சிரிப்போம் சிறப்போம்

சிரிப்போம் சிறப்போம்

வேணாம் பிலிப்சு....

3 weeks 1 day ago

'வேணாம் பிலிப்சு....' இந்த பன்ச் வசனம் இப்ப தமிழகத்தில் வைரல்...

என்ன விசயம், என்று யூடியூபில் தட்டி பார்த்தால், இரண்டு டாஸ்மாக் தண்ணி பார்ட்டிகள்.... லோக்கல் கூலி வேலை செய்பவர்கள் போலுள்ளது...

அவர்களுக்கு இடையே நடக்கும் தண்ணி சண்டையே 'வேணாம் பிலிப்சு' என்று தொடங்குகிறது. யாரோ சூப்பரா வீடியோ எடுத்து போட்டு உள்ளார்கள்.

கடைசீல பிலிப்சு, கன்னத்தில அடி வாங்கி விழுந்துட்டார்.  

இங்கே அந்த விடீயோவைப் போடலாம் தான்.... ஆனால், 'நல்ல தமிழ்' தாராளமாக இருப்பதால், கத்திக்காரர்கள், கத்தியை சுழட்டிக் கொண்டு 'வேணாம் பிலிப்சு' என்று வந்து விடுவார்கள் என்பதால், நீங்களே தேடி ரசியுங்கள் என்று விட்டு விடுகிறேன். 

🤠 பாட்டி வடை சுட்ட கதையின் கதை 🤣

1 month ago

சிறு வயதில் நமக்கெல்லாம் முதன்முதலில் அறிமுகமான கதைகளில் ஒன்று பாட்டி வடை சுட்ட கதையாகும். காக்காவைப் பாட வைத்து வடையை அபகரித்துக் கொண்டோடிய நரியின் சாமர்த்தியத்தைக் கொண்டாடும் இக்கதையை இன்னோர் கோணத்தில் நோக்கிய போது சட்டென்று ஓர் சிந்தனை என் மனதில் உதித்தது.

அதாவது இக்கதையில் கஷ்டப்பட்டு வடை சுட்ட பாட்டிக்கு ஓர் நீதியும் கிடைக்கவில்லை. ஆகவே இக்கதையிலிருந்து இன்னோர் விடயத்தையும் கற்றுக்கொள்ள வேண்டுமே என்று வினவியபோது பின்வரும் விடை கிடைத்தது:

'எந்த அநியாயம் நடந்தாலும் சகித்துக்கொண்டு ரொம்பவும் அமைதியா இரு; நல்ல காலம் வர எல்லாம் சரியாகும் எனப் பொறுத்துக்கொண்டு இருப்பம்' என்று நினைச்சு ரொம்ப நல்லவனா இருந்தால் வடையைக் காக்கா தான் தூக்கிட்டுப் போய்டும்; அப்படி காக்கா அதைத் தவற விட்டாலும் வடை நரி கைல தான் சிக்கும். 'காக்கா'பிடிப்பவர்களும், 'குள்ளநரி'ப் புத்தியுடையோரும் மட்டுமே பிழைக்கத் தெரிந்த உலகம் இது; கதையில் கூட வடை சுட்ட பாட்டியை மறந்து போகும் உலகம்! 🤣

நம்முன்னோர்கள் எவ்வளவு பெரிய உண்மையை இக்கதையில் பூடகமாகச் சொல்லிச்சென்றுள்ளனர்!

🤡(***சிரிப்பதற்கு மட்டும்***)🤡

செவ்வாய்க்கிரகம்

1 month ago

செவ்வாய் கிரகம்..

ஐயா வணக்கம் எனது பெயர் செவ்வாய் கிரகம்..

நான் பூமில இருந்து 48.5 கோடி கி.மீ தொலைவில் இருக்கேன்..

பூமில இருந்து என்ன பாக்க வறனும்னா 7 மாதம் பயணம் செஞ்சி வரனும்...

இத ஏன் உங்க கிட்ட சொல்றேன்னா நான் ரொம்ப கெட்ட பையன்...

பூமில குறிப்பா இந்தியா தமிழ் நாட்டுல மற்றும் ஈழத்தில இருக்கவங்கள நான் வந்து புடுச்சிக்குவேன்... இவங்க ஐரோப்பாவோ அமெரிக்காவோ எங்க போனாலும் அவங்களை போய்பிடிப்பேன். அவரகள் வாழும் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வாழும் ஐரோப்பிய மக்களை நான் பிடிக்கமாட்டேன். இவர்களை  விட உலகில் வாழும் மற்றய கோடிக்கணக்கான மக்களை நான் எதுவும் செய்ய மாட்டேன்

அதுக்கு செல்லமா என்ன செவ்வாய் தோசம்னு கூப்புடுவாங்க...

நான்  ஒரு சில பேர புடிச்சிடுவன் எப்படினா..யாழ்ப்பாணத்திலிருக்கிற சாந்தியையும் .......  வட்டுக்கோட்டையில இருக்க பரமசிவத்தையும்  புடிச்சிடுவன் ..

கல்யாணம் பன்றதுனா இந்த 2 பேருக்கு மட்டும் பண்ணி வெக்கனும்.. இல்லனா பெரிய தெய்வ குத்தம் ஆகிடும்.........

எனக்கு ஏஜெண்ட்   பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு அவங்க கிட்ட நான் யார் யார புடிச்சிருக்கேன் சொல்லிருவேன்.. 

அவங்க உங்க கிட்ட சொல்லிருவாங்க... 

நான் அவங்கள விடனும்னா என்ன பரிகாரம் செய்யனும்னு அவங்க கிட்ட சொல்லிருக்கேன்.. 

அவங்க உங்க வசதிக்கு ஏத்த மாதிரி 2000 முதல் 10000 வர குடுத்து பரிகாரம் செஞ்சி என்கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வந்ததும் விட்டு வேற ஆள புடிச்சிக்குவேன்..

இதுல என்ன ஒரு அதிசயம் னா நீங்க என்கிட்ட வரனும்னா 7 மாதம் ஆகும் ஆனா நான் உங்கள புடிக்கனும்னா உடனே புடிச்சிக்குவேன்...

அட கூமுட்டைகளா 48.5 கோடி கி.மீ ல இருக்க செவ்வாய்கிரகம் உங்க கல்யாணத்த நிப்பாட்டுதுனா.. நீ எவளோ பெரிய அடிமுட்டாளா இருப்ப.. உன்ன வெச்சி பணம் சம்பாதிக்கறவன் எவளவு புத்திசாலியா இருப்பான்.. 

ஏமாறவன் இருக்க வர ஏமாத்துறவன் இருக்க தான் செய்வான்..

யமனை பச்சடி போட்டவர்கள்.

1 month 3 weeks ago

image_1545877862-532835e823.jpg

நம்ம ஊர் பேச்சு வழக்கில, யமனை பச்சடி போட்டவர்கள் என்றால்.... தோல் இருக்க சுளை விழுங்கும், அடப்பாவி ரகம்.

விசயம் என்னெவெண்டால், தென்னிலங்கை மவாத்தகம என்ற ஊரில் இரண்டு பொம்பிளையளுக்க சண்டை. 

சீட்டுக் காசு சண்டையோ, ஒருத்தியின் கணவருடன் அடுத்தவோ, தொடுப்போ.... ஏதோ ஒண்டு....

சண்டை முத்தி, போலிஸைக் கூப்பிட்டாச்சு...

போன போலீசுக்காரர்கள்..... பிரச்சனையை முடித்து வைக்க முடியல்ல..... ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டர் ஐயாவை (மாத்தையாவை) பாருங்கோ எண்டு துண்டு எழுதிக் கொடுத்துப்போட்டு வந்திட்டினம்.

இரண்டு பொம்பிளையளும் ஸ்டேஷன் வந்தாச்சு.

மாத்தையா விளப்பம் கேட்க தொடங்கிட்டார். இடையில சில போலீசுக்காரர் வந்து ஏதாவது கேட்டால் அதுக்கும் எதாவது சொல்லுறார்.... இன்ஸ்பெக்டர் ஐயா எண்டால் சும்மாவே... பிஸியா தானே இருப்பர்.

பொம்பிளையளிடம் மேல சில கேள்விகளை கேட்க்கிறார். 

இடையில யாருக்கோ போன் போடுவதாக சொன்ன நினைவு வருகிறது. போனை தேடினால் காணம்... எங்கப்பா, இப்பதானே இந்த மேசையில் வச்சேன்.... மேசை, லாச்சி எல்லாம் தேடியாச்சு.... காணம்....

எங்கப்பா போனது.... சடாரென்று ஒரு ஐடியா... ஒரு போலீஸ்க்காரரை கூப்பிட்டு.... தனது நம்பருக்கு போனைப் போடுமாறு சொல்ல....

சத்தம்... ஒரு பெண்ணின் கைப்பையில் இருந்து வருகிறது.... இன்ஸ்பெக்டர் ஐயா.... பையை சோதனை செய்தால் அதுக்குள்ள அவரது போன் சிரிக்கிறது...

இப்ப பிரச்சனை என்னெண்டா.... அவையள் உண்மையில சண்டையா, அல்லது போன் களவெடுக்க ரூம் போட்டு ஐடியா போட்ட கூட்டுக் களவாணிகளா...

அடுத்த பிரச்சனை என்னவெண்டால், சட்டப்படி அந்த இன்ஸ்பெக்டர் ஐயா நடவடிக்கை எடுக்க ஏலாது.

அவர் முறைப்பாடு மட்டுமே கொடுக்கலாம். வேற போலீஸ் ஆக்கள் விசாரிப்பினமாம்....

ஆகவே.... இன்ஸ்பெக்டர் ஐயா .... போலீஸ் ஸ்டேஷனிலேயே வேலையை காட்ட வெளிக்கிட்ட, உந்த யமனை பச்சடி போட்ட பொம்பிளையள் மேல முறைப்பாட்டினை கொடுத்துப் போட்டு....நொந்து போய்... விசாரணைக்கு தயாராகிறார்.

http://www.dailymirror.lk/article/Policeman-s-phone-rings-in-woman-s-bag-inside-police-station-160333.html

 

உலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிங்கத்தாரின் சிரிப்பு.

2 months ago

உலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிங்கத்தாரின் சிரிப்பு.

கென்யாவின் மாசாய் மாரா பகுதியில், பிடிக்கப் பட்ட சிரிக்கும் சிங்கத்தின் படம் உலகளாவிய ரீதியில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.

பெண் சிங்கத்துடன் mating இல் இருந்த சிங்கத்தின் இந்த சிரிப்பு, பார்க்கும் அனைவருக்கும், குபீர் சிரிப்பினை வரவழைக்கும்.

நீங்களும் பார்த்து ரசியுங்கள்..... 

image_1545212671-2bb3808c70.jpg

செல்லம்... அல்வா துன்னியா ...

நரி பயல் கடையில வாங்கிட்டு வந்தேன். 

image_1545212683-be230b5769.jpg

சாயங்காலம்.... 2.0 படத்துக்கு கூட்டிட்டு போறேன் செல்லம்.

image_1545212698-125c1f3728.jpg

ஹீ.. ஹீ.... என்ன பார்க்கறீங்க... லைட்டா தண்ணி அடிச்சேன்.... நல்லா மப்பு ஏறிடிச்சு 

image_1545212705-83a2dd379b.jpg

Images: Daily Mail UK, Dail Mirror SL

அட பிக்காலிப் பயலுகளே.... உங்களை பார்த்து  எனக்கு சிரிப்பை அடக்க முடியல...  :grin:  

 

ஒருவேளை ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால்.. ?

2 months 2 weeks ago

ஒருவேளை ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால் , இவங்க கதி என்னவாகி இருக்கும்? சிறு கற்பனை !

whatifjjayalallithaisalivetodayintamilna

டிச. 5, 2016 அவ்வளவு எளிதாக யாராலும் தமிழக வரலாற்றிலும், தமிழக அரசியலிலும் மறந்துவிட முடியாது. தனி மனுஷியாக எம்.ஜி.ஆர் உருவாக்கி சென்ற  கட்சியை வழிநடத்தி நான்கு முறை ஆட்சி அமைத்தவர், அனைவராலும் "அம்மா" என்று ஆசையாக அழைக்கப்பட்ட ஜெ ஜெயலலிதா அவர்கள் மரணம் அடைந்த நாள்.

அவருக்கு என்ன ஆனது, எப்படி இறந்தார்.. ?

75 நாட்கள் மருத்துவ மனையில் ஊசி, மருந்துகளில் சூழ்ந்திருந்த நபர் மரணமடைந்த போது எப்படி அவ்வளவு பூரிப்புடன், முகத்தில் சிறு வாட்டம் கூட இல்லாமல் இருந்தார் ? அவரது கால்கள் எங்கே... ? சிகிச்சையின் போது அவரது கால்கள் எடுக்கப்பட்டனவா ?  ஜெ ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன ?  என்று விசாரணை கமிஷன் ஒருபுறமும், நியூஸ் சேனல்கள் மறுபுறமும் இன்றளவும் அலசிக் கொண்டே தான் இருக்கின்றன.

நடந்தது என்ன ?

உண்மையில் ஜெ ஜெயலலிதா உடல்நலம் குன்றி தான் மரணம் அடைந்தாரா என்பது அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்...ஒருவேளை, இன்று... ஜெ ஜெயலலிதா எனும் இரும்பு மனுஷி உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்தின் சூழல் எப்படி இருந்திருக்கும், சிலர் என்னென்ன செய்திருப்பார்கள், செய்திருக்க மாட்டார்கள் என்ற ஒரு சிறிய கற்பனை தொகுப்பு.

( குறிப்பு: இது யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல...)

ரஜினி !

"சிஸ்டம் "சரியில்லை என்று சொல்லி இருக்க மாட்டார். சென்ற ஆண்டு இறுதியில் அரசியிலில் குதிப்பது உறுதி என்பதற்கு பதிலாக, ரசிகர்களுடன் போட்டோக்கள் எல்லாம் எடுத்து முடித்தவுடன், மீண்டும் எப்போதும் போல " எல்லாம் ஆண்டவன் கையில தான் இருக்கு..! , நீங்க எல்லாம் வீட்டுக்கு போயிட்டு வாங்க..!"  என்று கூறி இருக்கலாம்.

எம்.ஜி.ஆர் ஆட்சி...

முக்கியமாக, எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் அந்த வீர ஆவேச உரை, "எம்.ஜி.ஆர் ஆட்சி கொடுப்பேன்"  போன்றவை எல்லாம் தமிழக வரலாற்றில் இடம் பெற்றிருக்காது. ஏன், அந்த விழாவிற்கு ரஜினியை  அழைத்தால் கூட சென்றிருக்க வாய்ப்பில்லை. "ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு", "யாரந்த ஏழு பேர் ? எனக்கு தெரியலையே... !" போன்ற சமாச்சாரங்கள் நடந்திருக்காது. காலா இன்னும் நல்ல வசூல் பெற்று இருக்காலம். ரஜினியின் மாஸ் இன்னும் சற்றும் குறையாமல் அதே அளவிற்கு இருந்திருக்க கூடும்.

கமல் ! 

மய்யம் உருவாகி இருக்க வாய்ப்புகள் இருந்திருக்காது. மக்கள் கொஞ்சம், அவரது இலக்கிய ட்வீட்களில் இருந்து தப்பித்திருந்திருக்க கூடும். சார்ந்தோருக்கு அனுதாபங்கள் என்ற ட்ரெண்ட் ட்வீட், ஆல் டைம் ட்ரால் மெட்டீரியல் நெட்டிசன்களுக்கு கிடைக்காமலேயே போயிருக்கும். இந்தியன் 2 தான் எனது கடைசி படம் என்று கமல் கூறி இருக்க மாட்டார். தேவர் மகன் 2, ஏன் மருதநாயகம் கூட அவர் மீண்டும் கையில் எடுக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.

விஜய் !

மெர்சல் படம் தமிழகத்தில் ரிலீஸுக்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஏன், என்றால்... அதில் பெரும்பாலும் "மத்தியத்தை" தான் தாக்கி இருந்தனர். ஆனால், தாமரை கட்சியின் அந்த பிரமோஷன் தடைப்பட்டு போயிருக்கலாம். எனவே, 250 கோடிகள் என்பது 200 கோடிகளில் முடிந்திருக்கலாம்.

சர்கார் ! 

சர்கார் படத்தில் கோமளவல்லி, ஆளும்கட்சி இலவச பொருட்கள் விமர்சன காட்சிகள் இருந்திருக்காது என்பதை எல்லாம் தாண்டி,  சர்கார் என்ற படம் இன்னமும் ஒரு "பவுண்டட் ஸ்க்ரிப்ட்டாக" எழுத்தாளர் சங்கத்தில் உறங்கிக் கொண்டிருந்திருக்கும்.

அடுத்தத்தடுத்த 200 கோடி படங்கள் என்ற சாதனை நிகழாது இருந்திருக்கும். மெர்சலுக்கு பிறகு மீண்டும் ஒரு பைரவா, ஜில்லா வெளியாகி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற நிலை இருந்திருக்கும்.

சசிகலா & கோ !

சசிகலா ஜெ ஜெயலலிதா போன்று உருவ மாற்றம் ஏற்றிருக்க மாட்டார். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர், சிரித்துக் கொண்டனர் என்று எல்.கே.ஜி குழந்தை இன்டர்வெல் ரைமில் பேசிக் கொண்டிருந்த மாணவர்களை கிளாஸ் டீச்சரிடம் போட்டுக் கொடுப்பது போல புகார் செய்திருக்க மாட்டார். அந்த வீர சமாதி ஆவேச சபதம் நடந்திருக்காது. அப்பறம் அந்த ஜெயில்... அத நாம கடைசியில பார்ப்போம்.. அங்க தான் ட்விஸ்ட்...

தர்மயுத்தம் !

ஒருக்கட்டதில் ஜெயலலிதா அவர்களின் சமாதிக்கு யாராவது சென்றாலே அங்கே மீடியாக்கள் மைக்கும், மேகராவுமாக ஓட வேண்டிய சூழல் இருந்தது. ஏன் என்றால் அங்கே தான் கட்சிகள் உடைந்தன, பிறந்தன, யுத்தங்கள் துவங்கின. பன்னீர் செல்வம் அவர்களின் தியானமும், தர்மயுத்த போராட்டமும், ஓ.பி.எஸ் தீபா அவர்களின் கூட்டு பிரார்த்தனையும் என அப்பப்பா.... இன்னும் எத்தனை...

நான் தான் ஜெ மகள் .

அதே போல, நான் தான் ஜெயலலிதா அவர்களின் மகள் என்று யாரும் நீதிமன்ற படி ஏறி இருக்க மாட்டார்கள். பல ஆண்டுகளாக ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார், அவர் வெளிநாட்டில் படித்து வருகிறார், அங்கேயே செட்டிலாகி விட்டார் என்ற வதந்திகள் வந்துக் கொண்டே தான் இருந்தன.

ஆனால், அவரது மறைவிற்கு பிறகு தான், நான் தான் ஜெயலலிதா அவர்களின் மகள் என்று கூறி வெளிய வந்து நீதிமன்றபடி ஏறிய சம்பவங்கள் நிகழ்ந்தன.

எச்.ராஜா !

எச். ராஜா மற்றும் அவரது அட்மின் பயல்கள் இன்டர்நெட்டிலும், தமிழக அரசியலிலும் மற்றும் மீம்களிலும் இத்தனை பேச்சுக்களுக்கு ஆளாகி இருக்க மாட்டார்கள். நாங்களும் ஹரிஹர ராஜா ஷர்மா என்கிற எச்.ராஜா பற்றி நீங்கள் அறியாத உண்மைகள் என்ற கட்டுரையை எழுதி இருக்கவே மாட்டோம்.

தமிழிசை சௌந்தரராஜன் !

"தாமரை மலர்ந்தே தீரும் "என்ற வாசகத்தை தமிழக மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள், ஏன் ஒருமுறை கூட கேட்டிருக்க வாய்ப்பில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அப்படி ஒரு வாசகத்தை தமிழசை சௌந்தரராஜன் அவர்களே கூட பேசாமல் இருந்திருப்பார். (பேப்பரில் எழுதியிருக்க கூட வாய்ப்பில்லை).

அமைச்சர்கள் !

இன்று வரையிலும் மூவ் மற்றும் வோலோனி போன்ற இடுப்பு வலி நிவாரண க்ரீம், ஸ்ப்ரேக்களை டஜன் கணக்கில் வாங்கி வைத்துக் கொண்டு கும்புடு குருசாமி போல இருந்திருப்பார்கள். எடப்பாடி என்ற ஊர் இருப்பது சேலம் மக்களை தாண்டி தமிழகத்தில் பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டார்கள்.

சயிண்டிஸ்ட்கள் !

நீரை ஆவியாகாமல் தடுக்க தர்மாக்கோல், மலேரியா பரவுவதற்கு டெல்லி கொசுக்கள் தான் காரணம் என்ற தமிழகத்தின் சயிண்டிஸ்ட் ரேஞ்சுக்கு  அமைச்சர்கள் இருப்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாமலேயே போயிருக்கும். அவர்களுடைய பெயரும் இந்த அளவிற்கு டேமேஜ் ஆகி இருக்காது.

போராட்ட பூமி !

கடந்த இருபது, முப்பது ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் அதிக அளவிலான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதேவேளையில் தான் ஜெயலலிதாவின் மரணம் மற்றும் கருணாநிதி உடல் நலம் குன்றி இருந்து மரணம் அடைந்தார். ஒருவேளை, இவர்கள் இருவரும் ஆக்டிவாக இருந்திருந்தால் இத்தனை போராட்டங்கள் நடைப்பெற்றிருக்க வாய்ப்புகள் இல்லை.

காளான்கள் கட்சிகள் !

எம்ஜிஆர் அம்மா தீபா, எம்ஜிஆர் ஜெஜெ, அம்மா மக்கள் முன்னேற்ற கட்சிகள் உருவாகி இருக்காது. அதே போல, நியூஸ் ஜெ நியூஸ் தொலைக்காட்சி துவங்கப்பட்டிருக்காது., நமது எம்.ஜி.ஆர் நாளேடு மட்டுமே அதிமுகவின் பிரதான நாளேடாக இருந்திருக்கும். முக்கியமாக, இது அம்மாவா என்று சந்தேகிக்க வைத்த அந்த அபூர்வ சிலையை நாம் பார்த்திருக்கவே மாட்டோம்.

சிறைவாசம் !

இன்று ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் நான்காவது முறையாக முதலமைச்சராக இருந்திருக்கலாம். காரணம், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா & கோ எல்லாரும் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார். இல்லையேல்... இன்னும் சொத்துக் குவிப்பு வழக்கு கிடப்பிலேயே கிடந்திருக்கும்... எல்லாவற்றுக்கும் மேல், மக்கள் கொஞ்சமாவது நிம்மதியாக இருந்திருப்பார்கள், தமிழகத்தில் !

https://tamil.boldsky.com/insync/pulse/2018/what-if-j-jayalallitha-is-alive-today-in-tamilnadu-023711.html

டிஸ்கி :

எல்லாவற்றுக்கும் மேலாக செம்பு தட்ஸ்தமிழ்  திமுக - காங்கிரஸ் யால்ரா கட்டுக்குள் இருந்திருக்கும் .?

அட பிக்காளிப்பயலே...

2 months 4 weeks ago

தென் இலங்கையில்  ஒரு மரண நிகழ்வுக்கு சென்று திருப்பிக்கொண்டிருந்தார் பெரியவர் ஒருவர்.

இரு திருடர்கள், அண்ணன், தம்பி.... இருவருமே நிறை மப்பு...

பெரியவரைப் பார்த்தார்கள்.... பை உப்பி இருக்கிறதே.... அடுத்த ரவுண்ட் தண்ணிக்கு காசு தேத்திரலாம்....

பெரியவரை மடக்கினார்கள்.... இலகுவாக பை வெளிவருவதாக இல்லை.

அவர்களில் ஒருவருக்கு.... அந்த பக்கமா ஒரு வைப்பு... அதுதான் கீப்பு....

image_1542847864-62e566282f.jpg

தள்ளிக் கொண்டு அங்கே போய் விட்டார்கள்.... ஏய்... கொஞ்சம் மொளவாய் தூள் கொடு.... கொடுத்தார் அம்மணி....

பெரியவர் கண்ணில் தூளை வீசி... அவர் எரிச்சலில் துடிக்க பையை கிளப்பி... அதிலிருந்த 1800 வை எடுத்து.....அதில கொஞ்சம் எடுத்து.... அம்மணி இடம் கொடுத்து.... நல்ல கறி வாங்கி கொழம்பு வையி... அப்புறமா அல்வாவோட வாறன் என்ற கணக்கா சொல்ல.... அம்புட்டு நேரமும்.... உள்ள இருந்த புருசன் காரன்... வெளில வந்து... 'என்னடா நடக்குது இங்க' என்று சத்தம் போட....

இவன் உள்ள இருக்கிறான்னு சொல்லலியே செல்லம் என்று கள்ளப் புருசன் சொல்ல... ' எதுக்கு இப்ப, நேர காலம் தெரியாம, மொளவாய் தூள் கேட்டு வந்தாய்' என்று, அம்மணி கிளம்ப... 'அடியே, எனக்கு தெரியாம இது எதனை நாளா நடக்குது' என்று புருசன் பாய....  பெரிய களேபரம் ஆக.... பெரியவரை மறந்து போய்... சண்டையோ, சண்டை.

பெரியவரோ, சாவகாசமாக போலீசை கூப்பிட... இப்ப அண்ணன், தம்பி, அவர்களில் ஒருவரின் கீப்பு எல்லோரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

பெரியவருக்கு 1800 ரூபா கிடைத்து விட்டது.

http://www.dailymirror.lk/article/His-clandestine-love-affair-revealed-in-unexpected-manner-158731.html

பிரதமர் கிண்ணம்

3 months 1 week ago

"பிரதமர் கிண்ணம்"
சுற்றுப்போட்டியின்  முதலாவது 
இனிக்ஸ் வெள்ளி இரவுடன் முடிவடைந்தது…!

-----------------------------------------------------------

பிரதமர் கிண்ணத்துக்கான  சுற்றுப்போட்டி 26.10.2018 கடந்த வெள்ளிக்கிழமை  
இரவு மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றவுடன் ஆரம்பமானது.

14 நாட்கள் நடைபெற்று முடிந்த  
முதலாவது  போட்டியில்  மைத்திரி அணியினர் தோல்வியடைந்துள்ளார்.

ஸ்கோர் விபரம்!

நடைபெற்று முடிந்த போட்டியில் வழங்கப்பட்ட
113 என்ற இலக்கை  அடைய  இரு அணிகளும் கடுமையான போட்டிகள் போட்டனர்.

போட்டியின் நேற்றைய   இறுதி நாளில் இறுதிப்பந்தில்  இராஜாங்க அமைச்சர் சிக்ஸ் அடித்தாலும் 113 என்ற வெற்றி இலக்கை அடைய முடியாமல் மைத்திரி அணியினர் தோல்வி அடைந்தந்துள்ளார்கள். 

பந்து வீச்சு!

போட்டியில் மஹிந்த அணியால் வீசப்பட்ட தூஸ்ரா,வேகப்பந்து வீச்சுக்களுக்கு மொத்தமாக ரணில் அணியில் இருந்து 
ஆறு விக்கெட்டுக்கள் வீழ்தப்பட்டது.

மைத்திரி அணியின் தலைவராக மைதானத்தில்  மஹிந்தராஜபக்ஸ நியமிக்கப்பட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ஸவின் கடுமையான துஸ்ரா, வேகப்பந்துகளை இறுதிவரை ரணில் அணியினர் மிகக் கவனமாக துடுப்படித்தாடினர்.

போட்டியில் மஹிந்த அணியினரால் வீசப்பட்டட "யோக்கர்" பந்துகளை மத்திய (துடுப்பாட்டவீரர்களாக SLMC,ACMC) வீரக்களுக்கு வீசினாலும் மிகக் 
கவனமாக பந்தை தட்டிவிட்டு விக்கெட்டுக்களை பறி கொடுக்காமல் இருந்தார்கள்.

இப்போட்டியில் கவலையான 
ஆட்டமிழப்பு ஒன்றாக, 
ஐந்தாவது விக்கெட்டாக வீழ்த்தப்பட்ட வியாழநேந்திரன் (அமல்) TNA அவர்களின் ஆட்டமிழப்பு இருந்தது.

போட்டியில் சல துரையிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி சிறப்பு  ஆட்டக்காரர் விருதை மஹிந்த ராஜபக்ஸ பெற்றுக்கொண்டார்.

போட்டியில் நடுவர்களாக இறுதிவரை கரு ஜெயசூரியா,பூஜித ஜெயசுந்தர ஆகியோர் சிறப்பாக  செயட்பட்டனர்.

இவ்வாறு விறுவிறுப்பாக சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் நடைபெற்று   
முடிந்த 14 நாள் போட்டி 
நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.

பிரதமர் கிண்ணத்துக்கான 
அடுத்த இரண்டாவது இணிக்ஸ் இன்று முதல் ஆரம்பமாக  உள்ளது,

இப்போட்டிக்கான  பயிற்சி போட்டிகள் நவம்பர் 19 - 26 வரை நடைபெற்று (வேட்புமனு) 2019 ஜனவரி 5 ம்திகதி இறுதி நாள் ஆட்டம் (தேர்தல்) நடைபெறவுள்ளது.

குறித்த திகதி அறிவிக்கப்பட்டாலும் சுற்றுப்போட்டியின் கட்டுப்பாட்டு சபை (தேர்தர்தல் ஆணைக்குழு) அறிவிக்கும் 
வரை திகதியை உறுதி செய்ய முடியாது.

போட்டிகள் மொத்தமாக மூன்று சுற்றுக்கள் நடைபெற்று பிரதமர் சவால் கிண்ணம் வழங்கி வைக்கப்படவுள்ளது.

முதலாவது இணிக்ஸ் இனிதே நடைபெற்று முடிந்ததுள்ளது.

இரண்டாவது இணிக்ஸ் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனவரி 5ஆம் திகதி வரை இரண்டாவது இணிக்ஸ் நடைபெற்று முடிந்து மூன்றாவது இணிக்ஸ் ஜனவரி 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இரண்டாவது இணிக்ஸ் தொடர்பான  தகவலுடன் சந்திப்போம்.

இதே வேளை பார்வையாளராக மட்டுமே இருந்த அணி (TNA) தாம் நீதிமன்றை நாட உள்ளதாக அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

நன்றி வாட்சப் குழுமம்.

ஏம்பா நரகாசூரா ! இம்புட்டு கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு !

3 months 2 weeks ago

ஏம்ப்பா, நரகாசுரா.. நீ மட்டும் குணமா இருந்திருந்தா.. இம்புட்டுக் கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு!

narakasura117-1541437582.jpg

சென்னை: இந்த நரகாசுரனை அவங்க அம்மா பூமாதேவி அடிச்சி வளர்த்திருந்தா இன்னைக்கு நமக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?வருஷம் ஆனா எவ்வளவு செலவு தீபாவளிக்கு? அதுவும் இந்த வருஷம் எவ்வளவு கட்டுப்பாடுகள்? இப்படித்தாங்க இப்பெல்லாம் நமக்கு யோசிக்க தோணுது.

சேட்டை

பெத்த அம்மா கையாலதான் சாவுன்னு வரம் வாங்கி வெச்சிக்கிட்டு, இந்த நரகாசுரன் அன்று ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. கேள்வி கேட்க யாரும் இல்லை. அதான் இஷ்டத்துக்கு சேட்டை பண்ண ஆரம்பிச்சிட்டாரு. எல்லாருக்கும் டார்ச்சர் வேற.

புது ஆசை

கடவுளர்களின் 16 ஆயிரம் பொண்ணுங்களை கடத்திட்டு வந்து சிறை வெச்சு அந்த அமர்க்களம் வேற தனியா நடந்தது. ஒரே விளையாட்டுதனம்!! கடைசியில அவங்க அம்மா வந்து அவரை கொல்ல வேண்டியதா போச்சு. அப்படிதான் அவரை கொன்னாங்களே... அதோடு விஷயம் முடிஞ்சா பரவாயில்லையே... கொன்னுட்டா, அதை கொண்டாடனும்னு புதுசா ஆசைவேற வந்திருக்கு.

எவ்வளவு செலவு?

அப்போ கொண்டாட ஆரம்பிச்சதுதான் இந்த தீபாவளி. அவங்க எல்லாம் வசதியா இருந்தாங்க.. கொண்டாடினாங்க. இப்ப நாம அப்படியா இருக்கோம்? தீபாவளி ஆனா எவ்வளவு செலவு ஆகுது? துணிமணிகள், பட்டாசுன்னு செலவு எகிறி போயிடுது. சரி அதையும் மீறி கடன்பட்டு பட்டாசு வாங்கினா அதை வெடிக்க கூடாதுனு ஒரு ஆர்டர் வந்திடுச்சு. மீறினால் 6 மாசம் ஜெயிலாம்!!

அட்வைஸ் பண்ணியிருக்கலாமே?

பேசாம இந்த நரகாசுரன் ஒழுக்கமா இருந்திருக்கலாமே? அவங்க அப்பா கிருஷ்ணர் அட்வைஸ் பண்ணி திருத்தி இருக்கலாமே?-ன்னு தோணுது. அம்மாவும், அப்பாவும் குணமா நரகாசுரனுக்கு எடுத்துசொல்லி இருந்தா இப்படி இன்னைக்கு பயந்து பயந்து தீபாவளி கொண்டாடற நிலைமை வந்திருக்குமா?

ஹேப்பி தீபாவளி

என்ன பண்றது, நமது வீடுகள் இருக்கும் பொருளாதார சூழலில் நரகாசுரன் ஒழுங்கா இருந்திருந்தால் இந்தப் பஞ்சாயத்தெல்லாம் வந்திருக்காதே என்று நினைக்கத் தோன்றுகிறது. எல்லோருக்கும் ஹேப்பி தீபாவளி மக்களே!"

https://tamil.oneindia.com/news/chennai/naragasuran-s-parents-could-give-him-advice/articlecontent-pf335145-333592.html

டிஸ்கி :

சரக்கு , சைடிஸ், சிக்கன் ,மட்டன் , செலவு வேற கணக்குல வரல ..?

Checked
Fri, 02/22/2019 - 00:24
சிரிப்போம் சிறப்போம் Latest Topics
Subscribe to சிரிப்போம் சிறப்போம் feed