Yarl Forum
களத்தின் சகோதர எழுத்தாளருக்கு முதல் பரிசு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: களத்தின் சகோதர எழுத்தாளருக்கு முதல் பரிசு (/showthread.php?tid=7643)



களத்தின் சகோதர எழுத்த - ampalathar - 12-26-2003

தமிழ் கலைநிகழ்வுகள் எதுவும் நடக்கிறதென்று தெரிஞ்சால் காணும் முண்டியடிச்சுக்கொண்டு போய் ஒரு மூலையிலை உக்காந்திடுவன். போனகிழமை ஜேர்மன் பிராங்பொட் தமிழ்மன்றத்தின்ரை ஆண்டுவிழா என்று கேள்விப்பட்டு வேளைக்கே போய் உக்காந்திட்டன்.
வழமைபோல தாமதமாக ஆரம்பிச்சு வழமையான சொதப்பல் நிகழ்ச்சியளுக்கு இடையிலை கவியரங்கமொன்று இடம்பெற்றது. பங்குபற்றிய கவிஞரில் சிலர் உரத்துப்படிப்பதுவே உன்னத கவியென்று எண்ணித் தொண்டை நரம்பு புடைக்க கவியுரைக்க மற்றும் சில முதுகவிகளோ அழகிய உன் மேனி என்ற கவியரங்கின் தலைப்பைப் பார்த்து கவிபுனைவதற்கு எடுத்துக்கொண்ட சிரத்தையைவிட தம் தலைக்கு சாயம் பூசுதற்கும் தம்மேனியை அழகுபடுத்துவதற்கும் எடுத்துக்கொண்ட சிரத்தையுமே அதிகமோ என எண்ணத்தக்க கவிவடித்தனர். இவர்களுக்கிடையில் ஒருசிலர் அற்புத கவிவடித்தும் சென்றதையும் காணமுடிந்தது. பழசுகளின் பந்தாவுகளுக்கு மத்தியில் சின்னப் பெண்ணொன்றும் அழகிய உன் மேனி என்ற தலைப்புக்கு சில வரிகளிலேயே சின்னதாய் மிளகுபோன்று காரசாரமான கவிடித்தது, யாரது என்று நிமிர்ந்தால் ஆச்சரியம் உச்சிவரை ஊடுருவிய அந்தவரிகளின் சொந்தக்காரியாக மேடையில் நம்ம சாந்தி.
வாழ்த்துக்கள் கூற ஆளைத்தேட முதல் அடுத்த ஆனந்த அதிர்ச்சி தமிழ்மன்றம் தனது 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்திய சிறுகதைப்போட்டியிலும் சாந்திக்கே முதற்பரிசு. ஆனந்தத்தில் அந்தப்பெண்ணுடன் பேசி வழியனுப்பிய கையோடு பக்கத்தில் நின்ற என்ரை செல்லம்மாவிட்டை, என்ன மனுசரோ நீங்கள் அந்தப்பெண்ணு பரிசு பெற்றதுக்கு ஒருசிறு வாழ்த்துக்கூடச் சொல்லாமலுக்கு என்று வாங்கிக்கட்டிக் கொண்டன்.
வயசான இந்தக் கிழவன் தாமதமாய் சொல்லும் இந்த வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொள்ளுமம்மா சாந்தி. நல் தமிழ் ஈழத்து இலக்கியத்துக்கு அணிகலனாய் இன்னும் அரிய பல படைப்புக்கள் படைத்து பரிசுகள்பல பெற்று நம்மவர் வாழும்வரை உன்பெயர் நிலைத்து நிற்க வாழ்த்துக்கள்


- yarl - 12-26-2003

எமது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.


- anpagam - 12-27-2003

வித்தியாசமான, நவீன, சிந்திக்கவைக்கும், கலியுக, இணைய, உண்மையான, பாராட்டு இப்படியான பாராட்டு இதுவே முதல்தடவையாக வளர்சிபெறுகிறது என எண்ணுகிறேன். இதுவரவேற்க வேண்டியது. கலைஞ்ஞர் எங்கிருந்தாலும் அவர்கள் படைப்புக்களுக்கு கிடைக்கும் பாராட்டு தமிழ்படைப்புக்கள் வளர வளிசெய்யும் என எண்ணுகிறேன்..... Arrow


- vasisutha - 12-27-2003

தகவலுக்கு நன்றி அம்பலத்தார்.
இங்கே அந்த கவிதையை தர முடியுமா?
வாழ்த்துக்கள் சாந்தி அக்கா. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Paranee - 12-27-2003

எம் வாழ்த்துக்கள் என்றென்றும் சாந்தி அக்காவிற்கு உண்டாகும்


தகவல் தந்த அம்பலத்தார் ஜயாவிற்கு நன்றி


- kuruvikal - 12-27-2003

முதலில் தகவல் தந்த அம்பலம் அங்கிளுக்கே எமது வாழ்த்துக்களும் நன்றிகளும்....அடுத்து கவிதையாலும் கட்டுரையாலும் சிந்தனையைத் தூண்டிய சின்னப் பெண் சாந்தி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...வசியுடன் நாமும் இணைகிறோம் அந்தக் கவிதையை இங்கும் தந்தால் என்ன.....அந்த முதியவர்களுடன் இந்த முதியவர்களும் கொஞ்சம் கவித்தேன் கண்டு களித்திருக்க வேண்டாமோ....?!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ampalathar - 12-27-2003

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கவிதையைமட்டுமல்ல முதற்பரிசு பெற்ற அந்தக் கதையையும் இணைத்துவிடுங்கள் சாந்தி


- இளைஞன் - 12-27-2003

நன்றி அம்பலத்தார் ஐயா.
எமக்கு அந்தத் தகவலை அறியத் தந்தமைக்கு நன்றிகள். முதற் பரிசு பெற்ற ஒருவர் யாழ் களத்தில் அங்கத்துவராக இருப்பதுவும், அந்தக் கவிஞர் இருக்கும் யாழ் களத்தில் நாம் அங்கத்துவராக இருப்பதுவும் எமக்குப் பெருமையாக இருக்கிறது.

பாராட்டுகள் சாந்தி அக்கா. தொடருங்கள்... தொடர்ந்து நிறையவே எழுதுங்கள்.


- shanmuhi - 12-27-2003

best wishes to Shanthi

(sorry i can't write in tamil. i don't know why, but the box where i usually write in tamil is away. i can't see it? :? can anybody help me :?: )


- anpagam - 12-28-2003

Arrow ....அன்றில் இருந்து இன்றுவரை மேடைகளில் பேசும் சிறுவர்களின் (சிலபெரியோரும்) பேச்சைபார்த்து கண்கலங்கி அல்லது உணர்சிவசப்படுகின்றோம் மிகநல்லாக பேசினார் என்கின்றோம் (சிலகுழந்தைகளுக்கு அழகாக பேசுவது எப்படி என பயிற்சி கொடுத்திருப்பார்கள் பார்க உணர்சிகள் பலவகையாக பொங்கும் எமை அறியாமலேயே...) ஆனால் கடைசிவரை யார் அந்த கருத்துக்கு (பேச்சுக்கு) உடையவர் (சிலரை தவிர) என தெரியவே மாட்டாது..... இது அந்த படைப்பாளிக்கும் எமக்கும் ஏன் தமிழுக்கும் ஒர் ஏமாற்றமே... இளப்பே...எமையறியாமல்...ஒரு குறுகிய வட்டத்தில்... நல்லவை என்றால் .... அனியாயமாக இளக்கப்படுகின்றது இல்லையா... நான் கவிஞ்ஞனும் அல்ல நல்ல ரசிகனும் அல்ல... சொல்லணும்போல் இருந்துது சொன்னனப்பா... :roll: :wink: Idea


- pepsi - 12-28-2003

<!--QuoteBegin-Ampalathar+-->QUOTE(Ampalathar)<!--QuoteEBegin-->            பழசுகளின் பந்தாவுகளுக்கு மத்தியில் சின்னப் பெண்ணொன்றும் அழகிய உன் மேனி என்ற தலைப்புக்கு சில வரிகளிலேயே சின்னதாய் மிளகுபோன்று காரசாரமான கவிடித்தது, யாரது என்று நிமிர்ந்தால் ஆச்சரியம் உச்சிவரை ஊடுருவிய அந்தவரிகளின் சொந்தக்காரியாக மேடையில் நம்ம சாந்தி.
                 <!--QuoteEnd--><!--QuoteEEnd-->


<!--QuoteBegin-anpagam+-->QUOTE(anpagam)<!--QuoteEBegin-->Arrow ....அன்றில் இருந்து இன்றுவரை மேடைகளில் பேசும் சிறுவர்களின் (சிலபெரியோரும்) பேச்சைபார்த்து கண்கலங்கி அல்லது உணர்சிவசப்படுகின்றோம் மிகநல்லாக பேசினார் என்கின்றோம் (சிலகுழந்தைகளுக்கு அழகாக பேசுவது எப்படி என பயிற்சி கொடுத்திருப்பார்கள் பார்க உணர்சிகள் பலவகையாக பொங்கும் எமை அறியாமலேயே...) ஆனால் கடைசிவரை யார் அந்த கருத்துக்கு (பேச்சுக்கு) உடையவர் (சிலரை தவிர) என தெரியவே மாட்டாது..... இது அந்த படைப்பாளிக்கும் எமக்கும் ஏன் தமிழுக்கும் ஒர் ஏமாற்றமே... இளப்பே...எமையறியாமல்...ஒரு குறுகிய வட்டத்தில்... நல்லவை என்றால் .... அனியாயமாக இளக்கப்படுகின்றது இல்லையா...  :<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அன்பகம் என்ன சொல்ல வருகிரார் என்று
எனக்கு புரிகிறது. உறவுகளே உங்களுக்கு
புரியுதா? கடவுளே கடவுளே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- anpagam - 12-28-2003

<!--QuoteBegin-nalayiny+-->QUOTE(nalayiny)<!--QuoteEBegin-->2002 அன்று வாசித்த போது மனது றொம்பவே சங்கடப்பட்ட விடயம் அதனால் இந்த நேரத்தில் இதை மீள நினைவுபடுத்த விரும்பினேன்  

<img src='http://www.vikatan.com/av/2002/jan/06012002/p18.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.vikatan.com/av/2002/jan/06012002/p20.jpg' border='0' alt='user posted image'>
இலக்கியம்
கனவுகளைச் சுமந்தவர்!  

கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது சி.சு. செல்லப்பா எழுதிய 'சுதந்திர தாகம்' நாவலுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், கௌரவத்துக்குரிய இந்த விருதைப் பெற்றுக்கொள்ள  
அவர் தற்போது உயிரோடு இல்லை!  



சின்னமனூர் சுப்ர மணியம் ஐயர் மகன் செல்லப்பாவுக்கு பாரதியார்தான் ஆதர்சம். பாரதியைப் போலவே நிறைவேறாத கனவுகளைச் சுமந்துகொண்டு திரிந்தவர் அவர். ஒவ்வொரு முறை புத்தகம் வெளியிடும் போதும் அச்சாகி வந்தி ருப்பவற்றைப் பார்த்து, 'இதையெல்லாம் விற்றால் லட்ச ரூபாய் கிடைக்கும். இன்னும் நிறைய புத்தகம் போடலாம்' என்பாராம். கடைசிவரை திருவல்லிக் கேணி பிள்ளையார் கோயில் தெருவிலுள்ள அவரது வீடு புத்தகங்களால் நிறைந்ததுதான் மிச்சம்!  

இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னால் அவரைப் பார்க்க வந்த வல்லிக்கண்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டு, ''என் வாழ்க்கை யில் நான் கொண்டிருந்த இரண்டு லட்சியங்களும் நிறைவேறிவிட்டதால், சந்தோஷமாக சாகப் போகிறேன். ஒன்று, என் இலக்கியக் கனவான 'சுதந்திர தாகம்' நூலை அச்சில் பார்த்துவிட்டேன். இரண்டு, யாரிடமும் எதற்காகவும் காசுக்காக கையேந்தக் கூடாது என்ற வைராக்கியத்துடன் இருந்தேன். இரண்டிலும் எனக்கு நிறைவுதான்!'' என்று கூறியிருக்கிறார்.  

தமிழ் இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமானவரான செல்லப்பா, தன்னுடைய இருபதாவது வயதில் எழுத ஆரம்பித்தவர். எழுத்தைப் பற்றி அவருக்குள் எழுந்த உக்கிரமான கனவு வேறெந்த வேலையிலும் ஈடுபடவிடாமல் அடித்து விட்டது. திருமணமாகி மனைவி மீனாட்சியுடன் சென்னைக்கு குடித்தனம் வந்த பிறகு நல்ல சம்பளத்தில் கிடைத்த சில வேலைகளையும் இதனால் உதறும்படி ஆயிற்று. அதில் ஒன்று தினமணியில் உதவி ஆசிரியர் பணி.  

இந்தக் கஷ்டமான காலகட்டத்தில் (1959-ல்) 'எழுத்து' பத்திரிகையைத் தொடங்கினார். இன்றைக்கு இருக்கக்கூடிய நவீனப் படைப்பாளிகள் பல பேரை இறக்குமதி செய்த 'எழுத்து'வை இலக்கியத்தின் திருப்புமுனை எனலாம். ஆனால், அதற்காக வத்தலக்குண்டில் இருந்த தாயாரின் பூர்வீக நிலத்தையும், மனைவியின் நகைகளையும் அவர் விற்க வேண்டியிருந்தது. பிறகு, 'எழுத்து பிரசுரம்' என்ற பதிப்பகத்தைத் தொடங்கிப் புத்தகங்களை வெளியிட்டார். அவற்றை விற்பதற்காக ஊர் ஊராக அலைந்திருக்கிறார்.  

மதுரை கல்லூரியில் படித்தபோது உப்புசத்தியாக் கிரகத்தில் பங்குபெற்றுச் சிறைக்குச் சென்றவர் செல்லப்பா. அதைப் பின்புலமாகக் கொண்டு அவர் எழுதிய நாவல்தான் சுதந்திர தாகம்.  

கிட்டத்தட்ட இரண்டாயிரம் பக்கங்களைக் கொண்ட இந்த நாவலை எண்பது வயதுக்கு மேல் கைகள் நடுங்க நடுங்க எழுதியவருக்கு அதை புத்தகமாகக் கொண்டு வருவதுதான் பெருங்கஷ்டமாக இருந்திருக்கிறது. நூல் வருவதற்குள் தான் இறந்துவிடுவோமோ எனத் தவித்திருக்கிறார். பெரும் நெருக்கடிகளுக்கிடையே 'வெளி' ரங்கராஜ் போன்ற நண்பர்களின் உதவியோடு 'சுதந்திர தாகம்' நூல் வடிவம் பெற்றது.  

செல்லப்பா சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால் அதன் மூலம் வந்த தியாகிகள் பென்ஷனில்தான் குடும்பம் ஓடியது. சுப்பிரமணி என்று ஒரு மகன் உண்டு. (இப்போது பெங்களூரில் வங்கி அலுவலராகப் பணிபுரிகிறார்.) குடும்பச் சுமை அனைத்தையும் தாங்கிக் கொண்டவர் அவர் மனைவி மீனாட்சியம்மாள்தான்.  

''நாங்கள் சி.சு. வீட்டுக்குச் செல்லும்போது அவர் மனைவி கதவுக்குப் பின்னே நின்று பார்த்துக் கொண்டிருப்பார். ஒவ்வொரு முறையும் புதிதாக அச்சிடப்பட்ட புத்தகங்கள் வரும்போது இருவருமாகச் சேர்ந்து அதை வீட்டுக்குள் அடுக்குவதைப் பார்த்திருக் கிறோம்'' என்கிறார் வல்லிக்கண்ணன்.  

எழுதும் நேரம் தவிர மற்ற நேரத்தை பஞ்சினால் ஆன சிறு பொம்மைகள் செய்வதிலும் கொல்லையில் தோட்டம் வைப்பதிலும் செலவிட்டார் சி.சு. தவிர புகைப்படம் எடுப்பதிலும் அலாதியான ஆர்வம் கொண்டி ருந்தார். மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டில் அப்போது இவர் எடுத்த படங்கள் மிகப் பிரபலம்.  

லட்சியவாதியான செல்லப்பா சமரசம் செய்து கொள்ளாத பிடிவாதக்காரர். இவர் கஷ்டப் படுவது அறிந்து ஒரு முறை கோவை ஞானி ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியிருக்கிறார். 'அன்பளிப்புகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்தானே...' என்ற பதிலோடு அதை அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறார் சி.சு. விருதுகள் விஷயத்திலும் இதுதான் நடந்தது. இலக்கியச் சிந்தனை, ராஜராஜன், கோவை ஈ.எஸ். தேவசிகாமணி, அக்னி-அட்சரா விருது என பலவற்றை மறுத்துவிட்டார். கடைசியாக அமெரிக்கவாழ் தமிழர் அமைப்பு வழங்கிய 'விளக்கு' விருதை மட்டும் ஏற்றுக்கொண்டார். அதுவும் பரிசுப் பணம் இருபத்தையாயிரத்தை புத்தகம் போடச் சொல்லி அவர்களிடமே வழங்கிவிட்டார்.  

சாகித்ய அகாடமி பரிசு பெற்றிருக்கும் இவரது 'சுதந்திர தாகம்' நூல் வெளிவந்த போது தமிழக அரசின் நூலகத் துறை அதை நிராகரித்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு அவர் இறந்தபின் 99-ல் நூலகத்துறை புத்தகத்தை வாங்கிக் கொண்டது. கடைசி காலங்களில் அவருடன் இருந்த உறவினரும் எழுத்தாளருமான சங்கர சுப்பிரமணியம் சொல்கிறார் - ''சுதந்திர தாகம் நூலுக்கான நூலகப் பணம் ரூபாய் லட்சத்து மூவாயிரம் வந்தபோது அவர் உயிரோடு இல்லை. அவரோடு சேர்ந்து கஷ்டப்பட்ட அவரது மனைவியும் இப்போது உயிரோடு இல்லை. விருதுகள் குறித்து சி.சு-வுக்கு என்றுமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. இப்போது அவர் இருந்திருந்தால், இந்த விருதை வாங்கி இருக்க மாட்டாரோ என்று தோன்றுகிறது. சி.சு. விஷயத்திலும் நாம் நம்முடைய யோக்கியதையைக் காட்டிவிட்டோம்!''  

- ராஜுமுருகன்
படங்கள்: ஸ்னேகிதன், அருண்மொழி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதுக்கு என்ன சொல்வீர்கள்..... :x Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :!: :?:


- ampalathar - 12-28-2003

அன்பின் அன்பகமே முன்வைத்த கருத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் நீரும் கலங்கி மற்றவரையும் ஏனைய்யா கலக்குகிறீர்


- kuruvikal - 12-28-2003

அன்பகத்தின் கருத்தும் வரவேற்க வேண்டிய ஒன்றே...திறமைகளுக்கு அப்பால் முகமறிந்தோர் உறவினர் தமிழ் தொண்டர் என நடிப்போர் படித்த பெருமக்கள் இன்னும் அரசியல் சாதி மதம் என்று பலவகைத் தோறணைகளில் பரிசில்கள் பல கண்ணை மூடிக் கொண்டு தவறான கைகளில் சேர்க்கப்பட்டுள்ளமைகளும் கடந்த காலங்களில் பல இடங்களில் நடந்துள்ளன....ஆனால் மேடையில் கவிதை ஒன்று பாராட்டுப் பெறுகிறதென்றால் அங்கு கவிதை சிறந்ததாக இருக்க வேண்டும் அல்லது நல்ல கலாரசிகர்களை மேடை கொண்டிருந்திருக்க வேண்டும்...எனினும் ஒரு சாதாரண படைப்பாளிக்கு அவனுக்குக் கிடைக்கும் ஒரு பாராட்டே போதும் அவனை ஓயவிடாது உந்தித்தள்ளி ஆயிரம் ஆயிரமாய் எழுதித் தள்ளுவதற்கு....அந்த வகையில் கண்ணறியா கேட்டறியா சாந்தியக்காவின் கவிதை பாராட்டப்பட்டத் தகுதியானது என்று நாம் நிச்சயம் கூறுவோம் காரணம் அவர் இங்கும் நல்ல பல கவிதைகளை விதைத்தே விட்டுள்ளார்...அது போதாதா நாம் பாராட்டிப் பெருமை கொள்ள....!


- anpagam - 12-28-2003

<img src='http://sifyimg.speedera.net/sify.com/cmsimages/Entertainment/Movies/Tamil/13322028_nagesh120.jpg' border='0' alt='user posted image'>
காமெடி மன்னர் நாகேஷ் கண்ணீர்


நகைச்சுவை மன்னர் நாகேஷ் தனது அமர்க்களமான காமெடியால் சிரிக்க வைத்தார் தமிழ் உலகை. ஆனால் அப்பேர்ப்பட்ட அற்புத நடிகரின் கண்ணில் கசிந்தது ஆனந்த அழுகை.

ஜின்னா கிரியேஷன்ஸ்இ தருண் கிரியேஷன்ஸ் இணைந்து "வாழ்நாள் சாதனையாளர் விருதை' நாகேஷøக்கு சமீபத்தில் வழங்கியது. அவ்விழாவில் நாகேஷ் பேசியதாவது

""திருவிளையாடல் படம் வெளியானப்போ அந்தப் படத்துல நான் நடிச்ச தருமி கேரக்டரை எல்லாரும் பாராட்டினாங்க. நடிகர் திலகம் அண்ணன் ரொம்ப உயர்வா பாராட்டினாரு. படத்தோட வெற்றி விழா ஏற்பாடாச்சு. நடிகர் திலகத்துக்கு வைர வாளும் நடிகையர் திலகத்துக்கு வைர மோதிரமும் பரிசா தர முடிவு செஞ்சாங்க. எனக்கு எதுவும் இல்லைன்னு தெரிஞ்சது. "ஒரு ஜரிகை சுருக்குப்பையில் கொஞ்சம் கல்லுங்களைப் போட்டு மேல கொஞ்சம் காசுகளைப் போட்டு பொற்கிழி கொடுக்குற மாதிரி எனக்குக் கொடுங்க. காமெடியா இருக்கும்னு'' சம்பந்தப்பட்ட ஒருத்தர்கிட்ட சொன்னேன்.

அவர்இ "சிவாஜி சாவித்ரிக்கு மட்டும் பரிசு கொடுக்கறாங்க. எனக்கு இல்லையான்னு நான் கேட்டதா விஷயத்தை மாத்தி சொல்ýட்டார். சத்தியமா நான் அப்படிச் சொல்லவே இல்லை. கடைசியில திருவிளையாடல் வெற்றிவிழாவுக்கு நான் ஒரு பார்வையாளரா மட்டும் போய்ட்டு வந்தேன்'' என்று உணர்ச்சிவசப்பட்ட நாகேஷ் <b>""சுமார் ஆயிரம் படங்களுக்குப் பக்கமா நடிச்சுட்டேன். ஆனா என் வீட்டு அலமாரியில ஒரேயொரு விருதுகூட இல்லை. இதுதான் எனக்குக் கிடைச்ச முதல் விருது. இதை என் காலம் உள்ளவரை பாத்துக்கிட்டேயிருப்பேன்''.</b>

நாகேஷ் கண்கலங்கி சொன்னதைத் கேட்டு.. அரங்கமே கண் கலங்கியது. <b>ஆனால் அபார திறமைக்கும் விருதுக்கும் என்றுமே சம்பந்தமில்லை என்ற உண்மையும் விளங்கியது.</b> :roll: :?: Arrow

நன்றி: Sifytamil.


- vasisutha - 12-29-2003

பொன் மொழி
--------------

பகை, பொறாமை ஆகியவற்றை வெளியிட்டால்
அவை வட்டியும், முதலுமாக உன்னிடமே
திரும்பி வரும்.
--விவேகானந்தர்--

கோழைதான் வீரனை விட சச்சரவு
செய்வான்.
--ஜெபர்சன்---

உறுதியற்ற குழப்பமான மனிதர்கள்
ஒரு காரியத்துக்கும் உதவாதவர்கள்.
--இராமகிருஷ்ண பரமஹம்சர்---

நெஞ்சிலே குற்றம் உள்ளவர்கள் ஒவ்வொரு
கண்ணும் தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்.
--- ஷேக்ஸ்பியர்---


- kuruvikal - 12-29-2003

மேலே சொன்னவர்களுக்கும் அது பொருந்துமே....அப்போ அவர்களும் இவற்றைத் தரிசித்தனரோ என்னவோ.....???!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உனக்கு எது உன்னையும் மற்றவனையும் நல் வழி நடத்த உதவும் என்று எண்ணுகிறாயோ அதை வெளியிடு.. தவறு காண்பதும் குற்றம் காண்பதும் நீதி நியாயம் காண்பதும் அவரவர் அறிவின் வேலை உனதல்ல....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
-----------------------
குறிப்பு...பொதுவாக சமூகத்தை விளித்து சொல்லப்பட்டதால் ஒருமையில் தரப்பட்டுள்ளது....கருத்தில் வரும் ஒருமைகள் எந்தத் தனிமனிதனையும் சுட்டவில்லை..!


- vasisutha - 12-29-2003

இப்படி மாட்டிவிட்டீர்களே பொறியில்.
ஹாஹாஹா என்ன இருந்தாலும் குருவிதானே
என்ன குருவி? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :roll:


- shanthy - 12-29-2003

வாழ்த்திய அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகள். கவியரங்கக்கவிதையையும் , பரிசுபெற்ற கதையினையும் விரைவில் இங்கு இணைக்கிறேன்.

அன்பகம் உங்கள் கருத்தினை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

தற்போது இங்கு பல அமைப்புக்கள் உருவாகியிருக்கின்றன அவை குறிப்பிட்ட வட்டத்தினுள் தம்மை முடக்கி வைத்து தமக்குத்தாமே பட்டமும் பட்டயங்களும் வழங்கிக்கொண்டிருக்கின்றன. திறமைகளுக்கு அப்பால் முகத்துதிகளுக்குக்கூட விருதுகள் கொடுப்பது , விழா எடுப்பது இன்று நாகரீகமாகிவிட்டது. இது பற்றி நாம் இன்னொரு தலைப்பில் கருத்தாடலாம் எனக்கருதுகிறேன்.

தமிழ்மன்றம் நடாத்திய விழாக்களில் முன்னெப்போதும் நான் கலந்து கொண்டதில்லை. இம்முறைதான் தமிழ்மன்றவிழாவில் கலந்து கொண்டுள்ளேன். பல விழாக்கள் பார்த்திருக்கிறேன். தமிழ் உயிர் மூச்சென்றென்ற முழக்கத்துடனான ஆரவாரத்துடன் ஆரம்பிக்கும். ஆனால் குறிப்பிட்ட சிலரது வாத்தியங்களை மட்டுமே கேட்கமுடியும். ஆனால் இந்த விழா இளம்தலைமுறையினரை 4வயதிலிருந்து 20வயதுக்கு உட்பட்ட இளையவர்களை உற்சாகப்படுத்திய நிகழ்ச்சி என்பது என் கணிப்பு. எனது குழந்தைகள் இருவரும் 11.30மணிவரையும் பொறுமையுடன் நிகழ்ச்சிகளை ரசித்தார்கள். சிறுவர் பேச்சு , பாடல் , குறள் மனனம் , கதைசொல்லல் நடனம் என இளையோரை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்திய நிகழ்ச்சியென்பதை மறுக்கமுடியாது.

விருதுகளும் , விழா எடுப்புக்களும் நல்ல கலைஞனையோ , நல்ல கலைப்படைப்பையோ தராது.


- anpagam - 12-29-2003

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->....உனக்கு எது உன்னையும் மற்றவனையும் நல் வழி நடத்த உதவும் என்று எண்ணுகிறாயோ அதை வெளியிடு.. தவறு காண்பதும் குற்றம் காண்பதும் நீதி நியாயம் காண்பதும் அவரவர் அறிவின் வேலை உனதல்ல....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[quote][b]விருதுகளும் , விழா எடுப்புக்களும் நல்ல கலைஞனையோ , நல்ல கலைப்படைப்பையோ தராது.8) Idea

நல்ல கருத்துக்கள்...
அருமை ....