Yarl Forum
உயிரின் வலி இறுவட்டு வெளியீடு. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: உயிரின் வலி இறுவட்டு வெளியீடு. (/showthread.php?tid=5543)



உயிரின் வலி இறுவட்டு வெளியீடு. - Thaya Jibbrahn - 01-29-2005

உலகத்தமிழர் வானொலியால்
உயிரின் வலி இறுவட்டு வெளியீடு.


சுனாமி எனும் ஆழிப்பேரலைகள் விளைவித்த அனர்த்தங்களின் கொடுமையை 26.12.2005 ல் உலகமே நினைவுகூர்ந்தது. அன்றைய தினம் சுனாமியின் அவலங்களை வெளிப்படுத்த உயிரின்வலி எனும் பெயரில் உலகத்தமிழர் வானொலியினர் இறுவட்டாக வெளியீடு செய்துள்ளனர். கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் மேல் மாகாண மக்கள் முன்னணியின் தலவைர் மனோ கணேசன் தமிழ்க்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கஜேந்திரகுமார் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ஏராளமான மக்கள் கலந்து கொண்ட வெளியீட்டு நிகழ்வுக்கு உலகத்தமிழர் வானொலியின் நிர்வாக இயக்குனர் தர்சன் இராஜகோபால் தலைமை தாங்கினார்.

மேற்படி இறுவட்டு வெளியீட்டின் நோக்கம் பற்றி உலகத்தமிழர் வானொலியின் தாய் நிறுவனமான Yellowwin Media (p) Ltd ன் இயக்குனர் வினோத் கருத்து தெரிவிக்கும் போது:

சுனாமி நிகழ்த்திய கொடுமை தாளமுடியாதது. அதன் தாக்கத்தை எப்படியாவது பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கும் கையளிக்க வேண்டும் என சிந்தித்தோம். அத்துடன் எம்மிடம் ஏராளமான நேயர்கள் இருக்கின்றார்கள். அவர்களை இந்த இறுவட்டு வெளியீட்டு முயற்சியுடன் ஒன்றிணைத்துக் கொண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளில் நாமும் ஒரு மக்கள் ஊடகம் என்ற வகையில் எம்மாலானதை செய்யமுடியும் என்று நம்புகின்றோம். இப்போது இந்த பணிக்கு ஏராளமான ஆதரவு கிடைத்திருக்கின்றது. இது இன்னும் மேம்பட இன்னும் பல நேயர்கள் எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும் என்றார்.

பரவயில்லையே நண்பர்களே! வெறுமனே நிதியத்தை தொடக்கி வைச்சிட்டு பணம் பணம் எண்டு கேக்காம வித்தியாசமா முயற்சி பண்றாங்கள். வாழ்த்த தான் வேணும்.- என்ன நான் சொல்றது???

www.worldtamilarweb.com
live@wtrfm.com