Yarl Forum
மழைவேண்டி கொடும்பாவி எரிக்கப்பட்டது. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: மழைவேண்டி கொடும்பாவி எரிக்கப்பட்டது. (/showthread.php?tid=3004)



மழைவேண்டி கொடும்பாவி எரிக்கப்பட்டது. - SUNDHAL - 10-07-2005

பெரும்போக நெற்செய்கைக்கு மழை வேண்டி சம்பிரதாயச் சடங் காக நவாலியில் கொடும்பாவி எரிக் கப்பட் டது.
செப்ரெம்பர் மாத இறுதிப் பகுதியில் பெய்யும் மழையை நம்பியே விவசாயிகள் பெரும்போக நெற்செய்கையை மேற்கொள்கின் றனர்.
ஆனால், இவ்வருடம் செப்ரெம்பர் மாதம் கடந்தும் மழை பெய்வது தாமதமாகியுள்ளது. இதனால் நவாலிப் பகுதியில் பொது மக்கள் மழைவேண்டி பிரார்த்தித் துக் கொடும்பாவி எரித்தனர்.
நவாலி வடக்கு பெத்த நாச்சி யார் ஆலய நிர்வாகி ஐயாத்துரை உருத்திரகுமார் தலைமையில் கொடும்பாவி எரிப்பு பிரார்த்தனை இடம்பெற்றது.
மக்களின் பாவங்களை உரு வகப்படுத்தும் கொடும்பாவியை வீதிகள் வழியே ஒப்பாரிவைத்து இழுத்துச் சென்ற மக்கள் நவாலி ஆரியம்பிட்டி மயானத்தில் வைத்து அதனை எரித்தனர்.

Thanks:uthayan


- Mathan - 10-07-2005

ஆகா மழைக்காக கொடும்பாவியா?
கொடும்பாவி மழைக்காவும் பிடிக்காதவர்களுக்கு எதிர்ப்பை காட்டவும் எரிப்பதாக பத்திரிகைகளில் இடைக்கிடையே செய்தி வரும், இந்த பழக்கம் எப்படி ஆரம்பிச்சது என்று யாருக்காவது தெரியுமா?


- SUNDHAL - 10-08-2005

இது இப்பொழுது யாழ்ப்பாணத்திலும் ஆரம்பமாகிவிட்டது தான் விந்தை மழைக்காக கொடும்மபாவி எரிப்பது..
இனி யாழப்பாணத்தில் இருந்து மழைக்காக கழுதைக்கு கல்யாணம் என்று செய்தி வந்தாலும் ஆச்சரியம் இல்லை....
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயா - 10-08-2005

இது என்ன தொற்றுவியாதியா??


- Birundan - 10-08-2005

கழுதைக்கு கலியானம் செய்தால் சிலவேள மழை பெய்யலாம் அதுகளோட கத்தல கேட்கேலாமல் வாணம் பொத்துக்கொண்டு அழும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- SUNDHAL - 10-08-2005

தூயா Wrote:இது என்ன தொற்றுவியாதியா??




கூடுதலாக தமிழநாட்டில் தான் இப்படியான சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்..தூய்ஸ்.......


- SUNDHAL - 10-08-2005

Birundan Wrote:கழுதைக்கு கலியானம் செய்தால் சிலவேள மழை பெய்யலாம் அதுகளோட கத்தல கேட்கேலாமல் வாணம் பொத்துக்கொண்டு அழும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயா - 10-08-2005

அது தான் சொன்னேன் சுண்டல், தொற்று வியாதி போல வந்துவிட்டது போல, ஏதாவது ஊடகத்தின் மூலம் கேள்விபட்டு செய்து பார்த்திருப்பார்கள் போல


- SUNDHAL - 10-08-2005

இப்பிடி தான் நானும் நினைக்கின்றேன்..


- vasisutha - 10-08-2005

Quote:அது தான் சொன்னேன் சுண்டல், தொற்று வியாதி போல வந்துவிட்டது போல, ஏதாவது ஊடகத்தின் மூலம் கேள்விபட்டு செய்து பார்த்திருப்பார்கள் போல


<b>கொடும்பாவி சாகானோ கோடை மழை பெய்யாதோ
மாயாவி சாகானோ மாரி மழை பெய்யாதோ..</b>

இது பழைய நாட்டார் பாடல்.. பாடல் வரிகள்
சரியா தெரியாது..
<i>தூயா சுண்டல்</i> பழைய காலத்திலேயே மழைக்காக
வேண்டி கொடும்பாவி எரித்ததாக நான் கேள்விப்பட்டுள்ளேன்.
இனி களத்தில் உள்ளவர்கள் வந்து சொன்னால்தான்
இதுபற்றி விபரம் தெரியும்..


- RaMa - 10-08-2005

நல்ல மழை பெய்ய வேண்டும்
நாடு வளம் பெற வேண்டும்

அப்படித்தான் இந்தப் பாடல் தொடர்கின்றது
வசி சொன்ன பாடலை நானும் கேள்விப் பட்டிருக்கின்றேன். ஆகவே நாட்டார் பாடல் எமது நாட்டுப் பாடல்... ஆகவே எங்களுடைய மூதைதாயாருக்கு இப்படி ஒரு பழக்கம் இருந்த படியால் தானே இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் அந்த காலத்து கவிஞர்...
அத்துடன் நாம் ஊரில் இருக்கும் போது கார்த்திகை விளக்கிடு என்று ஒரு விழா இருக்கல்லவா. அப்போதும் இந்த கொடும்பாவி ஊர் முழுக்க இழுத்துச் சென்று எரிப்பதை பார்த்திருக்கின்றேன். யாரிடம் காரணம் கேட்டால் தான் தெரியும்


- SUNDHAL - 10-08-2005

ம்ம்ம்ம் உரும்பிராய் எல்லாத்திலையும் வத்தியாசமா தான் இருக்கு...


- MUGATHTHAR - 10-08-2005

Birundan Wrote:கழுதைக்கு கலியானம் செய்தால் சிலவேள மழை பெய்யலாம் அதுகளோட கத்தல கேட்கேலாமல் வாணம் பொத்துக்கொண்டு அழும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உது சரிப்பட்டு வராது ஏனெண்டால் நான் கன கலியாணத்தைப் பாத்திருக்கிறன் மழை பெய்யேலையே...(சில கலியாணத்திலை மாப்பிளைகளின் அலங்காரத்தைப் பாத்தா <b>அது </b>மாதிரித்தான் கிடந்திச்சு)[/b]


- வெண்ணிலா - 10-08-2005

உங்களுடைய திருமணத்தில் மழை பெய்திச்சா தாத்தா? :roll:


- KULAKADDAN - 10-08-2005

யாழில் மழை சரியான நேரத்துக்கு பெய்யவில்லை எனும் போது கொடும்பாவி எரிப்பது பொதுவாக நடைபெறுவது வழக்கம். இது எங்கிருந்தும் கடன் வாங்கப்படவில்லை. பலகாலமாக நடப்பது.


- yarlpaadi - 10-09-2005

இப்படி யாழில் முன்பும் நடப்பது வழமை, குறிப்பாக நெற்செய்கை செய்யபடும் ஊர்களில்