புதிய பதிவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு

1 day 2 hours ago
பட்டது + படிச்சது + பிடித்தது - 173 தள்ளி நின்று விளையாடுங்கள்... விஜய் தொலைக்காட்சி வருடாவருடம் நடாத்தும் பிக்பாஸ்-3 நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மட்டுமல்ல விஜய் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளிலும் கால் பதிக்கும் பிரபலமாக இருந்து காணாமல் போனவர்கள் பிரபலமாக உயர ஆசைப்படுபவர்கள் இந்நிகழ்ச்சிகளில் முகம் காட்டுவதினூடாக தம்மை மக்கள் முன் கொண்டு செல்ல முயல்கிறார்கள். அந்தவகையில் ஈழத்தமிழரும் இதில் தலை காட்டுவதை பெரும் முன்னெடுப்பாக நினைத்து முயல்கிறார்கள் இதில் ஈழத்தமிழ் சிலரும் பிரபலமாகி வருகிறார்கள். அதில் முதன் முதலாக பிரேம் கோபாலும் (நானறிந்தவரை) அதன் தொடர்ச்சியாக பலரும் தொடர்கிறார்கள். இந்தமுறை பிக்பாஸ்-3 தொடங்குமுன்னே எமது பிரதேசவாதிகள் சிலர் கொய்யோ முறையோ என அழத்தொடங்கிவிட்டார்கள். காரணம் இருக்கு. அதில் பங்கெடுக்கும் ஒருவர் புங்குடுதீவை சேர்ந்தவர். அவர் வரும் முன்பே தன்னை தன் நிலைப்பாடை மகிரங்கப்படுத்தும் முன்பே கண்டதாலும் எறிதல் தொடங்கிவிட்டது. ஏற்கனவே ஒரு காணொலி எடுத்தாலும் எம் மண்ணை அவுசுடன் ஒப்பிடவேண்டிய தேவை எழுந்துள்ள நிலை கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இது போன்ற எறிதல்கள் தொடர்வது எம்மை குறிகிற வட்டத்துக்குள் அடைக்கும் முயற்ச்சியாகவே பார்க்கப்படும். புங்குடுதீவாமே அதனால் நிச்சயமாக தாயகத்தை காட்டிக்கொடுப்பார் போன்ற பதிவுகளையும் பார்க்கமுடிகிறது. வேண்டாமே. நாங்கள் நூறு தடவை எதையும் சொல்வதில்லை. நல்லவர்களுக்கு மட்டுமே எம்மால் நல்லவர்களாக இருக்கமுடியும்.

சலுகைகளுக்கு அடிபணியாத நேர்மையான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டும்

1 day 3 hours ago
நேர்மையானவை மேலோகத்திலை இருக்கிறதாலைதான் சிலோன் பூலோகத்திலை இருக்கிற இரண்டு மூண்டு பேர் மேலை போக பஞ்சிப்படீனம்.இப்பவும் கருமங்கள் நடக்கோணும்.....போர் வெடிக்கும் எண்டு உளறிக்கொண்டிருக்கினம்.

ஜனாதிபதியாகுபவர் குறைந்தது உயர்தரமாவது சித்தியடைந்தவராக இருக்கவேண்டும்

1 day 3 hours ago
ஜனாதிபதியாகுபவர் குறைந்தது உயர்தரமாவது சித்தியடைந்தவராக இருக்கவேண்டும் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்பவர், குறைந்த பட்சம் உயர்தரமாவது சித்தியடைந்தவராக இருக்க வேண்டுமென, திறன் அபிவிருத்தி , தொழில் பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; நாட்டில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தகுதி அரசியல்வாதியொருவருக்கு இருக்க வேண்டும், அதற்காகச் சிறந்த பலமான அரசியல் தலைவரொருவர் அவசியம். அது மாத்திரமின்றி நாட்டுப் பிரச்சினை, உலகப் பிரச்சினைத் தொடர்பில் சிறந்த தெளிவுள்ள ஒருவராகவும் அவர் இருக்கவேண்டும் எனப் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன மேலும் தெரிவித்தார் http://www.dailyceylon.com/185085/

முஸ்லிம் அடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம் – ரவூப் ஹக்கீம்

1 day 3 hours ago
முஸ்லிம் அடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம் – ரவூப் ஹக்கீம் என்மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையில் ஏன் இராஜினாமா செய்தீர்கள் என்று கேட்கின்றனர். முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான உத்தரவாதம் கிடைக்கப்பெறாமல், மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ‘பிரஜா ஜல அபிமானி’ வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று (23) கண்டி, தெல்தோட்டையில் கிராமிய குடிநீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கெளரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது; எங்களுக்குள் ஒளிந்துகொண்டிருந்து பாவிகள் சிலர் செய்த பயங்கரவாத செயலினால், அப்பாவிகள் பலர் இன்றும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் முஸ்லிம்களுக்கு எதிராக வேண்டுமென்று அநியாயங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கின்ற பல விடயங்கள் அரங்கேறி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வுகாணாமல் அரசாங்கத்துடன் சேர்வதில் எந்த அர்த்தமும் கிடையாது. பெண்களின் ஆடை விடயத்தில் தேவையில்லாத சுற்றுநிருபத்தை கொண்டுவந்துள்ளதால், அரச தொழில்களில் இருக்கின்ற முஸ்லிம் பெண்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வாரத்துக்குள் அதை நிவர்த்திசெய்ய வேண்டுமென நாங்கள் அரசாங்கத்திடம் வலுக்கட்டாயமாக சொல்லியிருக்கிறோம். குறித்த சுற்றுநிருபம் திருத்தப்பட்டு, முஸ்லிம் பெண்களின் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பது நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் ஒன்றாகும். முஸ்லிம்கள் மீதான பாரபட்சம் நிறுத்தப்படவில்லை என்றால், நாங்கள் எந்த முகத்துடன் அரசாங்கத்தில் இருப்பது என்ற கேள்வியை அவர்களிடம் கேட்டிருக்கிறோம். இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து தீர்வை பெற்றுத்தருவோம் என்ற உத்தரவாதத்துடன்தான் எமது அமைச்சர்கள் இருவர் பதவிகளை மீளப் பொறுப்பேற்றிருக்கிறார்கள். நாங்கள் அரசாங்கத்துக்குள் இருந்தாலும், வெளியிலும் இருந்தாலும் சமூகத்தின் நன்மைக்காக எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் கூட்டாக ஒருமித்து செயற்படுவோம். இலங்கையில் சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான அநியாயங்களை சர்வதேச சமூகம் அவதானமாக பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் எங்களது கோரிக்கைகளை அரசாங்கத்திடமும் பாதுகாப்பு தரப்பினரிடமும் அழுத்தமாக முன்வைத்திருக்கிறோம். இனி அட்டகாசம் செய்யவருபவர்களை அடையாளம்கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். எடுத்ததெற்கெல்லாம் உண்ணாவிதரம் இருப்பவர்களின் அட்டகாசங்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் பாதுகாப்பு படையினரை வைத்திருப்பதில், இந்த அவசரகாலச் சட்டத்தில் எந்தப் பிரயோசனமும் இல்லை. மூன்றாவது மாதமாக அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த அவசரகாலச் சட்டத்தை இனிமேலும் நீடிக்க விடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம். அவசரகாலச் சட்டம் எதற்கு தேவைப்பட்டதோ, அந்த தேவை முடிந்துவிட்டது. இனியும் இதை நீடிப்பதாக இருந்தால், எல்லா மக்களுக்கும் பாதுகாப்பு தருவதாக அது இருக்கவேண்டும். ஆனால், அந்த நிலைப்பாட்டை அண்மைக்காலங்களில் காணவில்லை என்பதை நாங்கள் தெளிவாக சொல்லியிருக்கிறோம். தற்போதைய அரசாங்கம் பல விடயங்களில் அசமந்தப்போக்குடன் நடந்ததாக விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்காக இன்னுமொரு அரசாங்கம் வந்து, இந்தப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. கடந்த அரசாங்கத்தில் நடந்த விடயங்களையும் இன்னும் மறக்கவில்லை. எந்த அரசாங்கம் வந்தாலும், சிறுபான்மை சமூகங்கள் மீது பாரபட்சம் காட்டப்படக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்கிறோம். சிறுபான்மைக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராகத்தான் நாங்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம். நிச்சயம் இதற்கு விடிவுகாலம் கிட்டும். இதற்கான தீர்வு விடயத்தில் சரியான தெளிவில்லாமல் வலிந்துபோய் அமைச்சு பதவிகளை பெறுவதால் எங்களது கெளரவம் பாதிக்கப்படுவது மாத்திரமல்ல, சமூகத்தின் எதிர்பார்ப்பும் நிறைவேறாமல் போய்விடும். என்மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையில் நீங்கள் ஏன் இராஜினாமா செய்தீர்கள் என்று சக அமைச்சர்கள் என்னிடம் கேட்கின்றனர். குற்றமிழைத்தவர்களை கைதுசெய்யாமல் இருப்பது மிகவும் மோசமான விடயம். சிறு கும்பல் செய்த வேலைக்காக முழு சமூகமும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் நிலைமை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். குருநாகல், புத்தளம், கம்பஹா மாவட்டங்களில் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்களும் வீடுகளும் புனரமைக்கப்பட வேண்டும். அவற்றைச் செய்யாமல் நாங்கள் அமைச்சரவையில் இருக்கமுடியாது. ஏனைய இடங்களில் எவ்வாறு நஷ்டயீடு கொடுத்து கட்டிமுடித்தார்களோ, அதேபோன்று இங்கும் செய்யப்பட வேண்டும். அதைச் செய்யாமல் நாங்கள் கதிரைகளில் போய் உட்கார முடியாது என்பதே எங்களின் நிலைப்பாடு என தெரிவித்தார்.( http://www.dailyceylon.com/185090/

துறவிகளை முன்னிலைப்படுத்தும் நிகழ்கால உண்ணாவிரதங்கள்

1 day 3 hours ago
துறவிகளை முன்னிலைப்படுத்தும் நிகழ்கால உண்ணாவிரதங்கள் மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 23 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:03 Comments - 0 பல்லின நாடொன்றிலான நமது சமூக, அரசியல் சூழலில் விவகாரங்களையும் நெருக்கடிகளையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பிழையான முன்மாதிரிகளை நிகழ்காலம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இதில் ஆகப் பிந்திய விடயமானது - காவியுடை உடுத்த பௌத்த துறவி ஒருவர், உண்ணாவிரதம் இருந்தால் அவரது கோரிக்கையிலுள்ள சரி, பிழைகளுக்கு அப்பால் நாட்டின் அரசாங்கமும் ஏனைய தரப்பினரும் அதனை நிறைவேற்றித் தருவார்கள், தரவேண்டும் என்ற ஓர் எழுதப்படாத விதியொன்று இன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. அத்துரலிய ரதனதேரரின் உண்ணாவிரதம் அதைத் தொடர்ந்து முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு இராஜினாமா, அதற்குப் பிறகு முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைது செய்யக்கோரி தெற்கில் சில துறவிகள் விரதமிருந்தமை, கடந்த சில நாள்களாக கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, பௌத்த துறவிகளின் துணையுடன் தமிழ்த் தரப்பினர் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதம் எல்லாமே ஒரு விதத்தில் நல்ல முன்மாதிரிகளாகக் குறிப்பிடக் கூடியவை அல்ல. ஏட்டிக்குப் போட்டியாக முஸ்லிம் தரப்பு சத்தியாக்கிரம் மேற்கொள்வதும் வரவேற்கத்தக்கதல்ல. உரிமைக்காகப் போராடுவது ஒவ்வொரு சமூகத்தினதும் தனிமனிதனதும் தார்மீகக் கடமை. அந்த வகையில் உண்ணாவிரதம் என்பது மிகச் சிறந்த ஜனநாயகவழி கருவியாகும். ஆனால், இந்து, இஸ்லாமிய மதகுருமாருக்கு இல்லாத மரியாதையையும் அச்சத்தையும் ஆட்சியாளர்கள் பௌத்த துறவிகளுக்கு வழங்குவதும் அவர்களது கோரிக்கைகளில் உள்ள நியாயங்களின் அடிப்படையிலன்றி, அவர்களைப் பகைத்துக் கொண்டால் பௌத்த மக்கள் குழம்பிவிடுவார்கள் என்ற தோரணையில் அக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆட்சியாளர்கள் பிரயாசப்படுவதும் நல்ல வழிமுறைகள் அல்ல. அதுபோலவே பௌத்த துறவிகளை உண்ணாவிரதத்தில் ஈடுபடுத்தினால் அல்லது அவர்களாக இதில் பங்குகொண்டால் காரியம் சாதிக்கலாம் என்று பௌத்த கடும்போக்கு சக்திகளும், பெருந்தேசியவாதமும் எண்ணுகின்றது. அதுபோலவே, இப்போது என்றுமில்லாதவாறு பெருந்தேசியத்தைப் போலவே தமிழர்களும் தங்களுடைய கோரிக்கைகளுக்குப் பலம்சோர்க்கும் விதமாக பௌத்த துறவிகளை முன்னிலைப்படுத்துவதைக் காண முடிகின்றது. சிங்கள - தமிழ் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக மட்டுமன்றி, பிக்கு உண்ணாவிரதமிருந்தால் அரசாங்கமும் சிங்கள மக்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுமாயின், அது அவ்வளவு நல்ல பிரதிபலன்களைத் தரப் போவதில்லை. அதைவிடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் என்பது இங்கு கேலிக்குரியதல்ல. உண்ணாவிரதப் போராட்டங்கள் சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. உலக அளவில் அதிலும் குறிப்பாக தென்னாசியப் பிராந்தியத்தில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல உண்ணாவிரதப் போராட்டங்கள் சரித்திரத்தில் தடித்த எழுத்துகளால் குறிப்பிடப்பட்டிருக்கின்றன என்பதை இவ்விடத்தில் மறந்து விடக் கூடாது. மகாத்மா காந்தியின் உண்ணாநிலைப் போராட்டத்தை இதில் முதன்மையானதாகக் குறிப்பிடலாம். தீண்டாமைக்கு எதிராகவும் இந்திய விடுதலை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி 17 தடவைகள், மொத்தமாக கிட்டத்தட்ட 139 நாள்கள் காந்திஜி உண்ணாவிரதமிருந்தார். ஒருதடவையில் 21 நாள்கள் வரை உண்ணாவிரதமிருந்த போதும் இப்போராட்டத்தை அவர் குறுக்குவழி ஆயுதமாகவோ, இன முறுகலை உண்டுபண்ணும் சூழலிலோ மேற்கொள்ளவில்லை. இலங்கையில் உண்ணாவிரதம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது தியாகி திலீபனின் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம்தான். விடுதலைப் புலிகளின் போராட்டத்தோடு பல விடயங்களின் உடன்பட முடியாத நிலையும் விமர்சனமும் இருந்தாலும் கூட ஒரு சமூகத்துக்காக உயிர் விடும் வரை உண்ணாவிரதமிருந்த பார்த்தீபன் இராமையா என்ற இயற்பெயருடைய திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒரு சமூக உணர்வும் அகிம்சையும் இருந்ததை மறுக்க முடியாது. புலிகளின் முக்கிய உறுப்பினர் என அறியப்படுகின்ற திலீபன், இந்திய அமைதி காக்கும் படையினரிடம் 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்துத் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை 1987 செப்டெம்பர் 15 இல் ஆரம்பித்தார். அவரது கோரிக்கைகள் நிறைவேறாத நிலையிலும் தனது கொள்கையில் நிலையாக இருந்து உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, 26ஆம் திகதி உயிரிழந்த திலீபன், தமிழர்களின் தியாகி ஆகினார். இப்படிப் பல வரலாற்றுப் பதிவான உண்ணாவிரதங்கள் இருக்கின்றன. இவர்கள் யாரும் சமூக நல்லிணக்கத்துக்கு விரோதமாக உண்ணாவிரதம் இருக்கவில்லை. ஓர் அகிம்சையான ஆயுதமாகவே உண்ணாவிரதம் என்ற கருவியைப் பயன்படுத்தினர். அத்துடன், காந்திஜியோ அல்லது திலீபன் போன்றோர்களோ, (இன்று நாம் கேள்விப்படுவது போல), உண்ணாவிரதத்தை ஆரம்பித்து இரண்டாவது நாளில் தாமாக சிகிக்கை தேடியதாகவோ, இரகசியமாக எதையாவது பானத்தை அருந்தியதாகவோ எந்தத் தகவலும் இல்லை. அதுமட்டுமன்றி, உண்மையாக சமூகத்தை நேசிப்பவர்களின் உண்ணாவிரதங்கள், இலங்கையின் ஓரிரு சிங்கள அரசியல்வாதிகள் ஐ.நா. அலுவலகத்துக்கு முன்னாலும் வேறு இடங்களிலும் கடந்தகாலங்களில் நடாத்திய ‘உண்ணாவிரத நாடகத்தை’ போல அமையவில்லை. அவை உண்மைக்குண்மையான உண்ணாவிரதங்களாக இருந்தன. ஆனால் நிகழ்காலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற உண்ணாவிரதங்களில் நியாயங்களை விட, அரசியல் மற்றும் கடும்போக்கு சக்திகளின் ஆதிக்கமே அதிகம் இருப்பதாகக் கருத முடிகின்றது. அதற்கு அரசாங்கம் தலைவணங்குவதுதான் மிகப் பிழையான செயற்பாடாகும். பௌத்த துறவிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துகளும் இல்லை. அவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தின் மதகுருக்கள் என்பதால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதும் தவிர்க்க முடியாதது. ஆனால், பௌத்த துறவிகள் அரசியல் மற்றும் ஏனைய பின்னணிக் காரணங்களின் அடிப்படையில் போர்க்கொடி தூக்குவதும், அதற்கு அஞ்சிநடுங்குவது போல அரசாங்கமும் பொறுப்புவாய்ந்தவர்களும் காட்டிக் கொள்வதும் அவ்வளவு ஆரோக்கியமானதல்ல என்பதைக் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. குறிப்பாக, தியாகி திலீபனின் கோரிக்கையை கிஞ்சித்தும் கணக்கிலெடுக்காத அரசாங்கம், தமிழ் பொதுமக்கள் நிலமீட்புக்காக நெடுங்காலமாக நடத்திவரும் உண்ணாவிரதங்கள் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள், முஸ்லிம்கள் காணி மீட்புக்காக மேற்கொண்ட சத்தியாக் கிரக போராட்டங்களை திரும்பிக் கூடப் பார்க்காத பெருந்தேசியம், இன்று பௌத்த பிக்கு ஒருவர் எங்காவது உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் பதறியடித்துக் கொண்டு, தீர்வுகாண ஓடிவருவதும், அதற்கு ஓரிரு பௌத்த பீடங்கள் ஒத்துஊதுவதும்தான் ஏன் என்பதை நாட்டுமக்கள் அறியாதவர்களல்லர். அண்மையில், முஸ்லிம் அரசியல்வாதிகள் மூவர் பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கண்டியில் உண்ணாவிரதமிருந்தார். முஸ்லிம்களின் ஆதரவையும் பெற்ற அரசாங்கமோ, அல்லது பின்னர் முஸ்லிம் எம்.பி.களைப் பதவிகளைப் பொறுப்பெடுக்குமாறு கோரிய பௌத்த பீடங்களோ அவரைச் சமரசப்படுத்த முயலவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளையும் அதன் ஊடாக முஸ்லிம் சமூகத்தையும் ஒடுக்கும் உள்நோக்கம் மறைக்கப்பட்டு, பௌத்த பிக்குவின் உண்ணாவிரதம் பாரிய இனமுறுகலைக் கொண்டுவரும் என்ற தோற்றப்பாடே ஏற்படுத்தப்பட்டது. இறுதியில், இவர்கள் இராஜினாமாச் செய்ய உண்ணாவிரத அரசியல் வென்றது. அதன்பின்னர் சம்பந்தப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைது செய்யச் சொல்லியும் தென்னிலங்கையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டுப் பின்னர் பிசுபிசுத்துப் போனது. இந்நிலையிலேயே, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமும் கொண்ட தனியொரு பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தித் தருமாறு தமிழர்கள் கல்முனையில் கடந்த சில நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு மேலதிகமாக இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்ற தேரர் ஒருவர் உள்ளடங்கலாக வேறு ஒருசில பௌத்த துறவிகளும் இதில் பங்கேற்றிருக்கின்றனர். கல்முனை வடக்கு தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் என்று அழைக்கப்பட்டு வந்த உப பிரதேச செயலாளர் பிரிவைத் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தித் தருமாறு தமிழ் மக்கள் கோரி வருகின்றனர். 1993 காலப் பகுதியிலேயே இதனைத் தனியொரு பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதை முஸ்லிம் அரசியல்வாதிகள் தடுத்து வருவதாகவும் தமிழர் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது. தமிழர்களின் இக் கோரிக்கை நியாயமானதே. தமது பிரதேசங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பை நிர்வாகம் செய்வதற்கான பிரதேச செயலகம் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட தனியோர் அலுவலகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எந்தப் பிழையும் இருப்பதாகத் தெரியவில்லை. மறுபுறத்தில், இதற்கு முஸ்லிம்கள் ஏன் விரும்புகின்றார்களில்லை என்ற காரணத்தையும் நோக்க வேண்டியிருக்கின்றது. பிரதேச செயலகம் என்பது அரச நிர்வாகக் கட்டமைப்பாகும். அதனை பெறுவதற்கு ஒரு வழிமுறை இருக்கின்றது. சரி, முயற்சி எல்லாம் கைகூடாத நிலையிலேயே இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்று வைத்துக் கொண்டால், அதில் தவறில்லை. ஆனால், இதில் பௌத்த பிக்கு துணைக்கு அழைக்கப்பட்டுள்ளமையானது, ரதனதேரரின் உண்ணாவிரத வெற்றியை முன்மாதிரியாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றதோ என்ற தோற்றப்பட்டை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களில் அக்கறையிருப்பதாகக் காட்டிக் கொள்ளும் சில தமிழ் அரசியல்வாதிகள் ஸ்தலத்துக்கு வந்து கூறும் கருத்துகள் முஸ்லிம்களை முகம் சுழிக்கச் செய்கின்றன. தமிழர்களின் போராட்டத்துக்கு பௌத்த பிக்குகள் ஆதரவளிப்பதும், ஞானசார தேரர், ரதன தேரர் போன்றோரும் இதில் சம்பந்தப்படுவதும், சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கைகோர்த்து விட்டார்களா? என்ற சந்தேகத்தை முஸ்லிம் சமூகத்துக்குள் ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் தரப்பினர் இப் பிரச்சினைக்குப் பேசித் தீர்வு காணாமல் மேலெழுந்தவாரியாக தனிப் பிரதேச செயலகத்தை எதிர்க்க முடியாது. மறுபுறத்தில், தனியான பிரதேச செயலகத்தைக் கோரிப் பெறுவது தமிழர்களின் உரிமை. அதற்காக அவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றார்கள் என்பதும் விமர்சனத்துக்குரியதல்ல. ஆனால், நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராகப் பௌத்த கடும்போக்கு சக்திகள் கிளர்ந்தெழுந்துள்ள சூழ்நிலையில், அவ்வாறான சக்திகளின் ஆசிர்வாதத்தை பெறுவதும், கடும்போக்கு சக்திகளின் புதிய ‘ட்ரென்டாக’ ஆகியுள்ள உண்ணாவிரத அரசியலுக்குள் தமிழ் சமூகம் சிக்குவதும், முஸ்லிம்களின் ஆதரவோடு வடக்கு - கிழக்கை இணைக்கக் கோரும் தமிழர்களுக்கு நல்ல சகுணங்கள் அல்ல. அதேநேரம், இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கூடாது என்ற கோஷத்தோடு ஏட்டிக்குப் போட்டியாக முஸ்லிம் தரப்பும் இன்னுமொரு பௌத்த துறவியை அழைத்து வந்து சத்தியாக்கிரகம் இருந்தால் என்ன செய்வது என்பது பற்றியும் சிந்திக்க தவறக் கூடாது. எனவே, உண்ணாவிரத அரசியலுக்காகவும், பிக்குகள் இதற்கு ஆதரவளிக்கின்றார்கள் என்று பயந்து கொண்டும்.... இப் பிரச்சினைக்கு தீர்வுகாண எத்தனிக்காது, உண்மையில் தமிழர்கள், முஸ்லிம்களின் நியாயங்களின் அடிப்படையில் மட்டுமே இவ்விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். கல்முனை விவகாரம்: இருதரப்பு நியாயங்கள் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் என்று அழைக்கப்பட்டு வந்த, ஓர் உப பிரதேச செயலகத்தை, தனியான ஒரு பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துமாறு தமிழ்த் தரப்பினர் கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை முன்னிறுத்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அக்கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவதாகத் தற்போது மீண்டும் பிரதமர் வாக்குறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால் இந்தப் பிரச்சினை இன்னும் தீரவில்லை. உப பிரதேச செயலாளர் பிரிவாக இயங்கி வந்த இவ்வலுவலகத்தைத் தரமுயர்த்த 1990களிலேயே அரசாங்கம் முயன்ற போது முஸ்லிம் அரசியல்வாதிகள் தடுத்து வருவதாகத் தமிழ்த் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் இந்த உதவிப் பிரதேச செயலாளர் அலுவலகம் இயங்குவதால் நிதி போன்ற நடைமுறைகளில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக நீண்டகாலமாகவே கூறப்பட்டு வந்தது. உண்மையில், பொதுநிர்வாக கட்டமைப்பாகிய பிரதேச செயலகம் ஒன்றின் கீழ் வினைத்திறனான நிர்வாக நடைமுறை இருக்க வேண்டும் என்று இப் பிரதேசத்தில் வாழும் மக்கள் கருதுவதில் தப்பேதும் கிடையாது. ஆனால் பிரதேச செயலகம் என்பது அரசியல் அதிகார அலகோ, அரச நிறுவனமொன்றின் கிளையோ கிடையாது. எனவே அதைக் கோருவதற்கு ஒரு முறை இருக்கின்றது. மாவட்ட செயலாளர் ஊடாக, பொதுநிர்வாக அமைச்சு இவ்விடயத்தை பரிசீலித்து, அல்லது 90களில் வெளியான கடிதக் குறிப்புகளைப் பரிசீலித்து இதனைத் தரமுயர்த்த வேண்டுமேயொழிய, வேறு கோரிக்கைகள் போல உண்ணாவிரதம் இருந்து, அரசாங்கத்துக்கு சவால் விடுத்து சாதிக்க நினைப்பது, புதுப்புது பிரச்சினைகள் எழ வழிவகுக்கலாம். மறுபுறத்தில், குறிப்பிட்ட சில காரணங்களுக்காகவே முஸ்லிம் தரப்பு இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றது. இதில் பிரதானமானது கல்முனை பிரதேச செயலகத்துக்கும், சர்ச்சைக்குரிய வடக்கு உப பிரதேச செயலகத்திற்கும் உரித்தான எல்லைகளுடன் தொடர்புபட்ட சிக்கலாகும். சுருங்கக் கூறின், முஸ்லிம்களின் வர்த்தக மய்யமான கல்முனை நகரும் குறிப்பிட்டளவான முஸ்லிம் குடியிருப்புகளும் இந்த புதிய பிரதேச செயலக எல்லைக்குள் சென்றுவிடும் என்று முஸ்லிம்கள் கருதுகின்றனர். அந்த வகையில், இருதரப்பு நிலைப்பாடுகளிலும் நியாயமிருக்கின்றது. எனவே இருதரப்பும் ஓரளவுக்கேனும் திருப்திப்படும் விதத்தில் எல்லைப் பிரிப்புகளுடன் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதே ஆரோக்கியமான தீர்வாக அமையும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/துறவிகளை-முன்னிலைப்படுத்தும்-நிகழ்கால-உண்ணாவிரதங்கள்/91-234511

விலகியோட முனைந்தாரா ஜனாதிபதி?

1 day 3 hours ago
விலகியோட முனைந்தாரா ஜனாதிபதி? கே. சஞ்சயன் / 2019 ஜூன் 23 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:20 Comments - 0 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 26ஆம் 27ஆம் திகதிகளில், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தைப் பிற்போட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்கள் நடந்த போது, ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்தார், இந்தியா சென்றுவிட்டு அவர், சிங்கப்பூர் சென்றிருந்தபோதே, அந்தத் தாக்குதல்கள் நடந்திருந்தன. ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்களுக்குப் பின்னர், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி, அதையடுத்து இந்தியா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்துவிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் நாடு திரும்பினார். மீண்டும் அவர் கம்போடியாவுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்ட பயணம் ஒன்றும், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுவதற்கில்லை. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, வரும் 27ஆம் திகதியன்று, கொழும்புக்கு வரத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்தப் பயணமும் இரத்துச் செய்யப்பட்டதாக, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்களுக்குப் பின்னர், இலங்கையுடன் அமெரிக்கா இணைந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதற்காக, பொம்பியோ இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறியிருந்தார். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கொழும்பு வரும்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இங்கு இருக்கமாட்டார் என்பது உறுதியாகியிருந்தது. இருவரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்பட்டது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் பயண நிகழ்ச்சி நிரலுக்குள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கம்போடிய பயணத் திட்டம், குறுக்கே புகுந்தது ஆச்சரியமானது. ஆனால், அதிர்ச்சியளிக்கக் கூடியதன்று. ஏனென்றால், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவைச் சந்திக்கின்ற, அவருடன் பேசுகின்ற விருப்பம், ஜனாதிபதிக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் என்பது, அமெரிக்காவில் இரண்டாவது அதிகாரமிக்க பதவியாகக் கருதப்படத்தக்கது. மிக நீண்ட காலத்துக்குப் பின்னர், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை அடுத்து, கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை வரவேற்று பேச்சுகளை நடத்தினார். அப்போது, அமெரிக்காவுக்கும் அவருக்கும் இடையில் நல்ல உறவு இருந்தது. மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வருவதற்கான சூழ்நிலைகளை அமைத்துக் கொடுத்ததில், அமெரிக்காவின் பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆட்சி மாற்றத்தில் பல்வேறு வழிகளில் பங்களித்திருந்தது அமெரிக்கா. மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வி கண்ட மஹிந்த ராஜபக்‌ஷவே, அமெரிக்க புலனாய்வுத்துறை மீது குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார். ஜோன் கெரிக்குப் பின்னர், நான்கு ஆண்டுகள் கழித்து, கொழும்புக்கு வரவிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் பயணம் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அக்கறையோ ஆர்வமோ கொண்டிருக்கவில்லை. ஏன் இந்த மாற்றம்? அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் பயணத்தைக் கண்டுகொள்ளாமல், அவர் ஒதுங்க நினைத்தது ஏன்? கடந்த ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி ஆட்சியைக் கவிழ்க்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவுசெய்த பின்னர், தொடங்கியது இந்தப் பனிப்போர். மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக்கி, நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி ஆடிய ஆட்டத்துக்கு முடிவு கட்டுவதில், முக்கியமாக நின்றது அமெரிக்காதான். சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற மரபுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து, அமெரிக்கா கடும் அழுத்தங்களைக் கொடுத்தது. பொருளாதாரத் தடைகளை விதிப்போம் என்று மேற்குலகம் கொடுத்த அழுத்தங்களால்தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, படியிறங்க நேரிட்டது. இல்லையேல் அவர், உயர் நீதிமன்றம், நாடாளுமன்றம் எல்லாவற்றையும் தூக்கி வீசிக்கொண்டு சென்றிருப்பார். அவரது திட்டத்தைத் தகர்த்துப் போட்டதில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் பங்கு குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல. அதற்குப் பின்னர், அவருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில், பெரியளவில் நெருக்கம் இருக்கவில்லை. ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்கள் நடந்ததும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன்தான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினரே தவிர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசவில்லை. இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள, அமெரிக்கா எடுத்திருந்த நடவடிக்கைகளைத் தடுக்கவும் முடியாமல் தொடரவும் விடாமல், திரிசங்கு நிலைக்குள் ஜனாதிபதி சிக்கியிருக்கிறார். ஏனென்றால், இலங்கைப் படைகளுக்கு அமெரிக்கா பல்வேறு வழிகளில் பயிற்சிகள், உதவிகளை அளித்து வருகிறது. இப்படியான நிலையில், அதனை உதறித்தள்ள அவரால் முடியாதிருக்கிறது. அதேவேளை, இலங்கையுடன் சோபா எனப்படும் படைகளை நிலைப்படுத்துதல் தொடர்பான உடன்பாட்டைச் செய்துகொள்ளவும் அமெரிக்கா அளித்துள்ள முன்மொழிவை ஏற்றுக்கொள்ளவும், அவர் தயாராக இல்லை. தனக்குத் தெரியாமல் அமெரிக்காவுடன் எந்தப் பாதுகாப்பு உடன்பாடுகளும் செய்துகொள்ளக் கூடாதென்று, அண்மையில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு, கடுமையான தொனியில் ஜனாதிபதி எச்சரிக்கை செய்திருக்கிறார் என்றொரு தகவலும் வெளியானது. சோபா உடன்பாட்டை சர்ச்சைக்குரியதாக மாற்றியதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கும் குறைவற்றது. அவர் அதனை விரும்பவில்லை. தட்டிக்கழிக்க முனைகிறார். ஆனால், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், அதற்கு எதிர்மாறான நிலைப்பாட்டில் இருக்கிறது. அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும் அதனுடன் உறவுகளை விரிவுபடுத்தவும், ஐ.தே.க அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, இலங்கைப் பயணத்தின்போது, சோபா உடன்பாட்டின் சர்ச்சைக்குரிய உட்பிரிவுகள் குறித்தும் பேசத் திட்டமிட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொஞ்சம் உசாராவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். தான், நாட்டில் தங்கியிருந்தால் பொம்பியோவை சந்திக்கவேண்டும். அவரைச் சந்தித்தால், சோபா உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு இணங்க வேண்டும். ஆனால், நாட்டின் இறைமையைப் பாதிக்கும் எந்தவோர் உடன்பாட்டிலும், எந்த நாட்டுடனும் கையெழுத்திட அனுமதிக்கமாட்டேன் என்றும் அண்மையிலும் கூட ஜனாதிபதி கூறியிருந்தார். எனவே, அவர், பொம்பியோவுடன் சோபா உடன்பாடு குறித்து பேசினாலோ இணங்கினாலோ அது முரண்பாடானதாக அமைந்துவிடும். இந்த நிலையில்தான், அவர், கம்போடிய பயண நிகழ்ச்சி நிரலை உறுதிப்படுத்தியிருக்கலாம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த ஒக்டோபர் 26க்கு முன்னரே, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடனான நெருக்கத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். கடந்த வாரம்கூட அவர், தஜிகிஸ்தானில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துப் பேசியிருக்கிறார். இதன்போது, ரஷ்ய ஜனாதிபதி புட்டினை, இலங்கைக்கு விரைவில் வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். ரஷ்ய ஜனாதிபதிகள் எவரும், அண்மைக் காலங்களில் இலங்கைக்கு வந்ததில்லை. தாம் பதவியில் இருக்கும்போதே, புட்டினை கொழும்புக்கு அழைப்பதில் மைத்திரிபால சிறிசேன ஆர்வம் காட்டுகிறார். ரஷ்ய பொருள்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு, அமெரிக்கா விதித்துள்ள தடை, அதனை எதிர்காலத்தில் எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் இரண்டு தலைவர்களும் பேசியிருக்கிறார்கள். இது டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு சவால் விடக்கூடிய விடயம். ஒரு பக்கத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடுகள், பாதுகாப்பு உறவுகளை அதிகரித்து, அதனைக் கைக்குள் போட அமெரிக்கா முனைந்தாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, நழுவி ஓட முனைகிறார். தஜிகிஸ்தான் தலைநகர் துஷன்பேயில் இடம்பெற்ற ஆசியாவின் கூட்டுச்செயற்பாடும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆசியாவின் சக்தியை ஒடுக்குவதற்கு வேறு எந்த வெளிச் சக்திகளுக்கும் இடமளிக்கக் கூடாது என்று கூறியிருந்தார். அவர், புறச்சக்தி எனக் குறிப்பிட்டது அமெரிக்காவையும் மேற்குலகத்தையும்தான். அந்த மாநாட்டில், அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் மூன்று முக்கிய நாடுகளின் தலைவர்களான சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இலங்கையில், அமெரிக்காவுக்கு இடமளிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க இராஜாங்கச் செயலாளரை சந்திக்காமல் தவிர்க்க முனைந்திருந்தால், அது ஆச்சரியமில்லை. எனினும், பொம்பியோவின் இலங்கைப் பயணமும் ஜனாதிபதியின் கம்போடியா பயணமும், இப்போது இரத்துச் செய்யப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை இருவரும் சந்தித்துக்கொள்ளாமல் தவிர்த்துக் கொள்வது இலகுவானதாக இருக்காது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விலகியோட-முனைந்தாரா-ஜனாதிபதி/91-234502

இலங்கை பாடத்திட்டத்தில், 38 ஆண்டுகள் இஸ்லாமியவாத தீவிரவாத கொள்கைகள் கற்பிக்கப்பட்டன

1 day 3 hours ago
எங்களுக்கு அப்பிடி புத்தகங்களெல்லாம் வாசிக்க ஏலாது பாருங்கோ! எப்ப பார்த்தாலும் சிங்களவனுக்கு செம்பு தூக்கிறது மட்டும்தான் எங்கட வேலை!

அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்

1 day 4 hours ago
மைத்திரியின் பிரதிநிதி அவர்... திரி ஆடி, ஆடி ஆட்டம்போட்டுத்தான் எரியும். முல்லை மண் அல்லவா! பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனாலும் பணியவிடாது. முறுக்கேறவைக்கும்.!! 😠

ஏர் கனடா செய்த வேலை.

1 day 4 hours ago
நல்லா இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருப்பார். வந்தவர் எதோ பெட்சீட் குவியல்தான் கிடக்கு அடுத்து டூட்டிக்கு வாரவர் வந்து மடிக்கட்டும் என்று போய் விட்டார் போல.....! 👍

அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்

1 day 5 hours ago
அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது . குழுவின் இணைத்தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் , பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களை பார்த்து ஆளுநர் சுரேன் இராகவன் தனியார் ஊடகங்கள் யார் என கேட்டு தனியார் ஊடகங்களை வெளியேறுமாறும் ,பின்னர் கூட்ட தீர்மானங்களை வழங்குவதாகவும் அரச ஊடகங்கள் மட்டும் இருக்குமாறும் கேட்டுகொண்டார். இது அரச கூட்டம் அரச விடயங்கள் பற்றி மக்கள் பிரதிநிதிகளுடன் அரசு ஊழியர்கள் கலந்துரையாடும் விடயம் எனவும் ஊடகங்கள் இருக்கத்தேவையில்லை எனவும் தனியார் ஊடகங்களை வெளியேறுமாறு பணித்தார் . இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதுவரை காலமும் ஊடகங்களின் முன்னிலையில்தான் இந்த கூட்டம் நடைபெற்றது .அந்த வழமையை மாற்றவேண்டாம் ,மற்றும் அரசாங்க ஊடகங்களை அனுமதித்து தனியார் ஊடகங்களை வெளியேறவேண்டும் என கூறுவது பொருத்தமல்ல என தெரிவித்தார். இதன்போது குறுக்கிட்ட ஆளுநர் அப்படியானால் அனைத்து ஊடகங்களையும் வெளியேற்றுவோம் என தெரிவித்தார் . இடையில் குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஊடகங்கள் அனுமதிக்கப்படவேண்டும் அவ்வாறு வெளியில் அனுப்ப முடியாது ,ஊடகங்களுக்கு பயப்படவேண்டிய தேவையில்லை இந்த அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நடைபெறும் விடயங்களை மக்கள் அறியவேண்டும் நாங்கள் என்ன பேசுகின்றோம் என்பதை மக்கள் அறியவேண்டும் .என தெரிவித்தார் . இதன்போது மீண்டும் சிவசக்தி ஆனதன் எம் பி 19ஆவது திருத்த சட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தகவல் அறியும் உரிமை இருக்கின்றது . என தெரிவித்தார். இடையில் குறுக்கிட்ட ஆளுநர் சிவசக்தி ஆனதன் எம் பியிடம் ஆம் அவ்வாறு சட்டம் இருக்கின்றது உண்மை ஆனால் ஒவ்வொரு கூட்டத்தையும் ஒவ்வொரு பேச்சுவார்தையையும் அறிய வேண்டும் என இருக்கின்றதா என கேட்டார் ?? அதற்க்கு பதிலழித்த சிவசக்தி ஆனந்தன் ஆம் கட்டாயம் அவ்வாறு அறியவேண்டும் இங்கே நடைபெறும் விடயங்களை இங்கே பேசப்படும் விடயங்களை இந்த மாவட்டத்தின் மக்கள் அறியவேண்டும் , அந்த மக்களுக்கு அது தெரியவேண்டும் , நாங்கள் இந்த மாவட்டத்தின் அபிவிருத்தியை பற்றித்தான் பேசுகின்றோம் ,வேற ஒருவிடயங்களை பற்றியும் பேசவில்லை எனவே இந்த விடயங்களை மக்கள் அறியவேண்டும் ஆகவே ஊடகங்களை அனுமதியுங்கள் . இந்த அரசாங்கத்தில் வெளிப்படை தன்மை இருக்கவேண்டும் ,தகவல் அறியும் உரிமை எல்லோருக்கும் இருக்கின்றது . இந்த நிலையில் தனியார் ஊடகங்களை மட்டும் வெளியேற்றுவது தவறானது என தெரிவித்தார் . இதனால் ஆத்திரமடைந்த ஆளுநர் நான் ஊடக எதிர்பாளன் அல்ல இங்கே நடைபெறும் விடயங்களை நான் பார்வையிடுகின்றேன் நீங்கள் கூட்டத்தை நடத்துங்கள் நான் ஊடகங்களுக்கு பேசவரவில்லை என தெரிவித்துவிட்டு அமர்ந்துகொண்டார் . இதனால் சிறிதுநேரம் அமளிதுமளி ஏற்பட்டது . தொடர்ந்தும் பாராளுமணர் உறுப்பினர்களின் விவாதங்களையடுத்டு ஊடககங்கள் தமது பணியை மேற்கொள்ள இடமளிக்கப்ட்டது . https://www.virakesari.lk/article/58943
Checked
Tue, 06/25/2019 - 11:33
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr