COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்

கோவிட் 19: கொரோனா வைரஸ் பிற வைரஸ்களைவிட ஏன் மிகவும் ஆபத்தானது?

1 day 1 hour ago
  • ஜேம்ஸ் கல்லாகர்
  • சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர்

ஒரு சிறிய வைரஸ், நாம் முன்பு வாழ்ந்த வாழ்க்கையை முற்றும் முழுவதுமாக திருப்பிப் போட்டுவிட்டது.

இதற்கு முன்பும் நாம் வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஏன் பெருந்தொற்றுகளை கூட எதிர்கொண்டிருக்கிறோம். ஆனால், வைரஸ் பரவும் போதெல்லாம் இவ்வாறு உலகம் முடங்குவது இல்லை. இதற்கு முன்பு இந்தளவுக்கு உலகம் முடங்கியதும் இல்லை.

கொரோனா வைரஸால் முடங்கி இருக்கிறது. ஏன் கொரோனா வைரஸ் அச்சமூட்டுவதாக இருக்கிறது?

ஏமாற்றுவதில் அரசன்

நோய் தொற்றின் ஆரம்ப காலகட்டங்களில் இந்த வைரஸ் உடலை ஏமாற்றும் ஆற்றல் கொண்டது.

நமது நுரையீரலில் வேகமாகப் பரவும். ஆனால், நம் உடலின் எதிர்ப்பு சக்திக்கு எல்லாம் சரியாக இருப்பது போன்றே தோன்றும்.

இது தொடர்பாகப் பேசும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் லெஹ்னர், "இது மிகவும் புத்திசாலித்தனமான வைரஸ். உங்கள் மூக்கை வைரஸ் தொழிற்சாலையாக மாற்றும். ஆனால் எல்லாம் சரியாக இருப்பது போலவே தோன்றும்," என்கிறார்.

நமது உடலில் உள்ள உயிரணுக்கள் ஒரு வேதிப்பொருளை வெளிப்படுத்தும். அதன் பெயர் இண்டெர்ஃபெரோன்ஸ்.

ஒரு வைரஸ் இந்த வேதிப்பொருளைக் கடத்துவது நம் உடலுக்கும், எதிர்ப்பு சக்திக்கும் ஓர் எச்சரிக்கை சமிக்ஞை.

ஆனால் கொரோனா வைரஸுக்கு ஓர் ஆற்றல் இருக்கிறது. அதாவது இந்த வேதிப்பொருள் கொடுக்கும் சமிக்ஞையை இல்லாமல் செய்யும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால், உங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது உங்களுக்கே தெரியாது என்கிறார் பேராசிரியர் பால் லெஹ்னர்.

இந்த வைரஸ் தாக்கிவிட்டு ஓடிவிடும் கொலையாளியைப் போன்றது.

கோவிட் 19: ஏன் கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

 

ஒரு கட்டத்தில் நம் உடல்நிலை முடியாமல் போன பிறகு நம் உடலில் உள்ள இந்த வைரஸ் உச்சத்தை அடையும்.

ஆனால், இதற்குக் குறைந்தது ஒரு வார காலம் எடுக்கும். நம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் முதல் ஒரு வாரம் நமக்கு எதுவுமே தெரியாது.

நாம் குணம் அடைவது அல்லது மரணம் அடைவதற்கு முன்பே அந்த வைரஸ் வேறொருவர் உடலுக்கு சென்று இருக்கும்.

நீங்கள் செத்துவீட்டீர்களா என்றெல்லாம் அந்த வைரஸ் கவலை கொள்ளாது. இது உங்களை தாக்கிவிட்டு ஓடிவிடும் வைரஸ் என்கிறார் பேராசிரியர் லெஹ்னர்.

2002ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் - கொரொனா வைரஸுடன் இந்த வைரஸ் முரண்படும் இடம் இது தான். சார்ஸ் உடனடியாக சமிக்ஞை காட்டும். உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ள முடியும்.

நம் உடல் தயாராக இல்லை

உங்களுக்கு இதற்கு முந்தைய கொரோனா தொற்று நினைவிருக்கிறதா?

2009ஆம் ஆண்டு H1N1 வைரஸ் குறித்த அச்சம் எங்கும் இருந்தது.

ஆனால், அந்த வைரஸ் எதிர்பார்த்த அளவும் மரண வைரஸாக மாறவில்லை. அதற்கு காரணம் உடலில் அந்த வைரஸை உணரும் எதிர்ப்பு சக்தி இருந்ததுதான்.

கோவிட் 19: ஏன் கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

 

இது குறித்து பேசும் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ட்ராஸி ஹசெல், "இந்த வைரஸ் புதியது. இதன் காரணமாக நம் உடலில் இதற்கான எதிர்ப்பு சக்தி இருக்காது. இதனால் இதற்கான பாதுகாப்பும் இருக்காது" என்கிறார்.

இதனை எளிதாக விளக்க வேண்டுமானால், ஐரோப்பியர்கள் மூலமாக சின்னம்மை பல இடங்களுக்கு பரவிய போது, அது மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தியது போன்றதுதான் இதுவும்.

புதிய வைரசுடன் போராட, நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் பல பரிசோதனைகளை செய்யும். ஆனால், முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முன்பே பலவீனமாக இருப்பதால், அவர்களால் இந்த வைரஸை எதிர்த்து போராடுவது கடினமாக ஆகிறது.

லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் மரோ கியாகோ, "கோவிடின் பலதன்மைகள் தனித்துவமானது. இது வேறு எந்த பொதுவான வைரஸ் நோயிலிருந்தும் வேறுபட்டது," என்கிறார்.

நுரையீரல் உயிரணுக்களை கொல்வதை மட்டும் இந்த கொரோனா வைரஸ் செய்வதில்லை. இது அதனை முழுவதுமாக சிதைத்துவிடும்.

இது மிகவும் விசித்திரமான தொற்று என்கிறார் அவர்.

உடல் பருமனும் கொரோனாவும்

உடல் பருமன் உள்ளவர்களை கொரோனா தாக்கினால், அவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள்.

கேம்ப்ரிட்ஜ் பலகலைக்கழகத்தின் பேராசிரியர் சர் ஸ்டீஃபன் ஒ ரஹிலி, "உடல் பருமனுக்கும் இதற்கு முன்பு பரவிய வைரஸ் தொற்றுகளுக்கும் பெரிதாக தொடர்பு இல்லை. ஆனால், கொரோனா வைரசுக்கு இருக்கிறது," என்கிறார்.

உடல் முழுவதும் உள்ள கொழுப்பு, குறிப்பாக நுரையீரலில் உள்ள கொழுப்பு, வளர்சிதை மாற்ற இடையூறை ஏற்படுத்துகிறது. இது கொரோனா வைரஸுடன் இணைந்து மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.https://www.bbc.com/tamil/science-54677340

ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் – அமெரிக்க நிறுவனம்

1 day 9 hours ago
ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை - ஜான்சன் அண்ட் ஜான்சன்  நிறுவனம் தகவல் || Johnson and Johnson sees covid 19 vaccine available as  soon as January ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் – அமெரிக்க நிறுவனம்

ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமெரிக்காவின் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்யா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அதன் சோதனை பல கட்டங்களாக நடந்து வருகின்றன.

அமெரிக்காவின் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த மாத இறுதியில் முதல் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், 2ஆம் கட்ட பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அந்த நிறுவனம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது.

இந்த நிலையில், ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அந்த நிறுவனத்தின் பொது சுகாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை தலைவர் ருக்ஸாண்ட்ரா டிராகியா அக்லி, தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்காக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் கிடைக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

http://athavannews.com/ஜனவரி-மாதம்-முதல்-கொரோனா/

ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா தடுப்பூசி: இளைஞர்கள் - வயோதிகர்களின் எதிர்ப்பணுக்கள் மேம்படுவதாக தகவல்

1 day 19 hours ago

கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 வைரஸுக்கு எதிரான எதிர்ப்பணு ஆற்றல் இளைஞர்களிடமும் வயோதிகர்களிடமும் தூண்ட சமீபத்திய பரிசோதனை மருந்து உதவி வருவதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து, வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டுள்ள பிரிட்டிஷ் நிறுவனமான அஸ்ட்ராசெனிகா தெரிவித்துள்ளது.

வைரஸ் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பல்வேறு நாடுகளின் முயற்சியில் இந்த தடுப்பூசி மருந்து திருப்பத்தை ஏற்படுத்தலாம் என அந்த நிறுவனம் கூறுகிறது.

உலக அளவில் இதுவரை 11.50 லட்சம் பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். பல வல்லரசுகளின் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ள இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்புப் பணியில் நூற்று ஐம்பதுக்கும் அதிகமான நாடுகள் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில மட்டுமே பயன் தரும் வகையில் முன்னேற்றம் கண்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து வைரஸ் தடுப்பூசி தயாரிப்புக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அஸ்ட்ராசெனிகா நிறுவனம், கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளவர்களில் இளைஞர்களிடம் எதிர்ப்பணுக்கள் அதிகரிப்பதைப் போலவே, வயோதிகர்களிடமும் எதிர்ப்பணுக்களை தூண்ட, சமீபத்திய பரிசோதனை மருந்து உதவி வருவதாக அஸ்ட்ராசெனிகா நிறுவன செய்தி்ததொடர்பாளர் கூறினார்.

இதுவரை இளைஞர்களின் எதிர்ப்பணுக்கள் மட்டுமே அதிகரிக்கப்படுவதாக கருதப்பட்டு வந்த வேளையில், வயோதிகர்களின் எதிர்ப்பணுக்களும் மேம்படுவது விரைவில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பில் சாதகமானதாக கருதப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரிட்டிஷ் சுகாதாரத்துறைச் செயலாளர் மேட் ஹான்காக் கூறும்போது, "இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து தயாராக இல்லாவிட்டாலும், அது அடுத்த ஆண்டு மத்தியில் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்ற அனுமானத்தில், அதற்கான விநியோக கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/india-54695633

இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை பயன் அளித்ததா?

3 days 1 hour ago
இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை பயன் அளித்ததா?
 
1-83-696x392.jpg
 37 Views

கடுமையான நோய் அல்லது அதிக உயிரிழப்புகளைக் குறைப்பதில் மிகமிகக் குறைந்த அளவில்தான், பிளாஸ்மா சிகிச்சையால் பயன் கிடைத்தது என இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை இந்தியாவில் மிதமான கோவிட் பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 464 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (பி.எம்.ஜே) தெரிவிக்கிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தமிழகத்தின் தேசிய தொற்று நோயியல் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை நடத்தின.

இதுகுறித்து  மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,

”ஆய்வில் பங்கேற்ற, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறைந்தது 18 வயதுடையவர்களாக இருந்தனர். இவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை மூலம் ஏழு நாட்களுக்குப் பிறகு, மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் குறைக்க முடிந்ததைக் காண முடிந்தது. மிதமான கோவிட்-19 பாதிப்புடைய நோயாளிகளுக்குச் சாத்தியமான சிகிச்சையாக இது ஓரளவுக்கு வரையறுக்கப்பட்ட செயல்திறனை மட்டுமே காட்டியது. மேலும் பிளாஸ்மா சிகிச்சையை வயது வந்தோருக்கான 239 நோயாளிகள் பெற்றனர். அதே நேரத்தில்  பிளாஸ்மா  சிகிச்சை  இல்லாமல் 229 நோயாளிகளைக் கொண்ட கட்டுப்பாட்டுக் குழு ஒன்றும் நிலையான கவனிப்புகளைப் பெற்றது.

ஆனால், 41 நோயாளிகள் அல்லது 18 சதவீதம் பேர் கொண்ட சாதாரண கட்டுப்பாட்டுக் குழுவை ஒப்பிடும்போது ஒரு மாதத்திற்குப் பிறகு, பிளாஸ்மா சிகிச்சையை  பெற்றவர்களில் 44 நோயாளிகள் அல்லது 19 சதவீதம் பேர் கடுமையான நோய்க்குத் தள்ளப்பட்டனர் அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் உயிரிழந்துவிட்டனர்.

பிளாஸ்மா சிகிச்சைக்குப் பிறகு கடுமையான கோவிட்-19க்கு நோய்க் குறைப்பில் முன்னேற்றமில்லை. அதே நேரம் பிளாஸ்மா சிகிச்சைக்குப் பிறகு உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன.

முன்னர் நடத்தப்பட்ட அவதானிப்பு ஆய்வுகள், பிளாஸ்மாவைப் பெறுபவர்களுக்கு மருத்துவ நன்மைகளை பரிந்துரைக்கின்றன. ஆனால், இந்தியாவில் கோவிட்-19 நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட வகையில், அவர்கள் உயிரிழப்பிலிருந்து தப்பியதைப் பற்றி ஏதும் கண்டறிய முடியவில்லை என்பதால் சோதனைகள் முன்கூட்டியே நிறுத்தப்பட்டன.

குறைவான ஆய்வகத் திறன் கொண்ட அமைப்புகளில், மிதமான கோவிட்-19 உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 28 நாளில் உயிரிழப்பு அல்லது கடுமையான நோய்க்கான பாதிப்பை பிளாஸ்மா குறைக்காது என்று புதிய ஆய்வு காட்டியுள்ளது” என்றனர்.

 

https://www.ilakku.org/இந்தியாவில்-பிளாஸ்மா-சிக/

கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தை வழங்க அமெரிக்கா ஒப்புதல்

5 days 6 hours ago
கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தை வழங்க அமெரிக்கா ஒப்புதல்

கொரோனா வைரஸ் நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தினை வழங்க அமெரிக்கா முழு ஒப்புதல் அளித்துள்ளது.

இம்மருந்து நோய்த்தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டாலும், அதன் முடிவுகள் முழு பலனளிக்கும் வகையில் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்த சூழலில், ரெம்டெசிவிர் தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் முழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

"கொரோனா சிகிச்சைக்கு எங்களது ஒப்புதல் பெறும் முதல் மருந்து வெக்லரி (ரெம்டெசிவரின் வர்த்தக பெயர்)" என்று எஃப்.டி.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spacer.png

"12 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய, குறைந்தது 40 கிலோ உடல் எடை கொண்ட, மருத்துவமனை கவனிப்பு தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு இதை பயன்படுத்தலாம்."

இதன்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு, ரெம்டெசிவிர்  மருந்து வழங்கப்படவுள்ளது.

கடந்த மே மாதம் முதல் அவசர தேவைகளுக்காக மட்டும் ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்றுககுள்ளான அமெரிக்க ஜனாதிபதிக்கு  ரெம்ட்சிவிர் மருந்து வழங்கப்பட்டது. அதன்பின் அவர் குணமடைந்தார்.

அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்திலுள்ளது.

அங்கு கொரோனாவால் 8,661,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு,228,381 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://www.virakesari.lk/article/92798

சந்தைக்கு வரமுன்னரே 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை இருப்புவைக்க முடிவு!

6 days 10 hours ago
சந்தைக்கு வரமுன்னரே 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை இருப்புவைக்க முடிவு! |  Athavan News சந்தைக்கு வரமுன்னரே 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை இருப்புவைக்க முடிவு!

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சந்தைக்கு வருவதற்கு முன்பு 52 கோடி மருந்து ஊசிகளை இருப்பு வைப்பதற்கு யுனிசெஃப் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸை ஒழிக்கும் தடுப்பு மருந்து தயாரிப்பில் பல நாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பு மருந்துகள் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தடுப்பூசிகளை இருப்புவைக்கவுள்ளதாக ஐ.நா. சபையின் கீழ் செயற்படும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெஃப் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

வரும் 2021 ஆம் ஆண்டுக்குள் 100 கோடி ஊசிகளை தயார் நிலையில் வைக்கவும் முதற்கட்டமாக 52 கோடி ஊசிகளை இருப்பு வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் முடிந்து, மனிதர்களுக்குச் செலுத்துவதற்கான அனுமதி கிடைத்தவுடன் ஊசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது.

http://athavannews.com/சந்தைக்கு-வரமுன்னரே-50-கோட/

கொவிட்-19 தொற்று பரவலை தடுக்க பொது கட்டடங்களில் காற்றோட்ட அமைப்புகள்: ஜேர்மனி அரசாங்கம்!

1 week ago
கொவிட்-19 தொற்று பரவலை தடுக்க பொது கட்டடங்களில் காற்றோட்ட அமைப்புகள்: ஜேர்மனி  அரசாங்கம்! | Athavan News கொவிட்-19 தொற்று பரவலை தடுக்க பொது கட்டடங்களில் காற்றோட்ட அமைப்புகள்: ஜேர்மனி அரசாங்கம்!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது கட்டடங்களில் காற்றோட்ட அமைப்புகளை மேம்படுத்த ஜேர்மனி அரசாங்கம் 500 மில்லியன் யூரோக்களை செலவிடவுள்ளது.

பொது அலுவலகங்கள், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளில் காற்று சுழற்சியை மேம்படுத்த இந்த மானியங்கள் செலவிடப்படவுள்ளன. தனியார் நிறுவனங்கள் இன்னும் தகுதி பெறவில்லை.

வைரஸ்கள் ‘ஏரோசோல்கள்’ எனப்படும் சிறிய துளிகளில் பரவுகின்றன. அவை பாதிக்கப்பட்டவர்களால் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக தும்மும்போது அல்லது இருமும்போது பரவுகின்றன.

குறைந்தது எட்டு நிமிடங்களாவது வைரஸ்கள் ஒரு அறையின் காற்றில் இருக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளிர்ந்த வானிலை காரணமாக, அதிகமானோர் வீட்டிற்குள் இருப்பதால் அதிக ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.

புதியவற்றை நிறுவுவதற்குப் பதிலாக, தற்போதுள்ள காற்றோட்ட அமைப்புகளை மேம்படுத்துவதே முக்கிய நோக்கம்.

ஒவ்வொரு மேம்படுத்தலும் அதிகபட்சமாக, 100,000 யூரோக்கள் செலவிடப்படலாம். செவ்வாய்க்கிழமை முதல் மானியம் ஒதுக்கப்படும்.

http://athavannews.com/கொவிட்-19-தொற்று-பரவலை-தடுக-2/

சீனாவில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்.

1 week 4 days ago

சீனாவில் மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்வதாக அங்கிருந்து பிபிசி செய்தியாளர் அறியத்தந்திருக்கிறார்.

மக்கள் பணம் செலுத்தியே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பது தான் அநியாயமாக உள்ளது.

https://www.bbc.co.uk/news/av/embed/p08vk5sp/54582150

இதற்கு மேலதிகமாக... கொவிட் - 19 சார்ந்து ஏற்படும் உயிரிழப்புக்களை குறைக்கக் கூடிய வழிமுறைகளை வைத்தியத்துறையினர் கண்டறிந்திருப்பதாலும்.. சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தி இருப்பதாலும் கொவிட்-19 உயிரிழப்பு அலை -1 இல் இருந்ததை விட 25% சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Covid patients 'less likely to die than in April'

https://www.bbc.co.uk/news/health-54568926

நல்ல செய்தி!! ரஷியாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி இரண்டாம் கட்ட சோதனைக்கு அனுமதி

1 week 4 days ago

நல்ல செய்தி!! ரஷியாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி இரண்டாம் கட்ட சோதனைக்கு அனுமதி

நல்ல செய்தி!! ரஷியாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி இரண்டாம் கட்ட சோதனைக்கு அனுமதி

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், ரஷிய கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்தியா மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது என்று ஸ்பூட்னிக் வி  தெரிவித்துள்ளது. 


தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்குமாறு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சி.டி.எஸ்.கோ) நிபுணர் குழு வெள்ளிக்கிழமை பரிந்துரைத்து உள்ளது.

ஐதராபாத்தை தளமாகக் கொண்ட டாக்டர் ரெட்டியின் ஆய்வக மருந்து நிறுவனம் அக்டோபர் 13 ம் தேதி இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு (டி.சி.ஜி.ஐ) மீண்டும் விண்ணப்பித்தது, நாட்டில் தடுப்பூசியின் ஒருங்கிணைந்த கட்டம் 2 மற்றும் 3 மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்த அனுமதி கோரியது.

முந்தைய சோதனையில்  பின்னடைவைச் சந்தித்த பின்னர், இந்த நிறுவனம் இப்போது ஒரு திருத்தப்பட்ட நெறிமுறையை கொண்டு வந்துள்ளது, இது இரண்டாம் கட்ட சோத்னையில் 100பேர்களை உள்ளடக்கும் என்றும், மூன்றாம் கட்ட சோதனைகளில் 1,400 தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

தடுப்பூசியின்  2 ஆம் கட்ட மருத்துவ சோதனைக்கு முதலில் அனுமதி வழங்க மருத்துவ நிபுணர் குழு  பரிந்துரைத்துள்ளது. முதல் கட்டத்தின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தரவை அவர்கள் சமர்ப்பித்த பின்னர், அவர்கள் சோதனைகளின் 3 ஆம் கட்டத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் , "என்று பி.டி.ஐ.தெரிவித்துள்ளது.

நிபுணர் குழு விண்ணப்பம் குறித்து விவாதித்தது. ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளையும் அதன் விநியோகத்தையும் நடத்துவதற்கு இந்திய மருந்து நிறுவனமான ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்துடன் (ஆர்.டி.ஐ.எஃப்) ஒத்துழைத்துள்ளது.

இதற்கிடையில், ரஷியா புதன்கிழமை (அக்டோபர் 14) மற்றொரு கொரோனா வைரஸ்  தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை ஒப்புதல் வழங்கியதாக அறிவித்தது. ஸ்பூட்னிக் வி எபிவாகொரோனா என்ற அந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், ஒழுங்குமுறை அங்கீகாரத்தைப் பெற்ற உலகின் முதல் தடுப்பூசி ஸ்பூட்னிக் வி ஆகும்

மாஸ்கோவில் உள்ள கமலேயா நிறுவனம் உருவாக்கிய ஸ்பூட்னிக் வி, ஆகஸ்ட் மாதம் ரஷியாவில் பயன்படுத்த உரிமம் பெற்றது. எபிவாகொரோனாவைப் போலவே மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு முன்பும் ஸ்பூட்னிக் வி பதிவு செய்யப்பட்டது. ஸ்பூட்னிக் வி இன் மனித சோதனை தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது.

 

https://www.dailythanthi.com/News/India/2020/10/17132655/Good-news-Phase-2-trial-of-this-COVID19-vaccine-may.vpf

 

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேட்கும் திறன் இழப்பு ஏற்படலாம்!

1 week 5 days ago
கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேட்கும் திறன் இழப்பு ஏற்படலாம்!  | Athavan News கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேட்கும் திறன் இழப்பு ஏற்படலாம்!

கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களுக்கு கேட்கும் திறன் இழப்பு ஏற்படலாம் என பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘பி.எம்.ஜே. கேஸ் ரிப்போர்ட்ஸ்’ பத்திரிகையில், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலநேரங்களில் கொரோனா கிருமிகள், ஹெர்பஸ் என்ற வைரசைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் காதுகேளாமை குறைபாடு உண்டாக வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

லண்டனில் 45 வயதான ஆஸ்துமா நோயாளி ஒருவருக்கு கொரோனா தாக்கியபோது, பல்வேறு சிக்கல்கள் எழுந்து, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து ரெம்டெசிவிர் மருந்து, ஸ்டீராய்ட் மருந்துகள் அளித்தும், ரத்தம் செலுத்தியும் அவர் குணம் அடைந்தார். ஆனால் அவரது காதுகள் கேட்கும் திறனை இழந்தன.

இதுபற்றி விஞ்ஞானிகள் கூறுகையில், வைரஸால் ஏற்படுகிற அழற்சியும், உடலில் இரசாயனங்கள் அதிகரிப்பும் காது கேட்காமல் செய்து விடுகிறது என தெரிவித்தனர்.

http://athavannews.com/கொவிட்-19-தொற்றினால்-பாதிக-6/

கொரோனாவைத் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே தீர்வாகாது – உலக சுகாதார அமைப்பு

2 weeks ago
Corona, World Health Organization | கொரோனா தீவிர பரவல் நிலையை எட்டியுள்ளது: உலக  சுகாதார அமைப்பு எச்சரிக்கை | Dinakaran கொரோனாவைத் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே தீர்வாகாது – உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸைத் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் 216 நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவிலிருந்து உலகைக் காப்பாற்ற கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான மருந்துகளை தயாரிக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த கொடிய வைரசை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே அழிக்கமுடியும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸைத் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசிகள் மூலம் வைரசை கட்டுப்படுதிவிடலாம் என்று நினைக்கின்றனர்.

கொரோனா வைரசை பொதுமக்களிடம் பரவவிட்டு அதன் மூலம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இந்த பெருந்தொற்றை தடுத்து விடலாம் என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், இது தான் கொரோனாவை தடுத்து நிறுத்த ஒரே வழி என்றும் கருத்துகின்றனர்.

ஆனால் கொரோனாவைக் கட்டப்படுத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே தீர்வாகாது என அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்வதே நோய் எதிர்ப்பு சக்தி என்பதே தவிர வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாவது அல்ல என தெரிவித்துள்ள அவர், ஒரு பெருந்தொற்றை நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு கட்டுப்படுத்துவது என்பது வரலாற்றில் இல்லாத ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எவ்வாறு மீண்டும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகுகின்றனர் என்பது குறித்த சிறு சிறு தகவல்கள் மட்டுமே தங்களிடம் உள்ளது என தெரிவித்துள்ள டெட்ரோஸ், அதன் முழுமையான விபரங்கள் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாம் இதுவரை முமுமையாக புரிந்துகொள்ளாத ஒரு கொடிய வைரசை சுதந்திரமாக பரவ விடுவது நெறிமுறையற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/கொரோனாவைத்-தடுக்க-நோய்-எ/

2லட்சம்பேர குணப்படுத்திருக்கோம்..கொரோனா பயத்தாலதான் சாகுறாங்க!! | யோகா Dr.காமராஜ்| Yoga for Corona

2 weeks 1 day ago
“2லட்சம்பேர குணப்படுத்திருக்கோம்..கொரோனா பயத்தாலதான் சாகுறாங்க!!” | யோகா Dr.காமராஜ்| Yoga for Corona

 

சித்த மருத்துவம் மூலம் கரோனா நோயாளிகளின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்துள்ளது: ஆராய்ச்சி முடிவில் தகவல்

2 weeks 3 days ago
சித்த மருத்துவம் மூலம் கரோனா நோயாளிகளின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்துள்ளது: ஆராய்ச்சி முடிவில் தகவல் siddha-treatment-for-covid-19 நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்.
 

திருப்பத்தூர்

நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளில் நோயாளிகளின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்துள்ளதாக தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அக்ரகாரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. 60 படுக்கைகள் கொண்ட இந்த சிகிச்சை மையத்தில் இதுவரை 490 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 437 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட இறப்பு இல்லை என்பது கூடுதல் சிறப்பாகும். திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சம் பேருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதில் நேற்றைய நிலவரப்படி 5,495 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலும், நாட்றாம்பள்ளி அரசு சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் 7 நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் (CTRI) ஒப்புதலோடு நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு, சித்த மருத்துவம் சார்ந்த மருந்துகளின் ஆய்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

இதற்கான ஆய்வில் 20 கரோனா நோயாளிகள் கலந்து கொண்டனர். அதில், 19 பேர் 5 நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளது ஆய்வின் ஆதாரமாக உள்ளதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், முதன்மை சித்த மருத்துவருமான வி.விக்ரம்குமார் கூறியதாவது:

"மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட சித்த மருத்துவர் சுசி.கண்ணம்மா தீவிர முயற்சியால், நாட்றாம்பள்ளியில் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இங்கு பாரம்பரிய முறைப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாகரிகம் என்ற பெயரில் நம் மரபுகளை நாம் கொஞ்சம், கொஞ்சமாக மறந்து வருகிறோம். நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுகிறோம் எனக் கூறிக்கொண்டு நம் அடையாளங்களைத் தொலைத்து வருகிறோம். அதை நாங்கள் மீண்டும் திருப்பி மக்களுக்குக் கற்றுக்கொடுக்க முயற்சி செய்து வருகிறோம்.

நம் உடலுக்கும், மனத்துக்கும் ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய பாரம்பரிய உணவுகளை நம்மில் பல பேர் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. மக்கள் மறந்துபோன உணவு வகைகளை மீண்டும் காட்சிப்படுத்தி அதை நம் முன்னோர்கள் எப்படி சமைத்துச் சாப்பிட்டார்களோ அதைப்போலவே சமைத்துக் கொடுத்து, கரோனா போன்ற கொடிய வைரஸ் நோயில் இருந்து மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறோம். அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.

இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சித்த மருந்துகள் சாப்பிடுவதற்கு முன்பு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்தோம். மருந்துகள் சாப்பிட்ட பிறகும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்து பார்த்தபோது மிகப்பெரிய மாற்றங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக IL-6, LDH, D-Dimer, COVID Anti Body என்ற ரத்த மாதிரிகளின் முடிவுகள் சித்த மருந்துகளின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. கரோனா நோய் காரணமாக ரத்தத்தில் அதிகரித்திருந்த பல விஷயங்கள் ஆய்வின் முடிவில் குறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையும், வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறது. மேலும், இருமல், சளி, மூக்கடைப்பு, மணம் அறியாமை, சுவை அறியாமை, தொண்டைக்கரகரப்பு, வறட்டு இருமல் ஆகிய அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் சித்த மருந்துகள் மூலம் படிப்படியாக குணமடைந்து பழைய நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.

அதேபோல, சிறுநீரகம், கல்லீரல் சார்ந்த செயல்பாடுகளில் ஆய்வுக்கு முன்பும், பின்பும் மிகப்பெரிய மாற்றங்கள் இல்லை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே, கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி முடிவுகளில் நோயாளிகளின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ரத்த மாதிரிகளின் முடிவுகள் சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகள் உலகைத் திரும்பிப் பார்க்கும் விதமாக அமைந்துள்ளது. இதற்கான ஆய்வறிக்கையை தற்போது தொடங்கியுள்ளோம். விரைவில் அறிவியல் தளத்தில் ஆராய்ச்சி முடிவுகள் பதிவு செய்யப்படும்".

இவ்வாறு விக்ரம்குமார் தெரிவித்தார்.

https://yarl.com/forum3/forum/222-covid-19-coronavirus-பாதுகாப்பு-வழிமுறைகள்-மற்றும்-ஆலோசனைகள்/?do=add

இங்கிலாந்தில் கொவிட் 2ம் அலையிலும் ஆசிய, கறுப்பு இனத்தவருக்கே பாதிப்பு அதிகம்

2 weeks 4 days ago

இங்கிலாந்தில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்ட கொவிட்  1 ம் அலை தொற்றானது,   கறுப்பு, ஆசிய மக்களிடையே ஒப்பீட்டளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது தெரிந்ததே.

Intensive Care National Audit and Research Centre (ICNAR) எனும் தேசிய தீவிர சிகிச்சை பிரிவுக்கான கணக்காய்வு மையம் ஏப்ரல் மாதம் நடத்திய ஆய்வில் இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்தில் அப்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கோவிட் நோயாளர்களில் 35% பேர் வெள்ளை இனமல்லாதோர் என்பது தெரிய வந்தது.

இது பற்றி பின்னர் விரிவான புள்ளி விபரங்கள் வெளிவந்ததுடன் கோடை மாதங்களில் ஒரு விசாரணையும் நடந்து, தடுப்பு நடவைக்கைகள் பற்றிய ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையும் வெளிவந்தது.

இருந்த போதிலும், இப்போ ஏறுமுகமாக இருக்கும் கொவிட் தொற்று(2ம் அலை)லும் வெள்ளை இனமல்லாதோரே அதிகம் பாதிக்கப்படுவதாக பூர்வாங்க ஆய்வுகள் தெரிவிக்கிறன.

ICNARஇன் அண்மைய ஆய்வின்படி செப்டெம்பர் 1ம் திகதியின் பின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டோரில் அண்ணளவாக 1/4 பங்கினர் ஆசிய வம்சாவழியினராவர்.

இதே போல் ஏப்ரல் மாதத்தில் நடந்ததை போலவே, ஏனைய ஆபத்து கூடிய குழுக்களான, வசதி அற்றவர்கள், பருமனானவர்கள், ஆண்கள், வயசாளிகள் ஆகியோரும் கிட்டதட்ட அதே அதிக வீதத்திலேயே பாதிக்கப்படுவதாயும் இதே ஆய்வு காட்டுகிறது.

https://www.theguardian.com/world/2020/oct/09/bame-groups-hit-hard-again-covid-second-wave-grips-uk-nations 

large.6085B08B-D569-43C2-AEFB-1C766A208915.jpeg.109675eb1e7c93fa2ceb453959706f24.jpeg

நீண்ட கொவிட் - இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையில் நிதி ஒதுக்கீடு

2 weeks 6 days ago

கொவிட் தொற்றில் இருந்து மீண்ட பின்பும் அதன் பாரிய பின் விழைவுகள் ஒரு நோயை ஒத்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை நீண்ட கொவிட் (long COVID) என்கிறார்கள்.

இதை முறைப்படி அங்கீகரித்த இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை, இதனால் பாதிப்படைவோருக்கு சிகிச்சை அளிக்கும் வைத்திய உதவியை வழங்கும் பொருட்டு 10 மில்லியன் பவுண்ஸை ஒதுக்கியுள்ளது.

https://www.england.nhs.uk/2020/10/nhs-to-offer-long-covid-help/ 

https://www.standard.co.uk/news/health/nhs-to-officially-recognise-long-covid-a4564086.html

https://www.theguardian.com/world/2020/oct/07/nhs-england-to-invest-10m-in-clinics-to-help-long-covid-sufferers

நிர்வாகத்துக்கு: இதை தனியாக செய்தியாக அன்றி, நீண்ட கொவிடால் அவதியுறுவோருக்கான ஒரு தகவல் என்பதாலேயே இங்கே பதிந்துள்ளேன். 

செய்தி பிரிவுக்கு மாற்றுவது பொருத்தம் என கருதினால் மாற்றி விடுங்கள்.

கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் ? - உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்

3 weeks ago

கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் ? - உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்

 

ஜெனீவா, 

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற கட்டுபாடுகளை பல்வேறு நாடுகள் விதித்த போதிலும் தொற்று பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த  முடியவில்லை. பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக ஊரடங்கு விதித்த நாடுகளும் பின்னர் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டன. இதனால், தடுப்பூசி எப்போது கிடைக்கும் என பெரும் எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ளது. 

தடுப்பூசி கண்டுபிடிக்கும் மும்முரமாக நடந்து வருகிறது. மருத்துவ பரிசோதனையின் இறுதி கட்டங்களில் உள்ள தடுப்பூசிகள் எப்போது பொது பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்பதே பல நாடுகளின் ஏக்கமாக உள்ளது. இந்த நிலையில், இந்நிலையில், கொரோனா தடுப்பூசி எப்போது என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி தயாரான உடன் அவை அனைவருக்கும் சமமான விகிதத்தில் விநியோகம் செய்ய  உலக நாடுகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி நிச்சயம் தேவைப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது” என்றார்.

https://www.dailythanthi.com/News/World/2020/10/07082731/WHO-Head-Says-There-Is-Hope-Covid19-Vaccine-May-Be.vpf

 

கொரோனா வைரஸ் 6 அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும்

3 weeks 1 day ago

கொரோனா வைரஸ் கிருமிகள், ஆறு அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை (சிடிசி) தெரிவித்துள்ளது.

இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை திங்கட்கிழமை வெளியிட்ட அந்தத்துறை, காற்றில் பரவும் கொரோனா வைரஸ் கிருமிகள், சில மணி நேரம் உயிர்ப்புடன் இருப்பதாக சுகாதார வல்லுநர்கள் கூறுவதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்பு இதேபோன்ற ஓர் எச்சரிக்கையை அந்தத்துறை விடுத்திருந்த நிலையில், அது கடுமையான விவாதங்களுக்கு வழிவகுத்தது. பிறகு அந்த வழிகாட்டுதல்கள் திரும்பப் பெறப்பட்டன.

இந்த நிலையில், மீண்டும் அதே வழிகாட்டுதல்களை சிடிசி வெளியிட்டிருக்கிறது. அதில், சிறிய அறையில் காற்றோட்டம் சரியாக இல்லாத இடத்தில் வைரஸ் கிருமிகள் காற்றில் உயிர்ப்புடன் இருப்பது அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஆறு அடிக்கு அப்பால் இருக்கும் பிறருக்கு பரவியதன் மூலம் உறுதியாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அத்தகைய சூழலில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து, மிகவும் சிறிய அளவிலான நுண் கிருமிகள் அதிக வீரியம் அடைந்து பிறரை தாக்க போதுமானதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் நம்புவதாக சிடிசி தெரிவித்துள்ளது.

ஒருவர் இருமும்போதோ தும்மல் செய்யும்போதோ சிறிய துளியாக காற்றில் வெளிப்படும் கிருமி, பொதுவாக தரையில் விழும் என்று சிடிசி முன்பே எச்சரித்திருந்தது. அதன் அடிப்படையிலேயே கொரோனா தொற்றில் இருந்து தவிர்க்கும் சமூக இடைவெளி, குறைந்தபட்சம் ஆறு அடி அளவுக்கு இருக்க வேண்டும் என்ற நிலை அமல்படுத்தப்படுகிறது.

இதேபோல, தும்மலின்போது வெளிப்படும் நீர்த்துளி அளவில் மிகச் சிறியவை. அவை புகை போல காற்றில் சில நொடிகளோ மணிக்கணக்கிலோ படரலாம் என்று சிடிசி கூறுகிறது.

அந்த வகையில், கடந்த திங்கட்கிழமை அமெரிக்க விஞ்ஞானிகள் ஓர் மருத்துவ ஆய்வு இதழியில் வெளியிட்டுள்ள வெளிப்படையான கடிதத்தில், மிகவும் நெருக்கத்தில் இருப்பவருக்கு காற்று வழியாக தொற்று பரவும் என்று வலியுறுத்தியுள்ளனர். அந்த பரவலுக்கு முக்கிய காரணம், காற்றில் படர்ந்துள்ள வைரஸ் கிருமி என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நெருக்கத்தில் இருக்கும் நபர், தொற்றால் பாதிக்கப்பட்டவர் உள்ள பகுதியில் எவ்வளவு நேரம் இருக்கிறாரோ, அதைப் பொருத்தே, காற்று வழியாக அந்த நபருக்கு தொற்று பரவுவது சாத்தியமாகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

https://www.bbc.com/tamil/global-54436087

விகாரமைடைந்த சார்ஸ் கொரனாவைரஸ் 2 உருவாகியிருக்கக் கூடும்...

3 weeks 5 days ago

வேகமாகப் பரவும் ஆற்றலுள்ள சார்ஸ் கொரனாவைரஸ் உருவாகியிருக்கக் கூடும்...

வைரசுகளின் ஒரு இயல்பு அடிக்கடி விகாரமடைந்து புதிய ரகங்களை உருவாக்குவது. இப்படி உருவாகும் புதிய ரக வைரசுகள் விகாரிகள் (mutants) என அழைக்கப் படுகின்றன. விகாரிகள் ஒரிஜினல் வைரசுகளை விட பலவீனமானவையாகவோ அல்லது வீரியம் கூடியவையாகவோ இருக்கலாம். இதை என்னுடைய முன்னைய கட்டுரையில் விளக்கியிருந்தேன். 

பெப்ரவரி மாதமளவில் சார்ஸ் கொரனாவைரசில் ஒரு புதிய வகை விகாரி உருவாகியிருப்பதை முதன் முதலில் கண்டறிந்தனர்.  ஆனால் அந்த விகாரியின் வலிமை, வீரியம் என்பன பற்றிய தகவல்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன. மனித நுரையீரலில் இருந்து எடுக்கப் பட்ட இழையத்தில் இந்த விகாரிகள் இலகுவாக தொற்றை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆய்வுகூட விலங்குகளிடையே (hamster) இந்த விகாரி சார்ஸ் வைரசு வேகமாகப் பரவவும் செய்திருக்கிறது. 

இந்த விகாரி சார்ஸ் வைரசு 2 இதே வீரியத்தை மனிதர்களில் நாளாந்தப் பரவலில் காட்டுமா என்பது இன்னும் ஆராயப் படவில்லை. எனவே இது முற்றிலும் துரதிர்ஷ்டவசமான செய்தியா என்பது இப்போதைக்குக் கூறமுடியாது! 

தகவல் மூலம்: https://www.biorxiv.org/content/10.1101/2020.09.01.278689v1 

முதியோருக்கு நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு!

3 weeks 6 days ago
முதியோருக்கு நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கும் கொரோனா தடுப்பூசி  கண்டுபிடிப்பு! | Athavan News முதியோருக்கு நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு!

இளைஞர்களை போன்றே முதியோருக்கும் அதிக அளவில் நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸினை தடுக்கும் வகையிலான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் களமிறங்கியுள்ளன.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.

இதற்கிடையில், கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்காவை சேர்ந்த மார்டனா இங்ஸ் என்ற நிறுவனமும் களமிறங்கியுள்ளது.

அந்நிறுவனம் உருவாக்கியுள்ள மார்டனா தடுப்பூசி நல்ல பலன் தருவது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் பரிசோதனை தற்போது மூன்றாவது கட்டத்தில் உள்ளது.

இதற்கிடையில், மூன்றாம் கட்ட பரிசோதனைகள் ஒருபக்கம் நடந்துவந்த போதும் முதியவர்களைக்கு தனியாக இந்த கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பரிசோதனை நடைபெற்றது.

கொரோனாவால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் முதியோர் என்பதால் அவர்களையும் உள்ளடக்கிய வகையிலான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட தடுப்பூசியை உருவாக்குவதில் மார்டனா நிறுவனம் மிகுந்த தீவிரம் காட்டி வந்தது.

இந்நிலையில், தனது மார்டனா தடுப்பூசியை வயது முதியவர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் அந்நிறுவனம் ஈடுபட்டு வந்தது. அதில் 56 முதல் 70 வயதிற்கு மேற்பட்ட 40 முதியவர்களுக்கு மார்டனா கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட இளைஞக்கு எவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுகிறதோ அதே அளவில் முதியவர்களுக்கு எதிர்ப்பு சக்தி உருவாவது தெரியவந்துள்ளது.

56 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 28 நாட்கள் இடைவெளிவிட்டு 100 மைக்ரோகிராம் அளவில் 2 முறை மார்டனா தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட இளைஞர்களுக்கு உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி அளவு போன்றே முதியவர்களுக்கும் எதிர்ப்பு சக்தி உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மார்டனா கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்பதும் உறுதியாகியுள்ளது.

http://athavannews.com/முதியோருக்கு-நோய்-எதிர்ப/

குறைந்த விலையில் கொரோனா பரிசோதனை- WHO

4 weeks 1 day ago
குறைந்த விலையில் கொரோனா பரிசோதனை-  WHO

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து சில நிமிடங்களில் பரிசோதனை செய்யும் ஒரு முறை ஏழை மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு விரிவாக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலில்,

இந்த பரிசோதனைக்கு ஐந்து டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 380 ரூபாய்) மட்டுமே ஆகும். போதுமான மருத்துவ உள்கட்டமைப்புகள் அற்ற ஏழை மற்றும் குறைந்த வருமானம் உடைய நாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பரிசோதனை கருவியை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி அடுத்த ஆறு மாதங்களில் 12 கோடி பேருக்கு இந்த அதிவேக கொரோனா பரிசோதனையைச் செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளது

http://www.ilakku.org/குறைந்த-விலையில்-கொரோனா/

Checked
Wed, 10/28/2020 - 13:35
COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் Latest Topics
Subscribe to COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் feed