Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவிப்பேரரசால் கௌரவிக்கப்பட்ட உணர்ச்சிக் கவிஞர்
#1
<img src='http://sifyimg.speedera.net/sify.com/cmsimages/Tamil/13895662_vaira120.jpg' border='0' alt='user posted image'>கவிஞர் வைரமுத்து தனது 53-வது பிறந்தநாளை, கவிஞர்கள் திருநாளாக நேற்று கொண்டாடினார்.

பொன்மணி மாளிகையில் நடந்த இந்த விழாவுக்கு, முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கவிஞர் காசிஆனந்தன், இன்குலாப் ஆகிய 2 பேருக்கும் கவிஞர்கள் திருநாள் விருதும், தலா ரூ.10 ஆயிரம் பரிசுகளையும் கவிஞர் வைரமுத்து வழங்கினார்.

விருது பெற்ற 2 கவிஞர்களையும், அவற்றை வழங்கிய வைரமுத்துவையும் நீதிபதி கோகுல கிருஷ்ணன், கவிஞர் ஈரோடு தமிழ்ன்பன் ஆகிய இருவரும் வாழ்த்தி பேசினார்கள்.

கவிஞர்கள் காசிஆனந்தன், இன்குலாப் ஆகிய இருவரும் ஏற்புரை நிகழ்த்தினார்கள்.

காசி ஆனந்தன் பேசும்போது, தமிழ் மெதுவாக அழிந்து கொண்டிருக்கிறது. தமிழ் மொழிக்குள் ஏற்கனவே சமஸ்கிருதம் ஊடுருவியது. இப்போது ஆங்கிலம் ஊடுருவி 80 சதவீதம் அது வளர்ச்சி அடைந்து விட் டது. காதலை வெளிப்படுத்தும் போது கூட, நான் உங்களை காதலிக்கிறேன் என்று யாரும் சொல்வதில்லை. ஐ லவ்யூ' என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள் என்றார்.

அவரைத் தொடர்ந்து வைரமுத்து பேசியதாவது

இந்தநாள் ஒரு தனி மனிதன் பிறந்தநாள் அல்ல. கவிஞர்கள் திருநாள் என்று கொண்டாடினாலும் கூட, எங்கள் சொந்த மகிழ்ச்சிக்காக கொண்டாடப்படுவது அல்ல.

இதுதான் நான் பெறும் முதல் விருது என்று கவிஞர் இன்குலாப் இங்கே பேசும்போது, என் கண்களின் ஓரம் கண்ணீர் தேங்கியது. இதுவே என் கடைசி விருதாகக் கூட இருக்கலாம் என்று அவர் சொன்னபோது, உடைந்து போனேன்.

எத்தனையோ சபைகளில் தான் நிராகரிக்கப்பட்டதாக கவிஞர் காசிஆனந்தன் பேசும்போது கூறினார். அதற்காக நான் வெட்கப்படுகிறேன். நீங்கள் நிராகரிக் கப்பட்டதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.
இவர் எழுதிய கவிதை வேண்டும். இவர் வேண்டாமா? சூடு வேண்டும். நெருப்பு வேண்டாமா? தண்ணீர் வேண்டும் மழை வேண்டாமா?, கவிதையும் கவிஞனும் சேர்ந்தே மதிக்கப்பட வேண்டும்.

2 கவிஞர்களும் ஒரே புள்ளியில் இயங்குபவர்கள். கொண்ட கொள்கையில் இருந்து விலகாதவர்கள். வாழ்க்கைக்காக, சமரசம் செய்து கொள்ளாதவர்கள்.

நாங்கள் கொஞ்சம் சமரசம் செய்து கொள்கிறோம். தங்கத்தில் சிறு செம்பு கலப்பது போல்... இது, தங்கத்தை மாசுபடுத்துவதற்காக அல்ல. தங்கத்தில் நகை செய்வதற்காக...

காசி ஆனந்தனின் எதிர்பார்ப்புகள் எதிர்காலத்தில் ஈடுகட்டப்படும். தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும். தமிழ்ப் படங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும். இதை தமிழன் செய்யாமல், வேறு யார் செய்வார்கள்?

இவ்வாறு வைரமுத்து பேசினார்.

நன்றி: தமிழ் சிபி
Reply
#2
<b>கவிப் பெருங் கவிகளுக்கு வாழ்த்துகள்...!</b>

இதேவேளை "ஆட்டோகிராப்" படத்தில் பாடல் எழுதி இந்திய தேசிய விருதைப் பெற்ற இளைய கவிஞர் பா.விஜய்க்கும் வாழ்த்துக்கள்..!

<img src='http://thatstamil.indiainfo.com/images28/cinema/pavijay-100.jpg' border='0' alt='user posted image'>

பா.விஜய் (தற்ஸ்தமிழ்.கொம்)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
கவியரவு வலையில் காசியுமா ?
திருந்தவே மாட்டாங்கடா இவங்கெல்லாம். இலட்சியபற்றெண்டு சொல்லிக்கொண்டு தமிழனுக்காக இரங்கவே மாட்டென் என்ற ஈனனிடம் பத்தாயிரமும் பரிசும் ? எதற்கு ? தலைவன் தந்த கௌரவத்தைவிட இந்த முத்து வைரம் பெரிசாகிப்போச்சு கவிஞருக்கு ? நாளைக்கு தமிழன்ரை தலைவிதியை எழுத வைரம் வந்திறங்கலாம் தமிழீழத்திற்கு. இதுவும் நடக்கும் சாத்தியம் நம்ம கவியிட்டை இருக்கலமில்லையா ?

திருந்துங்கடா சாமிகளா திருந்துங்கடா Idea
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#4
kuruvikal Wrote:<b>கவிப் பெருங் கவிகளுக்கு வாழ்த்துகள்...!</b>

இதேவேளை "ஆட்டோகிராப்" படத்தில் பாடல் எழுதி இந்திய தேசிய விருதைப் பெற்ற இளைய கவிஞர் பா.விஜய்க்கும் வாழ்த்துக்கள்..!

<img src='http://thatstamil.indiainfo.com/images28/cinema/pavijay-100.jpg' border='0' alt='user posted image'>

பா.விஜய் (தற்ஸ்தமிழ்.கொம்)
குருவி உந்த விசய் என்னத்தை செய்தவர் ? அதையும் விளப்பமா எழுதப்பா ? :?:
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#5
கொச்சையோ பச்சையோ தமிழ்நாட்டில் தமிழில எழுதிறாங்க எல்லா...கவிதை என்று...அதுபோதாதா..! ஹிந்தியவாதிகளிடம், இங்கிலீஸ்வாதிகளிடம் தமிழ் பரிசு வாங்கிறது என்ன சும்மாவா...??! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
குருவி கொச்சையும் பச்சையுமாகவில்லயப்பா அவங்க எழுதிறது. கொம்மாவைக்கூட உரிச்சு எழுதுறாங்கடாப்பா. எந்தவாதியோ காசிவாதி வைரநாசியிட்டை பத்தாயியரம் வேண்டுற அளவக்கு ஒண்டும் அவருக்குக் குறையேல்ல.

பாரும் குருவி காசியை வைச்சு வைரநாசி தமிழனுக்கை புூந்து உழைக்க வழிசெய்யிறாரோ இல்லையோண்டு பாரும். ஏற்கனவே இல்லாததோண்டு கேக்கதையும்.

சுனாமிக்கு பாட்டெழுதினோடனும் தமிழனுக்கு உசிர் கொடுத்தமாதிரி பீற்றுவது வைரத்துக்கு புதிசில்லை. அந்த வலையிலை காசியும் கவிண்டிருக்கிறது நல்லதில்லப்பா. சாத்திரியின்ரை மையிலை தெரிஞ்ச உண்மையள் சொன்னன்.
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#7
சாத்திரிக்கு யாராவது பரிசும் பணமும்
குடுங்கப்பா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#8
சாத்திரிக்கு பரிசு வேண்டாம் ஆனாபாருங்கோஇப்ப தமிழிலை படத்திற்கு பெயர்வைக்க சொல்லுறவர் இவ்வளவுகாலமும் எங்கை போனவர் சரி தமிழ் பெயர் உள்ள படத்திற்குதான் தான் பாட்டெழுதுவன் எண்டு அறிவிச்சா நல்லாயிருக்கும் இனி ஈழதமிழரிட்டை உழைக்கலாமெண்டு அவருக்கு தெரியும் பாருங்கோ முந்தி விஐயகாந்தும் கமலும் இப்பிடித்தான் அய்ரோப்பாவிலை வந்து தமில் தமில் எண்ட எங்கடை சனமும் கைதட்டினவை இப்ப கமல் பாதி தமில் பாதி இங்கிலிசு எண்டிட்டார் மற்ரவர் அம்மாட்டை கவிண்டிட்டார். குபு.பசாமியும் வந்து குத்துகரணமடிச்சு பாட்டு படிச்சவர் இப்ப குட்டிகரணமடிச்சிட்டார்.கவிபேரரசு கவிதைக்கு வேண்டுமானால் பொய் அழகாக இருக்கலாம் .ஆனால் வரலாற்றிற்கு பொய் அழகானதல்ல
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#9
சாத்திரி! இது வெரி வெரி ஓவர்!! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#10
சாத்திரி நீங்கள் சொல்லுறது நியாயம்.... இல்லை என்றல்ல...ஆனா தமிழ்நாட்டில கொச்சையா என்றாலும் தமிழ் பேசுறாங்க என்றா அதற்கு வைரரின் பச்சைத் தமிழும் ஒரு காரணம்...! இல்ல எல்லாரும் பீற்றர் வாசிச்சிட்டு இருப்பா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
சாத்திரியார் சொல்லுறதிலும் உண்மை இருக்குத்தானே

பணம் அரசியல் ஆதாயம் புகழிற்காகத்தான் தமிழ்நாட்டிலை தமிழைப் பற்றி பெரும்பாலானவை பேசுறவை (உண்மையான தமிழ் ஆர்வலர்களை தவிர)
. .
.
Reply
#12
தமிழ் நாட்டில் தமிழ்,அரசியல், சினிமா எல்லாம் வியாபாரமே.எமது நோக்கங்களுக்கு இசைவாக இருப்பவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போரை ஊக்குவிப்பதன் மூலமும் ,எதிர்ப்போரை(எஸ்விசேகர்,சோ,அதிமுகா பிரமுகர்கள்) நிராகரிப்பதன் மூலமும் நாம் எமது போராட்டத்துக்கான ஆதரவை தமிழ் நாட்டில் வளர்க்கலாம்.
உள்ளத்தால் எமை ஆதரிப்போரும் தமிழ் நாட்டில் உண்டு, வைரமுத்து அவர்களில் ஒருவர் அல்ல, அவர் ஒரு வியாபாரி,அவர் எம்மைப் பற்றி பா இயற்றற்றும் ,ஒரு சில சில்லறைகளை விட்டெறிவோம்.
Reply
#13
சோதிட சாமி இந்த சினிமாக்காரன் தொடக்கம் கந்து வட்டிக்காரன் வரைக்கும் சாதராண தமிழ்நாட்டுக்காரனி்டை தலையிலை குதிரை ஓட்டி பிழைப்பை நடத்திக்கிட்டிருக்கிறான் என்ன செய்யிற சாமி நம்ம தலையெழுத்து அப்படி..சாதாரண நம்மளை வெறுத்துடாதையுங்க....தொப்புக்கொடி உறவில்லைங்கல்லா.....இந்த வைரமுத்துசாமிக்கு வித்யா கர்வம்ங்க தலை கனம் ஜாஸதிங்க .இளையராஜா என்னமாய் மீயுசிக் போட்டுக்கொண்டிருந்தார்.. இளையராஜா வின் பாடல் கிட்டாவதற்கு தான் காரணமென்று சொல்லி பிரச்சனை பண்ணினதால் இளையராஜா சார் பீல்டலை ஒதுங்கியிருந்தார்.......வைரமுத்து சார் ஒரு பாடலில் டெலிபோன் மணிபோல் என்று தெடங்கிறார் இவரால் தமிழ் வாழ்ந்த மாதிரி தான்...அந்த கால கவிஞர் தொடக்கம் இந்த கால கவிஞர் வரை நாலு பொற்காசு எறிஞ்சீஙகின்னா எப்படியும் பாடுவாங்க சார்



Reply
#14
matharasi Wrote:சோதிட சாமி இந்த சினிமாக்காரன் தொடக்கம் கந்து வட்டிக்காரன் வரைக்கும் சாதராண தமிழ்நாட்டுக்காரனி்டை தலையிலை குதிரை ஓட்டி பிழைப்பை நடத்திக்கிட்டிருக்கிறான் என்ன செய்யிற சாமி நம்ம தலையெழுத்து அப்படி..சாதாரண நம்மளை வெறுத்துடாதையுங்க....தொப்புக்கொடி உறவில்லைங்கல்லா.....இந்த வைரமுத்துசாமிக்கு வித்யா கர்வம்ங்க தலை கனம் ஜாஸதிங்க .இளையராஜா என்னமாய் மீயுசிக் போட்டுக்கொண்டிருந்தார்.. இளையராஜா வின் பாடல் கிட்டாவதற்கு தான் காரணமென்று சொல்லி பிரச்சனை பண்ணினதால் இளையராஜா சார் பீல்டலை ஒதுங்கியிருந்தார்.......வைரமுத்து சார் ஒரு பாடலில் டெலிபோன் மணிபோல் என்று தெடங்கிறார் இவரால் தமிழ் வாழ்ந்த மாதிரி தான்...அந்த கால கவிஞர் தொடக்கம் இந்த கால கவிஞர் வரை நாலு பொற்காசு எறிஞ்சீஙகின்னா எப்படியும் பாடுவாங்க சார்


<b>கந்து</b> வட்டிக்காரன் அப்படி என்றால் என்ன? :?:
----------
Reply
#15
கனாக் கண்டேன் பாத்தீங்களா சுட்டி அதில வாற வில்லனின் தொழில்தான்
. .
.
Reply
#16
Niththila Wrote:கனாக் கண்டேன் பாத்தீங்களா சுட்டி அதில வாற வில்லனின் தொழில்தான்



அப்ப நித்திலா அக்கா ஒழுங்கா தமிழ் படம் பாக்கிறிங்கள்,
முந்தி எப்பயோ கவுண்டமணி ,செந்தில் படம் ஒண்டும் நாங்கள் பாக்கிறேல எண்டு சொன்ன மாதிரி ஞாபகம்.
Reply
#17
Niththila Wrote:கனாக் கண்டேன் பாத்தீங்களா சுட்டி அதில வாற வில்லனின் தொழில்தான்


இல்லையே. அப்போ கந்து வட்டிக்காரன் அப்படியென்றால் என்ன என்று அறிவதற்காக அந்தப் படத்தைப் பார்க்கணும் என்கிறீங்களா?
----------
Reply
#18
quote="narathar"]
Niththila Wrote:கனாக் கண்டேன் பாத்தீங்களா சுட்டி அதில வாற வில்லனின் தொழில்தான்



அப்ப நித்திலா அக்கா ஒழுங்கா தமிழ் படம் பாக்கிறிங்கள்,
முந்தி எப்பயோ கவுண்டமணி ,செந்தில் படம் ஒண்டும் நாங்கள் பாக்கிறேல எண்டு சொன்ன மாதிரி ஞாபகம்.[/quote]

நாரதர் அங்கிள்

1. படம் பாத்துத்தான் படத்தின் கதையை அறிய முடியுமா என்ன விமர்சனங்களை வாசிச்சாலே போதுமே

2. கவுண்ட மணி செந்தில் பற்றி நான் சொன்னது அந்தக் காலத்தில எனக்கு தமிழ் படம் பார்க்கிற இன்ரஸ்ட் குறைவு என்பதோட கிடைக்கிற நேரத்தில ஃப்ரண்ட்ஸோடதான் படம் பார்ப்போம்


காரணம் போதுமா அங்கிள்
:wink:
. .
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)