Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐ.நா சபையில் ஒலித்த தமிழ் ஈழத்தின் குரல்...!
#1
ஐ.நா சபையில் ஒலித்த தமிழ் ஈழத்தின் குரல்...!

1978 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 05 ஆம் திகதி (05-10-1978) வியாழக்கிழமை தமிழர் வரலாற் றில் இலகுவில் மறக்கப்பட முடி யாத தினமாகும். அன்றுதான் முதன் முதலாக உலகப் பெரும் சபையான ஐக்கிய நாடுகள் சபைக் குள் தமிழீழம் என்ற சொல் முதன் முதலாக உச்சரிக்கப்பட்டதாகும். உச்சரித்தவர் முன்னாள் நீதிபதியும் அண்மையில் காலமானவருமான கிரு~;ணா வைகுந்தவாசன்.

அவர் ஆங்கில மொழியில் ஆற் றிய உரையின் வாசகம் இது தான்

கிரு~;ணா வைகுந்தவாசன் ஆற்றிய இந்த உரையின் தமி ழாக்கம் பின்வருமாறு - எனது பெயர் கிரு~;ணா சிறி லங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் 25 இலட்சம் மக்களைக் கொண்ட பலம் பொருந் திய தமிழீழத்திலிருந்து வந்திருக் கின்றேன். தமிழீழம் போன்ற அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள சிறிய தேசங்கள் உலகின் ஆக உயர்ந்த மன்றமான இந்தச் சபையில் தமது முறையீடுகளை வைக்க முடியா தென்றால் நாங்கள் எங்கேதான் போவது? தயவுசெய்து ஒரேஒரு நிமிடம் என்னைப் பேசுவதற்கு அனு மதியுங்கள். சிறிலங்கா அரசாங்கம் தனது இனக் கொலைக் கொள்கை யைத் தொடருகின்றது....

இவ்வளவும் பேசி முடித்ததும் தான் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது.

உலகச் செய்திச் சேவை

இந்தச் சம்பவம் பற்றிராய்ட்டர் உலக சேவையினர் உலகம் பூரா வும் உள்ள ஊடகங்களுக்கு வழங் கிய செய்தித் தொகுப்பில் பின் வருமாறு குறிப்பிட்டார்கள்.ஐ.நா. சபையின் பாதுகாவல் அதிகாரிகளின் கண்களில் மண் ணைத் து}விவிட்டு எப்படியோ ஐ.நா. கூட்டத் தொடர் நடைபெறும் மண்ட பத்துக்குள் புகுந்துகொண்ட முன் னாள் நீதிவான் கே.கே. வைகுந்த வாசன் அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார். அங்கு மேடையை நோக்கி விரைந்த வைகுந்தவாசன் இலங்கை அரசின் இன ஒழிப்புக் கொள்கையைக் காரசாரமாகக் கண்ட னம் செய்தார்.

மேலும் வைகுந்தவாசன் ஜ.நா. சபையில் பேசிக் கொண்டிருந்த போது ஒலிவாங்கி துண்டிக்கப்பட்ட தோடு அவரைப் பாதுகாப்பு அதி காரிகள் அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். இதைத் தொடர்ந்து அவரைச் சூழப்பெரும் எண்ணிக் கையிலான தொலைக்காட்சி ஊடக வியலாளர்களும் பத்திரிகையாளர் களும் சூழ்ந்து கொண்டார்கள்.அமெரிக்க நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் நிருபர்தான் முத லில் அவரிடம் கேள்விக் கணை தொடுத்தார். நீங்கள் உங்கள் பேச் சில் தமிழீழம் பற்றிக் குறிப்பிட் டீர்களே - இந்த நாடு உலக வரை படத்தில் எங்கே இருக்கிறது? எனக் கேட்டார். அங்கு இருந்த வைகுந்த வாசன் பின்வருமாறு பதில் கொடுத் தார்.

நான் குறிப்பிடும் தமிழீழம் இந்து மகா சமுத்திரத்தில் தென் னிந்தியாவுக்குத் தெற்கேயும் இலங் கைக்கு வடக்கேயும் பாக்கு நீரி ணையை அண்மித்ததாகவும் வங் காள விரிகுடா கடலை ஒரு பக்க எல்லையாகவும் கொண்டிருக் கிறது. அங்கு 25 லட்சம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர் களை இலங்கை அரசாங்கம் இனப் படுகொலைக்குள்ளாக்குகிறது||.இதைத் தொடர்ந்து மேலும் பல ஊடகவியலாளர்கள் அவரைப் பேட்டிகண்டு அவரது செவ்வியைப் பிரசுரித்தார்கள். இது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பில் நல்ல பிரச்சாரமாக அமைந்தது. ஆயிரம் கருத்தரங்கு கள் நடத்துவதைவிட இது ஈழப் போராட்டம் பற்றிய பிரசாரத்தைச் சர்வதேசமயப்படுத்தியது.சந்தர்ப்பத்தை உருவாக்கினார்

கிருஸ்ணா வைகுந்த வாசன் ஒரு வழக்கறிஞர். தென் னாபிரிக்க நாடான சாம்பியாவில் நீதிபதியாகக் கடமையாற்றினார். இதன் பின் ஓய்வு பெற்று லண்டன் சென்றுஇ வழக்கறிஞராகத் தமது தொழி லைச் செய்யும்போது அமெரி க்காவில் நியூயோர்க் நகரில் இடம் பெற்ற அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்க வருடாந்த மாநாடு இடம் பெற்றமையால் அவர் அமெரிக் காவுக்குச் சென்றார். இவர் அமெரிக் காவுக்குச் சென்ற காலகட்டத்திலே ஐக்கிய நாடுகள் சபை கூட்டத் தொடர் இடம்பெற்றது. இந்தக் கால கட்டத்தில் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியக் குழுவுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி தமிழீழத்தின் குரலை ஐ.நா சபையில் ஒலிக்க ஒரு சந்தர்ப் பத்தை அவர் உருவாக்கினார்.1978 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 05 ஆம் திகதி நண்பகலாகிக் கொண்டிருந்தவேளை - சைப்பிரஸ் ஜனாதிபதியின் ஒரு மணித்தியால பேச்சையும் அதைத் தொடர்ந்து சுரினாம் நாட்டின் பிரதமரின் உரையையும் பொதுச் சபையில் 150 நாடுகளைச் சேர்ந்த 2000 பேராளர்கள்வரை கேட்டுக் கொண்டி ருந்தார்கள். இவர்களில் உலக நாடுகளின் - ஜனாதிபதி பிரதமர் வெளிநாட்டு அமைச்சர்கள் எனப் பலரும் பங்கு கொண்டிருந்தார் கள்.

இந்த வேளையில் அப்போ தைய இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேச நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் தனது பேச்சை நிகழ்த்த கிரு ஸ்ணா வைகுந்தவாசன் திட்டம் தீட் டினார்

இந்தியா எப்றோட் தரும் தகவல்

கிருஸ்ணா வைகுந்தவாசன் இந்தச் சந்தர்ப்பத்தை எவ்வாறு உருவாக்கினார் என்பதை அந்தக் காலகட்டத்தில் நியூயோர்க் கிலிருந்து வெளிவந்த இந்தியா எப்றோட் (ஐயெனயை யுடிசழயன) என்ற ஆங்கில ஏட்டின் 1978 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20 ஆம் திகதி இதழில் பி.பி.கூப்பர் கிருஸ்ணா வைகுந்த வாசனைப் பேட்டிகண்டு டுயமெய டுயறலநச வுசiஉமள ரு.N in pரளாiபெ ஊயரளந என்ற தலைப்பிட்டு பின் வருமாறு எழுதினார் இந்த வருடம் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்ற போது உலகப் பேராளர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கிய அந்த நிகழ்ச்சி இடம் பெற்றது.

உலக நாடுகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் சுமார் 2000 பேருக்கு மேல் கூடியிருந்த அந்த உலகின் உயர்சபையில் இலங்கையின் வெளிநாட்டு அமைச் சர் எப்படி இருப்பார் என்று எவ ருக்குமே தெரியாத சூழ்நிலை யில்இ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தலைவர் இலங் கையின் வெளிநாட்டு அமைச்சரை உரையாற்ற அழைத்த நேரத்தில் தடித்த தலை நரைத்துக்கொண் டிருந்த வைகுந்தவாசன் பேராளர் வரிசை ஒன்றிலிருந்து எழுந்து சென்று மேடையேறியபோது இலங் கையின் பிரதிநிதிகளைத்தவிர வேறுயாருமே வைகுந்தவாசனை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அன்றையதினம் பொதுச்சபைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் முதியவரான கொலம்பியா நாட் டைச் சேர்ந்த இன்டேல்சியோ லிலி யானோ என்பவராகும். அவரும் வைகுந்தவாசனை இலங்கைநாட்டு வெளிநாட்டு அமைச்சர் என்றே எண்ணிக்கொண்டார். அதனால் மிக வேக மாக மேடையில் ஏறிய வைகுந்த வாசனுக்கு சிரம்தாழ்த்தி வணக்கம் செய்தார். இப்படி ஒரு சூழ்நிலையை எப்படி வைகுந்தவாசன் உருவாக்கி னார் என்பதை இந்தியா எப்றோட் (ஐயெனயை யுடிசழயன) பின்வருமாறு வர் ணிக்கிறது.

சாம்பியாவின் முன்னாள் மாவட்ட நீதிபதி வைகுந்தவாசன் பலகிழ மைகளாக அனுபவப்பட்ட ஒரு வங்கிக்கொள்ளைக்காரன் வங்கிச் செயற்பாடுகளை மிக அவதான மாக நோட்டம் விடுவதுபோல ஐக் கிய நாடுகள் சபையின் உள்ளே நடைபெறும் செயற்பாடுகளை மிக அவதானமாக 1978 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முழுவதும் மிகத் துல்லியமாக றெக்கி எடுத்தார். ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர்கள் ஒழுங்காக அங்கு வந்து போவார்களோ இல்லையோ தெரியாது. ஆனால் வைகுந்தவாசன் மிக ஒழுங்காக உள்ளே போய்வந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் பார்க்கும் போது தனது கையில் கட்டியி ருந்த கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்துத் தன்னை ஒரு படுபிச| யான பேர்வழியாகக் காட்டிக் கொண்டார். அவரது செயற்பாடுகள் பாதுகாப்பு அதிகாரிகள் மனதில் தான் ஐக்கிய நாடுகள் சபையின் பிசியான பேர்வழி என்ற படிமத்தை உருவாக்குவதில் வைகுந்தவாசன் பெருவெற்றியும் பெற்றார்.

1978 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் தனது கைப்பெட்டியுடன் வியர்க்க வியர்க்க விறுவிறுக்க அவசர அவசரமாகப் பாதுகாப்பு அதிகாரிகளைக் கடந்து உள்ளே சென்றார்.அதி முக்கியமான கமிட்டிக் கூட்டம் ஒன்றுக்குத் தாம் பிந்தி விட்ட ஒருவித பரபரப்பு அவரது முகத்தில் காணப்படும். இதை உறு திப்படுத்துவதுபோல வாசலை நெருங்கிய நேரத்தில் தமது கடி காரத்தை எடுத்து ஏதோ நேரம் பிந்திவிட்டதோ என்று கவலைப் படும் பாவனையுடன் அடிக்கடி பார்த் துக்கொள்வார்.இவ்வாறு அவர் செல்லும்போது ஒருபோதும் பாதுகாப்பு அதிகாரிக ளால் அவர் தடுக்கப்படவே இல்லை. இவ்வாறு செயற்பட இரும்புபோன்ற நரம்பு தேவை என வைகுந்தவாசன் பத்திரிகையாளர் மத்தியில் குறிப் பிட்டார்.

சந்தர்ப்பத்தை உருவாக்கல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தல்

இலங்கைத் தமிழர் பிரச்சினையை சர்வதேசசபை ஒன்றின் ஊடாக சர்வதேச மயப்படுத்த வேண்டும் என்ற தணியாத வேட்கை கொண் டிருந்த கிருஸ்ணா வைகுந்தவாசன் சரியான சந்தர்ப்பத்தை உருவாக்கி யதோடு சரியான முறையில் தனக் குக்கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தினார். ஆனபடியால்தான் 05.10.1978 அன்று இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஐ.நா.சபையில் பேசு வதற்குத் தனது இருக்கையை விட்டு எழும்புவதற்கு முன்னரேயே கிருஸ்ணா வைகுந்தவாசன் எழுந்து சென்று மிகவும் கம்பீரமான தொனி யில் உலக சபையில் சொல்ல வேண்டியதைச் சொல்லி ஒரு உலக சாதனையையே நிகழ்த்தி விட்டு இன்று மறைந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை உள்ள வரை அவரது செயல் பதிவாகி அவரை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்.


வெப்தமிழனிலிருந்து களஉறுப்பினர்களுக்காக சுடப்பட்டது
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#2
ம் வைகுந்த வாசன் இறந்த போது இந்த தகவலை.. அறிந்தோம்.. முழுமையா இணைத்தமைக்கு நன்றிகள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
கிரு~;ணா வைகுந்தவாசன் அவர்கள் காலமாகிய வேளையில் போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
ஆனாலும்... அறியத்தந்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்..........
Reply
#4
இப்பொதுதான் என் கண்ணில்பட்டது. உடனே களத்தில் சிலர் வைகுநஇதவாசன் யார் என்று கேட்டது நினைவுக்கு வந்தது. அதனால்தான் உடனேயே சுட்டுவிட்டேன். காலம் கடந்தாலும் ஒரு அறியவேண்டியவரை அறிந்துகொள்வோம்.
மிகவும் திட்டமிட்டு நேர்த்தியாகவும் சுவாரசியமாகவும் செய்தார். 78 ல் சுதந்திரன் பத்திரிகையில் வந்திருந்தது. வைகுந்தவாசன் எழுந்து பேச ஆரம்பித்ததும் இலங்கை வெளிநாட்டமைச்சர் முழிபிதுங்க நின்றாராம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#5
நன்றி விசயன் அண்ணா, இப்படி ஏற்கனவே கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் இன்றுதான் முழுவிபரத்தையும் அறிந்தேன்.
Reply
#6
நன்றி
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#7
நன்றி
º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý...
Reply
#8
நன்றி வியாசன்
[size=18]<b> <img src='http://img220.exs.cx/img220/3677/12334mb.gif' border='0' alt='user posted image'> </b>
Reply
#9
நன்றி வியாசன் அண்ணா.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
¨¾Ã¢Âò ¾Á¢Æâý ¾¸ÅÖìÌ Á¢ì¸ ¿ýÈ¢.


________________________________________
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷.
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Reply
#11
இவர் யாழ்ப்பாணத்தில் அளவெட்டியை பிறப்பிடமாக கொண்டவர்
; ;
Reply
#12
நன்றி வியாசன் அண்ணா....
<b> </b>
Reply
#13
"ஐ.நா வில் தமிழன்" என்னும் "என் முதல் முழக்கம்!" என்று 1990 ஜுலை மாதம் கிருஸ்ணா வைகுந்தவாசன் நூல் வெளியிட்டுள்ளார்.இப்புத்தகத்தில் இன்னும் பலரது கருத்துகளும் விளக்கங்களும் உள்ளது. இதன் இரண்டாம் பதிப்பு தனது 73ம் பிறந்த நாளை ஒட்டி 1993 ம் ஆண்டு வெளியிடப்பட்டது (பிறந்ததினம் 15.04.1920)
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)