Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் போராட்டம்
#1
தமிழ் ஆட்சி மொழி உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் இன்று தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.


சென்னையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், மருத்துவர் ராமதாஸ், தொல். திருமாவளவன், கவிஞர் அறிவுமதி, இயக்குநர்கள் சீமான், தங்கர்பச்சான் உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த தமிழ்த் தேசிய இயக்கத்தினர் அண்ணா சாலையிலிருந்து தமிழ்நாடு தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த புறப்பட்டனர்.

காவல்துறையினர் அனைவரையும் வழிமறுத்து கைது செய்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைதாகும் வரை போக்குவரத்து நெரிசல் மிக்க அண்ணா சாலையில் தமிழ்த் தேசியத் தலைவர்கள் அமர்ந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு மைதானம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

கடலுரில் பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்றனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக இந்தப் போராட்டம் பேரெழுச்சியுடன் நடத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி புதினம்
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#2
தகவலுக்கு நன்றி

Reply
#3
தகவலுக்க நன்றி

[size=18][b]" "
Reply
#4
தமிழர்களுக்காக பாடுபடும் தமிழ் பாதுகாப்பு பேரவையின் செயல்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்... தங்கள் தகவலுக்கு நன்றி நண்ப

.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)