The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage



Yarl Forum
லண்டன் திருக்கோயில் வியாபார நிலையம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: லண்டன் திருக்கோயில் வியாபார நிலையம் (/showthread.php?tid=6909)

Pages: 1 2


லண்டன் திருக்கோயில் வ - kuruvikal - 07-19-2004

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். இதை யார் கடைப் பிடிக்கிறார்களோ இல்லையோ இலண்டன் வாழ் நம்மவர்கள் சரியாக கடைப்பிடிக்கிறார்கள்.
இலண்டனில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்று அன்மைய கணக்கெடுப்புகள் கூறுகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் தலைநகரையும் அதனை சூழ உள்ள புற நகர் பகுதிகளிலுமே வாழ்கிறார்கள்.

இவர்கள் அனைவருமே தமது வாழ்கை தரத்தில் சிறந்து விளங்குகிறார்கள. இனி மேற்கூறிய முது மொழிக்கமைய இவர்கள் வாழ்கின்ற பகுதிகளிலே எதாவது ஒரு கோயிலையும் யாராவது ஒருவர் அமைத்துக் கொள்கிறார். அந்த வகையில் இன்று இலண்டனில் அமைந்துள்ள சைவக திருக்கோயில்களின் எண்ணிக்கை சிறியதும் பெரியதுமாக ஏறத்தாழ 30 க்கும் மேற்ப்பட்ட கோயில்கள் (தமிழ் ஒலை 2004, இங்கு குறிப்பிட வேண்டிய விடயம் தமிழ் ஒலைகள் ஏப்பிரல் மாதத்தில் வெளியிடப்படுவதனை கவனத்தில் கொள்க, காரணம் அதன் பின்பு இரண்டு கோயில்கள் புதியதாக ஆரம்பிக்கப் பட்டுள்ளன) உள்ளன.

இக் கோயில்கள் எப்படி ஆரம்பிக்கப்படுகின்றது என்று கேட்டால் கவலையாக இருக்கின்றது. இந்து சமயத்தில் சொல்லப்பட்ட ஆகம விதியினை கடைப்பிடிக்கிறார்களா? இல்லையே ஒரு கோயிலில் உள்ள நிர்வாக பிரச்சனையால் அதில் இருந்து வெளியேறியவர்களால அல்லது அக்கோயில் குருக்கலுடனான முரன்பாட்டால் வெளியேறிய ஐயரினால் உடனடியாகவே எதாவது மண்டபத்தையோ அல்லது வியாபார நிலையங்களுக்கு மேல் உள்ள பகுதியை வாடகைக்கு எடுத்து எதோ வாயில் நுழையாத பெயரினை வைத்து கோயிலை தொடக்கி விடுகிறார்கள் (இப்படி வியாபார நிலையங்களுக்கு மேல் அமைந்துள்ள கோயில்கள் மாத்திரம் இன்று இலண்டனில் பல) அது மாத்திரமா பூசலார் தான் மனதிலே கோயில் கட்டினார் ஆனால் எம்மவர்கள் இணையத்திலேயே கோயில் கட்டியிருக்கிறார்கள்

இக்கோயில்கள் எல்லாமே பக்தி நோக்கத்திலா அமைக்கப்பட்டது என்றால் கேள்வி குறிதான். அன்றி சமுதாய நோக்கமா என்றாலும் கேள்விக்குறிதான் (விதி விலக்கு ஒரு சில கோயில்கள் தாயகத்துக்கான உதவிகளை செய்கிறார்கள்) நிச்சயமாக சொல்லலாம் இவை அனைத்துமே வியாபார நோக்குடன் அமைக்கப்பட்டது என்று இக்கூற்றை யாராலும் மறுத்துரைக்க முடியாது.

இலண்டன் கோயில்களும் இன்றைய நிலமையும் சில உதாரணங்கள்

1) இலண்டனில் உள்ள கோயில் ஒன்று இங்கு திரு விழா குளிர்கால முடிவிலே இடம்பெறும்கிறது அக்காலத்திலேயே தேரும் உட்புறத்திலேயே இழுக்கப்படுகிறது. இதை பிழை என்று சொல்ல முடியாது ஆனால் இலண்டனில் பல கோயில்களில் தேர் வெளி றோட்டிலேயே இழுக்கப் படுகிறது அதற்காக குறிப்பிட்ட அக்கோயிலும் இன்னோர் நாளிலே வெளி றோட்டில் இழுக்கப்பட்டு பல வீதிகளினூடாக ஒரு விளையாட்டு மைதானத்தை அடைந்து அங்கு இளைபாறி வியாபார நிலையங்கள் அமைத்து கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி மீண்டும் பின் இரவு கோயிலுக்கு செல்கிறது இதற்கேற்படுகிற செலவிலும் பார்க்க அரிசனையாலும், வியாபார நிலையங்களாலும் வருகின்ற வருமானம் கூட. அடுத்து ஊரில் ஒரு குறிப்பிட்ட சுவாமியுள்ள கோயில் (பிள்ளையார், அம்மன், முருகன்) எனில் அச் சுவாமிக்கென்று தனியே ஒரே ஒரு சூரன் போர்தான் இடம்பெறும். (ஆதாவது பிள்ளையார் கோயில் எனில் கஐமுகா சம்காரம். முருகன் கோயில் எனில் சூர சம்காரம்,) ஆனால் மேற்குறிப்பிட்ட இலண்டன் கோயிலிலே எனோ தெரிய வில்லை ஓரே ஆண்டில் மூன்று சூரன் போர் இடம்பெறுகிறது ஏன் என்று மாத்திரம் விளங்க வில்லை? இது மாத்திரம் அல்ல இரண்டு வருடங்களுக்கு முன்பு இக்கோயில் அமைந்துள்ள கட்டிடத்தை வாங்குவதற்காக வட்டியில்லா கடன் வழங்குமாறு பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோளை பத்திரிகை வாயிலாகவும் வெளியிட்டு இருந்தார்கள். பாவம் பொது சனம் பய(ம்)பக்தியாக கும்பிட்டு காசைப்போட்டு விட்டு செல்கிறார்கள்.


2) அடுத்த இலண்டனிலே புகழ்பூத்த நகரிலே அமைந்துள்ள கோயில் இக்கோயில் இலண்டனிலே பழமையான ஒரு கோயில் தனக்கென சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இக் கோயிலிலே கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருவிழா ஆரம்பிக்கப்பட்ட போது 10 திருவிழாவாக இருந்து இன்று 25 திருவிழாவாக உயர்ந்துள்ளது இதற்கு காரணம் தெரிய வில்லை? ஆகம வீதியில் எதாவது மாற்றமா? அல்லது பக்ககோடி?களின் வேண்டுகோளா? அல்லது ஆலய அறங்காவலரது ஆசையா? தெரியவில்லை.
எது எப்படி இருப்பினும் ஒரு கோயிலில் திருவிழா என்ற போர்வையிலே எவ்வளவு பணம் வீண்விரையமாகிறது பாருங்கள். இவ் நேரத்திலே பல புதிய வியாபாரிகள் வந்துவிடுவார்கள் (மேளம், சாப்பாடு கொடுப்பவர்கள், பூமாலை கட்டுவோர்)
ஓரு திருவிழாவுக்கு என்று கோயில் நிர்வாகத்துக்கென்று குறிப்பிட்ட தொகை பணம் செலுத்த வேண்டும் (500- 600 பவுண்ஸ்கள் வரை இத்தொகை கோயிலுக்கு கோயில் மாறுபடும்)

அடுத்து மேளம் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தாயகத்தில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் பல தவில் கலைஞர்களை இங்கு வரவழைத்து அவர்களை வைத்து வியாபாரத்தில் ஈடுபடுவோரது தொகையும் அதிகரித்துள்ளது நான்கு பேர்களை கொண்ட அக்கலைஞர்களுக்கென்று ஒரு நாளைக்கு 5 மணித்தியாலங்களுக்கு என்று 600-800 பவுண்ஸ்கள் வரை அறவிடப்படுகின்றது. அப்போ 25 நாட்களுக்கும் எவ்வளவு தொகையான பணத்தினை குறிப்பிட்ட நபர் பெறுகிறார்? இது தனியே ஒரு கோயிலில் மாத்திரம் பெறுவது எனேய கோயில்களிலும் பெறுவார்கள் எனேனில் 6 மாத விசாவில் எல்லா வந்தவர்கள்.

சாப்பாட்டு விடயம் மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள் வெளிநாட்டில் வாழ்கின்ற யாராவது ஒரு நேர சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்கிறார்களா? அப்படி வேலைதான் செய்ய முடியாது என்று சொன்னாலும் அரசாங்க உதவிதொகையிலே இராச வாழ்கை வாழலாம். அதை விடுத்து திருவிழா காலங்களில் கோயில்களில் ஒரு நேரத்துக்கென்று எவ்வளவு சாப்பாடு செய்யப்படுகிறது எவ்வளவு சாப்பாடு குப்பையில் கொட்டப்படுகிறது. இதற்கான செலவு எவ்வளவு? ஆது மாத்திரமா முன்னர் சுண்டலுடன் முடிந்த இரவு திருவிழாக்கள் எல்லாம் இப்பொழுது இடியப்பம், இட்லியுடன் முடிகிறது போற போக்கை பார்த்தால் எதிர்காலங்களில் பீசா. காம் பேக்கர் உடன் திருவிழா இடம் பெற்றாலும் இடம்பெறலாம்? சற்றாவது தாயக்ததை திரும்பி பாருங்கள்.

3) அடுத்து கோயில்கள் தமக்கிடையே ஒற்றுமையில்லாமல் செயற்படுகின்றது குறிப்பாக இங்குள்ள இரண்டு கோயில்கள் எதோ தமிழ் நாட்டு அரசியல் கட்சி போல் தமக்கென்று தனித்தனியே இலவசப் பத்திரிகைகளை வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தனிப்பட்ட ஒரு நபரை குற்றம் சாட்டி தமது கோயில்களின் புகழ்? பரவ செய்கிறார்களாம்? அதுமாத்திரமல்ல இத்தனை கோயில்களும் தமக்குள் என்று ஒரு ஒற்றுமையான போக்கை கடைப்பிடிப்பதில்லை உதாரணமாக ஊரிலே எதாவது ஒரு விசேட தினம் (கந்தசஷ்டி. வருடபிறப்பு) என்றால் ஒரே நாள் அல்லது ஒரே நேரத்தில் தான் இங்கெல்லாம் அப்படியல்ல சிலவேளைகளிலே கந்தசஷ்டி விரதம் (6 நாட்கள்) 7 நாட்கள் எல்லாம் பிடித்தவர்கள் எராளம் காரணம் அம்மன் கோயிலி;ல் முன்னர் ஆரம்பிப்பார்கள் முருகன் கோயிலிலே ஒரு நாள் பின்னர் ஆரம்பிப்பார்கள் இரண்டு கோயில் ஐயர்களிடமும் மக்கள் கேட்டால் ஐயரும் எதோ எதோ கிரக நிலைகளை சொல்லி காரணங்கள் கூறுகிவார் இதையெல்லாம் பக்த கோடியான திருவாளர் பொதுசனம் பய(ம்)பக்தியுடன் 7 நாட்களும் கந்தசஷ்டி இருக்கிறார்கள் (விளம்பரம் ஓன்று பிரித்தானிய சைவக்கோயில்கள் ஓன்றியத்தின் ஆண்டு விழாவாம. எதற்காக?)

4) அடுத்து இக்கோயில்களிலே சமுதாயத்தொண்டு என்று கூறிக்கொண்டு தமிழ் பாடசாலைகள்????? ஆரம்பிக்கப் படுகின்றன அல்லது பாட்டு வகுப்பு நடன வகுப்பு வீணை. வயலின் வகுப்பு நல்ல நோக்கம் இவ் நோக்கம் நிறைவேறியதா? தனியே அரங்கேற்றம் செய்தால் (கடந்த வைகாசி மாதம் மாத்திரம் கிட்டத்தட்ட 20 மேற்பட்ட அரகேற்றங்கள் இடம்பெற்றுள்ளது) மாத்திரம் சரியா போன்ற கேள்விகள் எழ செய்கிறது. எனெனில் இக்கோயிலில் தமிழ் படிக்கின்ற பிள்ளைகளே தேவாரத்தை ஆங்கிலத்தில் எழுதி எல்லா படிக்கிறார்கள் அது தான் பரவாயில்லை அவர்கள் கதைப்பது கூட ஆங்கிலமாக எல்லா இருக்கிறது இது என்ன கண்துடைப்பான சமுதாயப் பணியா?

5) தாயகம் நோக்கிய உதவிக்கரம் என்ற போர்வையிலே அங்கு பல கஸ்டங்களுக்குள் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பல சிறுவர் இல்லங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் இன்று இவர்களது வியாபார விளம்பரங்களுக்காக தமது தனித்தன்மையை இழந்து இக்கோயில்களுக்கு கீழ் அடிபணிந்து இயங்குகின்ற நிலமைதான் இன்று காணப்படுகிறது. அது மாத்திரமன்றி இச் சமாதான சூழ்நிலையை பயன்படுத்தி பலர் தாம் நினைத்த மாத்திரத்தில் சிறுவர் காப்பகங்களை அமைக்கிறார்கள் இது எந்த வகையில் சரி என்பதனை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

அப்படியாயின் நீங்கள் நினைக்கலாம் கோயில்கள் தேவையில்லை என்று அப்படியில்லை கோயில்கள் நிச்சயம் தேவை பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் கருனாநிதி அவர்களுடைய வசனமாகிய கோயில்கள் கூடாது என்று சொல்லவில்லை அது (கொடியவர்களது) வியாபார கூடாரமாக அமையக்கூடாது என்பதே இந்த இடத்தில் என்னை போன்ற பலரது கருத்தாகும் உண்மையில் கோயில்கள் மனத்தில் உள்ள துன்பம் என்னும் பாரத்தை இறக்கி வைத்து மன நிம்மதி அடைந்து இறைவனை கும்பிட சிறந்த இடம. ஆனால் அவை வியாபார நிலையமாக மாறக்கூடாது என்பது தான் இக்கட்டுரையின் நோக்கம் அப்படியாயின் மக்கள் ஒன்று கூடுவதற்காகதானே திருவிழா (வீதி தேரோட்டம்) செய்கிறோம் அவர்கள் எல்லாம் எங்கு ஒன்று கூடுவது என்று கேட்கலாம். மக்கள் ஒன்று கூடுவதற்கு தானே எத்தனையோ நிகழ்சிகள் இருக்கினறனவே? மக்கள் தேருக்கு வருகிறார்கள் என்றால் பய(ம்) பக்தி தான் காரணம். எம்மை எல்லாம் சி;றியவர்களாக இருக்கும் காலத்திலே நிலாச்சோறு ஊட்டும் போதே அப்புசுவாமி குத்தும் சாப்பிடு இராசா என்று பய(ம்)பக்தியாக வளர்த்து விட்டார்கள் அப்படி பயபக்தியான மக்களை வைத்துக் கொண்டு தயவு செய்து காசு பார்காதீர்கள்?

தாயகம் நோக்கிய உதவிகள் என்ன பிழையா என்று கேட்கலாம் அது பிழையில்லை அவ் உதவிகளை செய்வதற்கு தானே தமிழர் புனர்வாழ்வு கழகம., வெண்புறா போன்ற அமைப்புகள் அனைத்து நாடுகளிலும் கிளைகளை பரப்பி தாயகத்துக்கான உதவிகளை செய்கின்றன அவர்கள் ஊடாக உங்கள் உதவிகளை செய்யுங்கள் அப்படி செய்யும் போது அவ் உதவி நிச்சயமாக சரியான நபரை சென்றடையும்.

இன்று பலர் என்னுடை கோயில் நான் எப்படியும் செய்வேன் என்று செய்றபடுகிறார்கள் ஆனால் காசு மக்களுடையது அல்லவா????

ஆறு அன்பு - இலண்டன் (கறோ) and sooriyan.com


- Raja.g - 07-20-2004

þó¾ ¸Õò¨¾ ¿¡Ûõ ¬¾Ã¢ì¸¢§Èý. º¢Ä §¸¡Â¢ø¸û ¾¡Â¸ò¾¢üÌ ¯¾Å¢ ¦ºö¸¢ýÈÉ ¾¡ý. ¬É¡ø ÀÄ §¸¡Â¢ø¸û Ţ¡À¡Ãõ ¾¡ý ÌȢ¡¸ þÕ츢ýÈÉ.
ºÁ£Àò¾¢ø Highgate ÓÕ¸ý §¸¡Â¢Ä¢ø ´Õ Ţơ ¿¼ó¾Ð. þíÌ À¢Èó¾ (¾Á¢ú) þ¨Ç»÷¸û ´Õ Ţš¾õ ¿¼ò¾¢É÷. «¾¢ø «Å÷¸Ç¢ý §Àø þí§¸ ¯ûÇ ºÁ º¼í̸û ¾ÁìÌ Ò➢ø¨Ä ±ýÚõ ÀÄ ¾ÁìÌ ã¼ ¿õÀ¢ì¨¸ §À¡Ä ¦¾Ã¢Å¾¡¸×õ, ¡Õõ ¾ÁìÌ Òâ ¨Åì¸ ÓÂüº¢ ±ÎôÀÐõ þø¨Ä ±ýÚõ ÜÈ¢É÷. þó¾ þÄðº½ò¾¢ø ¾í¸¨Ç ±ôÀÊ ±í¸û ºÁÂò¨¾Ôõ ¸Ä¡îº¡Ãò¨¾Ôõ «Îò¾ ºó¾¾¢ìÌ ±ÎòÐ ¦ºøÖÁ¡Ú ±¾¢÷ À¡÷ì¸Ä¡õ ±ýÚõ §¸ð¼¡÷¸û. «Å÷¸û ±í¸û ¸Ä¡îº¡Ãò¨¾ ´Õ ÀƨÁ Å¡öó¾ ´ýÚ ±ýÚõ «Ð §À¡üÈ¢ À¡Ð¸¡ì¸ôÀ¼ §ÅñÊÂÐ ±ýÚõ ²üÚ즸¡û¸¢È¡÷¸û. ¬É¡ø «Å÷¸ÙìÌ Ò⡾ º¢ÄÅü¨È Òâ ¨ÅìÌõ Àʾ¡ý §¸ð¸¢È¡÷¸û. þÄðºì¸½ì¸¢ø ºõÀ¡¾¢ìÌõ þó¾ §¸¡Â¢ø¸û «¨¾ ¦ºöÔÁ¡? þÅ÷¸Ç¡ø ¦ºöÂÓÊ¡ŢÊø þ¨¾ ¡÷ ¦ºö §ÅñÎõ ±ýÚ ±¾¢÷À¡÷츢ȡ÷¸û. «Îò¾ ºó¾¾¢Â¢ý ºÁ¸¢Ã¢¨Â¸Ç¡ø þÄ¡Àõ «¨¼ÅÐ þÅ÷¸û ¾¡§É. «¾ü¸¡¸Å¡ÅÐ þ¨¾ ÓÂüº¢ì¸ ܼ¡¾¡?


- vasisutha - 07-21-2004

உண்மைதான்.


- kuruvikal - 07-21-2004

உண்மை என்றால் எது உண்மை... விளங்காட்டி அது மூடநம்பிக்கை... அனா பப்பில பியர் அடிச்சுக் கூத்துப் போடுறது மட்டும் நல்ல நம்பிக்கை... போங்கடா போங்க ஆருக்கு விடுறியள் கதையளப்பு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 07-21-2004

நான் குருவி எழுதினத தான் உண்மை என்று சொன்னன். அப்ப குருவி போட்டத குருவியே மறுதலிககுதா?


- vasisutha - 07-21-2004

அடகுருவி பப்புக்கு போறனீங்களா?


- kuruvikal - 07-21-2004

vasisutha Wrote:நான் குருவி எழுதினத தான் உண்மை என்று சொன்னன். அப்ப குருவி போட்டத குருவியே மறுதலிககுதா?

மொட்டையாச் சொன்னா... சொல்லைக்க மொத்தமாச் சொல்ல வேணும்...மிஸ்ஸாகாம இருக்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 07-21-2004

அடே இல்ல அடிக்குருவி... பப்பென்ன கிளப்தான் பொழுதுபேக்கே.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 07-21-2004

ஓஓ சொறி அண்ணா மன்னிச்சுடுடா குருவி
(குருவி என்னை போடா என்றால் நான் குருவியின் தம்பி என்று அர்த்தம். தம்பி அண்ணாவை ஒருமையில் கதைக்கலாம் தானே?) <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- vasisutha - 07-21-2004

Quote:பப்பென்ன கிளப்தான் பொழுதுபேக்கே

நானும் வருவன் ஆஆஆ Cry ஆஆஆ Cry


- kuruvikal - 07-21-2004

vasisutha Wrote:
Quote:பப்பென்ன கிளப்தான் பொழுதுபேக்கே

நானும் வருவன் ஆஆஆ Cry ஆஆஆ Cry

அழாதேடா அழாதே....கெதியா வாடா... கிங்குரஸ் ஸ்ரேசனில நிக்கிறன்..எஸ் எம் எஸ் அனுப்பினன் பாக்கல்லையாடா செல்லம்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 07-21-2004

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 07-21-2004

kuruvikal Wrote:
vasisutha Wrote:
Quote:பப்பென்ன கிளப்தான் பொழுதுபேக்கே

நானும் வருவன் ஆஆஆ Cry ஆஆஆ Cry

அழாதேடா அழாதே....கெதியா வாடா... கிங்குரஸ் கோச் ஸ்ரேசனில நிக்கிறன்..எஸ் எம் எஸ் அனுப்பினன் பாக்கல்லையாடா செல்லம்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


<b>என்ன புதுக்கதையிது. நான் நினைத்தேன் குருவிகள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிற ஒரு அமைதியான பறவை என்று. இப்போ என்னவென்றால் இந்தக்குருவிகள் ஆழமாக அன்பு வைத்த மாந்தோப்பு & யாழ்களம் இவற்றை மறந்து கிளப் க்கு போவதும் எம் எஸ் என் இல் செய்தி அனுப்பி அல்வா கொடுக்கிறதும் தான் வேலை போல இருக்கிறது. குருவிகள் இப்படியே தொடர்ந்தால் கஸ்டம் தான். எதற்கும் பார்த்து...................</b>


- kirubans - 07-21-2004

kuruvikal Wrote:உண்மை என்றால் எது உண்மை... விளங்காட்டி அது மூடநம்பிக்கை... அனா பப்பில பியர் அடிச்சுக் கூத்துப் போடுறது மட்டும் நல்ல நம்பிக்கை... போங்கடா போங்க ஆருக்கு விடுறியள் கதையளப்பு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

குருவிகளுக்கு இங்கு பிறந்ததுகள் எல்லாம் பப்பில்தான் குடியிருக்குதுகள் என்றான தப்பான கருத்தை யார்தான் விதைத்தார்களோ?

பல தமிழ் சந்ததிகள் தங்கள் அடையாளத்தை பேண எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள்.

எங்களில் பலருக்கு சைவ சமயத்தில் தெளிவில்லை. தெரிந்ததெல்லாம், திருநீறு பூசுவதும், பூசை முடிந்ததும் உருண்டை வாங்கிச் சாப்பிடுவதும்தான். இந்த இலட்சணத்தில் எவ்வாறு சமயத்தைப் பற்றி இங்கு பிறந்ததுகளுக்கு விளக்க முடியும்?

அவர்களுக்கு விளங்கப் படுத்தும் கடைமையிலிருந்து வழுவிவிட்டு அவைர்களைப் பப்பில் கூத்தடிக்கிறார்கள் என்பது அசட்டுத்தனத்தைத்தான் காட்டுகிறது.


- kuruvikal - 07-21-2004

kirubans Wrote:
kuruvikal Wrote:உண்மை என்றால் எது உண்மை... விளங்காட்டி அது மூடநம்பிக்கை... அனா பப்பில பியர் அடிச்சுக் கூத்துப் போடுறது மட்டும் நல்ல நம்பிக்கை... போங்கடா போங்க ஆருக்கு விடுறியள் கதையளப்பு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

குருவிகளுக்கு இங்கு பிறந்ததுகள் எல்லாம் பப்பில்தான் குடியிருக்குதுகள் என்றான தப்பான கருத்தை யார்தான் விதைத்தார்களோ?

பல தமிழ் சந்ததிகள் தங்கள் அடையாளத்தை பேண எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள்.

எங்களில் பலருக்கு சைவ சமயத்தில் தெளிவில்லை. தெரிந்ததெல்லாம், திருநீறு பூசுவதும், பூசை முடிந்ததும் உருண்டை வாங்கிச் சாப்பிடுவதும்தான். இந்த இலட்சணத்தில் எவ்வாறு சமயத்தைப் பற்றி இங்கு பிறந்ததுகளுக்கு விளக்க முடியும்?

அவர்களுக்கு விளங்கப் படுத்தும் கடைமையிலிருந்து வழுவிவிட்டு அவைர்களைப் பப்பில் கூத்தடிக்கிறார்கள் என்பது அசட்டுத்தனத்தைத்தான் காட்டுகிறது.

லண்டனில் பிறந்தால் என்ன ஈழத்தில் பிறந்தால் என்ன எல்லோரும் பூமியில் பிறந்த மனிதர்கள் தான்... தேவை எது என்று தேடுபவன் அறிய வேண்டியதைத் தேடி அறிவான்... யாரும் பக்கத்தில் இருந்து புகட்ட வேண்டும் என்பதல்ல... பப்பில் காலம் கழிக்கினமோ இல்லையோ... பப்பைத் தேடிப் போகத் தெரியுதெல்லா...அதே போல அவர்களா தேட வேண்டும் அப்போதான் அவர்களின் ஆர்வத்திற்கு தீனி போட சிலராவது முன்வருவார்கள்... அதைவிடுத்து எல்லாம் மூடநம்பிக்கை என்று தட்டிக்கழித்தால் என்னாவது. எங்களை பொறுத்தவரையும் நாங்கள் தாயகத்திலேயே பக்கர் முதல் fவைஸ்ரார் கொட்டல் வரைக்கும் போனவர்கள் தான்.... பதுங்க வேண்டிய இடத்தில் பதுங்கி துள்ள வேண்டிய இடத்தில் துள்ளி தேவையானதைத் தேட முனைந்தோமே தவிர எல்லா இடத்திலும் துள்ளிக் கொண்டிருக்கவில்லை....அதேபோல் தேட வேண்டிய இடத்தில் தேடினோம் ஆனால் கிடைத்து சொர்ப்பம் என்றாலும் தேடிக்கொண்டே இருக்கின்றோம்...மூடநம்பிக்கை என்று எங்களளவில் விளங்கிக் கொண்டு தேடலை நிறுத்தவில்லை... மூடநம்பிக்கைகள் என்று விலக்கிய பலதும் இன்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன...அவர்கள் எது உல்லாசம் என்று கருதுகிறார்களோ அவையே இன்று உலகை அழிப்பனவாக இருக்கின்றன... பப்பில் கூத்தடிப்பவர்கள் யார் என்பது எமக்கு யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை... நாமே கண்டிருக்கின்றோம்... எங்களைப் பொறுத்தவரை அது ஒரு மூடநம்பிக்கைதான்.... கடையில் அரைவிலைக்கு விற்கும் கோலாவை பப்பில் இரண்டு மடங்கு விலை கொடுத்துக் குடிப்பதும்...ஒரே சிகரட் புகைக்குள் நின்று கொண்டு உடல் நலத்தை கெடுப்பதும்...இது மூடநம்பிக்கை விதி தெரிந்தது...ஆனால் அதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வர்....?????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea :?:


ஆக விதி தெரிந்து கொண்டும் உல்லாசம் என்ற ஏதோ ஒரு மாய உலகிற்காய் வாழ விளைபவர்கள்...மதச்சடங்குகளுக்குள் இருக்கும் நெறிகள் ஒழுங்குகள் விதிகள் இவை மன ஒடுக்கம் நோக்கி மனிதனை வழிநடத்தும் எளிமையான வாழ்வியல் நடமுறைகள் என்ற சாதாரண உண்மை புரியாதவர்களாக இருக்க முடியுமா...???!.... இல்லை தங்களால் இயலாது என்பதற்காக வெறும் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்களா...????!

இன்றைய இணைய உலகில் பல இந்திய சமயத் தளங்களில் இந்துசமயம் பற்றி ஆங்கிலத்தில் அழகாக எளிமையாக எழுதி இருக்கின்றார்கள்... எத்தனை இளைஞர்கள் யுவதிகள் இவற்றைப் பார்வையிட முனைகின்றனர்...தேடப் பரந்த உலகம் இருக்கும் போது ஏன் குப்பைத் தொட்டிக்குள்ளேயே தேட நிற்கிறீர்கள்.....அதுதான் புரியவில்லை....???????!
சிந்திக்க வேண்டியது பெற்றோரும் பெரியவரும் மட்டுமல்ல.... இளைஞர்கள் நாமுமே.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- kuruvikal - 07-21-2004

vennila Wrote:
kuruvikal Wrote:[quote=vasisutha]
Quote:பப்பென்ன கிளப்தான் பொழுதுபேக்கே

நானும் வருவன் ஆஆஆ Cry ஆஆஆ Cry

அழாதேடா அழாதே....கெதியா வாடா... கிங்குரஸ் கோச் ஸ்ரேசனில நிக்கிறன்..எஸ் எம் எஸ் அனுப்பினன் பாக்கல்லையாடா செல்லம்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>என்ன புதுக்கதையிது. நான் நினைத்தேன் குருவிகள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிற ஒரு அமைதியான பறவை என்று. இப்போ என்னவென்றால் இந்தக்குருவிகள் ஆழமாக அன்பு வைத்த மாந்தோப்பு & யாழ்களம் இவற்றை மறந்து கிளப் க்கு போவதும் எம் எஸ் என் இல் செய்தி அனுப்பி அல்வா கொடுக்கிறதும் தான் வேலை போல இருக்கிறது. குருவிகள் இப்படியே தொடர்ந்தால் கஸ்டம் தான். எதற்கும் பார்த்து...................</b>

வெண்ணிலாச் சுட்டி குருவிகளுக்கு மாந்தோப்பு என்றும் சொர்க்கம் தான்...அது இயற்கை தந்த பரிசு... செயற்கையாக அப்படி ஒரு பரிசை அர்ப்ப மனிதனால் உருவாக்க முடியாது... அதேபோல் மனிதன் தானே ஆக்கி தானே சொர்க்கம் என்று சொல்லும் உலகிற்கும் போவது உண்டு.... சொர்க்கம் உணரவல்ல இவர்களின் சொர்க்கம் என்ன என்று காண.... அப்போதான் தெரியும் சொர்க்கத்தில் எப்படி நரகம் வருகிறதெனும் உண்மை....! இவர்களின் சொர்க்கத்தோடு சொக்கித்துப் போக நாம் ஒன்றும் நிலையில்லா மானிடர் அல்ல... குருவிகள்...! ஊர்க்குருவி எத்தனைதான் செல்லடித்தாலும் பொம்பர் அடித்தாலும் கூடு கலைந்தாலும் மரம் விழுந்தாலும் அடுத்த தேசம் போகாது....அதன் மன வலிமை கூட அர்ப்ப மானிடனிடம் கிடையாது.... அதை நினைவுறுத்தவே குருவிகள் என்று பெயர் சூடினோம்....!

நெஞ்சோடு பதிந்துவிட்ட அந்த நாமம் என்றும் எம்மை எங்கும் வழிநடத்தும்... மனிதர்களை விட பறவைகள் உதாரணமாவது எத்தனையோ மடங்கு மேல்.....அவற்றில் பல வாழ்வின் ஒழுங்கறிது வாழும் பிறவிகள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea


- kirubans - 07-22-2004

த்சொ த்சொ த்சொ........
:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:


- sayanthan - 07-23-2004

எனக்கென்னவோ புலத்தில உள்ள கோயில்கள் வரையறுக்கப்பட்ட வியாபார நிறுவனங்களாக தான் தோன்றுது.. சுவிசில ஒரு கோயிலுக்கு போனனான்.. ஏதோ நூதன சாலைக்கு போய்ட்டு வந்த மாதிரித் தான் உணர்வு.. பேசாமல் பெயர் வைக்கும் பொழுது, திருமுருகன் பிறைவற் லிமிட்றெட் என்று பெயர் வைக்கலாம். பத்து இருபது கொயில்களுக்கு செலவழிக்கிற காசை சேர்த்து தனிய ஒரு கோயில் நான் சொல்லுறது கோயில் கட்டலாமே


- kirubans - 07-23-2004

எனக்கு ஒரு வைரவர் கோயில் திறக்க ஆசை. ஹலால் லைசென்சும் எடுத்தால் பலி கொடுக்கிறதும் இலகு. வைரவ மடை பெரிசாக வைக்கலாம். மற்ற எல்லாக் கோயில்களையும் விட அதிக வருமானம் வரும். ஐயரையும் இறக்குமதி செய்யத் தேவையில்லை. ஆரும் பங்காளாராக விரும்பினால் சொல்லுங்கோ


- tamilini - 07-23-2004

Quote:எனக்கு ஒரு வைரவர் கோயில் திறக்க ஆசை. ஹலால் லைசென்சும் எடுத்தால் பலி கொடுக்கிறதும் இலகு. வைரவ மடை பெரிசாக வைக்கலாம். மற்ற எல்லாக் கோயில்களையும் விட அதிக வருமானம் வரும். ஐயரையும் இறக்குமதி செய்யத் தேவையில்லை. ஆரும் பங்காளாராக விரும்பினால் சொல்லுங்கோ
ஒரு பேச்சுக்கு என்றாலும் நல்லாய் கோயில் நடத்துவேன் என்று சொல்ல மாட்டியளா....? :roll: :roll: :roll: