Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்காவில் தீபத்திருநாளின் தபால் தலை
#1
அமெரிக்காவில் தீபத்திருநாளை ஒட்டி தபால் வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள். இதற்கு 5 இலட்சம் பேர் வாக்களிக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதராவாக வாக்களிக்க இத்தளதிற்கு சென்று உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள்.

http://www.petitiononline.com/diwali03/

இன்னும் மூன்று இலட்சம் வாக்குகளே எட்டப்படவில்லை
Reply
#2
<i>அமெரிக்காவில் தீபாவளி சிறப்பு தபால்தலை வெளியிட உங்கள் பங்கை ஆற்றுங்கள்... இந்தியாவின் மாபெரும் பண்டிகையான தீபாவளியை சித்தரித்து ஸ்டாம்ப் வெளியிட அமெரிக்க தபால் துறை ஆலோசித்து வருகிறது. இந்துக்கள் மட்டுமல்லாது பல்வேறு சமூகத்தினரும் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்கத் தபால் துறை ஸ்டாம்ப் வெளியிட வேண்டுமானால் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வெப்சைட் மூலம் பரி ந்துரை செய்ய வேண்டும். இதுவரை ஏறத்தாழ 3 லட்சம் பேர் இதற்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்திய திருவிழாவின் பெருமை உலகம் முழுவதும் பரவச் செய்ய நீங்களும் இங்கு சென்று பரிந்துரைக்கலாம்.</i>

இதில் "ஸ்டாம்ப் வெளியிட அமெரிக்க தபால் துறை ஆலோசித்து வருகிறது" என்பது அப்பட்டமான பொய்... தினமலர் குறிப்பிடும் சுட்டி செல்லும் இடம் <b>petitiononline.com. இதில் பொழுது போகாத யார் வேண்டுமானாலும் ஒரு பெட்டிஷன் தயார் செய்யலாம்... </b>(அமெரிக்கா H1Bல் வேலை செய்பவரிடம் social security பிடித்தம் செய்யக்கூடாது , visitor visa விதிகளில் திருத்தங்கள் வேண்டும் போன்றவை இதற்கு முன் இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட மனுக்கள்..)

தினமலர் குறிப்பிடும் தீபாவளி ஸ்டாம்ப் மனுவை அமெரிக்க தபால்துறைக்கு ஒரு கோரிக்கையாக அமிதாப் ஷர்மா என்பவர் தயாரித்திருக்கிறார். இது போன்று நாளொரு வண்ணமாக வரும் ஜங்கிக்கள் பெரும்பாலோனாரை பொறுத்தவரை Inbox -> Trash... அமெரிக்க அரசாங்கமோ Direct to Trash... தினம் தோறும் நூற்றுக்கணக்கானோர் தயாரிக்கும் மனுக்கள் அமெரிக்க அரசின் பார்வைக்கு போகுமா... போனாலும் இது போன்றவற்றை அவர்கள் பாத்ரூம் டிஷ்யூ ஆக கூட உயயோகப்படுதுவார்களா என்பதெல்லாம் நமக்கு யோசனையின் அப்பாற்பட்டது... யோசிக்க வேண்டியது இந்த எரிதங்களை உண்மை என்று நம்பி தினமலர் ஏன் தினமும் தனது வாசகர்கள் காதில் பூ சுற்றுகிறது...

தினமலரை இந்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று நான் கூட ஒரு பெட்டிஷன் தயார் செய்யலாம் என்றிருக்கிறேன்..


Arrow http://mugamoodi.blogspot.com/2005/08/junk.html
Reply
#3
சரி அமெரிக்காவிலை தீபாவளி தலை முத்திரை விட்டா என்ன விடாட்டி என்ன எங்களுக்கு என்ன பிரயோசனம் முதல்லை தீபாவளியெண்டா என்ன ஏன் கொண்டாட படுது எண்டு தெரிஞ்சு கொள்ளங்கோ அதக்கு பிறகு அமெரிக்கா என்ன விடுது எண்டு தெரிஞ்சு கொள்ளலாம்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)