புதிய பதிவுகள்

தமிழக தலைவர்களுக்கு நாமலின் விசேட கோரிக்கை

4 months 1 week ago
இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றிருப்பது குறித்து தமிழக அரசியல் தலைவர்களினால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்களை சாடியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ , இலங்கை தமிழ் மக்களை உணர்வுபூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்கள் சந்தர்ப்பவாத அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து அந்த மக்களின் எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைக்கக் கூடியதாக இயன்றவரை பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு விஷேட அழைப்பு விடுத்து இருபக்க அறிக்கையினை வெளியிட்டிருக்கும் நாமல் ராஜபக்ஷ அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது : தமிழகத்தின் சில அரசியல் தலைவர்கள் இலங்கை தமிழ் மக்களைப் பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்ததும் இல்லை. அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எந்த ஒரு ஆக்க பூர்வமான செயற்பாட்டை செய்ததுமில்லை. மாறாக தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக எமது நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவது தான் மிகுந்த வேதனை தரும் உண்மை. எமது கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது பல நாடுகளின் தலைவர்கள், குறிப்பாக இந்திய பிரதமர் உள்ளிட்ட பாரதத்தின் பல அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். தமிழகத்தில் தமது சுய நல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக எமது நாட்டில் தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளவர்களாகக் காட்டி முதலைக்கண்ணீர் வடிக்கும் மதிமுக வின் பொதுச் செயலாளர் வைகோ , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் , பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அறிக்கைகளை கண்ணுற்றேன். அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர அவற்றில் வேறேதும் இல்லை. மக்களை பகடை காய்களாக்கும் , எம்மக்களிடையே பகைமையையும் துவேஷத்தையும் தூண்டிவிடும் தரங்கெட்ட அரசியலைத்தவிர வேறு என்ன ஆக்க பூர்வமான விடயத்தை செய்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு என்னுள் என்னால் தடுக்க முடியவில்லை. 2009 இல் யுத்தம் நிறைவடைந்த காலத்தில் மறைந்த தமிழகத்தின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கட்சியான திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பிலான பாராளுமன்ற குழு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு , வடக்கு - கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சினேக பூர்வமான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தமை உலகம் அறிந்த விடயமாகும். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்டதுடன், எம்முடன் சினேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் , எமது நிலைப்பாடுகளையும் தெளிவுற அறிந்து கொண்டார். அத்தகையவர் இன்று இவ்வாறு சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது. எமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படை தன்மையுடனும் , நல்லெண்ணத்துடனும் செயற்படும். தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக் கொள்ள விரும்புவது யாதெனில், நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசை விமர்சிப்பதை விடுத்து நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது. ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து எமது நாட்டு தமிழ் மக்களை உளப்பூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்களாக நீங்கள் இருந்தால் , எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைய முடிந்தவரை பொறுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் என தமிழகத்தின் அரசியல் தலைவர்களை அன்புடனும் மரியாதையுடனும் கேட்டுக் கொள்கின்றேன். https://www.virakesari.lk/article/69272

ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு

4 months 1 week ago
வேறு, உள் மற்றும் மற்ற வெளியார் தலையீட்டால் பிரச்சனைகள் சீனா - சொறி சிங்களத்திக்கிடையே இருக்கிறது. அந்த பிரச்னைகள் தெரியாவிட்டாலும், மிகவும் அந்நியோன்னியமான உறவை கொண்ட, சமீபத்தில் port city பேரத்தை முடித்த பின்ணணியில், ஆங்கிலத்தில் நீங்கள் இணைத்த அறிக்கையை, சுமுகமான உறவின் புரிதலை மட்டும் மனதில் நிறுத்தி, மீண்டும் வாசித்துப் பாருங்கள், ராஜதந்திர மொழி புரிதல் மற்றும் பிரோயகம் தெரிந்திருந்தால் இன்னும் இலகு . ஆகக் குறைந்தது உறவுகள் திருப்திகரமாக இல்லை என்பதை காட்டும்.

190 ஆண்டுகளுக்கு முந்தைய கையெழுத்து பிரதி ரூ.6.20 கோடிக்கு ஏலம்

4 months 1 week ago
190 ஆண்டுகளுக்கு முந்தைய, மிகச்சிறிய அளவிலான புத்தகமொன்றை, பாரிஸில் நடந்த ஏலத்தில் லண்டன் அருங்காட்சியகம் மிகப்பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது. கிளாசிக் என்று போற்றப்படும் நாவல்களை ஆங்கிலத்தில் எழுதியவர் சார்லட் பிராண்டே. இவர், தன் 14ஆவது வயதில் எழுதிய, மிகச்சிறிய கையெழுத்துப் பிரதியொன்று பாரிஸில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று, லண்டன் அருங்காட்சியகம் இதனை 6 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது. வெஸ்ட் யார்க் ஷயரில் உள்ள சார்லட்டின் வீட்டில் இது வைக்கப்படவிருக்கிறது. https://www.polimernews.com/dnews/89421/190-ஆண்டுகளுக்கு-முந்தையகையெழுத்து-பிரதி-ரூ.6.20கோடிக்கு-ஏலம் Bronte manuscript sells for 780,000 euros at Paris auction Written when the author was 14, the book will now be retutned to a musuem in her hometown of Haworth, West Yorkshire. https://www.aljazeera.com/news/2019/11/bronte-manuscript-sells-780000-euros-paris-auction-191118180946773.html

தமிழீழ பாட்டு வரிகள்

4 months 1 week ago
பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s0SCFjRJlgXI ம‌ண்மீட்பு போரினில் ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ள் பொற்றோரை வாழ்த்திடுவோம் புன்ன‌டிக‌ள் தான் க‌ழுவி பாவிசெய்த்து பூதூவி அவ‌ர்க‌ளை வ‌ண‌ங்கிடுவோம் தான் பெற்ற‌ பிள்ளையை தாய‌க‌ம் த‌விக்கையில் தானையில் சேர்த்துடுவோம் க‌ண் க‌ல‌ங்கா உண‌ர்வோடு த‌லைவ‌னின் கால‌த்தில் இணைத்தார்க‌ள் நாம் அறிவோம் இணைத்தார்க‌ள் நாம் அறிவோம் ம‌ண்மீட்பு போரினில் ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ள் பொற்றோரை வாழ்த்திடுவோம் செத்துப்போக‌ போகுதே எங்க‌ள் த‌மிழ் ஈழ‌ம் என்று உருகிப் போய் நின்ற‌வ‌ர்க‌ள் எங்க‌ள் சொத்து உயிர் போர் புலி ப‌டையினை பெருக்கிய‌ பெருமைக்கு உரிய‌வ‌ர்க‌ள் ப‌த்து மாத‌ம் நுந்து பெற்ற‌ புத‌வ‌ர்க‌ள் இழ‌ந்தும் த‌மிழ் மான‌ம் காத்த‌வ‌ர்க‌ள் ப‌த்து மாத‌ம் நுந்து பெற்ற‌ புத‌வ‌ர்க‌ள் இழ‌ந்தும் த‌மிழ் மான‌ம் காத்த‌வ‌ர்க‌ள் வீர‌ர் அத்த‌ம் த‌ந்த‌ எந்தைய‌ர் வ‌ர‌லாற்று சிற்பிக‌ளை பொன் மேட்டில் செருக்கிடுங்க‌ள் ம‌ண்மீட்பு போரினில் ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ள் பொற்றோரை வாழ்த்திடுவோம் விடிய‌லை தேடியே போன‌வும் செல்வ‌ங்க‌ள் ம‌டிய‌வே இல்லைய‌ம்மா ஈழ‌ம‌டிதாயின் க‌ண் மூடி துயில் கொள்ளும் தெய்வ‌ங்க‌ள் உன் பிள்ளை தானேயம்மா கோடி கைக‌ள் கும்பிட்டு ப‌ல்லாண்டு வாழ்த்திடினும் இந்த‌ க‌ட‌ன் முடியாத‌ம்மா கோடி கைக‌ள் கும்பிட்டு ப‌ல்லாண்டு வாழ்த்திடினும் இந்த‌ க‌ட‌ன் முடியாத‌ம்மா தொப்புள் கொடியோடு வ‌ழி வ‌ந்த‌ த‌மிழ் தாயின் இந்திர‌ம் நாம் என்றும் ம‌ற‌ப்போமா ம‌ண்மீட்பு போரினில் ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ள் பொற்றோரை வாழ்த்திடுவோம் க‌ருவினில் சும‌ந்திங்ன்ர‌ உங்க‌ள் வீர‌ர் தாய்க‌ளையும் போற்றி நாம் துவுக்கின்றோம் இன்றும் செருவினின் பொய்யோடு குனிந்து ப‌கை மாய்ப்ப‌தையும் க‌ண் கூடாய் காணுகின்றோம் 27தேதி கார்த்திகை உமைந்த‌ மாவீர‌ர் நாள் அல்ல‌வா 27தேதி கார்த்திகை உமைந்த‌ மாவீர‌ர் நாள் அல்ல‌வா த‌லைவ‌ன் க‌வுர‌வித்து உங்க‌ளை நினைவுகூர்ந்து துன்ப‌த்திலும் ப‌கிர்ந்து கொள்ளும் தின‌ம் அல்ல‌வா ம‌ண்மீட்பு போரினில் ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ள் பொற்றோரை வாழ்த்திடுவோம் புன்ன‌டிக‌ள் தான் க‌ழுவி பாவிசெய்த்து பூதூவி அவ‌ர்க‌ளை வ‌ண‌ங்கிடுவோம் தான் பெற்ற‌ பிள்ளையை தாய‌க‌ம் த‌விக்கையில் தானையில் சேர்த்துடுவோம் க‌ண் க‌ல‌ங்கா உண‌ர்வோடு த‌லைவ‌னின் கால‌த்தில் இணைத்தார்க‌ள் நாம் அறிவோம் இணைத்தார்க‌ள் நாம் அறிவோம் ம‌ண்மீட்பு போரினில் ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ள் பொற்றோரை வாழ்த்திடுவோம்

ஆட்சியாளருக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்கள் உறுதியான செய்தியைக் கூறியுள்ளனர் - த.தே.கூ.

4 months 1 week ago
புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென்பதுடன் அவர் அவ்வாறு செயற்படுவதன் மூலம், நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் என்னும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும் அதன் மூலம் நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பாரிய முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் அடைவர் என்பதையும் புதிய ஜனாதிபதிக்கும் அவர் சார்ந்தோருக்கும் தமிழ்மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா .சம்பந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கடத்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நிறைவடைந்துள்ளது. கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை மிக நேர்த்தியாக நடாத்த துணைநின்ற தேர்தல் ஆணையாளர் மற்றும் அவரது பணிமனை ஊழியர்கள், பாதுகாப்பு தரப்பினர், அனைத்து அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அனைத்து நிருவாக மாவட்டங்களிலும் தேர்தல் மாவட்டங்களிலும் வாழும் மக்கள், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காணக் கூடிய வகையில் முன்னோடியான செய்தியைத் தனது தேர்தல் அறிக்கை வாயிலாக வெளிப்படுத்திய கருத்துகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாசவுக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளனர் . எமது கட்சியாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடாத, பிரிக்கமுடியாத இலங்கை நாட்டினுள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்படுமென்ற அடிப்படையில் தமிழ் மக்களை ஒருமித்து சஜித் பிரேமதாசவின் சின்னமான அன்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்தது. அதியுச்ச அதிகாரப் பகிர்வு தேசியப் பிரச்சனைக்கு தீர்வாக வழங்கப்பட வேண்டுமென்ற கருத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் புறக்கணிப்பு, தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்புப் போன்ற பல்வேறு திசை திருப்பல்கள் காணப்பட்ட சூழலில், அவற்றுக்குச் செவிசாய்க்காது, எமது வேண்டுகோளுக்கமைய ஒற்றுமையாக அன்னத்துக்கு வாக்களித்து, இலங்கை ஆட்சியாளருக்கும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் தமிழ் மக்கள் ஓர் உறுதியான செய்தியைக் கூறி இருக்கின்றனர் . அதாவது தமது உரிமை தொடர்பான வேட்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் தாம் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இந்த மக்களுக்குத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வாக்களிப்பில் காட்டிய ஒற்றுமை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என விரும்புகின்றேன். இலங்கையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை விட இத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாக்களிப்பு வீதம் உயர்ந்துள்ளமை கருத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும். திருகோணமலையில் 83% வீதமும், அம்பாறையில் 80% வீதமும், மட்டக்களப்பில் 77% வீதமும், வன்னியில் 73% வீதமும், யாழ்ப்பாணத்தில் 66.5% வீதமுமாக மக்கள் வாக்களித்திருப்பது நிறைவளிக்கின்றது. புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென விரும்புகின்றேன். அவர் , அவ்வாறு செயற்படுவார் என நம்புகின்றேன். அவ்வாறு செயற்படுவதன் மூலம், நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் என்னும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும் அதன் மூலம் நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பாரிய முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் அடைவர் என்பதையும் புதிய குடியரசுத் தலைவருக்கும் அவர் சார்ந்தோருக்கும் தமிழ்மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். எமது வேண்டுகோளுக்கமைய ஒற்றுமையாய் அன்னத்துக்கு வாக்களித்த அனைத்துத் தமிழ் மக்களுக்கும் மீண்டுமொருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/69270

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்

4 months 1 week ago
3 நாட்களுக்கு முன் சமபலத்துடன் தேர்தல் களம் இருக்கவில்லை. முன்பே கோத்தாவின் வெற்றி உறுதியாகி விட்டது. வலம்புரிக்காரர் தெற்கில் முன்னரே நடந்த பிரச்சாரங்களை பற்றி கதையில்லை. ஈஸ்டர் குண்டு தாக்குதலை காட்டி கோத்தபாய தான் நாட்டின் பாதுகாவலன் என்பது போன்ற கதை. கோத்தபாயவின் குடியுரிமையை கேள்விக்குட்படுத்தியதன் மூலம் கோத்தபாயவை ஜனாதிபதியாக வர விடாமல் செய்ய விளைகிறார்கள், அவரை வெல்ல வைக்க வேண்டும் என மக்கள் மத்தியில் கருத்தை உருவாக்கியமை. 2009 போர் வெற்றி. 2015 இல் தமிழர்கள் வாக்குகளால் மகிந்த தோற்கடிக்கப்பட்டதால் இம்முறை கோத்தபாய தோற்கக்கூடாது என நினைத்தமை. மைத்திரி-ரணில் ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சஜித்தையும் பலர் நம்பாமல் கோத்தபாயவுக்கு வாக்களித்தமை. அநுர தனிய போட்டியிட்டமை. பலவேறு வேட்பாளர்கள் வாக்குகளை பிரிக்க களமிறங்கியமை. 5 கட்சிகள், மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய 13 அம்ச கோரிக்கைகள். இன்னும் பல காரணங்கள் உள்ளன. கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவளிக்குமாறு கூறாமல் விட்டிருந்தாலும் கோத்தபாய வென்றிருப்பார். ரணிலின் பல நடவடிக்கைகள் அவ்வாறு தான் இருந்தன. ரணில் தரப்பு சஜித்துக்கான தேர்தல் பிரச்சார நிதிக்கு பங்களிப்பு செய்யவில்லை எனவும் வாசித்தேன்.

ராஜபக்சாக்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவார்கள் என்பது இந்தியாவிற்கு முன்னரே தெரிந்திருந்தது- இந்திய ஊடகம்

4 months 1 week ago
மோடி எப்பவோ கூப்பிட்டவராமே? 6 மாதம் ஆச்சு. இன்னும் போகலையா?

இலங்கை ஜனாதிபதியான கோட்டாபய: இந்தியா- இலங்கை உறவு இனி எப்படி இருக்கும்?

4 months 1 week ago
இலங்கை ஜனாதிபதியான கோட்டாபய: இந்தியா- இலங்கை உறவு இனி எப்படி இருக்கும்? 8 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionகோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்வுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் சிறுபான்மையினரின் எதிர்காலம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், இந்தியா - இலங்கை உறவு ஆகியவை குறித்து ஃப்ரண்ட்லைன் இதழின் அசோசியேட் எடிட்டரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.கே. ராதாகிருஷ்ணிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து: கேள்வி: நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன? பதில்: கடந்த ஏப்ரலில் அங்கு குண்டுவெடிப்புகள் நடந்தபோதே, அங்கு யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்பது தீர்மானமாகிவிட்டது. மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, கடந்த 2009ல் புலிகளை வெற்றிகொண்டதிலிருந்து, தேசப் பாதுகாப்பு என்ற விஷயம் என்பதில் அவரைத் தவிர வேறு யாராலும் உரிமை கொண்டாட முடியாத விஷயமாகவே இருந்தது. ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் நடந்தன. 27ஆம் தேதியே கோட்டாபய தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டார். அப்போது அவருடைய கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனகூட இதை முடிவுசெய்யவில்லை. மே மாதம் நான் மஹிந்தவைச் சந்தித்தபோதுகூட அவர் இதனை உறுதிப்படுத்தவில்லை. ஆனால், கோட்டாபய ஏப்ரலிலேயே பணிகளைத் துவங்கிவிட்டார். கோட்டாபய பாதுகாப்புத் துறை செயலராக இருந்தவர். போரை வழிநடத்தியவர். ஆகவே ஏப்ரல் 21க்குப் பிறகு இந்த விஷயம்தான் மக்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது. அதே நேரத்தில் பொருளாதாரப் பிரச்சனைகளும் பெருகிவந்தன. அதனால், தற்போதைய அரசைச் சேர்ந்த யாரும் வெல்ல முடியாத சூழலும் உருவானது. 35 ஜனாதிபதி வேட்பாளர்களில் பிரதான வேட்பாளர்கள் இருவர். ஒருவர் கோட்டாபய. மற்றொருவர் சஜித் பிரேமதாஸ. ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜித், தற்போதைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். ஆனால், பொருளாதார ரீதியில் சாதித்தவர் அல்ல. கோட்டாபயவைப் பொறுத்தவரை, அவர் போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர் என்ற பெயர் இருக்கிறது. தங்கள் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் சிங்களர்கள் எல்லாம் திரண்டுவந்து கோட்டாபயவுக்கு வாக்களித்துவிட்டார்கள் என்றும் சொல்ல முடியாது. காரணம் இருவருமே இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள். சிங்களர்களைப் பொறுத்தவரை, தங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பை அளிக்கக்கூடியவர் கோட்டாபயதான் என முடிவுசெய்தார்கள். படத்தின் காப்புரிமைGETTY IMAGES கே. ஈஸ்டர் தாக்குதலின் காரணமாக, பாதுகாப்பு குறித்த அச்சத்தில் சிங்களர்கள் கோட்டாபயவுக்கு வாக்களித்தார்கள் என்றால், சிறுபான்மையினருக்கு அந்த அச்ச உணர்வு ஏன் ஏற்படவில்லை அல்லது அவர்கள் ஏன் அதனை முதன்மையாக நினைக்கவில்லை? ப. தமிழ் பகுதிகளில் புலிகள் இருந்தபோது, அவர்கள் தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தார்கள். 2009க்கு முன்பாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து ஒருவர் அழைத்துச் செல்லப்படுவது, விசாரணைக்காக சிறையில் வைக்கப்படுவது என்பது கிடையாது. அதன் நீட்சியாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் பார்க்கிறார்கள். கூட்டமைப்பைப் பொறுத்தவரை, நாம் யாரை விரும்புகிறோம் என்பதைவிட, யார் வேண்டாம் என்பதில்தான் முடிவெடுக்க முடிகிறது. அந்த அடிப்படையில் பல தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த, காணாமல் போக காரணமாக இருந்த கோட்டாபய வரக்கூடாது என்பதில் மக்கள் தீர்மானமாக இருந்தார்கள். சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன்: பதவியேற்பு விழாவில் கோட்டாபய பேச்சு இலங்கை தேர்தல்: கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ ஆதரவு பெற்றது எந்தப் பகுதியில்? இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். டெலோவைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். தமிழர்களின் வாக்குகளைப் பிரிக்க வேண்டுமென நினைத்தார். ஆனால், மக்கள் அவரை விரும்பவில்லை. அதேபோல வடமாகாணத்தின் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனும் இம்மாதிரி ஒரு நிலைப்பாட்டை எடுத்தார். கோட்டாபய, சஜித் ஆகிய இருவரில் யார் வந்தாலும் தமிழர்களுக்கு ஏதும் செய்வதாகத் தெரியவில்லை; மக்கள் தங்கள் மனசாட்சியின்படி முடிவெடுக்க வேண்டுமென அவர் கூறினார். இது கோட்டாபயவுக்கு சாதாகமான ஒரு விஷயம். ஆனால், அதையும் மக்கள் ஏற்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் இன்றைக்கும் தமிழ் மக்களின் பாதுகாவலனாக இருக்கிறது என்பது இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்லியிருக்கின்றன. கே. இந்தத் தேர்தலில் வாக்களிப்பு முடிவுகளைப் பார்க்கும்போது, மக்கள் இனரீதியாக பிளவுபட்டு வாக்களித்திருப்பதைப் போலத் தெரிகிறது. ஆகவே இந்தப் பிளவானது தற்போதைய ஜனாதிபதி அதிகாரப்பகிர்வு தொடர்பாக முடிவெடுப்பதில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா? ப. அதிகாரப் பகிர்வு என்பது இனி இலங்கையில் நடக்காது. 13வது திருத்தச் சட்டம் என்பது இனி ஒருபோதும் நிறைவேறாது. நாம் இனி யதார்த்தமான தீர்வுகளைப் பற்றி மட்டுமே பேசப்போகிறோம் என கோட்டாபய மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார். ஆகவே, அவருடைய தீர்வில் 13வது திருத்தச் சட்டம், மஹிந்த கூறிய 13வது திருத்தச் சட்டம் ப்ளஸ் ஆகிய எதுவுமே கிடையாது. கோட்டாபயவைப் பொறுத்தவரை, ஒரு ஒருங்கிணைந்த நாட்டிற்குள் தமிழர்கள் வேண்டுமென்றால் இருந்துகொள்ளலாம், அவ்வளவுதான். அதுதான் நிதர்சனம். இதில் இந்தியா செய்யக்கூடியது ஏதுமில்லை. இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்? இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய தேர்வு: கனடா ஆளுங்கட்சி எம்.பி. ஏமாற்றம் கே. கோட்டாபய பதவியேற்ற பிறகு பேசும்போது சிங்கள மக்களின் வாக்குகளால்தான் வெற்றிபெற்றதாகத் தெரிவித்திருக்கிறார். ஆகவே, இனி தமிழ் மக்கள், சிறுபான்மையினரைப் பொறுத்தவரை ஜனாதிபதியை அணுகுவதென்பது எவ்விதத்தில் இருக்க முடியும்? ப. அவர்கள் தங்கள் கோரிக்கைகளில் வலுவாக இருக்க வேண்டும். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 13 கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து ஆரம்பிக்கலாம். தமிழர்கள் என்ன கேட்டாலும் கோட்டாபய ராஜபக்ஷ கொடுக்கப்போவதில்லை. ஆனால், ஐநா, ஐநா மனித உரிமைகள் சபை, ஊடகங்களிடம் தமிழர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளைத் தொடர்ந்து பேச வேண்டும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES கே. விரைவிலேயே நாடாளுமன்றத் தேர்தலும் நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தேர்தலின் முடிவுகளிலும் இந்த வெற்றி எதிரொலிக்குமா? ப. நிச்சயமாக எதிரொலிக்கும். தமிழ்ப் பகுதிகள் நிச்சயம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் வாக்களிப்பார்கள். இஸ்லாமியக் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஆல் சிலோன் மக்கள் காங்கிரஸ் போன்ற இஸ்லாமியக் கட்சிகளுக்கே வாக்களிப்பார்கள். மத்திய இலங்கையில் சிலோன் ஒர்க்கர்ஸ் காங்கிரசிற்கு சில இடங்கள் கிடைக்கலாம். இலங்கைப் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்கள் வாக்காளர்களால் தேர்வுசெய்யப்படும். மீதமுள்ள 29 இடங்கள் தேசியப் பட்டியல் எனப்படும் நியமன இடங்கள். இதில் ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகளின் சதவீதத்தின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். விரைவிலேயே மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்கக்கூடும். ரணில் விக்ரமசிங்கே எதிர்க்கட்சித் தலைவராகலாம். ஆகவே, 2005ல் என்ன நடந்ததோ, அதுதான் நடக்கும். மறுபடியும் அதே அவலங்கள்தான் நடக்கும். கே. 2005-2015ஆம் ஆண்டுகளில் கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் அதிகமாக இருந்தன. இந்த முறை அதெல்லாம் மாறக்கூடுமா? ப. அப்படி நடக்கப்போவதாகத் தெரியவில்லை. முன்னாள் ராணுவத் தளபதியான கமல் குணரட்னேவை பாதுகாப்புச் செயலராக நியமித்திருக்கிறார்கள். சரேந்திர சில்வா ராணுவத்தின் தலைமை கமாண்டோ. கோட்டாபய பாதுகாப்பு செயலராக இருந்தவர். ஆகவே, 2005-2015வரை இருந்த அதே கட்டமைப்பு இப்போதும் தொடரப் போகிறது. எதுவும் மாறப்போவதில்லை. கே. முந்தைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்கவின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்? ப. சந்திரிகா குமாரதுங்கவைப் பொறுத்தவரை அவர் கிட்டத்தட்ட ஓய்வில்தான் இருக்கிறார். 2015ல் இவர்களையெல்லாம் ஒருங்கிணைப்பதற்காக அவர் மீண்டும் முன்னணிக்கு வந்தார். அதற்குப் பிறகு அரசுக்குள் ஏற்பட்ட குழப்பங்களைப் பார்த்து விலகிக்கொண்டுவிட்டார். பிறகு, இந்தத் தேர்தலின்போது ஒரே ஒரு அறிக்கையே வெளியிட்டார். அவ்வளவுதான். அந்த பாணியில்தான் இனி அவர் தொடர்வார். மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரை அவருக்கென மிகப் பெரிய பங்களாவை அரசு ஒதுக்கியுள்ளது. அதற்கு அமைச்சரவை ஒப்புதலும் வழங்கப்பட்டுவிட்டது. அவர் ஒரு மூத்த நபடாளுமன்றவாதியாக நடத்தப்படுவார். இலங்கையில் அதிபர், பிரதமர் எதிரெதிர் துருவம்: அரசியல் சாசன சிக்கல் எழுமா? கோட்டாபய மீண்டும் வெல்ல களத்தில் செய்தவை என்ன? அது இனவாதத்தின் வெற்றியா? கே. கோட்டாபய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நின்று வெற்றிபெற்றிருக்கிறார். இனி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலை என்னவாகும்? ப. இது ஒரு சுவாரஸ்யமான விஷயம். 2015ஆம் ஆண்டின் இறுதியில்தான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி துவங்கப்படுகிறது. ஜி.எல். பீரீஸ் அதன் தலைவராக இருக்கிறார். 2018வரை மஹிந்த அந்தக் கட்சியிலேயே இல்லை. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் இந்தக் கட்சிக்குப் பெரும் வெற்றி கிடைக்கிறது. மக்கள் தம் கட்சியை விரும்புகிறார்கள் என்று தெரிந்தவுடன் மஹிந்த பொதுஜன பெரமுனவில் சேர்கிறார். அதைத் தன் கட்சியாக மாற்றிக்கொள்கிறார். அதற்கு அடுத்த ஒரு வருடத்தில் இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கிறது. இலங்கையின் வரலாற்றைப் பொறுத்தவரை இரு கட்சிகள்தான். ஒன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி. மற்றொன்று ஐக்கிய தேசியக் கட்சி. மூன்றாவது கட்சிக்கு அங்கு இடமே கிடையாது. ஆகவே அதே நிலைதான் நீடிக்கப்போகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மீதமுள்ளவர்களும் அங்கே சென்றுவிடுவார்கள். 2010-2014 வரையிலான மஹிந்த அமைச்சரவையில் 99 அமைச்சர்கள் இருந்தார்கள். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டது. அதே போன்ற சூழல்தான் இனியும் ஏற்படும். சுதந்திரக் கட்சி என்பது இனி இல்லை என்றே சொல்லிவிடலாம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES கே. புதிய ஜனாதிபதியை இந்தியா இனி எப்படி அணுகும்? ப. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழர் பிரச்சனை என்பது ஒரு வியூக ரீதியான பிரச்சனை. உண்மையிலேயே அந்தப் பிரச்சனையில் ஏதும் அவர்கள் செய்யவில்லை. ராஜீவ் காந்தி முன்வைத்த 13வது திருத்தச் சட்டத்தைத் தவிர, தில்லியிலிருந்து தமிழர்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கையில் இருந்த ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியது தமிழர் மீதான அக்கறையில் அல்ல. அவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தத்தான். தற்போதைய சூழலை பொறுத்தவரை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான் ஒரே துருப்புச் சீட்டு. அவருக்கு பல நாடுகளில் எதிர்மறையான பிம்பம் இருந்தால்கூட, இலங்கையில் நல்ல பெயர் இருக்கிறது. அவர் அங்கே முதல் நிலை செயலராக இருந்தபோதும் தூதராக இருந்தபோதும் நல்ல உறவை ஏற்படுத்தியிருக்கிறார். இனியும் நல்ல தூதரக அதிகாரிகளை நியமித்து உறவை நாம் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தென்னிந்தியாவில் புதிய ராணுவக் கட்டமைப்பை இந்தியா உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும். கே. ராஜபக்ஷக்களைப் பொருத்தவரை அவர்கள் சீனாவுக்கு நெருக்கமானவர்கள் என்ற பிம்பம் இருக்கிறது. இனி என்ன ஆகும்? ப. நான் ஒரு அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்கப் போகிறேன் என்கிறார் கோட்டாபய. அதாவது இந்தியாவுடனோ, சீனாவுடனோ நெருக்கமாக இருக்கப் போவதில்லை என்றிருக்கிறார். ஆனால், மஹிந்தவைப் பொறுத்தவரை இந்தியா எங்கள் சகோதரன். ஆனால், சீனாவுடன் வர்த்தக உறவுகளை வைத்திருக்கிறோம் என்பார். ஆகவே மஹிந்தவின் நிலைப்பாட்டிலிருந்து கோட்டாபயவின் நிலைப்பாடு மாறுபடுகிறது. தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்பாக, சீனாவின் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. எந்த நாட்டிலும் தேர்தல் சமயத்தில் கூட்டு ராணுவப் பயிற்சி நடக்காது. ஆனால், தேர்தல் சமயத்தில் சீனக் கப்பல் அங்கு வந்திருப்பது ஒரு சமிக்ஞையாகத்தான், அதாவது சீனா எந்த நேரத்திலும் வரவேற்கப்படுகிறது என்பதன் சமிக்ஞையாகத்தான் அது பார்க்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/india-50473017

பொதுபல சேனா கலையும்

4 months 1 week ago
அது சரி இனி புது ஜனாதிபதி நீங்க செய்த வேலையெல்லாம் செய்வார் என்கிறீங்க. கலைக்கிறதுக்கு ஏன் பொதுத்தேர்தல் வரைல வெயிட்டிங்? இப்பவே கலைக்க வேண்டியது தானே! அதுல 2/3 பெரும்பாண்மை கிடைக்காது என்று தெரியும் போல.

சஜித்தின் தோல்விக்கான சதித் திட்டம் ; பின்னணியை வெளிப்படுத்தினார் நளின் பண்டார

4 months 1 week ago
(நா.தனுஜா) எமது தரப்பில் இருந்துகொண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை தோல்வியடையச் செய்வதற்காக செயற்பட்ட சிலரே, தற்போது மஹிந்த ராஜபக்ஷ தரப்பைக் காப்பாற்றிக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் தமது அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்வதாக அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். 1994 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்ததும், சற்றும் தாமதிக்காமல் சூட்கேஸுடன் வெளியேறினார். அவ்வாறு செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது என்ன செய்கின்றார்? பிரதமர் என்ற வகையில் தற்போதைய அரசாங்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான உரிமை அவருக்கில்லை. அரசியல் இராஜதந்திரம் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டுமாயின், உடனடியாக மஹிந்த தரப்பிடம் அரசாங்கத்தைக் கையளித்து சுமார் 120 நாட்கள் அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற இடமளித்து, அதனூடாகக் கிடைக்கக்கூடிய அரசியல் ஆதாயத்தை பெறுவதே ரணில் விக்கிரமசிங்க செய்ய வேண்டியதாகும். எதிரணியினர் எதிர்நோக்கத்தக்க நெருக்கடிக்கு இடமளிக்காமல் நேரடியாகப் பொதுத்தேர்தலுக்குச் செல்லும் நோக்கில் செயற்படும் வஜிர அபேவர்தன போன்ற கொந்தராத்துக்காரர்கள் சிலர் எமது தரப்பில் இருக்கின்றார்கள். அவர்களே பிரதமருடன் இணைந்து இந்த நெருக்கடியைக் கடப்பதற்கு மஹிந்த தரப்பிற்கு உதவுகின்றார்கள். எமது தரப்பில் இருந்துகொண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை தோல்வியடையச் செய்வதற்காக செயற்பட்ட சிலரே, தற்போது மஹிந்த ராஜபக்ஷ தரப்பைக் காப்பாற்றிக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் தமது அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். அரசாங்கத்தைக் கையளிப்பது தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷ தரப்புடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். இதுவிடயத்தில் அவர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியமில்லை. எம்முடனேயே கலந்தாலோசிக்க வேண்டும். ஆனால் எதிரணியுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்திவிட்டார் என்றே தோன்றுகிறது. நேற்று அநுராதபுரத்திற்கும் சென்றிருந்ததைப் பார்த்தோம். எனவே நாளை பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறுவது முற்றிலும் பொய்யாகும். அவர் தொடர்ந்தும் கட்சியின் தலைமைத்துவத்தில் இருப்பதற்கே எதிர்பார்க்கின்றார். ஆனால் நான் தற்போது மேற்கொண்டுள்ள தீர்மானத்தை ஒத்த நிலைப்பாட்டிலேயே கட்சியில் பெரும்பான்மையானோர் இருக்கின்றனர். கொழும்பிலுள்ள உலக வர்த்தக மையத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/69265

1000 நாட்கள்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீர் போராட்டம்!

4 months 1 week ago
ஆயிரம் நாளை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ! வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1000 நாட்களை எட்டியது. இதனை முன்னிட்டு அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கபட்ட உறவினர்களின் இணைப்பாளர் ராஜ்குமார், சுழற்சி முறையில் உணவு தவிர்க்கும் 1000 ஆவது நாளை இன்று நாங்கள் அனுஷ்டித்து வந்துள்ளோம். இதில் அனைத்து தமிழ் தாய்மார்களும் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் தொடர்ந்து பங்குபற்றி வருகின்றனர். இலங்கை இராணுவத்தால் எங்கள் குழந்தைகளும் அன்புக்குரியவர்களும் கடத்தப்பட்ட காலத்திலிருந்து, நாங்கள் எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்தச் செயல்பாட்டின் போது, ஜனாதிபதி சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கள அமைச்சர்களுடன் நாங்கள் சந்தித்தோம். சந்திப்பு எதுவும் பலனளிக்கவில்லை. எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தலைவர்கள் கூட உதவவில்லை. வலுக்கட்டாயமாக “காணாமல் ஆக்கப்பட்ட ” தமிழர்களை விடுவிப்பதற்கான சிறைச்சாலைக்கான சாவி தன்னிடம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எங்களிடம் தெரிவித்திருந்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்ளை கண்டுபிடிப்பதற்கு கடினமாக உழைப்போம் என்று 2015 தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் எங்களுக்கு வாக்குறுதியளித்த போதிலும், எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சம்பந்தன் தன்னிடம் சாவி இல்லை என்று சொல்வதைக் கேட்பது வெட்கக்கேடானது. மேலும், எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், போர்க்குற்ற விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக, உள்ளூர் விசாரணைக்கு இலங்கைக்கு கொண்டு வந்தனர், பின்னர் அவர்கள் உள்ளூர் விசாரணைக்கு 4 ஆண்டு நீட்டிப்புகளை வழங்கினர். இது ஒரு சிங்களவரிடம் விலை போனவர்களின் தந்திரம். இலங்கையின் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டைத் தடுக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். காணாமல் ஆக்கப்பட்ட நம் குழந்தைகளையும் அன்பானவர்களையும் கண்டுபிடிப்பதற்கு ஒரு போராட்டம் மட்டுமே ஒரு தீர்வைக் கொண்டுவரும் என்று பல சர்வதேச மனித உரிமைக் குழுக்களால் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் அர்ப்பணிப்பு முயற்சிகளைத் தொடர வலுவான நாடுகளால் நாங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளோம். ஐ.நா தொடர்பான சில அமைப்புகள் கூட எங்கள் போராட்டத்தை ஊக்குவித்துள்ளன. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சொல்வது ஒரு அப்பட்டமான பொய். காணாமல் ஆக்கப்பட்டவர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இதில் 16 வயது சிறுமி ஜெரோமி காசிப்பிள்ளை , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எங்கள் தலைவி ஜெயவனிதாவின் மகள். அவர் 2015 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி சிறிசேனாவோடு மற்ற சிங்கள மாணவர்களுடன் ஒரு பள்ளியில் காணப்பட்டார். 1976 – 1983 க்கு இடையில் ஆர்ஜென்டினாவில் குழந்தைகள் கட்டாயமாக காணாமல் போனதை இது நமக்கு நினைவூட்டுகிறது. ஆர்ஜென்டினாவில் நடந்ததைப் போலவே, இந்த தமிழ் குழந்தைகளில் சில அரசாங்கத்திற்கு நெருக்கமான சிங்கள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. அவர்களில் சிலர் சிங்கள பள்ளியிலும் , மீனவ வேலைக்கும் , மற்றவர்கள் கூலி தொழில்களிலும் வேலை செய்கிறார்கள். அவர்களில் சிலர் புத்த மத பிக்குகளாக மாற்றப்பட்டனர். பல குழந்தைகள் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டில் 25,000 க்கும் மேற்பட்ட தமிழ் குழந்தைகளும் மற்றவர்களும் காணாமல் போயுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களைக் கண்டுபிடிக்க அதே போசினிய பாணி நடைமுறை எங்களுக்குத் தேவை. இறுதியில், போஸ்னியாவில் ஒரு அரசியல் தீர்வை அமெரிக்கா கட்டாயப்படுத்தியது, இதனால் செர்பியர்கள், போஸ்னியர்கள் மற்றும் குரோஷியர்கள் ஆகிய மூன்று இனத்தவர்கள் தங்கள் சுயராஜ்யத்துடன் போராடாமல் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடிந்தது . எங்களிடமிருந்து கடத்தப்பட்ட எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் கண்டுபிடிக்கும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடருவோம். எங்கள் போராட்டத்தின் 2000 ஆவது நாளை அடைவதற்கு முன்பு, காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் மக்களைக் கண்டுபிடித்து, நிரந்தர பாதுகாப்பையும் சுய ஆட்சியையும் எடுத்து கொள்வோம் என்று நம்புகிறோம். என்றார். http://eelamurasu.com.au/?p=23075&fbclid=IwAR1ZMJLo58V-yVR5RQBpllU5IlN3bANHToa0cQkz9wVT3Cs2M-6s3wFXxRs
Checked
Wed, 04/01/2020 - 16:59
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr