புதிய பதிவுகள்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து

1 day 10 hours ago
பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தைப்பொங்கல் வாழ்த்து பிரித்தானியாவில் வாழும் அருமையான தமிழ்ச் சமூகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கூடி தைப்பொங்கலைக் கொண்டாடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நீங்கள் அனைவரும் பாரம்பரியமாக இந்த வழிபாட்டு நாளைக் கொண்டாடுவது போன்று நானும் பிரித்தானியாவிலுள்ள தமிழர்களின் பங்களிப்பைக் கொண்டாட விரும்புகிறேன். எங்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் வணிகங்களை உருவாக்குவதிலிருந்து எங்கள் பாடசாலைகளில் பிள்ளைகளுக்குக் கற்பித்தல், நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்தல், நம் சமூகத்தில் பாதிக்கப்படக்கூடியவர்களைக் கவனித்தல் என மேலும் பல, உங்களது அருமையான பங்களிப்புக்களாகும். இந்த நாட்டை பூமியில் வாழக்கூடிய மிகச்சிறந்த இடமாக மாற்றுவதே எங்களது திட்டமாகும். எனவே எங்கள் அருமையான தமிழ்ச் சமூகத்திற்கு மகத்தான நன்றி கூறுகிறேன். இன்றும், வரவிருக்கும் நாட்களிலும் பண்டிகைகளின் ஒவ்வொரு இன்பத்தையும் விரும்புகிறேன். இனிப்பு பொங்கல் நிறைந்துள்ள பாரம்பரிய பானை போன்று நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் செழிப்புனும் வாழ எனது வாழ்த்துக்கள். நன்றி 10 Downing Street http://athavannews.com/பிரதமர்-பொரிஸ்-ஜோன்சனின்/

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு

1 day 11 hours ago
உங்கள் கருத்துடன் முழுமையாக உடன்பட முடியவில்லை. காரணம்.... இங்கே பெரும்பாலானோருக்கு, முன்மொழிவதற்கு தகுதியானவர்கள் யாரையும் தற்போதைய சூழலில் தெரியாது என்பதே பிரதான காரணமாக இருக்கு என நான் நம்புகிறேன்.

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு

1 day 12 hours ago
அழகான மாடு. சிவலிங்கத்தோடு சேர்த்து கற்பகதருவுக்கும் மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்களை சொல்லக்கூடாதா? கற்பகதரு பனம்பழங்களை கொடுத்து எத்தனை மாடுகளை வாழவைத்திருக்கிறது என்பதை நான் சொல்லித்தானா தெரிய வேண்டி இருக்கிறது? தாராளமாக பனம்பழங்களை சுவைத்து இனிய பொங்கலை கொண்டாட வாழ்த்துகள்.

கலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்

1 day 14 hours ago
நீச்சல் தடாகம் வாசிகசாலை முகப்பில் தெரியும் ஜெயவர்மன் முகம் ஜெயவர்மன் தன் தாய் நினைவாக கட்டிய கோவில் எங்கும் தன் முகத்தையே பதித்து வைத்துள்ளார் பாம்பின் வாலை பிடித்துள்ள தேவர் சூரியக்கடிகாரம் சம்பா யுத்தம். ஆகி கெமர் மொழி
Checked
Fri, 01/17/2020 - 14:52
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr