புதிய பதிவுகள்

பேரவையின் எழுக தமிழ் எந்த வகையில் முக்கியமானது? - யதீந்திரா

2 days 9 hours ago
பேரவையின் எழுக தமிழ் எந்த வகையில் முக்கியமானது? Sep 14, 20190 யதீந்திரா தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ் தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து அதன் அரசியல் பெறுமதி தொடர்பில் ஒரு சிலர் மாறுபட்ட அபிப்பிராயங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த எழுக தமிழ் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியை பலப்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்பதே அவ்வாறானவர்களின் வாதமாக இருக்கிறது. விக்கினேஸ்வரன் தொடர்ந்தும் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கின்ற நிலையில், இவ்வாறானதொரு எழுக தமிழ் அவரை பல்படுத்துவதற்கான ஒரு மறைமுக முயற்சி என்பதே மேற்படி வாதங்களின் சாராம்சமாகும். அது உண்மைதானா? ஒரு வேளை எழுக தமிழால் விக்கினேஸ்வரனது கட்சி பலமடைவதால் தமிழ் மக்களுக்கு ஏதாவது இடர்கள் ஏநற்படுமா? அல்லது எதாவது ஒரு கட்சியின் தேர்தல் திட்டங்களை மட்டும் பாதிக்கப்படுமா? விக்கினேஸ்வரன் பலமடைவதால் தமிழ் மக்களின் நலன்களுக்கு ஏதும் இடர்கள் ஏற்பட்டால் நிச்சயமாக அது எதிர்க்கப்பட்ட வேண்டிய ஒன்றுதான் ஆனால் அவ்வாறானதொரு நிலைமை இல்லை. ஒரு வேளை விக்கினேஸ்வரனை முன்னிலைப்படுத்தி தங்களின் கட்சிகளை பலப்படுத்திக்கொள்ளலாம் என்று கணக்குப் போட்டவர்களுக்கு அது ஒரு இடராக இருக்கக் கூடும். மேலும் விக்கினேஸ்வரன் ஒரு அரசியல் மையமாக எழுச்சிகொள்ள வேண்டும் அதன் மூலம்தான் ஒரு மாற்றுத் தலைமையை ஏற்படுத்தலாம் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அந்த மாற்றுத் தலைமைக்கு, தலைமை தாங்கப் போகும் கட்சியும் சின்னமும் எது என்பதில்தான் பேரவையின் அங்கத்துவ கட்சிகள் மேதிக்கொள்ள நேர்ந்தது. இதில் முக்கியமாக மேதிக் கொண்டது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்தான். மேற்படி முரண்பாடுகளின் போது, பேரவையால் கட்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கான வல்லமையை பேரவை கொண்டிருக்கவில்லை. இது விளங்கிக் கொள்ளக் கூடிய ஒன்றே – ஏனெனில் 2009இற்கு பின்னரான தமிழ் அரசியல் பரப்பில், எவர் மீதும் எவரும் அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய நிலைமை இருந்திருக்கவில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் ஒரு மக்கள் இயக்கத்தின் தேவை தொடர்பில் உணரப்பட்டது. அதற்கு ஓரளவு வடிவம் கொடுக்கும் ஒரு பணியைத்தான் தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்தது. ஆனாலும் அதனால் ஒரு கட்டத்திற்கு மேல், ஒரு மக்கள் இயக்கம் எவ்வாறிருக்க வேண்டும், அதில் கட்சிகளின் இடம் என்ன? கட்சிகளை உள்வாங்கும் போது அதற்கான எல்லைக்கோடு எது? என்பதில் பேரவையாலும் சரி, கொள்கைசார்ந்து பேரவை போன்ற ஒரு அமைப்பின் தேவை தொடர்பில் சிந்தித்தவர்களாலும் சரி அதற்கான சரியானதொரு வரையறையை முன்வைக்க முடியவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் பேரவையின்; அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான தேர்தல் அரசியல் முரண்பாடுகளால் பேரவை பலவீனமடைந்தது. பேரவை ஒப்பீட்டளவில் முன்னரை விடவும் பலவீனமடைந்திருந்தாலும் பேரவை முற்றிலுமாக செயலிழிந்துவிடவில்லை. இதற்கு விக்கினேஸ்வரனே காரணம். அவர் தொடர்ந்தும் பேரவையின் பாதுகாவலராக இருந்தார். பேரவையின் அங்கத்துவ கட்சிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகியவற்றுக்குமிடையிலான அறிக்கை போர்கள், பொது வெளியில் காட்சிப்படுத்தப்பட்ட போது, விக்கினேஸ்வரன்தான் பேரவையை பாதுகாத்தார். அதனை முற்றிலுமாக செயலிழந்து போகாமல் காத்தார். ஒரு வேளை விக்கினேஸ்வரனும் அந்த முரண்பாடுகளால் வெளியேறியிருந்தால் அப்போதே பேரவை செத்திருக்கும். இதன் காரணமாகத்தான், விக்கினேஸ்வரன் தனக்கானதொரு கட்சியை அறிவித்த பின்னரும் கூட அவரை தொடர்ந்தும் பேரவையின் இணைத் தலைவராக இருக்குமாறு அனைவருமே நிர்பந்திருந்தனர். இன்று அவ்வாறானவர்களே பேரவை விக்கினேஸ்வரன் மைய அமைப்பாக இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். பேரவை விக்கினேஸ்வரன் மைய அமைப்பாக இருந்தமைதான் இதுவரை பேரவையின் பலமாக இருந்தது என்பதை, இன்று ஆய்வுகள் செய்யும் பலரும் தங்களின் வசதிக்காக, மறந்திருக்கலாம் அனால் அது உண்மையல்ல என்பது பேரவையுடன் தொடர்புடைய அனைவருமே நன்கறிந்த சங்கதி. இன்றும் கூட அதுதான் நிலைமை. பேரவையை விக்கினேஸ்வரன் உட்பட சிலர், ஒரு மக்கள் இயக்கமாக கட்டியெழுப்ப விரும்பம் கொண்டிருந்தாலும் கூட, பேரவையால் வடக்கு கிழக்கை இணைத்தவாறு அவ்வாறானதொரு மக்கள் இயக்கமாக மேலெழ முடியவில்லை. அதற்கான உட்கடைப்புக்களையும் விரிவான உரையாடல்களையும் பேரவையால் சரியான வகையில் இதுவரை முன்னெடுக்க முடியவில்லை. இவ்வாறான சில குறைபாடுகள் இருந்தாலும் கூட, பேரவை இன்று முன்னெடுக்கும் எழுக தமிழுக்கான ஆதரவை கொடுக்க வேண்டியது கட்சி நிறங்களை கடந்த ஒரு கடப்பாடாகும். இதில் எவ்வாறு உடன்படலாம் என்னும் ஒரு கேள்வியை சிலர் முன்வைக்கலாம். அது மிகவும் இலகுவானது – பேரவை ஆறு பிரதான கோரிக்கைகளின் அடிப்படையில்தான், இந்த எழுக தமிழுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது, சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து, சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்து, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்து, வடக்கு – கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து, இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீளக்குடியமர்த்து – அகியவையே மேற்படி அறு கோரிக்கைகளாகும். எனவே எழுக தமிழை ஒருவர் எதிர்க்கிறார் என்றால் அவருக்கு மேற்படி கோரிக்கைகளுடன் உடன்பாடில்லை என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். மேற்படி கோரிக்கைகளுடன் உடன்படக் கூடிய அனைவரும் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வில் கலந்துகொள்ளலாம் அல்லது அதற்கு ஆதரவான தங்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தலாம். தாங்கள் சார்ந்த அமைப்புக்களின் அங்கத்தவர்களை இதில் பங்குகொள்ளுமாற கோரலாம். பேரவையின் எழுக தமிழக்கான ஆதரவையும் எதிர்ப்பையும் அதன் கோரிக்கைகளின் அடிப்படையில்தான் நோக்க வேண்டுமேன்றி, அதில் பங்குகொள்பவர்கள் யார், அதனால் அவர்களது கட்சிகள் பெறப்போகும் நன்மை என்ன – என்னும் கேள்விகளால் இந்த நிகழ்வை அணுகக் கூடாது. எழுக தமிழ் மட்டுமல்ல – எந்தவொரு அரசியல் நோக்கம் கொண்ட நிகழ்வுகளிலும் கட்சிகள் பங்குகொள்ளும் போது, அதிலிருந்து அந்தக் கட்சிகளும் நன்மை பெறலாம். அதனால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீங்கு ஏற்படப் போவதில்லை. அந்த வகையில் எழுக தமிழால் விக்கினேஸ்வரன் நன்மையடந்தால் அது தமிழ் மக்களுக்கும் நன்மைதான். எனெனில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக, கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக சமரசமின்றி குரல் கொடுத்துவரும் ஒய்வு பெற்ற ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியின் கரங்கள் பலமடைகின்றன. அதனால் தமிழ் மக்களுக்கு எப்படி தீங்கு ஏற்படும்? பேரவை இதற்கு முன்னர் முன்னெடுத்த எழுக தமிழும் சரி, தற்போது முன்னெடுக்கவுள்ள எழுக தமிழும் சரி, வடக்கு கிழக்கு நிலைமைகளில் மட்டும் வைத்து, நோக்க வேண்டிய ஒன்றே அன்றி, அதனை ஏனைய நாட்டு உதாரணங்களுடன் பொருத்தி நோக்க வேண்டியதில்லை. உதாரணமாக கொங்கொங்கில் காணப்படும் அரசியல் நிலைமை வேறு வடக்கு கிழக்கில் காணப்படும் நிலைமை வேறு. அவசரமான ஆய்வுலக கற்பனைகளால் இந்த நிலைமைகளை எடைபோட முடியாது. இதன் காரணமாகத்தான் இந்த பத்தியாளர் கடந்த வாரம் எழுதிய கட்டுரையில் மக்கள் எழுச்சி என்பது வார விடுமறையில் நடைபெறும் மாத கோவில் ஆராதனையல்ல என்று குறிப்பிட்டிருந்தார். தமிழ் மக்களின் மனோநிலை, அவர்களின் அரசாங்க வேலைத்தன மனோபாவம் ஆகிய பல விடயங்களை கருத்தில்கொண்டுதான் மக்கள் பேராட்டங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். இன்றைய சூழலில் ஆகக் குறைந்தது அவ்வப்போது மக்களை முடிந்தவரையில் அணிதிரட்டி, சில விடயங்களை நாம் மறக்கவில்லை என்பதை கூறினாலே போதுமானது. இந்த எழுக தமிழ் மூலம் அதனைத்தான் நாம் எதிர்பார்க்கலாம். இன்றைய சூழலில் பேரவை போன்றதொரு அமைப்பால் முன்னெடுக்கக் கூடிய ஆக உச்சமானதொரு நிகழ்வுதான் இந்த எழுக தமிழ். அதனை ஆதரிக்க வேண்டிய ஒரு தமிழ் தேசிய நிலைப்பாடாகும். http://www.samakalam.com/blog/பேரவையின்-எழுக-தமிழ்-எந்/

எழுக தமிழை ஆதரிக்க வேண்டியது ஈழத் தமிழர்களின் கடமையாகும்

2 days 9 hours ago
எழுக தமிழை ஆதரிக்க வேண்டியது ஈழத் தமிழர்களின் கடமையாகும் ஒரு மக்கள் இயக்கம் என்னும் வகையில், தமிழ் மக்கள் பேரவையானது, 2016இல் வடக்கிலும் கிழக்கிலும் ‘எழுக தமிழ்’ நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தது. முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பின்னர் எமது மக்களை, ஓர் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் அணிதிரளச் செய்ததில் எழுக தமிழ் நிகழ்வுகளுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. ஏனெனில், இறுதி யுத்தத்தின் விளைவுள் ஏற்படுத்திய அச்சம், பதட்டம் மற்றும் தாழ்வு மனப்பாண்மை என்பவற்றால் எமது மக்கள் வெறுமனே தேர்தல்கால வாக்குறுதிகளுடன் கட்டுண்டு கிடந்த ஒரு சூழலில்தான், ”எழுக தமிழ்’ இடம்பெற்றது. இந்த எழுச்சியானது, தமிழ் புலம்பெயர் சமூகத்திற்குள்ளும் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்தியது. ஒரு பெரும் விடுதலைப் போராட்டத்தின் இராணுவ ரீதியான தோல்வியானது, அந்தப் போராட்டம் முன்னிலைப்படுத்திய தேசத்தின் அரசியல் தோல்வியல்ல என்பதை பறைசாற்றும் வகையில், மக்களை விழிப்பூட்டுவதும், அணிதிரளச் செய்வதும் தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதையாகும். 2009இற்கு பின்னரான அரசியல் சூழலில் தென்னிலங்கை எதைச் செய்ய முயற்சிக்கின்றது என்பதை தெளிவாக புரிந்துகொண்டால்தான் ‘எழுக தமிழ்’ போன்ற நிகழ்வுகளின் முக்கியத்துவத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவரீதியான வீழ்ச்சியுடன் தமிழர் தேசத்தின் தனித்துவமான அரசியல் கோரிக்கைகளும் முற்றிலுமாக இறந்துவிட்டன என்றவாறான ஒரு தோற்றப்பாட்டையே தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் திட்டமிட்டு முன்னெடுத்துவருகின்றனர். இந்த விடயத்தில் தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் மத்தியில் கட்சி வேறுபாடுகள் எதுவுமில்லை. ஆட்சி மாற்றம் இந்த விடயத்தில் சில அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றவாறான, நம்பிக்கைகள் ஊட்டப்பட்ட போதிலும் கூட, அதுவும் மிக மோசமான தோல்வியையே சந்தித்திருக்கிறது. தமிழ் மக்களின் பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின்னரும் கூட, தமிழர் தாயகப்பகுதியின் மீதான நில மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்படவில்லை. அது பல்வேறு வழிகளில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்துவரும் கட்சிகளால் சிங்கள ஆட்சியாளர்களின் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்கள் எதனையும் தடுத்துநிறுத்த முடியவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில், தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள தெரிவுகள் என்ன? தேர்தல் அரசியலால் இந்த நிலைமையை தடுத்து நிறுத்த முடியாதென்பது தெட்டத்தெளிவான நிலையில், சாத்வீக வழியில் போராடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு முன்னால் வேறு தெரிவுகள் எதுவும் இல்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் தமிழ் மக்கள் பேரவை மீண்டுமொரு எழுக தமிழுக்கான அழைப்பை விடுத்திருக்கிறது. ஈழத் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்திப்பவர்கள் எவராலும் இதனை ஆதரிக்காமல் இருக்க முடியாது. அந்த வகையில், பேரவையின் எழுக தமிழில், ஈழத் தமிழர் நலனுக்காக போராடும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டியதும், அதன் வெற்றிக்காக உழைக்க வேண்டியதும் காலத்தின் தேவையாகும். எனவே ஈழத்-தமிழ் மக்களின் நலனை முனிறுத்தி இயங்கிவரும் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் தமிழ் தொழிற்சங்கங்கள், இளைஞர் அமைப்புக்கள் மற்றும் ஏனைய முற்போக்கு அமைப்புக்கள் – அனைவரும் ஓரணியாக திரண்டு, எழுக தமிழை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இதில் கடந்தகால பேதங்கள் மற்றும் தனிநபர் முரண்பாடுகளை முதன்மைப்படுத்துவதானது, எழுக தமிழ் நிகழ்வுகளை பலவீனப்படுத்துவதற்கே வழிவகுக்கும். அவ்வாறான செயற்பாடுகள் அதன் இறுதி அர்த்தத்தில் சிங்கள ஆக்கிரமிப்புக்களையே பலப்படுத்தும். குறுகிய தேர்தலரசியல் நலன்களையும், கட்சிப் போட்டிகளையும் முன்னிலைப்படுத்தி, எழுக தமிழை பேரம்பேச முற்படுவதானது அடிப்படையிலேயே தவறான ஒன்றாகும். அது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு நன்மை சேர்க்காது. 2009இற்கு பின்னர் களத்திலும் புலத்திலும் நன்கு நிறுவனமயப்பட்ட கட்சிகளோ அல்லது அரசியல் இயக்கங்களோ இல்லாமல் இருப்பதான் காரணமாகவே இவ்வாறான முரண்பாடுகள் தொடர்க்கின்றன. இந்த நோயை குணப்படுத்துவதும் நம் அனைவரதும் பொறுப்புத்தான். தமிழர் தாயகப் பகுதியில் எவ்வாறு அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு எழுக தமிழின் வெற்றிக்காக உழைக்க வேண்டியது கட்டாயமான ஒன்றோ, அவ்வாறே நாடுகடந்த சூழலில் செயலாற்றும் அனைத்து ஈழத் தமிழர் அமைப்புக்களும், பாரபட்சங்களையும் கருத்து முரண்பாடுகளையும் புறம்தள்ளி, எழுக தமிழின் வெற்றிக்காக பாடுபட வேண்டியதும் கட்டாயமான ஒன்றாகும். தாயகத்திலுள்ள தமது அரசியல் மற்றும் சமூக அமைப்புக்கள்சார் தொடர்புகளை பயன்படுத்தி, எழுக தமிழின் வெற்றிக்காக அனைத்து புலம்பெயர் அமைப்புக்களும் தங்களது முழுமையான ஆதரவை நல்கவேண்டும். இது நமது மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை மேலும் பலப்படுத்தவும் நமக்குள் நிலவும் அமைப்புசார் இடைவெளிகளை புறம்தள்ளி செயலாற்றவும் உதவும். உண்மையில் எழுக தமிழ் நிகழ்வின் வெற்றியானது, ஈழத் தமிழ் மக்களின் நலனுக்காக உழைத்துவரும் நம் அனைவரதும் வெற்றியாகும். நிமால் விநாயகமூர்த்தி புலம்பெயர் அரசியல் செயற்பாட்டாரும் தமிழ் உணர்வாளரும் http://www.samakalam.com/செய்திகள்/எழுக-தமிழை-ஆதரிக்க-வேண்ட/

“அரசியலாய்ப் பார்க்காது தமிழர்களின் அடையாளமாக எழுக தமிழைப் பாருங்கள்”

2 days 9 hours ago
“அரசியலாய்ப் பார்க்காது தமிழர்களின் அடையாளமாக எழுக தமிழைப் பாருங்கள்” ஒட்டு மொத்த தமிழ் மக்களின் அடையாளமாக தமிழ் மக்களின் இருப்புக்காண பிரதிபலிப்பாக எழுக தமிழை பாருங்கள் என மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மன் தெரிவித்துள்ளார். வருகின்ற 16 ஆம் திகதி யாழ்பாணத்தில் இடம் பெறவுள்ள எழுக தமிழ் பற்றி இன்று (14.09.2019) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாரும் அரசியல் இலாபம் கருதியோ மக்களை திசை திருப்பும் நோக்கிலோ எழுக தமிழ் நிகழ்வை பார்ப்பது எவ்விதத்திலும் பொருத்தமற்றது. தொடர்ச்சியாக எமது தமிழ் மக்களின் இருப்பை இவ்வாறான நிகழ்வுகள் போராட்டங்கள் புறக்கணிப்புக்கள் மாத்திரமே சர்வதேச ரீதியில் கொண்டு சேர்க்கின்றது. எமக்குள் இருக்கும் பிரிவுகளை ஒரு கணம் மறந்து சர்வதேசத்திற்கு மாத்திரம் அல்ல எமது நாட்டு அரசியல் தலைமைகளுக்கும் எமது இருப்பை காட்ட வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே எமக்குள் ஆயிரம் ஆயிரம் மனக் கசப்புகள் இருக்களாம். ஆனாலும் ஒட்டு மொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாக எமது கரங்கோர்த்து எழுக தமிழ் எழிச்சி நிகழ்வுக்கு ஒன்று திரண்டு ஒத்துழைப்பை வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/64756

கூவுவதற்கான உரிமையை.. சட்டப் போராட்டத்தின் ஊடாக வெற்றி கொண்ட சேவல்!

2 days 9 hours ago
மிஸ்டர் பிரொன் நாலு கோழியை வாங்கி தன் வளவுக்குள் விட்டிருந்தால் கூவாமல் பிரச்சினை முடிந்திருக்கும்.....! 🐓

தெற்காசிய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை..!

2 days 9 hours ago
தெற்காசிய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை..! தெற்காசிய விளையாட்டு விழா போட்டி வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்கேற்கவுள்ள முதல் தமிழ் வீராங்கனையாக விஜயபாஸ்கர் ஆர்ஷிக இடம்பெறவுள்ளளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் தெற்காசிய விளையாட்டு விழா ஆரமமாகவுள்ளதாகவும், இதில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிக, தனது 13 ஆவது வயதில் பளு தூக்கல் விளையாட்டை ஆரம்பித்தார். இவருக்கு தந்தையே பயிற்றுவிற்பாளராக செயற்பட்டு வருகின்றார். 2014 ஆம் ஆண்டில் தனது 13 ஆவது வயதில் பாடசாலை மட்ட பளு தூக்கல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஆர்ஷிகா, அன்று முதல் பாடசாலை மட்ட சகல போட்டிகளிலும் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. கனிஷ்ட பிரிவில் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 4 தங்கப்பதக்கங்களையும் சிரேஷ்ட பிரிவில் 3 வெள்ளி 2 தங்கப்பதக்கங்களையும் ஆர்ஷிகா வென்றுள்ளார். அகில இலங்கை பாடசாலைகள் மட்ட 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான பளுதூக்கல் போட்டிகளில் மூன்று தேசிய சாதனைகளுடன் வெற்றியீட்டியவர். இப்படி பல சாதனைகளை ஆர்ஷிகா படைத்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/64765

பத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்

2 days 9 hours ago
பத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர் சவுதிஅரேபியாவின் முக்கியமான எண்ணெய் தொழிற்சாலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்கள் அறிவித்துள்ளனர். யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்களின் பேச்சாளர் ஒருவர் தாக்குதலிற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். ஹெளதி கிளர்ச்சிக்குழுவினர் தமது அல்மசீரா ஊடகத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அப்கேயக் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீதும் குரைஸ் எண்ணெய் வயல்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு 10 ஆளில்லா விமானங்களை அனுப்பியதாக யேமனின் கிளர்ச்சிக்குழுவினர் தெரிவித்துள்ளனர். யேமனில் தாக்குதல்கள் தொடர்ந்தால் சவுதிஅரேபியா மீது தாக்குதல்கள் தீவிரமடையலாம் என ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை தவிர்ப்பதற்கு சவுதி அரேபிய அரசாங்கம் எங்களை தாக்காமலிருப்பதே ஒரே வழி எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை அப்கெயக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டவேளை எடுக்கப்பட்ட வீடியோக்களில் பின்னணியில் துப்பாக்கி சத்தத்தை கேட்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது. அரம்கோவின் மிகப்பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அப்குவைக்கில் முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது . ஆளில்லா விமானதாக்குதல்களை தொடர்ந்து தொழிற்சாலையிலிருந்து பாரிய தீப்பிழம்புகளும் கரும் புகை மண்டலமும் வெளியாவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக இதுவரை செய்திகள் வெளியாகாத அதேவேளை இந்த தாக்குதல் காரணமாக மத்தியகிழக்கில் பதற்ற நிலை மேலும் தீவிரமடையும் ஆபத்து உருவாகியுள்ளது என கார்டியன் குறிப்பிட்டுள்ளது. யேமன் கிளர்ச்சியாளர்களிற்கு ஈரான் மறைமுக ஆதரவை வழங்கிவருவதும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி அவர்களிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/64780

ரணிலா? சஜித்தா? பந்து பங்காளிக்கட்சிகளிடம்....

2 days 9 hours ago
ரணிலா? சஜித்தா? பந்து பங்காளிக்கட்சிகளிடம்.... ஜனாதிபதி தேர்தல் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான அடுத்தகட்ட நகர்வுகளிலும் அரசியல் பேச்சுக்களிலும் ஈடுபட்டுவருகின்றன. தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் தேர்தல் ஆணைக்குழு பிரதிநிதிகள் ஈடுபட்டுவருகின்ற சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகிவருகின்றன. ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன ஜனாதிபதி தேர்தலை நோக்கியான மக்கள் கூட்டங்களை நடத்திவருகின்றன. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ தினமும் மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டு உரையாற்றிவருகின்றார். பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் தொடர்ந்து கோத்தபாயவுக்கான மக்கள் கூட்டங்களை நடத்திவருகின்றனர். அதேபோன்று மக்கள் விடுதலை முன்னணியும் மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் தனது வேட்பாளரை ஆதரித்து தேர்தல் கூட்டங்களை நடத்திவருகின்றன. இவ்வாறு ஜனாதிபதி தேர்தல் விவகாரம் நாட்டில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியுமே இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காமல் புரியாத புதிரை வெ ளிக்காட்டிவருகின்றன. சுதந்திரக் கட்சி தனி வேட்பாளரை அறிவிக்குமா? அல்லது ஏதாவது ஒரு பிரதான கட்சிக்கு ஆதரவளிக்குமா? என்ற விடயத்தை இதுவரை தெளிவான முறையில் அறிவிக்காமல் உள்ளது. சுதந்திரக் கட்சியை பொறுத்தவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலைவிட அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலையே இலக்கு வைத்துள்ளதாக தெரிகின்றது. ஜனாதிபதி தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்காமல் ஒரு வகிபாகத்தை வகித்துவிட்டு பாராளுமன்ற தேர்தலில் யார் ஆட்சியமைப்பது என்பதனை தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதே சுதந்திரக் கட்சியின் நோக்கமாக இருப்பதாக தெரிகின்றது. கடந்தவாரம் இப்பகுதியில் நாம் அது தொடர்பில் அலசி ஆராய்ந்திருந்தோம். ஆனாலும் சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் தனது முடிவு தொடர்பில் புதிர்போட்ட வண்ணமே உள்ளது. ஒரு முடிவை சரியாக அறிவிக்காமல் இருக்கின்றது. இது அரசியல் களத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையாகும். சுதந்திரக் கட்சியின் நடவடிக்கைகளை பார்க்கும்போது பொதுஜன பெரமுன பக்கமே சார்ந்துபோகும் என்பது தெளிவாக தெரிகின்றது. ஆனால் மொட்டு சின்னத்தை ஏற்றுக்கொள்வதில் சுதந்திரக் கட்சிக்கு பாரிய தயக்கம் காணப்படுகின்றதாகவே தெரிகின்றது. மொட்டு சின்னம் அல்லாது வேறு சின்னத்தில் வந்தால் பொதுஜன பெரமுனவுடன் இணைவது குறித்து பரிசீலிக்கலாம் என்று சுதந்திரக் கட்சி தொடர்ச்சியாக தெரிவித்துவருவதை காணலாம். நிலைமை இவ்வாறு இருக்க ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி மக்களைப்படுத்தும் பாடு பெரும்பாடாக இருக்கின்றது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் மக்களும் குழம்பியுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே பாரிய குழப்பங்கள் நீடித்துவருகின்றன. தற்போதைய நிலையில் வேட்பாளர் பதவிக்காக ஐக்கிய தேசிய கட்சிக்குள் மும்முனை போட்டி இல்லாமல் போய்விட்டது. போட்டிக் களத்தில் சபாநாயகர் கருஜயசூரியவின் பெயர் இருந்தாலும் தற்போது ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் பெயர்களே அதிகளவில் பேசப்படுகின்றன. போட்டிக்களத்தில் இவர்கள் இருவருமே இருப்பதாக தெரிகின்றது. ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே விட்டுக்கொடுப்பதாக இல்லை. தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்பதில் ரணில் விக்பிரமசிங்கவும் தீவிரமாக இருப்பதுடன் அதற்கான இராஜதந்திர நகர்வுகளிலும் அணுகுமுறையிலும் ஈடுபட்டுவருகின்றார். அதேபோன்று அமைச்சர் சஜித் பிரேமதாசவும் தானும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டே தீருவேன் என்பதில் உறுதியாக இருப்பதுடன் நாட்டின் பல பகுதிகளிலும் அவருக்கு ஆதரவான கூட்டங்களையும் நடத்திவருகின்றார். அந்தக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றும் சஜித் பிரேமதாச தான் நிச்சயமாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்பதனை உறுதியாக கூறிவருகின்றார். இந்த நிலையில்தான் ஐக்கிய தேசிய கட்சிக்குள் வேட்பாளரை தெரிவு செய்வதில் பாரிய முரண்பாடுகளும் இழுபறி நிலைமைகளும் நீடித்துவருகின்றன. இருவரில் எவருமே விட்டுக்கொடுப்பதாக இல்லை. இந்த சூழலில் கடந்தவாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். அதன்போது தான் கட்சியின் சார்பில் இம்முறை தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கின்றேன் என்ற வகையில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். அவர் இவ்வாறு நேரடியாக கூறினார் என்பதனைவிட அந்த தொனியில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். எனினும் இதன்போது கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த சஜித் ஆதரவாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சற்று முரண்பாடான நிலை தோன்றியுள்ளது. இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை நேரடியாக சந்திக்க வைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல தடங்கல்களுக்கு பின்னர் இந்த சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நீண்டநேரம் இந்த விடயம் குறித்து பேசப்பட்டுள்ள போதிலும் இணக்கப்பாடுகள் எதுவுமின்றி சந்திப்பு நிறைவடைந்துள்ளது. இதன்போது இருவருமே தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளனர். எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில முக்கிய விடயங்களை முன்வைத்திருக்கின்றார். இதேவேளை அமைச்சர் சஜித் பிரேமதாசவும் சில விடயங்களை உறுதியாக முன்வைத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை ஆதரவும் மக்களின் ஆதரவும் தனக்கு கிடைத்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரதித் தலைவர் சஜித், தான் ஒருபோதிலும் கட்சியின் யாப்பினை மீறிய எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்பதை எடுத்துக்கூறியுள்ளார். தான் கட்சிக்குள் வீணான குழப்பங்களை ஏற்படுத்தவில்லை எனவும் கட்சியையும் அரசாங்கத்தையும் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கமே தனக்கு இருப்பதாக அவர் பிரதமரிடம் எடுத்துக்கூறினார். எனினும் இதன்போது கருத்து கூறிய பிரதமர் ரணில், கட்சியாக எடுக்கும் தீர்மானங்களுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். இதில் எவரும் நினைத்தால் போல் செயற்பட முடியாது. கட்சிக்குள் ஆதரவு இருக்குமானால் அதனை கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசி தீர்வு காண முடியும். வெளியில் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இதன்பின்னர் முக்கியமான விடயம் ஒன்றை பிரதமர் முன்வைத்துள்ளார். அதாவது நீங்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவதென்றால் கட்சியின் சகல தரப்பின் அல்லது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே அதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். அது மட்டுமல்லாது ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் மற்றும் தமிழ் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ளவும் புதிதாக இணைய இணக்கம் தெரிவிக்கும் கட்சிகள், வடக்கு, கிழக்கின் பிரதிநிதிகள் ஆகியோரின் இணக்கத்தை பெற்றுகொண்டால் உரிய தீர்மானம் எடுக்க முடியும் என அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதனை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டதாகவே தெரிகின்றது. அதன்படி தமிழ், முஸ்லிம் கட்சிகள், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்துள்ள சிங்கள கட்சிகள் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகளை சஜித் நடத்தி வருகின்றார். அதன்படி வார இறுதியில் இன்று அல்லது நாளை இது தொடர்பில் கட்சிக்குள் பேச்சு நடத்தி இறுதி தீர்மானம் எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் இவ்வாறு அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் கூறியமைக்கும் காரணங்கள் இருக்கலாம். காரணம் ஐக்கிய தேசிய முன்னணியில் கூட்டு வைத்துள்ள சிறுபான்மை கட்சிகள் தன்னையே ஆதரிக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் கணக்கு போடலாம். எனவே கூட்டணி வைத்துள்ள சிறுபான்மை கட்சிகள் தன்னையே ஆதரிப்பதாக கூறினால் தான் வேட்பாளராகுவதில் சிக்கல் இல்லை என்று பிரதமர் கருதுகிறார். எனவே அவ்வாறு ஒரு அரசியல் காய் நகர்த்தலை முன்னெடுத்துள்ளார். ஆனால் மறுபுறம் அடிமட்ட மக்களின் ஆதரவு தனக்கே உள்ளது எனவே தன்னையே ஐக்கிய தேசிய முன்னணியில் கூட்டு வைத்துள்ள கட்சிகள் ஆதரிக்கும் என்று சஜித் அரசியல் கணக்கு போடுகின்றார். எனவே அவரும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். அப்படியாயின் இப்போது தெளிவான முறையில் பந்து சிறுபான்மை கட்சிகளின் கைகளில் உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணியில் கூட்டு கட்சி இல்லையாயினும் கூட அக்கட்சியின் ஆதரவு தேர்தலில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. தற்போதைய அரசியல் கள நிலைமைகளை பார்க்கும்போது தமிழ்க் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரையே ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படியாயின் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கப்போகின்றது? ரணிலையா சஜித்தையா? ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அடிக்கடி சந்தித்து வருகின்றனர். மேலும் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடமும் தற்போது அரசியல் பந்து காணப்படுகின்றது. மிக முக்கியமாக இந்த நான்கு தரப்பினரும் கூறப்போகும் முடிவிலேயே ரணில் விக்கிரமசிங்கவா, சஜித் பிரேமதாசவா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் என்று தெரிகிறது. அதேபோன்று சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெலஉறுமய கட்சியும் இந்த விடயத்தில் ஒரு பிரதான பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் தற்போது கடந்துகொண்டிருக்கும் தினங்கள் மிகவும் தீர்க்கமானதாக அரசியல் களத்தில் பார்க்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவா, சஜித் பிரேமதாசவா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கின்றது. ஆனால் கேள்விக்கான பதில் பாரிய இழுபறிக்குள்ளேயே சிக்கியிருக்கிறது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் மக்கள் விடுதலை முன்னணியும் தமது கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். ஆனால் சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் தொடர்ந்தும் தாமதித்துக்கொண்டிருக்கின்றன. ஐக்கிய தேசியக்கட்சியைப் பொறுத்தவரையில் நிலைமை சற்று சிக்கலான தாகவே காணப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் தொடர்ந்தும் விட்டுக் கொடுக்காமல் நீடிப்பதன் காரணமாக நிலைமை தாமதமடைந்து செல்கின்றது. ஆனாலும் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. அவ்வாறு தேர்தலுக்கான அறிவிப்பு நெருங்கும்போது ஐக்கிய தேசியக்கட்சி தொடர்ந்தும் இந்தவிடயத்தில் தாமதத்துடன் செயற்பட முடியாது. விரைவாக ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் தான் போட்டியிடாமல் விட்டுக்கொடுத்தார். எனவே அவர் இம்முறை எப்படியாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். மறுபுறம் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் ஏற்கனவே தான் போட்டியிடுவேன் என மக்கள் மத்தியில் அறிவித்துவிட்டதால் அவராலும் அதிலிருந்து பின்வாங்க முடியாது. தான் பின்வாங்கவும் மாட்டேன் என உறுதியாக கூறியிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரி தரப்புடன் கூட்டணி அமைக்கப்போகின்றார் என்ற விடயத்துக்கும் சஜித் மறுப்பு வெளியிட்டுள்ளார். தான் அவ்வாறு ஒருபோதும் சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று சஜித் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரசியல் என்பது விசித்திரமானது. அரசியலில் எப்போதும் எதுவும் நடக்கலாம். எப்படியிருப்பினும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் வேட்பாளரை தெரிவு செய்வதில் தொடர்ந்து முரண்பாடுகளும் இழுபறியும் நீடிக்கின்றன. இறுதியாக தற்போது இது தொடர்பான விடயம் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டுக்கட்சிகளிடம் சென்றிருக்கிறது. கூட்டுகட்சிகள் யாரை ஆதரிக்கின்றனவோ அவர் வேட்பாளராகவரும் சாத்தியம் காணப் படுகின்றது. எனவே ரணிலா, சஜித்தா என்பதை ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளே தீர்மானிக்கப்போகின்றன என்பதே யதார்த்தமாகும். இன்னும் சில தினங்களில் முடிவு வரலாம். - ரொபட் அன்டனி - https://www.virakesari.lk/article/64778

காணி விடுப்பு தொடர்பிலான கலந்துரையாடல்….

2 days 9 hours ago
காணி விடுப்பு தொடர்பிலான கலந்துரையாடல்…. September 14, 2019 யாழ் மாவட்டத்தில் முப்படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளைவிடுவிப்பதுதொடர்பிலான கலந்துரையாடலொன்றுயாழ் மாவட்டச் செயலகத்தில் இன்றுநடைபெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தலைமையில் நடைபெற்றஇக் கலந்துரையாடலில் வடக்குமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்து கொண்டிருந்தார் மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாராளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராசா, சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், இரானுவம், காவற்துறையினர், கடற்படையினர் அரசஅதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன் போது யாழ் மாவட்டத்தில்முப்படைகளின் வசம் உள்ள பொதுமக்களின் காணிகள் குறித்தும்விடுவிப்பதற்கு முன்னெடுக்க வேண்டியநடவடிக்கைகள் குறித்தும்ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/130494/

பாதுகாப்பு தரப்பிடம் உள்ள தனியார் காணிகளை, மீள கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன…

2 days 9 hours ago
பாதுகாப்பு தரப்பிடம் உள்ள தனியார் காணிகளை, மீள கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன… September 14, 2019 படையினரிடம் உள்ள காணிகள் – வடமாகாண ஆளுநர் அலுவலக அறிக்கை படைத்தரப்பு மற்றும் காவற்துறையினரால் பயன்படுத்தப்படும் வடமாகாணத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் படைத்தரப்பு மற்றும் காவற்துறையினரால் பயன்படுத்தப்படும் வடமாகாணத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, ஆளுநரினால் யாழ். மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீள் உரிமைகோரல் விண்ணப்பப்படிவங்கள் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படுக் கொண்டிருக்கின்றன. இந்த திட்டத்தின் அடிப்படையில் அடுத்த கட்டமாக ஏனைய மாவட்டங்களிலும் முப்படையினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை காணிகளின் உரித்தாளர்கள் அறியத்தருவதன் மூலம் அவர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களாயின் அவர்களும் தமது காணிகளை அடையாளப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதற்காக தயாரிக்கப்பட்ட விசேட விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உரிமைகோரலுக்கான தகுந்த ஆதாரத்துடன் அல்லது தகுந்த விளக்கத்துடன் மீளப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு காணி உரிமையாளர்களை கேட்டுக்கொள்கின்றோம். குறித்த விண்ணப்பப் படிவத்தினை ஆளுநர் செயலகம், மாவட்ட செயலகம் , பிரதேச செயலகம் மற்றும் வடமாகாண சபையின் np.gov.lk இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். காணி உறுதியின் பிரதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை இணைத்து எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் ´காணி கோரல் ´ வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி , யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2019/130479/

SLFP -SLPP கட்சிகள் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை…

2 days 9 hours ago
SLFP -SLPP கட்சிகள் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை… September 14, 2019 அமைச்சர் சஜித் பிரேமதாச சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும் என அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக் கட்சியின் சுவை மற்றும் அனுபவம் தொடர்பில் நன்கு அறிந்தவராவார் எனவும் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஒருபோதும் கட்சியின் சின்னத்தை மாற்றுவதற்கு இணங்க போவது இல்லை எனவும் அதனால் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுனக் கட்சிகள் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/2019/130484/
Checked
Mon, 09/16/2019 - 19:54
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr