியல் கைதிகளும் கொடுரமாக கொலை செய்யப்பட்டனர். வாத குறை நிறைந்த நீதித்துறையின் விளைவு இலங்கையில் மரண தண்டனை ஒருபோதும் இல்லாதொழிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேல் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதி மன்றங்கள் கடும் குற்றங்கள் புரிந்தமைக்காக குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனைகளை விதிக்கின்றன. கொலையைத் தவிர, 2கிராமிற்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருத்;தல் அல்லது கடத்தல், அரசுக்கெதிராக யுத்தம் புரிதல், பொய்யான சான்றுகளை இட்டுக்கட்டுதல் உள்ளிட்டவை தூக்குத் தண்டனைக்குரிய வேறு ஒரு சில குற்றவியல் குற்றங்களாகின்றன. மரண தண்டனையை மீண்டும் கொண்டுவருவதற்கு எதிரான மிக முக்கியமான வாதமாக குற்றமற்ற அப்பாவிகளுக்கு குற்றத் தீர்ப்பு வழங்கப்படும் ஆபத்து உண்டு என்பதாகும். பல காரணங்களுக்காக குற்றமற்ற ஆட்கள் குற்றங்களோடு தொடர்புபடுத்தப்படலாம். பொய் சாட்சி வழங்குவதும் தமது சான்றுகளை சோடிப்பதற்கும் வாய்ப்புண்டு. குற்றமிழைத்தவர் குடும்பத்தின் ஓர் உறுப்பினராயின், ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் குற்றத்தோடு தொடர்புபடுத்தலாம். இது அரிதாக நடைபெறும் விடயமொன்றல்ல என்பதை வழக்குத்தொடுநர்கள் அறிவார்கள். பொலிஸாரும் விசாரணையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவு முதலிய ஒரு சில விசேடப் பிரிவுகளைத் தவிர, இலங்கைப் பொலிஸ் குற்றங்களைப் புலனாய்வு செய்வதில் கவலைக்கி;டமான விதத்தில் திறமையற்றதாகவுள்ளது. மரபணு மற்றும் கைவிரல் அடையாளம் ஆகிய விஞ்ஞான முறைகளைப்; பயன்படுத்துவது மிகக் குறைவாகவே உள்ளது. விஞ்ஞான நுட்பங்களை பயன்படுத்துவதற்கான வளங்கள் இலங்கையில் இல்லை. பிரதிவாதிகளும் அவரது சாட்சிகளும் கூறுவதை உறுதிப்படுத்த பொலிஸ் ஒருபோதும்; பிரதிவாதிகளை விசாரிப்பதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பொலிஸ் பிரதிவாதிகளின் வாக்குமூலங்களை பதிவதற்குக்கூட அக்கறை கொள்வதில்லை. இதற்கு வலு சேர்ப்பதுபோல, ஆட்களை பொய்க்குற்றங்களோடு சம்பந்தப்படுத்துவதாக பொலிஸாருக்கு எதிராக எண்ணற்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனைவிடவும் போதைப்பொருள் மற்றும் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் பொலிஸ் பொய்யாக ஆட்களை குற்றங்களோடு சம்பந்தப்படுத்திய கதைகள் பலவுள்ளன. குற்றமற்ற அப்பாவி மக்கள் மீது பொலிஸ் போதைப் பொருளை அல்லது குண்டுகளை பலாத்காரமாக திணித்த சம்பவங்கள் இருந்துள்ளதுடன், நியாயமற்ற விசாரணைகளின்போது குற்றமற்றவர்களின் உயிர்களும் பறிக்கப்படும் நிலை ஏற்படலாம். நீதிபதிகளுக்கும் வழக்குத் தொடுநர்களுக்கும் மற்றும் பிரதிவாதிகளின் வழக்கறிஞர்களுக்கும் இது நடப்பது நன்கு தெரியும். குறிப்பாக சம்பவமொன்றில் அடையாளம் காட்டுதல் சம்பந்தப்பட்டவிடத்து மனிதத் தவறுகள் நிகழக்கூடும். வழக்கு விசாரணைகள் மற்றும் மேன்முறையீட்டு நடைமுறை பாதுகாப்பு வழங்குகிறதென்று சிலர் வாதிடலாம். மேன்முறையீட்டு நடைமுறை மேன்முறையீட்டு நடைமுறை முடிந்து போனதும் மக்கள் பிழையாக குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட அல்லது பல வருடங்களுக்குப் பின்னர் புது சாட்சியங்கள் மேலெழுகின்ற அல்லது சந்தேகங்கள் எழுப்பப்படுகின்ற வழக்குகளை மீளாய்வதற்கு இலங்கையில் எவ்வித பொறிமுறையும் இல்லை. பிழையாக தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் தலையிட்டு, அல்லது சட்டத்தினால் விசேட பொறிமுறைகள் தாபிக்கப்பட்டு, பிழையாகக் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட அப்பாவி மக்கள் விடுவிக்கப்படுவது மாத்திரமின்றி, அவர்களுக்கு நட்டஈடும் வழங்கும் பாதுகாப்பான நடைமுறைகள் எவையும் இங்கு இல்லை. வழக்கறிஞரை நியமித்தல் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்த பின்னர் அந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு வரும் பொழுது எதிரிக்கு தமது சார்பாக வாதாட வழக்கறிஞரை நிதித்;தட்டுப்பாடு காரணமாக அமர்த்த முடியாவிடில், நீதிமன்றத்தினால் அவருக்காக எழுமாறியாக வழக்கறிஞர்கள் அமர்த்தப்படுவார்கள். அவ்வாறு அமர்த்தப்படும் சட்டத்தரணிகள் பெரும்பாலும் இளவயதினராகவும் பயிற்சியற்றவர்களாகவும் அனுபவமற்றவர்களாகவுமே இருப்பர். இக் காரணிகளால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பல சந்தர்ப்பங்களில் நீதி கிடைப்பதில்லை சட்டத் தொழில்வாண்மைத்துவத்தின் தோல்விகள் குற்றவாளி உரிய முறையில் பாதுகாக்கப்படாத பல சம்பவங்கள் உள்ளன. சிலவேளைகளில் சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரர் சார்பில் முன்வைக்க வேண்டிய வாதங்களை வழக்குகளில் (பாதுகாத்தல்) முன்வைக்காமல் விடுவதுண்டு அல்லது தவறுவதுண்டு. இவ்வாறு எத்தனையோ வழக்குகளை எனது அனுபவத்தில் காணக்கூடியதாகயிருந்தது. நீதிபதிகள் நீதிபதிகள் தவறிழைக்காதவர்கள் அல்லர். அவர்கள் தம் முன்னே இருக்கும் சாட்சியங்களின் அடிப்படையில் செயற்பட வேண்டியுள்ளது. சில வேளைகளில் பொய்யான சாட்சியங்கள் உண்மையானதென சமர்ப்பிக்கப்படலாம். மிகவும் புத்திகூர்மை மிக்க நீதிபதி கூட பொய்யான, புனையப்பட்ட சாட்சியங்களின் உண்மை தன்மையை கண்டறிய முடியாமல் போகலாம். சாட்சி தவறாகப் புரிந்து கொண்டுள்ளார் என்பதை அவரால் உணர்ந்துகொள்ள முடியாமல் போகலாம். நீதிபதிகளுக்கும் தமக்குரிய பாணியும் விருப்பு வெறுப்பும் உண்டு. சில நீதிபதிகள் குற்றவாளிக்கு நியாயமான விசாரணையொன்றை வழங்குவதோடு, அவர் கூறுவது உண்மையாக இருக்கலாம் என்று உணர்வார்கள். எனினும், பொலிஸார்; ஒருவித தவறும் செய்யமாட்டார்கள் என்று நம்பும் வேறு நீதிபதிகளும் உள்ளனர். ஒரு சில நீதிபதிகளின் திறமையும் பக்கச் சார்பின்மையும் எப்போதுமில்லாவிட்டாலும் சில வேளைகளில் கேள்விக்குரியதாக உள்ளன. மேன்முறையீட்டு நடைமுறை என்று வரும்போது, இந்த குறைகள் நிலவக்கூடும். எனினும், மேன்முறையீட்டு நீதிபதிகளுக்கு விசாரணை மட்டத்தில் உள்ள நீதிபதிகளுக்கு இருக்கும் அதே அனுகூலம் இருப்பதில்லை. விசாரணை நீதிபதிகளிடம் இருக்கும் அதே குறைபாடுகள் மேன்முறையீட்டு நீதிபதிகளிடமும் இருக்கலாம். புதிய சாட்சியங்கள் மேன்முறையீட்டில் ஒருபோதும் அனுமதிக்கப்படுவதில்லை என்பதோடு, பிரதிவாதிகள் தரப்பிலான தவறுகள் மிக அரிதாகவே நிவர்த்தி செய்யப்படும். மரண தண்டனையின் மாற்ற முடியாத விளைவுகள் பற்றி எண்ணும்போது நியாயமற்ற அல்லது அநாவசியமான ஆனால், குழுமியிருப்போரை மனம் குளிர வைப்பதற்காக வழங்கப்படும் பிழையான தீர்ப்புகளின் விளைவுகளை எதிர்நோக்கவேண்டியிருப்பவர்கள் ஒடுக்கப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும்தான் என்று கருதாமல் இருக்கமுடியாது. நடைமுறைச்சாத்தியம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கான இரண்டாவது மூல ஒப்பந்தம் ஐரோப்பாவைப் போன்று மரண தண்டனை இல்லாதொழிக்கப்படுவதைக் கோருகின்றது. நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின்; 11 ஆம் உறுப்புரையின் பிரகாரம் மரணதண்டனை கொடிய, மனிதாபிமானமற்ற தண்டனைக்கு ஒப்பானதாகும் என்று வாதிப்படுகின்றது. மறுபக்கத்தில் அரசியலமைப்பின் உறுப்புரை 11 ஆனது அடிப்படை உரிமைகள் பற்றிய இரண்டு உறுப்புரைகளுள் ஒன்றாகும். அவற்றின்;மீது எவ்வித வரம்புகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இறப்பதற்கு முன்னர் கைதி பெரும் துன்பம் அனுபவிக்கிறார். எனவே, அதுவே கொடிய நடத்துகைக்கு ஒப்பானதாகும் என்ற அடிப்படையில் சரியான மனநிலையில் உள்ள எவரும் இன்னொரு மனிதரை மரண தண்டனைக்குட்படுத்துவது மனிதாபிமானமற்ற அல்லது கொடிய செயல் அல்ல என்று கூறமுடியாது என்ற தர்க்கமும் உள்ளது. மனித உரிமைகள் கோணத்திலிருந்து பார்க்கும்போது, மரண தண்டனை பலரை முகம் சுளிக்க வைக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் முதல் மனித உரிமைகள், ஜனநாயக செயற்பாட்டு அமைப்புக்கள் அனைத்துமே இலங்கையில் மரண தண்டனை நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே போர்க்கொடி தூக்கியுள்ளன. அதேநேரம் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதிகள் போதைப் பொருள் குற்றங்கள் புரியும் குற்றவாளிகளாக இருப்பது பற்றி பல அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மைத்திரி கூறியதோடு, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் உறுதி பூண்டுள்ளதாகவும் கைதிகளின் பட்டியல் தயாராகிவி;ட்டதாகவும்; மரண தண்டனையை நிறைவேற்றும் தினத்தை தான் தீர்மானித்துவி;ட்டதாகவும் கடந்த முதலாம் திகதி பகிரங்கமாக பொது வெளியில் அறிவித்தார். இலங்கையில் நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் மரண தண்டனை நிறைவேற்றம் இடம்பெறக்கூடுமா? அல்லது வரும் வராதா? என்ற வினா எழுந்திருக்கையில், ஜனாதிபதியின் தீர்க்கமான அறிவிப்பு கவனிக்கத்தக்கதாகின்றது. அதற்கு மேலாக, நீதியின் வழமையான நியமம் மிகவும் பாரதூரமாக நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ள விசாரணைகளைத்; தொடர்ந்து ஆட்களை தூக்கு மேடைக்கு அனுப்புவதானது சிந்திப்பதற்கு மிகவும் கொடூரமான அம்சமென உணரப்படுமா? எழுத்தாளரும் தத்துவஞானியுமாகிய ஜே.ஆர்.ஆர் டோல்கின் கருத்துப்படி இறப்பதற்குப் பொருத்தமான பலர் வாழ்கின்றனர் அதேபோல வாழ்வதற்கு பொருத்தமான சிலர் இறக்கின்றனர். அவர்களுக்கு உங்களால் வாழ்வு கொடுக்க முடியுமா? ஆகவே, தீர்ப்பில் மரணத்தை வழங்குவதற்கு அதிகம் ஆர்வமாக இருக்காதீர்கள். இலங்கையில் உள்ள நீதிமுறையில் யார் தண்டிக்கப்படவேண்டும் யார்தண்டிக்கப்படக் கூடாது என்பதற்கான நியாயம்,ல்லை எனவே பழி தீர்ப்பதை விடுத்து உயிருககுக மதிப்பளிக்கும் கலாசாரத்தை தொடரவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் கோரியுள்ளமை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுமா? தொகுப்பு:- ஆர்.ராம் http://www.virakesari.lk/article/53530

2019 ஐ.பி.எல். ரி-20 தொடர் செய்திகள்

3 months 1 week ago
றபாடாவினால் தடுமாறிய பெங்களூர் – டெல்லி அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்கு! டெல்லி கப்பிடல்ஸ் அணிக்கு 150 ஓட்டங்களை பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஐ.பி.எல். தொடரின் 20 ஆவது லீக் போட்டியில் டெல்லி கப்பிடல்ஸ் அணியும் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. பெங்களூர் எம்.சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன் பிரகாரம் முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக விராத் கோலி 41 ஓட்டங்களையும் மெயின் அலி 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள பந்து வீச்சில் றபாடா 4 விக்கெட்களையும் கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதனை அடுத்து 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி பதிலளித்து ஆடவுள்ளது. http://athavannews.com/பெங்களூர்-தடுமாற்றம்-டெ/

மாற்று கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்கப் போவதில்லை – மொட்டு கட்சி

3 months 1 week ago
மாற்று கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்கப் போவதில்லை – மொட்டு கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் முன் நிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்கப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், “அடுத்து ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுகின்றமை இன்னும் உறுதியாகவில்லை. எமது கட்சி சுபநேரத்தில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும். எமது வேட்பாளர் தெரிவாகியிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அவர்களின் வேட்பாளர் யார் என்பதை கூற முடியாதுள்ளது. மைத்திரிபால சிறிசேனவும் இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக எங்கும் கூறவில்லை. எனவே அவர் போட்டியிடமாட்டார் என நான் கருதுகின்றேன். 52 நாட்கள் அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் அரசாங்கத்தின் பின்னால் சென்றமை தவறு என ஏற்றுக்கொள்கின்றோம். வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது எதிராக வாக்களிக்க நாம் முடிவு செய்தோம் அதனையே செய்து காட்டினோம். இனிமேலும் எவருடைய பேச்சையும் நம்பி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய போவதில்லை. எனவே பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது உறுதி. இதில் எவருடனும் சமரசம் இருக்க போவது இல்லை” என கூறினார். http://athavannews.com/மாற்று-கட்சிகளின்-ஜனாதிப/

தமிழர்களது பிரச்சினைக்கு சர்வதேச நாடுகள் தீர்வை வழங்காது – வரதராஜப்பெருமாள்

3 months 1 week ago
தமிழர்களது பிரச்சினைக்கு சர்வதேச நாடுகள் தீர்வை வழங்காது – வரதராஜப்பெருமாள் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு இந்தியாவோ அல்லது சர்வதேச நாடுகளோ தீர்வைத் தரும் என இனியும் எதிர்ப்பார்க்கக்கூடாது என்று வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். மேலும், இந்தியாவை தமிழர்களுக்கு சாதகமாக மாற்றும் செயற்பாடுகள் எதனையும் தமிழ்ப் பிரதிநிதிகள் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்தியாவை நம்பியோ சர்வதேசத்தை நம்பியோ நாம் இருக்கக்கூடாது. எமக்கான சரியான தலைவர்களை நாமே தெரிவு செய்ய வேண்டும். தற்போதைய தமிழ் தலைமைகள் மறைமுகமாக இந்தியாவின் எதிரிகளாக இருக்கின்றனர். தமிழ் பிரதிநிகளில் சிலர் தமிழர்களுக்கு எதிராக சர்வதேச சக்தியுடன் தொடர்பு வைத்துள்ளனர். 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில், இந்தியா சிங்கள மக்கள் குறித்து கவலைப்படவில்லை. ஆனால் தற்போது அந்நிலை மாறியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார். http://athavannews.com/தமிழர்களது-பிரச்சினைக்க/

சொந்தங்களை கையளித்த இடம் கண்ணீரில் மூழ்கியது

3 months 1 week ago
சொந்தங்களை கையளித்த இடம் கண்ணீரில் மூழ்கியது (3ஆம் இணைப்பு) இறுதி யுத்தத்தின்போது உறவுகளை கையளித்த இடமான முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டோர், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலிருந்து, வட்டுவாகல் பாலத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். இதன்போது ‘வட்டுவாகலில் கையளித்த எமது உறவுகள் எங்கே?’, இராணுவத்தினரின் கையில் கொடுத்த என் அப்பா எங்கே?’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் பேரணியாகச் சென்றனர். இந்த பேரணியில் பெற்றோர்கள் இளைஞர்கள் குழந்தைகளென உறவுகளைத் தொலைத்த பலரும் கலந்துகொண்டனர். கோசங்களை எழுப்பியவாறு வட்டுவாகல் பாலம் வரையில் சென்ற காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அங்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இதன்போது சொந்தங்களை கையளித்த இடத்தை காணாமலாக்கப்பட்டோரின் ஒறவுகள் கண்ணீரால் நனைத்தனர். இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி, இலங்கையுடன் சேர்ந்து சர்வதேசமும் தம்மை ஏமாற்றியுள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கூட்டமைப்பும் அரசிற்கு விலைபோயுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில் தம்மை ஏமாற்றிய அரசாங்கம், சர்வதேசம், கூட்டமைப்பு என அனைத்து தரப்பினருக்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்திருந்தனர். வட்டுவாகலில் கையளித்த எமது உறவுகள் எங்கே? – முல்லையில் பேரணி ஆரம்பம் (2ஆம் இணைப்பு) இறுதி யுத்தத்தின்போது உறவுகளை கையளித்த இடமான வட்டுவாகல் பாலத்தை நோக்கி பயணிக்கவுள்ள, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்த பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ‘வட்டுவாகலில் கையளித்த எமது உறவுகள் எங்கே?’ என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உறவுகளை கையளித்த இடத்தை நோக்கி பயணிக்கும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு உறவுகளை கையளித்த இடமான வட்டுவாகல் பாலம் வரையில் பேரணியாக செல்ல உத்தேசித்துள்ளதாகவும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த கவனயீர்ப்பு பேரணி, உறவுகளை கையளித்த வட்டுவால் பாலத்தில் முடிவடையவுள்ளதாக காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரிய சுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி, இலங்கையுடன் சேர்ந்து சர்வதேசமும் தம்மை ஏமாற்றியுள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கூட்டமைப்பும் அரசிற்கு விலைபோயுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில் தம்மை ஏமாற்றிய அரசாங்கம், சர்வதேசம், கூட்டமைப்பு என அனைத்து தரப்பினருக்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/அரசாங்கத்திற்கு-எதிர்ப்/

ஐ.நா. அதிகாரிகள் வவுனியா சிறைச்சாலைக்கு விஜயம்

3 months 1 week ago
ஐ.நா. அதிகாரிகள் வவுனியா சிறைச்சாலைக்கு விஜயம் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பிரதிநிதிகள் வவுனியா சிறைச்சாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஐந்து பேர் அடங்கிய குறித்த குழுவினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். வவுனியா சிறைச்சாலைக்குச் சென்ற ஐ.நா. அதிகாரிகள், சிறைச்சாலையில் உள்ள கைதிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். சுமார் 1 மணித்தியாலங்கள் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஐ.நா. அதிகாரிகள் குழு அங்கிருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் இந்த விஜயம் தொடர்பாக ஐ.நா. அதிகாரிகளிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோதும் எவ்வித கருத்துக்களையும் கூற அவர்கள் மறுத்துவிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் தமது விஜயம் தொடர்பாக செய்திகளை வெளியிட வேண்டாம் என ஐ.நா. அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பிரதிநிதிகள் நேற்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஐ-நா-அதிகாரிகள்-வவுனியா-ச/

வவுனியா வடக்கு சிங்களமயமாக்கப்படுகின்றது – தமிழ் தலைமை தடுக்கவில்லை

3 months 1 week ago
வவுனியா வடக்கு சிங்களமயமாக்கப்படுகின்றது – தமிழ் தலைமை தடுக்கவில்லை : April 7, 2019 வவுனியா வடக்கு பகுதி மிகவும் வேகமாக சிங்களமயமாக்கப்படுகின்றது. இதனை பற்றி வெறும் அறிக்கையினை மாத்திரமே அரசியல் பிரதிநிதிகள் வெளியிடுவதாகவும் அதனை தடுத்து நிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா வடக்கில் இலங்கையின் இனச்சிக்கல் தீவிரமடைவதற்கு முன்பாகவே சிங்களக் குடியேற்றங்களும் சிங்களமயமாக்கல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. எனினும் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப் பகுதியில், மிகவும் தீவிரமாக சிங்களமயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். பெரும்பான்மையின மக்கள் வவுனியா வடக்கில் திட்டமிட்டு குடியேற்றப்படுவதுடன் பாரம்பரிய தமிழ் கிராமங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டுகின்ற செயற்பாடுகளும் இடம்பெறுவதாக அப் பகுதி மக்கள் கூறுகின்றனர். இதேவேளை குறித்த பகுதியில் குடியேறும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து அரசு ஊக்கப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பௌத்த சின்னங்களை நிறுவுதல், காடுகளை அழித்து குடியேற்றல், தமிழ் மக்களின் பாரம்பரிய கிராமங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டல் என்று தொடர்ச்சியாக சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வவுனியா வடக்கை சிங்கள மயமாக்குவதன் மூலம், முல்லைத்தீவு வடக்கு கிழக்கு இணைவிடங்களை முழுமையாக அபகரிப்பதே நோக்கம் என்றும் இனவிகிதாரசாரத்தை மாற்றியமைக்கும் இத்தகைய குடியேற்றங்கள் தற்போதைய அரசின் காலத்திலும் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட் மக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் வெறுமனே அறிக்கையை மாத்திரம் வெளியிட்டு வருவதாகவும், தமது கிராமங்கள் சிங்களமயமாக்கப்படுவதை தடுக்கவில்லை என்றும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் எமது பிரதிநிதிகள் இத்தகைய குடியேற்ற திட்டங்களையாவது தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர். http://globaltamilnews.net/2019/117786/

பிரமிக்கவைக்கும் யாழ்பாணத்து டச்சுக் கோட்டை

3 months 1 week ago
பிரமிக்கவைக்கும் யாழ்பாணத்து டச்சுக் கோட்டை பெரும் பொருட்ச்செலவில், நிலையாமையில் நம்பிக்கை இல்லாது, அமைத்த பொறியியல் திறன் மிக்க இந்த கோட்டை, அமைத்து முடித்த 3 வருடங்களில், பிரிட்டிஷ்காரர்கள் கை மாறியது. இன்று சிங்களவர்கள் கையில் இருந்தாலும் அதுவும் ஒரு நாள் மாறும். அதுவே உலக நியதி.

படையினர் வசமிருந்த 71,178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன

3 months 1 week ago
படையினர் வசமிருந்த 71,178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன April 7, 2019 பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகளில் 71,178 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. படையினர் வசமிருந்த 84,675 ஏக்கர் காணிகளிலேயே மேற்படி 71,178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. விடுவிக்கப்பட்ட காணிகளுள் 81 சதவீதமானவை அரசுக்குச் சொந்தமானவை எனவும், 90 சதவீதமான தனியாருக்குரியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் 6வது அமர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றபோதே, இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன. மேலும் வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை 6,951 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், இன்னும் 475 ஏக்கர் விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது படையினர் வசம் 13,497 ஏக்கர் காணிகளே உள்ளதாகவும், அவற்றுள் 11,039 ஏக்கர் அரச காணிகள் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. http://globaltamilnews.net/2019/117763/

தொடரும் மீறல்கள் – பி.மாணிக்கவாசகம்…

3 months 1 week ago
தொடரும் மீறல்கள் – பி.மாணிக்கவாசகம்… April 7, 2019 சட்டங்கள் பொதுவானவை. எவராக இருந்தாலும், அவர்களின் சமூக அந்தஸ்து, சாதி, சமயம், பதவி நிலை என்பவற்றைக் கவனத்திற்கொள்ளாமல் நீதியாகச் செயற்படுத்துவதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. சட்டங்களின் மூலம் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அரச நிர்வாகமும், சமூகச் செயற்பாடுகளும், வேலைத் திட்டங்களும் நேர்த்தியான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கும் சட்டங்கள் உறுதுணை புரிகின்றன. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பதிலும், எவரும் தனது நிலைமைகள், அந்தஸ்தை மீறி மற்றவர்களுக்கு மேலானவர்கள் என்ற நிலைப்பாட்டை எடுத்து தற்குறியாகச் செயற்படுவதையும் சட்டங்கள் தடுக்கின்றன. அதேநேரம் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதிலும் சட்டங்கள் பெரிதும் பங்களிப்பைக் கொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில், பௌத்த சிங்களப் பேரின தீவிரவாத சிந்தனையுடையவர்களின் செல்வாக்கிற்கு சட்டங்கள் வளைந்து கொடுக்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தீவிரவாத அரசியல் சக்தியாக முகிழ்த்து எழுந்துள்ள பௌத்த சிங்களத் தேசிய வாதம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிசாரையும், நீதியை நிலைநாட்டுகின்ற நீதிமன்றத்தையும் தனது கைப்பிடிக்குள் வைத்து சிப்பிலி ஆட்டுகின்ற ஆபத்தான நிலைமை ஒன்று உருவாகியிருப்பதைக் காண முடிகின்றது. வடமேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பொல்காவலை நகரில் இடம்பெற்றுள்ள ஒரு சம்பவமே இந்த நிலைமையை வெளிப்படுத்தியிருக்கின்றது. அரச விருதுகள் பலவற்றைப் பெற்று சிறந்த எழுத்தாளர் என்ற அரச அங்கீகாரத்தைப் பெற்ற சக்திக்க சத்குமார என்பவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, அவரை ஏப்ரல் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சமூக வலைத்தளமாகிய முகநூலில் அவர் எழுதி வெளியிட்டிருந்த சிறுகதையொன்றில் பௌத்த மதத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றார் என்ற பிரதான குற்றச்சாட்டின் கீழ் அவரை பொலிசார் கைது செய்திருக்கின்றனர். ஷஅர்த| என்ற தலைப்பில் பாகுபாடு என்ற கருத்தைக் கொண்ட அவர் எழுதியுள்ள சிறுகதையில் மத வெறுப்புணர்வைத் தூண்டியிருக்கின்றார் என்பதே அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும். ஐநா மன்றத்தின் சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேச சாசனத்தை ஏற்று அதனடிப்படையில் இயற்றப்பட்டுள்ள சட்டத்தின் கீழ் சக்திக்க சத்குமார மத வெறுப்புணர்வைத் தூண்டியுள்ளார் என முன்னெப்போதும் இடம்பெற்றிராத வகையில் இந்தச் சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அர்த என்ற அவருடைய சிறுகதையில் பௌத்த மதத் துறவியொருவர் தனது மஞ்சள் அங்கியைத் துறந்து செல்வது பற்றிய கதை பின்னப்பட்டிருக்கின்றது. சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான ஐநா சாசனத்தைப் பின்பற்றி இலங்கையில் தேசிய மற்றும் சாதி சமய வெறுப்புணர்வைத் தூண்டி, ஒடுக்குமுறையையும், முரண்பாட்டையும் வன்முறையையும் தூண்டும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக இயற்றப்பட்டுள்ள சட்டம் இந்தக் கதையை எழுதி வெளியிட்டுள்ள சத்குமார மீது வன்மத்துடன் பாய்ச்சப்பட்டுள்ளது. பௌத்த தகவல் நிலையத்தைச் சேர்ந்த அஹுன்கல ஜினானந்த என்ற பௌத்த மத குரு, இந்தச்சட்டத்தைப் பயன்படுத்தி சத்கமாரவை கைது செய்யுமாறு பெப்ரவரி மாதம் பொலிஸ் பிரதான அதிகாரியைத் தூண்டியிருந்ததையடுத்தே இந்தக் கைது இடம்பெற்றிருக்கின்றது. இந்த சிறுகதை முகந}லில் வெளியாகிய உடன் பௌத்த மத குருக்கள் அடங்கிய குழுவொன்று அரச ஊழியராகிய சத்;குமார பணியாற்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அவரைத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கோரியிருந்தனர். பௌத்த மத குருக்களின் இந்தச் செயற்பாட்டினால் அழுத்தத்திற்கு உள்ளாகிய குருணாகலை மாவட்ட செயலகத்தினர் சத்குமாரவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையொன்றையும் நடத்தியிருந்தனர். இத்தகைய பின்னணியிலேயே சிங்கள மொழியிலான சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்று அரச விருது பெற்ற சத்குமார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், கைது செய்யப்படுகின்ற சந்தேக நபர் ஒருவரை ஒரு நீதவான் விளக்கமறியலில் வைக்கலாமே தவிர அவரைப் பிணையில் செல்ல அனுமதிக்க முடியார்து. அதற்கான அதிகாரம் அந்தச்சட்டத்தில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவமானது, தென்னிலங்கையில் ஊடக சுதந்திரத்தை கேள்விக்கு உள்ளாக்கி ஊடகவியலாளர்களையும், பேச்சுரிமை எழுத்துரிமை என்பவற்றில் ஆர்வம் கொண்டவர்களையும் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டாளர்களையும் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் உள்ளாக்கி உள்ளது. வெளிப்படையான மத வன்முறைகள் பேளத்த மதத்தின் உரிமைகளும், அதன் கண்ணியம் கௌரவம் என்பன போற்றப்பட வேண்டும். அத்துடன் அவைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இல்லை. மாறான நிலைப்பாடும் கிடையாது. ஆனால், அந்தச் சிறுகதையில் பௌத்த மதத்தை நிந்தனை செய்யத்தக்க விடயங்கள் இருக்கின்றனவா, உண்மையான நிலைமை என்ன என்பது விசாரணைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டியவையாகும். இருப்பினும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளருக்கே இந்தக் கதியென்றால், தன்னிகரில்லாத நிலையில் பௌத்த மதம் கோலோச்சுகின்ற சூழலில் வேறு இனத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள சிறுகதை எழுத்தாளராகிய சத்குமார எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது பற்றிய தகவல் முதன்மை செய்திகளில் வெளியாகியிருக்கவில்லை. இருப்பினும் இந்தச் சம்பவமானது பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமையுடன் கூடிய ஊடக சுதந்திரத்தைக் காலில் போட்டு நசித்திருப்பதாகவே ஊடக சுதந்திரச் செயற்பாட்டாளர்கள் கருதுகின்றார்கள். பன்முகப்படுத்தப்பட்ட உரிமைகளை உறுதி செய்வதற்காகவே ஐநா மன்றத்தின் சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேச சாசனம் உருவாக்கப்பட்டது என்று அந்த சாசனம் பற்றிய ஐநா அறிக்கை கூறுகின்றது. உண்மையிலேயே ஒரு மதத்தை நிந்தனை செய்பவரையும் நிந்தனை செய்த எழுதுபவரையும் படைப்பிலக்கியம் படைப்பவரையும் அனுமதிக்க முடியாது. பௌத்த மதமே இன்று அரசிலயமைப்பில் முதன்மை இடத்தைப் பெற்றிருக்கின்றது. எழுத்தில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும்கூட சிறப்பான உரிமைகளையே அந்த மதமும், அந்த மதத்தைச் சார்ந்தவர்களும் குறிப்பாக பௌத்த மதத்துறவிகளும் அனுபவித்து வருகின்றனர். அவர்களுடைய இந்தச் சிறப்புரிமையானது, ஏனைய மதத்தவர்களின் செயற்பாடுகளையும், பௌத்த மதம் பெரும்பான்மையாக அனுட்டிக்கப்படுகின்ற பிரதேசங்களில் அவர்களுடைய இருப்பையும்கூட கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது. பன்மைத் தன்மை கொண்ட மத உரிமை நிலைமைகள் பல சந்தர்ப்பங்களில் சீரழிக்கப்பட்டதையும், அதனைத் தொடர்ந்து பௌத்த மேலாதிக்க சக்திகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மத ரீதியான வன்முறைச் சம்பவங்களையும் இலங்கையர்களினால் இலகுவில் மறந்துவிட முடியாது. இஸ்லாமிய மதத் தலங்கள் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் தொடர்ச்சியாக அவ்வப்போது பௌத்த துறவிகள் அடங்கிய குழுவினரால் தாக்குதல்கள் நடத்தப்பட்டதும், அந்த மதத்தைச் சார்ந்த மக்களுடைய வர்த்தக நிலையங்கள் வீடுகள், இருப்பிடங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்ட சம்பவங்களும் பட்டப்பகலில் மோசமான முறையில் இடம்பெற்றிருந்தன. இந்தச் சம்பவங்களில் வெளிப்படையாகவே பௌத்த மதத்துறவிகள் ஈடுபட்டிருந்தை அந்த்ச சம்பவங்கள் பற்றிய காணொளிகளும் அவர்களின் நேர்காணல்களும் சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தியிருந்தன. அதேபோன்று சிலாபம் பகுதியில் உள்ள இந்தக்களின் முக்கியத்துவம் மிக்க முன்னேஸ்வரம் ஆலயத்தினுள்ளே பௌத்த மதத் துறவிகளும் பௌத்த மத முக்கியஸ்தர்களான அரசியல் செல்வாக்கு பெற்றிருந்தவர்களும் அத்துமீறிப் பிரவேசித்து, அந்த ஆலயத்தின் பாரம்பரிய செயற்பாடாகிய மிருகபலி வழிபாட்டு முறையைத் தடுத்து நிறுத்தவதற்கு முற்பட்டிருந்தனர்;. இந்தச் சம்பவங்களின்போது ஆலய அறங்காவலர்களும் ஆலய குருக்களும் உயிரச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள். இந்தச் சம்பவங்கள் அனைத்துமே பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள முதன்மை நிலை என்ற சிறப்புரிமையின் அடிப்படையில் எதேச்சதிகாரப் போக்கில் அந்த மதத்தைச் சார்ந்த துறவிகளும் மதத் தலைவர்களும் அத்துமீறிச் செயற்படுகின்ற தன்மையைப் புலப்படுத்தியிருக்கின்றன. சட்டத்திலும் பாகுபாடு அதேநேரம் முதன்மை நிலையில் தேசிய மதமாக அரசியலமைப்பில் அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்களை அடக்கி ஒடுக்குவதுடன், அவர்கள் மீது வன்முறைகளைப் பிரயோகித்து, பௌத்த மதத்தைப் பலாத்காரமாக பரப்புகின்ற செயற்பாடுகளும் பகிரங்கமாகவே முன்னெடுக்கப்படுகின்றன. இஸ்லாமிய மதத்தின் மீது மட்டுமல்லாமல், கிறஸ்தவ மதத்தின் மீதும் இந்த அடக்குமுறை பிரயோகிக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது. அத்துடன் இந்து சமயத்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இடங்களில் இந்து ஆலயங்கள் அமைந்தள்ள வளாகங்களில் பலவந்தமாக புத்தர் சிலைகளை நிர்மாணித்து. அதற்கருகில் பௌத்த துறவி ஒருவர் நிலைகொண்டிருப்பதும் சாதாரண நிகழ்வாக இடம்பெற்றிருக்கின்றன. வடமாகாணத்தில் மோசமான யுத்த மோதல்கள் இடம்பெற்ற மாவட்டங்களாகிய மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறு பௌத்த மத ஆக்கிரமிப்பு பகிரங்கமாக இடம்பெற்றிருக்கின்றன. நெடுஞ்சாலையில் பிரயாணம் செய்கின்ற எவரும் இந்தக் காட்சிகளை சாதாரணமாகக் காண முடியும். இந்து வழிபாட்டிடங்கள் அமைந்துள்ள முக்கியமான இடங்களில் அதற்கு அண்மையில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் வழ்பாட்டுத் தேவையைக் கருத்திற்கொண்டு புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அதேநேரம் அந்த இடங்களில் வசதியைப் பொறுத்து பௌத்த விகாரைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களை மீளவும் கட்டியெழுப்புகின்ற போர்வையில் பௌத்த மதத்தையும் அந்த மதத்திற்குரிய சின்னங்களையும் வழிபாட்டிடங்களையும் வலிந்து திணிக்கின்ற ஓர் அடாவடித்தனச் செயற்பாடுகளை அரசாங்கம் மறைமுகமான ஒரு நிகழ்ச்சி நிரலின் ஊடாக மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான பௌத்த மதத்திணிப்பை மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் எந்தவிதமான கூச்சமுமின்றி தமது வாடிக்கையான செயற்பாடாக முன்னெடுத்து வருகின்றன. இது சிறுபான்மை இன மக்களை பேரின மதவாத ஆக்கிரமிப்பின் மூலம் அடக்கி ஒடுக்குவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு எதிரானதோர் இன அழிப்பு நடவடிக்கையாகவே இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில், ஐநா மன்றத்தின் சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேச சாசனத்தைப் பின்பற்றி பன்முகத் தன்மை கொண்ட உரிமைகளை உறுதி செய்வதற்காகவே சட்டம் உருவாக்கப்பட்டது. தேசிய மற்றும் சாதி சமய வெறுப்புணர்வைத் தூண்டி, ஒடுக்குமுறையையும், முரண்பாட்டையும் வன்முறையையும் தூண்டும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காகவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. எவரேனும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் மீது மதவெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டாலும், அல்லது அந்த மதத்தைச் சார்ந்தவர்களை அடக்கி ஒடுக்கி அவர்களுடைய மத உரிமையை மறுத்தும், மீறியும் செயற்பட்டாலும் அல்லது அவர்கள் மீத மத ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டாலும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதும், அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் வன்முறைகளின் மூலம் இழைக்கப்பட்ட உரிமை மீறல்களுக்கும் அநியாயங்களுக்கும் நியாயமும் நீதியும் வழங்க வேண்டியதும் இந்தச் சட்டத்திழன் பொறுப்பாகும். ஆனால் இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் இந்து சமயங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆக்கிரமிப்புக்கள், ஒடுக்குமுறைகள், வன்முறைகள் உயிரச்சுறுத்தல் சம்பவங்கள் மற்றும் உடைமைகள் அழிப்பு, அத்துடன் உயிரிழப்புக்கள் என்பவற்றுக்கு எதிராக இந்தச்சட்டம் பாயவே இல்லை. இந்தச் சட்டம் மட்டுமல்ல. சாதாரண குற்றவியல் சட்டங்களும் கூட இந்தச் சம்பவங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது சாதாரண சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்குவதற்கு சாதாரண சட்டங்களின் கீழ் வழிசெய்யப்பட்டிருக்கின்றன. மத ரீதியான வன்முறைகளின் மூலம் பொது அமைதி பாதிக்கப்பட்டு, உயிராபத்து மிக்க பதட்டடமான சூழல் பல தினங்கள் தொடர்ந்த நிலையிலும்கூட சாதாரண சட்டங்களோ அல்லது ஐநா சாசனத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்ட மத அடக்குமுறைக்கு எதிரான சட்டமோ, சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான அதிகாரிகளினால் பயன்படுத்தப்படவில்லை. இதனால் அச்சமான ஒரு சூழலிலேயே சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். இத்தகைய ஒரு பின்னணியில்தான் பௌத்த மதத்தின் கௌரவத்திற்கும் அதன் கண்ணியத்திற்கும் ஊறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரச விருது பெற்ற சிறுகதை எழுத்தாளர் சத்குமாரவுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது. அது ஆபத்தான ஒரு போக்காக மேலெழுந்து நிற்கின்றது. அத்துடன் மத உரிமை என்பது பௌத்த மதத்திற்கு மட்டுமே தனித்து சிறப்பாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அமைந்துள்ளது. பேரினவாதிகளும் பேரின மதவாதிகளும் பௌத்த தேசிய தீவிரவாதிகளும் நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களை தங்களுக்கு ஏற்ற வகையில் வளைத்து நெளித்து பயன்படுத்துகின்ற ஒரு போக்கு இந்த நாட்டில் இன்று நேற்றல்ல நாடு அன்னியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற சில வருடங்களில் இருந்தே இடம்பெற்று வருகின்றது. தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஸ்ரீ என்ற எழுத்தை முதன்மைப்படுத்தி கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான 1958 ஆம் ஆண்டு வன்முறைகள் தொடக்கம் இன்று வரையிலும் இந்தப் போக்கு பல்வேறு வடிவங்களில் பல்வேறு சம்பவங்களில், பல்வேறு விடயங்களில் எந்தவிதமான அச்சமுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலைமையானது மிகவும் ஆபத்தானது. சுhதாரண சட்டங்களின் கீழ் மட்டுமல்லாமல் யுத்த மோதல்களின் போது அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டு வரப்பட்டு யுத்தம் முடிவடைந்த பி;ன்னரும் இன்னும் நீடித்தள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழேயும் இன ஒடுக்குமுறையையும், மத ஒடுக்குமுறையையும் அதன் அடிப்படையிலான உரிமைகளை அப்பட்டமாக மீறுகின்ற செயற்பாடுகளும் முன்னெடு;ககப்படுவது தொடர்கின்றன. இறுதி யுத்தத்தின்போது மட்டும் மனித உரிமை மீறல்களும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களும் இடம்பெறவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னரும் சர்வதேச சட்டங்களும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களும் மீறப்படுகின்றன என்பதையே சிறுகதை எழுத்தாளராகிய சக்திக்க சத்குமாரவுக்கு எதிரான சட்ட நடவடிக்கை புலப்படுத்தியிருக்கின்றது. http://globaltamilnews.net/2019/117791/
Checked
Sun, 07/21/2019 - 06:54
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr