புதிய பதிவுகள்

உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21

5 months 1 week ago
ஜஸ்ரின் அண்ணாவின் கருத்துக்கள் பிடிக்கும், தான் பிடித்த முயலுக்கு 3 கால் என்று வாதிடும் போது என்ன செய்வது! தாயகத்தில தான் நாங்களும் இருக்கிறம்.

ஜனாதிபதி வேட்பாளராக விக்னேஸ்வரன் களமிறங்க தகுதியுள்ளது - ஸ்ரீ.சு.கட்சி

5 months 1 week ago
(ஆர்.யசி) தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் விக்கினேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சகல உரிமையும் உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கலந்துகொண்டிருந்தார், இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் வேட்பாளரை தேடுவதில் சிரமப்படுகின்றீர்கள், ஆனால் வடக்கில் விக்கினேஸ்வரன் தயாராகிவிட்டார் என ஊடகவியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தல் உறுதியானால் அப்போது எமது வேட்பாளர் யாரென தீர்மானிப்போம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/53713

தமிழர்களை கைதுசெய்யும்போது பயங்கரவாத தடை சட்டத்தை யாரும் தவறாக நோக்கவில்லை - நீதிவான் ரங்க திஸாநாயக்க

5 months 1 week ago
எம்.எப்.எம்.பஸீர்) நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் விளங்கிக் கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டு இருக்கின்றது. முன்னர் தமிழர்களையும், புலிகள் இயக்க உறுப்பினர்களையும் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யும்போது எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை. எவருக்கும் அது பிரச்சினையாகவும் இருக்கவில்லை. எனினும் தற்போது வேறு நபர்களை கைதுசெய்யும்போது அதன் ஓட்டைகள் அனைவருக்கும் புரிகின்றது என கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக கூறபப்டும் விவகாரம் குறித்த வழக்கு கோட்டை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது சந்தேக நபரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிராக பயங்கர்வாத தடை சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் தொடர்பில், அவரது சட்டத்தரணி அஜித் பத்திரன சவாலுக்குட்படுத்தியுள்ள விடயங்களை ஆராய்ந்து கொன்டிருக்கும் போது நீதிவான் இதனை தெரிவித்தார். http://www.virakesari.lk/article/53723

நாளை நள்ளிரவு முதல் மின் துண்டிப்பு முற்றாக நிறுத்தப்படும்

5 months 1 week ago
அதீத வெக்கையா இருக்கேக்க மின் தடையும் வர வீட்டில இருக்கேலாமல் இருக்கு. மழையுமில்லை, காற்றும் வீசுதில்லை. மின் தடை நீங்கினால் மகிழ்ச்சியே.

மலரும் நினைவுகள் ..

5 months 1 week ago
இது எங்கே உள்ளது? இந்தளவு வசதியாக பார்த்ததில்லை. கோவில் திருவிழா முடிவில் அல்லது இதற்கென ஒரு திறந்த வெளியில் ஓர் பெரிய திரையை வைத்து படம் போடுவார்கள். ticket எடுக்காமல் வரும் ஆட்களை தடுக்க, சுத்த வர தகரம் அல்லது கிடுகால் அடைத்து விடுவார்கள். சின்ன வயதில் அந்த வேலிக்கு உள்ளாலே கள்ளமாக பூருவது பெடியளுக்கு ஒரு திரில்

மிஸ்டர் ஆபீசரும், அவரின் புது உலகமும்

5 months 1 week ago
முகநூலில் முழுநேர வேலையாக இருந்து அலப்பறை செய்பவர்கள் இப்போது எல்லாம் முதியவர்களாக இருக்கின்றார்கள். அதனால்தான் இளையவர்கள் முகநூலை அதிகம் விரும்புவதில்லை. மிஸ்டர் ஆபிஸர் ராகு, கேது, சனியை எல்லாம் நட்பு வட்டத்தில் சேர்த்து வைத்திருக்கலாம். விரும்பிய நேரத்தில் ‘unfriend' ஆக்கமுடியும். அவர்களுக்கே தர்மசங்கடமானவகையில் பதிவுகளைப் போடமுடியும். ஆக மொத்தத்தில் ஒரு குட்டி இராஜாங்கமே முகநூலில் நடாத்தலாம். அதைச் சொல்லிக்கொடுக்காமல் விட்டது தப்பு!

ஜம்முவில் துப்பாக்கிசூடு: ஆர்எஸ்எஸ் தலைவரும், மெய்காவலரும் பலி

5 months 1 week ago
ஜம்முவில் துப்பாக்கிசூடு: ஆர்எஸ்எஸ் தலைவரும், மெய்காவலரும் பலி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMOHIT KANDHARI ஆர்.எஸ்.எஸ் தலைவர் சந்திரகாந்த் மீதும், அவரது தனது மெய்காவலர் மீதும் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் மெய்காவலர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும், சந்திரகாண்ட் அடைந்த படுகாயங்களால் இறந்துள்ளதாகவும் பிரிகேடியர் சுசெத் சிங் (பிராந்த் சங்க சாலாக்) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் எழுகின்ற தேசியவாத சமூகத்தின் குரலை அமைதியாக்குதவற்கான முயற்சி என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதலை நடத்தியோரை உடனடியாக கண்டுபிடித்து, பொது மக்களின் உயர்வான மனப்பான்மையை பாதுகாக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார். செவ்வாய்கிழமை கிஷ்த்வார் மாவட்ட மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவிற்கு வெளியே மிகவும் அருகில் நின்று அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சந்திரகாந்தும் , அவரது மெய்காவலரும் சுடப்பட்டனர். படத்தின் காப்புரிமைMOHIT KANDHARI ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவரின் மெய்காப்பாளர் சம்பவ இடத்தில் இறந்துள்ளார் என்றும், சந்திரகாந்த் என்ற இனம்காணப்பட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் ஜம்முவிலுள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று முன்னதாக காவல்துறை தெரிவித்தது. மாவட்ட மருத்துவமனைக்கு வந்த சந்திரகாந்த் மிகவும் அருகில் வைத்து அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுமார் 12.45 மணிக்கு சுடப்பட்டதாகவும் காவல்துறை கூறியது. இதனை தொடர்ந்து போராட்டம் வெடித்ததால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கிஷ்த்வார் நகரில் மாவட்ட நீதிபதி அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/india-47869146 போறபோக்க பார்த்தால் மோடி வெல்லபோறாரோ?! பக்கத்து குட்டி நாட்டின் ஆலோசனையோ?

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

5 months 1 week ago
தளபதி பால்ராஜின் திருமண வாழ்வில் வந்த குழப்பம் என்ன?: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 64 March 26, 2019 பீஷ்மர் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளரான பொட்டம்மான், அந்த பிரிவை பெரும் அணியாக வளர்த்தெடுத்திருந்தார். பல பிரிவுகள், அணிகள், பிரதேசங்கள், பணிகளின் அடிப்படையில் பல அணிகளை உருவாக்கியிருந்தார். அவற்றை ஓரளவு சுயாதீனமான அமைப்பாகவும் உருவாக்கினார். அணிகளை வழிப்படுத்துவது, ஒருங்கிணைப்பது, பெரிய திட்டங்களை தீட்டுவது போன்றவற்றைத்தான் பொட்டம்மான் செய்தார். பிரிவுகளின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டதில்லை. இதே காலப்பகுதியில் புலிகளின் இரண்டாவது தலைவர் என்ற உத்தியோகப்பற்றற்ற பொறுப்பும் பொட்டம்மானிடம் இருந்தது. இதனால் அவரின் கீழ் செயற்பட்டவர்களை சற்று சுயாதீனமாக செயற்படும் விதமான பொறுப்புக்களை வழங்கினார் பிரபாகரன். இந்த புள்ளியில், ஒரு பெரும் சறுக்கல் ஒன்று விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவில் நடந்தது. இதில் குறிப்பிட வேண்டிய விடயம்- பொதுமக்களுடன் தொடர்புடைய அந்த சறுக்கலை பகிரங்கமாக ஏற்று, புலிகள் மன்னிப்பு கோரினர். பலர் அறிய வாய்ப்பில்லாத அந்த தகவல்களை இந்த பகுதியில் தருவோம். புலிகளின் அந்த சறுக்கல், காந்தி என்ற புலனாய்வு பிரிவு பொறுப்பாளரின் வடிவில் ஏற்பட்டது. புலிகளின் உள்ளக புலனாய்வு பொறுப்பாளராக இருந்த காந்தியின் செயற்பாடுகள், எப்படி அவரது வீழ்ச்சி அமைந்தது என்பதை இந்த பகுதியின் பின்பகுதிகளில் பார்க்கலாம். உள்ளகப் புலனாய்வு பிரிவின் பொறுப்பு வன்னியை பாதுகாப்பது. வன்னிக்குள் நுழையும் இராணுவ புலனாய்வு செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு கைது செய்வது, இராணுவ புலனாய்வு முகவர்களை கைது செய்வது, வன்னிக்குள் நடக்கும் தாக்குதல்களை முறியடிப்பது, பாஸ் நடைமுறை, சிறைச்சாலை, விசாரணை என புலனாய்வுதுறையின் மிக முக்கிய செயற்பாடுகளை அந்த பிரிவு கையாண்டது. இந்த இடத்தில், உள்ளக புலனாய்வு பிரிவு பற்றிய தகவல்களிற்கு சிறிய இடைவெளி விட்டு, பால்ராஜ் பற்றிய தகவல்களிற்கு செல்கிறோம். எவ்வளவு புகழ்பெற்ற மனிதர்கள் என்றாலும் தனிப்பட்ட வாழ்வில் சில கறுப்பு பக்கங்கள் இருக்கும். அந்த பக்கள் மட்டுமே அந்த ஆளுமையின் அடையாளம் அல்ல. அந்த ஆளுமையின் புகழை தகர்ப்பவையும் அல்ல. மனிதர்களாக பிறந்த எல்லோரிடமும் ஏதோ ஒரு பலவீனம் இருக்கும். மனிதர்களை புரிந்தவர்களிற்கு, பலவீனம் ஒரு விவகாரமாக தெரிவதில்லை. இதை ஏன் குறிப்பிடுகிறோம் எனில், பால்ராஜ் தொடர்பான சில பலவீனமான பக்கங்களிற்குள் நுழையப் போகிறோம். அதை இங்கு குறிப்பிடுகிறோம் என்றால், வரலாற்றை யாராலும் திரிக்க முடியாது. மாபெரும் தளபதியான அவரைப்பற்றிய முழுமையான வரலாற்றை எழுத வேண்டுமெனில், எல்லா விடயங்களையும் பேச வேண்டும். அப்படியானால்தான் அவரை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். பால்ராஜை இழிவு செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் இதை பதிவு செய்யவில்லை. மாறாக, பால்ராஜ் என்ற ஆளுமையை புரிந்துகொள்ள இது உதவும். பால்ராஜ் நீண்டகாலமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணமே செய்து கொள்வதில்லையென்ற முடிவில் இருந்தார். எனினும், பின்னர் வரதா என்ற விடுதலைப்புலிகளின் மகளிர் அணியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார். இவர் மகளிர் தாக்குதலணி, கடற்புலி, நிதித்துறை பிரிவுகளில் செயற்பட்டவர். பிரபாகரனின் நெருக்கமான உறவுப்பெண். அவர் கடற்புலிகளில் இருந்த சமயத்தில் பால்ராஜூடன் திருமணம் செய்தார். எனினும், திருமணமான சிறிதுகாலத்திலேயே இருவருக்குமிடையில் கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். பிரபாகரனின் உறவுப்பெண்ணான பாலராஜின் மனைவி வரதா, சூசையுடன் நீண்டகாலம் பணிபுரிந்தவர். இருவருக்குமிடையில் அறிமுகமும் இருந்தது. பின்னர் ஒருநாள் சூசையிடம் சென்ற வரதா, சில மனக்கசப்பான தகவல்களை சூசையிடம் சொன்னார். அப்பொழுது கண்ணீர் விட்டு அழுதார். இனிமேல் தன்னால் பால்ராஜூடன் சேர்ந்து வாழவே முடியாதென சொல்லி, நிதித்துறை கடமைக்கு சென்றார். சூசை இந்த விவகாரத்தை பிரபாகரனிடம் சேர்ப்பித்தார். வரதா பிரபகரனின் உறவுக்கார பெண். நல்ல அறிமுகம் உடையவர். உறவுமுறைக்கு அப்பால், அமைப்பில் இணைந்து கொண்டவர்கள், திருமண வாழ்வில் புரிந்துணர்வுடனும், முன்னுதாரணமாகவும் நடக்க வேண்டுமென நினைப்பவர் பிரபாகரன். ஆனால் மனிதர்களின் மன இயல்புப்படி, மணமுறிவும், மனமுறிவும் இயல்பு. ஆனால் ஒப்பீட்டளவில் புலிகளின் தம்பதிகளிற்குள் அது வந்தது குறைவு. தினேஷ் மாஷ்டர், சு.க.தமிழ்செல்வன், பால்ராஜ் போன்ற முக்கியஸ்தர்கள் சிலர் உள்ளிட்ட சிலருக்குத்தான் அமைப்பிற்குள் இந்த சிக்கல் வந்தது. தம்பதிகளிற்குள் பிரச்சனை ஏற்படும் சம்பவங்களில் பிரபாகரன் கடுமையான எதிர்வினையாற்றுவார். சு.ப.தமிழ்செல்வனிற்கும் மனைவிக்கும் மனமுறிவு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தபோது, தமிழ்ச்செல்வனை நேரில் சந்திப்பதையே பிரபாகரன் தவிர்த்தார். தனக்கு நெருக்கமானவர்கள், தளபதிகள் இந்த விடயத்தில் முன்னுதாரணமாக வாழ வேண்டுமென்பது பிரபாகரனின் நிலைப்பாடு. தமிழ்ச்செல்வன் தம்பதி ஒற்றுமையான பின்னரே, தமிழ்செல்வன் மீண்டும் பிரபாகரனை சந்தித்தார். அந்த சந்திப்பு நடந்த சிறிதுநாளிலேயே அவர் விமானத் தாக்குதலில் மரணமாகி விட்டார். (தொடரும்) http://www.pagetamil.com/44914/

பாடசாலை கற்றல் உபகரணங்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கிய யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள்!!-வீடியோ

5 months 1 week ago
மாணக்க வாழ்க்கையில் இதல்லாம் சகமப்பா. திருப்தி தானே.... பெடியளுக்கு நாலு சாத்து வாங்கி கொடுத்தோம் எண்டு. உடைந்த கதிரைகளை அகற்றும் போது, உடைக்கிறார்கள், வசதியாக லாறியில் ஏத்த... அலம்பறை பண்ணாதீங்கப்பா.

மகளுக்குத் திருமணம்: பரோல் கேட்கும் நளினி

5 months 1 week ago
மகளுக்குத் திருமணம்: பரோல் கேட்கும் நளினி மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதம் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள நளினி, அந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவரான நளினி கடந்த 27 ஆண்டுகளாக ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நளினியின் மகள் ஆரித்ரா லண்டனில் வசித்து வருகிறார். ஆரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மகளின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தனது தூக்கு தண்டனை 2000ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட பின், இதுவரை, 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த 3,700 ஆயுள் கைதிகளைத் தமிழக அரசு விடுதலை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதம் பரோல் வழங்கச் சிறை விதிகள் வகை செய்துள்ள போதிலும், 27 ஆண்டுகளாக தனக்கு பரோல் வழங்கப்படவில்லை எனவும் மனுவில் கூறியுள்ளார். மேலும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரோல் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நளினி, பின் அதைத் திரும்பப் பெற்றார். கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி, தங்களை விடுவிக்கக் கோரி சிறையில் நளினியும், முருகனும் உண்ணாவிரதம் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/k/2019/04/09/70

பாஜக வெல்லும்: கருத்துக் கணிப்புகளின் கணிப்பு!

5 months 1 week ago
பாஜக வெல்லும்: கருத்துக் கணிப்புகளின் கணிப்பு! இதுவரை வெளியான 4 முக்கிய கருத்துக் கணிப்புகளின் சராசரியின்படி பாஜக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் காட்டிலும் ஒரு இடத்தைக் கூடுதலாகப் பெற்றுத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் 17ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதையொட்டிப் பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதுவரையில் வெளியானவற்றில் சில முக்கியக் கருத்துக் கணிப்புகளாக பார்க்கப்பட்ட சி வோட்டர், இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு, சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு மற்றும் டைம்ஸ் நவ்-விம்ஆர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு ஆகியவற்றின் சராசரி அடிப்படையில் பார்த்தால் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கணித்துள்ளது. சி வோட்டர் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 267 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 142 இடங்களையும், மற்ற கட்சிகள் 134 இடங்களையும் கைப்பற்றும் என மதிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல, இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 275 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 147 இடங்களையும், மற்ற கட்சிகள் 121 இடங்களையும் கைப்பற்றும் எனவும், சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 273 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 125 இடங்களையும், மற்ற கட்சிகள் 145 இடங்களையும் கைப்பற்றும் எனவும், டைம்ஸ் நவ்-விம்ஆர் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 279 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 149 இடங்களையும், மற்ற கட்சிகள் 115 இடங்களையும் கைப்பற்றும் எனவும் மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த நான்கு கணிப்புகளின் அடிப்படையில், அதன் சராசரியைக் கணக்கிட்டு பாஜக 273 தொகுதிகளைக் கைப்பற்றி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா கணித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 141 தொகுதிகளையும், மற்ற கட்சிகள் 129 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும் இந்தக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேசமயத்தில் மீடியா நிறுவனங்கள் நடத்திய அத்தனை கருத்துக் கணிப்புகளும் பிரதமர் அலுவலகத்துக்குச் சென்று இறுதி செய்யப்பட்ட பின்பே வெளியிடப்பட்டதாகவும் பத்திரிகையாளர்கள் வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது. https://minnambalam.com/k/2019/04/09/78

ரஃபேல்: மோடி அரசு அளித்த சலுகைகள்!

5 months 1 week ago
ரஃபேல்: மோடி அரசு அளித்த சலுகைகள்! 7.87 பில்லியன் யூரோ மதிப்புள்ள ரஃபேல் ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதியன்று கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்காக பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழு பல விதிவிலக்குகளையும், சலுகைகளையும் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விதிவிலக்குகள் அனைத்தும் முன்னெப்போதும் யாருக்கும் வழங்கப்படாதவை. ராணுவக் கொள்முதல் செயல்முறைகளில் முக்கிய விதிமுறைகளிலிருந்து விலக்கு உட்பட முக்கிய சலுகைகள் டசால்ட் ஏவியேஷன், எம்பிடிஏ ஆகிய இரண்டு பிரெஞ்சு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகள் அனைத்தும் இறுதிகட்ட ஆய்வுக்கும், ஒப்புதல் பெறுவதற்கும் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்தல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ராணுவ கொள்முதல் நடைமுறைகளில் பல்வேறு குளறுபடிகளும், மீறல்களும் இருப்பதாக உணர்ந்த பாரிக்கர் ஒப்புதல் அளிப்பதற்கு தயக்கம் காட்டினார். பாதுகாப்பு கொள்முதல் செயல்முறைகளில், தகாத செல்வாக்கை பயன்படுத்தவும், ஏஜெண்டுகள்/ஏஜென்சிகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரஃபேல் விவகாரத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் விநியோக நிறுவனங்கள் விதிமீறல்களில் ஈடுபடும்போது வழங்கப்பட வேண்டிய தண்டனைகளும் அமைதியாக நீக்கப்பட்டுவிட்டன. இவையனைத்தும் நீக்கப்பட்டதற்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் குழுவின் ஒப்புதல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்த ஆவணங்களில் மேற்கூறிய உண்மைகள் தெரிவிக்கப்படவில்லை. இவையனைத்தும் முக்கிய கொள்கைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களாகும். இந்திய பேச்சுவார்த்தைக் குழு 2016ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வெளியிட்ட இறுதி அறிக்கையில் இந்த உண்மைகள் அம்பலமாகியுள்ளன. இந்த ஆவணத்தை தி இந்து ஊடகம் பெற்று இத்தகவல்களை வெளியிட்டுள்ளது. பேச்சுவார்த்தையின் ஆரம்பகட்டத்தில், ஆஃப்செட் என்ற வார்த்தையை பயன்படுத்தும்படி இந்திய தரப்பு அறிவுறுத்தியும் பிரெஞ்சு பேச்சாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். ஆப்செட் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் ‘மேக் இன் இந்தியா’ என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளதாக இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் இறுதி அறிக்கை கூறுகிறது. ஆஃப்செட் ஒப்பந்தங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடுவர் மன்ற விதிகளை சேர்க்கும்படி டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், எம்பிடிஏ நிறுவனமும் முன்மொழிந்துள்ளன. அதன்படி, இரு தரப்புக்கும் இடையே ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் அதைத் தீர்ப்பதற்கு நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்படும். 24 மாதங்களுக்குள் பேச்சுவார்த்தையால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாவிட்டால் நடுவர் மன்றம் அமைத்து தீர்வு காணப்படும். விநியோக உடன்படிக்கை பிரிவு 21இல், எல்லா பிரச்சினைகளும் பேச்சுவார்த்தையால் தீர்க்கப்படும்; 24 மாதங்களுக்குள் தீர்வு காணாவிட்டால் ஐநா சர்வதேச வர்த்தக சட்ட நடுவர் மன்ற விதிமுறைகளின் கீழ் மத்தியஸ்தம் செய்து தீர்வு காணப்படும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆஃப்செட் ஒப்பந்தங்களில் ராணுவக் கொள்முதல் செயல்முறைகளின் பிரிவு 9ஐ கடைப்பிடிக்கும்படி இந்திய பேச்சுவார்த்தைக் குழு தொடர்ந்து வலியுறுத்தியும் பிரெஞ்சு தரப்பு மறுத்துள்ளது. 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்திலய பேச்சுவார்த்தையால் இவ்விவகாரத்தில் இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் அனைத்து முயற்சிகளும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து 2016 ஜூலை மாதத்தில், ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இரு மாதங்களுக்கு முன்பு, ஆஃப்செட் ஒப்பந்தங்களில் பிரிவு 9 கடைப்பிடிக்கப்படாத விவகாரத்தை அரசிடம் தெரிவிக்க பாதுகாப்பு கையகப்படுத்தல் குழு முடிவு செய்தது. 2016 ஆகஸ்ட் மாதத்தில் இவ்விவகாரத்தில் இரண்டு பிரெஞ்சு நிறுவனங்களுக்கும் விலக்கு அளிக்க பாதுகாப்பு அமைச்சரவைக் குழு தீர்மானித்தது. பாரிஸில் ரஃபேல் ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் 2015 மார்ச் 28 அன்று ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிட்டெட் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் லிமிட்டெட் நிறுவனம் 2015 ஏப்ரல் 24 அன்று பதிவு செய்யப்பட்டது. 2016 அக்டோபர் மாதத்தில் டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் நிறுவனமும் கூட்டணி அமைத்தன. இந்த கூட்டணி நிறுவனம் 2017 பிப்ரவரியில் பதிவு செய்யப்பட்டது. இந்த கூட்டணி நிறுவனத்துக்கு டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டெட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஃபேல் ஒப்பந்தத்தில் ரகசியமாக அனில் அம்பானியை உள்ளே கொண்டுவந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த சர்ச்சை 2018 செப்டம்பர் மாதத்தில் எழுந்தது. அப்போது, ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனத்தை முன்மொழிந்தது இந்திய அரசுதான் எனவும், அம்பானியுடன் டசால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிரான்ஸின் முன்னாள் அதிபர் பிரான்கோஸ் ஹாலண்ட் தெரிவித்தார். பின்னர் ஊடகங்களும் இதுதொடர்பாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தன. பாஜக அரசும், அனில் அம்பானியும், டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்துவருகின்றனர். https://minnambalam.com/k/2019/04/09/87

விண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா?

5 months 1 week ago
மே 18 க்கு பிறகு அருஸ் ன் கட்டுரைகள் பெரிதாக பார்ப்பதில்லை இந்த கட்டுரை இங்கு இணைத்த காரணம் கீழே உள்ளது . கருணாவும் ,தமிழரசு கட்சியும் ஒன்றுதான் .

மலரும் நினைவுகள் ..

5 months 1 week ago
நில்மினி இங்கு எவரும் தங்கள் உண்மையான பெயரில் இணைவதில்லை.ஆனபடியால் இங்கு வேறுவேறு பெயர்களிலேயே களமாடுகிறார்கள். யாருடனாவது தனிப்பட செய்தி பரிமாற வேண்டுமானால் அவியேற்றரை அழுத்தினால் அதில் மெசேச் என்வலப் தெரியும்.அதை அழுத்தி தனிமடல் எழுதலாம். உங்கள் சுயவிபரங்களையும் அதிகம் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதுவதை யாழில் உள்ளவர்கள் மட்டுமல்ல உலகில் எல்லோருமே பார்க்கிறார்கள்.
Checked
Sun, 09/22/2019 - 10:10
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr