The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage



Yarl Forum
ரிஷி புலனாய்வு அரசியலில்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: ரிஷி புலனாய்வு அரசியலில்... (/showthread.php?tid=3745)

Pages: 1 2 3


ரிஷி புலனாய்வு அரசியலில்... - Danklas - 08-05-2005

ரிஷியின் புலனாய்வு அரசியலில் "இந்தியாவின் மாற்றமடையும் வெளியிறவு கொள்கை" என்ற புலனாய்வு ஆய்வில் ரிஷி தெரிவிக்கும் முக்கிய 2 விடயங்கள்...

* இந்திய சிங்கம் எழுந்துவிட்டது முழுப்பலத்தையு உபயோகிக்கப்போகின்றது..

* ஈழத்தமிழர்களுக்கு எதிராக முழுபலத்தை கொண்டு அவர்களை அடக்க முற்படப்போகிறார்கள்..

இந்த ஆய்வினை கேட்க...இங்கே Idea

மு.கி: நாய்வாலை நிமித்துவது கஸ்டம்... ஒட்ட நறுக்கினால் Idea நன்று..


- அருவி - 08-05-2005

டங் அண்ணா பரபரப்பு பத்திரிகையில இது வாறது..


- அருவி - 08-05-2005

தமிழ்ப் பத்திரிகைகளில் மிகவும் வித்தியாசமான பத்திரிகை கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்


- Danklas - 08-05-2005

ரிஷியின் புலனாய்வுக்கும் என்ட புல் நாய்வுக்கும் எவ்வளவுசி சிறிய வித்தியாசம் பார்த்தீர்களா...

அது இருக்கட்டும்... ரிஷியின் கருத்துக்கு உங்களின் கருத்து என்ன?? இந்திய கிழட்டு நரிகளின் ஊளை ஈழத்தமிழர்களுக்கு எந்த விதத்தில் தீமை பயக்கும்?? கனோன், கறூனா, சாத்திரி, நாரதர், குருவி, நிதர்சன், சின்னா, ஊமை, மதன், கிங், சூர்யகுமாரா, ஜூட், அறிவு... எங்க அவிட்டு விடுங்க விடுங்க பார்ப்பம் (புலனாய்வைத்தானப்பா) Idea :wink:


- Nitharsan - 08-05-2005

Aruvi Wrote:தமிழ்ப் பத்திரிகைகளில் மிகவும் வித்தியாசமான பத்திரிகை கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்

புரியவில்லை அருவி...


- Nitharsan - 08-05-2005

அந்த புலானாய்வு அரசியலின் படி இந்த தனது சுற்று வட்ட நாடுகளுடன் ஒரு சுமுகமான உடன்படிக்கைக்கு வரும் போது தமிழீழம் ஒன்றொரு நாடு அவர்களுக்கு தேவையில்லை. இது வரை காலமும் இலங்கை அரசை தனது கைக்குள் வைத்திரக்கவே இந்தா தமிழருக்கு ஆதரவாகவும் எதிராகவும் செயற்ப்பட்டது. ஆனால் சீனா..பாக்கிஸ்தான் போன்றவற்றுடனும் அதே நேரம் அமேரிக்காவுடனும் இந்தியா ஒரு உடன்பாட்டுக்கு வந்தால் ஈழத்தமிழரின் நிலமை மோசமாகும் என்பதில் ஐயமில்லை காரணம் இந்து சமூத்திர சுற்றுவட்டத்தில் ஈழத்தமிழனுக்காய் குரல் கொடுக்க எந்த நாடும் தயாராய் இராது காரணம் பிராந்திய சர்வதேச வல்லரசுகளின் அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால்.. இந்தியாவின் இந்நடவடிக்கை சாத்தியப்படாத என்பது எனது கணிப்பு காரணம் இந்தியாவில் கொள்கைகளை பெரும்பாலும் அரசில் வாதிகளே தீர்மானிக்கின்றனர். எனவே அடுத்து வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்ப்பட்டால் இந்த வெளி நாட்டுக்கு கொள்கைகள் தூக்கியேறிப்படலாம்....


- Thala - 08-05-2005

Nitharsan Wrote:
Aruvi Wrote:தமிழ்ப் பத்திரிகைகளில் மிகவும் வித்தியாசமான பத்திரிகை கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்

புரியவில்லை அருவி...

அருவி பரபரப்பு பத்திரிகையைச் சொல்கிறார் என்று நினைக்கிறன்....

அப்பிடியா அருவி :?:


- அருவி - 08-05-2005

Thala Wrote:
Nitharsan Wrote:
Aruvi Wrote:தமிழ்ப் பத்திரிகைகளில் மிகவும் வித்தியாசமான பத்திரிகை கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்

புரியவில்லை அருவி...

அருவி பரபரப்பு பத்திரிகையைச் சொல்கிறார் என்று நினைக்கிறன்....

அப்பிடியா அருவி :?:

ஆமா அதேதான்


- அருவி - 08-05-2005

Nitharsan Wrote:அந்த புலானாய்வு அரசியலின் படி இந்த தனது சுற்று வட்ட நாடுகளுடன் ஒரு சுமுகமான உடன்படிக்கைக்கு வரும் போது தமிழீழம் ஒன்றொரு நாடு அவர்களுக்கு தேவையில்லை. இது வரை காலமும் இலங்கை அரசை தனது கைக்குள் வைத்திரக்கவே இந்தா தமிழருக்கு ஆதரவாகவும் எதிராகவும் செயற்ப்பட்டது. ஆனால் சீனா..பாக்கிஸ்தான் போன்றவற்றுடனும் அதே நேரம் அமேரிக்காவுடனும் இந்தியா ஒரு உடன்பாட்டுக்கு வந்தால் ஈழத்தமிழரின் நிலமை மோசமாகும் என்பதில் ஐயமில்லை காரணம் இந்து சமூத்திர சுற்றுவட்டத்தில் ஈழத்தமிழனுக்காய் குரல் கொடுக்க எந்த நாடும் தயாராய் இராது காரணம் பிராந்திய சர்வதேச வல்லரசுகளின் அழுத்தம் அதிகமாக இருக்கும். <b>ஆனால்.. இந்தியாவின் இந்நடவடிக்கை சாத்தியப்படாத என்பது எனது கணிப்பு காரணம் இந்தியாவில் கொள்கைகளை பெரும்பாலும் அரசில் வாதிகளே தீர்மானிக்கின்றனர். எனவே அடுத்து வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்ப்பட்டால் இந்த வெளி நாட்டுக்கு கொள்கைகள் தூக்கியேறிப்படலாம்..</b>..


எத்தனை அரசுகள் மாறினாலும் தமிழீழவிடுதலைப்புலிகள் மீதான தடை இன்னமும் தொடரவே செய்கிறது.....

கொள்கைகள் கொள்கைவகுப்பாளர்களினாலே மேற்கொள்ளப்படுகிறது..
அதில் சில அரசியல்வாதிகளினால் எடுத்துக்கொடுக்கப்படுகின்றன அவ்வளவே..


- Thala - 08-05-2005

Nitharsan Wrote:அந்த புலானாய்வு அரசியலின் படி இந்த தனது சுற்று வட்ட நாடுகளுடன் ஒரு சுமுகமான உடன்படிக்கைக்கு வரும் போது தமிழீழம் ஒன்றொரு நாடு அவர்களுக்கு தேவையில்லை. இது வரை காலமும் இலங்கை அரசை தனது கைக்குள் வைத்திரக்கவே இந்தா தமிழருக்கு ஆதரவாகவும் எதிராகவும் செயற்ப்பட்டது. ஆனால் சீனா..பாக்கிஸ்தான் போன்றவற்றுடனும் அதே நேரம் அமேரிக்காவுடனும் இந்தியா ஒரு உடன்பாட்டுக்கு வந்தால் ஈழத்தமிழரின் நிலமை மோசமாகும் என்பதில் ஐயமில்லை காரணம் இந்து சமூத்திர சுற்றுவட்டத்தில் ஈழத்தமிழனுக்காய் குரல் கொடுக்க எந்த நாடும் தயாராய் இராது காரணம் பிராந்திய சர்வதேச வல்லரசுகளின் அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால்.. இந்தியாவின் இந்நடவடிக்கை சாத்தியப்படாத என்பது எனது கணிப்பு காரணம் இந்தியாவில் கொள்கைகளை பெரும்பாலும் அரசில் வாதிகளே தீர்மானிக்கின்றனர். எனவே அடுத்து வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்ப்பட்டால் இந்த வெளி நாட்டுக்கு கொள்கைகள் தூக்கியேறிப்படலாம்....

நானும் இதைத்தான் தான் நினைக்கிறன். அமெரிக்காவின் ஆதிக்கப்போக்கு என்பது அமெரிக்க பொருளாதாரத்தை மையமாகக்கொண்டது அது ஏற்கனவே இந்தியாவில் வேரூண்டி இந்தியமக்களின் நாளாந்தக் கனவாக உள்ளது. இதை விட இந்தியா அமெரிக்காவுக்கு கொடுக்க ஏதும் இருப்பதாய் தெரியவில்லை.... அணு ஒப்பந்தம், ACPSA ஒப்பந்தங்கள் இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம். சீனாவுடனான நெருக்கம் வடபகுதி பாதுகாப்பு ச்செலவுகளை குறைக்கலாம்.

இப்போதான கேள்வி இந்தியா இப்போதைவிட எப்படி கடுமையாக நடக்கமுடியும். ஏற்கனவே 1987ம் வருடமே இந்தியா கடுமையான நடவடிக்கை களில் இறங்கிவிட்டது. இப்போதும் கடுமையாகத்தான் நடக்கின்றது. உதாரணம் 1993ம் வருட கிட்டண்ணாவின் இளப்பு, 2002ம் வருட புலிகளின் கப்பல்கள் தகர்ப்பு.

இப்போ உள்ள கேள்வி அமெரிக்கா இந்தியா கூட்டுச்சேர்ந்து இலங்கையின் அமைவிடத்தையும் வளங்களையும் பங்குபோடுமா?.... என்னைக்கேட்டால். இல்லை என்பேன் காரணம் அமெரிக்க அமைவிடம் தெனாசியாவில் உறுதியாகாத நிலையில் எந்த ஒரு விட்டுக்கொடுப்புக்கும் அமெரிக்கா சம்மதிக்காது..ஏனென்றால் அது அமெரிக்காவின் எதிர்கால நடவடிக்கைகளை பாதிக்கும். அவ்வளவு விரைவாய் இந்தியா நம்பத்தகுந்தவர்களும் அல்ல...

யார் என்ன செய்தாலும் தமிழர்களின் எதிகாலம் தமிழர்களின் கையில் மட்டும் தான் இருக்கிறது. அதற்காக தமிழர் தங்களை வளர்த்துக்கொள்வது அவசியம்.. எப்படி என்றால்.. <b>பொருளாதாரத்தால். </b>


- sinnakuddy - 08-05-2005

இந்தியாக்காரனுக்கு நேரு காலத்திலிருந்து இந்திய விஸ்தரிப்பு வாதகொள்கை இருந்தது இலங்கை நேபாளம் மாலை தீவு பூட்டான் தனது எல்லைக்குட்பட்ட நாடுகளாகவே கருதுகிறது. இந்து சமுத்திரத்துக்குள் வேறு ஒருவரும் ஆதிக்க செலுத்தவிடாது என்று கொளகையுடையது.

80களில் ஜேஆர் இந்தியா மீறி எடுத்த முடிவுகளால் இந்தியா வுக்கு கவலை அளித்தது.முக்கியமாக புத்தளத்திலுள்ள Volce of america radio branch கட்ட ஜே ஆர் அனுமதி வழங்கு நிலையில் இருந்தார். புத்த ளத்தில் உள்ள அமெரிக்க டிரான்ஸ்மீற்றர் இனால் இந்து சமுத்திரத்திலுள்ள இந்திய நீர்மூழ்கி கப்பல்களின் சிக்னல் பரிமாற்றத்தை அறியகூடியதாயிருக்கும்.அப்பொழுது கோல்ட் வார் காலகட்டம ரஸ்யாவுடன் பாதுகாப்புரீதியாக நெருங்கிய காலகட்டம் .ஜேஆரை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர இந்தியா முடிவெடுத்தது.தமிழ்மக்களின் தேசிய போராட்டத்தினூடாக அதை விளையாட வெளிக்கிட்டது.இளைஞர்களளுக்கு ஆயதம் பயிற்ச்சி வழங்கி குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இலங்கையை சரணடைய வைக்கலாமென்று நினைத்தது அதில் ஓரளவு வெற்றியும் கண்டது.பின் தமிழ்தேசியத்துக்கு எதிரி யாக காட்டிகெண்டமாயாலும் 1987 பெர்லின் சுவர் உடைத்தாபிறகு கோல்வார் முற்று பெற்றமையாலும் இந்தியா இலங்கை விவகாரங்களில் அக்கறையை குறைத்தக்கொண்டது இந்தியா தமிழ் தேசியநலனுக்கு எதிராகவே எப்பவும் நடக்கும். ஏனெனில் தமிழ் தேசியம் முனைப்பு பெறுவது தனது நலனுக்கு ஆபத்தென்று பயம் கொள்ள தொடங்கிவிட்டது அதனால் ரிசி கூறுவதுபோல் நடக்குமென்று நானும நம்புகிறேன்


- sinnakuddy - 08-05-2005

இந்தியாவில் கொள்கைகளை பெரும்பாலும் அரசில் வாதிகளே தீர்மானிக்கின்றனர். எனவே அடுத்து வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்ப்பட்டால் இந்த வெளி நாட்டுக்கு கொள்கைகள் தூக்கியேறிப்படலாம்....[/quote] இந்தியாவின் கொள்கை வகுப்பு இந்தியாவின் அரசியல் கட்சிகளில்லை..பிரோகிரட்டி என்ற அரசு யந்திரத்தின் கையிலிருக்கிறது அதுவும் கொஞ்சம ஸரோஙகாயிருக்கிறது.அரசியல் கட்சிகளின் மாற்றத்தால் இந்தியாவின் வெளிவிகாரகொள்கையில் அவ்வளவு மாற்றம் வராது.


- narathar - 08-05-2005

அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஆய்வு நிறுவனங்களின் எதிர்வுகூறல்களின்படி சீனா,இந்தியா மற்றும் யப்பான் அகியவற்றின் வளர்ச்சியானது அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்காலத்தில் பாதிக்கக் கூடும்.இதைத் தடுப்பதற்காக அமெரிக்கா தனது தொலை நோக்கிய பூலோக அரசியலை பின் வருமாறு நகர்த்தி வருகிறது.

1)பொருளாதார மற்றும் தொழில் நுட்ப கூட்டு உடன்படிக்கைகள்,சாத்தியமான நேரங்களில், உதாரணத்திற்கு இந்தியா,யப்பானுனடான கூட்டிறவு ஒப்பந்தங்கள்.

2)இரானுவ தொழில் நுட்ப ஆராச்சிகள்,தொழில் நுட்ப பாதுகாப்புக்கள்.

3)பூகோள ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சக்தி வளங்களையும் ,தொடர்பாடல் மற்றும்
ஆகாய,கடற் போக்குவரத்து பாதைகளை தனது ஆளுகைக் குள் கொண்டுவருவது.

4)இந்தியாவைப் பொறுத்தவரை ,வளர்ந்து வரும் சீனாவுக்கு எதிராக ,தனது பாதுகாப்பை உறுதிப் படுத்த ,அமெரிக்காவுடன் கூட்டிறவு ஒப்பந்தங்களை ஏற்படித்தி வருகிறது.

5)ஈழத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவின் பார்வை திருகோனமலையயே நோக்கி நிற்கிறது.இது கடல் வளிகளைக் கண்காணிப் பதற்கும்,எண்ணை வர்த்தகத்தை பாதுகாப்பதற்கும் அவசியமாகிறது.

6)இதனாலயே நோர்வே ஊடாகவும்,யப்பான் ஊடாகவும் சமாதனம் என்ற போர்வையில் தலையிட்டுள்ளது.

7) சீனா என்ற எதிரிக்கு எதிராக ,அமெரிக்காவும் ,இந்தியாவும் நெருங்கி வருவது, திருகோனமலையை நோக்கிய அமெரிக்க நகர்வுகளுக்கு எதிரான இந்திய நடைவடிக்கைகளைக் குறைக்கலாம்.

8) நெருங்கி வரும் இந்த இராணுவ ,பொருளாதார உறவு
ஒரு இந்திய,அமெரிக்க கூட்டாக திருகோணமலயில் தளம் அமைக்கலாம்.

9)இதற்கு இலங்கையின் சமாதானம் என்று சொல்லப் படுகின்ற காலத்தில் ,பல் வேறு யுக்திகளினால் போராட்டத்தின் உக்கிரத்தைக் குறைத்தும்,உட் பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலமும்,போட்டிக் குழுக் களை உள் நிழைப் பதன் மூலமும் ,போராடும் பிரதான சக்தியையும், மக்களின் போராட்ட உணர்வையும் மளுங்கடிக்கின்ற வேலைகளையும் செய்தல்.

10)இந்தியாவைப் பொறுத்தவரை ஈழவிடுதலைப் போராட்டத்தின் வெற்றியானது ,இந்திய தேசிய இனங்களின் எழுச்சிக்கு வித்திட்டு ,அரசியல் சிதிரமற்ர தன்மையை உருவாக்கலாம்.

11)எமக் குள்ள ஒரே வழி எமது பலத்தையும்,பொருளாதார வலுவையும் வளர்த்தலே ஆகும்.

12)உல் நுளைக்கப் படும் குளுக்களை அழித்தல்,மக்களுக்கு அரசியல் விழிப் புணர்வை ஊட்டி, இந்த வல்லரசாதிக்கப் போட்டியில் சிக்கி உள்ள எமது விடுதலைப் போராட்டத்தின் நிலையைத் தெழிவு படித்துதல் களத்திலும், புலத்திலும்.உள் நுழைக்கப்படும் பிரச்சார சாதனக்களையும், நபர்களையும் அம்பலப் படுத்துதல்.

13)அரசியல் ரீதியாக போராட்டத்துடன் ஒன்றிணைந்து,எம் அனைவரினால் ஆனவற்றைச் செய்து,எமது விடுதலையை நிச்சயப் படுத்துவோம்.


- மின்னல் - 08-05-2005

உண்மையிலே இந்தப் பத்திரிகை வித்தியாசமானதுதான்.
எனென்றால் ஒரிரண்டு பத்திரிகைகள் வாசித்தவுடனேயே அலுப்பு வருகிறது.
ஒரு பத்திரிகைக்குரிய எழுத்துநடை பரபரப்பில் இல்லை. பத்திரிகை ஆசிரியர் ;ரிஷி வானொலியில் புலானய்வு அரசியல் வழங்குவது போன்றே பத்திரிகையிலும் எழுதுகிறார் (அதாவது பேச்சு நடையில்). அவரின் கட்டுரைகளை இரண்டு மூன்று தரம் படிக்க ஓகே. ஆனால் அதற்குப் பிறகு சலிப்புத் தட்டும்.


- வினித் - 08-05-2005

மின்னல் Wrote:உண்மையிலே இந்தப் பத்திரிகை வித்தியாசமானதுதான்.
எனென்றால் ஒரிரண்டு பத்திரிகைகள் வாசித்தவுடனேயே அலுப்பு வருகிறது.
ஒரு பத்திரிகைக்குரிய எழுத்துநடை பரபரப்பில் இல்லை. பத்திரிகை ஆசிரியர் ;ரிஷி வானொலியில் புலானய்வு அரசியல் வழங்குவது போன்றே பத்திரிகையிலும் எழுதுகிறார் (அதாவது பேச்சு நடையில்). அவரின் கட்டுரைகளை இரண்டு மூன்று தரம் படிக்க ஓகே. ஆனால் அதற்குப் பிறகு சலிப்புத் தட்டும்.

:roll: :roll: :roll:


- Thala - 08-05-2005

sinnakuddy Wrote:இந்தியாக்காரனுக்கு நேரு காலத்திலிருந்து இந்திய விஸ்தரிப்பு வாதகொள்கை இருந்தது இலங்கை நேபாளம் மாலை தீவு பூட்டான் தனது எல்லைக்குட்பட்ட நாடுகளாகவே கருதுகிறது. இந்து சமுத்திரத்துக்குள் வேறு ஒருவரும் ஆதிக்க செலுத்தவிடாது என்று கொளகையுடையது.

80களில் ஜேஆர் இந்தியா மீறி எடுத்த முடிவுகளால் இந்தியா வுக்கு கவலை அளித்தது.முக்கியமாக புத்தளத்திலுள்ள Volce of america radio branch கட்ட ஜே ஆர் அனுமதி வழங்கு நிலையில் இருந்தார். புத்த ளத்தில் உள்ள அமெரிக்க டிரான்ஸ்மீற்றர் இனால் இந்து சமுத்திரத்திலுள்ள இந்திய நீர்மூழ்கி கப்பல்களின் சிக்னல் பரிமாற்றத்தை அறியகூடியதாயிருக்கும்.அப்பொழுது கோல்ட் வார் காலகட்டம ரஸ்யாவுடன் பாதுகாப்புரீதியாக நெருங்கிய காலகட்டம் .ஜேஆரை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர இந்தியா முடிவெடுத்தது.தமிழ்மக்களின் தேசிய போராட்டத்தினூடாக அதை விளையாட வெளிக்கிட்டது.இளைஞர்களளுக்கு ஆயதம் பயிற்ச்சி வழங்கி குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இலங்கையை சரணடைய வைக்கலாமென்று நினைத்தது அதில் ஓரளவு வெற்றியும் கண்டது.பின் தமிழ்தேசியத்துக்கு எதிரி யாக காட்டிகெண்டமாயாலும் 1987 பெர்லின் சுவர் உடைத்தாபிறகு கோல்வார் முற்று பெற்றமையாலும் இந்தியா இலங்கை விவகாரங்களில் அக்கறையை குறைத்தக்கொண்டது இந்தியா தமிழ் தேசியநலனுக்கு எதிராகவே எப்பவும் நடக்கும். ஏனெனில் தமிழ் தேசியம் முனைப்பு பெறுவது தனது நலனுக்கு ஆபத்தென்று பயம் கொள்ள தொடங்கிவிட்டது அதனால் ரிசி கூறுவதுபோல் நடக்குமென்று நானும நம்புகிறேன்


இந்தியா எதிரா நடக்கும் என்றால் இதுவரை அப்பிடி நடக்கவில்லை என்றாகும். இதைவிட மோசமாய் நடப்பது என்றால் வெளிப்படையான சண்டை தான். அப்பிடியானால் அமெரிக்காவும் சேந்தா இல்லையா?.. அல்லது இந்தியா எம்மீது கனிவான போக்கு வைதிருந்தது என்றல் எப்படி வைத்திருந்தது? இப்படி நிறையக் கேள்விகள் எழுகின்றது.

அதை எல்லாம் தவிர்த்துப் பார்த்தால் இலைமறை காயாய்த்தெரிவது புலிகள் மீதான அமெரிக்க கரிசனம் சமாதானவிரும்பிகளாய் அதுகாட்டும் ஆர்வம். இலங்கையில் சமாதானம் வரவேண்டும் என்று அது போடும் வேடம் எல்லாம் தனது இலங்கை வியாபாரத்துக்கு அல்லது நலனுக்கு போரினால் ஏதும் பங்கம் வரக்கூடாதென்ற கரிசனம். போர் நடக்கும் பூமியில் இயல்பான வியாபாரம் அல்லது போக்குவரத்து சாத்தியப்படாது...

இப்போ இந்தியாவின் நோக்கம் புலிகளை முடிந்த அளவு பலவீனப் படுத்துவது அல்லது பிளவுபடுத்திவிடுவது தான் இதில் இருந்து அவர்கள் மாறவில்லை அல்லது மாறப்போவது இல்லை..

அப்படியானால் அமெரிக்க இந்திய கூட்டு இலங்கையில் எப்படிச்சாத்தியமாகும். தவிர நன்கு பயிற்றப்பட்ட புலி உறுப்பினர்களை பிரித்து ஒரு கட்டுக்குள் இல்லாமல் சிதற விடும் பட்சத்தில். பாதிப்புக்கள் அமெரிக்காவுக்கோ அல்லது இந்தியாவுக்கோதான் இதை அமெரிக்கா ஈராக்கில் நன்கு அனுபவிக்கிறது.

<b>சூடு கண்டபூனை அமெரிக்கா</b>(ஆப்கான், ஈராக், வியற்நாம்) <b>அடுப்படியை நாடாது........</b>


- narathar - 08-05-2005

இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அமெரிக்காவினது நோக்கம் தளம் அமைப்பதுவே ,தமிழரை அழிப்பது அல்ல. எமது அரசியல் போராட்டத்தைப் பற்றி அமெரிக்காவுக்கு அதிக கவலை இல்லை,ஆனால் இந்தியாவுக்கு இருக்கிறது.
அண்மைய அமெரிக்க நகர்வுகள் இதனையே காட்டுகின்றன.இங்கே அமெரிக்க நிலைப் பாட்டிற்கும் இந்திய நிலைப் பாட்டுக்கும் முரண் நிலை உள்ளது.

தலையீட்டின் வடிவத்தைப் பொறுத்தவரை புலிகளின் போர்க் குணத்தை அறிந்துள்ள அமெரிக்காவோ, இந்தியாவோ நேரான யுத்தத்தில் இறங்கி மூக்குடை படா,மேலும் நெடு நாட்களாக நடக்கக் கூடிய இந்த யுத்தத்தை அவை தவிர்க்கவே பார்க்கும்.இராக்கில் அமெரிக்கா கற்று வரும் பாடமும் அதற்கு ஒரு காரணம்.
அனேகமாக தலையீடு ஏற்கனவே தொடங்கிய வடிவத்திலேயே தொடரும்,இராணுவ பயிற்ச்சிகள் உபகரண உதவிகள்,சண்டை ஆரம்பித்தால் அதற்கான பின் புல நகர்வுக்கான விமானங்கள் கப்பல்கள் என உதவி செய்யக் கூடும்.

புலிகள் அவ்வாறன நிலமைகள் ஏற்படா வண்ணம் சில நடவடிக்கை களை முன் கூட்டியே கேந்திர முக்கியத்துவமான துறை முகத்தையோ ,விமான நிலயத்தையோ செயல் இளக்கச்செய்வதன் மூலம் முடக்கலாம்.


- sinnakuddy - 08-05-2005

நாரதர் சொன்னமாதிரி அமெரிக்காவை விட இந்தியாவுக்கு தான் அக்கறை. அமரிக்க இந்திய பொலிற்றிக்கள் ரைம் டரேபிள் அஜன்டாவின் ஒரு நாடகமே இந்த சமாதனபேச்சு. அமெரிக்காவின் சந்தையாக 60 வீத்துக்கு மேல் இந்தியா இருக்கிறது. இலங்கை விசயத்துக்காக இந்தியாவை அமெரிக்கா ஒரு போதும் பகைத்துகொள்ளாது.


- narathar - 08-06-2005

புலிகள் ஐரோப்பா,அமெரிக்கா,இந்தியா என்னும் சர்வதேச சக்திகளுக் கிடயே ஆன முரண் நிலைகளையும், அவற்றின் நலன் சார்ந்த அரசியல் நகர்வுகளையும், தமது நோக்கத்திற்கு ஏதுவாக தற்போது பயன் படுத்தி வருகின்றனர்.
ஆனால் தேசிய பொருளாதாரத்தை கட்டியெளுப்புவது என்ற அவர்களின் நோக்கத்திற்கும், சந்தை வாய்ப்புக்களை நாடுகின்ற மேலுள்ள சக்திகளின் நகர்வுகளுக்கும் இடையே ஆன முரண் நிலயை எவ்வாறு புலிகள் கையாளப் போகிறார்கள்.
உலக வங்கியோ, நாணய நிதியமோ நிபத்தனைகள் இன்றி உதவிகளை வழங்கா.தேசிய விடுதலையை முன்னிறுத்துகிற புலிகளை நம்பி இவை தமது முதலை நேரடியாக வழங்குமா, அவ்வாறு கேட்கும் புலிகளின் நகர்வுகள் வெற்றியளிக்குமா, அல்லது புலிகள் தேசிய பொருளாதார நலனைக் கைவிட நேருமா?


- Thala - 08-06-2005

நாரதர் சொல்வதில் உண்மை நிலை இருந்தாலும். இதுவரை இலங்கையில் இருவேறு சக்திகள் இருப்பதை ஐரோப்பாவோ, அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ மறுத்ததில்லை. போச்சுவார்த்தை தீர்வை அவர்கள் ஊக்கப்படுத்துவதே இதன் எடுத்துக்காட்டு. இதுவரை இலங்கையின் சட்டபூர்வ சக்திக்கே அவர்கள் ஆதரவு வளங்கினர். ஆனால் இந்த சமாதான காலம் கூறுவது என்னவென்றால் அமெரிக்கா இரு பகுதியினரையும் சமமாகத்தான் நடாத்தவிரும்புகிறது..

அதற்கு எற்றால்போல்தான் அறிக்கைகளும் விடுகின்றது. அனால் இந்தியா அப்படிச்செய்ய வில்லை. அவர்களின் ஏகபோக ஆதரவு எப்போதும் இலங்கைக்கே,

வலியவன் வெல்வான் என்ற தத்துவத்தின் படி இலங்கையின் மேலாண்மையான சக்திகள் தாங்கள் தான் என்று காட்டுவதற்காக தான் இலங்கை இந்திய உதவியுடன் (ENDLF)அரசால் இன்றய நிழல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் அரசு வெண்றால் அமெரிக்காவின் ஐரோப்பாவின் செல்லப்பிள்ளை யாகலாம் என்தாறுதான் இந்திய ஆதரவுடன் இந்த யுத்தம்,
சோடை போனவர் களுக்கு யாரும் அனுதாபம் கூட வழங்கமாட்டார்கள், இது தானே உலக நியதி....