கதைக் களம்

அரை நிமிடக் கதை

1 year 2 months ago

பிழைக்கத் தெரிந்தவள்

85_ABB528-_DC35-4_DDE-8483-134581_FDBA7_

நீண்ட நாட்களுக்குப்பின்  சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில்  தளர்வு தெரிந்தது.

சரஸ்வதி ரீச்சர் பிரதான புகையிரத நிலையத்தில் பூக்கடை நடாத்தி வருகிறார்.  கடையில் காலையில் இருந்து இரவு வரை வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியதால்  அவரை வெளி இடங்களில் காண்பது அரிது.

“ எப்பிடி இருக்கிறீங்கள்?”

“என்னத்தைச் சொல்ல....”  சரஸ்வதி ரீச்சரின் வார்த்தை இழுப்பில் அவரிடம் இருந்த அலுப்பு தெரிந்தது.

ஆனாலும் நான் கேட்டதுக்கு அவர் உடனேயே பதில் தந்தார்.

“கை கொஞ்சக் காலமா விறைக்குது. ஒத்தோப்பேடியிட்டைப் போறன்”

“carpal tunnel பிரச்சினையாக இருக்கலாம்’

“அப்பிடித்தான் டொக்டரும் சொல்லுறார். எதுக்கும் முதலிலை பண்டேச் போட்டுப் பார்ப்பம். சரிவரேல்லையெண்டால் ஒப்பரேசன் செய்யத்தான் வேணும்”

“அதென்ன கையிலை பூங்கொத்து?”

“அது பெரிய கதை. போன வருசம் முழங்காலிலை நோ வந்திட்டுது. ஒத்தோப்பேடிக்கு ரெலிபோன் அடிச்சால் இப்ப அப்பொயின்ற்மென்ட் தரேலாது, ஒன்றரை மாசம் பொறுங்கோ எண்டு சொல்லிச்சினம். நோவோடை எப்பிடி இருக்கிறது? தாங்கேலாமல் நேரே ஒத்தோப்பேடியிட்டைப் போயிட்டன். அப்பொயின்ற்மெண்ட் உள்ளாக்களுக்குத்தான் முன்னுரிமை எண்டு சொல்லி இரண்டு மணித்தியாலமா என்னை  காக்க வைச்சிட்டினம். யோசிச்சுப் பாத்திட்டு அடுத்தமுறை போகக்கை கடையிலை இருக்கிற பூக்களிலை கொஞ்சத்தை எடுத்து, கொத்தாக் கட்டிக் கொண்டு போய்க் குடுத்திட்டு முழங்காலிலை நோ எண்டு சொன்னன். ராஜமரியாதை. இப்ப ரெலிபோன் அடிச்சுக் கேட்டால் யார் சரஸ்வதியா? என்ன பிரச்சினை? உடனை வாங்கோ எண்டியினம்”

கொடுத்து வேலை வாங்கும் விசயத்தை நாங்கள் யேர்மனியனுக்கும் பழக்கிப்போட்டம். 

 

கவி அருணாசலம்

29.06.2018

நூறாய் பெருகும் நினைவு

1 year 3 months ago
Sunday, June 17, 2018
நூறாய் பெருகும் நினைவு
 
5.jpg
 
நீங்க இலங்கையா? கேட்போருக்கு..., 
ஓமோம்... சொல்லியும் ! 
 
நீங்க இந்தியாவா? கேட்போருக்கு...., 
ஆமாங்க... சொல்லியும் கடந்து போகிறேன் மனிதர்களை. 
 
அப்ப ஊரில எந்த இடம்?
 
சிலருக்கு பூராயம் ஆராயாமல்  பொச்சம் அடங்காது நீளும் கேள்விக்கு வாயில் வரும் ஊரைச் சொல்லிக் கடக்க முயல்வேன்.
 
அதையும் மீறி வரும் கேள்வி இது :...., 
அப்ப வெளிநாடு வந்து கனகாலமோ?  
இங்கை இப்ப எங்க  இருக்கிறியள்?  
 
சிலர் மேலும் விபரம் அறியும் ஆர்வத்தை இப்படியும் கேட்டு வழிமறிப்பார்கள். 
 
நீண்ட காலம் வாழ்ந்த இடத்தை விட்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள்  தொலைவாக ஒதுங்கியது...., 
 
 பழைய நினைவுகளைத் தொலைத்து புதிய நினைவுகளைச் சேமித்து மீள வேண்டும் என்பதும் பிரதான காரணம். 
 
அத்தோடு அதிகமாக தமிழர்கள் அல்லாத இடத்தை தேர்வு செய்தது யாருக்கும் என் தற்கால இருப்புப் பற்றி தெரியாமல் இருக்க வேண்டும் என்பதே. 
 
புதிய இடத்தில் வேலை. பெரும் நிறுவனம். 350பேருக்கு மேற்பட்டோரோடு வேலை செய்யும் சூழல். பணியில் சந்திக்கும் தருணங்களில் பொதுவான வணக்கம் நலவிசாரிப்பு அதோடு போகிறது முகங்கள். எந்த முகத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் அவசியம் இல்லை. எனக்கான பணியை செய்து கொள்வதே பணி.
 
அதிகம் யாருடனும் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. எல்லோரையும் போல அருகில் யாரும் வந்தால் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தால் சரி. அவர்களாகவே ஒதுங்கி விடுகிறார்கள். தற்காலம் அதிகம் பேரை ஆதரிக்கும் ஒரே இலத்திரனியல் சாதனம் மொபைல் பேசி. ஆதுவே என்னையும் இப்போது தன்னோடு சேர்த்துக் கொண்டுள்ளது.
 
இடைவேளை ஓய்வில் தனியே ஓரிடத்தை தேர்வு செய்து எனக்கான உணவை யாரோடும் கூட்டுச்சேராமல் தனித்து சாப்பிடுவதை வளமையாக்கிக் கொண்டேன். இதை கவனித்த சிலர் எனது மேசையில் வந்து சேர்ந்தார்கள்.
நீங்கள் வரேக்க எங்களையும் கூப்பிடுங்கோ சேர்ந்து சாப்பிடலாம்.
 
நெருங்கி வரும் உறவுகளை தட்டிவிட முடியாது சிலரது அன்பு இருக்கிறது. ஆனால் யாரையும் கூட்டுச்சேர்த்துக் கொள்ளும் மனநிலமை இல்லை. அதனால் எனக்கான இடைவேளை நேரத்தை மாற்றிக் கொண்டுள்ளேன். ஏனக்கு சௌகரியமாக இருக்கிறது தனித்திருத்தல்.
 
தொடர்புகளில் இருந்த பெருமளவு நண்பர்களின் தொடர்புகளைப் பேணிக் கொள்ளாமல் உறவுகளைத் துண்டித்துக் கொண்டுள்ளேன். 
 
பலரை விட்டு ஏன் ஒதுங்கிப் போக எத்தனிக்கிறது மனம் ? 
அவ்வப்போது எனக்குள்ளும் எழும் கேள்விக்கான பதிலை என்னாலும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. 
 
தவிர்க்க முடியாத சந்திப்புக்களை இயன்றவரை தற்கால இருப்பிடம் அடையாளம் சொல்லாமல் தவிர்த்துக் கொள்கிறேன். 
 
சிலர் எனது அன்னியமாதல் புரிந்து எனக்கேற்ப பேசப்பழகியுள்ளார்கள்.  அதிகம் கேள்விகள் கேட்டு சங்கடம் தராமல் நாகரீகம் காக்கும் சிலரோடான தொடர்பாடலை மட்டும் பேணிக்கொள்கிறேன். 
 
யாரையும் பார்க்க பேசும் மனநிலையை ஏனோ இந்த நாட்கள் தருவதில்லை. 
 
அதிக நேசிப்பு நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு துரோகம் ஏமாற்று. இவற்றைத் தந்து பொய்யாகிப் போனவர்களை அடிக்கடி ஞாபகவோடை இழுத்து வருகிறது. 
 
உறவுச் சேர்ப்பில் கண்ணீரை விதைத்து மனவழுத்தத்தைக் கூட்டிக் கொண்டது தவிர வேறு பயனில்லை. 
 
மறந்துவிட நினைக்கும் முகங்களும் அவர் தம் துரோகங்களும் மனவோடையை ரணமாக்கிய காயம் அவ்வளவு இலகுவாய் ஆறிவிடக்கூடியதல்ல. 
 
இதுவும் கடந்து போகட்டும் இப்படித்தான் என்னை ஆற்றுகிறேன். 
 
தனிமையின் முழுமையான அழுத்தத்தை அணுவணுவாக அனுபவிக்கத் தொடங்கியுள்ளேன். 
 
இந்தக்காலம் என்னை முழுதாக மாற்றிப் புதிதாக்குமென்ற நம்பிக்கையில் ஒதுங்கிப் போகிறேன். 
 
ஆறாய் ஓடிவரும் கண்ணீருக்கு 
அணைகட்டி ஓயத்தெரியாது. நூறாய் பெருகும் நினைவுகளைத் தூர எறியவும் முடியாது கடக்கிறது காலம். 
 
 
 
 
 

அந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ

1 year 3 months ago

அந்த கரித்துண்டை தூக்கி  அங்காலை எறியுங்கோ

9_F8_DC7_A0-40_B6-4_DD9-83_DC-77_B11_D49

கார்ல் ஒல்காß ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தபோது என்னுள் இருந்த வழமையான கலகலப்பு இல்லாமல் போயிருந்தது.குமாரசாமி அண்ணன் எனது வேலையிடத்துத் தோழன். தோழன் என்று ஒருமையில் சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது தோழர் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் குமாரசாமி அண்ணன் என்னைவிட ஆறு வயதுகள் மூத்தவர். ஆனால் குமாரசாமி அண்ணன் வயது வித்தியாசத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு “கவி, கவி..” என்று சொல்லி ஒரு சம வயது நண்பனாகவே என்னுடன் பழகிக் கொண்டிருந்தார்.

“கத்தரிக்காயை  நல்ல மெல்லிய துண்டுகளாகச் சீவி சின்னன் சின்னனா வெட்டி எண்ணையிலை போட்டு  ‘கலகல’ எண்டு பொரிச்செடுத்து வைச்சிட்டு,  ஊர் வெங்காயத்தையும் பிஞ்சு மிளகாயையும் குறுணியா வெட்டி பொரிச்ச கத்தரிக்காய்க்குள்ளை போட்டு, அதுக்குள்ளை தேங்காய்ப்பால், மிளகு, சின்னச் சீரகத்தூள், உப்பு,  தேசிக்காய் புளி விட்டு கையாலை நல்லா பினைஞ்சு சாப்பிட்டுப்பார் அந்த மாதிரி இருக்கும். அந்தக் கத்தரிக்காய்ச் சம்பல் ஒண்டு போதும் இரண்டு கோப்பை சோறு சாப்பிடலாம். கொஞ்சமா தண்ணி அடிச்சிட்டாய் எண்டால், கோழி நெஞ்சிறைச்சியை சின்னஞ் சின்னதா வெட்டிப் பொரிச்சு, பிசைஞ்சு வைச்சிருக்கிற கத்திரிக்காய்க்குள் போட்டு குழைச்சு சாப்பிட்டுப் பார் தண்ணி அடிச்ச வாய்க்கு அமிர்தமா இருக்கும்”

குமாரசாமி அண்ணன் சொல்லித் தந்த ஒரு சமையல் குறிப்பு அது. அவர் சொன்ன அந்த  கத்தரிக்காய்ச் சம்பலின் ருசி வீட்டில் எல்லோருக்கும் பிடித்துப் போனது. இன்று எனது வீட்டில் நடக்கும் விசேசங்களில் எல்லாம் கத்திரிக்காய்ச் சம்பல் கண்டிப்பாக இருக்கும். ஒவ்வொரு தடவையும் கத்திரிக்காய்ச் சம்பல் செய்யும் போது அவர் முகம் மனதில் வரும்.

இன்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் அவரைப் பார்க்கத்தான் வந்திருந்தேன். கார்ல் ஒல்கா ஆஸ்பத்திரியில் இருந்து எனது வீடு  பெரிய தூரம் என்றில்லை எழுபது கிலோ மீற்றர்கள்தான், நெடுஞ்சாலையினூடாகப் பயணித்தால் ஒரு மணித்தியாலத்துக்குள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனாலும் ஆஸ்பத்திரியின் வாசலில் கொஞ்சம் இருந்துவிட்டுப் போகலாம் என்ற எண்ணம் வர வெளியே யாருமே இல்லாமல் தனியாக இருந்த வாங்கிலில் போய் அமர்ந்து கொண்டேன். தனியாக இருக்கலாம் என்று நினத்தால் அந்த வாங்கிலை ஒரு இளம் சோடி வந்து பங்கு போட்டுக் கொண்டது. 

வேலை இடத்தில் விழுந்தானா இல்லை கால்பந்து விளையாடி காலை முறித்துக் கொண்டானா தெரியவில்லை அந்த சோடியின் இளைஞன் உள்ளங்காலில் இருந்து தொடைவரை பெரிய கட்டுப் போட்டிருந்தான்.

 “ஆஸ்பத்திரிக்கு வந்தும் உன்னாலை சிகரெட்டை விட முடியேல்லை” பெண் அவனை செல்லமாக கேபித்துக் கொண்டது என் காதில் கேட்டது. அவள் சொன்னது அந்த இளைஞன் காதில் தெளிவாகக் கேட்டிருக்கும் ஆனாலும்  அவன் தன்பாட்டுக்கு புகையை உள் இழுத்து வெளியே தள்ளிக் கொண்டிருந்தான்.

இப்பொழுது எனது மனது பதினைந்து வருடங்களுக்கு பின்னால் போய் நின்றது.

உள்ளே புகை பிடிக்க அனுமதி இல்லாததால்  வேலை இடத்துக்கு வெளியே அடிக்கடி போக வேண்டி இருந்தது. அன்றும்  வேலை நேரத்தில் வெளியே போட்டிருந்த வாங்கிலில் இருந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன்.

“உன்னை அங்கை காணேலை எண்டவுடன் இஞ்சைதான் இருப்பாய் எண்டு நினைச்சன்” சிகரெட்டை பற்ற வைச்சுக் கொண்டு  குமாரசாமி அண்ணன் எனக்குப் பக்கத்தில் வந்து இருந்தார்.

“என்ன புதினம் கவி?”

“இண்டைக்கு உங்கடை பிறந்தநாள்”

“ஓமடா நேற்று படுக்கைக்கு போகக்கை நினைச்சனான். காலமை எழும்பக்கை அதை மறந்து போனன். பார் என்ரை  மனுசியும் எனக்கு நினைப்பூட்டேல்லை”

“பின்னேரம் நீங்கள் வீட்டை போகக்கை  சில நேரம் உங்களுக்கு ஒரு சேர்ப்பிரைஸ் பார்டி  இருக்கலாம்”

“இருக்கும் போலைத்தான் கிடக்குது. காலமை என்னைப் பார்த்து மனுசி கொடுப்புக்குள்ளை சிரிக்கக்கை, என்ரை முகத்தைப் பார்த்து சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு எண்ட நினைப்புத்தான் வந்தது  பிறந்தநாளைப் பற்றி யோசனையே வரயில்லை. அது போகட்டும் என்ரை பிறந்த நாளுக்கு நீ என்ன தரப்போறாய்?”

“ஒரு பக்கெற் சிகரெட்?”

“சிகரெட்டோ? இந்தக் கோதாரியை எப்ப விடலாம் எண்டிருக்கிறன்”

“எனக்கும்தான் அந்த நினைப்பு இருக்கு”

“இதை விட்டால் நல்லதுதாண்டா. உடுப்பு, உடம்பு எல்லாம் ஒரே சிகரெட் மணம்தான். வீட்டிலையும் அப்பப்ப அர்ச்சனையும் விழும். மனுசி மட்டுமில்லை பெட்டைகளும் பேசுவாளுகள்”

“அப்ப விட்டிடுங்கோ”

“பேய்க்கதை கதைக்கிறாய். நாற்பது வருசமா பத்துறன். உடனை விடேலுமே? வேணுமெண்டால் ஒவ்வொண்டாகக் குறைச்சுக் கொண்டு வந்து...”

“இது நடக்கிற காரியமா இருக்காது. விடுறதெண்டால் ஒரேயடியா விடோணும்”

“உதெல்லாம் பேச்சுக்குத்தான் சரிவரும் ”

“மனசுதாணன்னை எல்லாம்”

“இவ்வளவு கதைக்கிறாய் உன்னாலை விடேலுமோ?”

“ஓகே. நான் விடுறன். உங்கடை பேர்த் டே அண்டு, சிகரெட் பிடிக்கிறதில்லை எண்டு முடிவெடுப்போம்.” 

“நீ விடுறதெண்டால் நானும் ரெடி”

குமாரசாமி அண்ணன் அப்படிச் சொன்னதும் பத்திக் கொண்டிருந்த எனது சிகரெட்டை பாதியிலேயே அணைத்தேன்.

“நீ நூத்தால் நானும் நூப்பன்”  என்னைப் பார்த்து தனது சிகரெட்டையும் குமாரசாமி அண்ணை அணைத்துப் போட்டார்.

என் பொக்கெற்றில் இருந்த சிகரெட் பக்கெற்றை எடுத்து அருகில் இருந்த குப்பை வாளிக்குள் போட்டேன்

“புதுப் பக்கெற் போலை இருக்கு?”

“ஓம். இப்பதான் வேண்டினனான். ஒண்டுதான் அதுவும் பாதிதான், இப்ப பத்தினது” சொல்லிவிட்டு எழுந்து கொண்டேன். குமாரசாமி அண்ணனும்  என்னுடன் கூட வந்தார். 

இரண்டு நாள் கழித்துப் பார்த்தால் வேலை இடத்தில் வெளியே போட்டிருந்த வாங்கிலில் இருந்து குமாரசாமி அண்ணன் சிகரெட் பத்திக் கொண்டிருந்தார்

“என்னண்ணை திரும்பத் தொடங்கிட்டீங்களே?”

“விட்டால்தானே திரும்பத் தொடங்கிறதுக்கு. 

நீ சிகரெட் பக்கெற்றை ‘பின்’னுக்குள்ளை போட்டுட்டுப் போட்டாய். அநியாயமா ஒரு சிகரெட் பக்க்கெற்றை எறிஞ்சது மனசுக்கு ஒரு மாதிரி இருந்துது. திரும்ப வந்து எடுத்து என்ரை சேர்ட் பொக்கெற்றுக்குள்ளை வைச்சிட்டன். சேர்ட்  பொக்கெற்றுக்கும்  வாய்க்கும் கனக்கத் தூரமில்லைப் பார்”

“சரி அந்தப் பக்கெற் முடிஞ்சதுக்குப் பிறகு புதுசு வேண்டிப் போடாதையுங்கோ”

“அடப் போடா. இது அதுக்குப் பிறகு இரண்டாவது பக்கெற்”

இழுக்க இழுக்க இன்பம் தந்தத சிரெட்தான் குமாரச்சாமி அண்ணனை இப்பொழுது ஆஸ்பத்திரிக் கட்டிலிலுக்கு இழுத்து வந்திருக்கிறது.

“மனுசியிட்டை தேத்தண்ணி போடச் சொல்லிப் போட்டு கதிரையிலை இருந்தனான். திடீரென கண் இருட்டிக் கொண்டு வந்துது. மேசையிலை அப்பிடியே படுத்திட்டன். நல்லவேளை மூத்தமகள் கண்டிட்டு உடனை அம்புலன்ஸுக்கு அடிச்சிட்டாள். ஐஞ்சு நிமிசத்துக்குள்ளை வந்திட்டாங்கள்.  அவங்கள் வந்து “நித்திரை கொள்ளாதை நித்திரை கொள்ளாதை” எண்டு கன்னத்தில் அடிச்சடிச்சு அம்புலன்ஸிலை என்னை ஏத்தின ஞாபகம். சத்தி எடுத்தனான் எண்டும் சொல்லிச்சினம். பிள்ளைகளும் மனுசியும் நல்லா பயந்து போட்டினம் கவி”

“இப்ப எப்பிடி இருக்கண்ணை?”

“பாக்கேல்லையே. உடம்பெல்லாம் வயறுகள். 24 மணித்தியாலமும் கொம்புயூற்றரிலை கவனிப்பாம்”

“சாப்பிட ஏலுமா இருக்குதுதானே?”

“வட்டம், நீள் வட்டம் சிவப்பு, வெள்ளை எண்டு கொஞ்சக் குளிசைகள் காலமையிலை கொணந்து தருவாங்கள் அதை விழுங்கி தண்ணியும் குடிச்சால் வயிறு ‘புள்’. அதுக்கு மேலை காலமைச் சாப்பாடு எண்டு பெரிசா எல்லாம் தேவையில்லை. சும்மா சொல்லக் கூடாது மத்தியானம் உண்மையிலை  நல்ல சாப்பாடுதான். என்ன Input,Output எல்லாம் படுக்கையிலை எண்டபடியால் கொஞ்சம் கூச்சமா இருக்கு”

“அதுக்காக சாப்பிடாமல் இருக்கேலுமே”

“சாப்பிடாடு முக்கியமெல்லே. சாப்பிடுறன்தான். எண்டாலும் கவி, நீ மனதிலை திடமான ஆள்தான். உன்னைப் போலை நானும் அண்டைக்கே சிகரெட்டை விட்டிருக்கோணும்”

“இப்ப இங்கை உங்களாலை சிகரெட் இல்லாமல் இருக்க முடியுதுதானே. ஆஸ்பத்திரியை விட்டு வெளியாலை வந்தாப் போலையும் நீங்கள் சிகரெட் இல்லாமல் இருக்கலாம்”

“ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வருவேன் எண்டு நினைக்கிறீயே?”

“வருவீங்கள். வெளியிலை வந்த உடனே நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை என்ன எண்டால் அந்த கரித்துண்டை தூக்கி எறியிறதுதான்” 

குமாரசாமி அண்ணனுக்குச் சொல்லிப் போட்டு வந்திருக்கிறேன்.

ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்.

 

கவி அருணாசலம்

31.05.2018

 

"நாய்க்காப்பகம்"

1 year 3 months ago

ஒவ்வொரு வருடமும் நடக்கும் இராபோசண விருந்துக்கு நான் போவது வழமை இந்த இராபோசண விருந்தை ஒழுங்கு செய்வதில் எனது நண்பர் ஒருவரும் முக்கிய பங்கு வகிக்கின்றார்.இந்த தடவையும் சென்றிருந்தேன்  இருபதைந்து டொலருக்கு ஒரு டிக்கட்டை எடுத்து போட்டு நானும் ஷரிட்டிற்க்கு காசு கொடுக்கிறனான் என்று சொல்லுவதில் எனக்கு  ஒரு பெருமை. என்னை மாதிரி கொஞ்ச சனம் புலத்தில இருக்கினம்.இன்னும் சிலர் இருக்கிறார்கள் அமைப்புக்களின் பணத்தை பொருளாதரத்தில் பின்தங்கியவ‌ர்களுக்கு கொடுத்து  அதை தாங்கள் வழங்குவது போன்று ஒரு புகைப்படுத்தை எடுத்து முகப்புத்தகத்திலும் வட்சப்பிலும் போட்டுவிடுவார்கள். அதை பார்ப்பவர்கள் நினைப்பார்கள் இவருடைய‌ பணத்தில் தான் உதவிகளை செய்கிறார்கள் என்று.

எது எப்படியோ  தேவையானோருக்கு பணம் போகின்றது. சந்தோசமடைவோம்

 

கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு  ஆரம்பமானது .ஒவ்வொரு வருடமும்   பேச்சாளர் தனது உரையில் தாயகத்தில் தனது அமைப்புக்கு என்ன தேவை என்பதனை சொல்லுவார். மக்களும் தங்களால் முடிந்தவற்றை கொடுத்து உதவுவார்கள். ஒவ்வொரு தடவையும் தனது உரையில் ஒன்றைமட்டும் சொல்ல தவ‌றுவதில்லை,இந்திய இராணுவம் கைது செய்து துன்புறுத்தியபடியால் கடுமையாக நோய்வாய்பப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொழுது ,தான் சுகமாகி தப்பி வந்தால் ஏழைகள்,ஆதரவற்றோர்,ஆதரவற்ற முதியோர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேணும்  என நினைத்ததாகவும் அதை தான் தொடர்ந்து செய்வதாகவும் கூறினார்.

யோகர் சுவாமிகள் நாய்குட்டிகளுக்கு எம்மவர்களால் இளைக்கப்படும் துன்பங்களை எண்ணி கவலைப்பட்டவர் என்றார்.

அதே போன்று புத்தரும் ச‌கல உயிரினங்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற கொள்கையை உடையவர்.

இதை எங்கோ வாசித்த மகிந்தா கட்டாகாலி நாய்களை பிடிப்பதை தடை செய்து விட்டார்.இதனால் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது அவைகள் பல்கி பெருகி இப்பொழுது பொதுமக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகின்றது என குறைப்பட்டு கொண்டார் அந்த பெரியவர்.

Image result for à®à®à¯à®à®¾à®à®¾à®²à®¿ நாயà¯à®à®³à¯

இந்த நாய்களுக்கு ஓர் காப்பகம் அமைத்து அதை பாரமரிக்க வேண்டு என்று சொன்னவுடன் ,நான் திகைத்து விட் டேன்.இதை அறிந்த ஐயா நகைச்சுவையாக இப்படி கூறினார்" நீங்கள் இப்ப எனக்கு அடிக்க வந்தாலும் வருவியள் எல்லாம் முடிஞ்சு இப்ப உவர் நாய் பாராமரிக்க வந்திட்டார்.எல்லோரும் கை தட்டினோம்

நாங்கள் வளர்ந்த நாட்டில் நாய்களுக்கு எப்படியான மரியாதை கொடுக்கப்பட்டது என்பதை  அறிந்தவன்.

சின்ன வய‌தில் ஞாபக‌ம் இருக்கின்றது சிறு பிள்ளைகளை பயப்படுத்துவதற்கு  நாய் பிடிக்கிறவன் வானில வந்து பிடிச்சு கொண்டு போய்விடுவான் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.அந்த கால கட்டத்தில் நகரசபைகள் நாய்களை பிடித்து கொண்டு சென்று அழித்துவிடுவார்கள்.

Image result for à®à®à¯à®à®¾à®à®¾à®²à®¿ நாயà¯à®à®³à¯

2006 ஆம் ஆண்டு மகிந்தா நாய்களுக்கும் வாழ உரிமை உண்டு  தெரு நாய்களை பிடித்து கொல்ல கூடாது என சட்டத்தை கொண்டுவந்த பின்பு நகரசபைகள் நாய் பிடிப்பதை நிறுத்தி விட்டனர் .இதனால் தெரு நாய்கள் பெருகி கொண்டு போகின்றது.

சில நாய்கள் மனிதர்களுக்கு கடித்தும் விடுகின்றனவாம்.

யாழ் நகரில் கட்டாகாலி நாய்களை ஜேர்மன் நாட்டு பெண்மணிஒருவர் பார்த்து கவலை அடைந்து  அவரை சந்தித்து இவை பாராமரிப்பற்று இருப்பதன் காராணத்தை கேட்டதாகவும் சொன்னார்.

அந்தபெண்மணியின் பின்னால் அங்கு நின்ற கட்டாகாலி நாய்கள் எல்லாம் வாலை ஆட்டிகொண்டு சென்றதை பார்த்து ஆச்சரியமடைந்த‌தையும் கூறினார்.

ஜேர்மன் பெண்மணி சொன்னாராம் இந்த நாய்கள் எனக்கு பின்னால் வருவதற்கு காரணம் தனது ரத்தத்தில் நாய்பாசம் கலந்துள்ளது அதுதான் இவைகள் எனக்கு பின்னால் வருகின்றன என்றாராம்.

கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுவதால் அங்கு அதிக நாய்கள் தஞ்சமடைந்துள்ளன இதனால் பக்தகோடிகளுக்கும் பிரச்சனைகள் உருவாகின்றன எனவே ஐயா இந்த நாய்களுக்கு ஒரு காப்பகம் அமைக்க முயற்சி செய்துள்ளார் . எமது முன்னாள் பாடசாலை அதிபரின் இரண்டு ஏக்கர் காணி இயக்கச்சி காட்டினுள் உள்ளதாம் அதை அவர் இவரது தொண்டு நிறுவனத்திற்கு அளித்துள்ளார் . இந்த காணியில் காப்பகத்தை அமைக்க ஐயா உத்தேசித்துள்ளார்.

அது வெற்றியடையும் என எதிர்பார்க்கலாம்.ஐயா நகைச்சுவையாக இந்த நாய்களுக்கு சாம்பாரும் சோறும்தான் உணவாக வழங்கப்படும் என்று சொன்னார்

. சுவாமிகளும் ,எனையோரும் ,நாங்களும் ஐயோ நாய்கள் பாவம் என்று சொல்லுகிறோம் ஆனால் ஒருத்தரும் அவற்றை பாதுகாக்க எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை ஆனால் ஐயா செயலில் ஈடுபட்டமை பாராட்ட படவேண்டிய ஒர் விடயமாகும்.

அவர்கள் வாழட்டும் 

1 year 3 months ago

அவர்கள் வாழட்டும் 

கலா பாக்யராஜ் தம்பதிகளுக்கு இறைவன் கொடுத்த பிள்ளைச் செல்வங்கள்  மூன்று ஆண்  குழந்தைகள். புலப்பெயர்ந்து  ஜேர்மனி  சென்ற இவர்கள்  படட  கஷ்டங்கள் ஏராளம் 

 குழந்தைகள் இரண்டு வருட இடைவெளியில் பிறந்ததால் மனைவி அவ்ர்களைக் கவனிக்க கணவன்  இரண்டு வேலை செய்து  பிள்ளைகளை அன்போடும் பன்பொடும் கண்ணுங் கரு த்துமாய் வளர்த்தார்.  

உறவினர்கள்  லண்டனில்   வாழ்ந்ததால்  இவர்களும் அங்கு சென்று  குழந்தைகளை வளர்க்க எண்ணினார்கள்.  இடம் மாறி அங்கு சென்ற பின் இலகுவாக இருக்கவில்லை வாழ்க்கை முறை.  மொழிமாற்றம் என  குழந்தைகள் கஷ்ட படவே  ஒரு வாத்தியாரை  ஓழுங்கு  செய்து   ..அவர்களுக்கு ஆங்கிலத்தில் முழுத்தேர்ச்சி அடைய  ஆன  மட்டும் முயற்சி செ ய்தார் தந்தை .  பிள்ளை கள் வளர தேவைகள்  அதிகரிக்க வே  வீட்டு வேலையுடன் சிறார்களை பராமரிக்கும் பகுதி நேர   முயற்சியிலும் மனைவி ஈடு பட்டு வாழ்க்கைச் செலவைப்  பகிர்ந்து கொண்டாள்   குழந்தைகளும் 

கல் வியில்சிறந்து வளர்ந்து  மூத்தவன் இன்ஜினியராகவும்.  இரண்டாவது பையன் சத்திர சிகிச்சை உதவியாளராகவும்     மூன்றாவது கட்டிடநிர்மாணிப்பாளர்களாவும்  ஆயினர். காலப்போக்கில்  ..பருவத்துக்குரிய  ஆசை கள் வரவே மூத்தவன்  ஒரு இந்துப்பெண்ணை காதலித்தார் . இப்போது அவர்கள் வீட்டில் புயல் வீசத்தொடங்கியது ...தாயின் வளர்ப்பு  என  தந்தையும் தாயும் மோதிக் கொண்டு ஆளை  ஆள் குறை கூறிக் கொண்டு  இருந்தனர்.  பாக்கிய ராஜுக்கு கால ஓட்ட்த்தின் வேகம்  நடைமுறை  விளங்க வில்லை...மனைவி எவ்வளவோ  எடுத்துசொல்லிப் பார்த்தார்.  

 மக்கள் மூவரும் தாயின் மீது மிகவும்  நேசமும்  கரிசனையும்  உள்ளவர்கள். பிள்ளைகள்  நண்பர்களை அழை த்து வந்தால்  அவர்களுக்கு சலிக்காது உபசரிப்பார். கணவனின் போக்கு மாறத்தொடங்கியது. குடியில் ஆரம்பித்து ...இவர்களை ப்பிரியும் நிலை ஆகியது ...மனைவியோ  யாரைக் க ட்டினாலும் என் பிள்ளைகள் சந்தோஷமாய்  வாழட்டும் என்னும் நிலையில் இருந்தாள். தந்தை யோ ..குல ம் கோத்திரம் சாதி சம்பிரதாயம் என் இன்னும் மாறாத மனம் உள்ளவராயிருந்தார். ஒரு கோடை  விடுமுறையில்  கணவன் தாயகம்  சென்று ..தனது   பழைய காணிகளை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். ..

மூத்தவனோ தாயுடனும் வருங்கால மனைவியின் பெற்றவர்களுடனும் கலந்து ஆலோசித்து ...திருமண நாள் குறித்து விட்டு அதற்கான ஆயத்தங்களை செய்து    தாயின் ஒன்றுவிட்ட் அண்ணரின் துணையுடன்  திருமணம்  நடக்க இருக்கிறது .. திருமண நாளுக்கு சற்று முன்பாக     தந்தைக்கு அறிவிக்க இருக்கிறார்கள்.  திருமணம்  சுபமே நடக்க நீங்களும் நாங்களும் வாழ்த்துவோம்.   தந்தை வருவாரா ...கலகம் நடக்குமா பொறுத்து இருந்து  பார்க்கலாம் . 

வருங்கால இளையோரின் வாழ்வு அவர்கள் முடிவுப்படியே நடக்கும்  நாம் வெறும் பார்வையாளர் ...எங்கள் காலத்தில் நடைபெற்றது போல   ஊர் கூட்டி ...உறவுகள் கூடி பெற்ற்வரின்  எண்ணப்படி நடக்கும் என எண்ண   முடியாது .கால  ஒடடத்துக்கேற்ப நாமும் மாறித்தான் ஆக  வேண்டும். இது உங்கள் வீட்டின் கதையாகவும் இருக்கலாம். .இது என் நண்பியின் வீட்டுக் கதை ...உங்கள் வீடுகளில் இப்படி இருந்தால் எப்படி சமாளிப்பீர்கள்...?

எங்க ஊர் முதலாளி

1 year 4 months ago
 

எங்க ஊர் முதலாளி

D10_BEADA-_CDBA-4599-_A42_A-9_CD47_AA667 

ஒரு காலத்தில் நகரத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஆளுமை மிகுந்தவர் முதலாளி. எங்கள் துறைமுகப் பகுதியில் கடலின் ஆழம் போதாது, வணிகக் கப்பல்கள் அங்கு வர முடியாது என்ற நிலை இருந்த போது, துறைமுகத்துக்கு ஒரு மைல் தள்ளி வணிகக் கப்பல்களை நிறுத்திவிட்டு, படகுகளில் போய் பொருட்களை ஏற்றி, கரைக்கு கொண்டுவரலாம் என்று செய்து காட்டி பலருக்கு நகரத்தில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை முதலாளியினுடையது.

 முதலாளிக்கு வணிகத் திறமை மட்டுமல்ல பெண்களை வசியப் படுத்தும் கலையும் நன்றாக வரும். முதலாளியுடன் நெருக்கமாகப் பழகும் அவரது நண்பர்களுக்கு, குழந்தை பிறக்கும் போது, தங்களது குழந்தை முதலாளியைப் போல இருந்து விடுமோ என்ற அச்சம் ஒட்டிக் கொள்ளும். அந்த விசயத்தில் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் உடல் உதவி செய்வதில் முதலாளி ஒரு கண்ணன்.

 நகரத்தின் பெரிய கட்டிடமே முதலாளிக்குத்தான் சொந்தம். இலங்கை வங்கி, யாழ் கூட்டுறவு ஸ்தாபனம், குமார் அச்சகம்… என்று பல கடைகள் அந்தக் கட்டிடத்தில் இருந்தன. மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையம் ஒன்றை அந்தக் கட்டிடத்திலேயே முதலாளியும் தன் பங்குக்கு நடத்திக் கொண்டிருந்தார். அந்த கட்டிடத்துடன் சேர்ந்து  வடக்குப் பக்கமாக இரண்டு சின்னக்கடைகள் இருந்தன. அந்தக் கடைகளை அகற்றி, அதன் நிலத்தை வாங்கி தன் கட்டிடத்துக்கு மேலும் அழகூட்ட முதலாளி விரும்பினார். 

 அந்தக் கடைகளில் ஒன்று யுனைற்ரெட் ஸ்ரோஸ்(புத்தகக் கடை), மற்றது ஜெமினி பன்ஸி பலஸ். இந்த இரண்டு கடைளையும் வல்வெட்டித்துறையைச் சேரந்த அண்ணன் தம்பிகளே நடத்திக் கொண்டிருந்தார்கள். வல்வெட்டித்துறையாரோடு நேரடியாக மோத முதலாளிக்குத் தயக்கமாக இருந்தது. எப்படியாவது அந்தக் கடைகளில் இருந்து அவர்களை வெளியேற்றிவிட வேண்டும் என பல கணக்குகளைப் போட்டுப் பார்த்துக் கொண்டார். முதலாளி போட்ட கணக்கு சிக்கலாக இருந்தது. அடிமானங்கள் பல போட்டுப் பார்த்தும் அண்ணனும், தம்பிகளும் அசைந்து கொடுக்கவில்லை. தனது அடியாட்களை விட்டு ‘பீ முட்டி’ அடித்தும் பார்த்தார். பீ முட்டி’ என்றால் சிலருக்கு அது என்ன என்று புருவங்கள் மேலே எழலாம் என்பதால் அது பற்றிய ஒரு சிறு விளக்கம்.

 அப்பொழுது வாளிக் கக்கூஸ்தான் பரவலாக வீடுகளில் இருந்தன. அப்படியான கக்கூஸ்களில் இருந்து பானை (முட்டி)க்குள் மலங்களை அள்ளி வந்து வேண்டப்படாதவர்கள் வீடுகளுக்கு முன்பாகவோ, கடைகளுக்கு முன்பாகவோ எறிந்து விட்டுப் போவதுதான் ‘பீ முட்டி அடித்தல்’ என்பது.

 பீ முட்டி அடிக்கும் திருவிழா இரண்டு கடைகளுக்கும் முன்னால் ஒவ்வொரு இரவுகளும் நடந்து கொண்டிருந்தன. அண்ணன் தம்பி இருவரும்  சளைக்காமல் கூலிக்கு ஆட்களைப் பிடித்து காலையில் கடை வாசலைத் துப்பரவாக்கி சாம்பிராணி காட்டி தங்கள் வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து ‘போதுமடா சாமி’ என்று ஒதுங்க நினைத்தவர்களுக்குத் தொல்லை தந்து கொண்டிருந்த பிரச்சனை சிறைச்சாலைக்குப் போய் விட்டது.

 முதலாளிக்கு கொஞ்சம் தமிழ்ப் பற்று இருந்தது. அவரின் இந்த தமிழ்ப் பற்றை ஆரம்ப கால போராளிகள் தங்கள் பக்கம் எடுத்துக் கொண்டார்கள். (சுங்கான்) பத்மநாதன் முதலாளியின் கட்டிடத்துக்கு அருகேதான் றேடியோ திருத்தும் கடை வைத்திருந்தார். அதற்கு அடுத்ததாக இருந்த சிறீமுருகன் மெடிக்கல் ஸ்ரோஸ். அதன் உரிமையாளர், ரெலோ இயக்கத்தின் தலைவர்சிறீசபாரத்தினத்தின் அண்ணன் கந்தசாமி.

 பத்மநாதனும், கந்தசாமியும் இணைந்து என்னென்ன செய்தார்கள் என்பது தெரியாது. ஆனால் தாங்களே கைத்துப்பாக்கிகளை உருவாக்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்கான பொருள் உதவிகள் முதலாளியிடம் இருந்துதான் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆயுதப் போராட்டம் பலமாக இருக்கும் போதே அச்சமில்லாமல் காட்டிக் கொடுக்க ஆட்கள் இருந்த போது அன்றைய காலத்தில் ‘மொட்டைக் கடுதாசி’ எழுதிப் போட ஆளில்லாமல் போகுமா? 

 சுங்கான், அவரது கடை ஊழியர் ஒருவர், கந்தசாமி  இவர்களுடன் முதலாளியும் சிஐடி பஸ்ரியாம்பிள்ளையின் விருந்தினர்களாக சிறைச்சாலைக்குப் போனார்கள். அதன்பிறகு புத்தகக் கடைக்கும் பன்ஸிக் கடைக்கும் பீ முட்டி அடிக்கப்படுவது நின்று போனது. 

 செல்வாக்குகளைப் பாவித்து கொஞ்சக் காலத்துக்குப் பிறகு பஸ்ரியாம்பிள்ளையின் விருந்தினர் மாளிகையில் இருந்து முதலாளி வெளியே வந்தார். ‘சிறை சென்று வந்த செம்மல்’ என்று குரல் எழுப்பிக் கொண்டே அவருக்கு மாலை போடப் போன அடிவருடிகள், “என்ன முதலாளி இப்பிடி புத்தர் மாதிரி அமைதியாப் போனார்” என்று சலித்துக் கொண்டு திரும்பி வந்தார்கள்.

 சிறைக்குப் போய் வந்த பின்னர் எந்தவித அடிதடிகளும் இல்லாமல் அமைதியாக இருந்து கொண்டு பிரபலமான மனிதர்களை தனது கட்டிடத்துக்கு அழைத்து விருந்தளித்து மகிழ்ந்து கொண்டிருந்தார். அப்போது, நாட்டுக்கு வந்த சீர்காழி கோவிந்தராஜனையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவரையும்  தன் கட்டிடத்துக்கு கூட்டி வந்து விருந்தளித்தார். இவர் அவருக்கு பருகப் பால் கொடுக்க, அவர் இவரைப் பார்த்து, “அமுதும் தேனும் எதற்கு? நீங்கள் அருகினிலே இருக்கையிலேயே எனக்கு” என்று கணீர் குரலில் முதலாளியைப் பார்த்துப் பாட, முதலாளி உள்ளம் உருகிப் போய் நின்றார்.

 தந்தை செல்வா, ஜி.ஜி பொன்னம்பலம் இருவரது மரண ஊரவலங்களையும் அவர்களது கட்அவுட்டுகளை வைத்து நகரத்தில் வரலாறு காணாத இறுதி ஊர்வலங்களை நடத்தி எல்லோரையும் வியக்க வைத்தார். 

 „அட முதலாளிக்கு வேறு முகமும் இருப்பது இதுவரை தெரியாமல் போயிற்றே“ என்று பலர் பேசிக் கொண்டார்கள். அப்படி நினைத்தவர்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே தெரியாத ஒன்று முதலாளியின் மனதுக்குள் இருந்தது.  1977ல் நடக்க இருந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, அதுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுவது என்பதே முதலாளியின் மனதில் இருந்த ஆசை.

 சிறைக்குப் போய் வந்திருக்கிறார். தமிழ்தலைவர்களின் இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தியிருக்கிறார். பலருக்கு வேலை வாங்கித் தந்திருக்கிறார். போதுமான பணமும் மக்களிடத்திலான அறிமுகமும் நிறையவே இருக்கிறது. ஆகவே தேர்தலில் போட்டியிடலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்ததில் தவறு இல்லைத்தான். அவருக்குத்தான் அந்தமுறை போட்டியிட வாய்ப்பு கூட்டணியில் இருப்பதாக நகரில் பேச்சு இருந்தது. “நீங்கள்தான் எங்களது வேட்பாளர்” என்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் வாக்குக் கொடுத்திருந்தார். இருவரும் நெருக்கமாகவே இருந்ததார்கள்.

 இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழமையான போட்டியாளர் க.துரைரத்தினத்துக்கே போய்ச் சேர்ந்தது. ஐந்து தடவை போட்டியிட்டு நாலு தடவைகள் வென்று பாராளுமன்றம்  போய் வந்து கொண்டிருந்த க.துரைரத்தினத்தின் மேல் முதலாளிக்கு  மட்டுமல்ல, பலருக்கும் அதிருப்தி இருந்தது.  ஆனால் அதைப் பற்றி கூட்டணித் தலமை கண்டு கொள்ளவில்லை.

 அபிமானிகள்  தந்த ஆலோசனையில் ‘உண்மையே வெல்லும்’ என்று சுயேட்சையாக போட்டியிட முதலாளி முடிவு செய்தார். தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்துவிட்டு நகரத்தில் வடக்கே கடலைப் பார்த்துக் கொண்டிருந்த காந்தி சிலைக்கு மாலை போட்டு அபிமானிகளோடு ஊர்வலமாக வந்தார். அவர் நடத்திய தேர்தல் கூட்டங்களில் மேடைகளில் கதிரைகள் எதுவுமே கிடையாது. எல்லோரும் மேடைகளில் சப்பாணி போட்டே அமர்ந்தார்கள்.முதலாளியின் பேச்சும், செயலும் பலருக்கு பிடித்துப் போனது. 

 தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்று உதய சூரியன் சின்னத்தில் முதன் முதலாகப் போட்டியிட்டதாலும், இளைஞர்களிடையே அப்பொழுது இருந்த எழுச்சியும், மேடைகளிலே இரத்தப் பொட்டுகளை புன்னகையுடன் அமிர்தலிங்கம் வாங்கிக் கொண்டிருந்ததாலும், தேர்தலின் முடிவு முதலாளிக்கு முரணாகவே போனது. அந்தத் தேர்தலில் முதலாளியால் 13 சதவீத வாக்குகளே பெற முடிந்தது.

 தேர்தல் முடிவுக்குப் பிறகு அரசியல் என்பது தன்னைவிட பெரிய பெரிய முதலைகள் வாழும் இடம் என்பதை முதலாளி புரிந்து கொண்டார். வியாபாரம், ஆன்மீகம் இரண்டும் தனக்குப் போதும் இனி அரசியலில், அடிதடிகளில் எல்லாம் இறங்க முடியாது என்று ஒதுங்கி இருந்தவரை மீண்டும் பிரச்சினை தேடி வந்தது.

 தனது கட்டிடத்தின் மேல் தளத்தில் இளைஞர்கள் கராட்டி பழகுவதற்கென முதலாளி இடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தார். ரட்ணசோதி என்பவரே அந்த கராட்டி வகுப்பை நடத்திக் கொண்டிருந்தார். இந்த ரட்ணசோதிதான் பின்னாளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் கராட்டி சொல்லிக் கொடுத்தவர்.“போராளிகளுக்கு முதலாளியின் கட்டிடத்தில் பயிற்சி நடக்கிறது” என யாரோ ஒருவர் மொட்டைக் கடுதாசியை புலனாய்வுத்துறைக்கு எழுதிப் போட, ஒருநாள் கட்டிடத்தைச் சுற்றி  நிறைய அதிரப்படை. 

 அதில் இருந்து ஒருவாறு தன்னைக் காப்பாற்றிக் கொண்டாலும் கட்டிடத்தின் தெற்குப் பக்கமாக இருந்த அச்சகத்தால் அவருக்குப் பிரச்சனை வந்தது. அந்த அச்சகத்தின் உரிமையாளரின் தம்பிதான் கிட்டு என்கிற கிருஷ்ணகுமார். ஒரு இரவு அதிரடிப்படை இராணுவத்துடன் வந்து அச்சகத்தை தீ வைத்து முற்றாக அழித்து விட்டுப் போயிற்று. இதற்குள் மாணவர் பேரவை  பகலிலேயே  கட்டிடத்தின் மேற்குப் பக்கமாக இருந்த இலங்கை வங்கியை கொள்ளை அடித்து காவலுக்கு நின்ற ரிசேர்வ் பொலிஸை சுட்டுக் காயப் படுத்திவிட்டும் போனது. 

 கட்டிடத்தின் மேலே கராட்டிப் பிரச்சினை, தெற்கே அச்சகப் பிரச்சினை, மேற்கே வங்கிக் கொள்ளை. முதலாளிக்கு ஒன்று விளங்கிவிட்டது அரசியலும், வியாபாரமும் இனிவரும் காலங்களில் தனக்கு சரிப்பட்டு வராது என்று. அரசியலும், வியாபாரமும் காலை வாரிவிட  அடுத்து அவரது கையில் இருந்தது ஆன்மீகம் மட்டுமே. இவ்வளவு பிரச்சினைகளுக்குள் முதலாளி சிக்குண்டு இருக்கையில் அவரது மகன் போராட்டக்குழுவில் போய் சேர்ந்து விட்டான்.

 இந்திய அமைதிப்படை  முற்று முழுதாக நகரத்தை ஆக்கிரமித்து இருந்த பொழுது, சமூகத்தில் மேல் நிலையில் இருந்தவர்களோடு அவர்கள் தங்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் தொடர்பில் முதலாளியும் இருந்தார். முதலாளி இந்தியப்படைக்கு, போராளிகளைப் பற்றி தகவல்கள் கொடுக்கிறார் என்று யாரோ புண்ணியவான் கதையைக் கிளப்பிவிட முதலாளியின் நிலை கவலைக்கிடமாகிப் போனது. வெளி நடமாட்டத்தை குறைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார். 

 முதலாளிக்கு வேண்டிய ஒருவர் காலமாகிப் போன பொழுது தனது அஞ்ஞாதவாசத்தை துறந்து, அந்த மரண வீட்டுக்குப் போனார். அந்த மரண வீட்டுக்கு அவரது மகன் சைக்கிளில் வந்தான். போராடப் போன மகன் நீண்ட நாட்களுக்குப் பின் தன்னை வந்து சந்தித்ததில் முதலாளிக்கு மகிழ்ச்சி.

 “அப்பா உங்களோடை கதைக்கோணும். வாங்கோ” என்று சைக்கிளில் முதலாளியை ஏறச் சொன்னான்.

 “போட்டு இப்ப வந்திடுறன்” என்று முதலாளி சொல்லிப் போட்டு போனதால் உடலத்தை எடுக்காமல் மரணவீட்டில் முதலாளிக்காக எல்லோரும் காத்திருந்தார்கள்.  

 “என்ன போனவரை இன்னும் காணேல்லை” என்று காத்திருந்தவர்களுக்கு சற்று நேரத்துக்குப் பின் ஒரு செய்தி வந்தது,

 “முதலாளி செத்துப் போனார்”

 ஏற்கெனவே தோண்டியிருந்த கிடங்குக்குள் படுக்கச் சொல்லிவிட்டு, அவரை அவரது மகனே சுட்டான் என்று ஒரு கதையும், மகன் கூட்டிக் கொண்டு போனது மட்டும்தான், முதலாளியைச் சுட்டது  வேறொரு போராளி என்றும் இரண்டு கதைகள் ஊருக்குள் வந்தன.

 முதலாளி முதலாளி என்று மரியாதையாக இந்தப் பத்தியில் நான் எழுதியதால் அவரது பெயரை இங்கே நான்  விழிக்கவில்லை. தேர்தலில் வென்று பாராளுமன்றம் போகாவிட்டாலும் தனது பெயருக்கு முன்னால் MP என்ற எழுத்துக்களைக் கொண்ட அவரது பெயர் மு.பொ.வீரவாகு. 

 அவரைப் பார்க்க  விரும்பினால் இங்கே போய்ப் பாருங்கள். 

http://www.uharam.com/2018/01/19.html

 

கவி அருணாசலம்

01.05.2018

 

 

முத்து அக்கா

1 year 4 months ago

EF2_F8622-4_C92-4_E59-80_C6-316_E8_E2_F6

முத்து அக்கா 

 முத்து அக்காவிடம் கனக்க மஞ்சள் பைகள் இருந்தன. அழுக்கின் கறைகள் இல்லாமல் சிவப்பு நிறத்தில் ‘முருகா முருகா’ என்ற பெரிய எழுத்துக்களுடன் பளிச்சென்று தூய்மையாக எப்போதும் ஒரு மஞ்சள் பை அவர் கையில் தொங்கிக் கொண்டிருக்கும்.

  பால் வியாபாரம்தான் முத்து அக்காவின் குடும்பத்துக்கான ஆதாரம். எங்கள் தெருவில் அநேகமான வீடுகளுக்கு முத்து அக்காதான் பால் கொண்டு வந்து கொடுப்பார். சாரயப் போத்தல் - ‘முழுப் போத்தல்’, எலிபன்ற் பிராண்ட் சோடாப் போத்தல் - அரைப் போத்தல் என்ற அளவில் அவரது  பால் வியாபாரக் கணக்கு இருக்கும்.

 காலையில் ஆறு மணிக்கே எங்கள் தெருவிலுள்ள ஒவ்வொருவர் வீட்டு அடுப்பிலும் பால் கொதிக்க ஆரம்பித்து விடும். அதிலும் எங்கள் வீட்டில்தான் முதலில் பால் பொங்க ஆரம்பிக்கும். எங்கள் வீட்டிற்குத்தான் முத்து அக்காவின் அன்றாட முதல் பால் விநியோகம். அதற்குக் காரணம் நான்தான். என்னை அவருக்கு நிறையப் பிடிக்கும்.

 முத்து அக்காவிற்கு இரண்டு பெண்பிள்ளைகள். மூத்தவள் பெயர் ராணி. இரண்டாமவள் கிளி. கிளி பிறந்த சில நாட்களில் கணவன் இறந்து போக, பிள்ளைகளை வளர்த்தெடுக்க மாடுகளை வாங்கி பால் வியாபாரத்தைத் தொடங்கினார். அந்தத் தொழிலில் அவர் காட்டிய நேர்மை அவரது வியாபாரத்தை  பெரிதாக்கி விட்டிருந்தது. யாரிடமும் தங்கியிருக்காமல் நேரடியாக அவரே எல்லா வீடுகளுக்கும் போய் பால் விநியோகித்து அளவளாவிப் போவதால் தாய்க்குலங்களுக்கு அவரை நிறையப் பிடித்துப் போயிருந்தது.

 தனக்கு ஆண்பிள்ளை இல்லாததால், என்னை அவர் மனதளவில் தன் பிள்ளையாக தத்தெடுத்திருக்க வேண்டும். அப்பொழுது எனக்கு வயது ஏழு. உரிமையோடு என்னை ‘சின்னவன்’ என்றே முத்து அக்கா அழைப்பார். “சின்னவன் எழும்பிட்டானே?” என்ற அவரது குரலே பல காலைகளில் என்னைக் கண் விழிக்க வைத்திருக்கிறது. ஐஞ்சு நிமிசமாவது என்னுடன் இருந்து கதைத்து விட்டே எங்கள் வீட்டை விட்டுப்  போவார். மாதம் முடிய பால் வாங்கிய பணத்தை அம்மா கொடுக்க மறந்து போனாலும் கூட முத்து அக்கா அதைப் பற்றிக் கேட்கவே மாட்டார்.

 “நான்தான் மறந்து போனன். நீயாவது கேட்டிருக்கலாம்தானே?” என்று அம்மா முத்து அக்காவைக் கேட்டால்,

 “சின்னவன் குடிக்கிற பாலுக்கு கணக்கெதுக்கு?” என்பது அவரது பதிலாக இருக்கும்.

 ஒருநாள் முத்து அக்காவின் வரவு நின்று போய்விட்டது. வீட்டுக்கான பால் கூட வேறொரு இடத்தில் இருந்துதான் வந்தது. கூடிக் கூடிக் கதைத்தவர்களின் வாயில் இருந்து “முத்து” என்ற வார்த்தை அடிக்கடி உதிர்ந்து கொண்டிருந்தது. கதைப்பவர்கள் நடுவே ‘சிறுவன்’ என்று எனக்கு இடம் கிடைக்கவில்லை. அவர்கள் பேசும் போது சிலவேளைகளில் அவர்களின் குரல்கள் ஆரோகணத்தில் வரும். அப்பொழுது கிடைக்கும் வார்த்தைகளை எல்லாம் எடுத்துக் கோர்த்துப் பார்ப்பேன். “வெறி, அடி, கொலை, பொலீஸ் என்று நான்  சேர்த்த வார்த்தைகளை அந்த வயதில் என்னால் இணைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் முத்து அக்காவுக்கு ஏதோ நடந்துவிட்டது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

 என்னுடன் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த தேவராஜன் முத்து அக்கா வீட்டுக்கு அயலில்தான் இருந்தான். அவன்தான் என்ன நடந்தது என்பதை எனக்குச் சொன்னான்.

 எங்கள் நகரத்து பெரிய முதலாளிதான் முத்து அக்காவின் சகோதரியைத் திருமணம் செய்திருந்தார். பரம்பரைச் சொத்தை விற்பதில் முதலாளிக்கும் முத்து அக்காவிற்கும் இடையில் பல காலங்களாக அனுமார் வால் போல் இழுபறி நீண்டு கொண்டே இருந்தது. பிரச்சனையை முடித்து, சொத்தை விற்று, பணத்தைப் பார்க்க எல்லாவிதமான வியாபார தந்திரங்களையும் முதலாளி செய்து பார்த்தும் காரியம் நடைபெறவில்லை.

 இங்கே முதலாளியைப் பற்றி  கொஞ்சம் சொல்லிவிட்டு விசயத்துக்கு பிறகு வருவது நல்லது என்று நினைக்கிறேன்.

 முதலாளிக்கு வியாபாரம் மட்டுமல்ல அடிதடியும் நன்றாக வரும். அவருக்கு ‘சண்டியர்’ என்ற பட்டமும் இருந்தது. ‘அஞ்சேன்’ என்பது அவரது சுபாவம். `வணங்காமுடி´ என்பது அவரது இறுமாப்பு. பிரச்சனை என்று வந்தால் முதலில் பேசிப் பார்ப்பார் சரிவரவில்லை என்றால் சண்டிக்கட்டுடன் களத்தில் குதித்து விடுவார். போதிய அடியாட்கள், நகரத்தின் காலிகள் என்று ஏகப்பட்டோர்கள்அவரைச் சுற்றி ஒரு வட்டம் அமைத்திருந்ததால் அவர் தன் பாதுகாப்புக்கென்று பிரத்தியேகமாக நாய் ஒன்றும் வளர்க்க வேண்டிய தேவை இருக்கவில்லை. கொஞ்சமாக இவருடன் சத்தமாக பேசிய விதானையார்  ஒருவர் சூடு விழுந்து ஒருநாள் செத்துப் போயிருந்தார். சற்றுக் கவனியுங்கள் இது போராட்டத்துக்கு முந்திய காலம். 

 சுட்டது யாரென்று மன்றில் நின்று சொல்ல எவருமே முன் வராததால் விதானையார் மரணம் சட்டத்தின் பார்வையில் மர்மமாகவே போயிற்று. இப்பொழுது முதலாளியின் தன்மை எப்படியானது என்பது ஓரளவுக்கு  உங்களுக்குப் புரிந்திருக்கும்.

 சரி இனி முத்து அக்கா விடயத்துக்கு வருவோம்.

 அன்று மதியம் சாப்பிட்டுவிட்டு திண்ணையில் சற்று அயரலாம் என்று படுத்திருந்த முத்து அக்காவை வீட்டின் தகரப் படலையில் இருந்து வந்த சத்தம் திடுக்கிட்டு எழ வைத்தது. தகரப் படலையை உதைத்துத் தள்ளிக் கொண்டு ஒரு நடுத்தர வயது ஆண் வீட்டு முற்றத்தில் வந்து நின்றான். வந்தவனின் தள்ளாட்டத்தை விட அவன் நிர்வாணமாக நின்றதுதான் முத்து அக்காவை அதிக திகைப்புக்குள்ளாக்கியது.

 “உங்களுக்கு அவ்வளவு திமிரோடி. இண்டைக்கு.... இண்டைக்கு இப்ப... இப்பவே உங்கடை திமிரை அடக்கிறன். வாங்கோடி வெளியாலை”

 ஒலிபெருக்கி கூட அவனது சத்தத்துக்கு நேர் நிற்காது.

 சாரய வெறியோடு அம்பு ஒன்று அம்மணமாக எய்யப் பட்டிருக்கிறது என்பது முத்து அக்காவுக்கு விளங்கி விட்டது. 

 அநேகமான ஆண்கள் வேலைக்குப் போய்விட்டதால், அந்த மதிய நேரம் ஊரில் பெண்கள்தான்  வீடுகளில் இருந்தார்கள். வெறியில் சுதி தவறி, செந்தமிழில் வந்த ஒரு ஆணின் குரலைக் கேட்டவுடன், ஓட்டுக்குள் தலையை உள் இழுத்துக்கொண்ட ஆமைகள் போல ஊர்ப் பெண்களின்  தலைகள் காணாமல் போயின.

 முத்து அக்காவின் அயல் வீடுகள் எல்லாம் யன்னல்களை மூடி விட்டு இடுக்குகளுக்குள்ளாலே விடுப்புகள் பார்க்கத் தொடங்கி விட்டன. உதவிக்கு யாரும் வரப் போவதில்லை. குஞ்சுகளைக் காக்க தாய்க் கோழி தயாரானது.

 ராணியையும், கிளியையும் விழுந்திருந்த படலைக்குள்ளாலே  வீட்டுக்கு வெளியே ஓடச் சொல்லிவிட்டு, முத்து அக்கா வந்தவனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.

 “ஆரடா நீ? ஆம்பிளை இல்லாத வீட்டுக்குள்ளை வந்து சண்டிதனம் காட்டுறாய். தெரியுமடா உன்னை யார் அனுப்பினதெண்டு. தைரியம் இருந்தால் அவனை நேரே வரச் சொல்லடா”

 முத்து அக்கா நினைத்தது நடந்து கொண்டிருந்தது. அவனது கவனம் முத்து அக்காவின் பக்கம் திரும்பி இருந்ததால் படலையை நோக்கி ஓடும் ராணியும், கிளியும் அவனது கண்களில் படவில்லை. ஆனால் அவர் நினைக்காத ஒன்று நடந்தது.

 ராணி படலையைத் தாண்டி ஒழுங்கைக்குள் ஓடிக் கொண்டிருந்தாள். 

கிளியோ தாயைப் பார்த்து, “அம்மா வாங்கோ... நீங்களும் வாங்கோ.. ஓடிவாங்கோ.. “ என்று தன் கவனத்தை தாயில் வைத்துக் கொண்டு, பின்புறமாக ஓடியதில் நிலை தடுமாறி தரையில் விழுந்தாள்.

 விழுந்தவள் எழும்ப எத்தனிக்கும் போது அவள் முன்னாள் நிர்வாணமாக அவன் நின்றான். தள்ளாட்டத்தோடு நின்றவன் அப்படியே கிளி மீது விழுந்து விட்டான். தன் மேல் விழுந்திருந்த அவனை தள்ளிவிட்டு எழந்துவிட அவளுக்கு ஏது பலம்? நிர்வாணமாக தன் மேல் படுத்திருக்கும் ஆண், அவளை தரையை விட்டு அசையவிடாமல் அழுத்தி இருக்கும் அவனது பாரம் எல்லாம் அவளுக்கு பெரிய அதிர்ச்சியாக வே இருந்தன..

5968_F71_E-_B268-4_C9_B-8074-36_F13_ABC9

 

முத்து அக்காவின் கையில் இப்பொழுது உலக்கை இருந்தது. தன் மகளுக்கு அடி பட்டு விடக் கூடாது என்று மிகக் கவனமாகப் பார்த்துப் பார்த்து அவனை உலக்கையால் அடித்துக் கொண்டிருந்தார். அடியின் வேதனையில் கிளியை விட்டு விட்டு தரையில் அவன் உருண்ட போது அவனது முழங்காலின் சில்லை குறிவைத்து கடைசி அடியைப் போட்டு,  உலக்கையை எறிந்து விட்டு,  “இனி உன்னாலை எழும்பி நடக்கேலாது. உன்னை அனுப்பினவன் வந்துதான் உன்னைத் தூக்கிக்கொண்டு  போகோணும்” சொல்லிக் கொண்டே கிளியை அழைத்துக் கொண்டு ராணியைத் தேடுவதற்காக ஒழுங்கைக்குள் இறங்கினார். கிளிக்கு இன்னமும் அதிர்ச்சியாக இருந்தது. வெறித்துப் பார்ததபடியே தாயோடு நடந்து கொண்டிருந்தாள்.

 அடிபட்டவன் அன்று மாலை ஆதார வைத்தியசாலைக் கட்டிலில் படுத்திருந்தான். அவனிடம் பொலீஸ்  வாக்கு மூலம் எடுத்துக் கொண்டிருந்தது. 

 “அப்பாவியான என்னை தாயும், மகளும் சேர்ந்து  உலக்கையாலை அடிச்சுப் போட்டாங்கள்” என்று திரும்பத் திரும்ப கிளிப்பிள்ளையைப் போல் அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

 அடுத்த நாள் காலையில் அவன் வைத்தியசாலைக் கட்டிலிலேயே செத்துப் போயிருந்தான்.

 பலமாகத் தாக்கப் பட்டதால் மரணம் நிகழ்ந்திருக்கிறது என வைத்திய அதிகாரி பொலிஸுக்கு அறிக்கை கொடுத்தார்.

 "காலில் அடிபட்டதுக்காக ஒருவன் செத்துப் போவானா?”  அக்கம் பக்கம் பார்த்து ஊரில்  மிக அவதானமாக பலரது கேள்வி ஒலித்தது.

 “காசு விளையாடிட்டுது. ராவோட ராவா ஊசியைப் போட்டு ஆளின்ரை கதையை முடிச்சிட்டாங்கள்” இப்படியும் ஒரு கதை ரகசியமாக இருட்டுக்குள்ளே உலா வந்தது.

 மரண விசாரணை அதிகாரி விசாரணையில்  “கொலை” என எழுதிவிட்டு, உடலை உறவினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அன்று மாலையே அவசர அவசரமாக அவனது உடல் தகனம் செய்யப் பட்டு விட்டது.

 கொலை செய்த  குற்றத்துக்காக முத்து அக்காவும், கிளியும் கைதாகினார்கள்.

 ”தாய்க்கும் மகளுக்கும் 14 நாட்கள் றிமான்ட்” நீதிபதி சொன்னார்

 ஒவ்வொரு வழக்குத்தவணையிலும் மேலும் மேலும் இரண்டு கிழமைகள் தடுப்புக்காவல் விசாரணை என அதிகரித்துக் கொண்டே போனது. வழக்கின் காலங்கள் நீண்டு கொண்டிருந்தன. முத்து அக்காவினால் துன்பங்களில் இருந்து மீண்டு வர முடியவில்லை. வழக்குச் செலவு கட்டுக்குள் அடங்காமல் அவரை தொல்லைப் படுத்திக் கொண்டிருந்தது.

 சில வருடங்கள் கழித்து நண்பன் ஒருவனோடு வீட்டு வாசலில் நின்று நான் கதைத்துக் கொண்டிருந்தேன்.

 “சின்னவா”

 முத்து அக்காவின் குரல். திரும்பிப் பார்த்தேன்.

 அவர் கையில் பளிச்சென்றிருக்கும் மஞ்சள் பை இல்லை. உடையில் கூட சுத்தம் குறைந்திருந்தது. பக்கத்தில் அவரது மகள் கிளி நின்றாள். அவளது பார்வை எங்களை விடுத்து  வானத்தை நோக்கி இருந்தது. யாரையும் பார்ககவோ, பேசவோ அவள் விரும்பவில்லை என்று தெரிந்தது.

 “சின்னவா வளந்திட்டாய். மீசை எல்லாம் முளைக்க ஆரம்பிச்சிட்டுது. பெரிய ஆம்பிளை ஆயிற்றாய்.” அவரின் குரல் பாசத்தோடு ஒலித்தது.

 என்ன நினைத்தாரோ, அவரது குரல் திடீரென சோகமானது. “ஏன்டா சின்னவா இந்த முத்து அக்காவை மறந்து போட்டியே?”

 “இல்லை” என்று வாய் திறந்து ஏனோ நான் சொல்லவில்லை. ஆனால் இல்லை என்ற அர்த்தத்தில் வேகமாக தலையை மட்டும்  ஆட்டினேன்.

 “தெரியும் நீ என்னை மறக்க மாட்டாய் எண்டு. முத்து அக்கான்ரை நிலமைதான் இப்பிடி ஆகிப் போச்சு. பார் கிளியை. அவளுக்கும் செய்யாத வைத்தியமில்லை. பேந்த பேந்த முளிச்சுக் கொண்டு இருக்கிறாள். இந்தக் கோலத்திலை இவளைப் பாத்திட்டு ஆர்தான் கலியாணம் கட்டப் போறாங்கள். எப்பிடித்தான் இவளைக் கரை சேர்க்கப் போறனோ?”

 முத்து அக்காவை நான் அரை நூற்றாண்டாக மறக்காமல் இருக்கிறேன். அதனால்தான் இதை எழுதுகிறேன்.

இன்று முத்து அக்கா உயிரோடு இல்லை. கிளியை  கல்யாணம் செய்ய எவருமே முன்வரவில்லை. அவள் தனது நாற்பதாவது வயதில் செத்துப் போனாள்.

 அந்த முதலாளி?

 சொல்கிறேன்

 

 கவி அருணாசலம் 

04.05.2018

யார் இந்த காளிதாசன்! (பாகம் 1)

1 year 4 months ago
காளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை  இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. இணையத்தில் சங்கப்பாடல்களைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் அவர் இயற்றிய ஓரிரு பாடல்களை வாசிக்க முடிந்தது, அதனூடே அக்கவிஞனின் வரலாற்றையும் அவரின் கவித்தொகுப்புகளைப் பற்றிய தேடலும் தொடங்கிற்று.
 
pic1.jpg
 
அத்தகு கவிஞனின் சிறப்பை உணர்த்தும் சில எடுத்துக்காட்டுகளை பின்வருமாறு காணலாம்;
 
“கற்கும்போதே
இதயத்தில் இனிக்குமாம் இரு வித்தைகள்…
ஒன்று கலவி
மற்றொன்று காளிதாசனின் கவிதை….”
 
“காளிதாசனின் கவிதை
இளமையான வயது
கெட்டியான எருமைத் தயிர்
சர்க்கரை சேர்த்த பால்
மானின் மாமிசம்
அழகிய பெண் துணை
என் ஒவ்வொரு ஜன்மத்திலும்
இதெல்லாம் கிடைக்க வேண்டுமே!”.
 
காளிதாசன் வெறும் வார்த்தை ஜாலம் நிகழ்த்தும் கவி மட்டுமல்ல, பன்முக அறிவுத்திறன் உடைய ஒரு மேதையாவார். அவருடைய காவியங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  அவருடைய கவிதைகளின் பாதிப்பு அதற்கு பின் வந்த பல்வேறு கவிஞர்களின் காவியங்களிலும் நிச்சயம் காண முடிகிறது.
 
காளிதாசனுடைய உவமானங்கள் ஒப்பற்றவை, அழகிற் சிறந்தவை. “உபமான: காளிதாஸ:” என்றே சிறப்பித்துக் கூறுவார்கள்.
 
உதாரணத்திற்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவருடைய பாடலை இங்கு காண்போம்;
 
 
“மழையின் முதல் துளிகள்
அவளின் கண் இமைகளில்
சிறிது தங்கின…
பின் அவள் மார்பகங்களில்
சிதறின…
இறங்கி அவள் வயிற்று
சதைமடிப்பு வரிகளில்
தயங்கின…
வேகுநேரத்திற்கு பின்
அவள் நாபிச் சுழியில்
கலந்தன…”
 
இனிவரும் நாட்களில் அவரியற்றிய கவிதைத் தொகுப்புகள், காவியங்களை வாசித்து இணைய நண்பர்களுடன் இவ்வலைப்பூவில் பகிர்ந்துகொள்கிறேன்.
 
தொடரும்..
 
நன்றி,
அருள்மொழிவர்மன்
(www.entamilpayanam.blogspot.com)

இப்பிடித் தான் நடந்தது

1 year 4 months ago

அழைப்பு மணி ஒலித்த பத்தாவது நிமிடம் கதவு திறக்கிறது. புலநாய்வில் கைதேர்ந்த சீலனிற்கு ஒரு தடவைக்கு மேல் மணி ஒலி எழுப்பும் அவசியம் இருக்கவில்லை. உள்ளே அவர்கள் இருக்கிறார்கள் என்பதும் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதும் மணியினை அமிழ்த்து முன்னரே அவனிற்குத் துல்லியமாய்த் தெரிந்திருந்தது. அதனால் கதவு திறக்கும் வரை பொறுமையாய்க் காத்திருந்தான்.


நிலா கதவினைத் திறந்தாள். பம்பாய் வெங்காயத்தின் மூன்றாவது அடுக்கின் நிறத்தில் அழகிய மென்மையான மேற்சட்டை அணிந்திருந்தாள். வெள்ளி நிறத்தில் பாதணிகள் அணிந்திருந்தாள். அவள் தொப்புளிற்கும் பாதணிகளிற்கும் இடைப்பட்ட பகுதியில் எந்த ஆடையும் இருக்கவில்லை. விமான ஓடுதளத்தில் பாதைதெரிவதற்காகப் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள் போன்று, அவளது பெண் குறிக்கு வழிகாட்டுவது போன்று அவளது பூப்பின் முடி சீராகப் பராமரகிக்கப்பட்டு மற்றைய இடங்களில் முடி அகற்றப் பட்டிருந்து. நிலாவின் முகத்தில் மழையில் நனைந்த நந்தியாவட்டை மலரின் குளிர்ச்சி இருந்தது. ஆனால் மழை ஓய்ந்த பின்னர் சிலிர்க்கும் இலை நீர் போன்று கண்ணீர் முற்றாகக் காயவில்லை.


பெற்றோள் தீர்ந்துவிட்டது, பெற்றோள் சாவடி செல்லும் வரைக்கான பெற்றோள் கிடைக்குமா எனக் கேட்பதற்காகத் தான் வந்ததாக, தெருவில் நின்ற தனது காரைக் காட்டி சீலன் கேட்டான். தேனீர் பருகுகிறாயா என நிலா கேட்டாள். முன்னறிமுகம் சற்றுமற்ற நிலா இத்தனை இயல்பாய் உபசரித்தது சீலனின் மூளையில் பதியவில்லை. அவளிற்கு அவனைத் தெரியாதிருக்கலாம் ஆனால் அவன் அவளைக் கடந்த மூன்று மாதங்களாக வேவு பார்க்கிறான். ஆதலால் பரிட்சயமானவளிடம் தேனீர் சம்மதித்தான்.


மாளிகையின் கூடத்தில் போடப்பட்டிருந்த விலையுயர் கதிரையில் அமர்ந்து சுவரில் இருந்த சித்திரத்தைச் சீலன் பார்த்துக்கொண்டிருந்தான். தேனீருடன் வந்தவள் அவனருகில் அமர்ந்து தேனீர் பரிமாறினாள். ஆடையற்றிருந்த அவளது பாகங்கள் எவர் கவனத்தையும் பெறவில்லை.

பென்ச்சமின் கண்ணைக் கசக்கிக் கொண்டு தூக்கம் முறித்தபடி கூடத்திற்கு வந்தான்.  சீலன் பெற்றோள் கேட்டு வந்திருப்பதாக நிலா சொன்னாள். வீட்டின் பின் பகுதியில் காலடி ஒலி கேட்டது. ஒரு ஆணும் பெண்ணும் கூடத்திற்குள் வந்தார்கள். அவர்கள் போதையில் இருந்தார்கள். நாற்பதுகளில் வயதிருக்கும். பெண் வெள்ளை நிறத்தில் மிருதுவான விலையுயர் ஆடை உடுத்தியிருந்தாள். அவள் ஒரு சீனப் பெண். அவன் குள்ளமாக இருந்தான். வெள்ளை முடி சவரம் செய்யப்படாது அவனது முககத்தில் இரு நாளின் கதைசொல்லிக் குத்தி நின்றது. குட்டை நரைமுடி அவன் மண்டையில். அவனது கண்களில் சோபை இல்லை. தனிமை அவற்றுக்குள் படர்ந்திருந்தது. சீனப் பெண்ணும் வந்தவனும் தம்பதியர் என நம்ப முடியாத தம்பதியராக இருந்தனர். சீலனிற்கு அவர்களைத் தெரியாது.


"எங்கிருந்து வருகிறாய்" என பென்ச்சமின் சீலனைக் கேட்டான். தான் ஒரு வியாபாரப் பயணத்தில் பாதை தவறவிட்டதனால் இவ்வழி செல்வதாயும், கன தூரம் பெற்றோல் நிலையமெதுவும் வரிவில்லை எனவும் கூறினான். "நீ கனடாவிற்குப் புதியவனா, ஆங்கிலம் தற்போது தான் கற்கின்றாயா" என்றான் பென்ச்சமின். சீலன் அவனிடம் உங்கள் தொலைபேசியில் ஒரு அழைப்பை மேற்கொள்ளலாமா என்றதும் பென்ச்சமின் சீலனிடம் தன் கைப்பேசியினைக் கொடுக்க, அதை வாங்கிய சீலன் இலக்கங்களை அழுத்துகிறான். பின் தமிழில் உரத்து யாருடனோ பேசத் தொடங்கினான்.


“ரெண்டுபேரும் நிக்கினம். ஆரோ ஒரு புதுச் சப்பைப் பெட்டையும் என்னண்டு சொல்லமுடியா ஒருத்தனும் எதிர்பாராமல் நிக்கிறாங்கள். போட்டுட்டு வெளிக்கிடவா” என்று கூறி, பதிலைக் கேட்ட பின்னர் தொலைபேசியினை பென்ச்சமினிடம் கொடுக்கிறான். பென்ச்சமினின் முகத்தில் வியர்வை ஊற்றெடுத்தது. அருகில் வந்த மற்றையவன் பென்ச்சமினின் கைப்பேசியினை வாங்கிப் பார்த்துவிட்டு, “இவன் சும்மா இலக்கங்களை அழத்தியிருக்கிறான் ஆனால் கோல் அடிக்கேல்ல. சும்மா நடிச்சிருக்கிறாண்ட்டா” என்கிறான். சீனப் பெண் கதிரையில் அமர்ந்து கொள்ள, பென்ச்சமினும் மற்றையவனும் சரளமாய்த் தமிமிழில் உரையாடுகிறார்கள். பின்:


“யார் நீ. உனக்கு என்ன பிரச்சினை. யுhரைப் போடப் போறாய். ஏங்க துவக்கு வச்சிருக்கிறாய்” என்று அடுக்கடுக்காய் பென்ச்சமின் சீலனைப் பார்த்துக் கேட்கிறான். சீலன் மற்றையவனைப் பார்த்து "உனது பெயரென்ன" என்கிறான். யாரும் ஆயுதம் எதனையும் எடுக்காதபோதும், சீலன் துப்பாக்கியினைப் பிடித்திருப்பது போன்ற தோரணையில் சீலனின் கேள்விகளிற்கு மற்றையவன் கண்ணுங்கருத்துமாய் ஒரு கதையினையே பதிலாககச் சொன்னான்:

"மட்டக்களப்புச் சொந்த ஊர். கில்பேர்ட் றையன் என்ற்ர பேர். அம்மா தமிழ். அப்பா பேகர். பின்ன நாங்கள் தமிழ் தான் கதைக்கிறது. அங்கையிருந்தால் இயக்கங்களில சேர்தாலும் எண்டிட்டு அனுப்பி விட்டாங்கள். பல நாடு அடிபட்டு பிறகு கனடா வந்தன். இஞ்சதான் இவவைக் கண்டது. இவ இஞ்ச தான் பிறந்த மூண்டாம் தலைமுறை. சைனாப் பாசை தெரியாது. இங்கிலிசில தான் நாங்கள் கதைக்கிறது. நாலு பிள்ளையள். மூத்த மூண்டும் பெட்டையள். கடைசி பெடியன். பெட்டையள் தாயோட தான் நெருக்கம். அவளவை என்னோட கொஞ்சம் தூரமாய்த் தான் இருக்கிறாளுவள். பின்ன கடையிப் பெடியரோட தான் நான் கதைக்கிறது. அவரிற்குக் கொஞ்சம் தமிழ் விழங்குது."


சீலனின் இதயத்தில் இரண்டுதலைமுறைத் தனிமை நுழைந்து அழுத்தியது. மட்டக்களப்புத் தமிழிச்சி பேகரைக் கட்டிப் பட்ட தனிமையும், கில்பேட் சீனாக்காறியைக் கட்டிப்பட்ட தனிமையும் சீலனிற்குள் உணரப்பட்டது.


நிலா தேனீருடன் உண்பதற்கு கேக் கொண்டு வந்து வைத்தாள். அவள் தொப்புள் முதல் பாதம் வரை ஆடையின்றி இருந்தமை எவரின் கவனத்தையும் பெறவில்லை.

“யார் தம்பி நீங்கள். என்ன நோக்கத்தில வந்திருக்கிறியள்” பென்ச்சமின் மீண்டும் கலவரத்துடன் சீலனைக் கேட்டான். சீலன் உறைந்த பார்வையினை பென்ச்சமின் மீது பொருத்தி நிலைகுத்தியிருந்தான்.

நிலா எழுந்து மீண்டும் சமயலறை நோக்கிச் சென்றாள். அவளது வலது பிட்டத்தில் குதிரை பச்சை குத்தப்பட்டிருந்தது.


ஒரு தோட்டா பெனச்சமனின் தலை புகுந்து வெளியேறி கூடத்தின் சுவரில் இருந்த சித்திரத்தின் கண்ணாடியினை நொருக்கியது.

நிலா நில்லாது நடந்து கொண்டிருந்தாள். சீலன் கதைவைத் திறந்து வெளியேறினான். கில்பேட் “பின்ன இவன் யார்? ஏன் சுட்டான்” என்று திருப்பத்திருப்ப ஈனக்குரலில் கேட்டபடி கதிரையில் அமர்ந்திருந்தான். சீனப் பெண், அலறியபடி கூடத்தைச் சுற்றிச் சுற்றிச் செக்குமாடு போல் ஓடிக் கொண்டிருந்தாள். 

மீண்டும் நாவல் முயற்ச்சியில் - வ.ஐ.ச.ஜெயபாலன்

1 year 4 months ago

MY NOVEL "KALSSUVADU"
”காலச்சுவடு” நாவல்
.
பாதியில் கைவிடப்பட்ட எனது காலச்சுவடு நாவல் பிரதியை நீண்டகாலத்தின் பின்னர் 
மீண்டும் தூசி தட்டி எடுத்து திருத்தி எழுத ஆரம்பித்திருக்கிறேன். அந்த நாவலுக்கு முகவுரையாக நான் எழுதியவற்றை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
.
காலச்சுவடு
வ.ஐ.ச.ஜெயபாலன்
,

காட்டை வகிடு பிரிக்கும்
காலச் சுவடான 
ஒற்றையடிப் பாதை
- இளவேனிலும் உளவனும் 1970
.

நூற்றாண்டுகாலங்களாக நம் மூதாதையர்கள் வழி வழியாகச் சொல்லி வந்த போதைதரும் கதைகளால் என் மனசு நொதிக்கும் செந் திராட்சை மது ஜாடியாக நிரம்பி வழிகிறது. என் முன்னோர்களாலும் சகபாடிகளாலும் பல லட்சம் தடவைகள் ஏற்கனவே சொல்லப்பட்ட அந்தக்கதைகளை என் பங்கிற்கான கற்பனைகளுடன் பல்லாயிரம் தடவைகள் என் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பிள்ளைகளுக்கும் சொல்லி இருக்கிறேன். அவர்கள் அந்தக் கதைகளை புத்தகமாக எழுதிவை எனச் சொல்வார்கள். சிலர் எழுது நாங்களே பதிப்பிக்கிறோம் என்று முன்வந்தார்கள். அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது என் நிலமை. 
.
நான்தான் கதை சொல்கிறேன் என்கிற பெயரில் அன்றாடம் சந்திக்கிற ஆண் பெண்களைக் கூட்டி வைத்துக்கொண்டு கதைகள் பேசிக்களிப்பதே வாழ்வாகக் கொண்டவனாச்சே. நினைவுவாக மீந்த கதைகள் என்கிற என்கிற என் பரம்பரைகளின் மதுச்சாடியைத் திறந்து சுற்றி இருபோருக்கு வார்த்து வார்த்துக் கொடுத்து நானும் அருந்திக் களிக்கிற பேரின்பப் போதைக்கு அடிமையாகி விட்டேனே. அந்த வடிவம் வேறு அல்லவா?.. 
ஊர் ஊராக கதை சொல்கிற எங்களுக்கு தனித்திருந்து எங்கோ இருக்கிற வாசகர்களுக்காக கதை எழுழுதுகிற போதையும் மனோபாவமும் வடிவமும் இலகுவில் வசப்பட்டுவிடாது. நிகழ் காலத்தைவிடுங்கள். நாங்கள் முடிந்துபோனபின்னர் எதிர்காலத்தில் நம்பரம்பரைகளின் கதைகளைத் தேடும் சந்ததிகளுக்காக எனக்கு சொல்லப்பட்டதும் நான் கண்டதுமான கதைகளை எழுதிவைக்கும் வெறியில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இருபது நாவல்களாவது பாதியில் கைவிடப்பட்டு குற்றுயிரும் குறை உயிருமாக கிடக்கிறது. காலச்சுவடும் அப்படிக் குற்றுயிராகக் கிடைக்கிற எங்கள் பரம்பரைகளின் கதைகள்தான். 
.
1820பதுகளில் யாழ்பாணத்தில் தீவிரப்பட்ட பெண்கல்விக்கான அமரிக்கன் மிசனறிகளின் போராட்டத்தைப் பற்றிய கதைகளை அக்கதைகள் ஆரம்பித்து சரியாக நூறு வருடங்களின் பின்னர் 
2020ல் என் தோழி ஒருத்தியிடம் சொன்னேன். 1820ல் உருவான படித்த யாழ்பாணத்துப் பெண்களின் கதைகளில்தான் ஆரம்பித்தேன். அந்த தோழியை ஈர்த்துவைத்திருந்த அந்தக் கதைகளை முடித்துவிட மனசு விரும்பவில்லை. அப்படியே முதலாம் உலகப்போர் இரண்டாம் உலகப்போர்காத்தில் யாழ்ப்பாணப் பெண்களின் கதைகள் அவர்களது மலேசியப் புலப்பெயர்வுக் கதைகள் என பல சந்திப்புகளை கதைகள் வளர்ந்தன. அதன் பின்னான சந்திப்புகளை தமிழர் எழுச்சிப் போராட்டத்தில் பங்காளிகளான பெண்களின் கதைகள் மேற்குலகிற்க்குப் புலபெயர்ந்த பெண்களின் கதைகள் நிறைவு செய்தன. 
,
பலநாட்க்கள் தொடர்ந்த எங்கள் சந்திப்புகளில் 1820பதுகளில் அமரிக்க மிசனைச் சேர்ந்த பெண்கள் போராடி மூட்டிய கல்வி வெளிச்சத்தில் உறைபனி உருகி ஆறாக பெருகியதுபோல மெல்ல மெல்ல அசைக்கபட்ட யாழ்ப்பாணத்துப் பெண்களின் வரலாற்றுக்கதைகள் மகத்தான போராட்டக் கதைகளாகும். அமரிக்க மிசன் பெண்களால் பற்றவைக்கபட்ட இந்த தீ பல சாதிய வர்க்க எல்லைகளைத்தாண்டி முஸ்லிம் பெண்களையும் எட்டிய சொல்லபடவேண்டிய கதைகளுக்கு கணக்கே இல்லை..

ஈழத் தமிழ் பெண்கள் பற்றிய கதைகளில் லியித்துப்போன அந்த தோழியியோ நான் அவற்றை ஒரு நாவலாக தொகுக்க வேண்டுமென வற்புறுத்தினார். கிடைத்த இரண்டு பென்பிள்ளைகளோடு 1824ல் திருமதி கர்ரியத் வின்ஸ்லோ உடுவில் முதலாவது பெண்கள் பாடசாலையை அமைத்தார். அந்த இரண்டு மாண விகளில் ஒருத்தியின் புனைவுக் கதையாக ஆரம்பித்து 2000 ஆண்டுவரைக்கும் ஏழு தலைமுறைகள் தொடரும் ஒரு நாவலை எழுதி முடிப்பதாக நான் வாக்களித்தேன். 
.
அந்த தோழியும் என்னை எப்படியும் எழுத வைத்து விடுகிறதாகக் கங்கணம் கட்டிக்கொண்டு விழுந்து விழுந்து உதவிகள் செய்தார். நிறைந்த தேடல்களோடு எழுத ஆரம்பித்த அந்தக்கதை 400 பக்கங்களோடு நின்று போயிற்று. சிலவருடங்கள் எழுது எழுது என்ற அந்த தோழி “நீ உருப்பட மாட்டாய். 
எதையும் முழுமையாய் எழுதி முடிக்கமாட்டாய்” என நொந்து உதறிவிட்டுப் போய்விட்டார். 
.
நான் எழுத முடியாமல் போனதற்கு மூன்று பெரும் விரக்திகள் காரணமாயிற்று என தோன்றுகிறது. சிறுவயசில் இருந்தே கதை கேட்பதிலும் ஊரைக்கூட்டிவைத்துக் கதை சொல்வதிலும் ஆற்றல் இருந்தது. அந்த வடிவமும் எனக்கு வாய்த்திருந்தது. தனிய ஒரிடத்தில் சிறிது உட்கார்ந்திருந்து முகம் தெரியாத வாசகர்களுக்காக கவிதைகளைக் காலத்தில் எழுத முடிந்தது. அதற்கான பொறுமையும் இருந்தது. . அது எனக்கு இனிப்பாகவும் இருந்தது. ஆனால் நெடுங்காலம் தொடர்ந்து உட்கார்ந்து நாவல் எழுதும் பொறுமை ஒருபோதும் என்னிடம் இருக்கவில்லை. கதைகளை எழுதுவதில் உள்ள போதையும் எனக்குப் பிடிபடவில்லை. இது ஒரு காரணமென்று நினைக்கிறேன். இரண்டாவது முக்கிய காரணம் போராட்டம் மெல்ல மெல்ல தோல்விப்பதையில் வழுக்கிச் சென்றமையாகும். மூன்றாவதாக என்னை முறித்துபோட்ட காரணம் 1970ல் இளவேனிலும் உளவனும் என்ற எனது கவிதைக்காக நான் உருவாக்கிய காலச்சுவடு என்ற படிமம் சிலை திருட்டுப் பாணியில் திருடப்பட்டதுதான். இதனால் காலச்சுவடு என நான் எழுதியபோதெல்லாம் நான் திருடனாக பார்க்கப்பட்டேன். அதுதான் கொடுமை. இதுபற்றி விரிவாக சொல்லவேண்டும்.
.
1983 இனக் கலவரத்துக்கு ஒரு மாதம் முன்னதாக என் ஜப்பானிய தோழியுடன் நாகர்கோவிலில் அந்த எழுத்துலக ஜாம்பவானை சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் இலங்கையில் பிரசுரிக்கப்பட்ட எனது சில கவிதைகளின் பிரதிகளை அவரிடம் கொடுத்தேன். முதல் வாசிப்பிலேயே எனது இளவேனிலும் உளவனும் கவிதை அவருக்கு பிடித்துப்போகிறது. காலச்சுவடு அற்புதமான படிமம் புதிய புனைவு என என்னை வெகுவாகப் பாராட்டிக் கொண்டாடினார். கால் நூற்றாண்டுகளின்பின்னர் எனது கவிதைகளையும் எழுத்துகளையும் காலச்சுவடு என்கிற தலைப்பில் தொகுக்க இருப்பதாக சொன்னேன். பின்னர் நான் இலங்கைக்கு சென்றுவிட்டேன். அதன்பின்னர் போராளி அமைப்புகளோடு சென்னைக்கு வந்தபோது அவரை மீண்டும் சந்தித்தேன். அப்போதும் காலசுவடு படிமம் பற்றி பேசினார். இலக்கிய சஞ்சிகைக்கு பொருத்தமான பெயர் என்று சொன்னார். அதற்க்கு நான் “கவிஞர்கள் சொற்களை புனைவது தமிழுக்காகவே. சிலர் தங்கள் பெயரில் பதிவு செய்து தனியுடமை ஆக்குவதற்கல்ல என சொன்னேன். அத்தோடு கால்நூற்றாண்டுகளின் பின்னர் என் கவிதைகளையும் கதைகலையும் கட்டுரைகளையும் காலச்சுவடு என்கிற பெயரில் தொகுக்கவுள்ளதாக சொல்லிவைத்தேன். 1987 அக்டோபரில் புலிகள் இந்திய இரானுவத்துடன் மோதலை ஆரம்பிக்கிற வரைக்கும் இந்தியாவில் இலங்கை தமிழர்களுக்குப் பாதுகாப்பான சூழல் இருந்தது. அதுவரை எனக்கும் சிக்கல் இருக்கவில்லை.

1987 - 1997 காலக்கட்டங்களில் மோதல் தீவிரபட்டு ஈழத் தமிழர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் அச்சுறுத்தப்பட்டிருந்த நான் நீதிகேட்க்க முடியாத காலத்தைப் பயன்படுத்தி அவர்கள் ”காலச்சுவடு” என்றபடிமத்தை திருடி தங்கள் பெயரில் தனி உடமையாகப் பதிவுசெய்து வியாபாரத்தையும் ஆரம்பித்துவிட்டனர். அச்சமான சூழலிலும் அவரது நண்பர்களூடாக என் எதிர்ப்பை தெரிவித்தேன். நீதிமன்றம் செல்லப்போவதாக நான் பேசத் தொடங்கிய காலங்களில் ” உன்னை இந்தியாவில் கால்வைக்க முடியாமல் பண்ணிவிடுவார்கள்.” என வாரிசின் ஆட்களால் எச்சரிக்கப்பட்டேன். 
இலஙகைத் தமிழர் இந்திய உறவு மோசமாக சீர்குலைந்திருந்த அந்த நாட்களில் எனக்கு போர்நிறுத்தத்துகான இராசதந்திரப் பணிகளே முக்கியமாக இருந்தது. அதனால் நான் மவுனமாக நேர்ந்தது. 
.
சில வருடங்களின் பின்னர் அந்த ஜாம்பவானுக்காக சாகித்திய அக்கடமி சென்னை புக் பொயிண்டில் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தது. முன்னரே சேதி சொல்லிவிட்டு அந்த விழாவில் நியாயம் கேட்க்க நான் சென்றேன். நுழையும் என்னைக் கண்டதுமே “காலச்சுவடு இவர் உருவாக்கிய படிமம்” எனக்கூறி சூழலின் நெருப்பை அவர் அணைத்தார். அன்று மாலை தோழி ஒருவர் வீட்டில்வைத்து தன் வாரிசின் தவறு என்று வருத்தம் தெரிவித்து சஞ்சிகையில் என் பேட்டியை வெளியிடுவதோடு நிகழ்ந்த தவறையும் செம்மைப் படுத்துவதாக வாக்குறுதி தந்தார். அந்த வாக்குறுதியும் காப்பாற்றப் படவில்லை. 
.
சோகம் இதுதான். பின்னர் வேறொரு கவிதையில் காலச்சுவடு என எழுதியபோது வாசித்த இளையவர்கள் “என்ன ஜெயபாலன் உங்களுக்குமா சொற்பஞ்சமா வேறொருவரின் படைப்பை ஏன் திருடுகிறீங்க” என கேட்டார்கள்”. இன்றுவரை கோலோச்சும் கயமையை நன்கு அறிந்திருந்தும் அறம் பற்றி உரத்துப்பேசும் தமிழக எழுத்துலக நண்பர்கள் யாரும் இதுவரை எனக்காக வாய்திறந்ததில்லை. 
.
சில வருடங்களின் முன்னம் எனது கவிதை தொகுப்பை ”காலச்சுவடு” என்கிற தலைப்பில் வெளியிட விரும்பினேன். பதிப்பக நண்பர் அது இன்னொருவரின் சொல் எனக்கூறி எனது விருப்பத்தை நிராகரித்தனர். இதனால் வேறு பெயரில் என் தொகுதியை போட நேர்ந்தது. எனக்கு இதுவரைக்கும் மாரடைப்பு வராத குறைதான். இந்த விரக்திதான் என் எழுத்தார்வத்தை முடக்கும் காலக் கொடுமையாய் இருக்கு. 
.
என்னை எழுது எழுது என்ற தோழ தோழியர்கள் எல்லோரும் சலித்து ஒதுங்கியபிறகு இப்ப முடிவுறாத என் நாவல்களில் ஒன்றான கலச் சுவட்டை மீண்டும் தூசிதட்டி எடுத்து எழுத ஆரம்பித்திருக்கிறேன். இப்ப எழுதீரரோ எழுதீரோ என்று உக்குவிப்பார் யாருமில்லை. ஆனாலும் 1820ல் யாழ்பாணத்து உடுவிலில் ஆரம்பித்து 2000ம் ஆண்டு கனடாவிம் குடியும் 180 வருடத்து மாறிவரும் பெண்களின் தலைமுறைகளை நான் கேட்ட வாழ்ந்த காலங்களின் சுவடாக மீண்டும் எழுத ஆரம்பிதிருக்கிறேன். எப்படியும் என் காலம் முடியுமுன் காலச்சுவடு எழுதி முடியும். எத்தனை அச்சுறுத்தல்கள் தடைகள் வந்தாலும் எனது நாவல் “காலச்சுவடு” என்னும் தலைப்பில் வெளியாகும்.

எங்கே அவன் தேடுதே சனம்

1 year 5 months ago

எங்கே அவன் தேடுதே சனம்

 அவரை எல்லோரும் நாட்டாமை என்றுதான் அழைப்பார்கள். மற்றவர்கள் அவரை நாட்டாமை என்று அழைப்பதில் அவருக்கு நிறைந்த மகிழ்ச்சி. கலியாண வீடா? சாமத்தியச் சடங்கா? பிறந்தநாள் விழாவா? இல்லை செத்த வீடா? எங்கள் நகரத்தில் தமிழர்களுடைய எந்த நிகழ்வானாலும் நாட்டாமையே பிரதம விருந்தினர்.

 புலம் பெயர்ந்து யேர்மனிக்கு வந்த காலத்தில் வேலை செய்வதற்கான அனுமதி எங்களுக்குக் கிடையாது. அப்படியான நிலையிலேயே நாட்டாமை, பூ விற்றுக் காசு சேர்த்தவர். பூ விற்பவர் என்பதால் அவரது பெயரோடு ‘பூ’ என்பது  அடைமொழியாயிற்று. அதாவது ‘பூ சபா’ என்றாயிற்று. சேர்த்த பணம், அதனால் வந்த அங்கீகாரம் அதோடு இணைந்த ஆணவம் எல்லாம் சேர்ந்ததால் காலம் செல்ல அவர் நாட்டாமை ஆகிப்போனார்.

 அதெப்படி பூ வித்து காசு சேர்க்கலாம் என்று நினைப்பீர்கள். சொல்லி விடுகிறேன். இந்தப் பூ விற்பனையை முதலில் அறிமுகப் படுத்தியவர்கள் புலம் பெயர்ந்து வந்த பாகிஸ்தானியர்கள். அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டவர்கள் நம்மவர்கள். மாலையில் ஆறு மணிக்குத் தொடங்கும் பூ விற்பனை நள்ளிரவில் முடிவடையும். ரோஜாப் பூக்களோடு ரெஸ்ரோறண்ட் உரிமையாளரிடம் போய் உள்ளே போக அனுமதி பெற வேண்டும். எல்லா ரெஸ்ரோறண்ட் உரிமையாளர்களும் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள் என்றில்லை. சில உரிமையாளர்கள் “இந்தப் பக்கம் வரக்கூடாது“ என்று துரத்தியும் விடுவார்கள். 

 ரெஸ்ரோறண்ட்டில்  சோடியாக அமர்ந்து உணவருந்திக் கொண்டிருப்பவர்களை அணுகி, முகத்தைப்  பரிதாபமாக வைத்துக் கொண்டு அதே நேரம் சிறு புன்னகையை உதட்டில் தவள விட்டபடி அவர்களிடம் பூக்களை நீட்ட வேண்டும். அப்படி பூக்களை நீட்டும் போது  „Gruss  Gott“  (கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்) என்று அன்போடு சொல்லவும் வேண்டும். உதட்டின் சிரிப்பிலும், உதிரும் வார்த்தையிலும், நிற்கும் பரிதாப நிலை கண்டும் உணவருந்திக் கொண்டிருக்கும் ஆண் பூவை வாங்கிக் கொண்டால் காசு பார்க்கலாம். பிறகு அந்தப் பூ ஆண் இடம் இருந்து பூவைக்கு கைமாறும். ஆணின் மனது மகிழ்வாக இருந்தால் அல்லது பெண்ணுக்கு விலாசம் காட்டும்’ மூட்’டில் அவன்  இருந்தால் பூவுக்கு நோட்டாக பணம் வரும். அப்படியில்லாது அவன் மனது ஏனோதானோ என்றிருந்தால் அதிகபட்சம் இரண்டு மார்க்குகள்தான் ஒரு பூவுக்கான சில்லறையாகக்  கிடைக்கும்.

 பூக்களை மொத்தமாக கொள்வனவு செய்தால், ஒரு பூவின் விலை 25 பெனிக். அதையே பூந்தோட்டத்தில் போய் நேரடியாகப் பறித்துக் கொண்டால் 10 பெனிக். பாகிஸ்தானியர்கள் மொத்தமாக கொள்வனவு செய்தார்கள். நம்மவர்கள் ஒருபடி மேலே போய் தோட்டத்திலேயே பறித்துக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் நாட்டாமை, பூக்களுக்கு ஏஜென்ட் ஆகி, தனக்கு தொழில் கற்றுத்தந்த பாகிஸ்தானியர்களுக்கும் மற்றவர்களுக்கும்  விநியோகம் செய்ய ஆரம்பித்து விட்டார். பூ வியாபாரத்தில் அவர் பல வியாபார உத்திகளைக் கற்றுக் கொண்டார்.

 992_C278_F-5_E6_A-46_A3-81_EC-_B074_D2_B

அங்கும் இங்கும் அலையாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டே காசு பார்க்க முடிந்ததால் பணத்தை மேலும் பெருக்க சீட்டுப் பிடிக்க ஆரம்பித்து பிறகு வட்டிக்கு பணம் கொடுத்து வருவாயைப் பெருக்கி தன் உடலையும் பெருப்பித்துக் கொண்டார்.

 நாங்களும் சாதாரணமானவர்கள் கிடையாது. புத்தக வெளியீட்டு விழா என்றால் முதலில் நாங்கள் போய்ப் பார்ப்பது நாட்டாமையைத்தான். மேடையில் அவரது பெயரை அறிவித்து, முதல் பிரதியை அவரிடம் நீட்டினால் 500யூரோவை தட்டில் வைத்து விட்டு புத்தகத்தை எடுத்து, வஞ்சகமில்லாமல் போட்டோவுக்கும் சிரித்து, வாழ்த்தி விட்டும் போவார். ஆனால் 200 பேருக்கு குறைவான பார்வையாளர்கள் வரும் மேடைகளுக்கு அவர் வர விரும்புவதில்லை.

 அந்த நாட்டாமையைத்தான் கொஞ்சக்காலமாக நகரத்தில் காணக் கிடைக்கவில்லை. விசாரித்ததில் கிடைத்தது இதுதான்,

 சமீபத்தில் நாட்டில் இருந்து  புலம் பெயர்ந்து வந்த புதியவர்களுக்கு நாட்டாமைதான் எல்லாமே. தனக்குத் தெரிந்வர்கள் மூலம் அவர்களுக்கு வேலை எடுத்துக் கொடுப்பபது “காசை வீணாக்காதீங்களடா” என்று  அறிவுரை சொல்லி அவர்களை தன்னிடம் சீட்டுப் போட வைப்பது என்று அவரது பொதுநலம் ஏராளம். வந்த, வாங்கிய கடன்களை திருப்பிக் கொடுக்க அவர்களில் யாராவது சீட்டு எடுக்க முற்பட்டால்,  “உனக்கென்ன விசரே? இப்ப கனக்க கழிவு போகுது. கடைசித் துண்டு வரக்கை பாக்கலாம். இப்ப உனக்கு எவ்வளவு வேணும் சொல்லு. நான் தாறன்” என்று பணத்தைக் கொடுத்து பிறகு அதற்கு வட்டியும்  வாங்கிக் கொள்வார். 

 ஒரு தடவை, புதிதாக வந்த ரவி என்ற நபரின் மனைவிக்கு அடி வயிற்றில் இடைவிடாத நோ இருந்தது. அவர்களின் குடும்ப மருத்துவர், அவர்களை gynecology ஐ போய் பார்க்கும் படியும், யேர்மனிய மொழி தெரிந்த ஒருவரை கூட்டிக் கொண்டு போவது நல்லது எனவும் சொல்லி இருக்கிறார். தம்பதிகள் நேராக ஆபத்தாண்டவர் நாட்டாமையைப் போய்ப் பார்த்தார்கள்.

 “இதென்ன பெரிய விசயமே? ரெலிபோனிலையே விசயத்தைச் சொல்லி இருக்கலாம்தானே. இதைக் கேக்கிறதுக்கு மினக்கெட்டு ‘ட்ராம்’ எடுத்து வந்தனீங்களே. எப்ப எண்டு சொல்லுங்கோ நான் வாறன்” நாட்டாமை உரிமை எடுத்துச் சொன்னார்.

 அந்த நாளும் வந்தது. ரவி தனது மனைவியுடன் மருத்துவரின் நிலையத்துக்கு நேரத்துக்குப் போய் காத்திருந்தான். சொன்ன நேரத்துக்கு நிமிடம் பிந்தாமல் நாட்டாமை வந்து சேர்ந்தார். 

 “மூன்று பேரும் ஒண்டா உள்ளை போறது நல்லா இருக்காது. நீங்கள் கூட்டிக் கொண்டு போங்கோ” ரவி ஒதுங்கிக் கொண்டான்.

 மருத்துவரிடம் உள்ளே போன நாட்டாமையும், அந்தப் பெண்ணும் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தார்கள்.

 காத்திருந்த ரவியிடம் “பிரச்சினை ஒண்டும் இல்லையடாப்பா. மருந்து விட்டிருக்கினம். பிள்ளை விளக்கமாகச் சொல்லுவாள்”  சொல்லிய நாட்டாமை விடைபெற்றுக் கொண்டார். ரவி மனைவியின் முகத்தைப் பார்த்தான். அவள் முகம் பொலிவிழந்திருந்தது.

 வீட்டுக்குப் போன பிறகுதான் நடந்தது என்னவென்பதை  ரவி அறிந்து கொண்டான். அவளது அடிவயிற்றில் நோ இருந்ததால் அவளை முழுமையாகச் சோதனை செய்ய வேண்டி இருந்தது. அதற்காக அவளை ஒரு அறைக்குள்  அழைத்துச் சென்று உடைகளைக் களைந்து பரிசோதித்திருக்கிறார்கள். நாட்டாமை அந்த அறைக்குள் போக வேண்டிய அவசியமில்லை. அவளின் கணவன்தான் நாட்டாமை என்று நினைத்து அவர்களும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாட்டாமை கண்கொட்டாமல் எல்லாவற்றையும் கண்டு கொண்டிருந்தார்.

மனைவி சொல்லச் சொல்ல ரவிக்கு தலைக்கு ஏறி விட்டது. மனைவியின் சகோதரர்களுக்கும், தனது சகோதரர்களுக்கும் போன் எடுத்து “நாட்டாமை இப்பிடிச் செய்து போட்டான்” என அழுதான்.

 வீடு புகுந்து அடித்தார்கள் என்று செய்திகள் வாசித்திருப்போமே அதுதான் அன்று நாட்டாமைக்கும் நடந்தது. விழுந்த அடி உதைகளை விட அவரது மனைவி உச்சரித்த வார்த்தைகள் மிகப் பலமான தாக்குதலாக அவருக்கு இருந்தது. வெளிக்காயங்களை விட உள் காயங்கள் அவருக்கு அதிகம். வைத்தியசாலைக்குப் போனால் கேள்விகள் கேட்டு மாட்டி பொலீஸ்வரை போய்விடலாம் என்ற பயத்தில் குடும்ப வைத்தியரிடம் போனார்.

 படி ஏறும் போது தடுக்கி விழுந்து விட்டேன் என்று வைத்தியரிடம் நாட்டாமை பொய் சொன்னார்

 “என்ன ஒவ்வொரு படியிலும் துள்ளித் துள்ளி விழுந்திருக்கிறீங்கள் போலை”  என்று வைத்தியர் கேட்டது காயங்களுக்குப் போட்ட மருந்தின் எரிச்சலைவிட  நாட்டாமைக்கு அதிகமாக இருந்தது.

 பிரபலமானவர்கள் சிரித்தாலே பெரிய செய்தியாக்கும் நாங்கள் நாட்டாமை விடயத்தை சாதாரணமாக விட்டுவிடுவோமா என்ன? நாட்டாமையின் நடமாட்டம் வீட்டுக்குள்ளேயே மட்டுப்படுத்தப் பட்டுவிட்டது.

 வெள்ளிக்கிழமைகளில் தங்கம் மின்ன கோயிலில் நிற்கும் நாட்டாமையைக் காணாமல் ஐயருக்கு அர்ச்சனை உச்சரிக்க நாக்கு ஒத்து வரவில்லை. 

 சனிக்கிழமைகளில்  சாமத்திய சடங்குகளில், பிறந்த நாட்களில் கூட்டமாக நின்று கதைத்துக் கொண்டிருக்கும் எங்களவர்களின் மத்தியில் நடுநாயகமாக இருக்கும் நாட்டாமையைக் காணக் கிடைக்கவில்லை.

 Audi காரில் வலம் வரும் நாட்டாமை தம்பதிகளின் தரிசனத்தை நகர்வீதி இழந்திருந்தது.

 இந்தச் சோக நிலைகளுக்கு  நடுவே சீட்டுக்கு காசு கட்டுபவர்கள்தான் முதலில் அந்தச் செய்தியை அவிட்டு விட்டார்கள். அது “நாட்டாமையைக் காணவில்லை” என்ற செய்தி.

 மாதத்தில் கடைசி சனிக்கிழமைதான் சீட்டுக் கூறும் நாள்.  இந்தமுறை நாட்டாமை ஒருத்தருக்கும் முன்அறிவித்தல் தரவில்லை. சீட்டுக் கூறூம் நாள் போய்ப் பார்த்தால், நாட்டாமை வீட்டில் ஒருத்தரும் இல்லை.

 நாட்டாமை குடும்பமாக லண்டன் போனாரா?  பரிஸ் போனாரா? இல்லை யேர்மனியிலேயே வேறொரு நகரத்துக்கு இடம் மாறிவிட்டாரா? தெரியவில்லை. 

 சீட்டை ஏற்கனவே எடுத்தவர்களும், வட்டிக்குப் பணம் வாங்கியவர்களும் நிறைந்த மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். “கழிவு நல்லாப் போகோணும்” என்று  சீட்டின் கழிவை ஏற்றி, கட்டுக்காசை வெகுவாகக் குறைத்து கடைசிச் சீட்டெடுக்க காத்து நின்ற சிலர் மட்டும் “எங்கே அவன் தேடுதே சனம்” என்று கவலை கொண்டிருக்கிறார்கள்.

 

கவி அருணாசலம்

07.04.2018

 

யார் சொல்லுவார்?

1 year 5 months ago

யார் சொல்லுவார்?

சமீபத்தில்(25.03.2018) யாழின் கருத்துக்களத்தில் நவீனன் தரவிட்டிருந்த இணைப்பின் தலையங்கம் ஒன்று, பழைய நினைவொன்றை என்னுள் மீட்டிப்பார்க்க வைத்தது. “பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்” என்பதே அந்தத் தலையங்கம்.

 83, 84 ஆண்டு காலங்களே அதிகமான தமிழர்கள் யேர்மனிக்கு புலம் பெயர்ந்த காலங்களாக இருந்ததன. ஈழத் தமிழர்களுக்கு வடக்குத்தான் அதிகம் பிடிக்குமோ என்னவோ, பல ஈழத்தமிழர்கள் யேர்மனியின் வட திசை சார்ந்த மாநிலமான  Nordrhein-Westfalen இலேயே அப்பொழுது தங்கிக் கொண்டார்கள்.

 புலம் பெயர்ந்து வந்த போதும் தாங்கள் சார்ந்த போராட்டக்குழுக்களை யேர்மனியில் காலூன்ற வைப்பதற்கு அவற்றின் அபிமானிகள் அன்று பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார்கள். இதில் தெற்கு யேர்மனியில் விடுதலைப்புலிகளின் அபிமானிகள் சிலர் அடிதடிகளில் இறங்க, அவர்கள் யேர்மனிய காவல்துறையினரால் கைதாகிப் போனார்கள். அதில் சிலர் சிறைக்கும் போய் வந்தார்கள். அதன் பின்னர் இயக்கங்களின் பெயரால் புலம் பெயர் தமிழர்களுக்கு மிரட்டல்கள், பிரச்சினைகள் ஏதாவது வந்தால் தங்களுக்குத் தகவல் தரும்படி யேர்மனிய காவல்துறை ஒரு மஞ்சள் துண்டுப்பிரசுரம் ஒன்றை தமிழில் அச்சடித்து புலம்பெயர் தமிழர்களின் வீடுகளுக்கு அனுப்பியும் வைத்திருந்தது. இந்த நிகழ்வு யேர்மனியில் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுக்கு அன்று பெரும் பின்னடைவாகிப் போயிருந்தது.

 இந்த நிலமையைச் சீர்செய்வதற்காக, பழ.நெடுமாறனும், தோழர் மணியரசனும் தொண்ணூறில் யேர்மனிக்கு வந்தார்கள்(அல்லது அனுப்பி வைக்கப்பட்டார்கள்). இவர்களது வருகையின் போது யேர்மனியில் தோற்றம் பெற்றதுதான் உலகத் தமிழர் இயக்கம். இந்த உலகத்தமிழர் இயக்கம், ஈழப்போராட்டத்தை சற்று ஓரமாக வைத்துவிட்டு புலம் பெயர்ந்தோருக்கான தமிழ்க்கல்வி, தாயகத் தமிழர்களுக்கான புனர்வாழ்வு இரண்டையும் முன்னிலைப் படுத்தியது. இந்த இரண்டில் உலகத் தமிழர் இயக்கத்தின் (தமிழாலயம்)  நிர்வாகியாக இரா.நாகலிங்கம் மாஸ்ரரும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு பொறுப்பாளராக உ.பிரபாகரனும் தெரிவாகியிருந்தார்கள். தமிழாலயமும், தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் புலம் பெயர் தமிழர் மத்தியில் தங்களை வெளிக்காட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கின. பொங்கல் விழா, வாணிவிழா என தமிழாலயங்களும், இன்னிசை இரவு என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் தங்களுக்குள் வரையறுத்துக் கொண்டு யேர்மனியின் முக்கிய நகரங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தன. 

 இவ்வாறான கலை நிகழ்ச்சிகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கும் அவர்களது உறவுகளுக்கும் மட்டுமே மேடைகள் தரப்பட்டன. அப்படியான ஆதரவாளர் ஒருவரின் மகள்தான் சுஜிதா. அப்பொழுது நடந்த அநேக கலை நிகழ்ச்சிகளில் சுஜிதாவின் நடனங்கள் மேடைகளை அழகுபடுத்தப்படுத்தின.

 

E74772_C8-7048-4_D6_A-91_FF-040_F0_F4341

Nordrhein-Westfalen மாநிலத்தின்  Linnich நகரில் உள்ள யேர்மனிய பாடசாலையில் சுஜிதா படித்துக் கொண்டிருந்தாள். 26.08.1993 அன்று மாலை சுஜிதாவின் பெற்றோர் அவளது பாடசாலைக்குச் சென்று தங்களது மகள் “சுஜிதா இன்னும் வீட்டுக்குத் திரும்ப வரவில்லை?” என்று அறிவித்திருக்கிறார்கள். “அவள் இன்று பாடசாலைக்கே வரவேல்லையே” என்ற பதில்தான் பெற்றோருக்கு கிடைத்தது. அவளது பெற்றோர்கள் உடனடியாக காவல்துறையிடம் சென்று தங்கள் மகளை காணவில்லை என முறைப்பாடு செய்தார்கள். சிறார்களை காணவில்லை என்று முறைப்பாடு வந்தால், முதலில் அயலவர்கள், நண்பர்கள்,  உறவினர்களிடம் போய் விசாரியுங்கள் என்று காவல்துறை ஆலோசனை தரும். அத்துடன் தங்கள் தரப்பு விசாரணைகளையும் அவர்கள் மேற்கொள்வார்கள்.

 சுஜிதா காணாமல் போன காலகட்டத்திலே மேலும் இரண்டு சிறுமிகள் காணாமல் போயிருக்கிறார்கள். ஒன்று, Hessen நகரில் லெபனான் நாட்டைச் சேர்ந்த 12 வயதான அபீர் என்ற சிறுமி மாலை ஐந்து மணிக்கு கடைக்குச் சென்றவள் வீடு திரும்பவில்லை. மற்றது அபீர் வீட்டின் அயலில் வசித்த மரியானா என்ற ஒன்பது வயது பொஸ்னியா நாட்டைச் சேர்ந்த சிறுமி. இந்த இரண்டு சம்பவங்களையும் சுஜிதா காணாமல் போனதையும் ஒன்றிணைத்து இது வெளிநாட்டவர்களின் மீதான நாசிகளின் செயற்பாடுகள் என பேச்சு வேகமாகக் கிளம்பியது.

 ஒரு கிழமை கடந்தும் காணாமல் போன சுஜிதா வீட்டுக்குத் திரும்ப வரவேயில்லையென்று செப்ரெம்பர் 2ந் திகதி, சுஜிதாவின் பெற்றோர்கள் ஒரு சட்டத்தரணியை அணுகினார்கள்.

 சுஜிதா காணாமல் போய் பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு, 07.09.1993 அன்று Nordrhein-Westfalen மாநிலத்தில் உள்ள  Mindergangelt என்ற காட்டுப் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வழிப்போக்கர் ஒருவர் காட்டின் நடுவே தீ எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு காவல்துறைக்கு அறிவித்திருக்கிறார். அங்கு எரிந்து கொண்டிருந்தது சுஜிதாவின் உடல் என்பதை காவல்துறை பின்னர் உறுதிப்படுத்தியது.

 13 வயதான சுஜிதாவின் மரணம் புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவளது இறுதி நிகழ்வில் பங்கு கொள்வதற்காக, கிடைத்த வாகனங்களில் ஏறி தூர இடங்களில் இருந்தெல்லாம் பயணம் செய்து  பல தமிழர்கள் வந்து கலந்து கொண்டார்கள். அப்பொழுது விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த லோரன்ஸ் திலகர் முன்னிலையில் நடந்த அவளது இறுதி நிகழ்வில் தங்கள் சொந்த மகளையே பறிகொடுத்தது போன்ற துயரத்தோடு இயக்க வேறுபாடுகள் இன்றி பல தமிழர்கள் பங்கு பற்றியிருந்தார்கள்.

 அரைகுறையாக எரிந்த சுஜிதாவின் உடலை தடவியல் நிபுணர்கள் ஆராய்ந்து, எரிப்பதற்கு சற்று முன்னர்தான் அதாவது செப்டம்பர் 7 ம் திகதிதான் அவள் இறந்திருக்கிறாள் என அறிக்கை தந்தார்கள்.

 போதிய நாட்கள் இருந்தும் காவல்துறையின் அலட்சியப் போக்கினால்தான் தங்களது மகளை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது என அவளது பெற்றோர்கள் காவல்துறை மீது குறை சொன்னார்கள்.

 தங்கள் மீது எந்தத் தவறும் கிடையாது என்றும், தாங்கள் மேற்கொண்ட விசாரணைகளில் சுஜிதாவுக்கு ஒரு ஆண் நண்பன் இருக்கிறான் என்பதும், அந்த நட்பை அவளது பெற்றோர் ஏற்கவில்லை என்பதும் தெரிய வந்தது. அத்துடன் இந்து முறைப்படி சடங்குகள் செய்து மட்குடம் உடைத்து, தீ மூட்டியே அவளது உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கொலைக்குப் பின்னர் கொலையாளி, தடயங்களை அழித்து தான் தப்பிக்கப் பார்ப்பானே தவிர கொலையாளியே கொலையுண்டவரின் உடலை எடுத்துப் போய் இறுதிச் சடங்குகள் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. கூட்டிக் கழித்துப் பார்த்தால், அவளது கொலைக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் அவளின் பெற்றோரே என காவல்துறை தாங்கள் சேகரித்த ஆதாரங்களோடு சொன்னது.

 இந்த வருடத்துடன் சுஜிதாவின் மரணம் நிகழ்ந்து இருபத்தைந்து வருடங்களாகின்றன. கொலையாளி யார்? யார்தான் சொல்லப் போகிறார்கள்?

கவி அருணாசலம்

03.04.2018

 

தங்கக் கூண்டு

1 year 5 months ago

                                                                                                                           தங்கக் கூண்டு

 

     என் பெயர் எழில். பருவப் பெண்களுக்கே உரிய வாழ்க்கை பற்றிய கனவுகள் எனக்கும் உண்டு - பிரத்தியேகமாக எனக்கென்றே பிரம்மனால் படைத்து அனுப்பப்பட்ட தலைவன் வெண்புரவியில் வந்து சேருவான் போன்ற அதீதமான கற்பனைகள் தவிர. இந்த மாதிரியான கற்பனைகள் தோன்றாததற்குக் காரணம் பாழாய்ப் போன(!) வாசிப்புப் பழக்கமும், என் தந்தையாரால் நேர்முகமாகவும் நூல் முகமாகவும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பகுத்தறிவாளர்களின் சிந்தனைகளும் என்றே நினைக்கிறேன்.

 

     என் விருப்பம் போல் அறிவியலில் ஆய்வு மாணவியானேன். என் விருப்பம் போல் ஏனைய பிறவும் வாசித்துத் தள்ளினேன். எழுத்து பற்றி என்னுள் எழுந்த வேட்கை என்னை சிறு பத்திரிக்கைகளில் எழுத வைத்தது. சான்றாண்மை மிக்க ஒரு சிலரின் கேண்மை இப்பூவுலகில் எனக்குக் கிடைத்த வரம். என் ஆரம்ப எழுத்துக்களை அவர்களிடம் வாசிக்க அளித்தேன். "அட ! உனக்கு எழுத்து நல்லாத்தான் வருது. உனக்கே உரிய அந்த அங்கத நடையுடன் நீ எழுத்துலகில் வீறு நடை போடலாம், வா !" என அவர்கள் பெரிய மனதுடன் வரவேற்புரை நல்கியது தேவர்கள் என் மீது சொரிந்த பூமாரி. அவர்கள் தூண்டுகோலாக நான் எழுதுகோல் ஆனேன். அவர்கள் ஆசியுடன் என் முதல் கட்டுரைத் தொகுப்பு புத்தகமாய் வெளிவந்த போது தரையிலிருந்து சிறிது எழுந்து காற்றில் மிதந்தது போன்ற உணர்வு. எழுத்துலகில் இன்னும் சரியாக காலே பதிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் தடம் பதிக்க வேண்டும் என்ற கனவு உண்டு. இது நியாயமான கனவுதானே ! வெண்புரவிக் கனவு ஒன்றும் இல்லையே !

 

     வருடம் என்று ஒன்று உண்டு. வயது என்று ஒன்று உண்டு. காலாகாலத்தில் நடப்பவை நடக்க வேண்டும் என்று ஒன்று உண்டு. அம்மா, அப்பா, ஆச்சி, சித்தி, சித்தப்பா  எல்லோரும் எனக்கான அந்த வெண்புரவித் தலைவனைத் தேட ஆரம்பித்தார்கள். இக்காலத்தில் ஐவகை நிலங்களில் சென்றா தேட வேண்டும் ? இணையத்தில்தானே இணையைக் கண்டெடுக்க வேண்டும் ! கணினித் திரையில் குதிரைப் பந்தயத்தில் எத்தனையோ புரவிகள் ஓடின. நாங்கள் என்னதான் சுமாராயிருந்தாலும் எங்களுக்கும் கற்பனை வளங்களும் தெரிவுகளும் இருக்காதா என்ன !

 

     வீட்டுக்கே வந்து பெண்ணையோ பையனையோ பார்ப்பது இப்போதெல்லாம் கடைசிக் கட்டம்தான் என்றாலும், அருகாமையில் இருந்த காரணத்தால் ஒரு மாப்பிள்ளை வீட்டார் தயக்கத்துடன் அனுமதி கேட்டு நேரில் வந்தனர். இயற்கையின் விதியாக நானும் உயர் நடுத்தர வர்க்கத்தில் பிறந்திருந்தாலும், வந்தவர்கள் பெரும் வணிகச் சமூகத்தைச் சார்ந்த, பொருளாதாரத்தில் மிகவும் உயர் வகுப்பினர்; வேடிக்கையாக வியாபாரக் காந்தம் என்பார்களே, அக்காந்த சக்தி படைத்தவர்கள். ஆனால் அதற்கான பகட்டு எதுவுமின்றி எளிமையாகத்தான் பேசினார்கள், பழகினார்கள். இதையெல்லாம் பார்க்கும் போதுதான் மனித சமூகமும் நாகரிகமடைய முயல்கிறது என்ற ஐயம் ஏற்படுகிறது. அம்முயற்சி உண்மையானால் மகிழ்ச்சியே !

 

     பையனின் பெற்றோருக்கும் உற்றோருக்கும் பிடித்துப் போயிருக்க வேண்டும். அதனால்தான் அவர்களின் ஒரே நிபந்தனையான "பெண் வேலைக்குச் செல்லக் கூடாது" என்பதை வெளியிட்டனர். என் பக்கத்தில் யாரும் சரியென்று தலையை ஆட்டவில்லை. பார்த்துவிட்டுச் சென்றவர்கள் சுமார் பத்து நாட்கள் கழித்து, பையனும் பெண்ணும் பார்த்து பேசிக் கொள்ளலாமா எனக் கேட்டனர். "கண்டிப்பாக அவர்கள் பார்க்கத்தான் வேண்டும், பேசத்தான் வேண்டும். இருவரின் தலைக்கு மேலேயும் பல்பு எரிந்தால் மட்டுமே நாம் மேற்கொண்டு தொடர முடியும். நீங்கள் தாராளமாய் அழைத்து வரலாம்" என என் அப்பா - அம்மா பச்சைக் கொடி காட்டினார்கள். அந்த நாளும் வந்தது. முதன் முதலாக என்னைப் பார்க்க வந்த பையனுடன் பேசப் போகிறேன் என்ற திகிலோ, பரபரப்போ, பரவசமோ என்னிடம் இல்லை. என் வயதையொத்தவர்களை விட அறிவுலகில் வலம் வருகிறவர்களிடம் என் அப்பாவின் மூலமாக ஏற்பட்ட நட்பின் விளைவாக இருக்கலாம். ஆனாலும் பருவப் பெண்ணுக்கே உரிய அச்சம், மடம், நாணம் எதுவும் இல்லாமல் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். பையனின் நிழற்படத்தைப் பார்த்த போது என் தலைக்கு மேல் மங்கலாக எரிந்த பல்பு, நேரில் பார்த்த போது பிரகாசமாய் எரிந்தது.

 

     சற்றுத் தூரத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். அவரே தொடங்கினார் (என்னது ! 'பையன்' என்பதிலிருந்து மாறி 'அவர்' என்று ஆனது பல்பின் மகிமையோ!), "நீ வேலைக்குச் செல்வதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்களைப் போன்ற பெருவணிகச் சமூகத்தில் வழக்கமில்லை. மேலும் அம்மா-அப்பா விரும்பாத போது அவ்வழக்கத்தை ஏன் மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். நீ யோசித்துக் கொள். தற்போது உன் ஆய்வுப் படிப்பு முடிவடையும் வரை நீ தொடர்வதில் யாருக்கும் ஆட்சேபணை இல்லை. மற்றபடி பொதுவான விஷயங்களில் நம் ஆர்வம், விருப்பம் எனப் பேசலாமே" என்றார். பேசினோம். நன்றாகப் பேசினோம். அவரது தோற்றம் மட்டுமல்ல, எளிமையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் ஏதோ ஒன்று உறுத்தியது. வணிகச் சமூகத்தில் உள்ள உறவினர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன், "நாம் யாரோ ஒருவருக்குத் தலைவணங்கி வேலை பார்ப்பதை விட சுயதொழிலில் 'நானே வேலைக்காரன், நானே முதலாளி' என்றிருக்கலாமே!" அந்த உறவினரை அடுத்த முறை பார்க்கும் போது கேட்க வேண்டும், "நம் பெற்றோர்க்குத் தலை வணங்குவதும் அவர்களின் பொற்பாதங்களை நம் தலையில் தாங்குவதும் நாம் பெற்ற பேறு. ஆனால் உங்கள் நிறுவனத்துக்கு முதலாளிகளாய்ப் போன ஒரே காரணத்திற்காக உங்கள் பெற்றோர் முன் உங்கள் ஆசைகளைக் காலில் போட்டு மிதிக்கவில்லையா?  அவர்களின் விருப்பு வெறுப்பிற்கு முன் நீங்கள் தலை வணங்கவில்லையா? இதைத்தானே நிலவுடைமைச் சமூகத்தில் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த பிள்ளைகளும் செய்தார்கள்?"

 

     அதே சமயம் மாமனார் - மாமியார் என அனைவரும் சேர்ந்து வாழ்வதை விடுத்து தனித்தனியாய் வாழும் வாழ்க்கையிலும் எனக்கு விருப்பமில்லை. அனைத்து வகையான வாழ்க்கை முறைகளிலும் சிறந்த விஷயங்கள் அத்தனைக்கும் ஆசைப்படும் பேராசைக்காரி நான். கூடி வாழ வேண்டும். நியாயமான என் சுதந்திரமும் ஆசைகளும் பறிபோகக் கூடாது. இந்தச் சமூகத்திற்கானவள் நான் என்று ஊட்டி வளர்க்கப்பட்ட நான் நான்கு சுவற்றுக்குள் (எவ்வளவு பெரிய பங்களாவானாலும் நான்கு சுவர்கள்தானே !) எப்படி என்னைச் சுருக்கிக் கொள்வது ? என்னிடமுள்ள இன்னும் முழுமையடையாத சில திறமைகளுக்கே என்னைக் கொண்டாடும் சமூகத்தை விடுத்து வேறு எங்கோ எப்படிக் காணாமல் போவது? வெளியிற் சென்று வேலை பார்க்கும் எண்ணத்தை நான் உதறினாலும் கூட, அருகிலுள்ள என் தாய் வீடு செல்வதற்குக் கூட இவர்களிடம் கைகட்டி நிற்க வேண்டுமோ? அந்தப் பள்ளி அரங்கில் நடக்கும் நிகழ்வு ஒன்றிற்கு அ.மார்க்ஸ், சுப.உதயகுமார் ஆகியோர் பேச வருகிறார்கள். அங்கு செல்வதற்கும் இவர்கள் தயவை நாட வேண்டுமோ? மண வாழ்க்கை என்று ஒரு சாதாரண விஷயத்திற்காக என் அடையாளத்தையே நான் தொலைக்க வேண்டுமோ? மனித குல நீட்சிக்கு நான் ஒருத்தி பங்களிக்கா விட்டால் குடியா முழுகிப் போகும்? இவர்கள் தேடும் பெண் நான் இல்லையோ? இது போன்ற இனம் புரியாத பயம் அனைத்தும் என் கற்பனையாகக் கூட இருக்கலாம்.

 

     இனிய சம்பிரதாயங்களுடன் பெண் (பெண்ணும் ஆணும்) பார்க்கும் படலம் நிறைவு பெற்றது. பெண்ணுக்கும் பையனுக்கும் ஒருவரையொருவர் மிகவும் பிடித்திருக்கிறது. பெண் வீட்டாருக்கும் பிள்ளை வீட்டாருக்கும் மகிழ்ச்சியே. ஆனாலும் இத்திருமணம் நிகழும் வாய்ப்பு மிகவும் குறைவு. என்ன ஒரு நகைமுரண் ! அவர்களின் மரபு சார்ந்து ஒரு நிபந்தனையில் உறுதியாய் இருப்பதைத் தவிர மற்றபடி மாப்பிள்ளை வீட்டார் நல்ல குணமுடையவர்கள்; அவர்களின் மூத்த மருமகளைப் போல என்னையும் மகாராணி போல் வைத்துக் கொள்வார்கள் என்று எனக்கு மட்டுமல்ல, என் பெற்றோர் உற்றோர்க்கும் தோன்றியது. நாங்கள் கண்டவையும் கேட்டவையும் இதனை உறுதிப்படுத்தின. எனக்கு அவர்கள் வீட்டில் ஒரு தங்கக் கூண்டு தயாராய் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். கூண்டு கூண்டுதானே ! அதில் தங்கமென்ன ? இரும்பென்ன ?

 

     வீட்டு மாடியில் எனது அறையைத் திறந்து மின்விசிறியைச் சுழலவிட்டேன். அப்போது செல்பேசி ஒலிக்க அதில் கவனமானேன். ஜன்னல் கதவுகளை என் ஆச்சி அடைத்திருந்ததை உணரவில்லை. சாளரத்தில் கூடு கட்டி வாழ்ந்திருந்த குருவி கூட்டை விட்டு வந்து, வெளியே போக வழி தெரியாமல் சுற்றியது. செல்பேசியின் கவனத்தில் குருவியின் மீது மனம் செல்லவில்லை. திடீரென்று மின்விசிறியில் அடிபட்ட குருவி தொப்பென்று விழுந்தது. பஞ்சைப் போல அதன் இறகுகள் உதிர்ந்து நாலாபுறமும் பறந்தன. அந்தக் கோரக் காட்சியில் அதிர்ச்சியில் உறைந்து செல்பேசியைத் துண்டித்தேன். ஐயோ ! அந்த அறையை என்னுடன் பகிர்ந்த அந்தக் குருவி இனியில்லை. அதன் சிவந்த வால் என் கண்ணில் ஆடியது. செல்பேசி டவரால்தான் சிட்டுக்குருவி காணாமல் போனது என்பார்கள். இன்று என் செல்பேசியால் இந்த சிகப்பு வால் குருவி இவ்வுலகை விட்டுப் போனது என்ன ஓர் அவலக் குறியீடு? உயிர்த்தோழி சுதாவை (அதே நாசமாய்ப் போகிற) செல்பேசியில் அழைத்து அழுது தீர்த்தேன். "அழாதேமா ! நீ வேண்டுமென்றா சாகடித்தாய்? அதன் விதி அவ்வளவுதான்" எனத் தேற்ற முயன்றாள். அப்புறம்தான் அந்த மாப்பிள்ளை வந்து போன விஷயத்தைச் சொன்னேன். அதற்கும் பதில் தயாராய் வைத்திருந்தாள். "அது ஒரு பெரிய விஷயமில்லை. அதற்காக மறுக்காதே. திருமணத்திற்குப் பின் உன் இயல்பைப் பார்த்து அவர்களே மகிழ்ந்து மனம் மாறிவிடுவார்கள்". "இல்லை, சுதா ! நானும் ஏமாற வேண்டாம். அவர்களும் ஏமாற வேண்டாம். நானோ அவர்களோ ஏன் மாற வேண்டும்?" கனத்த இதயத்தோடு இதை நான் சொல்லும் போது என் மனக்கண்ணிலும் வெண்புரவி தோன்றியது. ஆனால் பின்னோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் குருவிக்கே வந்தேன், "நாளைக் காலையில் நான் விழிக்கும் போது அந்தக் குருவி இருக்காதே !" துக்கத்தில் தொண்டை அடைக்க பேச்சு வராது என்பார்கள். எனக்கு என் மூச்சான தமிழே வரவில்லை. "The sparrow has vacated its room" முனங்கினேன். மீண்டும் சுதா, "விடு எழில் ! வேறு குருவி வரும்............ வேறு மாப்பிள்ளையும் வருவான்". 

 

 

                                                                                                                                                                                                                                                                      - சுப.சோமசுந்தரம் 

அதிசய நகரம் பெற்றா முதல் எம்மாவுஸ் வரை.......

1 year 5 months ago

அதிசய நகரம் பெற்றா முதல் எம்மாவுஸ் வரை.......


எமது ஆன்மீகத்தின் வேர்களைத் தேடி புனித பூமிக்கான திருப்பயணம் -2017
(ஜோர்தான்-- இஸ்ரவேல் -- பலஸ்தீனம்)

 

என் தெய்வம் வாழ்ந்த தெய்வீக பூமி இது.  இயற்கை அழகும் செயற்கை நிர்மாணிப்பும் கலந்த அற்புதமான உலகம். மலைப்பாங்கான பிரதேசம். ஜோர்தான் நதிப்பள்ளத்தாக்கு வரட்சியில் வாட அதைத்தாண்டி வனாந்தரம் கண்ணுக்கெட்டிய தூரம் புல் பூண்டுகளற்று பசுமைகளற்று பரந்து விரிந்து பாலைவனமாகக் காட்சியளித்தது.

                 என் நீண்டநாள் கனவு நிறைவேறிய மகிழ்வு மனதுக்குள் மத்தாப்பூவாய் மலர்ந்தது. கார்த்திகை மாதம் 23ம் திகதி. இந்த நாளுக்காய் எத்தனை காலம் ஏங்கித் தவித்திருந்தோம். மாலை 9.40க்கு பியசன் விமானநிலையத்தில் இருந்து எயார்கனடா விமானம் எம்மைச் சுமந்தபடி மேலெழும்பியது. எம் பிரயாணத்தை வழிநடத்தும் பொறுப்பாளர் திரு. அன்ரன் பிலிப் அவர்கள் வழி நடத்துதலுடன் 48 யாத்திரிகர்கள் பயணமானோம். நாம் சென்ற விமானம் பிராங்பேட் விமான நிலையத்தில் 2 மணிநேரம் தரித்து லூத்தான்சா விமானமூலம் மாலை 7 மணியளவில் அம்மான் விமான நிலையத்தை வந்தடைந்தோம்.
                          

479459ee3dab676e4aca989dd639ab4b?AccessK

   புனித பூமியில் கால் பதிக்கும் பொழுதே எமக்குள் கிளர்ந்த சிலிர்ப்பை வார்த்தைகளில் வடிக்க முடியாது. எமக்கென ஆயத்த நிலையிலிருந்த வாகனம் மூலம் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டு தயார் நிலையிலிருந்த உணவை உண்டு ஏற்கெனவே எமக்கென பதிவு செய்யப்பட்டிருந்த அறைகளில் இருவர் இருவராக உறங்கி ஓய்வெடுத்தோம்.

 


          மறுநாள் 25ம் திகதி காலை 5 மணிக்கே தொலைபேசி அலாரம் எம்மை துயிலெழுப்பியது. 6 மணிக்கு காலை உணவை முடித்துக்கொண்டு சரியாக 7.30க்கு அனைவரும் வாகனத்துள் இருந்தோம். ஒவ்வொரு முறையும் வாகனத்துள் ஏறும்பொழுதும் இறங்கும் பொழுதும் எமைக் கணக்கெடுத்து எமக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் இருந்து மதிய உணவு, திருப்பலிகள், செபமாலை, மன்றாட்டு என்று அனைத்தையும் தன் 11 வருட அனபவத்தின் மூலம் எவ்வித குறையுமின்றி திரு. அன்ரன் பிலிப் அவர்கள் பார்த்துப் பார்த்து செய்திருந்தார். எம்முடன் பயணித்த ஒவ்வொரு சகோதரர்களும் அன்புடனும் புரிந்துணர்வுடனும் நடந்து கொண்டனர்.

 

26114294_1744232325647364_76664879886131


         வாகனம் ஓடிக்கொண்டிருந்தது. பார்க்குமிடமெங்கும் மலைக் குன்றுகளும் பள்ளத்தாக்குகளுமாக உயிரினங்களற்ற பாறைத் தொடர்களே காட்சியளித்தன. உலகத்தின் அதிசயங்களுள் ஒன்றான அதிசய நகரம் பெற்றா. இதைச் சிவப்பு நகரம் என்றும் அழைப்பர். பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவான இந் நகரம் காலத்துக்குக் காலம் பல அரசுகளால் சுவீகரிக்கப்பட்டு வரலாற்றின் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் அரசுகளின் வீழ்ச்சியினாலும் இயற்கையின் சீற்றத்தாலும் கைவிடப்பட்டு இன்று உலகின் அதிசயங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இரு புறமும் பிரமாண்டமான பாறைப் பிளவுகளுக்கூடாக ஊடறுத்துச் செல்லும் பாதையில் நீண்டதூரம் நடந்து செல்ல வேண்டும். அந்த பாதையின் இருமருங்கும் பல சிற்பங்கள், கல்லறைகள், சிதைந்த மண்டபங்கள் என பல அடையாளச் சின்னங்கள் பற்றியும் புராதன கல்வெட்டுக்கள் பற்றியும் எம்முடன் வந்த ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த வழிகாட்டி விளக்கமாக எமக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து தமிழில் திரு. அன்ரன் பிலிப் அவர்களும் அதற்கான விவிலிய குறிப்புப்களையும் விளக்கங்களையும் கூறியது எமக்கு அவ்வப்போது ஆன்மிகத்தின் பக்கங்களையும் விளங்க வைத்தது. ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் பார்க்க வேண்டிய 28 முக்கிய இடங்களில் ஒன்றான இந்த அதிசய நகரை நாம் பார்க்கக் கிடைத்தது பெரும்பேறு.

26195557_1744232505647346_55209319844628

 

Petra-Treasury-Entrance2-1024x683.jpg

                    அங்கிருந்து யோவான் அருளப்பரின் தலையை ஏரோது மன்னனிடம் நடனமாடி பரிசாகக் கேட்டுப் பெற்ற அந்த புனித இடம். மன்னனின் அரண்மனை தூர்ந்து போனாலும் சிதிலமான மண்குன்றான அந்த புனித இடத்தில் இறைவார்த்தை தியானித்து செபித்தோம். ஜோர்தான் பள்ளத்தாக்கின் அழகை அங்கிருந்து பார்த்து ரசிக்கக்கூடியதாக கண்முன்னே மலைச்சரிவுகள் பரந்து கிடந்தன.  மதிய உணவை பயண ஒழுங்கு செய்தவர்களே ஒழுங்கு படுத்தி இருந்ததால் எமது நேரத்தை சரியான முறையில் மேற்கொள்ளவும் திட்டமிட்டபடி இடங்களைச் சென்றடையவும் மிக உதவியாக இருந்தது. இரவு தங்குமிடம் திரும்பியதும் சுவையான போசாக்கான உணவு, வசதியான படுக்கை, உடல் அலுப்புத் தீர குளித்து சுகமான நித்திரை. அதிகாலை தொலைபேசி அழைப்புமணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததால் பதட்டமின்றி நித்திரை செய்தோம்.
                  

    26ம் திகதி காலை புறப்பட்டு நெபோ மலை என அழைக்கப்படும் மலைக்குச் சென்றோம்.  இறைவனால் வாக்களிக்கப்பட்ட கானான்; தேசத்துக்குள் நுழைய முடியாமல் இம் மலையிலுருந்தே மோயீசன் இஸ்ரவேல்  நாட்டைப் பார்த்ததாக விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்குதான் மோசே அடக்கம் பண்ணப்பட்டதாக நம்பப்படுகிறது. அம் மலையில் வெண்கலப் பாம்பு என அழைக்கப்படும் ஓர் இரும்பினால் ஆன கோலில் பாம்பு சுற்றி இருப்பதுபோல் செய்யப்பட்ட அடையாளச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுத்து செபித்தோம். ஒவ்வொரு இடத்திலும் அந்த இடம் தொடர்பான நற்செய்தி வாசகங்களும் வாசித்து தியானித்தோம்.

mtnebo2.jpg

 

25995074_1744232422314021_71914321393002


             அங்கிருந்து யேறாஸ் நகரம் சென்றோம். கிரேக்க ரோம சாம்ராச்சியங்கள் அங்கு அமைக்கப் பட்டிருந்ததன் அடையாளமாக கிரேக்க ரோம மன்னர்கள் நிர்மாணித்த விசாலமான மண்டபங்கள், மாபெரும் தூண்கள், கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்ற அரங்குகள், அங்காடிகள், வீதி வளைவுகள் என்று இன்னும் பல சிதைந்த சீரழிந்த சின்னங்கள் உச்ச நிலையிலிருந்த சாம்ராச்சியங்களின் எச்சங்களாகக் காட்சியளித்தன.
 அன்றிரவே இஸ்ரவேல் நாட்டுக்குள் ஜோர்தான் எல்லையைக் கடந்து செல்ல வேண்டி இருந்ததால் அங்கிருந்து புறப்பட்டு இஸ்ரவேல் எல்லையை அடைந்தோம். அங்கு நாம் எம் பயணப் பொதிகளுடன் நாம் பயணித்து வந்த வாகனத்தையும் சாரதியையும் வழிகாட்டியையும் பிரிந்து எல்லைக் கடவை ஊடாக பலவித பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்குச் சொந்தமான வாகனம், சாரதி, வழிகாட்டியுடன் எமக்கென ஆயத்தம் செய்யப்பட்டிருந்த தங்குமிடம் சென்றடைந்தோம். வழியெங்கும் மலைச்சரிவுகளில் தீப்பெட்டிகளை அடுக்கியதுபோல அமைக்கப்பட்ட கட்டிடங்கள் மின்ஒளியில் பளபளத்தன. இஸ்ரவேல் என்னும் இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்ட அழகிய நாடு செழிப்புடனும் வளமுடனும் காட்சியளித்தது. எங்கும் வளமையும் செழுமையும் மிக்க ஆற்றுப் பள்ளத் தாக்குகளும் ஒவிவத் தோட்டங்களும் கூடாரங்களில் மூடி அமைக்கப்பட் வாழைத்தோட்டங்களும் தோடை முந்திரி என பலவகை பழத்தோட்டங்களும் வீதியின் இருமருங்கும் அழகூட்டின.

                  

26166108_1744233342313929_54647762256020
                      

    உலகின் பல பாகங்களிலுமிருந்தும் அலை அலையாக இன மத மொழி வேறுபாடின்றி இறைமகன் இயேசு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, புதுமைகள் பல புரிந்து, மரித்து, உயிர்த்த அந்த புனித பூமியை தரிசித்து இறை உணர்வில் பெலனடைய வந்துகொண்டிருந்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கட்டிடங்களையும் ஆலயங்களையும் சரித்திரப் புகழ்வாய்ந்த இடங்களையும் வீடுகளையும் காணும்போது எம் மண்ணின் ஞாபகம் அடிக்கடி மனதில் நிழலாடியது. இன்னும் சில நூற்றாண்டுகளின் பின் எமது எதிர்காலச் சந்ததியினரும் எமது வாழ்விடங்களையும் இப்படித்தான் வழ்காட்டிகளின் உதவியுடன் வந்து பார்த்து எமது வரலாற்றை அறிந்து கொள்வார்கள் என மனத்திரையில் வந்து போனது. என்றோ ஒருநாள் எம் வேர்களைத் தேடி எம் விதைகள் புறப்படும்போது அவர்களின் தேடல் இன்றைய நிகழ்வுகளாக இருக்கலாம். இன்றைய திருப்பலி ஒப்புக்கொடுத்த குருவானவரின் அருளுரையும் இத் தேடல் பற்றிய சிந்தனையாகவே இருந்தது.

 

ffee2447b152494b43d9816faaea83c8_L.jpg

 

1200px-Bethlehem_skyline,_West_Bank.jpg


            நசரேத்தூரில் மரியாளுக்கு மங்களம் சொன்ன இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம், இயேசு மறுரூபமான தபோர் மலை, மரியாளின் கிணறு, இவற்றை தரிசித்து விட்டு கானாவூரில் இறைமகன் இயேசு முதல் புதுமை செய்த இடத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றினோம். அங்கு எம்முடன் தம்பதிகளாக வந்தவர்கள்திருமண வாக்குத்தத்தம் புதுப்பித்தார்கள். விவிலியத்தின் முக்கிய இடங்களில் வழிகாட்டி மிகத் தெளிவாக விளக்கங்களை அளித்தார். இறைவழிகாட்டலுடன் எமது பயணத்தைத் தொடர திரு.அன்ரன் பிலிப் அவர்கள் உதவியாக இருந்தார். திருக்குடும்பம் வாழ்ந்த வீடு, செசாரியா பிலிப் எனப்படும் ஜோர்தான் ஆறு ஆரம்பமாகும் இடம்.(இது சிரிய எல்லையில் அமைந்துள்ளது). பல நூற்றாண்டுகள் கடந்தும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்றிரவு நாம் தங்கிஇருந்த கொட்டலில் ஒரு ஒன்றுகூடல் வைத்தோம். அந்த ஒன்றுகூடலில் திருப்பலி ஒப்புக்கொடுத்த இரு குருவானவர்களும் பங்குபற்றினர். அன்று எம் மாவீரர் தினமென்பதால் அவர்களுக்கு மௌன அஞ்சலி செய்ய மறக்கவில்லை. அதன்பின் அனைவரும் தத்தமது பயண அனுபவங்களைப் பரிமாறி மகிழ்ந்தனர். திராட்சை ரசமும் பரிமாறப்பட்டது.
           Mont_Thabor_en_Galil%C3%A9e-Cassas-ski-1

 

   மறுநாள் இயேசு மலைப்பொழிவு செய்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்தோம். அப்பம் பலுகியஆலயம், கர்ப்பநாகூம் செபக்கூடம், பேதுருவின் வீடு, முதலான புராதன இடங்களைப் பார்த்து செபித்து நற்சிந்தனையுடன் கலிலேயாக் கடலில் படகுப் பிரயாணம் மேற்கொண்டோம். படகுப் பிரயாண ஆரம்பத்தில் படகு ஒட்டுனர்கள் கனடிய கொடி ஏற்ற நாம் அனைவரும் இசையுடன் கனடிய கீதமிசைத்து கை தட்டி எமது மகிழ்வைத் தெரிவித்தோம். தொடர்ந்து இறைமகன் இயேசு பயணம் செய்து புதுமைகள் செய்த அக் கடலில் பயணம் செய்வது மிகவும் ஆசீர்வாதமாக எண்ணி இறைவனைத் துதித்து பாடல்கள் பாடி இறை வார்த்தைகளை வாசித்து இறை உணர்வுடன் பயணம் செய்தோம்.
 படகுப் பிரயாணம் முடிந்ததும் கடலோரமாக உள்ள உணவு விடுதியில் பேதுருவின் மீன் உணவு பரிமாறப்பட்டது. அனைவரும் சுவையான அந்த உணவை உண்டு மகிழ்ந்தோம். தொடர்ந்து கலிலேயாக் கடலில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன ஓடம் வைக்கப்பட்டுள்ள காட்சிச் சாலைக்கு சென்று படகைப் பார்வையிட்டோம். அங்கிருந்து இராயப்பர் திருச்சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயம் சென்றோம். அனைத்து இடங்களையும் கைத்தொலை பேசிகளிலும் ஒளிப்படப் பெட்டிகளிலும் பதிவுசெய்தபடி எம் பயணம் தொடர்ந்தது.
                 

7ம் நாள் எமது திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிப்பதற்காக ஜோர்தான் நதிக்கரைக்கு செல்ல ஆயத்தமாக அனைவரும் வெண்ணிற ஆறை அணிந்து புறப்பட்Nhம். அங்கு பல இன மக்களும் வெண்ணிற ஆடைகளுடன் கூட்டம்கூட்டமாக பரிசுத்த ஆவியின் பாடல்களைப் பாடி துதித்தபடி தம் திருமுழுக்கினைப் புதுப்பித்தபடி இருந்தனர். நாம் அங்கு திருப்பலி நிறைவேற்றி எம் திருமுழுக்கை புதுப்பித்தோம். எமக்கு திருப்பலி நிறைவேற்ற குருக்களை ஆயத்தம் செய்திருந்தார்கள். அதிலும் தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது மிகவும் சிறப்பான அம்சம்.

26000956_1744235255647071_90158070257639

 

26055650_1744235152313748_33157626814609


                 

Bethany_(5).JPG

 

 

  மசாடா மலை. விசாலமான இம் மலையின் மேற்பகுதி தட்டையாகவும் பக்கங்கள் செங்குத்தாகவும் உள்ளன. இம் மலையின் மேல் கோட்டை ஒன்று அமைக்கப்பட்டதற்கான எச்சங்களாக சிதைவடைந்த நிலையில் பல அறைகள், குளியலறைகள், மண்டபங்கள், என பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. இங்கு செல்வதற்கு கம்பி மூலம் கேபிள் கார் அமைக்கப்பட்டுள்ளது. எமது வழிகாட்டி அதன் சரித்திரப்பின்னணியை விபரித்தார். எதிரிகள் சுற்றி வளைத்ததால் அவர்களிடம் மண்டியிடுவதைவிட மடிவதே மேல் என்று முடிவெத்த யூத இனத்து விடுதலைக்குழு போராளிகள ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக தம்மையே அழித்துக் கொண்டனர். அம் மாவீரர்களின் கதை கூறியபடி இம் மலை தலை நிமிர்ந்து நிற்கிறது.
                

25994774_1744240322313231_57492468361757

26165699_1744233012313962_11625908749863

  சாக்கடலில் குளியல். இது ஒரு இனிய அனுபவம். இக்கடலின் அதிக கனவளவு உப்பு கலந்த நீர் இருப்பதால் எந்த உயிரினமும் இதில் உயிர்வாழ முடியாது. இக் கடலில் ஒருவரும் தாள முடியாது. பலர் மிதந்தபடி குளிப்பதைக' காணக்கூடியதாய் இருந்தது. தொடர்ந்து எலிசபேத் அம்மாள் ஆலயம், திருமுழுக்கு யோவான் இல்லம், கிறீஸ்து பிறப்பு ஆலயம் சென்றோம். தினமும் வரிசை வரிசையாக மக்கள் கூட்டம் இப் புனித தலத்தைத் தரிசிக்க காத்திருப்பர். நாம் அங்ு போன நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் நேரடியாக உள்ளே நுழைந்து இறைமகன் இயேசு பிறந்த புனிக இடத்தை தரிசிக்கக் கிடைத்தது இறைவனின் அரிய செயலன்றி வேறில்லை.  தொடர்ந்து தேவதூதன் இடையர்களுக்கு சேதி சொன்ன மலைக்குகை, மரியாளின் பால் துளியில் பரிசுத்தாகிய வெள்ளை குறோற்றா ஆலயம், ஆகிய புனித தலங்களைத் தரிசித்து அவ்விடத்தில் திருப்பலியும் நிறைவேற்றி இறை உணர்வுடன் எம் இருப்பிடம் திரும்பினோம். தினமும் காரம் மசாலா தவிர்ந்த அனைத்து உணவு வகைகளும் தரமான முறையில் பரிமாறப்பட்டன. சுவையான கலப்படற்ற பேரீச்சம் பழங்கள், திராட்சைரசம் என்பன குறைந்தவிலையில் பெறக்கூடியதாய் இருந்தது.
            

       மறுநாள் மார்கழி 1ம் திகதி இயேசு விண்ணம் சென்ற இடம், பரலோக மந்திர ஆலயம், மரியாள் அடக்க ஆலயம், முதலியவற்றுடன் ஒலிவத் தோப்பு என அழைக்கப்படும் ஜெத்சமெனிப் பூங்காவையும் தரிசித்தோம். பழமைவாய்ந்த அந்த ஒலிவ மரங்கள் இன்றும் பரிசுத்தமாய் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இறைமகன் தனது சீடருடன் இரவுணவு உண்ட ஆலயம், தாவீதின் கல்லறை, இராயப்பர் இயேசுவை மறுதலித்த இடம், மரியாள் உறங்கும் ஆலயம் என பல பரிசுத்த இடங்களையும் தரிசித்தோம். ஆங்காங்கு அந்த இடத்தின் சிறப்புக்களை அறிந்து கொண்டதுடன் அந்த இடத்திற்குரிய இறைவார்த்தைகளையும் செபமாலையையும் தியானிக்கத் தவறவில்லை. சில இடங்கள் ஓத்தடைஸ் எனப்படும் யூதஇன மதக்குழுவினராலும் இன்னும் சில கத்தோலிக்க பிரிவினராலும் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதைக் காணக்கூடியாய் இருந்தது.


       96871_0dc5d89e.jpg

      25659840_1744234395647157_44253881719818

 

  யூத மக்களால் புனிதமாக மதிக்கப்படும் புலம்பல் மதில் முன் ஆண்கள் ஒரு பகுதியிலும் பெண்கள் ஒருபகுதியிலுமாக மதிலில் தலையை முட்டி செபித்துக்கொண்டிருந்தனர். மதிலுக்கு அப்பாலுள்ள தம் வணக்கத்தலம் முஸ்லிம் பிரிவினரின் பகுதிக்குள் இருப்பதால் இவர்களால் அங்கு சென்று வணக்கம் செய்ய முடியாது. நாமும் அம் மதிலுக்கு முன் சென்று அதற்கு மரியாதை செலுத்தி வி;ட்டு வந்தோம், அவ் இடத்தை மிகவும் புனிதமாகப் பேணி வருவதால் அங்கு செல்வதற்கு மிகவும் பாதுகாப்பு செய்துள்ளனர். மறுநாள் மரியாள் பிறந்த வீடு,  அதைத் தொடர்ந்து பெத்சாயிதாக் குளம் சென்றோம். அக் குளம் நீரின்றி சிதைவடைந்த நிலையில் இருந்தாலும் இறைமகன் புதுமைகள் செய்த புனித நினைவுடன் இறைவார்த்தை வாசித்து செபித்து தியானித்தோம். அதைத் தொடர்ந்து போஞ்சு பிலாத்துவின் அரண்மனை, இயேசுவுக்கு மரணத் தீர்ப்பிட்ட  இடம், சித்திரவதைக் கூடம், அங்குதான் அவரது சிலுவைப் பாதை ஆரம்பித்த அந்த துக்க நிகழ்வுகளின் ஆரம்பமாக இருந்தது. சித்திரவதைக் கூடங்கள் நிலக்கீழ் அறைகளாக மிக ஒடுங்கிய வாயில்களுடன் அமைந்திருந்தன. அவற்றைப் பார்த்தபொழுது அனைவரும் துக்கம் தாங்க முடியாமல் விழிகளில் நீர்வழிய விம்மி அழுதோம். எம் கண்முன் இறைகனின் பாடுகளுடன் எம் இன இளைஞர்களின் பாடுகளும் மனக்கண்ணில் நிழலாடி மனப்பாரத்துடன் அவ்விடத்தில் இறைவார்த்தை வாசித்து செபித்து இறைவனை மகிமைப்படுத்தினோம்.
 

26047222_1744234778980452_16160141730640

 

 

      சிலுவைப் பாதையின் ஒவ்வொரு நிலையிலும் சிறுசிறு ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவ் ஒவ்வொரு நிலையிலும் முழங்கால் படியிட்டு தியானித்து செபித்து பாடல்கள் பாடி ஒருங்கிணைந்து இறை உணர்வுடன் ஒன்றித்தோம். பதினான்கு நிலைகளையும் தாண்டி இயேசுவின் சிலுவை நிறுத்திய இடமான கல்வாரி மலையின் குன்றை அடைந்தோம். அப் பரிசுத்த தலத்தில் உட்புகுவதற்கு மிகுந்த நீளமான வரிசையில் நின்று போகவேண்டி இருந்தது. உலகின் பல நாட்டு மக்களும் குழுக்களாக அங்கு வந்திருப்பதைக் காணக்கூடியதாய் இருந்தது. இயேசுவின் சிலுவை நிறுத்திய அந்த பரிசுத்த இடம் ஒருவர் ஒருவராக வணக்கம் செலுத்தக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இயேசுவின் உடல் அடக்கம் பண்ணப்பட்ட கல்லறையையும் தரிசித்தோம். எம் பாவம் போக்க மனுவுருவாகி மரணத்தை ஏற்று உயிர்த்த கிறீஸ்துவின் அருள் பெற்றவர்களாய் திருப்பலி ஒப்புக்கொடுத்தோம். கல்வாரித் திருப்பலிக்கு ஆயத்தமாக முதல்நாள் இரவு குருவானவரை எம் தங்குமிடத்திற்கு அழைத்து நாம் பாவமன்னிப்புப் பெற ஒழுங்கு செய்த எம் ஒழுங்கமைப்பாளர் திரு.அன்ரன் பிலிப் அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
          

26047023_1744233035647293_71939765944921

 

26168113_1744240078979922_22288303605420

   இறுதி நாளான 3ம் திகதி காலை எமது பயணப் பொதிகளுடன் ஆயத்தமாக நின்ற வாகனத்தில் ஏறி எம்மாவுஸ் நகருக்குச் சென்றோம். அன்று ஞாயிற்றுக்கிழமை. எம்மாவுசில் உள்ள குருமத்தில் உள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டபின் இயேசு மரணத்தை வென்ற பின் எம்மாவுஸ் சீடருடன் உணவருந்திய அந்த இடத்தை தரிசித்தோம்.
       

அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறந்த நேரக் கட்டுப்பாட்டுடனும் ஒழுங்கமைப்புடனும் செப உணர்வுடனும் எம்மை வழி நடத்திய திரு.அன்ரன் பிலிப் அவர்களுக்கும் அவருடன் கூட இருந்து உதவி புரிந்த நெறிப்படுத்திய திருமதி.அன்ரன் பிலிப் அவர்களுக்கும் அனைவரும் மனம் நிறைந்த நன்றி சொன்னோம். இறைவனால் கூடாதது ஒன்றுமில்லை என்ற கூற்றுக்கிணங்க இவர்களைபப் பயன்படுத்தி எம்மை காத்து வழிநடத்திய இறைவனுக்கு நன்றி கூறி இஸ்ரவேலின் தெல்அவி விமான நிலையத்தில் புனித பூமிக்கு விடை கொடுத்து ரொறன்ரோவுக்கு புறப்பட்டோம்.
       எம் வாழ்நாளில் மறக்க முடியாத மகத்துவமான இப் புனித பயணத்திற்கு வழிவகுத்த இறைவனுக்கும் எம் பயண ஒழுங்கமைப்பினருக்கம் எம் இதயம் நிறைந்த நன்றிகள். அத்துடன் இத் திரு யாத்திரையில் பங்குபற்றிய அனைவரும் அன்புடனும் நட்புடனும் சகோதரத்துடனும் ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்து கொண்டனர். எமது குழுவில் சில வாலிபப் பிள்ளைகளும் கலந்து கொண்டது சிறப்பம்சம். எம்மோடு பயணித்து நட்புடன் பிரிந்து சென்ற அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள். இறை வழியில் தொடர்ந்தும் பயணிப்போம்.

 

26055644_1744259815644615_86647744231472

 

காவலூர் கண்மணி

பிரிவுகள் தரும் சுமை.

1 year 8 months ago
பிரிவுகள் தரும் சுமை.

01.10.2017. அவள் என் கைகளிலிருந்து விடுபட்டு தனித்து வாழப்போக வேண்டிய தருணத்தை காலம் எழுதிக் கொண்டு கடந்தது.
 
வாழ்வின் அடுத்த கட்டம் அவளது பல்கலைக்கழகப்படிப்புக்கான பிரிவு. 
தனது அறையிலிருந்த தனது பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
 
அம்மா...குண்டம்மா..., என்ற அவளது குறும்பும் கதைகளும் இனி என்னைவிட்டுத் தொலைவாகப் போகிறது.

படிக்கத்தானே போறாள்....,யோசிக்காதை....சொல்லும் தோழமையின் முன்னால் உடையும் கண்ணீரை மறைக்க எடுக்கும் முயற்சிகள் தோற்றுப் போக மௌனம் கொள்கிறேன்.
 
இந்த நாட்களை எப்படிக் கடப்பேன்...? இரவுகள் இப்போது தூக்கம் வருவதில்லை. பிள்ளைகளின் நினைவுகளிலேயே அறுபடும் உறக்கத்தை மீட்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் உதவுவதில்லை.

காரணம் சொல்லத் தெரியாது கணங்கள் ஒவ்வொன்றையும் கண்ணீரால் கடக்கிறேன். சந்திக்கும் நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் தைரியம் இல்லாமல் கண்ணீராலேயே அவர்கள் முன்னும் தொலைகிறேன்.

எங்களுக்கு நாடுமில்லை வீடுமில்லை...பலதடவைகள் சொல்லிவிட்டாள். 
 
சொந்தநாடில்லாத துயரத்தை அவள் இப்போது அதிகம் உணர்கிறாள் என்பதை அவள் சொல்லும் கதைகளில் இருந்து புரிகிறேன்.

சொந்த நிலமில்லாதவர்களின் பிள்ளைகள் என்றோ ஒருநாள் தன் வேர்களைத் தேடும் என்பதை என் குழந்தையின் ஏக்கங்களிலிருந்து கற்றுக் கொள்கிறேன்.

19வருடம் அவள் அருகாமை இல்லாத நாட்கள் மிகவும் அரிதானவை.

2 அல்லது 3நாட்கள் சென்று வரும் பாடசாலை பயணங்கள தவிர அவள் என்னைப்பிரிந்து தூரம் போனதில்லை.
 
அவர்கள் வரும் நாள்வரையும் அவர்களது
படுக்கையில் உறங்கி அவர்கள் அறையில் என்னைத் தொலைப்பேன்.
 
02.10.2017 அவளும் நானும் அவளது தோழிகள் இருவரும் அவளது பல்கலைக்கழக தங்குவிடுதிக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டோம். 

எண்ணங்கள் எங்கே போகிறது என்பது தெரியாமல் ஏதேதோ நினைவுகள். எனது காரும் 61ம் இலக்க நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறேன். 

அவள் அடுத்துவரும் தனிமையை புதிய இடம் புதிய மனிதர்கள் எல்லோரையும் சமாளித்து தன்னை எப்படி தயார்படுத்திக் கொள்ளப் போகிறாள் என்பதே என் அந்தரமாக இருந்தது.

என் குழந்தை என் முன்னால் பெரிய மனிசியாக தனது அலுவல்களை ஓடியோடிச் செய்து கொண்டிருந்தாள். 

அவள் போல நூற்றுக்கணக்கான மாணவமாணவியர் அந்தப் பகுதியெங்கும் தங்கள் பொருட்களோடும் உறவினர்களோடும் திரிந்தார்கள். 

அம்மா,அப்பா,சகோதரர்கள்,பேரன்,பேர்த்தி என ஆளாளுக்கு அவர்களது பொருட்களைக் காவிவந்து கொண்டிருந்தார்கள்.

என் குழந்தைக்கு அனைத்து உறவாயும் நானொருத்தி மட்டுமே. அவள் தனக்குள் அழுதிருப்பாள். உறவுகளே இல்லாது நாங்கள் தனித்திருப்பதை நிச்சயம் உணர்ந்திருப்பாள்.

02.10.2017 தொடக்கம் 04.10.2017 வரையும் அவளது பல்கலைக்கழக தங்குமிட விடுதிக்கு போய் வந்து கொண்டிருக்கிறேன். பொருட்கள் கொள்வனவு செய்தல் , பதிவுகள் என ஓடியது.

05.10.2017 காலை எட்டு மணிக்கு அவளது மீதிப் பொருட்களையும் காரில் ஏற்றினோம். 
இனிமேல் இந்த வீட்டுக்கு வரமாட்டேன்.... 
 
தான்உலவிய ஒவ்வொரு இடமாய் நின்று நின்று பயணம் சொன்னாள். அவளுக்கு 6வயதில் இந்த வீட்டுக்கு குடிவந்தோம். 
 
துயரங்களைத்தான் அதிகம் சுமந்த வீடு. 
2012இல் இந்த வீட்டை விட்டு எங்காவது போவோம் எனக் கேட்ட போது ஓமென்றாள். 
 
வீட்டைவிட்டு வெளியேற இருந்த தடைகளை பிள்ளைகள் இருவரையும் வைத்துக் கொண்டு அலைய துணிவும் இருக்கவில்லை. அதற்கான வழிகளும் கடினமாக இருந்தது. 
 
அவளும்பல்கலைக்கழகம் போகும் வரை சூனியம் சூழ்ந்த இந்த வீட்டிலே இருப்போமென என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.

உளவள ஆலோசகர்களும் மருத்துவர்களும் இந்த வீட்டைவிட்டு வெளியே போ தூரம் போ... புதிய இடம் புதிய வாழ்வு உன்னையும் பிள்ளைகளையும் மீட்கும் என சொன்னவர்களின் வார்த்தைகளை செயற்படுத்தக் கூடிய வலு என்னிடம் இல்லாதிருந்தது.

அவளும் ஒரு கட்டத்தில் இந்த வீட்டில இருக்கேலாது வெளியேறுவம் என அழுத காலமும் ஒன்று வந்தது. அது அவளுக்கான பள்ளிப்படிப்பு இறுதிக்கால இரண்டு வருடங்களாக இருந்தது. 

பிள்ளையின்ரை படிப்பு முடிஞ்சு நீங்க யூனி போக ஒரேயடியா மாறுவம். அதுவரை பொறம்மா...அவளைச் சமாதானம் செய்தாலும் அவள் இந்த வீட்டில் அமைதியாக இருந்தது அரிது. 
000          000             000
காரில் ஏறியவள் தனது பொருட்களை மீண்டும் சரிபார்த்தாள். இன்னும் சில மணித்தியாலங்களில் அவளைத் தனியே விட்டுவிட்டு நான் தனியே திரும்பி வர வேண்டும்.

குண்டம்மா கவனமா இருங்கோ , வடிவாச் சாப்பிடுங்கோ , நித்திரை கொள்ளுங்கோ, மருந்தை ஒழுங்கா போடுங்கோ,எப்ப கதைக்க வேணுமெண்டாலும் எந்த நேரமெண்டாலும் என்னோடை கதையுங்கோ....,
அவள் பெரிய பட்டியலொன்றை சொல்லிக் கொண்டிருந்தாள்.

பிள்ளைகளே என் இதுவரைகால உலகம். அவர்களும் ஒருநாள் தங்கள் பாதைகள் நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதை மறந்த அம்மா நான். 

கொண்டு வந்த பொருட்களை அவளும் நானும் அவளது அறைக்குக் கொண்டு சென்றோம். இனி சமையல்,படிப்பு,படுக்கை, இருப்பு எல்லாமே அந்த ஒற்றை அறையில் தான். காலம் இப்படியும் ஒரு நாளை என் குழந்தைக்குக் கொடுக்குமென்று நினைத்திருக்காத எனக்கு அது பெரும் ஏமாற்றமே.

இன்றிலிருந்து அவள் தனியே இருக்கப் போகிறாள். தனிமையை உணராத மன அமைதியையும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அவளுக்கு காலம் கொடுக்க வேண்டும். எனது பிரார்த்தனைகள் அவளைக் காக்குமென்று நம்புகிறேன்.

சரி செல்லம் அம்மா வெளிக்கிடப்போறன்...கவனம்...அவள்கட்டிப்பிடித்து காதுக்குள் சொன்னாள். குண்டம்மா சந்தோசமா இருந்தா நான் சந்தோசமா இருப்பேன். அம்மாச் செல்லம் கவனம். 

என் குழந்தையின் அணைப்பிலிருந்து விடுபட்டு நடக்கிறேன். உடல் நடுங்குகிறது.நெஞ்சுக்குள் ஏதோ வலி. உயிரைப்பிடுங்கிக் கொள்கிறது துயர். 
வாகனத்தரிப்பிடம் வரையும் வந்தாள். வழியனுப்பிவிட்டு திரும்பி நடக்கிறாள். 

வாகனம் 61நெடுஞ்சாலைக்கு ஏறுகிறது. கண்ணீர் வழிகிறது. கத்தியழுகிறேன். இப்போதெல்லாம் இப்படித்தான் எனது பயணங்கள் அமைகிறது. காரில் ஒலிக்கும் பாடலும் இலத்திரனியல் வழிகாட்டியின் குரலும் தான் என்னோடு கூட வருகிறது. 

ஒலிக்கும் பாடலைச் சேர்ந்து பாடுவதும் , சில பாடல்களில் கரைந்து அழுவதுமாக அலைகிறேன். கார் போன போக்கில் என் பயணங்கள் தொடர்கிறது.

கார் ஓடுகிறது வீதிவழியே. பிள்ளைகளின் நினைவுகளோடு ஓடுகிறது எண்ணம். பிள்ளையை திரும்ப கூட்டிவா என்கிறது உள் மனசு. வந்த தரிப்பிடமொன்றில் காரை நிறுத்துகிறேன். அதிகம் ஆட்களில்லாத அந்தத் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கி அருகிருந்த காட்டுவழி கொஞ்சத்தூரம் நடக்கிறேன். 

பிள்ளைகளே கடைசிவரையென இதுவரை ஓடிய என் கால்களை இந்த நாட்கள் இழுத்துக் கட்டி வைத்துள்ளது. காலம் மாறும் நீயும் மாறவேண்டுமென்கிறார்கள் நண்பர்கள். என்னால் முடியவில்லை. 
 
இதுவும்கடந்து போகுமென்று ஆறுதலடையவும் முடியவில்லை. 

இதுவும் கடந்து போக வேண்டும். 
 

தந்தையுமானவன்.....!

2 years 2 months ago

தந்தையுமானவன்.....!

அன்று நல்ல முகூர்த்தநாளாக இருக்க வேண்டும். சந்நதி முருகன் ஆலயத்தில் வள்ளி அம்மன் ஆலய முன்றலில் அன்று இருபது திருமணங்கள் வரை நடந்தன.எதிர்பாராமல் அவசரம் அவசரமாக இருபத்தியொராவது திருமணமாக கதிர்வேலுக்கும் வசந்திக்கும் திருமணம் நடக்கின்றது. விதி மிகவும் விசித்திரமானது.

அன்று காலை சுன்னாகத்தில் ஒரு பனங்கூடலுக்குள் மென்பந்தில் நண்பர்களுடன் கிரிக்கட் விளையாடும் போதோ அல்லது மத்தியானம் அம்மா திட்டிக் கொண்டு சாப்பாடு போடும்போதோ ( இது அம்மாவின் டெக்னிக்,தான் திட்டாது விட்டால்,அப்பா ஆரம்பித்து அவன் சாப்பிடாமல் வெளியே போய்விடுவான்). அதனால் அம்மா முந்திக் கொண்டு அவனைப் பேசிக்கொண்டு தாராளமாய் சாப்பாடு போடுவாள். அவர்களுக்கு தெரியாது அன்று அங்கு கதிர்வேலுக்கு கல்யாணம் நடக்குமென்று.

அப்போது சயிக்கிளில் ஓடியபடியே படலையை திறந்து கொண்டு கார்த்திக் வந்து இறங்குகின்றான். கையில் ஒரு போத்தலில் காய்ச்சலுக்கு கட்டயடி ஆஸ்பத்திரியில் வாங்கிய கலர் மருந்து இருக்குது.அம்மா கேட்க்கிறாள், என்னடா வடிவாய் சொல்லி மருந்து மாத்திரை வாங்கினியா. ஓமனை, யூரின் டெஸ்ட் பண்ண வேணும் என்று சொன்னவை. நாளைக்கு காலைமை வாறன் என்று சொல்லிட்டு வந்தனான். கிடாய்க்கு புண்ணாக்கு தீத்திக் கொண்டிருந்த அப்பா, அதென்னடி பிள்ளை யூரினாம் என்று பக்கத்தில் குலை கட்டிக் கொண்டிருந்த மூத்தவள் தேன்மொழியிடம் கேட்க அவளும் அது ஐயா சோதிக்கிறதுக்காக மூத்திரம் கேட்டிருக்கினம். உடனே மகனிடம் குறுக்கிட்டு... ஏண்டா அத அங்கன பேஞ்சு குடுத்திட்டு வாரத விட்டிட்டு இஞ்சை என்ன அலுமாரிக்கை கிடக்கெண்டு எடுத்துக் கொண்டு போக வந்தனியே...! அவனுக்கு முகம் உர் என்று வருகுது. அம்மா உடனே ஏன்டா அவர் கேட்கிறதில என்ன தப்பு. எனை நீயும் சேர்ந்து விசர்க்கத கதையாதையனை. அதுக்கு விடிய வெறும் வயித்தோடதான் போய்க் குடுக்க வேண்டும். அதுதானே பார்த்தேன் நீ விடிய காய்சசாலோட பழஞ்சோறையும் சாப்பிடேக்கை நினைச்சனான். தங்கை சௌம்யா மெதுவாய் சிரிக்கிறாள். உரத்து சிரித்தால் குட்டு விழும் என்று அவளுக்கு தெரியும்.

வருவார்.....!    

லின்சன்

4 years 8 months ago

லின்சன் குடும்பத்தின் கடைக்குட்டி, மூத்தவர்கள் இருவரும் பெண்கள் .தந்தை இளம் வயதிலயே இறக்க தாயின் மீது குடும்ப சுமை விழுகின்றது.வீட்டின் செல்லப்பிள்ளை லின்சன் .சிறுவயது முதல் பெண்களுடன் தான் அவன் அதிகமாக விளையாடுவான்,ஆண் நண்பர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

சகோதரிகளின் உடைகளை சிறுவயதில் அவனுக்கு அணிந்துவித்து அழகுபார்ப்பாள் தாயார்.அவனுக்கு அந்த ஆடைகள் மிகவும் பிடித்தமானதாகவிருந்தது.பாடசாலைக்கு செல்லும் வயதிலும் சகோதரிகளின் ஆடைகளை அணிந்து மகிழ்வான்,தாயார் சகோதரிகள் பேசி தடுத்தாலும் அவர்களுக்கு தெரியாமல் தனிமையில் அணிந்து மகிழ்வான்.

பாடசாலையிலும் அவன் பெண்களுடனே அதிகம் பழகினான் .இது பாடசாலை அதிபருக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது.அந்த சமுகம் ஆண்கள் பெண்களுடன் பழகுவதை ஒரு மதகுற்றமாக கருதுகின்ற சமுகமாகும்.இதனால் அவனை ஆண்கள் கல்வி பயிலும் தனியார் பாடசாலைக்கு அனுப்பி வைக்கும்படி அதிபர் தாயாருக்கு அறிவுறுத்தினார்

அதிபரின் வேண்டுகொளின்படி அவனை தனியார் பாடசாலையில் அனுமதித்தாள் தாயார் .அவர்களின் கிராமத்திலிருந்து சில மைல் தொலைவில் பாடசாலை இருந்தபடியால் ,விடுதியில் தங்கியிருந்து படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

முதல் நாள் பாடசாலை விடுதியில் தாயாரிடமிருந்து பிரியாவிடை பெறும்பொழுது அந்த விடுதியே அதிரும் படி அழுதான்.விடுதி மாணவர்கள் அவனை சமாதனப்படுத்தினார்கள் .விடுதி ஆசிரியர் அவனை மடியில் இருத்தி அன்பாக பேசினார். அவன் அமைதியானவுடன் அவனுக்கு அவனது கட்டில் , கோப்பை போன்றவற்றை காட்டினார்.

தாயாரும் பிரிய மனமில்லாது அவனிடமிருந்து விடை பெற்று சென்றாள்.விடுதியில் முதல்நாள் இரவு படுக்கைக்கு செல்லும் பொழுது தனியாக படுக்க பயமாக இருக்கிறது என விடுதி ஆசிரியரிடம் சொல்லி அழுதான் , விடுதியில் பலர் இருக்கின்றனர் நீ பயப்படாமல் தூங்கு நான் இரவு வந்து உன்னை பார்க்கின்றேன் ,இவனின் பெயர் கென்ட் உனது பக்கத்து கட்டிலில் படுத்திருப்பான் அவசர உதவி தேவை என்றால் இவனிடம் கேள் ,இவன் தான் இந்த விடுதியின் மொனிட்டர் என அறிமுகப்படுத்தி வைத்தார் .கென்ட் உயர்தர வகுப்பில் கல்வி கற்றுகொண்டிருந்தார். லின்சனை கண்ட கென்ட் தன்நிலை மறந்தான் .கென்டினின் அன்பான உபசரிப்பால் லின்சனுக்கு வீட்டின் ஞாபகங்கள் மெல்ல மெல்ல அகலத்தொடங்கியது.

அன்று கென்ட் தன்னிடம் உள்ள சில ஆபாசபடங்களை மேசையில் வைத்து பார்த்து கொண்டிருந்தான்.தற்செயலாக அங்கு வந்த லின்சன் அதை கவனித்துவிட்டான். இருந்தாலும் அதை அவன் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.கென்ட் அந்த புத்தகத்தை வேண்டுமென்றே லின்சன் பார்க்கும் படி மறைத்துவைத்துவிட்டு அங்கு இருந்து சென்றுவிட்டான். அவன் சென்றவுடன் லின்சன் அந்த புத்தகத்தை எடுத்து பார்க்க தொடங்கினான்.அதை பார்க்க தொடங்கியவுடன் அவனது அந்தரங்க உறுப்பு அவனது சொல்லை கேட்காமல் சுதந்திரமாக செயல்பட தொடங்கிவிட்டது. கென்ட் தனது திட்டம் சரியாக செயல்படுவதை லின்சனின் அந்தரங்க உறுப்பின் செயல்களின் மூலமறிந்து கொண்டான்.

அவனுக்கு அருகில் சென்று லின்சனின் உணர்ச்சிகளை தூண்டி தனது கட்டளைகளுக்கு அடிபணியவைத்தான்.

ஒவ்வொரு தடவையும் கென்ட தனது உணர்ச்சிகள் தீர்ந்தவுடன் லின்சனை ஆடைகளை அணிந்து கொண்டு உடனே வெளியே சென்றுவிடு யாராவது பார்த்துவிடுவார்கள் என எச்சரிக்கை செய்து அனுப்பிவிடுவான்.இதனால் லின்சன் தனது உணர்ச்சிகளுக்கு வடிகால் தேட தன்னையே நம்பவேண்டிய சூழ்நிலை பல தடவை ஏற்பட்டது.

சகமாணவர்களுக்கு இந்த விடயம் தெரிய தொடங்கிவிட்டது."பக்லா" என்று சக மாணவன் ஒருத்தன் இவனை அழைத்தான் .அந்த கிராமத்தில் பக்லா என்றால் அலி என்று அர்த்தம். இதனால் ஆத்திரமடைந்த லின்சன் அவனை பலமாக தாக்கி அருகிலிருந்த கூறிய ஆயுதத்தை காட்டி குத்தி போடுவேன் என மிரட்டினான்.என்னை ஆண் என்று சொல்லுங்கள் அல்லது பெண் என்று அழையுங்கள் ஆனால் பக்லா என்று அழைக்காதீர்கள் மீறி அழைத்தீர்கள் என்றால் கொலை செய்து விடுவேன் என எச்சரித்து பாடசாலையை விட்டு வெளியெ சென்றுவிட்டான்.

உல்லாச விடுதியில் பணியாளர் வேலையில் அமர்ந்தான் அங்கு வரும் வெளிநாட்டு ஆண்களுடன் இவனுக்கு தொடர்புகள் உண்டானது .அப்படி தொடர்பில் வந்தவன் தான் மைக்கல் .மைக்கல் புகைப்படக்கலைஞன் மொடல் அழகிகளை புகைப்படம் எடுப்பவன்.அவன் எடுத்த பல அழகிகளின் படங்களை காட்டினான் .உனக்கு மார்பகங்கள் இருந்தால் நீயும் பிரபல மொடலாக வந்திருப்பாய்,என சொல்லிய படியே அவனது கன்னத்தில் முத்தமிட்டான்.

"உன்னை திருமணம்செய்து அவுஸ்ரேலியாவுக்கு அழைத்து செகின்றேன் உனக்கு சம்மதமா?" .

"என்னையா?நான் ஆண் என்னை எப்படி, திருமணம் செய்ய முடியும் "

"எங்கள் நாட்டில் இதற்கெல்லாம் சட்டமிருக்கு "

"அடுத்த தடவை வரும்பொழுது சகல ஏற்பாட்டுடனும் வருகின்றேன்,நீ பாஸ்போர்ட்டை எடுத்து தயாராக இரு"

மேலதிகாரியுடன் அவுஸ்ரேலியா செல்வதாக தாயாரிடம் சொன்னான்.தாயார் சகோதரிமார் எல்லோரும் மகழ்ச்சியடைந்தனர்

மூன்று மாத்தின் பின் சிட்னி விமான நிலையத்தில் மைக்கலுடன் வந்திறங்கினான்.மைக்கல் அவனை தனது உதவியாளராக சகலருக்கும் அறிமுகப்படுத்தினான்.சிலருக்கு மட்டும் தன்னுடைய ஆசைநாயகன் என சொல்லி வைத்தான்,.

இவன் ஒரு ஆண் என ஒரு மொடலழகியை காட்டினான்.அவன் அதிர்சியடைந்தான் அது எப்படி அவளுக்கு /அவனுக்கு மார்பகங்கள் இருக்கு ?

"சத்திர சிகிச்சை மூலம் அவன் அவளாக மாறிவிட்டாள்"

அதன்பின்பு அவளை கண்டாள் தானாக சென்று அவளிடம் சுகம் விசாரிப்பான் அவளும் இவனுடன் நெருங்கி பழகதொடங்கி விட்டாள்.மொடல் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாம் என அவள் கூறியதை கேட்ட லின்சனுக்கு தானும் மொடலக வேண்டுமென்ற ஆசை வரதொடங்கி விட்டது.தனது விருப்பத்தை மைக்கலிடம் சொன்னான் .மைக்கல் சம்மதம் தெரிவித்து தன்னை விவாக ரத்து செய்யும் படி கேட்டு கொண்டான்.

லின்சன் லின்சியாக மாறி பல மொடல்ழகிகளுகு போட்டியாக பணம் சம்பாதித்தான்/ள்.

சில வியாபார பெரும்புள்ளிகளுக்கு ஆசைநாயகியாகவும் இருந்து பணம் சம்பாதிதாள்/ன்.ஒரு வாடிக்கயாளன் அவளை தன்னுடன் நிரந்தரமாக தங்கும்படி கேட்டுகொண்டான் லின்சியும் பணத்துக்கு ஆசைப்பட்டு சம்மதித்தாள்.ஒருநாள் இருவரும் வாக்குவாதத்தில் இடுபட்டனர்.ஆத்திரமடைந்த லின்சி தனது ஆண்குணத்தை வெளிக்காட்டினாள் உன்னை குத்தி கொலைசெய்து அடுப்புக்குள் போடுவேன் என எச்சரித்துவிட்டு உறங்க சென்றுவிட்டாள்/ன் . .இதை ஒரு கெளரவ குறைச்சலாக அவளது வாடிக்கயாளன் உணர்ந்தான்.

அன்று இரவு லின்சி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் .இதையறிந்த வாடிக்கையாளன் சமையலறையிலிருந்த மாமிசம் வெட்டும் கத்தியால் அவளது கழுத்தை வெட்டி ,அங்கங்களையும் வெட்டி அவண்னில் போட்டு விட்டான்....தூர்நாற்றம் அந்த வீட்டை சுற்றி வருவதாக பொலிசார்க்கு அயலவர்கள் தகவல் கொடுத்தனர்.பொலிஸ் படை வருவதை அறிந்த வாடிக்கையாளன் பெரிய குப்பை தொட்டியுனுள் ஒடி மறைந்து தனது கையை வெட்டி தற்கொலை செய்து கொண்டான்.

உனது மகள் லின்சி அவுஸ்ரெலியாவில் இறந்து விட்டார் என தூதரக அதிகாரிகள் தாயாருக்கு செய்தி அனுப்பினார்கள்,ஆனால் அவள் நம்பவில்லை.எனது மகன் தான் அவுஸ்ரேலியாவில் இருக்கின்றான் ,மகள்மார் இருவரும் என்னுடன் இங்குதான் இருக்கிறார்கள் ,தப்பான விலாசத்திற்க்கு செய்தியை அனுப்பிருக்கிறார்கள் என புலம்பத்த்தொடங்கிட்டாள்....

நெரிசலில் ஓர் மோகம்

5 years 9 months ago

நெரிசலில் ஓர் மோகம்

மத்திய இலண்டனில் உள்ள தலைமை அலுவலகத்தின் பாரிய சுழல் கதவுகளினூடாக வெளியே வந்தபோது டிசம்பர் மாதக் குளிர் வேகமான காற்றினால் சுழன்றடித்து ஊசிகளாக காது மடல்களினூடு உள்ளிறங்கிக் குத்தத் தொடங்கியது. அவசர அவசரமாக ஜக்கற்றின் zipபைக் கழுத்து வரை உயர்த்தி பொத்தான்களை பூட்டிக்கொண்டு லண்டன் பிரிட்ஜ் ரியூப் (சுரங்க ரயில்) ஸ்ரேசனை நோக்கி விரைந்து நடக்கும்போது அருகிலிருந்த அதியுயர் கட்டடத்தில் இருந்த கடிகாரம் ஐந்துமுறை அடித்து ஓய்ந்தது. நெரிசல் மிகுந்த பயணங்களைத் தவிர்க்க வேண்டுமென்று காலையில் புறப்படும்போது நினைத்திருந்தாலும் அலுவலகத்தில் முக்கியமான மேலாளர்களுடன் நடந்த கூட்டம் விரும்பியமாதிரி குறித்த நேரத்திற்கே முடிந்திருக்கவில்லை. அலுவலக வேலைகள் முடியும் ஐந்து மணி தாண்டிவிட்டதால் எல்லா ரயில், பஸ் நிலையங்களும் எள்ளுப் போட்டால்கூட கீழே விழமுடியாதபடி வேலைமுடிந்து வரும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்துவிடும் என்பது நினைவுக்குவர அசதியுடன் எரிச்சலும் சேர்ந்துகொண்டது.

படிக்கும் காலங்களில் இப்படியான நெரிசல் மிக்க காலைகளிலும் மாலைகளிலும் இலண்டனின் புறநகர் பகுதியில் இருந்து மத்திய இலண்டன் பகுதிக்கு பல வருடங்கள் பயணித்து அனுபவம் இருந்ததால் நான் மத்திய இலண்டன் பகுதிக்கு நெரிசல் நேரங்களில் வருவதை ஒருபோதும் விரும்புவதில்லை. இதற்காகவே படித்து முடித்து தொழில்வாய்ப்புக்களைத் தேடும்போது கூட கவனமாக மத்திய இலண்டன் பகுதி வேலைகளைப் புறக்கணித்திருந்தேன். ஆனாலும் இன்று தலைமை அலுவலகத்திற்கு வரவேண்டிய கட்டாய சூழல் இருந்ததால் தவிர்க்கமுடியவில்லை.

புறநகரப் பகுதிகளில் இருந்து ரியூப் பயணத்தை ஆரம்பித்தாலும் நெரிசல் மிக்க காலை மாலை வேளைகளில் எப்போதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்துகொண்டே இருப்பதால், ஒரு போதும் ஆசனங்களில் இருந்து பயணங்களை மேற்கொள்ள முடிந்ததில்லை. நெரிசல்கள் நிறைந்த பிரயாணங்களில் இருந்து தப்பிக்கவேண்டும் என்பதாலும், எஸ்கலேற்றர்களின் வலது பக்கத்தில் நின்று பயணிப்பதை வயது போனவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இயலாதவர்களுக்கும் என்று மனம் கணித்து வைத்திருந்ததாலும், பரபரப்பான இலண்டன் வாழ்வில் இயைபாக்கம் அடைந்துள்ளதாக என்னையே நான் நம்பச் செய்யவேண்டியிருந்ததாலும், வேகமாக ரஜினிகாந்த் போன்று படிகளைப் பார்க்காமல் நேரே பார்த்துக் கொண்டு தடதடவென ஓடுவது காலைவேளை உடற்பயிற்சியின் ஒரு கூறு என்று நினைத்திருந்ததாலும் குறுகலான நகரும் படிகளில் பாரமான தோள் பையுடன் ஓடுவது எனக்கு வழமையான ஒரு பொழுதுபோக்கு.

சில நிமிடங்களுக்கு ஒன்றென இலண்டனின் சகல திசைகளிலிருந்தும் குறுக்கும் நெடுக்குமாக பல சுரங்கத் தடங்களில் ரியூப் ரயில்கள் அகிளான்கள்போல் நிலத்திற்குக் கீழ் பெருந்தொகையான மக்களைச் சுமந்து ஓடிக்கொண்டிருந்தாலும், சிலவேளைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது ரியூப்பில் ஏற முடியாமல் போகும் என்பதால், அவற்றின் வருகைக்காக பிளாற்ஃபோமில் கதவுகள் திறக்கப்படும்போது முதலாவதாக ஏறிக் கொள்ளவேண்டும் என்பதற்காக நேர்த்தியாக நிற்கவேண்டிய இடத்தை தெரிவு செய்து, கதவு திறக்க்கப்பட்டதும் உள்ளிருந்து இறங்கும் பயணிகளுக்கு ஒன்றிரண்டு செக்கன்கள் வழிவிட்டு, இறுதியாக இறங்கும் பயணியும் நானும் ஏறும் தருணத்தை ஒன்றாக ஒழுங்குபடுத்திக் கொள்வதும் ஒரு சுவாரசியமான விடயம்.

என்னதான் முண்டியடித்து ரியூப்பின் உள்ளே நுழைந்தாலும், சக பயணிகளுடன் முட்டுப்படாமல் நிற்பதற்குக் கூட இடம் இருக்காது. அப்படியிருந்தும் ஒருவருக்கு ஒருவர் நூலிழை இடைவெளியில் பயணிப்பது மிகவும் சவாலானதுதான். சுரங்கத்தினூடான பயணம் என்பதால் வெளியே வேடிக்கை பார்க்க எதுவுமில்லை என்பதாலும், பிறருடன் பேசாமல், பார்க்காமல் பயணிக்கவேண்டிய நியதியை கடைப்பிடிக்க வேண்டியிருப்பதாலும், இந்த நெரிசலுக்குள்ளும் கிடைக்கும் சிறு வெளிகளுக்குள்ளும் பத்திரிகைகளை அல்லது புத்தகங்களைப் படிப்பது பலருடைய வழக்கம். இப்போதெல்லாம் ஸ்மார்ட்ஃபோனிலும், ஈ-ரீடர்களிலும் எதையாவது படிப்பது/பார்ப்பது அல்லது அங்ரி பேர்ட் போன்ற விளையாட்டுக்களில் நேரத்தைச் செலவழிப்பதுதான் அதிகம். ஆயினும் நின்றுகொண்டே பயணிக்கும்போது படிப்பது அல்லது கட்ஜற்றை நோண்டுவது எனக்குப் பழக்கமில்லையாதலால், உலகத்தின் பெருநகர்களில் ஒன்றாக விளங்கும் இலண்டனில் பல்வேறு வகை மனிதர்கள், விதவிதமான கலாச்சார, நடையுடை பாவனைகளில் பயணிப்பதை வேடிக்கை பார்ப்பதில் எனது பயண நேரத்தைச் செலவழிப்பேன்.

நெரிசல் மிகுந்த வேளைகளில் மிக இள வயதினர்களைவிட வேலைக்குச் செல்லும் வயதினரே அதிகம் பயணிப்பார்கள். ரியூப் ரெயினில் திரளாக பயணிகள் நிறைந்திருந்தாலும், தமது குடும்பத்தின் நாளாந்தப் பிரச்சினைகளைப் பற்றி சிந்தித்துக் கொள்வதாலோ என்னவோ, கவலை ரேகைகள் தெரிய முகத்தை மலச்சிக்கல் உள்ளவர்கள் கடுமையாக வைத்துக்கொண்டு வேலைக்குச் செல்லுபவர்களில் அநேகர் zombie (நடைபிணங்கள்) களாகத் தோற்றம் அளிப்பார்கள். இந்த நிலை குத்திய வெறித்த பார்வையுடனான நடைபிணங்கள் ஒரு நாட்பொழுதைப் பாழாக்கிவிடுவார்கள் என்பதால் ஏறிக்கொள்ளும் பயணிகள் பெட்டியில் கவலைகள் அற்ற மலர்ந்த முகத்துடனான இளமை பொங்கும் சக பெண் பயணி யாராவது ஒருத்தியாவது இருக்கின்றாளா என்று கண்கள் வலைவீசித் தேடும். ஒவ்வொரு நாளும் மலரும் பூவைப் பார்த்து இரசிப்பதுபோல தினம் தினம் பயணிக்கும்போது ஒரு இளம் பெண்ணின் அழகான முகத்தை, பிளவுகள் சற்றே தெரியும் திரண்ட வெளிர் மார்புகளை, குட்டைச் சட்டையின் நீக்கல்களூடு தெரியும் வாளிப்பான தொடைகளை பார்த்துக் கொண்டு பயணிப்பது நெரிசலிலும் சந்தோஷத்துடன் கூடிய புத்துணர்ச்சியைத் தரும். இப்படியான தருணங்களில் பட்டினத்தாரின் “நித்தம் பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம்; கறந்த இடத்தை நாடுதே கண்” என்ற வரிகளின் தத்துவம் பரிபூரணமாக விளங்கும். ஒரு பெண்ணை விழுங்குவது போலத் தொடர்ந்து உற்று நோக்குவது மனதில் தீய எண்ணங்கள் உள்ளவன் என்ற தோற்றப்பாட்டைப் அவளுக்கும் பிறருக்கு உண்டாக்கலாம் என்பதால் இடையிடையே கண்கள் சுழன்று நடைபிணங்களாக இருப்பவர்களையும் அவதானிக்கும். ஆனாலும் சில நொடி ஆவர்த்தன இடைவெளிகளில் மீண்டும் பெண் மீது பார்வை படரும்.

மாலை நேரத்தில் பறவைகள் கூடுகளை நோக்கி பறப்பதுபோன்று வேலையை முடித்துக் கொண்ட மக்கள் கூட்டம் லண்டன் பிரிட்ஜ் ரியூப் ஸ்ரேசனை நோக்கி சிற்றெறும்புகள் சாரி சாரியாக தமது புற்றை நோக்கிப் போவதுபோன்று படையெடுத்துக் கொண்டிருந்தனர். ரியூப் ஸ்ரேசனை அண்மித்தபோது ஊசிகளாகக் குத்தும் பனிக்காற்று வீசும் சப்தத்தையும் மீறி கட்டட இடுக்குகளில் வசிக்கும் வெளிர்சாம்பல் வர்ணப் புறாக்களின் படபடப்போடு கூடிய குறுகும் சப்தம் கேட்டது. பாதசாரிகள் மற்றும் பயணிகள் திரளினுள் ஒரு எறும்பு போன்று நானும் சுரங்க வாயிலிலிருந்து கீழிறங்கும் அகல அகலமான படிகளில் வேகமாக இறங்கி, பயணச்சீட்டை ரிக்கற் மெசினில் அழுத்தி நான் போகவேண்டிய பிளாற்ஃபோம் இலக்கத்தை தொடர்ந்து நடந்துகொண்டே கண்களால் துழாவினேன். சரியான பிளாற்ஃபோமைக் அடையாளம் கண்டு அதற்குரிய எஸ்கலேற்றர் படிகளில் நின்றபடி பயணம் செய்யாமல், தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நெரிசலில் இருந்து விடுவிக்கும் என்று எண்ணியவாறே தட தடவென கீழே நோக்கி ஓடத் தொடங்கினேன். என்னைப் போலவே அதிகமானவர்களும் ஒவ்வொரு நொடியின் பெறுமதியை உணர்ந்தவர்களாக படிகளில் ஓடிக்கொண்டிருப்பதாகப் பட்டது.

பிளாற்ஃபோமில் பயணிகள் நிறைந்திருந்தாலும் நெரிசல் நேரக் கூட்டத்தைவிடக் குறைவு போன்று தோன்றியது. அடுத்த ரயில் இன்னும் இரண்டும் நிமிடங்களில் வரும் என்பதாகத் திரை காண்பித்தபோது எப்படியும் அந்த ரயிலில் இடம் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை முளைவிட்டது. ஆனாலும் பயணிகள் தொடர்ந்தும் வந்துகொண்டிருந்ததனால் பிளாற்ஃபோம் அடுத்த சில வினாடிகளில் நிறைந்துவிட்டது. சற்றுப் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தவேளை பிளாற்ஃபோம் விளிம்பிலுள்ள பாதுகாப்பிற்கான மஞ்சள் கோட்டிற்கும் எனக்கும் இடையில் இரண்டு வரிசையில் பயணிகள் நெருக்கியடித்துக்கொண்டு சேர்ந்துவிட்டார்கள். சில வினாடிகளில் வரப்போகின்ற ரயிலில் ஏறமுடியாமல் போகப் போகின்றதே என்ற எரிச்சலுடன் திரும்பிய வேளையில் எனக்கு முன்னால் ரயில் வரும் திசையைப் பார்த்தவாறு, சுரங்கத்தினூடு வேகமாக வரும் ரயிலினால் உந்தப்பட்ட காற்றில் கலந்த சுகந்த வாசனையோடும் அலைபாயும் கருங்கூந்தல் தோள்களிலும் பின் முதுகிலும் புரள அதீத இளமையான பெண் ஒருத்தி கடல் போன்ற பயணிகள் கூட்டத்திற்குள் கடற்கன்னி போன்று நிற்பதைக் கண்ணுற்றேன். புரளும் கேசமும், காதும், கழுத்தும் மாத்திரமே கண்ணுக்குத் தெரிந்தாலும் அவள் கட்டாயம் ஒரு இந்திய பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது. அந்தக் கணமே அசதியும் களைப்பும் வழிந்தோடி உற்சாகமும் மகிழ்வும் மனதிற்குள் பீறிட்டது.

--தொடரும்--

Checked
Sun, 09/22/2019 - 10:10
கதைக் களம் Latest Topics
Subscribe to கதைக் களம் feed