The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage



Yarl Forum
தமிழரின் அடையாளத்துவம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: தமிழரின் அடையாளத்துவம் (/showthread.php?tid=7417)

Pages: 1 2


தமிழரின் அடையாளத்துவ - வழுதி - 02-27-2004

<span style='font-size:25pt;line-height:100%'>தமிழரின் அடையாளத்துவம் (Identity)</span>

எந்தவொரு சமூகத்திற்கும் தனித்துவம் அல்லது அடையாளத்துவம் அவசியமானதொன்று. இன்று புலம்பெயர் வாழ்வியலில் எமது தனித்துவம் எது என்பது பல்வேறுபட்ட வாதங்களுக்கு உட்பட்டுள்ளது.
அண்மைக்காலங்களில் நிகழ்ந்துவரும் கத்திக்குத்து கலாச்சாரம், மூலைக்கொரு கோவில் என்று சிலர் தங்களின் படாடோபங்களை பிறர்க்கு வெளிக்காட்டுவதாய் அமைகின்ற திருவிழாக்கள், ஆங்காங்கே "ஒன்றுகூடல்" என்ற போர்வையில் நிகழ்த்தப்படுகின்ற மேலைத்தேய பாணியிலான களியாட்ட விழாக்கள்..... இப்படி இன்னும் பல உண்டு. ( இன்னும் எழுதினால் அவை மேலும் சர்ச்சைகளுக்கே வித்திட்டுவிடும் என்பதில் ஐயமில்லை) இவையெல்லாம் இந்த தனித்துவத்தில் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதுவும் ஒரு கேள்விக்குறியே!

ஆகவே எது நமது தனித்துவம்? அது பற்றிய வரையறை என்ன? என்பவை அலசி ஆராயப்பட வேண்டிய விடயமேயாம். எனவே தங்களின் ஆக்கபூர்வ கருத்துக்களை முன்வையுங்கள்......

நன்றி.

வழுதி/-


- tamilini - 02-27-2004

வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா?

ஆகா அருமையான தலைப்பு முட்டிமோதட்டும்.
ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயம் தான் தொடரட்டும்.


- Eelavan - 02-28-2004

நண்பரே தமிழரின் தனித்துவம் பற்றி பல கூற்றுக்கள் குழப்பங்கள் நிலவுகின்றன விரைவில் வல்லுநர்கள் இக்கேள்விக்குப் பதிலளிப்பார்கள்
ஆனால் மேலைத்தேய தமிழ் இளையவர்கள் என்றதும் அனைவரதும் நினைவுக்கு வரும் இந்த அரை குறைகளின் செயற்பாடுகள் ஒருகாலத்தில் புலம் பெயர் தமிழ்ர் அனைவரினதும் தனித்துவ அடையாளமாகக் கொள்ளப்படும் அபாயம் உண்டு இதுவும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதே

அது சரி தமிழினி முட்டி மோதட்டும் என்று ஆசீர்வதித்துவிட்டு நீர் எங்கு தலை மறைவானீர்?


Re: தமிழரின் அடையாளத்து - Mathan - 02-28-2004

வழுதி Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>தமிழரின் அடையாளத்துவம் (Identity)</span>

எந்தவொரு சமூகத்திற்கும் தனித்துவம் அல்லது அடையாளத்துவம் அவசியமானதொன்று. இன்று புலம்பெயர் வாழ்வியலில் எமது தனித்துவம் எது என்பது பல்வேறுபட்ட வாதங்களுக்கு உட்பட்டுள்ளது.
அண்மைக்காலங்களில் நிகழ்ந்துவரும் கத்திக்குத்து கலாச்சாரம், மூலைக்கொரு கோவில் என்று சிலர் தங்களின் படாடோபங்களை பிறர்க்கு வெளிக்காட்டுவதாய் அமைகின்ற திருவிழாக்கள், ஆங்காங்கே "ஒன்றுகூடல்" என்ற போர்வையில் நிகழ்த்தப்படுகின்ற மேலைத்தேய பாணியிலான களியாட்ட விழாக்கள்..... இப்படி இன்னும் பல உண்டு. ( இன்னும் எழுதினால் அவை மேலும் சர்ச்சைகளுக்கே வித்திட்டுவிடும் என்பதில் ஐயமில்லை) இவையெல்லாம் இந்த தனித்துவத்தில் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதுவும் ஒரு கேள்விக்குறியே!

ஆகவே எது நமது தனித்துவம்? அது பற்றிய வரையறை என்ன? என்பவை அலசி ஆராயப்பட வேண்டிய விடயமேயாம். எனவே தங்களின் ஆக்கபூர்வ கருத்துக்களை முன்வையுங்கள்......

நன்றி.

வழுதி/-

வழுதி உங்களோட கேள்வி ரொம்ப நல்ல கேள்வி. நிறைய கருத்து இதுல விவாதிக்க இருக்கு. என்னை கேட்டீங்கன்னா காலத்துக்கு ஏத்த மாற்றம் அவசியமுன்னு சொல்லுவேன். அதனால மற்ற கலாசாரத்துல இருக்கிற நல்ல கருத்துகளையும் நா எடுத்துக்கிட்டிருக்கேன். இப்பிடி நானா பல கலாசாரத்தோட கலப்பா இருந்துகிட்ட தனித்துவம் பேச முடியாது. அதனாலை தனித்துவத்தையும் வரையறையையும் பத்தி மத்த யாழ் நண்பர்களோட கருத்தை எதிர்பாக்கிறேன்.


Re: தமிழரின் அடையாளத்து - Mathan - 02-28-2004

Eelavan Wrote:நண்பரே தமிழரின் தனித்துவம் பற்றி பல கூற்றுக்கள் குழப்பங்கள் நிலவுகின்றன விரைவில் வல்லுநர்கள் இக்கேள்விக்குப் பதிலளிப்பார்கள்
ஆனால் மேலைத்தேய தமிழ் இளையவர்கள் என்றதும் அனைவரதும் நினைவுக்கு வரும் இந்த அரை குறைகளின் செயற்பாடுகள் ஒருகாலத்தில் புலம் பெயர் தமிழ்ர் அனைவரினதும் தனித்துவ அடையாளமாகக் கொள்ளப்படும் அபாயம் உண்டு இதுவும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதே

அது சரி தமிழினி முட்டி மோதட்டும் என்று ஆசீர்வதித்துவிட்டு நீர் எங்கு தலை மறைவானீர்?


அது யாரு வல்லுனர்கள்?
தமிழினி உங்க கருத்தை சொல்லுங்க. ஈழவன் நீங்களும் தான்.


- tamilini - 02-29-2004

நல்லது நண்பர்களே.

தமிழ் மக்களது ஒன்று கூடல் என்பவது குறிப்பாக ஜரோப்பிய நாடுகளில் மிகவும் அவசியமான ஒன்று என்றுதான் நான் கூறுவேன். {அதற்காக ஓன்று கூடல்கள் ஜரோப்பிய பாணியில் இருக்கவேண்டும் என்று நான் கூறவில்லை}. தமிழரது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்துவதாக அமையலாம். இல்லையென்றால் தாம் யாரென்று சிலர் மறுந்து விடுவார்கள். அதைவிட இங்கு பிறந்த பிள்ளைகளிற்கு நமது கலாச்சாரத்தை கற்பிப்பதாக அமையவேண்டும். என்பது எனது கருத்து. நீங்கள் கூறியது உண்மை பீபீசி அன்னம் போல் செயற்பட்டு தேவையானவையை மட்டும் எடுத்து விட்டு மீதியை விட்டுவிடலாம்.


Re: தமிழரின் அடையாளத்து - tamilini - 02-29-2004

BBC Wrote:
Eelavan Wrote:அது சரி தமிழினி முட்டி மோதட்டும் என்று ஆசீர்வதித்துவிட்டு நீர் எங்கு தலை மறைவானீர்?


அது யாரு வல்லுனர்கள்?
தமிழினி உங்க கருத்தை சொல்லுங்க. ஈழவன் நீங்களும் தான்.

என்ன பீபீசீ இப்படி கேட்டு விட்டீர்கள் உங்கனைப்போல எத்தனை வல்லுனர்கள் அறிவாளர்கள் யாழிள் இருக்கிறார்கள் என்று இந்த சீயைக்கு {மாணவிக்கு} தெரியும்.


- Mathan - 02-29-2004

தமிழினி பப்பா மரத்துல ஏத்தாதீங்க.


- Mathivathanan - 02-29-2004

BBC Wrote:தமிழினி பப்பா மரத்துல ஏத்தாதீங்க.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


Re: தமிழரின் அடையாளத்து - Eelavan - 03-01-2004

நல்லது நண்பர்களே
மொழியாயினும் சரி மதமாயினும் சரி இனமாயினும் சரி காலத்துக்கேற்ற மாற்றம் நிகழ்தல் அவசியம் இல்லாவிட்டால் அவை அழிவது திண்ணம்
தமிழர் என்னும் இனத்தின் வராலாறு தோற்றம் என்பன பலநூறு வருடங்களெனக் கூறப்படுகின்றது.அப்படியெனில் தோன்றிய காலத்துத் தமிழர் கலாச்சார,பண்பாட்டு,வாழ்க்கை முறைக்கும் இன்று நாம் வாழ்ந்துவரும் வாழ்க்கை முறைக்கும் நிறைய வேறு பாடு உண்டு

உதாரணத்துக்கு எடுத்துப் பார்த்தால் இனத்தின் அடிப்படைக் கட்டமைப்பான குடும்ப அமைப்பு முறைகளிலே நிறைய மாற்றங்கள்,வழிபடும் சமய முறைகளில் நிறைய மாற்றங்கள் காலத்திற்கேற்ப ஒத்து வருபவற்றை ஏற்றும் ஒவ்வாதவற்றை விலக்கியும் தமிழினம் இன்று நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கிறது

பொதுவாகச்சொன்னால் இனத்திற்கென இது தான் வரையறை என வகுப்பது கடினம் ஒரு தமிழன் இப்படித்தான் இருக்க வேண்டும் என வரையறுப்பது கடினம் ஆனால் தமிழர் என்ற இனத்தின் பழக்க வழக்கங்கள்,கலாச்சார நடைமுறைகளை எடுத்துக் காட்டலாம்

தமிழினத்துக்கு தனித்துவமான இயல்பு என்று சொன்னால் அடிப்படைத் தகமை மொழி எனவே தமிழை எமது இனத்தின் தனித்துவப் பண்புகளில் ஒன்றாகக் கொள்ளலாம்

நாம் கூட மேற்கத்தைய கலாச்சார முறைப்படி உடை அணிகிறோம் சாப்பாட்டு முறைகளில் பல்வேறுபட்ட இனக்களின் முறைகளை கலக்கின்றோம் அப்படிப் பார்த்தால் சுத்தத் தமிழன் யாருமே இல்லை B.B.C


Re: தமிழரின் அடையாளத்து - Mathan - 03-01-2004

[quote=Eelavan]நல்லது நண்பர்களே
<b>மொழியாயினும் சரி மதமாயினும் சரி இனமாயினும் சரி காலத்துக்கேற்ற மாற்றம் நிகழ்தல் அவசியம் இல்லாவிட்டால் அவை அழிவது திண்ணம்</b>
தமிழர் என்னும் இனத்தின் வராலாறு தோற்றம் என்பன பலநூறு வருடங்களெனக் கூறப்படுகின்றது.அப்படியெனில் தோன்றிய காலத்துத் தமிழர் கலாச்சார,பண்பாட்டு,வாழ்க்கை முறைக்கும் இன்று நாம் வாழ்ந்துவரும் வாழ்க்கை முறைக்கும் நிறைய வேறு பாடு உண்டு

உதாரணத்துக்கு எடுத்துப் பார்த்தால் இனத்தின் அடிப்படைக் கட்டமைப்பான குடும்ப அமைப்பு முறைகளிலே நிறைய மாற்றங்கள்,வழிபடும் சமய முறைகளில் நிறைய மாற்றங்கள் காலத்திற்கேற்ப ஒத்து வருபவற்றை ஏற்றும் ஒவ்வாதவற்றை விலக்கியும் தமிழினம் இன்று நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கிறது

<b>பொதுவாகச்சொன்னால் இனத்திற்கென இது தான் வரையறை என வகுப்பது கடினம்</b> ஒரு தமிழன் இப்படித்தான் இருக்க வேண்டும் என வரையறுப்பது கடினம் ஆனால் தமிழர் என்ற இனத்தின் பழக்க வழக்கங்கள்,கலாச்சார நடைமுறைகளை எடுத்துக் காட்டலாம்

தமிழினத்துக்கு தனித்துவமான இயல்பு என்று சொன்னால் அடிப்படைத் தகமை மொழி எனவே தமிழை எமது இனத்தின் தனித்துவப் பண்புகளில் ஒன்றாகக் கொள்ளலாம்

நாம் கூட மேற்கத்தைய கலாச்சார முறைப்படி உடை அணிகிறோம் சாப்பாட்டு முறைகளில் பல்வேறுபட்ட இனக்களின் முறைகளை கலக்கின்றோம் அப்படிப் பார்த்தால் [b]சுத்தத் தமிழன் யாருமே இல்லை

உண்மை ஈழவன். காலத்துக்கேற்ற மாற்றங்கள் அவசியம்.


- kaattu - 03-01-2004

தமிழர் தனித்துவம் எதில் பேணப் பட வேண்டுமெனக் கருதுகிறீர்கள்?

உணவிலா..?
உடையிலா..?
மொழியிலா..?
பழக்க வழக்கத்திலா..?
அனைத்திலுமா..?


- shanthy - 03-01-2004

kaattu Wrote:தமிழர் தனித்துவம் எதில் பேணப் பட வேண்டுமெனக் கருதுகிறீர்கள்?

உணவிலா..?
உடையிலா..?
மொழியிலா..?
பழக்க வழக்கத்திலா..?
அனைத்திலுமா..?

தாவணிக்குள் தமிழ்க்கலாசாரம் வளர்ப்பதுதானே யதார்த்தம். :roll:


- kuruvikal - 03-01-2004

இல்ல சுடிதார் சல்வார்...ஜீன்ஸ்...மினி....இப்ப அதுகளும் போய் ஜம்பர்....எனி...????!

தாவணியாவது மண்ணாங்கட்டியாவது...அதெல்லாம் சுத்த 'வேஸ்ட் ஒவ் ரைம்....!'


- thampu - 03-02-2004

<b>வழுதி எழுப்பிய கேள்விகளுக்கு விவேகானந்தர் கூறிய புகழ் மிக்க சிறுகதை ஒன்று இங்கு மிகபொருத்தமாக இருக்குமெனக்கருதி கீழ் இணைத்துள்ளேன்......</b>

ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.

ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.

'நீ எங்கிருந்து வருகிறாய்?'

'கடலிலிருந்து'

'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.

'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை.

கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?' என்று கேட்டது.

'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?'

'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை.

<b>ஆக,
இத்தால் சகலரும் அறிவது என்னவென்றால்.........
இது மதத்திற்கு மட்டுமல்ல இனத்திற்கும் மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் பொருந்தும்.</b>


- Eelavan - 03-02-2004

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில்லை
ஆனால் புகும் அல்லது புகுத்தப்படும் கலாச்சாரங்கள் பழக்க வழக்கங்கள் எமக்கென இருக்கும் பண்பாடு கலாச்சார பழக்கவழக்கங்களை அழித்துவிடக் கூடாது அதில் நாம் கவனமாக இருத்தல் வேண்டும்


- கெளஷிகன் - 03-02-2004

வர வர ஆடைகள் உயர்ந்து கொண்டே போகிறது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 03-02-2004

ஆமாம் வேட்டியில் இருந்து அரைக்கால் சட்டைக்கு போய் இப்ப அதுவும் இல்லாமல் றோட்டில ஓடினம் "போய்ஸ்' :mrgreen:


- Eelavan - 03-02-2004

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கெளஷிகன் - 03-02-2004

ஈழவன் அண்ணா கூறியது சரியே
மனிதன் மாற மாற அவனது சந்ததி பெருகப்பெருக அவனது வளர்ச்சி ,எளிர்ச்சி, நாகரிகம் மாறுவது வலுவல ஆயினும் நாம் காத்து வந்த ஏற்று வந்த நாகரீக உலகமெல்லாம் உயர்திப்பேசிய எமக்கேயுரிய பண்பாடு கலாச்சார விழுமியங்களை விட்டு நாம் விலகிவிடக்கூடாது என்பதே எந்து கருத்து