புதிய பதிவுகள்

யாழில். 25 வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லை; அங்கலாய்க்கும் பிராந்திய வைத்தியர்

5 months ago
யாழில். 25 வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லை; அங்கலாய்க்கும் பிராந்திய வைத்தியர் “யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 25 வைத்தியசாலைகளில் தற்போதுவரை வைத்தியர்கள் இல்லை, அவர்கள் பின்தங்கிய பிரதேசங்களுக்குச் செல்ல மறுக்கின்றனர்” இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்தார் யாழ்ப்பாணப் பிராந்திய வைத்திய அதிகாரி. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதமர் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடையத்தை அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள 25 வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்கள் இல்லை. 5 ஆதார வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லை. கிராமப்புற வைத்தியசாலைகளுக்குச் செல்ல வைத்தியர்களுக்கு விருப்பம் இன்மையே இதற்குக் காரணம்”என்று வைத்திய அதிகாரி தெரிவித்தார். “வெறுமனே நகரப்புறங்களில் உள்ள வைத்தியசாலைகளின் கட்டடங்களைக் கட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. கிராமப்புற வைத்தியசாலைகளில் வைத்தியர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். அங்கு பணிபுரிய விரும்பும் வைத்தியர்களுக்கு மேலதிக சலுகைகளை வழங்கவேண்டும். அதன் ஊடாகவே வைத்தியர்கள் அங்கு சென்று பணிபுரிவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்த முடியும்” என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/62829

பிரதமரின் வருகைக்காக காத்திருந்த மக்கள்

5 months ago
-எஸ்.நிதர்ஷன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்காக் பயனாளிகளும் பொது மக்களும் ஐந்து மணித்தியாலங்கள் காத்திருந்த நிலையில், பிரதமர் உள்ளிட்ட அதிதிகள், ஐந்து நிமிடங்களில் நிகழ்வை முடித்துக் கொண்டு சென்றதால் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பலரும் விசனம் வெளியிட்டுள்ள சம்பவமொன்று, வடமராட்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது. வடமராட்சி - கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட உடுப்பிட்டி பகுதியில், அமைக்கப் பெற்ற புதிய வீடுகள் கையளிப்பு, காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு, நேற்றுக் காலை 11 மணிக்கு இடம்பெறுமென பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பயனாளிகள் மற்றும் பொது மக்களை காலை 8.30 மணி முதல் 9 மணிக்கு முன்னதாக வருமாறும் அழைப்பு விடப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த நேரத்திற்கென வந்த பொது மக்கள் மற்றும் பயனாளிகள், பாதுகாப்பு சோதனைகளின் பின்னர் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆயினும், நிகழ்வு ஆரம்பமாகுமெனக் குறிப்பிட்ட 11 மணிக்கு பிரதமர் உள்ளிட்ட அதீதிகள் வருகை தராதமையால், அங்கிருந்த பலரும் கடும் விசனமடைந்திருந்தனர். இவ்வாறான நிலையில் மாலை இரண்டு மணிக்கு பிரதமர் உள்ளிட்ட அதீதிகள் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு வந்து நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தனர். இதன் போது வீட்டுத் திட்டத்துக்கான அடிக் கல்லை பிரதமர் திரை நீக்கம் செய்து வைத்ததுடன், புதிதாக அமைக்கப்பட்ட வீடுகளையும் நடாவெட்டித் திறந்து வைத்து அந்த வீடுகளையும் பிரதமர் உள்ளிட்ட அதிதிகள் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து அந்தக் வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கான காணி உறுதிப் பத்திரங்களையும் பிரதமர் வழங்கி வைத்தார். இந்நிகழ்வுக்காக, காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரையாக சுமார் ஐந்து மணிநேரம் பயனாளிகளும் பொது மக்களும் என நூற்றுக்கணக்கானோர் காத்திருந்த நிலையில், குறித்த நிகழ்வை சுமார் ஐந்து நிமிடங்களில் முடித்தவிட்டு, பிரதமர் உள்ளிட்ட அதிதிகள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்த பலரும் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். அதே நேரம், இந்த வீட்டுத்திட்டம் கையளிப்பு மற்றும் காணி உறுதிப்பத்திரங்களை பெறும் பயனாளிகளைத் தவிர சமுர்த்தி உள்ளிட்ட வேறு திட்டங்களில் உள்வாங்கப்பட்ட பயனாளிகளும் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அழைக்கப்பட்ட பயனாளிகள் பொது மக்கள் என அனைவரும், ஐந்து மணி நேரம் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டது. இதில் சிலர் நிகழ்வு ஆரம்பிப்தற்கு முன்னதாகவே, சில பல காரணங்களின் நிமித்தம் சென்றிருந்த நிலையில், நிகழ்வு நடைபெறும் போது அங்கிருந்த பலரும் நிகழ்வு முடிவடைந்த பின்னர், கடும் அதிருப்தியை வெளியிட்டு விசனத்துடன் திரும்பிச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பிரதமரின்-வருகைக்காக-காத்திருந்த-மக்கள்/71-236874

எலும்பும் தோலுமான உடல்; கம்பீர யானையின் நிலை! - உலகை உலுக்கும் புகைப்படம்

5 months ago
இலங்கைக்கு வரும் உல்லாச பிராணிகளை அங்குள்ள யானைகளை வைத்தும் கவரும் நெறிமுறைகள் நீண்ட காலமாக உள்ளது. அதை புறக்கணிக்கும் கோரிக்கைகளும் விடப்பட்டுள்ளன. நலிந்து மெலிந்து போயுள்ள இலங்கை உல்லாசத்துறை இந்த 'உலக கவனத்தை' விரும்பவில்லை.

சாதி கயிறுகளை மாணவர்கள் கட்ட தமிழக அரசு தடை

5 months ago
ஓ எச்(ச) ராஜா சர்மாவே சொல்லீட்டாரா? இனி ஏது அப்பீல்? நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு எல்லாம், “ஆண்டி இந்தியன்”, “ஆண்டி ஹிந்து” பட்டமளிப்பு செய்தால் போச்சு 😂

எலும்பும் தோலுமான உடல்; கம்பீர யானையின் நிலை! - உலகை உலுக்கும் புகைப்படம்

5 months ago
நல்ல விசயம். ஆனால் டிக்கிரியை 2ம் நாள் பெரெஹெரவோடு நிறுத்திவிட்டதாய் படித்தேன். ஆனால் இவர்கள் இன்னும் கையொப்பம் எடுக்கிறார்கள்?

ஜகார்த்தா கடலுக்குள் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை!

5 months ago
மலேசியாவுக்கு பின் உலகில் அதிகம் இந்து கோயில்கள் இருக்கும் இஸ்லாமிய நாடு என்றால் அது இந்தோனேசியாதான். பாலித்தீவில் மட்டுமே இஸ்லாம் பரவ முன்பிருந்தே வாழ்ந்த இந்துக்கள் இருகிறார்கள். ஏனைய தீவுகளில் வசிக்கும் இந்துக்களெல்லாம் சில நூறு வருடங்களுக்கு முன் போனவர்கள். ஜகார்தாவில் ஒரு காளிகோவில் இருக்கிறது. தமிழக முறைப்படி அமைந்த கோயில். இன்னும் கொஞ்சம் மேளா போனால் மெடான் நகரம் - இங்கே மிக அதிகளவில் தமிழர்கள் வசிக்கிறார்கள். கோயில்களும் அதிகம். இஸ்லாமிய பரவலுக்கு முன்னர், தமிழகத்தோடு அதிக தொடர்புகளை கொண்டிருந்த தேசம் இந்தோனேசியா. ஒரு காலத்தில் தமிழ் எழுத்துக்களே பாஷா இந்தோனேசியா/மலாய் மொழியை எழுத பயன்பட்டது. இன்று மலாய் மொழி ஆங்கில எழுத்துக்களை கொண்டும், பாஷா இந்தோனேசியா டச்சு எழுத்துக்களை கொண்டும் எழுதப் படுகிறது. பழக இனிய மக்கள். மிகவும் சகிப்புத் தன்மையோடு பல ஆண்டுகாலமாய் தமிழர்களை, அவர்கள் கலாச்சாரத்தை, மொழியை, மதத்தை தம்மத்தியில் வாழ விட்ட நல்லுள்ளங்கள். அவர்கள் நல்ல குணத்துக்கு எல்லாம் நல்லதாகவே நடக்க கடவது. https://en.m.wikipedia.org/wiki/List_of_Hindu_temples_in_Indonesia

இலங்கை ஜனாதிபதி தேர்தல் - இந்த முறையும் பெண் வேட்பாளர்கள் இல்லையா

5 months ago
ரஞ்ஜன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக, கொழும்பிலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் இன்று வரையான காலம் வரை நாட்டை இரண்டு பெண்கள் மாத்திரமே ஆட்சி செய்துள்ளனர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் அவரது மகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரே இலங்கையை ஆட்சி செய்த பெண் தலைவர்களாக வரலாற்றில் இடம்பிடித்திருந்தனர். 1960 - 1965, 1970 - 1977 மற்றும் 1994 - 2000 வரையான காலப் பகுதிகளில் உலகின் முதலாவது பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, இலங்கையில் பிரதமராக பதவி வகித்திருந்தார். அதேபோன்று அவரது மகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994இல் ஆகஸ்டு முதல் நவம்பர் வரை இலங்கை பிரதமராக இருந்தார். 1994ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2005ஆம் ஆண்டு நவம்பர் வரையான காலப் பகுதி வரை இரண்டு முறை இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார். இதன்படி, 1994ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை இலங்கையின் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் இரண்டு பெண்களே நாட்டை ஆட்சி செய்துள்ளனர். இவர்களைத் இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் எந்தவொரு பெண்ணும் பிரதமர் அல்லது ஜானதிபதி பதவிகளை வகிக்கவில்லை. இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் எழுந்துள்ள பின்னணியில், இந்த முறையும் ஜனாதிபதி வேட்பாளராக பெண்ணொருவர் களமிறங்குவதற்கான சாத்தியம் குறைவாகவே காணப்படுகின்றது என அறிய முடிகின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்ற பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் கடந்த 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளதாக கட்சியின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர்களாக கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ள போதிலும், இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை. அதேபோன்று மக்கள் விடுதலை முன்னணி தனது ஜனாதிபதி வேட்பாளரை கொழும்பு காலி முகத்திடலில் நாளை (18) நடைபெறும் மக்கள் கூட்டத்தின்போது அறிவிக்கவுள்ளதாக அந்த கட்சியின் உறுப்பினர் விஜித்த ஹேரத் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தமது வேட்பாளர் ஆண் வேட்பாளர் என்பதனை உறுதி செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் எட்டவில்லை. இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகள் உள்ளிட்ட ஏனைய பல கட்சிகள் கடந்த காலங்களில் பெரும்பான்மை கட்சிகள் பெயரிடும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கி வந்திருந்தன. படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI இந்த நிலையில், இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கும் பெண் வேட்பாளர் ஒருவர் களமிறங்குவது சாத்தியமற்ற ஒன்றாக காணப்படுகின்றது. இலங்கை நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களில் 13 பெண்கள் மாத்திரமே உள்ளனர். இலங்கை மக்கள் தொகையில் 52 சதவிகிதமாக பெண்கள் இருந்தாலும், இலங்கை நாடாளுமன்றத்தில் 5.8 வீத பெண்களே அங்கம் வகிக்கின்றனர். இலங்கை ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட பெண்கள் தேர்தல் ஆண்டு வேட்பாளர்கள் எண்ணிக்கை பெண் வேட்பாளர்கள் 1982 5 பெண்கள் இல்லை 1988 3 ஒருவர் (ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க) 1994 6 இருவர் (சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஸ்ரீமனி திஸாநாயக்க) 1999 13 ஒருவர் (சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க) 2005 13 பெண்கள் இல்லை 2010 22 பெண்கள் இல்லை 2015 19 பெண்கள் இல்லை 1982ஆம் ஆண்டுக்கு முன்னதாக இலங்கையில் பிரதமர் ஆட்சியே காணப்பட்ட நிலையில், அதற்கு பின்னரே நிறைவேற்று ஜனாதிபதி முறைமை கொண்டு வரப்பட்டிருந்தது. 1982ஆம் ஆண்டு முதல் 7 தடவைகள் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை காண முடிகின்ற போதிலும், பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவதை 1999ஆம் ஆண்டுக்கு பின்னர் காண முடியவில்லை. நாடாளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக காணப்படுகின்ற பின்னணியில், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்த உள்ளூராட்சி சபை தேர்தல்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. உள்ளூராட்சி சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்களை 25 வீதமான அதிகரிக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டிருந்தது. சட்டங்கள் இயற்றப்படும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு சரியான அங்கீகாரத்தை வழங்க தயக்கம் தெரிவிக்கின்றமையே பெண்கள் முன் வராமைக்கான காரணம் என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமா சந்திரா பிரகாஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ''2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபை தேர்தல், இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். காரணம், அதற்கு முன்னர் பெண்களுக்கான அதிகார பங்கீடு குறித்து அதிகளவில் பேசப்பட்டாலும், 25 வீத இலக்கு கிட்டத்தட்ட 23 வீதத்தை அண்மித்த ஒரு உள்ளூராட்சி சபைத் தேர்தலாக அமைந்திருந்தது." "ஆனால் இலங்கையில் பெண்கள் அரசியலில் வருவது பெரிதும் சவாலாக உள்ளது. காரணம் சட்டங்கள் இயற்றப்படும் இடம் நாடாளுமன்றம். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான அங்கீகாரத்தை வழங்க தயங்குவது தான் மிக முக்கியமான ஒரு காரணம். உள்ளூராட்சி சபை தேர்தலில் 25 வீதம் என்ற இலக்கு எதிர்வரும் காலங்களில் 50 வீதம் என்ற இடத்திற்கு வர வேண்டும். ஜனாதிபதித் தேர்தலிலும் பெண்கள் போட்டியிட வேண்டும்," என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமா சந்திரா பிரகாஷ் தெரிவித்தார். இலங்கையில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது குறைவாகவே காணப்படுகின்ற என ஆசிரியை யசோதா ராஜேந்திரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ''பெண்களுக்கு முன்னுரிமை கிடையாது. ஜனாதிபதி மாத்திரம் அல்ல, ஒரு நிறுவனத்தில் கூட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. பெண்களினால் ஒரு வேலையை சரிவர செய்ய முடியாது. முகாமைத்துவம் முடியாது என்ற எண்ணம் ஆண்கள் மத்தியில் காணப்படுகின்றது. அதனால் பெண்களின் மனங்களிலும் அதே எண்ணம் தோன்றியுள்ளது. இலங்கையை பொறுத்தவரை ஆண் ஆதிக்கம் அதிகளவில் காணப்படுகின்றது. இந்த குறைபாடுகள் தீர்க்கப்படும் பட்சத்தில் பெண்களும் முன்நோக்கி வர முடியும்" என யசோதா ராஜேந்திரன் தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/sri-lanka-49371670

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

5 months ago
பாட்டின்ர‌ உழுந்து வ‌டையை காக்கா க‌ள‌வேடுக்க‌ , காக்காவிட‌ம் இருந்து அந்த‌ வ‌டையை ஏமாத்தி எடுக்க‌ , அதுக்கு கிடைச்ச‌ த‌ண்ட‌னை , ஹா ஹா 😁😁 /

அமெரிக்கால போயி வெற்றி கொடி நாட்ட போறாரு நம்ம எடப்பாடி.!

5 months ago
அமெரிக்கால போயி வெற்றிக் கொடி நாட்டப் போறாரு நம்ம ஆளு !! எடப்பாடியைக் கொண்டாடிய ராஜேந்தி பாலாஜி !! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28 ஆம் தேதி அமெரிக்கா , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 10 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார். அதே நேரத்தில் தமிழகத்தில் ஏற்கனவே உலக மூதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றதே. அதில் முதலீடுகள் ஈர்க்கப்படவில்லையா என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதனிடையே வெளிநாடு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பொறுப்புகளை, துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சிடம் கொடுக்காமல் அமைச்சர் தங்கமணியிடம் கொடுத்துச் செல்லப் போவதாக தகவ்லகள் வெளியாகியுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்தி பாலாஜி , முதலீடுகளை ஈர்க்கச் செல்லும் முதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும் என தெரிவித்தார். . தேசிய பார்வையில் பாஜக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அதிமுகவை கவர்ந்துள்ளன என தெரிவித்த ராஜேந்திர பாலாஜி . நல்லவர்கள் யார் ஆதரவு கொடுத்தாலும் அதிமுக அதை ஏற்றுக்கொள்ளும். என தெரிவித்தார். எந்த முதலமைச்சரும் படைக்காத சாதனையை முதலமைச்சர் படைத்து வருகிறார், அவர் மீது உள்ள ஆதங்கத்தில் முதல்வரின் அமெரிக்க பயணத்தை ஸ்டாலின் குறை கூறுகிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.. https://tamil.asianetnews.com/politics/rajendra-balaji-talk-about-cm-pwe1kp டிஸ்கி: மாமா.. மாமா.. அமெரிக்காவுல நான் பொருள் காட்சிய சுத்தி பாக்கும் போது காணாம போனா கண்டு பிடுச்சுடுவாங்க இல்ல..? மைக்குல சொல்லுவங்க மாப்பிள.. பின்ன அவிங்க நாடு கெட்டு போயிடாது..?

எலும்பும் தோலுமான உடல்; கம்பீர யானையின் நிலை! - உலகை உலுக்கும் புகைப்படம்

5 months ago
எல்லாம் நம்பிக்கைதான். ஒருத்தருக்கு கடவுள்/ தன் மதம் மீது அசையாத நம்பிக்கை. இன்னொருவருக்கு கடவுள் இல்லை என்பதன் மீது அசையாத நம்பிக்கை. மற்றையவருக்கு தன் சதிக் கோட்பாடு சரி என்பதில் மீது அசையாத நம்பிக்கை. எமது நம்பிக்கை அடிப்படையில் நாம் செய்யும் ஒரு செயலை வேறு ஒருவர் தட்டிக் கேட்டால் பொத்துக் கொண்டு வரும் கோபம், இன்னொருவரின் நம்பிக்கையை நாம் கேள்விக்குள்ளாக்கும் போது வருவது இல்லை. உ+ம் : முன்னேஸ்வரத்தில் பலி கூடாது, முஸ்லீம்கள் போயாவில் மாடு வெட்டக் கூடாது எனும் பெளத்த புண்ணியவாங்களுக்கு 70 வயது என்புதோல் போர்த்திய யானையின் துயரம் கண்ணுக்குப் படாது. இது மறுவழமாக இந்துக்களுக்கும் ஏனைய எல்லா நம்பிக்கையினருக்கும், நம்பிக்கை இல்லாதோருக்கும் கூட பொருந்தும். எல்லாம் தக்காளி சோஸ்/இரத்தம் கதைதான் 😂 இது போல் ஒரு அமைப்பு இதில் தலையிட்டதாக எங்கோ படித்தேன்.

இந்தியாவுக்கு நேரம் பார்த்து ஆப்பு வைத்த அமெரிக்கா.!

5 months ago
இந்தியாவுக்கு நேரம் பார்த்து ஆப்பு வைத்த அமெரிக்கா... அதிபர் டிரம்ப் அதிரடி..! இந்தியா, சீனா இனி வளரும் நாடுகள் இல்லை, உலக வர்த்தக அமைப்பின் சலுகைகள் இனி அவற்றுக்கு கிடைப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது என்ற கொள்கை கோட்பாடுகளில் அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதியாக உள்ளார். அமெரிக்கப் பொருட்கள் மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டி வந்தார். இதனால், இந்தியாவை `வரிகளின் அரசன்’ என்று கூட விமர்சித்தார். அதே போன்று, சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது அதிகளவு வரி விதிப்பதாக அவர் கூறினார். அதனால், சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை அதிகரித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால், இருநாடுகளும் மறைமுக வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அங்கு பென்சில்வேனியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் “இந்தியாவும், சீனாவும் ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக திகழ்கின்றன. அவர்களை இனி வளரும் நாடுகள் என கூற முடியாது. எனவே அவர்கள் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெற முடியாது” என கூறினார். மேலும், “அவர்கள் வளர்ந்து வரும் நாடுகள் என்ற வகையில் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெறுகின்றனர். இது அமெரிக்காவுக்கு பாதகமாக அமைகிறது. அவர்கள் ஆண்டாண்டு காலமாக நம்மிடம் இருந்து நன்மைகளை அனுபவித்து வருகின்றனர். உலக வர்த்தக அமைப்பின் விதிகளில் உள்ள ஓட்டைகளை, பொருளாதாரத்தில் நன்கு வளர்ந்த நாடுகள் பயன்படுத்தினால் அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். https://tamil.asianetnews.com/world/india-china-no-longer-developing-nations-donald-trump-pw9lot

எலும்பும் தோலுமான உடல்; கம்பீர யானையின் நிலை! - உலகை உலுக்கும் புகைப்படம்

5 months ago
உண்மைதான் இதனால்தான் நான் யாருக்கும் அவர்கள் மத நம்பிக்கை பற்றி பாடம் எடுப்பதில்லை. ஆனால் மதவாதிகள் மட்டுமில்லை, கடவுள் மறுப்பாளர்களிடம் போய் கடவுள் இருக்க கூடுமோ? என்ற ஐயத்தையேனும் சொல்லிப் பாருங்கள், பிச்சு மேய்ந்து விடுவார்கள். 😂. இவ்வளவு ஏன் சதிக்கோட்பாட்டாளர்களிடம் போய், அவர்களின் ஒரு கோட்பாடு அவ்வளவாக நம்பும் படியாக இல்லை என ஒரு வார்த்தை தவற விட்டுப் பாருங்கள் - பக்கம் பக்கமாக தன்னிலை விளக்கம் தருவார்கள். 😂 எதன் மீதும் அதிக பற்றுக் கொண்டால் இதுதான் நிலை.

இதற்குப் பெயர் பக்தியா?

5 months ago
தனிமனித தாக்குதல் செய்யாது கருத்தாடுவது என்பது இதுதான் போலும்.😂 நீங்கள் எழுதுவதும் விடுவதும் உங்கள் முடிவு. ஆனால் தேவையில்லாமல் எனக்கு, நாத்திகன், இந்து மதவிரோதி இப்படி பொய்பட்டங்கள் கட்ட முனைந்தால் அதுக்கு தக்க பதில் எப்போதும் தரப்படும்.

உலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டிரம்ப்

5 months ago
உவங்களிட்டை குடுத்தால் திருப்பி வாங்கேலாதப்பா.....கொஞ்சம் உறுக்கி கேட்டால் படை பட்டாளத்தோடை அடிக்க வந்துடுவாங்கள்.

இதற்குப் பெயர் பக்தியா?

5 months ago
மீண்டும் வாசித்துப் பாருங்கள். யாரை quote பண்ணினேனோ அவரது கருத்துக்குத் தான் அந்த quoted பகுதிக்குக் கீழே எனது பதிலை எழுதியுள்ளேன். ஒன்றுக்கு மேற்பட்ட quoted sections ஒரே பதிலில் merged reply ஆக வருவது தானே.

ஜகார்த்தா கடலுக்குள் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை!

5 months ago
இந்தோனேசியா ஒரு காலத்தில் ஒரு ஹிந்து நாடு.. ஆக்கிரமிப்பாளர்களை இல்லாதொழிக்க இப்படியான சம்பவம் நிகழ வாய்ப்பு உண்டு.. 😕😲😲

400 ம‌ணித்தியால வேலை 1200 இயுரோ ச‌ம்ப‌ள‌ம் ,

5 months ago
வ‌ண‌க்க‌ம் யாழ் உற‌வுக‌ளே / பிரான்ஸ் நாட்டில் வ‌சிக்கும் என‌து ஊரை சேர்ந்த‌ ஒரு அண்ணா த‌மிழ் க‌டையில் வேலை செய்கிறார் , மாச‌ம் 400 ம‌ணித்தியால‌ வேலை ச‌ம்ப‌ள‌ம் 1200 இயுரோ ( மிருக‌ வ‌தை ) என்ர‌ ந‌ண்ப‌னுக்கு அந்த‌ அண்ணாவை ந‌ல்லா தெரியும் , என்ர‌ ந‌ண்ப‌ன் அவ‌ரின் வேலையையும் ம‌ணித்தியால‌த்தையும் ச‌ம்ப‌ள‌த்தையும் சொல்ல‌ என்ன‌டா கொடுமை இது என்று என‌க்கு தோனிச்சு 😓, அந்த‌ 1200 இயுரோவில் தான் பேருந்து க‌ட்ட‌ன‌மும் க‌ட்ட‌னும் , ஊரில் அவ‌ரின் ம‌னைவி பிள்ளைய‌லுக்கு மாச‌ம் 400 இயுரோவை அனுப்பி மீத‌ம் உள்ள‌ காசில் தான் சாப்பாடு வீட்டு வாட‌கை / என்ர‌ ம‌ச்சான் அவ‌னும் இங்கை உண‌வ‌க‌ம் வைச்சு ந‌ட‌த்துறான் , அவ‌னுக்கு சொன்னேன் எங்க‌ட‌ ஊரை சேர்ந்த‌ அண்ணா பிரான்ஸ்சில் இப்ப‌டி க‌ஸ்ர‌ ப‌டுறார் என்று / உட‌ன என்ர‌ ம‌ச்சான் சொன்னான் , ம‌ச்சி அந்த‌ அண்ணாவை த‌ண்ட‌ க‌டையில் வ‌ந்து வேலை செய்ய‌ சொல்லு தான் 1600 இயுரோ மாச‌ம் குடுக்கிறேன் , அவ‌ர் 100 ம‌ணித்தியாள‌ம் வேலை செய்தாலே த‌ன‌க்கு போதும் என்று என்ர‌ ம‌ச்சான் உட‌ன‌ சொன்னான் , அதோடு அந்த‌ அண்ணாவுக்கும் சாப்பாடும் தான் குடுக்கிறேன் என்று 🙏👏/ 100ம‌ணித்தியால‌ வேலைக்கு 1600 இயுரோ ச‌ம்ப‌ள‌ம் குடுக்கிறேன் என்று சொன்ன‌ என்ர‌ ம‌ச்சானின் ம‌ன‌சு எங்கை , 300 ம‌ணித்தியாள‌ம் மிச்ச‌ம் அதோடு 400 இயுரோ ச‌ம்ப‌ள‌ம் கூட‌ , ( உன்ர‌ ந‌ல்ல‌ ம‌ன‌சுக்கு நீ நீடூழி வாழுவாய்டா ம‌ச்சி 🙏🙏🙏🙏🙏 ) 400 ம‌ணித்தியால‌ம் வேலை வாங்கி போட்டு 1200 இயுரோ குடுக்கும் அந்த‌ ம‌னித‌ர்க‌ள் எங்கை ( மிருக‌ வ‌தை பிரான்ஸ் நாட்டில் எம்ம‌வ‌ர்க‌ள் சொந்த‌ இனத்த‌வ‌ர்க‌ளுக்கு செய்யிற‌து 😠/ ப‌திவு பைய‌ன்26 /

உலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டிரம்ப்

5 months ago
டிரம்ப் இதை சொல்வது, ஏவுகணை பாதுகாப்பு வலையமைப்பை இன்னும் பெரிதாக ஆக்குவதத்திற்கு, பென்டகன் மற்றும் அமெரிக்கா பாதுகாப்பின் தொழில் நுட்ப பிரிவுகளின் அறிவுறுத்தலின் படி. ஏற்றனவே, 24 மணி நேர ஏவுகணை கண்காணிப்பு ரேடார் மற்றும் செய்ம்மதி வலையமைப்புக்கு நிலையை கிரீன்லாந்து இல் அமெரிக்கா நிறுவி வைத்துள்ளது. ஏனெனில், ஏவுகணைகளை கண்காணிப்பதற்கு தற்போதைய புவியியல் அமைப்பில் கிரீன்லாந்து மிகவும் வசதியானது, வட துருவத்திற்கு அண்மித்து இருப்பதால். ஏறத்தாழ, ஓர் மலையின் உச்சியில் இருந்து கண்காணிப்பது போல. கண்காணிப்பு ஏற்ற இடமாயின், அது கண்காணிக்கப்படும் ஏவுகணைகளையம் நாடுகளையம் துவம்சம் செய்வதற்கான ஏவுகணைகளை ஏவுவதத்திற்கு ஏற்ற இடம் தானே. அமெரிக்கா தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து விலகி விட்டது. ரஷ்யா, சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொழிநுட்பத்தில் அமெரிக்காவிற்கு ஈடுகட்டிவிட்டன. எனவே, ஏவுகணை பாதுகாப்பிற்கு, கண்காணிப்பிற்க்கு அப்பால், ஏவுகணைகளை ஏவுவதன் மூலம் அமெரிக்கா முதல் அடிக்கான (first strike) இடத்தை பிடிக்க விரும்புகிறது.

பலாலி விமான நிலையத்திற்காக காணிகளை சுவீகரிப்பதை அனுமதிக்க முடியாது - மாவை

5 months ago
ஓடுபாதையை வடக்கு புறமாக விஸ்தரிப்பதாயின் ஏன் கடல் வரை போக வேண்டும். தற்போது இருக்கும் ஓடுபாதையின் 3/2 பங்கு நீளாமன நிலப்பரப்பு கடற்கரைக்கு போகமும்னமே வருகிறதே? இது போதாதா? கடலை நிரவுவது அதிக செலவான வேலை.
Checked
Wed, 01/22/2020 - 11:40
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr