சிரிப்போம் சிறப்போம்

"சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்" 

1 day 6 hours ago

"சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்" 


உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .  

அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது: 

"பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை"

"Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap."


வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday
July 31, 2008] 

இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை. 

ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம். 

என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது. 

.........................................................

ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429.

கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது.

கேள்வி: 

எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்?

What animal walks on four feet in the morning, two at noon and three at evening?

பதில்: மனிதன். 

குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்."

............................................................

பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை.

ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,  

"ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்."

"Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'"

பின் ஒரு நேரம், 

"ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது,

சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !'
[ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]  

'Help, Nobody is attacking me!'

உதவிக்கு யாரும் போகவில்லை.

.......................................................

கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை

ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது.

அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம், 

"நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்" 

'I shall divorce you because you are said to be blind in one eye.'

என்று கூறினான். 

அவள் அவனுக்குப் பதிலளித்தாள்: 

"திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?"

'Have you just discovered that after 20 years of marriage?'"


தொகுத்தது

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

The oldest known joke is about farts. It's a 3,900-year-old Sumerian joke  that goes "Something which has never occurred since time immemorial - a  young woman did not fart in her husband's A statue of Sophocles in Hanover, northern Germany, Oct. 20, 2009.A view of the side of a clay vase found in an Etruscan tomb, painted with four black figures in profile pushing a spear into the eye of Polyphemus the Cyclops, illustrating the episode in the Odyssey. Hands of an elderly person, wearing a gold ring, holding another person's hand in warm sunlight over a cafe table.

 

 

ஆமையும் தமிழனும்....

1 week 3 days ago

Ist möglicherweise ein Bild von Tempel und Text „THE“

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?
தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய.
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன.
இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.
இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்!
மத்திய தரைக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடுகளையும் கைப்பற்றினான்.
கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான்.
பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர். உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்.
கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார். சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில் பொருளே இல்லை.
சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான். போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா?
அதுதான் உண்மை! கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன் தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ் கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட வழித்தடமும் ஒன்றுதான்!
ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும் ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
ஆம் தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம் உண்டு.
தான் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும். தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு. தர்மம் காப்போம்
தேசம் காப்போம்.

பேப்பர் மாதிரி ....

2 weeks 2 days ago

நேற்று என்பது பழைய  பேப்பர் மாதிரி 

இன்று என்பது நியூஸ் பேப்பர் மாதிரி 

நாளையென்பது கொஸ்டின்(கேள்வி)பேப்பர் மாதிரி 

வாழ்க்கை என்பது அன்செர் பேப்பர் மாதிரி 

கவனமாக எழுதி வெற்றி வாகை சூட்டுங்கள். 

​ உடன் வேலைக்கு வரவும் 😃 ​

2 months 1 week ago

உடன் வேலைக்கு வரவும் 😃

தொழிலாளி : ஹலோ  சார் ..என் மனைவிக்கு சுகவீனம் இன்று வேலைக்கு வர முடியாது லீவு கொடுங்க சார்.

மானேஜர் : அடே முனியாண்டி ..உடனே வேலைக்கு வா  இங்க உன் மனைவி காத்திருக்கா .( இரவு வீட்டுக்கு வரலையாம் வேலைக்கு வந்தாயா என்று பார்க்க ).

தொழிலாளி : எந்த மனைவி  சார்.?

மானேஜர் : ???????
 

Checked
Fri, 04/19/2024 - 23:41
சிரிப்போம் சிறப்போம் Latest Topics
Subscribe to சிரிப்போம் சிறப்போம் feed