Yarl Forum
எம்.எஸ்.சுப்புலட்சுமி காலமானார் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: எம்.எஸ்.சுப்புலட்சுமி காலமானார் (/showthread.php?tid=6203)



எம்.எஸ்.சுப்புலட்சுமி காலமானார் - aathipan - 12-12-2004

சங்கீத இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி காலமானார்


<img src='http://www.spicmacayblr.org/mss.jpg' border='0' alt='user posted image'>
சென்னை: இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நேற்றிரவு சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி (88). வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த 30 ஆண்டுகளாகவே சர்க்கரை நோய் இருந்தது. மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென இருதய பாதிப்பு ஏற்பட்டது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.




இந்நிலையில் நேற்று அவரது நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மேலும், நாடித்துடிப்பும் வெகுவாக குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்தது. உடனடியாக மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சையளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.40 மணியளவில் அவர் காலமானார்.எம்.எஸ். சுப்புலட்சுமி காலமானதை டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று இரவு அறிவித்தார்.

எம்.எஸ்.: இசை மகுடத்தில் ஓர் ரத்தினம்

இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியிருக்கிறது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம் என்று, புகழ்பெற்ற கர்நாடக சங்கீத மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார். இந்தியாவின் அந்த மாபெரும் கலைஞருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத ரத்னா'வும் வழங்கப்பட்டது.

1940லிருந்து இவர், பொதுவாக இசைத் துறைக்கான இந்தியாவின் உயர் விருதுகள் அனைத்தையும் பெற்றிருந்தார்.

1916 செப்டம்பர் 16ல் மதுரை வீணை இசைக் கலைஞர் சண்முகவடிவுக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருடன் இசை தொடர்பான சூழலிலே வளர்ந்தார். இவருடைய தாயார் சண்முகவடிவு போல் வடிவாம்பாளும் வீணை மீட்டுவதில் ஆர்வம் மிகுந்தவர். சக்திவேலுக்கு மிருதங்கத்தில் ஈடுபாடு அதிகம். சுப்புலட்சுமியின் பாட்டி அக்கம்மாள் ஒரு வயலின் கலைஞர்.

இசைக் குடும்பம்: இசைப் பின்னணியைக் கொண்ட குடும்பமாதலால் சிறுவயதிலிருந்தே சுப்புலட்சுமிக்கு இசையில் நாட்டம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. இவரது தாயாருடன் பல கச்சேரியிலும் இவர் பங்கேற்றதுண்டு. செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், முசிறி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்யநாத பாகவதர், ராஜமாணிக்கம், பிள்ளை, ராஜரத்தினம், பிள்ளை, பாலக்காடுமணி ஐயர், ஜி.என்.பாலசுப்ரமணியின் போன்ற ஜாம்பவான்கள் இடம்பெறும் இசை நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே நேரில் ரசித்ததும் உண்டு. இவரது தாயாருடன் கச்சேரிக்கு சென்றபோது பெரிய கலைஞர்களே சுப்புலட்சுமியின் குரல்வளத்தை வாழ்த்தியதும் உண்டு. 5ம் வகுப்பு வரையே இவரது முறையான கல்வி அமைந்தது.

இந்துஸ்தானி இசையை இவர் பண்டித நாராயணராவ் வியாசிடமிருந்து கற்றார். அப்துல்கரீம்கான் மற்றும் பாதே குலாம் கானின் இசையையும் இவர் இரவு நேரங்களில் ரசிப்பதுண்டு.

திருமணம்: 1940ல் திருநீலி மலையில் சுப்புலட்சுமிக்கும் சதாசிவத்துக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுடையே திருமணத்துக்குப் பின் நான்கு ஆண்டுகளில் சதாசிவத்தின் முயற்சியால் உருவான மீரா படத்தில் இடம்பெற்ற பாடல்கள் குறிப்பாக "காற்றினிலே வரும் கீதம்' சங்கீத வட்டத்துக்கும் வெளியே இவருடைய புகழைப் பரப்பியது. இந்தியில் வெளியான மீரா பஜன்கள் இந்தி ரசிகர்களிடையே இவருக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தி தந்தது. அதேபோல கேதாரிநாத்திலிருந்து கன்னியாகுமரி வரையான பக்தர்களையும் இவரது ஆன்மிகக்குரல் பரவசப்படுத்தியது.

1944ல் 4 இசை நிகழ்ச்சிகள் நடத்தி ரூ.2 கோடி வரை நிதி திரட்டினார். மனைவியின் குரலை பொதுநலத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தன் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது. இந்நிதியில் மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமயத் தொண்டு ஆகியவற்றுக்காகச் செலவிடப்பட்டது.

சர்வதேச புகழ்: 1963ல் இவரது புகழ் சர்வதேச அளவிலும் விரிந்தது. எடின்பர்க் சர்வதேச திருவிழாவில் இவரது கச்சேரி நடைபெற்றது. 1966ல் ஐ.நா.வில் ஐ.நா. தினத்தன்று பாடினார்.

1982ல் பிரிட்டனில் உள்ள ராயல் ஆல்பிரட் ஹாலில் ராணி எலிசபெத் முன்பு பாடினார். இது போன்ற நிகழ்ச்சிகள் சுப்புலட்சுமியின் இசைத்திறனை சர்வதேச அரங்குக்கு எடுத்து சென்றன.

ஒரு தொண்டை நிபுணர் இவரது குரல்வளத்தைக் கேட்டுவிட்டு, இவரது குரல் நாண்களின் சீரமைப்பு மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றார்.

பாரம்பரியக் கர்நாடக இசையில் வட இந்தியர்களிடம் கேட்கக் கிட்டாத தனித்தன்மையை இவரிடம் காணமுடியும். ராஜஸ்தான் பஞ்சாப், உ.பி., ம.பி., ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் உள்ள கர்நாடக இசை பிரியர்களிடம் இவரது செல்வாக்கு உயர்ந்தது. கர்நாடக இசையின் வரையறையையும் மதிப்பையும் இந்த 20ம் நுõற்றாண்டில் இவர் மாற்றியவர் என்றால் மிகையன்று.

இவரது கணவர் சதாசிவம் காந்தி, நேரு, ராஜாஜி ஆகியோரிடம் இவரை அறிமுகப்படுத்தி வைத்தார். சதாசிவத்தின் நெருங்கிய தோழராக ராஜாஜி விளங்கினார். "குறை ஒன்றும் இல்லை' என்ற ராஜாஜி கீதத்தை இவர் பாடியது இனிமையானது. இன்றும் அது பெரும்பாலாராலும் ரசிக்கும் படியாக உள்ளது.

ஹரிதும் ஹரோ: ஒரு முறை காந்தியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் காந்திக்குப் பிடித்தமான பஜனான "ஹரி தும் ஹரோ'வைப் பாடும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சதாசிவமோ அக்கடிதத்துக்குப் பதில் அனுப்பியபோது, இந்த குறிப்பிட்ட பஜனை எவ்வாறு பாடுவதென சுப்புலட்சுமிக்குத் தெரியாது. ஆகவே "ஹரி தும் ஹரோ'வை வேறொருவர் பாடட்டும், சுப்புலட்சுமி மற்றொரு பஜன் பாடட்டும் என்று எழுதியிருந்தார். ஆனால் மகாத்மாவின் பதில் கடிதத்தில் "மற்றவர்கள் பாடக் கேட்பதை விட சுப்புலட்சுமி அதை பேசக் கேட்பதையே விரும்புகிறேன்' என்றிருந்தது.

1940ல் முதன்முதலாக இசைவாணிப் பட்டத்தைப் பெற்ற இவர் 1954ல் பத்மபூஷன், 1956ல் ஜனாதிபதி விருது, 1974ல் மகசாசே விருது, 1975ல் பத்மவிபூஷன், 1990ல் இந்திரா விருது, 1996ல் கலாரத்னா, 1997ல் ஸ்வரலயா, 7 டாக்டர் பட்டங்கள் என்று இவருடைய விருது பட்டங்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

எம்.எஸ். சுப்புலட்சுமி விருது பட்டியல்

1940 எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு "இசை வாணி' கவுரவம் செம்மங்குடி சீனிவாச ஐயர் மற்றும் ராஜமாணிக்கம் பிள்ளையால் வழங்கப்பட்டது.

1954 பத்மபூஷன் வழங்கப்பட்டது.

1956 ஜனாதிபதி விருது.

1967 ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் முதல் முதலாக டாக்டர் பட்டத்தை வழங்கியது.

1968 சென்னை மியூசிக அகாடமி "சங்கீத கலாநிதி' கவுரவம் அளித்தது. இதனைப் பெற்ற முதல் பெண்மணி அவர்தான்.

1970 இசை பேரறிஞர் பட்டத்தை சென்னை தமிழ் இசைச்சங்கம் அளித்தது.

1974 மகசாசே விருது.

1975 பத்மவிபூஷன் வழங்கப்பட்டது.

1975 சப்தகிரி சங்கீத வித்வான் மணி கவுரவத்தை, திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வர தியாகராஜசுவாமி திருவிழா கமிட்டி அளித்தது.

1980 தனிப்பெரும் கலைஞர்: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வழங்கியது.

1981 சர்வதேச இசை கவுன்சில் உறுப்பினர்.

1988 காளிதாஸ் சம்மன் வழங்கப்பட்டது.

1988 உஸ்தாட் ஹபீஸ் அலிகான் விருது.

1990 இந்திய ஒருமைப்பாட்டுக்கான இந்திராகாந்தி விருது.

1991 கோனார்க் சம்மன் விருது வழங்கப்பட்டது.

1995 7வது முறையாக டாக்டர் பட்டம்.

1996 "கலாரத்னா' விருது.

1998 பாரத ரத்னா.


- aathipan - 12-12-2004

<img src='http://sun.science.wayne.edu/~vhari/ms/MSimage/ms11.jpg' border='0' alt='user posted image'>


<img src='http://www.hindu.com/thehindu/fr/2003/09/19/images/2003091901100103.jpg' border='0' alt='user posted image'>
M.S.Subbulakshmi ("Sakuntalai")

<img src='http://sun.science.wayne.edu/~vhari/ms/MSimage/meera.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://sun.science.wayne.edu/~vhari/ms/MSimage/ms30.jpg' border='0' alt='user posted image'>
Meera


<img src='http://sun.science.wayne.edu/~vhari/ms/MSimage/ms9.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://sun.science.wayne.edu/~vhari/ms/MSimage/saroj.jpg' border='0' alt='user posted image'> with Sarojini Naidu

<img src='http://sun.science.wayne.edu/~vhari/ms/MSimage/ms19.jpg' border='0' alt='user posted image'> with mama(husband)

<img src='http://sun.science.wayne.edu/~vhari/ms/MSimage/veena.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://sun.science.wayne.edu/~vhari/ms/MSimage/nehru.jpg' border='0' alt='user posted image'>


- kuruvikal - 12-12-2004

<b>அன்னாரின் பிரிவால் துயருறும் இசைக்குடும்பத்தார் அனைவருடனும் எமது வருத்தங்களை பகிர்ந்து கொள்வதோடு இளைய சமுதாயத்துக்கு ஒரு நல்லுதாரணமாய் விளங்கிய இசைப் பேரரசிக்கு எமது கண்ணீர்ப் பூக்களை காணிக்கை ஆக்குகின்றோம்...!

பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சிய காலத்திலேயே ஒரு பெண் தான் பெற்ற கணவனால் எவ்வாறெல்லாம் உற்சாகம் அளிக்கப்பட்டு தான் கொண்ட திறமைகளை சரியாக வெளிப்படுத்தி சமூகத்தில் திறமைக்கும் புகழுக்கும் உரித்துடையவள் ஆனாள் என்பதற்கு அம்மையாரின் வாழ்க்கை வரலாறே ஒரு நல்ல பாடம்...!

இவரின் வாழ்க்கை மற்றப் பெண்களுக்கு குறிப்பாக சுதந்திரம் விடுதலை என்று கூறி தேவையற்றதுகளைத் தேடி தறிகெட்டலையும் பல சமகால இளம் பெண்களுக்கு ஒரு நல்லுதாரணமாய் விளங்கும் என்பதில் ஐயமில்லை...!</b>


- tamilini - 12-12-2004

அம்மையாருக்கு எமது அஞ்சலிகள்....! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- MEERA - 12-12-2004

அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்....!


- KULAKADDAN - 12-13-2004

எமது ஆழ்ந்த அனுதாபங்கள்....!


- kavithan - 12-14-2004

அன்னாரின் குடும்பத்துக்கும் என் அனுதாபங்கள்.. அவர் ஆத்தாம சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் ஆக


- kuruvikal - 12-14-2004

எம் எஸ் எஸ் அம்மையாருக்கு இந்திய குடியரசுத் தலைவரும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வழங்கிய புகழாஞ்சலியை இங்கு பார்வையிடலாம்... http://kuruvikal.yarl.net/


- shanmuhi - 12-14-2004

அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்....!


- வெண்ணிலா - 12-14-2004

என் அனுதாபங்கள்.. Cry