Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கூகிள் Earth இணையத்தளம் தொடர்பாக இந்திய ஜனாதிபதி
#1
Google Earth என்ற புதிய இணையத்தளத்தின் நில வரைபடத் திட்டம் பலத்த சார்ச்சைகளை கிளப்பிவருகிறது. இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உட்பட உலகில் அனைத்துப் பாகங்களையும், தெளிவாக பார்வையிட இது வசதி செய்து தருகிறது. இந்திய ஜனாதிபதி மாளிகை கூட இதில் இருந்து தப்பவில்லை.

இது தீவிரவாதிகளின் கையில் கிடைக்குமானால் பல விதங்களிலும் தவறாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் எச்சரித்துள்ளார்.


இது போன்று தென் கொரியா, தாய்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் இவ்வாறு முக்கிய இடங்களை அம்பலப்படுத்த வேண்டாமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது பற்றி கூகிள் நிறுவனத்தின் அதிகாரி டெப்பி பிராஸ்ட் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் எந்த இரகசியத்தையும் வெளியிடவில்லை. எல்லாமே இணையத் தளங்களில் பொதுவாக கிடைக்கின்ற விடயங்கள்தான். இதனை விட, நாங்கள் வெளியிடும் படங்கள் 2 ஆண்டுகளுக்கு முன்னுள்ள நிலைவரத்தையே காட்டுகின்றன என்றும் கூறியுள்ளார்.

http://sooriyan.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)