Yarl Forum
ஸ்கிரீனை பிரதி பண்ணுவது எப்படி? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: ஸ்கிரீனை பிரதி பண்ணுவது எப்படி? (/showthread.php?tid=7353)



ஸ்கிரீனை பிரதி பண்ணுவ - vasisutha - 03-10-2004

[size=13]<b>ஸ்கிரீனை பிரதி பண்ணுவது எப்படி?</b>

ஸ்கிரீன் ஷாட் என்று அடிக்கடி நாம் கேட்கிறோம். இது எதனைக் குறிக்கிறது?

இது அடிப்படையில் ஒரு படமாகும். நீங்கள் இந்த ஸ்கிரீன் ஷாட்டினை எடுக்கும்போது திரையில் எந்த தோற்றம் இருக்கிறதோ அது ஒரு பட பைலாக உருவாகும். இதுதான் ஸ்கிரீன் ஷாட் ஆகும். இவ்வாறு எடுக்கும் ஸ்கிரீன் ஷாட் படத்தினை வேர்ட், எக்ஸெல் work ஷீட் அல்லது பிரசண்டேஷன் டாகுமெண்டில் சேர்க்க நீங்கள் விரும்பலாம். குறிப்பாக மாணவர்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு கம்ப்யூட்டர் இயக்கத்தினை விவரமாக விளக்கிட முயற்சிக்கும்போது இத்தகைய ஸ்கிரின் ஷாட் படங்கள் நிச்சயமாகத் தேவைப்படும். இவற்றை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளும் முன் இவற்றை எப்படியெல்லாம் தயார் செய்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.

மானிட்டர் திரையில் தெரியும் முழு தோற்றத்தினையும் ஒரு ஸ்கிரின் ஷாட்டாக எடுக்க Print Screen என்னும் கீயை அழுத்தவும். இது F12 Key அருகே இருக்கும். தேடிப் பார்க்கவும்.

எந்த திரைத் தோற்றம் உங்களுக்குத் தேவையோ அது திரையில் இருக்கும்போது இந்த கீயை அழுத்தவும். இந்த தோற்றம் ஸ்கிரீன் ஷாட் ஆக பதியப்படும். இப்போது அது எங்கே எந்த தொகுப்பில் ஒட்டப்பட வேண்டுமோ அங்கு சென்று கர்சரைத் தேவையான இடத்தில் வைத்து paste செய்திடவும். இப்போது நீங்கள் முதலில் திரையில் பார்த்த அதே காட்சி இங்கு இன்னொரு புரோகிராம் டாகுமெண்டில் ஒட்டப்பட்டுவிடும்.

ஸ்கிரீன் ஷாட் எடுக்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களின் காட்சிகள் இருக்கின்றனவா? இவை அனைத்தும் தேவையின்றி குறிப்பிட்ட புரோகிராம் காட்சி மட்டும் உங்களுக்கு ஸ்கிரீன் ஷாட்டாகத் தேவையா? அப்போது Alt + Print Screen Keyகளை ஒரு சேர அழுத்தவும். இப்போது டாஸ்க் பார் போன்ற சாமாச்சாரங்கள் இல்லாமல் நீங்கள் விரும்பும் புரோகிராம் காட்சி மட்டும் ஸ்கிரீன் ஷாட் மட்டும் கிடைக்கும். இதனை வேண்டும் இடத்தில் ஒட்டிக் கொள்ளலாம். இம்முறையில் ஒட்டப்படும் காட்சி சிறப்பாகத் தோற்றமளிக்கும்.