Yarl Forum
ஆயிரம் பேரைக் கொன்றவன்.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: ஆயிரம் பேரைக் கொன்றவன்.. (/showthread.php?tid=3083)



ஆயிரம் பேரைக் கொன்றவன்.. - SUNDHAL - 10-01-2005

ஓர் அன்பர், கையில் ஒரு நூல் சகிதம் வந்தார். முதுமொழிகள் அடங்கிய நூல் அது.

அதிலுள்ள ஒரு முதுமொழியைக் காட்டி, அருமையான முதுமொழியை எப்படி அபத்தமாக வெளியிட்டிருக்கின்றனர் என்று குறைபட்டுக் கொண்டார்.

`ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்' என்று அதில் பொறிக்கப்பட்டிருந்தது.

"ஆயிரம் பேரைக் கொன்றவன் எப்படி வைத்தியனாக இருக்க முடியும்? ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன்' என்றல்லவா இருக்க வேண்டும்" என்றார்.

ஆயிரம் மூலிகைகளை ஆராய்ந்தவன் அரை வைத்தியன் என்பதே சரியானது. இதை விடுத்து, அபத்தமான முறையில் முதுமொழிகளை நூலுருவில் வெளியிட்டு கல்வி கற்கும் இளம் சமுதாயத்தைத் தவறாக வழிநடத்தக்கூடாது என்றார்.

எதையும் அச்சில் போடுவதற்கு முன் நன்றாக ஆராய்ந்து தெளிவுபெற்று வெளியிடவேண்டாமா?
Thanks:Thinakural


- tamilini - 10-01-2005

ம் வேர் என்றதை இன்று தான் நானும் அறிஞ்சன்.

ஆயிரம் பேரைக்கொண்டவன் அரை வைத்தியன் என்டு தான் சொல்றவை. மருவி விட்டது போல. :?


- SUNDHAL - 10-01-2005

பலர் ஆயிரம் பேரை கொண்டவன் தான் 1/2 வைத்தியர் என்டு சொல்வார்கள் இப்பொழுது தான் உண்மையான முது மொழியை தெரிந்த கொண்டேண்...


- ANUMANTHAN - 10-02-2005

அப்போ.. இரண்டாயிரம் பேரைக்கொண்டவன் முழு வைத்தியனா?
அல்லது... இரண்டாயிரம் வேரை ஆராய்ந்தவன் முழு வைத்தியனா?

வைத்தியகலாநிதி பட்டம் சுலபமாக வாங்கலாம் என்று பலர் களத்தில் இறங்கப்போறார்கள் கவனம்!


- ANUMANTHAN - 10-02-2005

பொதுவாக " தன் பிள்ளையை பெற்றுக்கொண்டவள்" என்றால்..
தனது பிள்ளையை பெத்துக் கொலைசெய்தவள் என்று மட்டும்தான் அர்த்தப்படுமா?
இதேபோல் "ஆயிரம் பேரைக் கொண்டவன் அரைவைத்தியன்" என்றிருக்கலாம் எதற்கும் தமிழகராதியை தட்டினால் போச்சு!

நன் கேள்விப்பட்டது! ஆயிரம் வேரைக் கண்டவன் அரைப்பரியாரி!" என்றுதான்.