Yarl Forum
IP இலக்கம்களை வைத்து - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: IP இலக்கம்களை வைத்து (/showthread.php?tid=3447)



IP இலக்கம்களை வைத்து - Vishnu - 09-03-2005

IP இலக்கங்களை வைத்து எந்த நாட்டுக்குரிய?? அதில் எந்த நகரத்துக்குரிய IP இலக்கம் என்று கண்டு பிடிக்க முடியுமா?? :roll:


- Thala - 09-03-2005

எதற்காக விஹ்ணு எதாவது விசேட தேவக்கா.. அப்பிடி எண்டால்... சொல்லுங்கோ... ???


- Thala - 09-03-2005

[b]IP முகவரியும், கணினி இருக்கும் இடமும்

ஏதோ ஒரு ஊரிலிருந்து உங்களுக்கு ஒரு அஞ்சல் கடிதம் வருகிறது .. அதை உங்களுக்கு அனுப்பியவரின் ஊரைப் பற்றிய தகவல் இருக்கும் .. அது பெயரில்லாமல் எழுதிய மொட்டைக் கடிதமானாலும் அவர் அனுப்பிய ஊரின் அஞ்சல் முத்திரை இருக்கும் .. இது நமக்குத் தெரியும் .. இதேபோல் நமக்கு வரும் இ-மெயிலை அனுப்பியவர் இருக்கும் ஊரைப் பற்றிய தகவல் இருக்குமா .. ? பதில் என்னவென்றால் ஆம்.. என்பதுதான் .. !

இணையத்தில் இணையும் ஒவ்வொரு கணினிக்கும் முகவரி தரப்படுகிறது.. இதனை IP முகவரி என்கிறோம். இந்த முகவரி நமக்குத் தெரிந்தால் அந்தக் கணினி எந்த ஊரில் அல்லது எந்த நாட்டில் இருக்கிறது என்று நம்மால் கூறிவிட முடியும். உதாரணமாக 80.145.88.48 இந்த IP முகவரி உடைய கணினி பிரேசில் நாட்டில் உள்ளது..

கொஞ்சம் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் நமக்கு வரும் இ-மெயில்கள் எங்கிருந்து வருகிறது என்று நம்மால் தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் ஏதாவது தீச்சுவரை உங்கள் கணினியில் நிறுவியிருந்தீர்களானால் உங்களுடைய கணினியுள் உங்களுக்குத் தெரியாமல் எத்தனைபேர் நுழைய முயற்சிக்கிறார்கள் என்றும் அவர்களின் ஐ.பி முகவரியையும் தெரிந்துகொள்ள முடியும். அந்த ஐபி முகவரி மூலம் அவர் எந்த ஊரிலிருக்கிறார் என்றும் கண்டுபிடிக்கலாம்.. சில நாட்களுக்கு முன் எத்தனை பேர் என்னுடைய கணினியுள் எனக்குத் தெரியாமல் நுழைய முயற்சிக்கிறார்கள் என்று ஸோன் அலாரம் என்ற தீச்சுவர் மூலம் கணக்கிட்டபோது ஒரு நாளில் ஆயிரக்கணக்கான தடவை நுழைய முயற்சி நடந்துள்ளது என்பதையறிந்து பிரமிக்குள்ளானேன் என்பது வேறு விஷயம்.

உங்களுக்கு இ-மெயில் அனுப்பியவரின் ஐபி முகவரியைக் கண்டுபிடிப்பது எளிது... உதாரணமாக யாகூ மெயிலை எடுத்துக்கொள்வோம்.. முதலில் உங்களுக்கு வந்த மெயிலை திறங்கள்.. பின்னர் அந்த மெயிலில் வலது மூலையில் உள்ள full headers என்பதைச் சுட்டவும். சுட்டியவுடன் உங்களுக்கு வந்த மின் மடல் பற்றிய விரிவான தகவலைக் காட்டும்.. அதில் உங்களுக்கு மடல் அனுப்பியவரின் ஐபி முகவ்ரி இருக்கும். அவ்வளவுதான் நீங்கள் ஐபி முகவரியைக்கண்டுபிடித்துவிட்டீர்கள்.. அவரின் ஐபி முகவரியை வைத்து இடத்தைக் கண்டுபிடித்துவிடலாம் .. எனவே அவர் சென்னையிலிருந்துகொண்டு தான் அமெரிக்காவிலிருப்பதாய் உங்களை நம்பவைக்கமுடியாது.

ஐபி முகவரியை வைத்து இடத்தைக் கண்டுபிடிப்பது எப்படியென்றால் அது மிக எளிது.. அதற்காகச் சில தளங்கள் இயங்குகிறது.. நீங்கள் அந்தத் தளத்துக்குச் சென்று ஐபி முகவரியைக் கொடுத்தீர்களானால் எந்த இடம் என்று சொல்லிவிடும். இதற்காக நான் வழக்கமாகப் பயன்படுத்தும் தளம் ஜியோபைட்ஸ் என்ற தளம் . இன்னொரு தளமும் உள்ளது.. இதையும் முயற்சித்துப்பார்க்கலாம்.

இத்தளத்துக்குச் சென்று ஒரு ஐபி முகவரியைக் கொடுத்தீர்களானால்.. உதாரணமாக ... எனக்கு அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு மெயிலில் இருந்த ஐபி முகவரி 216.39.67.119 . இது உண்மையிலேயே அமெரிக்காவிலிருந்து வந்ததுதானா என்று அறிய
http://www.geobytes.com/IpLocator.htm சென்று 216.39.67.119 என்பதைக் கொடுத்தால் அது இந்த முகவரி அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லாஸ் என்ற இடத்திலிருந்து வந்திருக்கிறது என்று சொல்லிவிடும்..

இன்னும் இத்தகவலைப் பல வழிகளில் பயன்படுத்தலாம்.. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.. சுவாரசியமான துப்பறியும் விளையாட்டு இது ..


சுட்டது


- Thiyaham - 09-03-2005

இங்கேயும் முயற்சி செய்து பாருங்கள்

http://www.networksolutions.com/whois/index.jhtml


- Rasikai - 09-03-2005

தகவலுக்கு நன்றி


- விது - 09-03-2005

¾¢Õ ¾Ä¡ ஸோன் அலாரம்¨Á ±ôÀÊ ¦ºüÈ¢í ¦ºöÅÐ ±ýÚ ÜÈÓÊÔÁ¡


- Vishnu - 09-03-2005

Thala Wrote:எதற்காக விஹ்ணு எதாவது விசேட தேவக்கா.. அப்பிடி எண்டால்... சொல்லுங்கோ... ???

நன்றி.... மீதி விபரங்களுடன் இன்று போய் நாளை வருகிறேன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 09-03-2005

ஏதும் விஷேசமே விஷ்ணு :oops:


- Thala - 09-03-2005

vithu Wrote:¾¢Õ ¾Ä¡ ஸோன் அலாரம்¨Á ±ôÀÊ ¦ºüÈ¢í ¦ºöÅÐ ±ýÚ ÜÈÓÊÔÁ¡

மன்னிச்சுடுங்கோ விது..!
சத்தியமா தெரியாது நான் MaAfee தான் உபயோகிக்கிறன்..
யாராவது தெரிஞ்சவை தம்பிக்கு சொல்லுங்கப்பா??? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Thala - 09-03-2005

Vishnu Wrote:
Thala Wrote:எதற்காக விஹ்ணு எதாவது விசேட தேவக்கா.. அப்பிடி எண்டால்... சொல்லுங்கோ... ???

நன்றி.... மீதி விபரங்களுடன் இன்று போய் நாளை வருகிறேன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

வேண்டாம் எனக்கு தெரிஞ்சு போச்ச்ச்ச்ச்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vishnu - 09-03-2005

ஒரு விஸேடமும் இல்லை.. எல்லாம் நோர்மலா நடக்கிறது தான்.

தலா அண்ணா என்ன தெரிஞ்சு போச்சு?? :roll:


- Rasikai - 09-03-2005

சரி நீங்கள் சொன்னால் சரி தான்


- Thala - 09-04-2005

Vishnu Wrote:ஒரு விஸேடமும் இல்லை.. எல்லாம் நோர்மலா நடக்கிறது தான்.

தலா அண்ணா என்ன தெரிஞ்சு போச்சு?? :roll:

அதுதான் நோர்மலா நடக்கிறது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
(நாங்க பாத்ததுதான்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )


- AJeevan - 09-04-2005

நோர்மலா நடக்கிறது.........
தகவலுக்கு நன்றி


- kuruvikal - 09-04-2005

ஐபி இலக்கத்தை வைத்து சில விபரங்களை அறியலாம்...இருந்தாலும் நீங்கள் தேடும் நபர் அங்கு இருக்காமலும் விடலாம்... அதாவது ஐபி மாற்றுச் செய்தும் இணைய வலையில் உலாவலாம்...! எனவே ஐபியை நம்பி நோர்மல் என்று எண்ணுவது எப்போதும் சரிப்பட்டு வராது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- AJeevan - 09-04-2005

Quote:ஐபியை நம்பி நோர்மல் என்று எண்ணுவது எப்போதும் சரிப்பட்டு வராது...!

[size=15]<b>சுவிசில் நடைபெறும் பல விடயங்கள்</b>
அதாவது சிறுமிகளை நெட் மூலம் பாலியல் பு--ச்சிக்கு இழுப்பது,
பாலியல் படங்களை நெட்வழி வெளியிடுவது
அனாமதேய விடயங்களை எழுதுவது
போன்றவை தண்டிக்கப்படுகிறது.

இதற்கு
சுவிசில் ஒரு விசேட போலீஸ் குழுவினர் பயன்படுத்தப்படுகிறார்கள்.
இவற்றுக்கு கணணி வித்தகர்களாக இருக்கும் சிறார்களும் உதவுகிறார்கள்.

அண்மையில் ஒருவரை ஜெர்மனியில் வைத்து கைது செய்தார்கள்.

இன்டர் நெட் கபேகளில் விசமம் செய்வோர் கூட மாட்டப்பட்டிருக்கிறார்கள்.

லண்டனில் இருந்து சுவிசுக்கு வந்து
கள்ள மட்டை பாவித்து பெற்றோல் அடித்த பலர் மாட்டப்பட்டிருக்கிறார்கள்.
உள்ளே இருக்கிறார்கள்................

அண்மைக்கால பிரிட்டன் பயங்கரவாத கைதுகளே உதாரணம்.

கைத்தொலைபேசியே போதும் எவர் எங்கிருக்கிறார் என்று கண்டு பிடிக்க.....................

சிலரை சில காலம் ஏமாத்தலாம்.
எல்லாரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.

நமது உறவுகளை காப்பதற்காகவே இதை எழுதுகிறேன்.
தேவையில்லாதவற்றில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.
உலகம் இப்ப ரொம்ப சின்னது........................
சில நொடிகள் போதும்.........குற்றவாளிகள் சிக்குவதற்கு.

[size=16]<b>சிலர் தப்புகிறார்கள் என்பதை விட
தப்ப வாய்ப்பளித்து விடுகிறார்கள் என்பது
யாருக்கும் நம்ப முடியாத ஒரு தகவல்</b>


- Vishnu - 09-04-2005

தகவலுக்கு நன்றி குருவி அண்ணா.. அஜீவன் அண்ணா...

அஜீவன் அண்ணா நீங்கள் சொன்ன கருத்து மிக சரியானது.. நெட்டில் இருந்து என்னவும் செய்யலாம் என்று நினைப்பவர்கள் அந்த கருத்தை மாற்றிக்கொள்ளுதல் வேண்டும். சில நாடுகளில் ஒருவரின் அன்றாட நெட் நடவெடிக்கைகளை பொலீஸார் பதிவு செய்து கொள்கிறார்... அவைகள் பின்னர் தேவையான போது பயன் படுத்தி கொள்கிறார்கள்.

குருவிகள் சொன்னது போல.. சில நெட் யூஸ் பண்ணுபவர்களின் ip இலக்கங்கள் மாறுபடுகின்றது... ஆனால் சிலருக்கு அப்படி இல்லை. எப்போதும் நிலையான ip இலக்கங்களே காணப்படுகிறது.

நான் எதும் சட்டவிரோதமாக ஈடுபடவில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சும்மா தெரியாதே..


- AJeevan - 09-04-2005

<b>நடிகைக்கு செல்போனில் ஆபாச படம். செக்ஸ் குறும்பு செய்த மாணவன் சிக்கினான்!</b>

நடிகைக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய மாணவனை போலீசார் பொறிவைத்து பிடித்தனர்.

அந்த மாணவனை நடிகை மன்னித்துவிட்டதால் அவனை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினார்.
நடிகை அபேக்ஷா

சென்னை சாந்தோம் நெடுஞ் சாலை கற்பகம் அவென்ïவை சேர்ந்தவர் அபேக்ஷாபட் (வயது 30). இவர் குறும்படங்களில் நடித்து வருகிறார். அரவாணி களைப் பற்றிய `நவரசா என்ற படத்தில் நடித்துள்ளார். மாட லிங் மற்றும் நிகழ்ச்சி தொகுப் பாளராகவும் இருக்கிறார்.

இவருடைய கணவர் பெயர் பட். இவர் தொழில் அதிபர்.

<b>செல்போனில் ஆபாச படம்</b>

அபேக்ஷாவுக்கு அடிக்கடி செல்போனில் ஆபாச படங்கள் வந்தன. அதோடு ஆபாச வார்த் தைகளும், ஆபாச ஜோக்குகளை யும் யாரோ தினசரி அனுப்பி னார்கள். இதைபார்த்து நடிகை அபேக்ஷா அதிர்ச்சியடைந்தார். செல்போன் ஒலித்தாலே என்ன ஆபாச படம் இருக்கிறதோ? என்று பயந்தார்.

யாரோ அவருடைய செல் போன் நம்பரை நன்கு தெரிந்த வர்கள்தான் இந்த குறும்பு தனமான செயலில் ஈடுபடுவதை அவர் தெரிந்து கொண்டார். ஆனால் அந்த குறும்புக்கார மர்ம நபர் யார் என்பதை அவ ரால் கண்டுபிடிக்க முடிய வில்லை.

<b>தனிபடை</b>

அதனால் இதுபற்றி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆர்.நடராஜிடம் நடிகை அபேக்ஷா புகார் செய்தார்.

இது போன்று செல்போன் மற்றும் இன்டர்நெட்டுகளை பயன்படுத்தி குற்ற நடவடிக்கை களில் ஈடுபடுகிறவர்களை பிடிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவில் சைபர்கிரைம் போலீஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது.

நடிகை அபேக்ஷாவுக்கு செல் போனில் வந்த ஆபாச படங் களை அனுப்பிய மன்மத நபரை பிடிக்கும்படி சைபர்கிரைம் போலீசாருக்கு கமிஷனர் நடராஜ் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக் கப்பட்டது. அபேக்ஷாவுக்கு ஆபாச படம் அனுப்பியவனை பொறி வைத்து பிடிக்க திட்டம் தயார் ஆனது.

<b>மாணவன் சிக்கினான்</b>

<span style='color:red'>அடையாறு பகுதியில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்தில் இருந்து தான் ஆபாச படங்கள், வசனங்கள் நடிகை அபேக்ஷா வுக்கு அனுப்பப்பட்டதை தனிப் படையினர் கண்டுபிடித்தனர். அதனால் அந்த <b>இன்டர்நெட் மையத்தை</b> போலீசார் ரகசிய மாக கண்காணித்தனர்.

ஒரு மாணவன் நடிகை அபேக் ஷாவுக்கு அந்த இன்டர்நெட் மையத்தில் இருந்து ஆபாச படம் அனுப்பும்போது போலீசார் கையும், களவுமாக அவனை பிடித்தனர். அவன் பிளஸ்-2 படித்து முடித்து என்ஜினீயரீங் கல்லூரியில் சேர தேர்வு ஆகி இருந்தான்.

<b>மாணவனுக்கு புத்திமதி</b>

அவனை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அவனுடைய பெற்றோர்களை வரவழைத் தனர். மகனுடைய நடவடிக் கையை அறிந்த அவனுடைய பெற்றோர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். மகனுடைய எதிர்காலம் பாதிக் கப்படும் என்பதால் அவனை விட்டுவிடும்படி போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர்.

மாணவன் பிடிபட்டது பற்றி நடிகை அபேக்ஷாவுக்கு போலீ சார் தகவல் தெரிவித்தனர். அவ ரும் போலீஸ் நிலையத்துக்கு வந் தார். மாணவனை பார்த்து அவர் பரிதாபப்பட்டார். படிக்கிற வயதில் இப்படிப்பட்ட காரியங் களில் ஈடுபட்டு எதிர்காலத்தை வீணாக்கிவிடக் கூடாது என்று அந்த மாணவனுக்கு அவர் புத்திமதி கூறினார்.

இது போன்ற குறும்புத்தன மான செயலில் ஈடுபடாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் நீ பெரிய விஞ்ஞானி ஆகலாம். நீ உன்னை திருத்திக் கொள். உன்னை பார்த்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மற்ற மாணவர்களும் திருந்த வேண் டும். உன்னை நான் மன்னித்து விடுகிறேன்' என்று கூறினார்.

<b>எச்சரிக்கை</b>

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவனை எச்சரிக்கை செய்து வீட்டுக்கு அனுப்பினார் கள். அவனுடைய பெற்றோரிடம், "நீங்கள் விழிப்புடன் இருந்து உங்கள் மகனின் நடவடிக்கையை கண்காணித்து கொள்ளுங்கள். அவனை நல்வழிபடுத்துங்கள்'" என்று போலீசார்

கூறினார்கள்."பெண்கள் இதுபோன்ற புகார் களை தைரியமாக போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற ஆபாச நட வடிக்கைகளில் ஈடுபடுகிறவர் களை பிடிக்கமுடியும் " என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். </span>